Mk 17

eiS8VZ63923-d0ece402

அத்தியாயம் 17

மதியம் போல் வீட்டிற்கு வந்த வெற்றிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை.

நாளை அண்ணன் வேறு வர இருக்கிறான் என்ற நிலையில் இனியா வீட்டில் இல்லை என்று தெரிந்தால் , சும்மா விடுவார்களா என்னை?

அதிலும் தந்தை , என்னை கொலை கூட செய்ய தயங்க மாட்டார்.

” எல்லாம் அந்த அரை மெண்டலால வந்துச்சி . ஒழுங்கா என் கூட வந்திருந்தா இந்த பிரச்சனை எல்லாம் எனக்கு வந்திருக்குமா ” இனியாவை உள்ளுக்குள் திட்டி தீர்த்தான் அவளின் மிஸ்டர். இனியா.

இங்கு மிஸஸ் வெற்றிமாறனோ , இன்று தான் பல நாள் கழித்து உண்பது போல் அனைத்து வகையான உணவு பதார்த்தங்களை தயார் செய்து வைத்திருந்தாள்.

” இன்னைக்கு ஒரு வெட்டு வெட்ட வேண்டியது தான் ” ஒவ்வொன்றையும் ருசி பார்த்தவள் , ஒரு தட்டில் அவள் செய்தவற்றை எடுத்து வைத்தாள்.

தட்டை தூக்கி கொண்டு ஹாலுக்கு வந்தவள் , டீவியை போட்டு விட்டு பாட்டு சேனலை வைத்தாள்.

சரியாக சந்தோஷ் நாராயணன் இசையில் தனுஷ் மற்றும் சந்தோஷ் நாராயணன் பாடிய பாடலான ரகிட ரகிட பாடல் ஆரம்பமானது.

‘ஹே ரகிட ரகிட ரகிட…..ஊ

ரகிட ரகிட ரகிட…..ஊ

ரகிட ரகிட ரகிட…..ஊ

ரகிட ரகிட ரகிட……

ஹே என்ன வேணா நடக்கட்டுமே

நான் சந்தோசமா இருப்பேன்

உசுரு இருக்கு வேறென்ன வேணும் உல்லாசமா இருப்பேன்.’

பாடலுக்கு ஏற்றவாறு நடனம் ஆடியபடி வஞ்சிர மீனை பிய்த்து உண்டாள்.

“என் அழகு புருஷனே ! உனக்கு பிடிச்ச வஞ்சர மீனை தான் சாப்பிடுறேன். வேணுமா என்ன?” அவள் ஹாலில் பெரிதாக மாட்டிருந்த புகைப்படத்தை பார்த்து பேசினாள்.

” அச்சச்சோ! உங்களால சாப்பிட முடியாதுல , பரவால்ல உங்களுக்கு பதிலா நானே சாப்பிட்டுக்கிறேன் ” அடுத்த துண்டை எடுத்து சாப்பிட்டாள்.

” ச்ச , என்ன டேஸ்டு.. என்ன டேஸ்டு ” ருசித்து உண்டாள்.

” எல்லாமே உங்களுக்கு பிடிச்சதா செஞ்சிருக்கேன். சாப்பிட தான் உங்களுக்கு கொடுத்து வைக்கல . தேவையில்லாம பேசுனீங்கள, அனுபவிங்க”

” தேடுங்க நல்லா தேடுங்க மிஸ்டர் . இனியா. வாழ்க்கையில ஈசியா கிடைச்சிட்ட எதுக்குமே மதிப்பு இருக்காது. அதுனால தான் இந்த மாதிரியான தேடல் எல்லாம்.”

” முதல்ல சாப்பிட்டுக்கிறேன். அப்புறமா நாம பேசலாம். உன்கிட்ட தான் நிறைய பேச முடியும். ஒர்ஜினல் கிட்ட பேசவே முடியாது. அவரு எப்போ என்ன பண்ணுவாருன்னே தெரியாது.”

சாப்பிட்டு முடித்து அறைக்கு வந்தவளுக்கு ஒரு விதமான புத்துணர்ச்சி தான் . ஏன்னென்றால் அவள் அறை முழுவதும் அவனது புகைப்படங்கள் தான் .

