அனல் பார்வை 30🔥

eiURPJH57827-fde5ba90

திருமணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்,

இரவு பதினொரு மணி,

“சாகு! என்ன டா தவழ்ந்துக்கிட்டு வர்ற? உனக்கு வயசாகிகிட்டே போகுதுன்னு அப்பப்போ நிரூபிக்கிற. சீக்கிரம் வந்து தொலை டா! என் அத்தை பார்த்தாங்கன்னா நான் செத்தேன்.” என்றவாறு அருவி தன்னவனை திருட்டுத்தனமாக சந்திக்கவென அவனின் அறையை நோக்கி பதுங்கி பதுங்கிச் செல்ல, அவள் பின்னாலே அவளை கெட்ட கெட்ட வார்த்தையால் அர்ச்சித்தவாறு சென்றான் ராகவ்.

அன்று போல் இன்றும் தூணிண் பின்னால், சிலை பின்னால் என மறைந்தவாறு அவர்கள் செல்ல, சட்டென சில ஆட்கள் வரும் காலடி சத்தத்தில், “அய்யய்யோ! மாட்டிக்கிட்டோம்.” என்றவாறு பதறியபடி அருவி திரும்ப, அவன் பின்னால் இருந்தால் தானே!

‘டேய் சாகு! எங்க டா போய் தொலைஞ்ச? அய்யய்யோ! சரி நாம குத்துமதிப்பா நம்ம ஆள தேடி போவோம்.’ என்று தனக்குள்ளே பேசியவாறு யார் கண்ணிலும் சிக்காது சென்ற அருவி ஒரு தூணிற்கு பின் மறைந்து நின்றவாறு ‘யாராவது வருகிறார்களா?’ என்று கண்களை சுழலவிட்டு பார்த்துக்கொண்டிருக்க,

“அச்சச்சோ! மாட்டிக்கிட்டோமே… இப்போ எப்படி போறது தீ?” என்று கேட்ட குரலுக்கு “அது தெரிஞ்சா நான் ஏன் இங்க நின்னுக்கிட்டு இருக்க போறேன்?” என்று சாதரணமாக சொன்னவள் அப்போது தான் உணர்ந்து சட்டென திரும்பி பார்த்தாள்.

அவளுடைய கண்கள் தன் பக்கத்தில் தன்னை போலவே தூணிற்கு பின்னால் மறைந்து நின்று எட்டிப் பார்த்தவாறு இருந்த தன்னவனை பார்த்து விரிய, “மஹி நீயா?” என்று ஆச்சரியமாக கேட்டாள் அவள்!

அவனோ அவளின் பாவனையில் வாய்விட்டு சிரிக்க, “நான் உன்னை தேடி வந்தா நீ என் முன்னாடி நிக்கிற? ஆமா… நீ இங்க என்ன பண்ற?” என்று இடுப்பில் கைகுற்றி புருவத்தை நெறித்தவாறு கேட்டாள் அருவி.

“நானும் உன்னை தேடி தான் வந்தேன் ஜானு…” என்று அக்னி புன்னகையுடன் சொல்ல, “ரியலி?!” என்று கண்களை அகல விரித்து கேட்டவள் பின் இதழை சுழித்து, “நான் ஒழிஞ்சிருக்கேன் அதுல ஒரு நியாயம் இருக்கு. நீ எதுக்கு மேன் ஒழிஞ்சிருக்க?” என்று சந்தேகமாக கேட்டாள்.

செல்லமாக அவளின் தலைமுடியை கலைத்து விட்டவன், “ராஜாவோ, மக்களோ எல்லாருக்கும் ஒரே சட்டம் தான். சரி வா! யாராச்சும் நம்மள பார்க்குறதுக்குள்ள போயிரலாம்.” என்றவாறு அவளை அங்கிருந்த ஒரு அறைக்குள் இழுத்துச் செல்ல, அறைக்குள் நுழைந்து கதவை சாத்திவிட்டு, “ஹப்பாடா!” என்று பெருமூச்சுவிட்டவளுக்கு பேச்சு அப்படியே நின்றது.

