MP!26

MP!26
மோகனங்கள் பேசுதடி!
மோகனம் 26
அன்றைய தினம் அருணிற்கு அத்தனை நல்லதாய் அமையவில்லை. காலையிலிருந்து இதோ இப்போதுவரை மனவுலைச்சலை தான் கொடுத்தது.
அடுத்து என்ன செய்வது என்று புரியாத நிலையில் அறையிலே குறுக்கும் நெடுக்குமாய் நடந்தவண்ணமாக இருந்தான்.
மனம் சொல்லொண்ணா வலியில் துடியாய் துடித்தது.
காலையில் நடந்த சம்பவம் அதற்கு பின்னான நடந்த சம்பவம் என அந்த இரண்டு நிகழ்வுகளிலே நிலைகுலைந்து போய் விட்டான் என்றால் தன் மனமே என்ன நினைக்கிறது என்று புரியாமல் தவித்தான்.
காலையில் ஃபேக்டரிக்கு செல்லலாம் என்று கிளம்பி வந்த அருணை மறைத்தார் போல் அவன் முன் நின்றார் மஞ்சுளா.
“என்ன மா?”என்று கேட்டவன், கிளம்ப எத்தனிக்க,
“நீ எனக்கு செய்து கொடுத்த வாக்கு ஞாபகத்துல இருக்கு தானே அருண்?” தீடிரென அன்னை இப்படி கேட்கவும் ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் விழித்தான்.
“என்ன வாக்கு?” என்றவனை முறைத்த மஞ்சுளா,” கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னியே டா. அதான் பொண்ணு பார்த்திருக்கேன்” என அன்னை மகிழ்வாய் சொல்வதை கேட்டவனுக்கு அப்போது தான் அவன் சொன்னது நினைவிலே வந்தது.
அன்று இருந்த நிலை அவன் அன்னையின் மனநிலையை உணர்ந்து திருமணத்திற்கு சம்மதத்தை கூறியிருந்தான்.
அதன்பிறகு தான் என்னென்னவோ நடந்து, இறுதியில் விஷ்வா மற்றும் அருவியின் திருமணத்தில் முடிந்திருந்தது.
“ம்மா! இப்போ அதுக்கு என்ன அவசரம்? கொஞ்ச நாள் போகட்டுமே” எனும்போதே அங்கே வந்த விஷ்வா தமையனின் தோளில் கைப்போட்டு,” உனக்கு இன்னும் நாட்கள் போக போக வயசு குறைய போறது இல்ல, ஏற தான் போகுது. சீக்கிரமே நீ ஒரு கல்யாணத்தை பண்ணிக்கோ டா” என்று அறிவுரை கூறும் தம்பியை உறுத்து விழித்த அருண் பதில் பேச வருமுன் அருவி தொடர்ந்தாள்.
“நீங்க கல்யாணம் பண்ணிக்கிறதுல தான் எங்களோட சந்தோஷமே இருக்கு. நீங்க நாள் கடத்த கடத்த ஒருமாதிரி என்னையும் விஷ்வாவையும் குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்குது. கொஞ்சம் யோசிங்களேன்.”
இப்படியே மாறி மாறி பேசி அவனை பேச விடாது செய்து அவனை இக்கட்ட நிலைக்கு தள்ளிவிட்டனர்.
“போதும் நிறுத்துங்க.இப்போ நான் என்ன தான் பண்ணணும்னு நினைக்கிறீங்க?” எடுத்த எடுப்பிலே எகிறினான்.
” உனக்கு நாங்க பார்த்திருக்கிற பொண்ணை போய் பார்த்திட்டு வரணும்” விஷ்வா சொல்ல, அவனை முறைத்தான்.
“இப்போ எதுக்கு அவனை முறைக்கிற? நீ எனக்கு வாக்கு கொடுத்திருக்கிற அதை மறந்திடாத” சொல்லவும் சொல்லொண்ணா வலி அவனுள்.
காரணம் தான் புரியவில்லை. அதனை ஆராயவும் அவன் விரும்பவில்லை.
