MK 16
		MK 16
அத்தியாயம் 16
பெங்களூரு
இருவருக்குமான நிச்சயதார்த்தம் சிறப்புற முடிந்திருக்க ,வந்த விருந்தினர்கள் எல்லாம் அவர்களுக்கான வாழ்த்துக்களை கூறி பரிசுகளை கொடுத்து சென்றனர் .
இசையாழினிக்கு அங்கு நிற்கவே முடியவில்லை . நெருப்பில் மேல் நிற்ப்பது போல் அத்தனை தவிப்பாக இருந்தது .
‘வெற்றிக்கு ஏதோ துரோகம் செய்கிறோமோ’ என்ற எண்ணம் வேற அவளை பாடாய் படுத்தி எடுத்தது . இருப்பினும் தந்தைக்காக அமைதியாக நின்றாள்.
ஆனாலும் சிறிது நேரத்திற்கு மேல் அவளால் முடியவில்லை .
அவளின் முகம் சிறிது சிறிதாக சோகத்தை வெளிகாட்ட , அதை பார்த்த சாம்பவி ” அடு என்னு மா . காலு நோயுடத்தேயே (என்ன ஆச்சி மா , கால் வலிக்குதா )?”
“இல்லி த்த “
“நந்தரா(அப்புறம் ) ?” சாம்பவி கேட்க
“என்ன ஆச்சி யாழி ?” திரும்பி பலராமன் தன் வருங்கால மனைவியிடம் கேட்டான் .
“ஒன்னுமில்ல .ஜஸ்ட் தலைவலி அவ்ளோதான் “
” சரி , நீ ரெஸ்ட் எடுத்துக்கோ . இனி வரவங்களை நான் பார்த்துகிறேன் ” ராம் பாசத்துடன் சொல்ல , நண்பனை ஏமாற்றுகிறோமே என்ற குற்றவுணர்ச்சி இசைக்கு கண்ணை கரித்து கொண்டு வந்தது .
அவள் கண்கலங்குவதை கண்ட சாம்பவி ,” நீ வா வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு ” அவளை அழைத்து கொண்டு உள்ளே சென்றார் .
‘ இது எங்க கொண்டு போய் முடியப்போகுதோ தெரியல. எல்லாம் அவனால வந்தது ‘ மனதில் நினைத்தவன்னால் வெளியே தைரியமாக சொல்ல முடியவில்லை .
அறைக்கு வந்த இசைக்கு எங்கேவாது சென்று விடக்கூடாதா என்றிருந்தது . அனால் தந்தையை மீறி அவளால் எதுவும் செய்ய இயலவில்லை .
இப்போது அவள் மூளைக்குள் அன்று நடந்த நிகழ்வு தான் ஓடியது .
அன்றைய தினம்..,
வெற்றியை காண போகும் ஆவலில் அத்தனை சந்தோசத்தோடு வந்தாள் . ஆனால் வெற்றி என்ன சொல்ல வருகிறான் என்று கூட கேட்க முடியாத நிலையில் இருந்தாள் .
தன் காதலை சந்தோஷத்துடன் கூற வந்தவளுக்கு இடியாய் இறங்கியது அவளது பெரிய அண்ணன் வாசுதேவ் பிரசாத்தின் வருகை .
அவனை அவள் அங்கு முற்றிலுமாக எதிர் பார்க்கவில்லை .
“ம்ம் , சொல்லுங்க வெற்றி எதுக்காக என்னைய உடனே பார்க்கனும்னு சொன்னீங்க. அதுவும் இல்லாமல் ஏதோ பிரச்சனைன்னு வேற சொன்னீங்களே “என்றபோது அவளுள் சொல்ல முடியாத சந்தோஷம் மனதினுள் குடிக்கொண்டிருந்தது.
ஆனால் என்ன செய்வது அதற்கு ஆப்பு வைக்கும் விதமாக தான் அண்ணனின் வருகை அமைந்ததே.
அண்ணனின் வருகையின் கூடவே வெற்றியின் தயக்கமும் சேர்ந்து கொள்ள , அதற்கு தீர்வாக அவளே பேசினாள்.
“சரி ,ஒரு நிமிஷம் இருங்க அங்க ஸ்வீட் பாப்கார்ன் விக்கிறாங்க . நான் போய் வாங்கிட்டு வரேன் ” என்று எழுந்து கொண்டவளை தடுத்து நிறுத்தி அவனே சென்றிருந்தான் வெற்றிமாறன்.