அவனது ஒவ்வரு செய்கைகளையும் படம் பிடித்து வைத்திருந்தாள் இனியா .

இங்கிருக்கின்ற படங்கள் எல்லாம் வெற்றியிடம் கூட இருக்காது . ஏனென்றால் அது இந்த மூன்று வருடங்களாக அவள் சிறுக சிறுக எடுத்து சேமித்தது .

அவள் ஆசையாக சேமித்து வைத்தது ,இவை அனைத்தையும். அதன் மேல் அத்தனை மயக்கம் உண்டு அவளுக்கு.

ஒவ்வொரு நாளின் தொடக்கமும் முடிவும் இந்த படங்களோடு தான்.

நிஜயத்தை விட நிழலுடன் தான் அதிக நேரத்தை செலவிட்டாள்.

அவனை தொடர்ந்த அவளுக்கு , திருமண பேச்சு எடுத்த பின்பு தான் , அவனை பின் தொடர்வதை நிறுத்தியிருந்தாள்.

அந்த ஆறு மாதத்தில் தான் அவன் வாழ்வில் இசை என்றவள் நுழைந்ததும் , கல்யாணத்தை நிறுத்த கூறி வெற்றி தனக்கே ஷாக் கொடுத்தது எல்லாம்.

” உன் மூஞ்சுக்கு நானே பெருசு. இதுல இப்போ உனக்கு ஒரு காதலி அப்புறம் மனைவி வேறயா . கொழுப்பு கூடிப்போச்சி அத்தான் உனக்கு. அதான் என்னைய விட்டுட்டு இன்னொரு பொண்ணை நீ காதலிச்சிருக்க? “

” உன் நிலமை யாருக்கும் வர கூடாது அத்தான். பிடித்த காதலியா, கட்டின மனைவியான்னு ஒரு சூழ்நிலை வரும்போது நீ அதை எப்படி கடக்க போறியோ தெரியல ” கணவனுக்காக பரிதாபப்பட்டாள் இனியா .

அதே சமயம் இங்கே வெற்றியோ அவளுக்கு அழைத்த மையமாக இருந்தான் . ஆனால் அவளது மொபைல் ஸ்விட்ச் ஆப் என்றே வந்தது .அதில் கடுப்பான வெற்றி மொபைலை கீழே போட கூட பார்த்தான் . ஆனால் கீழே போட்டுவிட்டால் உடைந்து விடும் , அதன்கூட அவளது எண்ணும் தொலைந்து விடும் அல்லவா , அதனால் மட்டுமே இப்போது உடைக்காமல் விட்டான் .

“மனசாட்சின்னு ஒன்னு இவளுக்கு இல்லவே இல்லை , இருந்திருந்தா இப்படி போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணி வைப்பாளா ? இவளை எல்லாம் என்ன தான் பண்றதோ “புலம்பி தள்ளினான் வெற்றி .

அவனால் புலம்ப மட்டுமே முடிந்தது. வேறெதுவும் அவனால் செய்ய முடியவில்லை.

தினை விதைத்தவன் தினை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்‌! என்ற பழமொழிக்கு இணங்க இவன் விதைத்த விதையே இவனுக்கு திரும்பி விட்டது.

அவளுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்று பிணாத்தி கொண்டு இருந்தவனுக்கு மனைவி மூலமாக சிறிய தண்டனை கிடைக்கபெற்றது.

மதிய உணவை கூட மறந்து அவளை தொடர்பு கொண்ட படியே தான் இருந்தான் .இதில் விஜயசாந்தி வேறு இரண்டு முறை அழைத்து விட்டார் . அவரை சமாளித்து வைப்பதற்குள் அவனுக்கு நாக்கு தள்ளிவிட்டது .

மாலை போல் ஒரு காபி மட்டுமே குடித்தவன் , விடா முயற்சியாக தொடர்ந்து அவளுக்கு அழைத்தான் . அவனது கஷ்டகாலம் அவள் வேண்டுமென்றே போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து வைத்திருந்தாள் . அவனுக்கு சிறிது சிறிதாக பயமாக பிடித்தது . ஆனால் இங்கே தான் அவள் கடந்த மூன்று வருடங்களாக வசித்திருக்கிறாள் என்ற நிலையில் அவளால் இங்கு சமாளிக்க முடியும் என்றும் தோன்றியது .