“சரி போய்த்தொலைக்கிறேன் ” கடுப்புடனே கடுகடுக்க,
“சரியா மூணு மணிக்கு டீ நெஸ்ட் போய் பார்த்து பேசிட்டு வா” மஞ்சுளா மகனிடம் உரைக்க,
“ம்ம்ம்…”என தலையை அவன் ஆட்டி வைக்க, அங்கே அவன் நல்லபடியாக பேசுவான் என்ற நம்பிக்கை இங்கிருந்த யாருக்கும் சுத்தமாக இல்லை.
“பேசிட்டு வரதுன்னா அந்த பொண்ணுக்கு பிடிக்கிற மாதிரி பேசணும் புரிஞ்சுதா” இதனை அழுத்தி கூறவும், கோபமாய் வந்தது அருணிற்கு ஆனாலும் அதனை கட்டுப்படுத்திக்கொண்டு அமைதியாய் நின்றிருந்தான்.
இங்கே வேலைக்கு வந்ததும், அதில் மூழ்கி விட அன்னை கூறியதை எல்லாம் மறந்தே போனான்.
இப்போதெல்லாம் விழியை தன்பக்கத்தில் வைத்துக்கொண்டு தான் வேலையே. தன் பார்வையிலிருந்து சில துளிகள் மறைந்தாலும் மனம் பதறி அவளை கொதறி வைக்கிறது.
இதற்கான காரணம் புரிந்தும் புரியாத நிலை தான்.
சரியாக மூன்று மணிக்கு அன்னையிடமிருந்து அழைப்பு வர, எடுத்த எடுப்பிலே “ம்மா! எனக்கு கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு நான் அப்புறம் பேசுறேன்” என்று வைத்து விட,போனை வெறித்து பார்த்த மாமியாரை கண்டு,” என்ன சொன்னாரு அத்தை?”என்றாள்.
“எவ்வளவு திமிரு இருக்கும் இவனுக்கு ?” கடுப்பாய் மாமியார் சொல்லவும், ” என்ன ஆச்சி அத்தை?” கேள்வியாய் வினவ,
“அந்த ராஸ்க்கல்க்கு நாம காலையில கஷ்டப்பட்டு ஓதினது எல்லாம் வேஸ்ட்டா போச்சி ” நெட்டி முறிக்க சொன்ன மாமியாரை கண்ட அருவி,” இருங்க நான் பேசுறேன் அத்தை” என்று சொல்லி அருணிற்கு அழைத்தாள்.
அருவியின் எண் அடுத்ததாக வரவும் தான் காலையில் நடந்த நிகழ்வு ஞாபகத்திற்கு வரவும் நெற்றியை நீவினான்.
அவளது அழைப்பை ஏற்றவன் அருவியை பேசவிடாது அவனே பேசினான்.
“இதோ இப்போ கிளம்பிடுவேன் டீச்சரம்மா. நேரா அந்த பொண்ணை பார்த்துட்டு நல்லப்படியா பேசிட்டு வரேன். அம்மா கிட்ட என்னைய திட்டவேண்டாம்னு சொல்லிடுங்க” சொல்லி வைத்தும் விட்டான்.
காதிலிருந்து தொலைபேசியை எடுத்த அருவி அதனையே பார்க்க,” என்ன எடுக்கலையா தேனு?” கடுப்பாய் கேட்க,
“எடுத்தாரு அத்தை. ஆனா என்னைய பேசவே விடாம அவரே பேசிட்டு வச்சிட்டாரு” சொல்லவுமே ,” என்ன சொன்னான் அவன்?” கேட்க,
“இதோ கிளம்பிட்டேன்னு சொல்லி உங்களை திட்ட வேண்டாம்னு சொல்ல சொன்னாரு” அப்படியே சொல்ல, அதற்கும் அருணிற்கு திட்டு விழுந்தது.
இங்கே வேகவேகமாய் வண்டியை எடுத்த அருண் போகும் வழியெங்கும் அகல்விழியை திட்டியவாறே வண்டியே ஓட்டினான்.