எப்படியோ ஒன்று அண்ணனின் பார்வையில் வெற்றி சிக்கவில்லை என்று சிறிது நிம்மதி கொண்டு அவனை பார்வையால் இரசித்த படி அமர்ந்திருந்தாள். ஆனாலும் உள்ளுக்குள் ஒருவிதமான பயம் இருந்து கொண்டு தான் இருந்தது. எப்படியாவது இங்கிருந்து சீக்கிரம் சென்று விட எண்ணியிருந்தாள்.
அதிலும் அவளுக்கு மனம் உறுத்தியது. அண்ணனின் வருகை தன்னை வேவு பார்க்கவோ என்ற சந்தேகம் வேறு எழுந்திருந்தது.
அதனால் தான் அவன் என்ன சொல்ல வருகிறான் என்று கூட புரிந்து கொள்ளாமல் ஏதோ பொய்யை அளந்து விட்டிருந்தாள்.
அவன் காதலை சொன்ன போது , அதை இரசிக்க முடியாமல் செய்து விட்டது வாசுதேவின் வருகை.
அவனால் தான் , அவள் பொய் கூற வேண்டியதாகிற்று.
அதற்கான பரிசு தான் அவனிடம் வாங்கிய கன்னத்து அடி.
தன் காதலை சொல்ல முடியா நிலையில் வைத்த கடவுளை உள்ளுக்குள்ளே திட்டி தீர்த்தாள்.
பின் , எப்படியாவது அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று எண்ணியவள் , அவனை தவிர்த்து விட்டு கிளம்பிவிட்டாள்.
அவளது குடும்பத்திற்கு காதல் என்ற வார்த்தை கூட பிடிப்பதில்லை.
அதற்கு காரணம் அவளது அத்தை சாம்பவி தான். திருமண நிச்சயத்தன்று காதலனுடன் சென்று குடும்பத்தை தலை குனிய வைத்த காரணத்துக்காக காதல் என்ற வார்த்தையை கூட வெறுத்தனர். அதிலும் இந்த வாசுதேவ் காதலில் வர எழுத்துக்களை கூட வெறுத்தான்.
அவன் கண்ணில் வெற்றியுடன் தன்னை கண்டுவிட்டால் வெற்றியை உண்டு இல்லையென்று பண்ணிவிடுவான்.
அதற்கு பயந்து தான் காதலிக்கவில்லை என்ற பொய்யை கூறி இடத்தை காலி செய்தாள்.
வீட்டிற்கு வந்தவளுக்கு அடுத்த அதிர்ச்சியாக அமைந்திருந்தது கால் மேல் கால் போட்ட படி அமர்ந்திருந்த அண்ணனை கண்டு.
“அண்ணா..”
” கிளம்பு சீக்கிரமா..”
” எங்க அண்ணா கிளம்ப சொல்றீங்க?”
வேகமாக எழுந்த வாசுதேவ் பக்கத்தில் இருந்த டீப்பாயை கீழே காலால் தள்ளிவிட்டவன் ,” கிளம்புன்னு சொன்னா கிளம்ப முடியாதா உன்னால , கிளம்பு சீக்கிரம்” வார்த்தையை கடித்து துப்பினான்.
“இல்..ல வே… “
” வாய மூடு . உன்ன இங்க வேலை பார்க்க தான் சிக்கப்பா அனுப்பினாரு. ஆனா நீ பண்ற எதுவும் சரி கிடையாது. இன்னும் அரைமணி நேரம் தான் உனக்கு டைம். அதுக்குள்ள கிளம்பி வர போ ” எச்சரிக்கை விடுத்தான் வாசுதேவ்.
அவளால் அடுத்து ஏதும் பேசமுடியவில்லை. அவளுக்கு வாசுதேவ் என்றால் பயம். அதனால் அமைதியாக கிளம்பி வந்தாள்.
பின்பு , அவளை தனது வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டான்.
டோட்டம்மா டோட்டப்பாவின் வீட்டில் இரண்டு நாட்கள் இருந்தவளை நேற்று இரவு பெங்களூர் அழைத்து வந்து ‘ உனக்கு நிச்சயம்’ என்று செய்தி போல் அறிவித்தினர்.