அது எல்லாம் மனதுக்கு புரியுமா என்ன ?

வெற்றிக்கு பயம் பிடித்தது .

‘இசை இசை ‘ என்று சொல்லிய மனம் இப்போது ‘இனியா இனியா ‘என்று சொல்லிய மையமாக இருந்தது .

வெற்றியின் மனம் சிறிது சிறிதாக அவனையறியாமல் இனியாவின் புறம் சாய தொடங்கி இருந்தது .

நேரம் கடக்க கடக்க வெற்றிக்கு மனம் பரிதவித்தது . எங்கேயாவது சென்று தேடலாம் என்றால் எங்கு சென்று தேடுவது ? இது ஒன்றும் சிறிய கிராமம் இல்லையே , இது பரந்து விரிந்த ஊர் அல்லவா . எங்கே சென்று அவளை தேடி கண்டுபிடிப்பது .?

‘எங்கேயாவது தேடி கண்டு பிடிக்கலாம்’ என்று கிளம்பிவிட்டான் வெற்றி மனம் கேளாமால் .

இரவு எட்டு முப்பது ,

” இப்போ போனை ஆன் பண்ணலாமா , உங்களை நினைச்சா பாவமா இருக்கே ” புகைப்படத்தை பார்த்து பேசினாள் .

“இல்ல , இன்னும் கொஞ்ச நேரம் ஒரிஜினல் வெற்றியை அழைய விடலாமா , உன்ன பார்க்கவும் எனக்கு கஷ்டமா தான் இருக்கு .என்ன தான் இருந்தாலும் நீயும் வெற்றி தானே . உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ?” வருத்தப்படுவது போல் ஆரம்பித்து இரகசியம் போல் முடித்தாள்.

“…….”

” சரி சரி நானே சொல்றேன் .”

” நான் காலைலயே தடியன் சார் கிட்ட ஃபோன் பண்ணி பேசிருப்பேன் தெரியுமா , அவரோட ஷோ முடிச்சுட்டு பேசலாம்னு நினைச்சேன் . ஆனா அவரு பலரை மாதிரி நானும் இப்போ ஒரு அடிமை லிஸ்ட்ல சேர்ந்துட்டேன்னு சொன்னாருல , அதான் இத்தனையும் பண்ண வேண்டியதா போச்சி . நான் என்ன அவரை கொடுமையா பண்ணேன் . அவரு தானே என்னை கொடுமை பண்ணுணாரு ” சோக முகத்தை கொண்டு டூப் வெற்றியிடம் பேசினாள் .

“திரும்பவும் ஷோ ,முடிச்சுட்டு பேசலாம்னு இருக்கேன் பாப்போம் இப்போ என்ன பன்றாருன்னு ” ரேடியோவை ஆன் செய்து வைத்து காதை கூர்மையாக்கி கொண்டாள் .

இங்கு வெற்றியோ கலைத்து போய் இருக்கையில் அமர்ந்திருந்தான். அவனை பார்த்த படி கெளதம் நின்றிருந்தான் .

” உனக்கு என்ன ஆச்சி டா ? நீ ஏதோ அப்செட்டா இருக்கிற மாதிரி இருக்கு ” கெளதம் கேட்கவே வெற்றி விரக்தியான புன்னகை மட்டுமே புரிந்தான் .

“என்கிட்ட சொல்ல விருப்பம் இல்லனா சொல்லு , பலராமன்க்கு வேணா கால் பண்ணித்தறேன் . நீ பேசு ” கௌதம் பேச வெற்றி அவனை முறைத்தான் .

“என்ன டா பேசுற நீ , எனக்கு நீயும் பலா கொட்டையும் ஒன்னு தான் சரியா . இருக்கிற டென்ஷன்ல நீ வேற கடுப்படிக்காத டா ” நொந்து போன குரலில் சொன்னான் வெற்றி .

“இப்படி நொந்து போற அளவுக்கு என்ன தான் பிரச்சனை உனக்கு ?”