‘இந்த அகல்விழி இன்னைக்குன்னு பார்த்தா லீவு போட்டு தொலையனும். கொஞ்சம் கூட அறிவே இல்ல இந்த பொண்ணுக்கு’ என அவனது பயண இலக்கு வரும்வரை திட்டியப்படியே தான் வந்தான்.
டீ நெஸ்ட்டினுள் உள்ளே சென்றவனுக்கு அவன் பார்க்க வந்த பெண் யாரென்று தெரியாத நிலையில் அங்கிருந்த சிலப்பெண்களை பார்த்து குழம்பி தான் போனான். அதற்குள் தமையனிடமிருந்து ஃபோன் வர, அதனை ஏற்றான்.
“என்னடா அண்ணா டெஸ்டிநேஷன் ரீச் ஆகிட்டியா?” சிரிப்புடனே கேட்க,
“ஏன் டா புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து இப்படி என்னைய பாடா படுத்துறீங்க?” கடுப்புடனே தமையனை கடிய,
“டேய்!!! அதவிடு இன்னும் அந்த பொண்ணு வந்து சேரல டா. சோ கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு வந்துடுவாங்க. அப்புறம் இப்படியே போய் அந்த பொண்ணு கிட்ட பேசிதொலைக்காத. பாவம் பயந்துட போகுது. சிரிச்ச முகத்தோடு பேசிட்டு வரணும் புரியுதா”
பற்களை நறநறவென கடித்த அருண்,”நல்லாவே புரியுது. இப்போ போனை வைக்குறியா” சொல்லி வைத்தும் விட்டான். பின் அங்கே இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தவன், வீட்டினரை மனதினுள் திட்டிக்கொண்டிருந்தான்.
இப்படியே கால்மணிநேரம் கழிந்திட, அருணிற்கு கோபமாய் வந்தது.
கிளம்பலாம் என்று எந்திரிக்கும் பொழுது,” சாரி… சாரி… கொஞ்சம் லேட்டாகிடுச்சி” சொல்லி அவன் முன் ஒரு பெண் அமரவும் அப்பெண்ணை சிலையானன்.
அருண் அசைவின்றி இருப்பதை கண்டவள், அவன் முன் சொடக்கிட, அதில் உயிர்ப்பெற்றவன்,”நீ இங்க என்ன பண்ற?” குழிம்பிய நிலையில் கேட்டான்.
“இங்க என்ன பண்றேன்னா என்ன சொல்ல?”என புரியாது கேட்க,
“அகல்! இன்னைக்கு…” ஏதோ சொல்ல வந்தவன்,” ஷீட்…” வேகமாய் இருக்கையை விட்டு எழுந்து விட்டான்.
“என்ன ஆச்சி? இப்போ எதுக்கு எழுந்தீங்க?”அவனை பார்த்து கேட்க,
“அறிவில்ல உனக்கு. உன்னைய எப்படி இவங்க இங்க ” என நெற்றியை நீவியவன் ” முதல இங்கிருந்து கிளம்பலாம் வா” அவள் கையை பிடித்து இழுத்துச்சென்றான்.
“என்னைய விடுங்க அருண்.கை வலிக்குது”
“வாய மூடு. ஏதும் பேசாத”
“கைய விடுங்க…”என முயன்று அவனிடமிருந்து கையை பிரித்தெடுத்தாள்.
“என்ன பண்றீங்க நீங்க?” கோபமாய் கைகளை தேய்த்த படியே கேட்க,
“என்ன பண்றேன்னா? இங்க நீ எதுக்கு வந்திருக்கன்னு உனக்கு தெரியுமா?” ஏதோ சிறுபிள்ளை வழி தவறி வந்துவிட்டது என நினைத்து அவளுக்கு புரியவைக்க நினைத்தான்.