அக்னி அவளை விழுங்கி விடுவது போல் பார்த்தவாறு நின்றிருக்க, ‘என்ன இவன் பார்வையே ஒரு மார்கமா இருக்கு. இது சரியில்லையே…’ என்று யோசித்த அருவி, “ஹிஹிஹி… மஹி இங்க வந்து ரொம்ப வெயிட் போட்டுட்ட போல, நல்ல தீனியா? நானும் தான்…” என்று அசடுவழிந்தவாறு ஏதேதோ பேசிச் சென்றவளின் வார்த்தைகள் அப்படியே தடைப்பட்டது. அவளவனின் இதழ் செய்த மாயத்தால்…

தன்னை கட்டுப்படுத்த முடியாது மின்னல் வேகத்தில் அவளை நெருங்கியவன் கதவுடன் மேலும் அவளை சாத்தி, அவளின் கீழுதட்டை அழுத்தமாக கவ்வியிருக்க, அவன் கைகளோ அவளின் சிற்றிடையை அழுத்தமாக வளைத்துக் கொண்டன. முதலில் இதை எதிர்பாராது அதிர்ந்து விழித்த அருவியின் விழிகள் பின் அந்த முத்தத்தின் இதத்தால் தானாக மூடிக் கொண்டன.

அவனோ அவளுள் மேலும் மேலும் புதைந்துக் கொண்டே போக, அந்த இதழ் முத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது என்னவோ அருவி தான். தன் இதழை விடாது இதழ் தேனில் மூழ்கியிருந்தவனிடமிருந்து தன்னிதழை பிரித்து அவன் முகத்தை அவள் பார்க்க, ‘ச்சே!’ என்று சலித்தவாறு “இப்போ என்ன?” என்று சற்று கடுப்பாகவே கேட்டான் அக்னி.

“மூச்சு முட்டுது டா.” என்று அவள் பாவமாக சொல்ல, வெட்கத்துடன் கீழுதட்டை கடித்து சிரித்துக் கொண்டவன், தன்னவளை நெருங்கி அவளிள் நெற்றியோடு நெற்றியை ஒட்டிக் கொண்டான். தன்னவனின் அருகாமையில் அவள் கண்களை மூடி நின்றிருக்க, அவனின் வலது கையோ அவள் அணிந்திருந்த வெள்ளை நிற ஆடையை மேல் நோக்கி உயர்த்தியது.

அதில் பதறியவள் அவனின் கையை பிடித்து, “மஹி, என்ன பண்ற? கல்யாணத்துக்கு இன்னும் மூனு நாள் தான் இருக்கு. அதுக்குள்ளயேவா?” என்று தீவிர முகபாவனையில் சொல்ல, அதில் அவளை செல்லமாக முறைத்தவன் அவளின் மூக்கை செல்லமாக கடித்து, “இது அது கிடையாது ஜானு…” என்றவாறு அவளின் ஆடையை உயர்த்தி அவளின் வயிற்றில் தன் கரத்தை அழுத்தமாக பதித்துக் கொண்டான்.

கண்களை மூடி அவள் நெற்றியோடு நெற்றியை வைத்தவாறு மனதில் உண்டான இழப்பின் வலியுடன் அவன் நின்றிருக்க, அருவியாலும் அவன் உணர்வுகளை புரிந்துக் கொள்ள முடியுமாகத் தான் இருந்தது. “மஹி…” என்று அவள் மென்மையாக அழைக்க, கண்களை திறந்தவனது கண்கள் சிவந்து இருக்க, அது வலியை அப்பட்டமாக காட்டியது.

“நீ சொன்ன மாதிரி நம்ம குழந்தை இருந்திருந்தா இப்போ இரண்டு வயசாகியிருக்கும்ல?” என்று அவன் வேதனை நிறைந்த குரலில் கேட்க, தன்னவனின் கழுத்தை கட்டிக்கொண்டு அவனிதழில் அழுந்த முத்தமிட்டாள் அருவி.

