அந்திமாலை பொழுதில் , அனைவரையும் மயக்கும் சூரியன் மறையும் காட்சியை , அங்கிருந்த பலர் குடும்பத்தினரோடோ, நட்புக்களோடோ, ஏன் காதலியோடோ காதலனோடோ அந்த அழகிய நேரத்தை தன் விருப்பமானவர்களோடு நேரத்தை செலவிட , அங்கிருந்த ஒருவனோ பதற்றத்தோடும் சிறு கோபத்தோடும் அங்கிருந்த மண்வேலியில் அமர்ந்திருந்தான்.
அவனது மனமெங்கும் உலையாக கொதித்து கொண்டிருந்தது. அவனால் அதை அடக்க முடியவில்லை என்பதை விட அடக்க தெரியவில்லை என்பதே மெய்யாக இருக்கும்..
காலங்கள் ஓடியப்படியே இருக்கின்றதே தவிர , அவன் செய்ய வேண்டும் என்று நினைத்த செயல்கள் யாவும் ஆரம்ப நிலையிலே இருந்தது.
இதற்கு முழு முதற் காரணமாக அவன் குடும்பம் அவனுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.
குடும்பம் என்று ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் , இந்நேரத்திற்கு அவன் செய்ய நினைத்த செயல்களை வெற்றிகரமாக செய்து முடித்திருப்பான்.
இரண்டு தங்கைகளை தனியாக விட்டு விட்டு அவன் செய்ய துடிக்கும் செயலை செய்ய மனம் ஒத்து வரவில்லை.
அவனது பதற்றத்துக்குறிய காரணமும் கோபத்திற்கான காரணமும் ஒன்று தான்..
அது அங்கு அதாவது சென்னையில் ஒரு பெரிய மருத்துவமனையில் ஊசலாடி கொண்டிருந்த ஒருவரின் உயிர் மட்டுமே இதன் இரண்டிற்கும் காரணம்.
இப்படி என்ற செய்தி வந்த நொடியிலிருந்து அவனால் நிதானமாக இருக்க முடியவில்லை. நிலைக்கொள்ள முடியா நிலையில் நிம்மதியாக வேலை செய்ய கூட முடியவில்லை அவனால்..
அதனால் தான் உடனே கிளம்பி பக்கத்தில் இருக்கும் கடற்கரைக்கு வந்துவிட்டான்.
காலையில் ,
அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் அவனுக்கு அவன் நெருங்கிய நண்பனின் எண் திரையில் ஒழிப்பத்தை கண்டு முகம் சுருக்கிய அவன் , ‘ எதுக்காக இவன் இப்போ கால் பண்றான் ? ‘ என்று நினைத்தவாறே அதை ஏற்பதா வேண்டாமா என்று யோசித்து கொண்டிருந்த நேரம் மீண்டும் மீண்டும் அழைப்பு வந்தமையமாக இருந்தது.
பக்கத்தில் இருந்த ப்யூனோ , ” பையா , மொபைல் ரிங் ஆகிட்டு இருக்கு .எடுத்து பேசுங்கோ ” என்று சொல்ல ,
” ஹான் , இதோ பேசுறேன் ” என்றவன் அவனை பார்த்து புன்னகைத்து விட்டு வெளியே வந்தான்.
அவன் கைகள் , அந்த எண்ணை தொடவே நடுங்கியது, அதன் கூடவே சிறு தடுமாற்றமும். எத்தனையோ விடயத்தை கடந்து வந்த போதிலும் , ஏனோ அவனால் இந்த நபரை கடந்து வர முடியவில்லை.
அந்த நபரை விட்டு ஒதுங்கி இருக்க நினைத்து நம்பரை மாற்றி இருந்தும் கூட , தன்னை அவன் கண்டு பிடித்தது மட்டும் இல்லாமல் அழைத்தும் விட்டான் என்று நினைக்கும் போதே இதழுக்குள் ஒரு புன்னகை கீற்று.
அவனுக்கு அழைப்பை ஏற்படுத்தலாம் என்று நினைக்கும் போதே , மீண்டும் அழைப்பு வந்துவிட ஒரு வித பதற்றத்துடனே அழைப்பை ஏற்றான் அவன்.
அழைப்பை ஏற்றவனுக்கு பேசும் தைரியம் இல்லாமல் போக , அமைதியை கடைபிடித்தான் அவன்.
எதிர்முனையில் இருந்தவனுக்கு அப்படி ஏதும் இல்லை போல , உடனே “மச்சி ” என்று கலங்கிய குரலில் அழைத்து விட்டான்.