“அது தெரியாம தான் இங்க வந்திருக்கேனா, எல்லாம் என்னோட ஏற்பாடு தான்.நான் நேரடியாவே சொல்லிடுறேன் அது தான் என்னோட கேரக்டர்க்கு செட் ஆகும். எனக்கு உங்களை புடிச்சிருக்கு. இது இன்பாக்ச்சுவேசனோ வயசு கோளாறோ கிடையாது எனக்கு உங்களை உண்மையாவே புடிச்சிருக்கு. உங்களோட வாழ்க்கை துணையா கடைசி நொடிவரைக்கும் உங்க கைய புடிச்சுகிட்டு போகணும்னு ஆசைப்படுறேன்” சொல்லி முடிக்கும்முன்பே அவனின் கைரேகை அவளின் கன்னத்தில் பதிந்திருந்தது.
“என்ன பேசுறோம்னு புரிஞ்சி தான் பேசுறியா, உன்னோட வயசென்ன என்னோட வயசென்ன? அதுமட்டுமில்லாம என்ன பத்தி என்ன தெரியும்ன்னு என்னைய கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிற?”கட்டுக்கடங்காத கோபத்தில் அவன் இதனை கேட்க,
“எனக்கு இந்த வயசு வித்தியாசம் எல்லாம் பெருசா தெரியல. நான் உங்களை வயசு வித்தியாசம் பார்த்து மிஸ் பண்ண விரும்பலை அருண். அப்புறம் கடைசியா நீங்க கேட்டதுக்கான பதில் எந்த இடத்துல இந்திரா அக்கா உங்களை விட்டுட்டு போனாங்களோ அங்க இருந்த நான் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்க நினைக்கிறேன் ” என்றவள் அவளுக்கு அவனை பற்றிய விடயங்கள் எல்லாம் தெரியுமென சொல்லாமல் சொல்லி அவனை அதிர்வுக்குள்ளாக்கினாள்.
“என்ன பத்தி தெரிஞ்சும் எப்படி இப்படியொரு முடிவை எடுத்திருக்கிற?”
“எனக்கு உங்களோட இருக்கும்போது ஒருவித பாதுக்காபான உணர்வு. ஒரு பொண்ணுக்கு இது போதாதா , நான் எங்க அப்பா எங்க அம்மாவ எப்படியெல்லாம் ட்ரீட் பண்ணுவார்னு பார்த்திருக்கேன். சோ நீங்க என்னைய ஒதுக்க நினைக்கிற காரணம் எனக்கு செட்டாகாது. நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க நினைக்கிறேன். இது தான் என்னோட முடிவு. நீங்க நல்லா யோச்சி உங்களோட முடிவை சொல்லுங்க அருண் நான் கிளம்புறேன்” என்றவளை தடுத்து நிறுத்திய அருண் ” வா! நானே கொண்டு போய் வீட்ல விடுறேன்” சொல்லவுமே அகல்விழியின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது.
அகல்விழியை அவள் வீட்டில் விட்டுட்டு, வேலைக்கு சென்று விட்டான்.
இங்கே அப்போது தான் வேலையை முடித்து வந்த அருவி, வீட்டு வாசலையே பார்த்துக்கொண்டிருக்க, அவள் பக்கத்தில் வந்தமர்ந்தான் விஷ்வா.
“என்ன ஆரு நெர்வஸா இருக்கிற மாதிரி தெரியுது” விஷ்வா சோஃபாவில் அமர்ந்து ஐஸ்கிரீமை சாப்பிட்டப்படி சாவகாசமாய் கேட்க,
கணவனை கடைக்கண்ணால் பார்த்து முறைத்தவள்,” எவ்வளோ கூல்லா கேக்குறீங்க நீங்க, எனக்கு இங்க ஒரே டெஷ்டனா இருக்கு ப்ராசாத்” பதட்டமான குரலில் சொல்லவுமே விஷ்வா சிரித்தான்.
“இப்போ எதுக்கு சிரிக்கீறிங்க?”