கண்களை மூடி அவளின் முத்தத்தை அவன் அனுபவிக்க, அவனின் காதுமடலில் இதழ் உரச நின்றவள், “நம்ம பேபி நமக்காக வெயிட்டிங் மஹி, நம்ம கிட்ட வர்றதுக்கு… நம்ம பட்டு அதோட அம்மா அப்பாக்கிட்ட சீக்கிரம் வந்துடும்.” என்று சொல்ல, முத்துப்பற்கள் தெரிய சிரித்தவன் அவளின் தாடையை பற்றி தன்னை நோக்கி திருப்பி அவளிதழில் முத்தமிட போக, அவனுதட்டின் மேல் விரலை வைத்து தடுத்தாள் அருவி.

“மஹி, கல்யாணத்துக்கு முன்னாடி இதெல்லாம் தப்பு!” என்று கேலிக்குரலில் அவள் சொல்ல, அவளின் விரலில் தன்னிதழ் உரச, “முடியல ஜானு, உனக்காக ரொம்ப ஏங்கி போயிருக்கேன். அன்னைக்கு உன்னை விட்டு விலகனும்னு நினைக்கும் போதே செத்துரலாமோன்னு தோணிச்சி. இனிமேலும் உன்னை விட்டு என்னால இருக்க முடியாது.” என்றுவிட்டு அவள் விரலை விலக்கிவிட்டு அவளை இறுக அணைத்துக்கொண்டு அவளிதழை சிறைப்பிடித்தான்.

சிறிது நேரம் அவளிதழிலே குடியிருந்தவன் அவளிள் கழுத்து வளைவில் முகத்தை புதைத்து கழுத்தில் அழுந்த முத்தம் பதிக்க, அதில் கிறங்கிப்போனவள் கண்களை மூடி அதை ரசித்தாள். சரியாக, இருவரின் இந்நிலையை கலைக்கும் விதமாக அரண்மனை அவசர கூட்டத்திற்கான மணியோசை கேட்க, சட்டென விலகிக் கொண்ட இருவருமே ‘இந்த நேரத்துல எதுக்கு கூட்டம்?’ என்று நினைத்தவாறு அதிர்ந்து போய் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்னாச்சு மஹி?” என்று அருவி பதட்டமாக கேட்க, “தெரியல ஜானு, நீ இந்த வழியால மண்டபத்துக்கு போ! நான் வரேன்.” என்றுவிட்டு அருவியை ஒரு வழியில் அனுப்பிய அக்னி, எதுவும் நடக்காதது போல் வேறு ஒரு வழியால் மண்டபத்திற்கு வேக நடையுடன் வந்தான். அங்கு கண்ட காட்சியில் ‘என்ன டா நடக்குது இங்க?’ என்று தான் இருந்தது இருவருக்கும்.

சில ஆட்கள் சூழ டார்சி ராகவ்வை முறைத்தவாறு நின்றிருக்க, அவனோ கைகளை கட்டி தலைகுனிந்தவாறு தன் பக்கத்தில் நின்றிருந்த ஆலாவை முறைத்துக்கொண்டு நின்றிருந்தான். ஆலாவோ எதையும் கண்டுக்காது நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு நிமிர்ந்திருந்தவள், ராகவ் முறைப்பதை பார்த்து திருதிருவென விழித்தவாறு முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டாள்.

‘டேய் சாகு! இந்த பொண்ணு கூட ஜோடி போட்டு என்ன டா குற்றவாளி மாதிரி நின்னுகிட்டு இருக்க?’ என்ற ரீதியில் அருவி பார்க்க, டார்சியின் அருகில் வந்து நின்ற அக்னி கண்களாலே அவனிடம், ‘என்ன?’ என்று கேட்டான். உதட்டை பிதுக்கியவாறு தன் பக்கத்திலிருந்தவளை முறைத்துப் பார்த்த ராகவ்வின் நினைவுகள் சற்று நேரத்திற்கு முன் நடந்த நிகழ்வுகளுக்குச் சென்றது.

அருவியின் பின்னாலே சென்றுக் கொண்டிருந்தவனை திடீரென ஒரு கரம் பற்றி இழுக்க, அதில் பயந்து ‘ஆஆ…’ என்று கத்தச் சென்றவனின் வாயை தன் மறுகரம் கொண்டு மூடியிருந்தது அந்த உருவம். அவனோ விழிவிரித்து தன் முன் நின்றிருந்தவளை பார்க்க, “நான் தான்…” என்று சொன்னவாறு அவனின் உதட்டை மூடியிருந்த தன் கரத்தை எடுத்தாள் ஆலா.

