மிருதனின் கவிதை இவள் 19.1
ஆதவன் மெல்ல மெல்ல மேற்கில் சாய துவங்கிருக்க இன்னும் ஓரிரு நாழிகை கடந்தால் இருட்டிவிடும் நிலையில் ,
” ஏய் மேகா மயூரி எங்க ஆளை காணும் ” சிவப்பு நிற புடவையை பார்த்து கொண்டே வினவினார் ராதிகா ,
” ரெஸ்ட் ரூம் போயிருக்கா மா ” என்ற மேகா கூறவும் ,” சரி இந்த புடவை எப்படி இருக்குன்னு பாரு ?” என ராதிகா கேட்க,
” எடுத்த வரை போதும்மா , வீட்டுக்கு போவோமா டயர்டா இருக்கு ” என மேகா அரை மணிநேரத்திற்குள் பலமுறை கூறிவிட ராதிக்காவோ ,
” ஆமா நமக்கு ரொம்ப நாள் இருக்கு பார்த்தியா ,ஷாப்பிங் இன்னைக்கு ஒரு நாளைக்கு தான் , ஸோ என்ன வேணுமோ இன்னைக்கே வாங்கிக்கோ , திரும்ப எல்லாம் வர நமக்கு நேரம் இல்லை ” என்றவர் உற்சாகம் குறையாமல் மகளுக்கு வேண்டிய புடவைகளை கவனத்துடன் தேர்வு செய்து கொண்டிருக்க , அக்னியின் செயலில் மிகவும் காயப்பட்டு போன மேகாவுக்கு, ஏனோ அங்கு இருப்பது ஏதோ நெருப்பின் மேல் இருப்பது போல இருக்க ,அனைவரிடமும் இயல்பாய் இருபது போல காட்டிக்கொள்ள மிகவும் சங்கடப்பட்டு போனாள்.
அதே நேரம் ஷாப்பிங் காம்ப்ளெக்சிற்கு வெளியே காரில் சாய்ந்தபடி அலைபேசியில் யாரிடமோ பிஸ்னஸ் விடயமாக தீவிர உரையாடலில் தீரன் , ஒருவித பதற்றத்துடன் கையில் அலைபேசியுடன் கடைக்குள் இருந்து வியர்த்து வழிய வேகமாக ஓடி வந்த கோபால கிருஷ்ணனை புருவம் சுருக்கி பார்த்து ,எதிர் முனையில் இருப்பவரிடம் பிறகு பேசுவதாக கூறிவிட்டு தன் அழைப்பை துண்டித்தவன் , அவர் அருகே வந்து ,
” அங்கிள் ஆர் யு ஓகே ?” கோபால கிருஷ்ணனின் வெளிறிய முகம் கண்டு அக்னி வினவினான் .
” ஹான் ” திடிரென்று அவன் அழைத்ததில் பதற்றத்துடன் அவனை பார்த்தவர்,
” ம்ம் ஃபைன் பா ” தன்னை இயல்பாக காட்டிக்கொள்ள முயற்சித்தார் .
“அங்கிள் ஆர் யு ஷ்யர் ” அக்னி கேட்கும் பொழுதே, அவரது அலைபேசி பீப் என்னும் சத்தத்துடன் சினுங்க , அவரது கரம் தானாக நடுங்க துவங்க , முகம் சிவந்தது . ஆத்திரமும் , ஒருவித கோபமும் , அவரது இயலாமையும் அவரின் நெஞ்சை அடைத்தது .
” அங்கிள் என்னாச்சு ?யு ஆர் நாட் ஓகே ” அவரது முக மாற்றத்தை உள்வாங்கியபடி வினவினான் தீரன் .
” அதுவந்து அக்னி ” அவனிடம் தன் துன்பத்தை முழுமையாக கூற முடியாமல் தயங்கி நின்றவருக்கு, மூச்சு முட்டிக்கொண்டு வர ,பேச முடியாமல் திணறினார் .