‘முடியாது ‘ என்று அடம் கூட அங்கு அவளால் பிடிக்க முடியவில்லை.
தந்தை வேறு வீட்டில் இல்லாததற்கு இசையால் ஏதும் செய்ய முடியவில்லை. அவள் தந்தை செல்லம்.
விழா நடப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பே தந்தை சுவாமிநாதன் வந்திருக்க , அவரிடம் கூறியதற்கு தான் தன்னை சமாதான படுத்தி நிச்சயத்தை நடத்தியிருந்தார்.
” அன்னைக்கு வேற மாறன் ஏதோ கல்யாணம்னு சொன்னாரே . நான் இந்த அண்ணா வந்ததால சரியா கவனிக்காம விட்டுட்டேனே “
” மாறா ! எனக்காக காத்திரு டா. நான் இன்னும் கொஞ்ச நாள்ல வந்தறேன்.அப்புறம் நாம சந்தோஷமா இருக்கலாம் ” விடியகாலையில் அவனிடம் பேசுவது போல் தனியே பேசிக் கொண்டிருந்தாள் இசையாழினி.
.
.
.
.
வீட்டிற்கு வந்த வெற்றிக்கு , அடுத்து என்ன செய்வது என்று கூட அவனுக்கு தெரியவில்லை ! புரியவில்லை !
பித்துபிடித்தவன் போல் அந்த இருக்கையில் அமர்ந்திருந்தான்.
அவன் எதை நினைத்து அவளிடம் பேசினானோ அந்த பதில் அவனுக்கு கிடைக்கவே செய்தது.
அவள் தன்னை எதிர்த்து சண்டைக்கு வர வேண்டும் என்று தான் அவனுமே நினைத்திருந்தான்.
அதிலும் அவள் ‘ அந்த அத்தான் ஏன் நீங்களா கூட இருந்திருக்கலாம்’ என்று சொன்ன போது அவனிளுள் பனி சாரல் தான்.
அக்னி பிழம்பாய் எரிந்து கொண்டிருந்த அவனது மனதிற்கு அருவியாய் கொட்டியது அவளது வார்த்தைகள்.
இதை விட அவனுக்கு என்ன வேண்டும் என்பது போல் இருந்த நிலையில் தான் அவள் வர மாட்டேன் என்று நிற்கவும் அவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.
விளையாடுகிறாள் என்றே நினைத்து தான் முதலில் அவன் பேசியது எல்லாம்.
ஆனால் அவள் முகத்தில் இருந்த தீவிரம் அவனை யோசிக்க வைத்தது.
அதிலும் ‘ இது தான் உங்க தண்டனை ‘ என்று அவள் கூறிய போது அவனுக்கு ஆத்திரமாக வந்தது. ஆனால் பெண்களை கை நீட்டி அடிக்க கூடாது என்ற கொள்கையுடையவன் என்பதால் அமைதியாக இருக்க , இனியா அவனை தனியே விட்டு பறந்து விட்டாள்.
போகும் வழியை வெறித்து மட்டுமே பார்க்க முடிந்தது அவனால். ஏனெனில் பின்தொடர்ந்தால் வேறு மாதிரியான தண்டனை கிடைக்கும் என எச்சரிக்கை விடுத்து தான் சென்றிருந்தாள்.
கிட்ட தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் அங்கேயே நின்றிருந்தான். அவள் திரும்பி வருவாள் என்ற நம்பிக்கையில். ஆனால் அவள் வராமல் போகவும் வீட்டிற்கு வந்து விட்டான்.
இதோ இப்போது அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருக்கிறான்.
வேலைக்கு நேரமாகிறது என்று புரிகிறது அவனுக்கு. ஆனால் அவனால் எதையும் செய்ய முடியவில்லை என்பதை விட செய்ய தோன்றவில்லை என்பது தான் சரியாக இருக்கும்.
மூன்று டெஸ்டில் இரண்டு டெஸ்ட்களுக்கு பாஸாகிவிட்டாள். இனி அவளுடன் தன் வாழ்க்கையை நிம்மதியாக வாழலாம் என நினைத்திருக்க இப்படி ஒரு நிகழ்வு அவனுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
” எவ்வளவு தைரியம் இருந்தா போறேன்னு சொல்லி போயிருப்பா. காலை உடச்சி படுக்க வைக்கணும். அது இருக்க போய் தானே மேடம் கிளம்பி போனாங்க ” கோபத்தில் பொறுமி தள்ளினான்.