‘கிராதகி! எப்போ பாரு நம்மள பதட்டத்துலயே வச்சிருக்கா’ என்று நினைத்தவாறு அவளை அவன் முறைத்துப் பார்க்க, அவளும் பதிலுக்கு முறைத்தவாறு, “எதுக்கு இங்கயிருந்து போகனும்னு முடிவு பண்ண? நீ போனா உன் கூட இருக்குறவங்க கஷ்டப்படுவாங்கன்னு யோசிக்கவே மாட்டியா?” என்று காட்டமாக கேட்டாள்.

அவளை ஆழ்ந்து நோக்கியவனுக்கு அவளின் இந்த கோபம் கூட பிடித்துத் தான் இருந்தது. அவனும் சில நாட்களாக அவளை கவனித்துக் கொண்டு தானே இருக்கிறான்! அவளுடைய கண்களில் தெரிந்த ஏக்கம் அவனுக்குள் ஒருவித சந்தோஷத்தை கொடுக்க, “ஆகுக்கும், அருவுக்கும் என்னை பத்தி தெரியும். அவங்க புரிஞ்சிப்பாங்க.” என்று அடக்கப்பட்ட புன்னகையுடன் ராகவ் சொல்ல,

“அது… அது வந்து…” என்று முதலில் தடுமாறியவள் பின் ஒரு பெருமூச்சை விட்டு, “இங்கயிருந்து நீ போயே ஆகனுமா?” என்று கேட்க, அவளை மென்புன்னகையுடன் பார்த்த ராகவ், “என் அப்பா, அம்மா சின்னவயசுலயே இறந்துட்டாங்க. அவங்களோட நான் சின்னவயசுல வாழ்ந்த வீடு தமிழ்நாட்டுல இருக்கு. அங்க போகனும்னு ஆசை! அதுமட்டுமில்ல, வெளியுலகம் தான் என்னோட உலகம். நான் போயே ஆகனும்.” என்று சொல்ல, அவளுக்கோ வேதனை கலந்த கோபம்.

தன்னிலை புரியாது பேசுகிறானே இவன் என்ற கோபம் ஒரு பக்கம்! ராகவ் இங்கிருந்து செல்வதாக சொன்னதுமே தன் காதலை அவள் உணர்ந்திருக்க, அவனை விட்டு பிரிந்து வாழ்வதை ஏற்றுக் கொள்ள முடியாத வலி மறுபக்கம்!

ஒரு முடிவு எடுத்தவளாக அவனை ஏறிட்டு பார்த்தவள், மூச்சுகாற்று படும் தூரத்திற்கு அவனை நெருங்கி நின்று, “அப்போ, என்னையும் உன் கூட கூட்டிட்டு போ!” என்று பட்டென்று சொல்ல, “எத?” என்று அதிர்ந்து கேட்டவன் பின் முத்துப்பற்கள் தெரிய சிரித்து வைத்தான்.

“நான் எதுக்கு உன்னை கூட்டிட்டு போகனும்? அதெல்லாம் முடியாது. பொண்ணுங்க சவகாசமே நமக்கு வேணாம்.” என்று கேலியாக அவன் சொல்ல, அதில் அவனை முறைத்தவள் எதுவும் யோசிக்காது அவனை தாவி அணைத்து அவனிதழில் அழுந்த ஒரு முத்தத்தை  கொடுத்து, “என்னையும் கூட்டிட்டு போற! இல்லை…” என்றவாறு பின்னால் எப்போதும் வைத்திருக்கும் கத்தியை அவனின் கழுத்தில் வைத்து மிரட்டலாக சொல்ல, அவளின் முத்தத்தில் அதிர்ந்து விழித்தவன், அவளின் அதிரடியில், “ஆத்தாடி ஆத்தா…!” என்று திகைத்துவிட்டான்.