” அங்கிள் என்கிட்ட சொல்லுங்க ” அவரது விழிகளை நோக்கி கேட்டான் தீரன் .
” அது ” திடிரென்று மிகவும் பலவீனமாக காணப்பட்டார் . ‘ ஏதோ பிரச்சனை ‘ அவனுக்கு புரிந்து விட்டது ‘ஆனால் அது என்ன ?’ என்று குழம்பிய தீரன் ,
” என்னாச்சு அங்கிள் ப்ளீஸ் சொல்லுங்க ” அவரது கரங்களை பற்றி கொண்டு அவன் கேட்டது தான் தாமதம் , தீரனின் கையை பிடித்து கொண்டு சிறு பிள்ளை போல குலுங்கி அழுதார் கோபால கிருஷ்ணன் .
அதை சற்றும் எதிர் பார்க்காத அக்னி முதலில் திகைத்தவன் , பிறகு தான் இருப்பதாக நம்பிக்கை கொடுத்து அவரிடம் கேட்டான் , தன் அலைபேசியை அவனிடம் நீட்டியவருக்கு உடல் மொத்தமும் நடுங்கியது , புருவ மத்தியில் முடிச்சிட அதை வாங்கி பார்த்த தீரனின் விழிகள் கோபத்தில் தகிக்க , தன் கடன் பிரச்சனை துவங்கி , தான் வட்டிக்கு பணம் வாங்கியிருந்த வேலன் மேகாவின் நிச்சயதார்த்தம் அன்று தன்னை அழைத்து பணத்தை உடனே பேசிய தேதியில் தரும் படி மிரட்டியது ,அவர் மேகாவின் கல்யாண விடயத்தை கூறி கால அவகாசம் கேட்டதும் தவறாய் வார்த்தைகளை விட்டது, என அனைத்தையும் கூறியவர் . இன்று காலையில் இவர் தன் நண்பன் நிலவனுடன் சென்று போலீஸ் ஸ்டேஷனில் , இன்ஸ்பெக்டரிடம் சிவா குமாரை பற்றி பேசிவிட்டு , பின்விளைவுகளை யோசிக்காமல் வேலன் மீது அளித்த புகார் வரை அனைத்தையும் கூறி முடித்த கோபால கிருஷ்ணன் ,
” பயமா இருக்கு அக்னி , அவன் அசிங்கமா பேசியதும், கோபத்துல யோசிக்காம கம்ப்ளெயிண்ட் கொடுத்துட்டேன் , இப்போ இப்படி பண்ணிருக்காங்க , ஏதாவது பண்ணிருவாங்களோன்னு பயமா … ” என்றவர் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே திடிரென்று நெஞ்சை பிடித்து கொண்டு மயங்கி சரிந்தார் .
சட்டென்று அவர் விழுந்ததும் முதலில் திகைத்த தீரன் , பின்பு சுதாரித்து கொண்டு அவரது நெஞ்சில் கை வைத்து வேகமாக அழுத்தம் கொடுத்து , சிபிஆர் முறைப்படி செயற்கை சுவாசத்தை அவருக்கு தொடர்ந்து கொடுக்க,
ஒருகட்டத்தில் இருமலுடன் அவரது உடல் தூக்கி வாரிப்போட , லேசாக அவர் கண் விழித்தவர் ஒரு தந்தைக்குரிய பரிதவிப்புடன் அவனை பார்த்தார் , அவர் கண்ணில் தெரிந்த பரிதவிப்பை கண்ட அக்னி , அவரது கரம் பிடித்து ,
” என்னை நம்புங்க ” என ரெண்டே வார்த்தைகள் தான் கூறினான் ,அரை மயக்கத்தில் அவருக்கு என்ன புரிந்ததோ பதில் பேச திணறியவர் ,தன் தலையை மட்டும் அசைத்தார் .
பின்பு சிறிதும் காலம் தாழ்த்தாது துரிதமாக செயல்பட்டவன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் , காரில் அவரை கிடத்தி ஹாஸ்பிடல் நோக்கி விரைந்தான் .
