Home Akila Kannan கட்டங்கள்

கட்டங்கள்

(4 customer reviews)

 250.00

4 reviews for கட்டங்கள்

 1. Akilakannan

  From Thirumathi Lavanya – Facebook

  கட்டங்கள் – அகிலா கண்ணன

  யாரவது அவங்களை tag பண்ணுங்கப்பா. என் பிரெண்ட் லிஸ்ட்ல அவங்க இல்லை.

  முதல்ல கதையின் பெயரைப் பார்த்ததும், கட்டம் கட்டி நம்மை அழ வைக்கப் போறாங்களோன்னு நினைச்சேன். ஆனால் கதையைப் படிக்க ஆரம்பிச்சதும் தான் புரிஞ்சது கதைக்கான பொருத்தமான தலைப்பு என்று. செம ஜாலியா பெரிய விஷயங்களை சொல்லிட்டுப் போயிட்டே இருந்தாங்க கதையில். கதையும் மிகவும் அருமை.

  வெகு நாட்களுக்குப் பிறகு கதை வாசித்தேன். உங்க கதையை வாசித்ததில் மிக்க மகிழ்ச்சி. கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை எவ்வித தொய்வுமில்லாமல், எவ்வித ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் அழகாக கதைப் பயணித்தது. அடுத்து என்ன , அடுத்து என்ன என விறுவிறுப்பாக கதை சென்றது.

  கதையின் பாத்திரங்கள் நித்யா, மது, முகிலன், காயத்திரி, வெண்பா, முரளி, அசோக் என அனைவரையும் மிகவும் அழகாக செதுக்கி, கதையில் பொருத்தி இருக்கிறீர்கள்.

  நாயகன் நாயகியின் உரையாடல்கள் அனைத்தும் எதார்த்தமாக, அழகாக எழுதியதற்கு வாழ்த்துக்கள்!
  மது-நித்யாவின் திருமணம், சண்டைகள், காதல் என அனைத்திலும் வெகு எதார்த்தம்.
  முரளி- வெண்பா காதல், வெட்டியாக சுற்றிக் கொண்டிருந்த அசோக்கின் மனமாற்றம் என அனைத்தும் கதை வாசிப்பவர்களின் மனதை கண்டிப்பாக ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. பல இடங்களில் வாய் விட்டுச் சிரித்தேன். கோலம் போடும் இடத்தில, வெங்காயம் வெட்டும் இடத்தில, பாகற்காய் சாலட் செய்யும் இடத்தில் எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

  பணத்தை விட அன்பே முக்கியம் என சொல்லும் கதையில் காதல், குடும்பம், அன்பு, பாசம், நேசம் என அனைத்தும் சரி விகிதத்தில் வழிந்தோடியது. அழகான கதையை தந்ததற்கு உங்களுக்கு நன்றி!

  இது தான நான் வாசித்த உங்கள் முதல் கதை. மிகவும் அருமையாக இருந்தது, அதிலும் எங்குமே எல்லையைத் தாண்டாத காதலைச் சொல்லியிருந்த விதம் பாராட்டுக்கு உரியது. நீங்கள் மேலும் மேலும் கதைகள் எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன்.

  எனக்கு கண்ணுல ஏதாவது பிரச்சனை வந்தா உங்க மேலே தான கேஸ் போடுவேன். ?
  laptop ரிப்பேர் ஆகி இன்னைக்கு தான் வந்தது. அதனால் உங்க கதையை என் மொபைலில் படிச்சு முடிச்சேன். அவ்வளவு விறுவிறுப்பாக இருந்தததால் காத்திருக்க முடியவில்லை.

  வாழ்த்துகள்!
  என்றும் அன்புடன்,
  லாவண்யா.

 2. Akila

  Review From Reader Malar Suresh – Facebook

  “கட்டங்கள்”பிரண்ட்ஸ் மிடில் கிளாஸ் பொண்ணு பணக்கார வீட்டு மருமகளாகவும் …..பணக்கார வீட்டு பொண்ணு மிடில் கிளாஸ் வீட்டுக்கு மருமகளாகவும் சூழ்நிலை காரணமா போகும்போது அவங்களோட நிலை என்னாகும் அப்படிங்கிறத நித்யா வெண்பா மூலமா இவ்ளவ் அழகா சொல்லமுடியாது….??????????ஒவ்வொரு கேரக்டர்சும் நம்ம மனசுல ஆழமா பதியுறாங்க ……முகிலன் காயத்ரி முரளி அசோக் சித்ரா ………superrrrrrrbbbbbbbb………?????நித்யா சான்ஸ் இல்ல செம எந்த சிக்கலையும் தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளும் விதம் ??????????????என்னோட தன்னபிக்கையும் சுயகௌரவமும் உனக்கு திமிர்ன்னு தோணிச்சுனா நான் திமிர் பிடிச்சவளாவே இருந்துட்டு போறேன்னு சொல்லற கெத்து இருக்கே ????????????????????இன்னும் பிரச்சினைகள் இருக்கு அத நித்யா எப்படி எதிர்கொள்வானு பார்க்க மிகுந்த ஆவல் …அகிலா கண்ணன் சிஸ்டர் …..கட்டங்கள் வாழ்க்கைல என்ன என்ன பண்ணுது super……கட்டங்கள் நிரப்ப படுமா வெண்மையாவே இருக்குமா பார்க்கா ஆவல் .செம இன்டர்ஸ்டிங்கா அடுத்து அடுத்து என்ன னு எதிர்பார்க்க வைச்சுட்டீங்க ?????????????????