“சில விஷயத்தை வெளிய யார்கிட்டயும் சொல்ல முடியாது டா . சொல்லவும் கூடாது. அப்படி ஒரு நிலமையில தான் நான் இருக்கேன் . ஐம் சாரி மச்சான் ” வெற்றி நகர்ந்து விட்டான் .

*********

ஒன்பது மணி – ஸ்டூடியோக்குள்.

” இந்த இரவு வேளையில் என்னோட நேரத்தை கழிக்க போற உங்க எல்லாத்துக்கும் முதல ஒரு வணக்கம் . இது லவ் குரு ஷோ வித் ஆர் .ஜே வெற்றி . நீங்க கேட்டுட்டு இருப்பது தொண்ணுத்தி மூனு புள்ளி அஞ்சு சிட்டி எஃப் வம் கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க ” முதல் பாடலான விஜய் ஆண்டனி இசையில் ‘ உன் பேரை சொல்லும்போதே ‘ பாடல் ஒளிபரப்பானது.

” விஜய் ஆண்டனி இசையில் நா .முத்துக்குமார் வரியில் அழகான பாடல் ஒன்றை கேட்டோம் . நாம எப்போதும் டெய்லி ஒரு டாபிக் எடுத்து பேசுவோம் . இன்னைக்கு நாம எதை பத்தி பேச போறோம்னா முதல் பிரிவு . கணவன் மனைவிக்குள் நடந்த முதல் பிரிவு . அத நீங்க எப்படி உணர்ந்தீங்கன்னு தான் நீங்க ஷேர் பண்ணிக்க போறீங்க . முதல் காலர் கூட பேசுறதுக்கு முன்னாடி உங்களுக்கான ஒரு பாடல் . இது லவ் குரு ஷோ வித் யுவர் ஆர் .ஜே வெற்றி . நீங்க கேட்டுட்டு இருப்பது தொண்ணுத்தி மூனு புள்ளி அஞ்சு சிட்டி எஃப் வம் கேளுங்க கேளுங்க கேட்டுட்டே இருங்க ” பாடலை போட்டுவிட்டான் .

‘பிரிவொன்றை

சந்தித்தேன் முதல் முதல்

நேற்று நுரை ஈரல்

தீண்டாமல் திரும்புது

காற்று நீ என்ற தூரம்

வரை நீளாதோ எந்தன்

குடை நான் என்ற நேரம்

வரை தூராதோ உந்தன்

மழை ஓடோடி வாராயோ

அன்பே அன்பே அன்பே

அன்பே அன்பே அன்பே

அன்பே அன்பே’

” வாங்க நாம முதல் காலர் கிட்ட பேசலாம் “

“ஹலோ !”

“ஹலோ சார் !”

“ஹலோ சார் ! உங்க பெயர் சொல்லுங்க பாப்போம் “

“நான் வேலன் பேசுறேன் பா “

“சரி, சொல்லுங்க வேலன் உங்களுக்கும் உங்களோட மனைவிக்குமான முதல் பிரிவை நீங்க எப்படி உணர்ந்தீங்க ? எதனால அந்த முதல் பிரிவு?”

” எங்களோட முதல் பிரிவு ஒரு குட்டி சண்டைனால தான் பா . சின்ன சண்டை தான் , ஆனா நான் கோபத்துல ஏதோ வார்த்தைய விட போய் , அவ கோவிச்சுட்டு வீட்டை விட்டு வெளிய போயிட்டா . அவ போகும்போது ஒன்னும் தெரியல , ஆனா அவ போன பிறகு தான் அவளை ரொமபவே மிஸ் பண்ணேன் . நமக்காக இருந்த ஒருத்தி, நாம வீட்டுக்கு வரும்போது வீட்ல இல்லனா அது ஒரு மாதிரி கொடுமையானா உணர்வு பா. எல்லாமே நமக்காக பன்றாங்க அவுங்க கிட்ட போய் கோபத்தை காட்டி என்ன செய்றது சொல்லுங்க . “

“அந்த பிரிவுக்கப்புறம் நான் அவ கூட சண்டை போட்றதையே குறைச்சிட்டேன் . அவ இல்லன்னா எனக்கு ஒரு வேலையும் ஓடாது பா ” என்று முடித்தார் .