அவளோ அவனை முட்டிக்கொண்டு வந்த சிரிப்புடன் பார்க்க, “இங்க என்ன தான் நடக்குது?” என்ற குரலில் இருவருமே திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தனர். டார்சியோ இருவரையும் முறைத்தவாறு நின்றிருக்க, “ஆத்தீ…” என்று ராகவ் பதறினான் என்றால், ஆலாவோ முதலில் அதிர்ந்தவள் பின் “நானும் இவரும் காதலிக்கிறோம்.” என்று தைரியமாகவே சொல்லி விட்டாள்.

என்ன தான் அக்னியின் விடயத்தில் ஒத்துக் கொண்டாலும், தங்கள் நகரத்தை சேர்ந்த பெண் வெளியுலகத்தை சேர்ந்த பையனை காதலிப்பதில் சற்று கடுப்பான டார்சி இருவரையும் குற்றவாளி போல் நிற்க வைத்துவிட்டார்.

நடந்ததை கேட்ட அக்னி ஆலாவை ஆராய்ச்சியாக நோக்கியவாறு, “ஆலா, உனக்கே தெரியும். ராகு இன்னும் மூனு நாள்ல இங்கயிருந்து போயிருவான். இந்த நகரத்துக்குள்ள வர்றதுக்கான எல்லா வழியும் மூடப்பட போகுது. இங்கயிருந்து போயிட்டா மறுபடியும் இதுக்குள்ள வர முடியாது. இப்போ உன்னோட முடிவு சொல்லு!” என்று கேட்க, அதில் டார்சியோ “அக்னி…” என்று கண்டிப்பாக அழைத்தார்.

“மமா, மனோவா ஓட சட்டதிட்டத்தை எனக்காக மீறி என்னோட காதல ஒத்துக்கிட்டீங்க. தலைவனுக்கு ஒரு சட்டம், சாதாரண மக்களுக்கு ஒரு சட்டமா? இது அவளோட வாழ்க்கை.” என்று அக்னி அழுத்தமாக சொல்ல,

ஆலா பேசுவதற்கு முன்னே அவளை இடைவெட்டிய ராகவ், “இல்லை ஆகு, இது சரியா இருக்காது. நான் மட்டும் தான் போறேன். இப்படி ஒரு சூழல்ல வாழ்ந்துட்டு அந்த சூழல்ல ஏத்துக்குறது ரொம்ப கஷ்டமா இருக்கும். தப்பு என் மேல தான். அவ மனசுல தேவையில்லால ஆசைய…” என்று அதற்கு மேல் பேச முடியாது நிறுத்த, அவளோ அவனை பக்கவாட்டாக திரும்பி முறைத்துப் பார்த்தாள்.

அவளை நிதானமாக ஏறிட்ட ராகவ், “இங்க பாரு! உன்னோட சொந்தங்கள் இங்க இருக்கும் போது நீ என் கூட வந்து கஷ்டப்படனும்னு எந்த அவசியமும் இல்லை. நீ அவங்கள விட்டு பிரியுறதை என்னாலயும் ஒத்துக்க முடியாது. மறுபடியும் நாம சந்திப்போமோ, இல்லையோ? என்னைக்கும் என் மனசுல நீ இருப்ப. என்னோட முதல் காதல் நீ!” என்று காதலாக சொல்ல,

அவனை அழுத்தமாக பார்த்த ஆலா, “எனக்கும் அம்மா அப்பா கிடையாது. எனக்கே தெரியாத என்னோட பெண்மைய உணர வச்சவன் நீ! உன் கூட வாழனும்னு ஆசைப்படுறேன்.” என்று பேசியவாறு அவனை நெருங்கியவள் சற்று குரலை தாழ்த்தி, “இதுக்கு மேல ஏதாச்சும் பேசினன்னா, ஈட்டிய எடுத்து சொருகிவிட்டுருவேன்.” என்று மிரட்டலாக சொன்னாள்.

அவனோ அவளை அதிர்ந்து பார்க்க, அக்னியின் புறம் திரும்பிய ஆலா, “என்னை மன்னிச்சிடுங்க! நான் இவர் கூட வாழ ஆசைப்படுறேன். அதுக்கு இந்த நகரத்தை விட்டு நான் போய் தான் ஆகனும்னா நான் தயாரா இருக்கேன்.” என்று உறுதியாக சொல்ல, மென்மையாக சிரித்துக் கொண்ட அக்னிக்கோ இப்போது தான் நிம்மதியாக இருந்தது.