” இனியா…” பல்லை கடித்து துப்பியவன் பக்கத்தில் இருந்த தலைகானியை தூக்கி எறிந்தான்.
அந்த நேரம் பார்த்து கௌதம் வெற்றிக்கு அழைத்திருந்தான்.
எடுத்த எடுப்பிலேயே” என்ன டா வேணும் உனக்கு ?” அவனிடத்தில் காய,
” ஏன் டா ஒருவாரம் கழிச்சு பேசுறேனே ஒரு புத்துணர்ச்சியா பேசுறீயா பக்கி. இப்படி என்கிட்ட காலங்காத்தால காயிற ?”
” எதுக்கு ஃபோன் பண்ணியோ அதை மட்டும் சொல்லிட்டு வைக்கிறியா “
” உனக்கு என் மேல பாசமே இல்லையா நண்பா?” பொய் கவலையோடே கேட்டான் கௌதம்.
“வெண்ண மாதிரி பேசாம விஷயத்தை சொல்லு எரும , இல்லனா நான் போனை கட் பண்றேன் “
” போடா பண்ணி ! இன்னைக்கு வேலைக்கு வரதா ஹெட் கிட்ட சொல்லி இருக்க . அவரு எங்கடா வெற்றின்னு கேட்டுட்டு இருக்காரு , நீயெனன்னா கூல்லா பேசிட்டு இருக்க ?”
” நான் கூல்லா பேசுறதை வந்து பார்த்தியா நீ . அவனவன் இருக்குற கடுப்பு தெரியாம பேசாத கெளதம் “
” சரி நீ ஏதோ மூட் அப்செட்ல இருக்க போல . நான் வைக்குறேன்”
” ரொம்ப புண்ணியமா போகும் . அதை செய் முதல நான் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வந்துருவேன் ” என சொல்ல வேண்டியதையும் சொல்லி வைத்துவிட்டான் வெற்றி .
வைத்த பிறகு தான் தங்கச்சியை பற்றி கேட்காதது புரிய மீண்டும் அவனுக்கு அழைத்தான் கெளதம் .
” இப்போ உனக்கு என்ன டா பிரச்சனை அதான் நான் வரேன்னு சொல்லிட்டேனே அப்புறம் என்ன ?”
” இல்ல மச்சான் தங்கச்சிய பத்தி கேட்க மறந்துட்டேன் டா . அதான் திரும்ப கால் பண்ணேன் .”
“கடுப்படிக்காத கெளதம் . போனை வை ” பற்களை நறுநறுத்தான் வெற்றி .
“வெற்றி இப்பவும் அந்த பெண்ணை பத்தி தான் நினைச்சுட்டு இருக்கியா என்ன ?”
“மூடிட்டு வை டா . திரும்ப கால் பண்ண சாவடிச்சுடுவேன் . இன்னையோட உன்னோட ஃபிரெண்ட்ஷிப்பை பிரேக் கப் பண்றேன் ” கத்திவிட்டு வைத்தான் வெற்றிமாறன் .
‘லூஸாகிட்டானோ . இருக்கும் இருக்கும் ‘ நினைத்தவண்ணம் வேலைக்கு கிளம்பினான் கெளதம் .
இங்கே வேலைக்கு கிளம்பின வெற்றிக்கு இனியாவின் ஞாபகம் தான்.
” எங்க இருக்காளோ , என்ன பண்றாளோ தெரியலையே ?” தவிப்பாக இருந்தது.
” எல்லாம் இந்த வாயால வந்தது. வேற ஒரு நாள் இதை பத்தி பேசியிருக்கலாம். தேவையில்லாம இப்ப போய் பேசி , அவ பறந்து போயிட்டா. சரியான ராட்சசி ” புலம்பியபடி வேலைக்கு சென்றான்.
ஒருவாரம் கழித்து வேலைக்கு வந்ததால் , அங்கிருந்தவர்களில் சிலர் வந்து வாழ்த்து கூற அமைதியாய் அதனை ஏற்று கொண்டான்.
” வா டா புதுமாப்பிள்ளை !” உற்சாகத்துடன் வரவேற்றான் கௌதம்.