“ரொம்பவே நன்றி வேலன் .எங்க கிட்ட உங்கள் முதல் பிரிவை பத்தி ஷேர் பண்ணதுக்கு ” என்று அடுத்த பாடலை போட்டுவிட்டான் வெற்றி .

இப்படியே பத்து மணி வரை தொடர்ந்தது .

” இப்படியே உங்களோட பேசிட்டு இருக்க எனக்கும் ஆசையா தான் இருக்கு . ஆனா நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்துடுச்சி. போறதுக்கு முன்னாடி கடைசியா ஒன்னு மட்டும் சொல்லிக்குறேன் .”

“பிரிவு என்பது வாழ்க்கையில் எல்லாருக்கும் வரது தான் . அதை நாம எப்படி பார்க்குறோம்னு தான் இருக்கு . கணவன் மனைவி என்பவர்கள் நாணயத்தின் இரு பக்கங்கள் மாதிரி . ஒன்னு இல்லைன்னா இன்னொன்னு இல்லை . அதே மாதிரி தான் கணவனும் மனைவியும் . பிரிவு வரது தான் அதை எப்படி சமாளிக்கிறீங்க என்பது தான் முக்கியம் . ஈகோ மட்டும் இருக்கவே கூடாது . ரெண்டு பேர் சேர்ந்தது தான் வாழ்க்கை”

“என்னோட இந்த ஒரு மணிநேரத்தை செலவு செய்த உங்களுக்கு நன்றி . இதோ கடைசி பாடல் உங்களுக்காக . இது லவ் குரு ஷோ வித் யுவர் ஆர் .ஜே வெற்றி” பாடலை போட்டுவிட்டு வெளியேறினான்..

‘அவள் பறந்து

போனாளே என்னை

மறந்து போனாளே

நான் பார்க்கும் போது

கண்கள் இரண்டைக்

கவர்ந்து போனாளே’

கடைசியான பாடல் இனியாவிற்காக தான் அவன் போட்டதே . இதை அவள் கேட்டாலா இல்லையா என்று கூட அவனுக்கு தெரியாது . ஆனால் அவன் மனதை திறக்க உபயோக படுத்திய ஒரு கருவியாகும் .

இன்று பலருடன் இந்த முதல் பிரிவை பற்றி பேசிய பிறகு , பிரிவு என்பதே இருக்கக்கூடாது என்று முடிவு செய்தான் .

சோர்ந்து போன முகத்துடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் வெற்றி . இதே ஒரு வாரத்திற்கு முன்பு , ஆர்வமாக வந்திருந்தான் . அப்போது இசை அவனை ஆட்சி புரிந்தாள் .இப்போது இனியா என்பவள் ஆட்சி புரிகிறாள் .

இறுதியில் இரு பெண்களிருக்கும் இடையில் சிக்கி தவிக்க போகிறான் .

அவனுக்கு பால் குடிக்கும் எண்ணம் கூட இல்லை . காலையில் சாப்பிட்டது . மதியமும் சாப்பிடவில்லை , இப்போதும் சாப்பிட பிடிக்கவில்லை .

“எங்க தான் இருக்க நீ ? உன்ன நான் எங்கன்னு போய் தேட சில்வண்டு”

‘ ப்ளிஸ் அட்டன் பண்ணிடு மா..’ மனதோடு அவளிடம் கெஞ்சலானான் வெற்றி .

அதிகாலை நான்கு மணி ,விடாது அவளது தொலைபேசிக்கு அழைத்து ஓய்ந்து போனான் வெற்றி. அவனுடன் கூடவே அவனது அழைப்பேசியும் தான்..

” ச்ச , வேணும்னே பண்றா ? இவளை என்ன தான் செய்றதோ தெரியலையே “அவள் எங்கு இருக்கிறாள் என்று யோசித்து மண்டை காய்ந்து போனது அவனுக்கு.

‘ நல்லா வேணும் டா உனக்கு ‘ மனசாட்சி வெளிவந்து பேச துவங்க,

” ஒழுங்கா போயிடு நானே கடுப்புல இருக்கேன் ” மனசாட்சியை உதைத்து உள்ளே அனுப்பினான்.

அதற்குள் அவனுக்கு அழைப்பு வரவே , வேகமாக எடுத்து பார்க்க அதில் மணிமாறன் பெயர் தெரியவும் எடுக்காமல் தொப்பென்று அமர்ந்து விட்டான்.