“அங்க கண்டிப்பா ஒரு வாரே நடந்திருக்கும் பொண்டாட்டி. நம்மளை மாதிரி அவங்க அமைதி கிடையாது அடாவடி. சோ எப்படியிருந்தாலும் ரெண்டும் அடிச்சிக்குங்க அப்புறம் சேர்ந்துங்குங்க. அதனால கவலைப்படாம வந்து புருஷனை கவனி” விஷ்வா இப்படி சொல்லவும் ,மூளைக்கு புரிந்தாலும் மனம் அடித்துக்கொள்ள தான் செய்தது.
அந்த நேரம் பார்த்து தாத்தாவுடன் நடைப்பயிற்சி சென்று வந்த பூவினி ,தந்தை ஐஸ்கிரீம் சாப்பிடுவதை கண்டு அவனை நோக்கி ஓடிவந்தது.
“அப்பா! எனக்கு… எனக்கு…” குழந்தை ஓடிவந்து வாயை திறந்து காட்ட, அவளை தூக்கி மடியில் அமர்த்தியவன் பிள்ளைக்கு கொஞ்சமாக ஊட்டிவிட்டான்.
“விஷ்வா, இப்போ எதுக்கு அவளுக்கு ஐஸ்கிரீம் கொடுக்கிற அப்புறம் அவளுக்கு சலிப்புடிச்சா என்ன பண்றது” கண்டனத்துடன் கேட்க,
“ஒரு வாய் வச்சதுனால ஒன்னும் ஆகிடாது டி. இப்படி பிள்ளைக்கு எதுவும் கொடுக்காம வளர்த்தா , அப்புறம் அவ எப்படி ஸ்ட்ராங்கா இருப்பா. சளி புடிச்சா புடிச்சுட்டு போகட்டுமே. இப்படியே எல்லாத்துக்கும் பயந்து அவளையும் அப்படியே வளர்க்காத” விஷ்வா அறிவுரை சொன்னாலும் அருவியால் சட்டென்று அதனை ஏற்று கொள்ள தான் முடியவில்லை.
இரவு தாமதமாக வீட்டிற்கு வந்தவன், யாரையும் காண விரும்பாது நேராக அறைக்கு சென்று தன்னை மறைத்துக்கொண்டான்.
வீட்டினருக்கு கவலையாக இருந்தது. ஆனாலும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. எதுவாக இருந்தாலும் அவனாக முடிவெடுத்து பேசட்டும் என விஷ்வா சொல்லிவிட, அமைதியாக இருந்துவிட்டனர்.
இதுநாள்வரை அகல்விழியை அருவியின் தங்கையென மட்டும் பார்த்திருந்தவன், அன்றைய சம்பவத்திற்கு பிறகு அவளை கண் பார்வையிலே வைத்துக்கொண்டான். சிறிது அவள் கண்ணை விட்டு மறைந்தாலும் மனம் பதற செய்தது. இதற்கெல்லாம் காரணம் என்னவென்று அவன் அறிவதற்குள் விழியே வந்து காதலை சொல்லி தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்பாள் என்று இவன் கனவிலும் நினையவில்லை.
இவளுக்கு தன்னை பற்றிய அனைத்தும் தெரிந்தும் இப்படி கேட்கிறாள் என்றால் இவளை என்ன செய்வது? எப்படி இவள் மனதை மாற்றுவது என்று புரியாமல் அவள் நினைப்பிலேயே அன்றைய தினத்தை கழித்தான். இப்படியே ஒருவாரத்திற்கு மேல் போக, அனைவரும் அமைதியாய் தான் இருந்தனர் அருணிற்கு தான் தன்னோடு விழியை சேர்ப்பதற்கு ஏதோ திட்டம் திட்டுகிறார்களோ என்று எண்ணினான்.
காதலை சொன்னவள் எப்போதும் போல் அமைதியாக இருந்து கொண்டாள். இவன் தான் கடைசியில் குழம்பி போய் மண்டையை பிய்த்து கொண்டான்.
நாட்கள் தான் அதன் போக்கில் கடந்து செல்ல, அமைதியாய் சென்றிருந்த விஷ்வா மற்றும் அருவியின் வாழ்வில் இடையூறு செய்யவென லண்டனிலிருந்து குன்னூர் வந்து இறங்கினாள் நேத்ரா.