ராகவ்வை அவன் விருப்பப்படி செல்லுமாறு சொன்னாலும், அக்னியின் மனம் இத்தனை நாள் நிலை கொள்ளவேயில்லை. ‘அவன் தனிமையில் வாடுவானோ?’ என்று இவன் தனக்குள் மருகிக்கொண்டு இருக்க, இப்போது ஆலா அவனை காதலிப்பதாகவும், கூடவே செல்வதாக சொன்னதும் தான் அவனுக்கு அப்படி ஓர் நிம்மதி!

ராகவ்வோ ஆலாவை குறிக்கிட்டு ஏதோ பேச வர, அவனை பேசவிடாது தடுத்த அக்னி, “எங்க கல்யாணம் நடக்குற அன்னைக்கே உன் கல்யாணத்தையும் நடத்திரலாம் ராகு! நீ உன் விருப்பப்படி உன் வாழ்க்கைய அமைச்சிக்கலாம் ஆலா!” என்று புன்னகையுடன் சொல்ல, டார்சியோ தன் மகனை அதிர்ந்து பார்த்தார்.

அவனோ கண்களை அழுந்த மூடித் திறந்து சமாதானப்படுத்த, அதற்கு மேல் அவரும் எதுவும் பேசவில்லை. சுற்றி இருந்த மக்களோ தங்களுக்குள் ஏதோ பேசி கிசுகிசுக்க, ஆலாவோ சந்தோஷத்தின் உச்சியில் இருந்தாள்.

ராகவ் தன் நண்பனை முறைத்துப் பார்க்க, அக்னியோ ஒற்றை கண்ணை சிமிட்டி புன்னகைத்து, ஓரமாக நின்றிருந்த அருவியிடம், “நம்ம ராகு கல்யாணம் ஜானு, நம்ம கல்யாண அன்னைக்கே…” என்றுவிட்டு அங்கிருந்து செல்ல, அருவிக்கோ அவர்கள் பேசியது பாதி தான் புரிந்தாலும் கடைசியாக தன்னவன் சொல்லிவிட்டு சென்றதை கேட்டதும் அத்தனை சந்தோஷம்!

ஓடி வந்து ராகவ்வை தாவி அணைத்த அருவி, “சாகு, உனக்கெல்லாம் பொண்ணு கிடைச்சிருக்கு பாரேன்! அதுவும், உன்னை தான் கல்யாணம் பண்ணுவேன்னு ஒத்த கால்ல நிக்கிற பொண்ணு. பேஷ்! பேஷ்! கலக்குற டா” என்று சொல்லி சிரிக்க, அவனோ விழி மூடாது தன் பக்கத்தில் எதுவும் அறியாத முகபாவனையுடன் நின்றுக்கொண்டிருந்தவளை உக்கிரமாக முறைத்துக் கொண்டு இருந்தான்.

ஆலாவின் தோழிகள் அவளை அழைத்துச்செல்ல அவளை நோக்கி வர, செல்லும் முன் ராகவ்வை அழுத்தமாக பார்த்தவள், “உனக்கும் அப்பா அம்மா கிடையாது. எனக்கும் அந்த பாசம் எப்படி இருக்கும்னு தெரியாது. அந்த பாசத்தை உனக்கு கொடுக்க நான் தயாரா இருக்கேன். உன்கிட்ட இருந்து அதை உணரவும் தான். டீ ஆமோ(நான் உன்னை காதலிக்கிறேன்)” என்றுவிட்டு செல்ல,

அருவியோ, “பார்ராஹ்!” என்று சொல்லி சிரித்தாள் என்றால், ஏற்கனவே மனதிலிருந்த பாரம், வலி குறைந்தது போன்ற உணர்வு ராகவ்விற்கு! போகும் தன்னவளை பார்த்தவனது இதழ்கள் பெரிதாக விரிந்துக் கொண்டன.

இப்படியே திருமண ஏற்பாடுகளில் மூன்று நாட்கள் நகர்ந்து திருமண நாளும் வந்தது.

ஷேஹா ஸகி