” கொஞ்சம் அமைதியா போறியா . இல்ல காலையிலே என்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்கபோறியா ” கடுகடுத்தான்.
” என்ன மச்சான் ஒரு வாரம் கழிச்சு மீட் பண்றோம், ஒரு ஹக் கூட எனக்கில்லையா டா. எல்லாமே அங்க வீட்ல இருக்கிற என் தங்கச்சிக்கு தானா?”
‘ இல்லாத ஒருத்திய எங்கன்னு போய் கட்டி பிடிக்கிறதாம் . அவளோட அண்ணங்காரன் தானே, அதான் அவளை மாதிரியே லூசா இருக்கான்’ மனதில் அவளை அர்சித்தபடி இருந்தான்.
” என்ன டா பேச்சையே காணோம்” கௌதம் வெற்றியை சீண்ட
” எனக்கு ஷோக்கு டைமாச்சி நான் போறேன் “என கூறிவிட்டு ஸ்டூடியோக்குள் நுழைந்து கொண்டான்.
சரியாக ஆறுமணிக்கு ,
” வந்துட்டேன்! வந்துட்டேன்! உங்களோட பேச திரும்ப வந்துட்டேன். இவ்வளவு நாள் எனக்கு பதிலா இந்த ஷோ ஹோஸ்ட் பண்ணின ஆர்.ஜே கௌதமிற்கு ஒரு நன்றியை இங்க சொல்லிக்கிறேன். இதோ உங்களுக்கான முதல் பாடல் வந்துட்டு இருக்கு. இது டிகிரி காஃபி வித் ஆர். ஜே வெற்றி. நீங்க கேட்டுட்டு இருப்பது தொண்ணுத்தி மூனு புள்ளி அஞ்சு சிட்டி எஃப் வம் கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க “சந்தோஷமாக ஆரம்பித்திருந்தான்.
” வாங்க இன்னைக்கு ஷோக்குள்ள போவோம். முதல் காலர் யாருன்னு பார்ப்போம்”
” ஹலோ !”
” ஹலோ வெற்றி ! இந்த ஒன் வீக்கா உங்க வாய்சை ரொம்பவே மிஸ் பண்ணேன் ” ஒரு பெண் பேச
” சாரிங்க. பலரை மாதிரி நானும் இப்போ ஒரு அடிமை லிட்ஸ்ல சேர வேண்டியதா போச்சி . அதான் வர முடியல”
” புரியலையே வெற்றி “
” சரி, என்னோட ஃபேன்காக இதை நான் சொல்றேன். பல பெண்களின் மனதை ஒரு பொண்ணு கழுத்துல தாலியை கட்டி உடச்சிட்டேன். இனி நானும் பலரை மாதிரி பொண்டாட்டியின் அடிமை ஆகிட்டேன்” என பேச்சு ஏழு மணி வரை தொடர்ந்தது.
ஷோ முடித்து விட்டு வெளியே வந்த வெற்றியை பிடித்து கொண்டு வாழ்த்தினர்.
கஃபே டேரியாவில் வந்தமர்ந்த வெற்றிக்கு ஆயாசமாக இருந்தது.
‘ ச்ச , என்ன வாழ்க்கை டா இது ‘ தலையில் கைவைத்து அமர்ந்தவனுக்கு அடுத்த ஆப்பாக வந்து சேர்ந்தது மணிமாறனிடமிருந்து அழைப்பு.
அண்ணனின் அழைப்பை பார்த்த வெற்றியின் புருவம் முடிச்சுற்றது.
‘ இவன் எதுக்கு இந்த நேரத்துல கால் பண்றான். பேசிக்கா இப்போலாம் கூப்பிட மாட்டானே ‘ யோசனையூடே அழைப்பை ஏற்றான்.
” என்ன டா இந்த டைம்ல கால் பண்ணியிருக்க, ஏதாவது முக்கியமான விஷயமா என்ன?” வெற்றி சிறிது படபடத்துடனே கேட்டான்.
” சில் டா தம்பி , நாளைக்கு ஊருக்கு வரேன். அதை சொல்ல தான் உன்னை கூப்பிட்டதே “
” என்ன?” இருக்கையிலிருந்து எழுந்தே விட்டான் வெற்றி.
” எதுக்கு வர நீ, உனக்கு இங்க என்ன வேலை?”