” அவி என்னாச்சி? ஏன் உன்னோட குரல் ஒருமாதிரி டல்லடிகுது. இஸ் தட் எவ்ரி திங்க் இஸ் ஓகே ? ” என்று அவனுக்கு நிகரான குரலில் பதற்றத்துடனே வினவினான்.
” நோ மேன் இட்ஸ் நாட் ஓகே ” என்றவனின் குரலில் அவ்விடயத்தை சொல்ல சிறிது பயமாக கூட இருந்தது.
” என்ன பிரச்சினை டா. வீட்ல உள்ள எல்லாரும் நல்லா இருக்காங்கல ?”
” வாசு அப்பாக்கா ? ” என அதிர்ச்சியோடு கவலை நிறைந்த குரலில் அவன் கேட்டிட,
” இல்ல டா . நாராயண அப்பாக்கு தான் ஹாட் அடேக் ” என்று அவினாஷ் சொன்னதும் அவனின் முகம் இறுகி போயிற்று.
” அந்த ஆளுக்கு எப்படி டா அட்டாக் வந்துச்சி. அவனால மத்தவுங்களுக்கு தானே வரும். இது எப்படி சாத்தியமாகும் ” என்று கேலி குரலில் நகையாட,
” பீ சீரியஸ் டா மச்சி ” என்ற குரலில் கடுமை தன்மை நிறைந்திருந்தது.
” சரி சரி.. எப்படியாவது அந்த ஆளை காப்பாதிடுங்க டா. எனக்கு அந்த ஆளோட முடிக்க வேண்டிய கணக்கு ஒன்னு இருக்கு. அதை முடிக்காம அந்த ஆளு செத்து போக கூடாது ” என்றவன் பற்களை நறுநறுவென கடித்து துப்பினான்.
” ஒருத்தவுங்க உயிருக்கு போராட்டிட்டு இருக்கும் போது இப்படியா பேசுறது ” என்று கடிந்த அவினாஷ் கோவமாக அழைப்பை துண்டித்தான்.
‘ போடா டேய் , அடுத்தவன் இதயத்தை ரத்த பொரியல் மாதிரி திங்கிறவன் டா அவன். அவனுக்கு போயா இந்த ஹார்ட் அட்டாக் வரனும். ஹார்ட் இல்லாத இவனுக்கு ஹார்ட் அட்டாகா ‘ என்று நினைத்து அவனுக்கு அவனே சிரித்தும் கொண்டான்.
அந்த நாராயணன் உயிர் பிழைத்தானா இல்லையா என்று தெரிந்து கொள்ளும் வரை அவனால் அவனது வேலையில் கவனம் செலுத்த முடியும் என்று தோன்றவில்லை.
அதுனாலே , அலுவலகத்துக்குள் வேகமாக உள்ளே வந்தவன் , தன் முதலாளியின் அறை நோக்கி சென்றான்.
“எக்ஸ் க்யூஸ் மீ சார் , மே ஐ கமின் ” என கதவை தட்டி மரியாதை நிமித்தமாக அவன் கேட்டிட,
“வாங்க மிஸ்டர். அபிநந்தன் ” என்றவன் அவனை உருத்து விழிக்க,
” சாரி சார்.. எனக்கு இங்க ஆபிஸ்ல பேர் சொல்லி கூப்பிட வரல.. டோண்ட் மிஸ்டேக் மீ ” என்றவன் ” எனக்கு ஒரு ஹாஃப்டே லீவ் வேணும் சார் ” என்றான்.
“லீவ் வேண்டும் ” என்று கேட்டவனை மேலும் கீழுமாக பார்த்தவன் ,”என்ன சார் புதுசா லீவ்வெல்லாம் கேக்குறீங்க.?” என தன் வேலையோடு ஊடவே அவனிடம் கேள்வி கேட்டான்.
” கொஞ்சம் பெர்ஸ்னல் இஸூஸ் சார் ” கூறிய அபியை புருவம் உயர்த்தி பார்த்தான் சாருக்கேஷ்.
அவன் முகத்தில் எதனை கண்டானோ ,” ஓகே , நீங்க லீவ் எடுத்துக்கலாம் ” என்று விட்டு வேலையை தொடர்ந்தான்.
வெளியில் வந்தவனுக்கு எங்கு செல்வது என்று தெரியாமல் இருக்க ,பக்கத்திலிருந்த கடற்கரைக்கு சென்று ஒரு ஓரத்தில் அமர்ந்து கொண்டவன் தான் இதோ இப்போது மாலையும் ஆகிவிட்டது.