 3. Akila kannan

 4. Akila kannan

  From Reader Jasha… From Facebook

  கட்டங்கள்…. எழுத்தால் எளிமையா பெண்ணின் குணத்தை சிறப்பா கதையா சொன்ன எழுத்தாளர் அகிலா கண்ணன்…

  இயல்பான நடுத்தர குடும்பத்தில் எதிர்பாரா பெரிய வீட்டு சம்மந்தம் எதிர்க்க… வேணாம்னு பிடிவாதமாய் மதுவாக நாயகன் நித்தியாவிடமே தடுக்க கேட்டு அது முடியாம முடிந்தே விட்ட திருமணம்…
  நித்யா …. கதையின் கருவும் கட்டங்கள் தீட்டும் ஓவிய பெண்ணும் இவளே … கதா நாயகியா கனமா சொல்லாம.. இருப்பதை கொண்டு இயல்பா சொல்லி இதயத்தில் நிக்க வச்சிட்டாங்க நமக்கும் நாயகனுக்கும்…
  வெண்பா … முரளியின் காதலோடு திருமண பந்தத்தில் நடுதர குடும்ப பாங்கின் அழகில் பொருந்திப்போன பெரிய இடத்து பெண்… மதுவை மணக்க இருந்த பெண்ணாக இருந்து முரளியின் வாழ்வோடு இணைந்து நித்யாவின் தாய்வீட்டு குடியிருப்பில் கொஞ்சமே கொஞ்சம் வருந்தியும் பொருந்தியும் இயல்பான குணத்தில் அண்ணியாவும் மறுமகளாவும் வீட்டினர் பிரியங்களுடன் பிள்ளை பேற்றோடு பெற்றோரயும் அடைய…காரணமே கணவன் பெருமிதமா பெண்ணின் குணம்….

  மது… ரொம்ப அதிகமா சொல்லப்படாத அவனோட உயரமும் அதில் அவன் கொண்ட பெருமையும் இயற்கையே கதைக்கு கச்சிதமா இருப்பதே கதைகளின் பணக்கார நாயகன் இலக்கணம் திருத்திய வடிவமாய்… அதை நித்யாவின் இயல்பில் தொலைத்து கட்டத்தில் வண்ணமாறும் சிறுபிள்ளையாய் சில காதலோடு குடும்பம் சிதையாது சில முடிவுகளில் தளர்த்தி கைவசமாக்கும் நித்யாவின் காதலாய் கணவனா முகிலனின் முழு அன்பில் அண்ணனா இதமாவே மது பாத்திரம்…

  2 மாறுபட்ட சூழலில் மணமுடிக்கும் மங்கையரின் பண்பான பாங்கும் அதை அறிந்து அரவணைப்பா 2 குடும்பமா மது ,முரளியின் குடும்பங்கள் நித்யா, வெண்பாவின் பிறந்த வீடுமா அன்பை வெளிப்படுத்த வருத்தம் வெளிபடுத்தனு ஒரு பெரிய பட்டாளமா கட்டங்கள் கதையோடு ….நித்யா அவ மகனுக்கு செயல்முறையாக்கும் கட்டங்கள் பிள்ளைகளிடத்து ஒரு வளர்ப்பு முறை கற்பிக்கப்படுது பெற்றோர்க்கும் ….
  படிச்சு நாளாகி விட்டாலும் பதிந்த தடங்களில் சொல்லில் சொதப்பலில் சில இடங்களுமா கட்டங்களின் வாசிப்பில் படித்ததை பகிர்தலோடு நான்…. இன்னும் ஒரு பிடித்தமாக எழுத்தாளர் தொகுக்கும் முறை கூட அழகுதான்…
  அனேகமானோர் வாசித்த கதையே என்றாலும் அறியாத சிலருக்கு அறிவிக்கவே இந்த பதிவு…

Add a review

Your email address will not be published.

0