” நாளைக்கு விவசாயம் பத்தின ஒரு மீட்டிங் இருக்கு டா. அதுக்கு தான் வரேன், கூடவே அண்ணியும் தம்பியும் வராங்க”
” அவுங்க எதுக்கு , வீட்ல இருந்து அண்ணி ரெஸ்ட் எடுக்கலாம்ல? ” அக்கறை கலந்த சுயநலத்துடன் வெற்றி தமையனிடம் கேட்டான்.
” அவ அவளோட தங்கச்சியை பார்க்கலையாம் டா. அதுனால ஊருக்கு வரேன்னு அடம் பிடிக்கிறா. நானும் சரின்னு சொல்லிட்டேன்.”
” என்ன அண்ணா நீ , ரெண்டு பேரையும் இந்த மாதிரியான நேரத்துல போய் ட்ரெயின்ல கூட்டிட்டு வருவியா?”
” வரும்போது உன்னோட கார்ல வந்துட்டு போகும்போது ஃப்லைட் போய்டுவோம் டா “
” எதுக்கு அண்ணிய….” என்று சொல்ல வந்தவனை தடுத்து நிறுத்தினாள் பூங்கோதை.
” நானும் தம்பியும் பத்திரமா வந்துடுவோம் கொழுந்தனாரே . நீங்க பயப்பட வேணாம்” பூங்கோதை கூற அமைதியாய் இருந்தான் வெற்றி.
” நாம நாளைக்கு மீட் பண்ணலாம் கொழுந்தானாரே. அம்மு கிட்ட சொல்லாதீங்க ஸ்வீட் சர்ப்ரைஸா இருக்கட்டும். சரி நாங்க வைச்சிடுறோம் ” பூங்கோதை அழைப்பை துண்டித்து விட்டாள்.
‘ அய்யோ! என்ன வாழ்க்கை டா இது ‘ தலையில் கை வைத்து அமர்ந்துவிட்டான்.
” எப்ப இந்த இனியாக்கு சில்வண்டுன்னு பேரு வச்சேனோ , இப்படி என்னைய கொடையிறாளே . இப்ப இவளை எங்கன்னு போய் நான் தேட “
” அய்யோ ஆண்டவா ! என்ன சோதனை இது “அப்படியே டேபிளில் தலைசாய்த்து படுத்து விட்டான்.
‘ ஏய் இனியா ! நீ எங்க தான் இருக்க ?’ மனதோடு கத்தியனுக்கு அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை.
****
” என்ன அத்தான் நான் சொன்ன மாதிரி சொல்லிட்டீங்களா ?” இனியா ஹாயாக சோஃபாவில் அமர்ந்து இட்லியை சாப்பிடவாறே கேட்க
” சொல்லியாச்சி அம்மு..”
” சூப்பர் அத்தான்.”
” நீ பண்றது எல்லாம் சரியா , தேவையில்லாம இதை பண்றியோன்னு எனக்கு தோணுது “
” எது தேவையில்லாம பண்றது அத்தான். ஒரு பொண்டாட்டி கிட்ட கேக்குற கேள்வியவா அவரு கேட்டாரு. ஒரு பொண்ணுன்னா சுயமரியாதையை விட்டுட்டு தான் வாழனும்னு ஏதாவது இருக்கா என்ன . எனக்கு சுயமரியாதையுடன் கூடிய ஒரு சந்தோஷமான வாழ்க்கை வாழ ஆசைப்படுறேன் “
” அதுக்கு இதை தான் நீ பண்ணணுமா என்ன?”
” சிலருக்கு சொன்னா புரியாது அத்தான். அடிச்சு தான் சொல்லி புரியவைக்கணும். அதே தான் இங்க இவருக்கும்..”
” சரி டா அம்மு. அவன் ரொம்பவே நல்லவன் அவனை ரொம்ப படுத்தி எடுக்காத “
” புரியுது அத்தான். சரி நான் அப்புறமா பேசுறேன் ” என அழைப்பை வைத்தாள்.
” மிஸ்டர். இனியா ! உங்களை நான் ஒரு வழி பண்ணலை ,நான் வெற்றியோட பொண்டாட்டியா இருக்க தகுதியே இல்லாதவாளா ஆகிடுவேன் ” என்றவள் மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டாள்.