நேரம் கடக்க கடக்க தவிப்பாய் இருந்தது அபிநந்தனுக்கு.
அவனின் தவிப்பிற்கு காரணம் பாசமில்லை பகை நாராயணன் மீது அவன் கொண்ட வெறுப்பு மட்டுமே அந்த தவிப்பிற்கு காரணமாகும்.
மாலை ஆறுவரை பொறுத்திருந்தவனுக்கு ,அதற்கு மேல் முடியாமல் போக அவினாஷிற்கு அழைப்பு விடுத்தான்.
“மச்சி , அந்த ஆளு ஒன்னும் சாகலல.?” என சாதரணமாக அபி கேட்க,
” அபி , நீ இப்படி பேசுறது சரியில்லை டா. என்ன தான் அவரு தப்பு செய்திருந்தாலும் நீ இந்த மாதிரி பேசுறது ஒரு நண்பனா எனக்கு கஷ்டமா இருக்கு மச்சி. என்னோட அபி இப்படி கிடையாதே. அவனுக்கு மத்தவுங்களை காயப்படுத்தலாம் தெரியாதே டா ” கவலை நிறைந்த குரலில் நண்பனின் மாறுதலை சுட்டி காட்டி சொல்ல,
” அவன் எப்பவோ செத்துட்டான் டா .இப்போ இருக்கிறது வெறும் ஜடம் தான் . அதுவும் என்னோட மூணு…. இல்ல இல்ல என்னோட ரெண்டு தங்கச்சிங்களுக்காக தான் மச்சி ” என்றான் முட்டி மோதிக் கொண்டு வரும் அலைகளை வெறித்த படி..
“மச்சி” என்று இழுத்தவனிடம்,” போதும் டா.. அந்த ஆளு உயிர் பிழைச்சா போன் பண்ணி சொல்லு ” என்று வைத்து விட்டான்..
**********
தமிழ்நாடு – சென்னை
நாராயணனின் உயிர் ஊசலாடி கொண்டிருக்க , அவரை காப்பாற்ற தன்னாலான முயற்சிகளை செய்து கொண்டிருந்தனர் அங்கு வேலை செய்கின்ற மருத்துவர்கள்..
நாராயணனின் மனைவியான சவுந்தர்யாவோ ,ஒரு ஓரத்தில் சோகமாக அமர்ந்திருந்தாலும் மூலையில் இன்று காலையில் கை விட்டு போன பிஸ்னஸை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார் .
“ச்சை , எல்லாம் இந்த மனிஷனால தான் இன்னைக்கு கிடைக்க வேண்டிய இரண்டு கோடி ப்ராஜெக்ட் டென்டர் கிடைக்காம போய்டுச்சி. இவரு மட்டும் கொஞ்சம் சொதப்பாம இருந்திருந்தா இப்படி நம்ம கைய விட்டு போயிருக்குமா ” மனதில் கணவனை கருவிக் கொண்டிருந்தார்.
” இந்தாளுக்கு கொஞ்சம் நேரம் கழிச்சு இந்த ஹார்ட் அட்டாக் வந்திருக்க கூடாதா. சரியா டென்டர் டைம் தான் வரனுமோ. கடவுளே.! எப்படியாவது கைமாறிப்போன டென்டர் எங்களுக்கே கிடைக்கிற மாதிரி பாத்துக்கோங்களேன் ” என உயிருக்கு போராடி கொண்டிருந்த கணவருக்காக வேண்டாமல் பணத்திற்காக வேண்டுதல் வைத்தார் சவுந்தர்யா.
இதனை பார்த்த அவினாஷ்க்கு ஏனோ மனம் இறுகியது. அதுவும் இவ்வீட்டின் வாரிசை எண்ணி கலங்கி போனான்.
அவினாஷ்க்கு என்ன செய்வது என்று ஒன்றுமே புரியவில்லை.
நண்பனின் பழி தேடலுக்காக இவரை காக்க வேண்டும் என்று வேண்டுவதா , இல்லை உயிர்ப்பே இல்லாமல் வாழும் தங்கை போன்றவளுக்காக வேண்டுவதா என்று புரியாமல் தவித்து போனான்.
அப்போது தான் இன்னும் இசைக்கு அழைப்பு ஏற்படுத்தாமல் இருப்பது ஞாபகத்தில் வரவே , உடனே இசைப்பிரியாவிற்கு அழைப்பு விடுத்தான்.
முழு ரிங் போய் , அழைப்பு துண்டிக்கப்பட்டு விட ,’ ச்சை ‘ என்று நெற்றியை நீவிக் கொண்டவனுக்கு அடுத்ததாக வீட்டின் லேன் லைனிற்கு அழைத்தான்.
அதுவும் எடுக்கப்படாமல் போக , மீண்டும் மீண்டும் முயற்சித்தான். இறுதியில் அவனது அழைப்பை அங்கு வேலை பார்க்கின்ற கண்ணம்மா எடுத்தார்.
” ஹலோ , கால் பண்ணா எடுக்க மாட்டீங்களா என்ன ? அப்படி என்ன அங்க பண்ணீட்டு இருக்கீங்க ஒரு கால் கூட எடுக்க முடியாத அளவுக்கு ” என அவினாஷ் கத்த,
” தம்பி , வெளிய கொஞ்சம் வேலையா இருந்தேங்க. அதான் எடுக்க முடியலை . மன்னிச்சுக்கோங்க தம்பி ” என்று கண்ணம்மா மன்னிப்பு யாசிக்கவும் தான் , தான் தன்னை விட வயதில் பெரியோரை கத்துகிறோம் என்று புரிந்து ,” சாரி அக்கா , அவசரமான விஷயம் சொல்ல கூப்பிட்ட போது நீங்க யாரும் போனை எடுக்கலைனோன்ன கோபம் வந்துடுச்சி . என்னை மன்னிச்சிக்கோங்க ” என உணர்ந்து மன்னிப்பு வேண்டி , விவரத்தை கூறி அதை இசையிடம் கூறுமாறு சொல்லி வைத்தான்.
இப்படி ஒரு நல்ல பண்பை இவனுக்குள் புகுத்தது இவனின் ஆருயிர் நண்பனான அபிநந்தன் தான். ஆனால் இன்றோ எல்லாம் தலைகீழாக நடக்கின்றது.
இதற்கான காரணம் ஏதும் அறியாமல் இரு குடும்பங்களுக்கும் நடுவில் தத்தளிக்கிறான் .
சவுந்தர்யா எண்ணம் எல்லாம் பிஸ்னஸை சுற்றி இருக்க , இவர்களின் புதல்வியோ இருட்டு அறையில் எதையோ வெறித்தபடி அமர்ந்திருந்தாள்.
அவளுக்கு அவள் தந்தை மருத்துவமனையில் அனுமதித்து இருப்பதோ , உயிருக்கு போராடிய நிலையில் இருப்பதோ சுத்தமாக தெரியாது. தெரிந்து இருந்தாலும் மருத்துவமனைக்கு சென்றிருக்க மாட்டாள். இங்கே இருந்தபடியே தந்தையை பற்றின விவரங்களை மட்டுமே அறிந்து கொண்டிருப்பாள்.
மருத்துவ படிப்பை ஆசை ஆசையாக படித்தவளுக்கு , இன்று மருவத்துவம் என்ற பெயரே வேப்பங்காயை போல் கசந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை பட்டாம்பூச்சி போல் சந்தோஷமாக சிறகடித்து பறந்தவளின் சிறகை ஒடித்து இப்படி அமர வைத்து விட்டனர்.
இதற்கு உண்மையான காரணம் மனிதனா இல்லை விதியா என்பது அந்த இறைவன் அறிந்த உண்மையே.
அவினாஷ் சொன்னது போல் கண்ணம்மா மேல் தளத்தில் இருந்த இசைப்பிரியாவின் அறைக்கு சென்றவர் மெதுவாக கதவை தட்டினார்.
கதவு தட்டும் சத்தம் கேட்டும் கேட்காதது போல் தான் அமர்ந்திருந்தாள் இசைப்பிரியா.
தினமும் அவரது அன்னை கதவை தட்டி திட்டி விட்டு செல்வதால் , இப்போதும் கதவை தட்டுவது அன்னை என்று நினைத்து கதவை திறக்கவில்லை.
இசை கதவை திறக்காமல் போகவும் ,” இசைம்மா நான் கண்ணம்மா வந்துருக்கேன். கொஞ்சம் கதவை திறங்க மா “
அவரின் குரல் கேட்டு எழும்பின இசையோ , கண்களை அழுந்த துடைத்து கொண்டு கதவை திறந்தாள்.
திறந்தவளின் தோற்றம் கண்டு , கண்ணம்மாவிற்கு நெஞ்சம் கசங்கியது…
For discounts in the shop section, please contact mspublications1@gmail.com Dismiss