முதலில் அவனின் தேடுதல் தன்னை யாரும் திட்டி விட கூடாது என்று தான். ஆனால் போக போக அவனுக்கு பயம் வந்தது.

இனியாவை பற்றிய எண்ணங்கள் அவன் மனதை அறிக்க துவங்கிவிட்டது.

அதற்குள் அடுத்த அழைப்பு ஒன்று வரவே அண்ணனாக தான் இருக்கும் என்று எண்ணி எடுக்காமல் போக மீண்டும் அழைப்பு வரவும் மொபைலை கையில் எடுத்தவனுக்கு சந்தோஷம் தாளவில்லை.

அவனுக்கு அழைத்திருந்தது வேறு யாருமில்லை அவனது சில்வண்டே தான்.

உடனே எடுத்தவன் “சில்வண்டு ” படபடப்பு கூடிய சந்தோஷத்துடன் அழைத்தான்.

எதிர்புறத்தில் இருந்து ,” வாட் ? ” என ஒற்றை பதில் கேள்வியாக வந்தது

அதனை கவனியாது ,” எங்க இருக்க நீ ? நான் பேசியது எல்லாம் தப்பு தான் மா , என்னைய மன்னிச்சி வீட்டுக்கு வந்துடு தாயே” இடைமறித்து பேசினாள் அந்த பெண்.

” ஸ்டாப் ஸ்டாப் . முதல யாரு நீங்க ? யாரோ நினைச்சு என்கிட்ட பேசிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன் .” என எதிர்ப்புறம் இருந்த பெண் சொல்ல

உடனே காதிலிருந்து ஃபோனை எடுத்து டிஸ்ப்ளேவை பார்த்தான்.

‘ சில்வண்டு ‘ என்று பெயரை தான் மீண்டும் கண்டான்.

” இது நம்ம சில்வண்டு தான்.‌ ஆனா யாரோ மாதிரி பேசுறாலே “

” ஹலோ! இது இனியா தானே?”

” இனியான்னு இங்க யாரும் இல்ல சார். இத்தனை தடவை ஏன் இந்த நம்பருக்கு கூப்பிட்டுருக்கீங்கன்னு கேட்க தான் கூப்பிட்டதே “

” இது என் மனைவி இனியாவோட நம்பர் . அவுங்களுக்கு தான் கூப்பிட்டதே. பார்த்தா வேற யாரோ எடுத்து பேசுறீங்க ?”

” ஐ திங் சோ இது ராங் நம்பர் சார். திரும்பி கால் பண்ணி இரிடேட் பண்ணாதீங்க ப்ளிஸ்” அந்த பெண் சொல்லி கட் செய்து விட்டது.

” என்ன இது , அவளுக்கு கால் பண்ணா யாரோ பேசுறாங்க. சோதனையின் உட்சக்கட்டம் டா வெற்றி இது ” நொந்து போனான் வெற்றிமாறன்.

அடுத்த சில மணி நேரத்தில் இன்னொரு புதிய எண்ணிலிருந்து வெற்றிக்கு அழைப்பு வந்தது.

பார்த்த அவனுக்கு சலிப்பு தான். ஆனாலும் அதனை எடுத்து காதில் வைத்தான்.

” ஹலோ!”

” தடியன் சார்!”

” யார் நீங்க ?” அவள் பேசியதை கவனியாது பேசினான் அவன்.

” தடியன் சார்ர்ர்…” இழுத்து சற்று சத்தமாக கூறவே அவனது மூளைக்குள் அந்த வார்த்தைகள் எட்டியது.

” சி..ல்..வ..ண்..டு ” வார்த்தை வராமல் போக அவளது செல்ல பெயரை கடினப் பட்டு திக்கி திணறி அழைத்தான்.

சந்தோஷம் தாளவில்லை அவனுக்கு. அதில் வார்த்தை கூட வர மறுத்தது.

” நானே தான் தடியன் சார்!”

” எங்க இருக்க நீ ? உனக்கு எத்தனை தடவை கூப்பிடுறது ?உன்னோட ஃபோன் நம்பர்க்கு என்ன ஆச்சி ? முதல எங்க இருக்குன்னு சொல்லு , நான் வரேன் ” பதறிய குறலில் மூச்சுவிடாமல் பேசியபடி இருந்தான்.