ஹாஸ்பிடல் நோக்கி சென்று கொண்டிருந்த இடைப்பட்ட நேரத்திலே , அவனது மூளை கோபால கிருஷ்ணனின் பிரச்சனையை பற்றி சிந்திக்க துவங்கியிருக்க ,அவர் கூறியதில் இருந்தே பிரச்சனையை கணித்திருந்த தீரன் , ஹாஸ்பிடல் போகும் பொழுதே அஷோக்கை அலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு விடயத்தை கூறியவன் , அஷோக்கிடம் தனக்கு தேவையான சில தகவல்களை சேகரிக்க கூறி , விரல் விட்டு எண்ணிவிடும் நொடி பொழுதில் பிரச்சனைக்குரிய தீர்வையும் கண்டிருந்தான்.
செல்லும் பாதையில் , மாலிற்கு அருகில் உள்ள மருத்துவமனையிலே அவரை அட்மிட் செய்தவன் , அஷோக்கிற்கு தொடர்பு கொண்டு அவனிடம் கோபால கிருஷ்ணனின் பொறுப்பை ஒப்படைத்து விட்டு , தன்னுடன் தொடர்பிலே இருக்குமாறு கூறியவன் , அஷோக்கிடம், அவரை வேறு மருத்துவமனைக்கு இடம் மாற்றம் செய்யவதை பற்றி கூறிவிட்டு அடுத்தகட்ட செயலில் இறங்கிருந்தான் .
அக்னி அவசரத்திற்கு அட்மிட் செய்த மருத்துவமனையில் போதிய வசதி இல்லாததால் ,அவருக்கு முதலுதவி மட்டும் கொடுக்க பட்டிருக்க ,தங்களின் செல்வாக்கு மூலமாக ஒரு சில முக்கியமான நபருக்கு தொடர்பு கொண்ட அஷோக் , மருத்துவமனையின் டாக்டரிடமும் கலந்தாலோசித்துவிட்டு கோபால கிருஷ்ணனை அடுத்த அரைமணிநேரத்தில் சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனைக்கு இடம் மாற்றி , அக்னியின் சொல்லை செய்யலாக்கினான் .
இஷிதாவின் மூலமாக விஷயம் கேள்வி பட்டு பதறி துடித்த அவரது குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்கு விரைந்தனர் .
அப்போலோ மருத்துமனையில் விஐபி காண எமெர்ஜென்சி பிரிவில் அவசரமாக அட்மிட் செய்ய பட்ட மேகாவின் தந்தைக்கு தீவிரமான சிகிச்சை வழங்கப்பட்டு கொண்டிருக்க, ராதிகா , விக்ரம் என வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் கண்ணீரில் கரைந்தபடி அமர்ந்திருந்தனர் .
என்ன தான் தனது பணி அனுபவத்தில் இது போன்ற ஏகப்பட்ட எமெர்ஜென்சிகளை சந்தித்திருந்தாலும் தன் தந்தையை இந்த நிலைமையில் பார்த்ததும் , பதறிய மேகா என்ன செய்வதென்று அறியாமல் திணறியபடி அழுது கொண்டு நிற்க , இஷிதா தான் அவளுக்கு தைரியம் கொடுத்து அவளை தேற்றியிருந்தாள்.
எமெர்ஜென்சி யூனிட்டில் டூட்டி மருத்துவர்கள் மட்டுமே இருக்க , ஒரு மருத்துவராக மேகா அவர்களோடு கலந்து ட்ரீட்ட்மென்ட் குறித்து ஆலோசித்து கொண்டிருக்க ,ரித்துராஜும் , கனகராஜும் அவள் அருகே இருந்தனர் .
அனைவரும் கோபால கிருஷ்ணனுக்கு திடீர் என்று இப்படி ஆன பதற்றத்தில் இருக்க ,
மயூரியை பற்றி கேட்டால் என்ன செய்வது என்கின்ற பதற்றம் பாதி , அவளுக்கு எதுவும் நேர்ந்து விட கூடாது என்னும் பயம் மீதி என இஷிதா குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி வாசலையே பார்த்து கொண்டிருக்க ,
” எங்க சைட் என்ன பண்ண முடியுமோ எல்லாம் பண்ணிட்டு தான் இருக்கோம், நீ கொஞ்சம் ரிலாக்ஸ்சா இரு, அக்னி எல்லாத்தையும் சால்வ் பண்ணிருவான் ” இஷிதாவை ஆறுதல் படுத்தினான் அஷோக் .
“நீ எல்லாம் சொல்லுவ அஷோக் , என் டென்ஷன் உனக்கு புரியாது , கொஞ்சம் அங்க பாரு, எப்படி இருந்தவங்க ,இப்போ எப்படி இருக்காங்கன்னு , மேகாவோட நிலைமை இன்னும் மோசம் , அங்கிளோட டெங்ஷன்ல அவங்க மயூரி பத்தி கேக்கல , சப்போஸ் கேட்டாங்கன்னா என்ன சொல்லி சமாளிக்கிறது ?அவளை கஸ்டடி எடுத்திருக்காங்கன்னு தெரிஞ்சா மொத்த குடும்பமும் உடைஞ்சி போயிரும் .”கைகளை பிசைந்தபடி கூறினாள் .
” மயூரிகெல்லம் எதுவும் ஆகாது , அந்த வேலனை நினைச்சா தான் பாவமா இருக்கு ” என லேசாக புன்னகைத்த அஷோக்கை முறைத்த இஷிதா ,
” உள்ள அங்கிள் உயிருக்கு போராடிட்டு இருகாங்க , மனிதாபிமானம் இல்லாம உன் நண்பனோட பராக்கிரமத்தை பத்தி பேசி சிரிக்கிற , சாடிஸ்ட் ” பல்லை கடித்தபடி சீறினாள் .
” அங்கிள் ஆபத்து கட்டத்தை தாண்டிட்டாங்க ” என்றவன் தன் அலைபேசியை உயர்த்தி காட்டி ,
“ட்ரீட்மெண்ட் குடுக்குற டாக்டர் கிட்ட பேசிட்டு தான் இருக்கேன் . சீஃப் டாக்டர் , அப்புறமா கார்டியோ ஸ்பெஷலிஸ்ட் ராம் பிரசாத், ரெண்டு பேரும் வந்துட்டு இருக்காங்க , தேவையான எக்யூப்மென்ட்ஸ் எல்லாம் ஆன் தீ வே , இந்தியாவிலே ஒன் ஆ அஃப் தீ பெஸ்ட் ஹாஸ்ப்பிட்டள்ள தான் உங்க அங்கிளை அட்மிட் பண்ணிருக்கோம், மனிதாபிமானம் இல்லாதவங்க இதெல்லாம் செய்வாங்க பாரு ” என்றவன் ,” தப்பு உங்க அங்கிள் மேல , கடன் கொடுத்தவன் மேலையே கம்ப்ளெயிண்ட் குடுத்திருக்காரு , அவன் சும்மாவா இருப்பான் “இவன் வார்த்தையை விட ,
“அதுக்காக கஸ்டடி எடுப்பானா ?”
” பைனான்ஷியர்ன்னா அப்படி தான் இருப்பாங்க “
” அதான பார்த்தேன் , நீ உன் இனத்துக்கு தானே சப்போர்ட் பண்ணுவ “
” ஏய் பிஸினஸை பத்தி பேசத்தான்னு உன்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கேன் “
” ஆமா பொல்லாத பிஸ்னஸ் , பைனான்ஸ் என்கிற பேருல ப்ளாக் மணி ” என இஷிதா ஆரம்பிக்கவும் அஷோக் அவளை தீ பார்வை பார்க்க , எதையோ முணுமுணுத்தபடி அவள் தன் முகத்தை திருப்பி கொள்ள ,
” பழைய விஷயம் எல்லாத்தையும் மறந்துட்டு , சந்தோஷமா வாழலாம்ன்னு நினைச்சா, நீ என்னை மிருகமா மாத்திருவ போல இருக்கே ” என தன் நாடியை நீவியபடி அஷோக் பார்த்த பார்வையில் இஷிதா அதற்கு மேல் ஒரு வார்த்தை பேச வில்லை .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!
” அட்டாக் தான் மேடம் , இதுக்கு முன்னாடி இந்த மாதிரி நடந்திருக்கா ” என கேட்ட மருத்துவரிடம் ,
” இல்லை அப்பாக்கு ஹார்ட்ல எல்லாம் எந்த இஷ்யூவும் கிடையாது ” என்ற மேகாவுக்கு கண்ணீராக வர , துடைத்தபடியே பேசியவள் ,” இப்போ அப்பாக்கு எப்படி இருக்கு ? ” கேட்கும் பொழுதே மேகாவுக்கு நெஞ்சம் பதறி துடித்தது .
“தேவையான முதலுதவி பண்ணி கூட்டிட்டு வந்ததுனால ,ஆபத்து இல்லை தான் . ஆனாலும் ஸ்பெஷலிஸ்ட் வந்து சொல்ற வரைக்கும் எங்களால எதுவும் சொல்ல முடியாது ” என்றவரிடம் ,” வென்டிலேஷன் எதுவும் தேவை படுமா, என்ன மாதிரியான ட்ரீட்மெண்ட் இப்போ குடுத்துட்டு இருக்கீங்க ” என கனகராஜ் கேட்டு கொண்டிருக்க
” ஒரு டாக்டரா உங்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை , ட்ரீட்மெண்ட் கோர்ஸ் எல்லாம் சீஃப் டாக்டர் தான் டிசைட் பண்ணுவாங்க சார், சீஃப் டாக்டருக்கு இன்பார்ம் பண்ணிட்டோம் அவங்க வந்துட்டு இருக்காங்க ” என அந்த மருத்துவர் கூற , மேகாவுக்கு தந்தையை எண்ணி மிகவும் கவலையாக இருந்தது .
கண்ணாடி வழியாக தன் குடும்பத்தை பார்த்தாள் , பின்பு தன் எதிரே மெஷின்களின் மத்தியில் கண்மூடி படுத்திருக்கும் தந்தையை பாத்தாள் . தேவையில்லாத எண்ணங்கள் எல்லாம் தோன்றியது . ஒரு மருத்துவராக தந்தையின் நிலையை புரிந்து கொள்ள முடிந்த மேகாவுக்கு , ஒரு மகளாக அவர் நிலையை கண் கொண்டு பார்க்க முடியவில்லை .
ஏதோ திக்கு தெரியாது இருண்ட காட்டில் மாட்டிக்கொண்டது போன்று சித்தம் கலங்கி தவித்தாள் !
கோபால கிருஷ்ணன் மிகவும் கண்டிப்பானவராக இருப்பதால் , தாயிடம் அதிகமாக ஒட்டிக்கொள்ளும் விக்ரமும், மயூரியும் தந்தையுடன் அதிகம் ஒட்டுவதில்லை , ஆனால் மேகா மட்டும் அதில் விதிவிலக்கு, தந்தை எவ்வளவு தான் கோபம் கொண்டாலும் , எவ்வளவு தான் கண்டிப்புடன் இருந்தாலும், அவளுக்கு அவர் தான் ஹீரோ , ரோல் மாடல் , கைட் என அனைத்தும் அவரது தந்தை தான் . ஆக மேகா எப்பொழுதுமே தந்தை செல்லம் தான் . இப்படி தனக்கு அனைத்துமாய் இருக்கும் தந்தைக்கு ஒன்று நேர்ந்தால் தன்னால் எவ்வாறு வாழ முடியும் என தேவையற்ற கற்பனையில் உழன்றவளுக்கு உடலெங்கும் ஒருவித நடுக்கம் பரவ , சுவற்றில் சாய்ந்தபடி கண் மூடி நின்றாள் .
!!!!!!!!!!!!!
” சொல்லுங்க அண்ணாச்சி , எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாளாச்சு ” என்று தன் முழுக்கை சட்டையை முழங்கை வர மடித்துவிட்டபடி தன் நாற்காலியில் வந்து அமர்ந்தார் வேலன் என்று அழைக்கப்படும் வேல் முருகன் .
“……. ஆமா அதுக்கு ஒன்னு தான் குறை …. என்ன ல ? நாலு பணம் காசு பார்த்ததும் மெப்பு கூடி போச்சோ? சீவிடுவேன் ! என்ன வேலைல பார்த்து வச்சிருக்க , பெரிய எடத்துல கை வச்சிருக்க ” என எதிர்முனையில் இருந்த வெள்ளை வேட்டி முறுக்கு மீசை அண்ணாச்சி தனது டை அடித்த மீசையை முறுக்கியபடி வார்த்தைக்கு வார்த்தை நாலு நல்ல வார்த்தையால் வேலனை விளாசி எடுக்க , நெற்றியை நீவிய வேலனோ தலையும் புரியாமல் வாலும் புரியாமல் முழித்தான் .
“அண்ணாச்சி சத்தியமா நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல ? பசங்க ஏதும் பண்ணிட்டாங்களா ” பவ்வியமாக கேட்டான் வேலன் .
” ஏல யாரோ ஒரு பொம்பளை புள்ளைய கஸ்டடி எடுத்திருக்கியாமே, உன்னால அவன் அவன் ஃபோனை போட்டு கிழிக்காணுவ ” என்று கத்தியவர் ,” ஒருத்தன் உன்னை தேடி வருவான் அவன் கிட்ட வாய குடுக்காம அந்த புள்ளைய பத்திரமா அனுப்பி வை “
“சரிங்க அண்ணாச்சி ” தலையை ஆட்டினான் வேலன் .
“வர்றவன் ஒரு மாதிரில , அவன்கிட்ட மட்டும் வச்சிக்காத , ஒரு தடவை என்னையே வச்சி செஞ்சிட்டான் , தேவைப்பட்டா காலை புடிச்சிரு ” என அவர் தீரனை பற்றி ஒவ்வொன்றாய் கூற, அண்ணாச்சி சொன்ன அத்தனைக்கும் ஆமா சாமி போட்ட வேலன் அலைபேசியை வைத்த மறு நொடி , அக்னியின் ஜாகுவார் வேலனின் கோட்டைக்குள் நுழைந்தது .
~~~~~~~~~~~
சுவற்றில் சாய்ந்தபடி கண் மூடி நின்ற மேகாவின் மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடியது , எதை எதையோ சிந்தித்து பார்த்தவளுக்கு இறுதியாக வந்தது என்னவோ அக்னியின் முகம் தான் . ஆரம்பத்தில் இருந்து அவன் பேசிய பேச்சுகள் அனைத்தையும் நினைவு படுத்தி பார்த்தவளுக்கு நெஞ்சில் ஈரம் வற்றி போக ,
” சொன்னதை செஞ்சிட்டானே ” என அவளது இதழ்கள் முணுமுணுக்க , இறுதியில் தந்தையின் இந்த நிலைக்கு,’ நானே காரணமாகி போனேனே’ என எண்ணியவளுக்கு குற்ற உணர்வில் நெஞ்சம் வலித்தது .
‘ என்ன துன்பம் என்றாலும் , அது எனக்கே வரட்டும் , என் தந்தைக்கோ ,என் குடும்பத்துக்கோ எதுவுமே வர கூடாது’ என அவளது மனம் கிடந்தது அடித்துக்கொள்ள , ‘அப்பாக்கு எதுவும் ஆகாகூடாது ‘ என கடவுளிடம் முறையிட்டவளுக்கு தன் மீதே கோபம் வர , கண்களை வேகமாக துடைத்தவள் தேடியது என்னவோ தீரனை தான் .
தொடரும்