” வெயிட் வெயிட் . கொஞ்சம் ப்ரீத் பண்ணுங்க “

” சரி ,நீ‌ எங்க இருக்கன்னு சொல்லு. நான் உன்னை கூப்பிட வரேன். உன்ன பார்க்க அண்ணி வேற வரேன்னு சொல்லியிருக்காங்க “

” இனி நேத்து பேசின மாதிரி அவசரப்பட்டு வார்த்தையை விட மாட்டீங்க தானே ?” இனியா அவனிடம் கேட்க

” மாட்டேன்! மாட்டேன் !” பட்டென்று பதில் வந்தது அவளவனிடமிருந்து.

” சரி , அப்போ நான் உங்களை எங்க விட்டுட்டு வந்தேனோ அங்கேயே வாங்க. நான் உங்களுக்காக காத்திருக்கிறேன்.”

” சீக்கிரமாவே வந்திடுறேன் . பாத்து பத்திரமா இரு “

” சரி வாங்க “

அழைப்பை துண்டித்த வெற்றி வேகமாக ஒரு கேப்பை பிடித்து ரயில் நிலையம் சென்றான்.

அவன் கண்கள் எங்கும் தன் மனைவியை தேடி அலைபாய்ந்தது. இறுதியில் அவளை கண்டு கொண்ட பிறகு தான் அந்த கண்களுக்கு உயிர்ப்பே வந்தது.

உடம்பில் ஏதோ புது உதிரம் பாய்ந்தது போல் ஒர் உணர்வு !

அவன் கால்கள் மெதுவாக அவளை நோக்கி சென்றது. அத்தனை நேரம் இருந்த வேகம் குறைந்தது.

அவளை பார்த்தபடி நடந்து வந்தான்.

அவளும் அவனை கண்டு கொண்டால் போல், அவள் முகத்தில் ஓர் புத்துணர்ச்சி!

இருவரின் கால்களும் இணையை நோக்கி நடையிட்டது.

ஓர் ஆள் இருவருக்கும் நடுவில் நிற்கும் அளவிற்கான இடைவெளி விட்டு நின்றார்கள்.

இருவருமே , இணையின் நலத்தை தான் முதலில் ஆராய்ந்தனர்.

ஏதோ பல நாட்கள் கடந்து சந்திப்பது போல் இருவருக்குள்ளும் ஒருவிதமான படபடப்பு.

இதயத்தின் துடிப்பை மற்றவர்கள் கேட்கும் அளவிற்கு இருந்தது. ஒரு விதமான மோன நிலையில் நின்றனர்.

‘எங்கே ஏதாவது பேசினால், இவள் மீண்டும் வர மாட்டேன் என்று முரண்டு பிடித்துவிடுவாளோ ?’ என்று பயந்து போய் பேசாமல் நின்றான்.

இனியாவோ ‘ தான் ஏதாவது பேசப்போய் மீண்டும் வார்த்தைகள் சூடு பிடித்திட கூடாது ‘ என்பது இவளது அமைதியின் காரணம்.

பக்கத்தில் நின்ற நாய் தான் கடைசியில் இருவரது மோன நிலையையும் கலைத்தது.

” சில்வண்டு..” ஆத்மார்த்தமான அத்தனை மென்மையோடு அழைத்திருந்தான் கண்கள் சிறிதாக கலங்கியிருந்ததோ .

” தடியன் சார் எனக்கு நாய்ன்னா பயம் வீட்டுக்கு போயிடலாமா ..” பாவமான குரலில் சொன்னாள்.

” சரி வா ” அவளை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்தான்.

” வெல்கம் ஹோம் ” சந்தோஷத்துடன் அவளை அழைத்து கொண்டு ஒரே நேரத்தில் உள்ளே சென்றனர்.

புன்னகை கூடிய ஏக்கத்தோடு அவன் கைபிடித்தவாறு வீட்டிற்குள் நுழைந்தாள்.

இவள் பிடித்தால் என்றால் அவன் அதை கெட்டியாக பிடித்து கொண்டான்.

இருவரது பிடிக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன.