அன்புடைய ஆதிக்கமே 20

அத்தியாயம் 20

     

               “அதாவது பேபி மா…கல்யாணம் ….முதல் நாள்…அனுசுயா அத்தை…டைரி…”என்று எப்படியாவது தன் நிலைப்பாட்டை அவளுக்கு சரியாக உணர வைக்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டு சொல்லும் அவனுக்கும் புரியாமல் கேட்கும் சுருதிக்கும் நமக்கும் புரியாமல் பயத்தில் ஏதோ உளறி கொட்டிக்கொண்டிருந்தான் ஜெயக்குமார்.

                 “ச்சை…சனியனை ஏதாவது லூசு மாதிரி உளறாதே…கட்டுன புருஷன்னு பாக்குறேன். இல்லாட்டி வண்டி வண்டியா கேப்பேன். உனக்கு கல்யாணம் ஆயிருச்சுனு ஏன் உன் காலேஜ்ல நீ சொல்லலை?”என்று கோவத்திற்க்கு  ஒரு எமோஜி இருக்கும் இல்லையா அதே போல் முகமெல்லாம் தக்காளி பழம் போல் சிவந்திருக்க அடிக்குரலில் சீறினாள் சுருதி.

               ‘அப்பாடா சாமி தப்பிச்சோம். இவ வேற ஏதோ கேக்குறா?அதானே அவந்திகா மேட்டர் எல்லாம் தெரிஞ்சிருந்தா ராட்சசி என்கிட்டே ஏன் கேள்விலாம் கேக்கப்போறா நேரா டிவோர்ஸ் தானே…’ என்று மைண்ட் வாய்ஸில் பேசியவன் அவளை பார்த்து திருதிருவென்று முழித்தான்.

             “முழியை பாரு… பத்து பைசாக்கு பிரயோஜனம் இல்லாத மாதிரி. காது கேக்குமா?இல்லை அதுவும் போச்சா?நொண்டி.”

               “கேட்குது டி. நீ திட்டுறது எல்லாம் திவ்யமா கேட்குது. அது சொல்றதுக்கான தேவை வரல…”

                    “என்ன பொல்லாத தேவை?உன் மூஞ்சி தேவை…அப்படியே மனசுல பெரிய சித்தார்த் மல்ஹோத்ரானு நினைப்பு. அவளுகள சொல்லி குத்தமில்லை. உன்னை சொல்லணும். நான் வாங்கி வந்த வரம் அப்படி.”

       “சத்தியமா என் மனசுல சித்தார்த் ரன்பிர்ன்னு நினைப்பு எல்லாம் இல்லை டி. யாரை சொல்ற நீ? புரியுற மாதிரியே பேசமாட்டியா?யாரை சொல்லி குத்தமில்லை… குறை பிரசவத்துல பிறந்த மாதிரி ஏன் கொஞ்சம் கொஞ்சமா சொல்ற “

        “என்ன புரியலையா?உனக்கு எப்படி புரியும்?உன் ஸ்டுடென்ட்ஸ் என்ன என்ன பேசுறாளுக தெரியுமா?நீ செம ஹென்சமாம். நீ முடிய கோதி விடுற ஸ்டைலுக்கே ஆயிரம் பொண்ணுங்க வருவகளாம்.உன்னை பார்த்துகிட்டே இருந்தா மட்டும் போதுமாம்.சோறு தண்ணி கூட வேண்டாமாம்.”என்று பல்லை கடித்துக்கொண்டு வார்த்தைகள் என்னும் துப்பாக்கி குண்டுகளை ஜெயக்குமாரை நோக்கி வீசினாள்…

        “அப்டியா.ஆச்சரியமா இருக்கு.ஆனால் அப்டி எல்லாம் நல்லவிதமா என்னை பத்தி பேசாதுகளே.ஒரு வேளை நீ வேற யாரோ பத்தி பேசுனதை கேட்டுட்டு என்னை சொன்னாங்கனு நினைச்சுக்கிட்ட போல.கட்டுன பொண்டாட்டி நீயே என்னை பார்க்க மாட்ட.”

          “சரியா தான் கேட்டேன்.உன்னை தான் சொன்னாளுக.அப்புறம் சார் இன்னும் கல்யாணம் பண்ணிக்கலையாம்.ஆனால் சார் அவர் முறைப்பொண்ணை தான் ரொம்ப ஆத்மார்தமா லவ் பண்றீங்களாம்.அந்த  பொன்னும் உங்களை லவ் பண்ணுதாம்.பொண்ணு டாக்டர் பொண்ணாம்.ரெண்டு பேர் வீட்லயும் உங்க காதலை accept  பண்ணலையாம்.அதான் நீங்க ரெண்டு பெரும் கல்யாணம் பண்ணாம அம்மா அப்பா சம்மதத்துக்காக காத்திருக்கிங்களாம்.”

    “அடி ஆத்தி.என்ன இப்படி அள்ளி விட்ருக்கானுங்க.முருகா.நானா உளறி இவகிட்ட சிக்கிருந்தா கூட இவ்வளவு பலமா சிக்கிருக்க மாட்டேன் போல.இப்படி ஒன்னும் இல்லாததை சொல்லி என் குடும்பத்துக்குள்ள இப்படி கபடி விளையாண்டுட்டானுகளே.குமார் இந்த ஜென்மத்துல உனக்கு எதுவுமே நடக்க போறது இல்லை.கன்னி கழியாமலே போய் சேந்துருவ போலயே.”

       “இது எல்லாத்தையும் என் முன்னாடியே பேசுறாளுக டா.வந்த கோவத்துக்கு ஒவ்வொருத்தி காதையும் கடிச்சு அவளுக மூச்சி மேலையே துப்பிருப்பேன்.ஆனால் பாரு இதுக்கெல்லாம் மூல காரணம் யாரு நீ தான்.”

        “அடியே..நீ இன்னும் கோவம்வந்தா காதை கடிக்குற பழக்கத்தை விடலையா.ஆமாம் இதுல நான் என்ன தப்பு பண்ணேன்.”

         “நீ மட்டும் உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிருச்சுனு சொல்லிருந்தா ஏன் இப்படி சொல்லிருக்க போறாங்க.சொல்லு மேன்.சொல்லு.”

          “நான் என்ன டி கனவா கண்டேன்.இப்படி ஒரு புரளியை கிளப்புவாங்கனு.இது மட்டும் முன்னாடியே தெரிஞ்சிருந்தா காலேஜையே கல்யாணத்துக்கு கூப்பிட்டு இருப்பேனே.ஏஏஏ.”

            “எவ்வளவு நேரம் நான் தொண்டை தண்ணி வத்த கத்திக்கிட்டு கிடக்கேன் .நீ இதுவரை ஒரு வார்த்தை   அப்படி எல்லாம் இல்லை சுருதினு மறுத்து சொல்லிருக்கியா.அப்ப என்னை கட்டிக்கிட்டது உனக்கு பிடிக்கலை.என்னையும் பிடிக்கலை.உன் கலருக்கும் உன் உயரத்துக்கும் நான் பொருத்தம் இல்லாதவனு நீயும் நினைக்குற.”என்று இவ்வளவு நேரம் கத்தியவள் ஓவென்று கண்ணீர் கொட்ட கொட்ட அழ ஆரம்பித்திருந்தாள்.

    இவ்வளவு நேரம் அனைத்துக்கும் மைண்ட் வாய்சில் பதில் சொல்லிக்கொண்டிருந்தவன் சுருதி அழுகவும் ஒரே எட்டில் அவளை அணுகி கண்ணீரை துடைக்க கைகளை அவளின் முகத்தருகில் கொண்டு சென்றான் ஜெயக்குமார்…

       வேகமாக அவன் கையை தள்ளிவிட்ட சுருதி கண்ணீரை துடைத்தவள் அவனை குனியுமாறு சைகை செய்தாள்.அந்த கை அசைவில் எப்பொழுதும் போல் அடிக்க தான் குனிய சொல்கிறாளோ என்று நினைத்துக்கொண்டு கண்ணை மூடிக்கொண்டு குனிந்தான் ஜெயக்குமார்…

        அவள் செய்த செயலில் முடிய இமைகள் பட்டென்று திறந்து கொள்ள அவனின் முட்டை கண்கள் மேலும் விரிந்தது…

            ஏனெனில் குமார் குனிந்தவுடன் தனது இருக்கரங்களால் அவனது கழுத்தை சுற்றி மாலையாக வளைத்தவள் தன் மென் ரோஜா நிற இதழ்களை தன் மனம் கவர்ந்த கள்வனின் வன் இதழ்களுடன் பொருத்திருந்தாள்…

                 நாயகி ஆரம்பித்து வைத்த இதழ் முத்தத்தை தனதாக்கி கொண்ட நாயகியின் கள்வன் இதழில் கவி படித்துக்கொண்டே அவளின் ஒடிசலான கொடி போன்ற இடையில் தனது தேக்கு போன்ற கரங்கள் கொண்டு வளைத்தவன்.அவளது கால்கள் தரையை தொடாமல் அந்தரத்தில் மிதக்க சுருதியை தனது உயரத்திற்கு இணையாக தூக்கிஅணைத்தவாறு வன் முத்தம் படித்துக்கொண்டிருந்தான்.

   இதழ் முத்தத்தில் கூட சண்டை போட முடியுமா….எப்பொழுதும் போல் இருவரும் தங்களுக்கே உரிய முறையில் முத்தத்திலும் ஒரு யுத்தமே நிகழ்த்தினர்…

      நொடியில் யுகங்களாய் கடக்க ஒவ்வொரு நொடியிலும் இருவரது அன்பே காதலே படிப்படியாக உயர்ந்து கொண்டே இருந்து இருவரது அணைப்பின் இறுக்கமும் முத்தமிடும் வேகமும் அதிகமாகியது…

    ஐந்து நிமிடம் இடைவிடாத முத்த யுத்தத்தில் இருந்து மூச்சுக்காற்றுக்காக முதலில் அவனின் இதழ்களில் இருந்து தன் இதழை வலுக்கட்டாயமாக பிரித்தாள் சுருதி.

     அவள் காற்றுக்காக ஏங்குவதை அப்பொழுது தான் உணர்ந்த ஜெயக்குமார் அவளை அருகில் இருந்த படுக்கையில் அமரவைத்தான்.வேகமாக அடுக்கலைக்குள் சென்று செம்பில் தண்ணீர் எடுத்து வந்தவன் அவளின் இதழ் அருகில் கொண்டு சென்று குடிக்குமாறு பணித்தான்.

         இவ்வளவு நேரம் மூச்சுக்காற்றுக்காக அல்லாடியவள் மூச்சை நன்றாக இழுத்துவிட்டு நீரை பருகியவள் தண்ணீர் செம்பை அருகில் இருந்த மேசையில் வைத்து விட்டு படுக்கையில் சரிந்தாள்.

           சுருதி சரிந்தவுடன் என்னமோ ஏதோ என்று குமார் பயப்பட அவளோ மட்டமல்லக்காக படுத்துக்கொண்டு சுழலும் மின்விசிறியை வெறித்தாள்.

            அவள் சாதாரணமாக படுத்து இருக்கவும் நிம்மதியடைந்தவன் படுக்கையில் மறுஒரத்தில் சென்று படுத்தான் ஜெயக்குமார்.

                  கைகளை தலைக்கு கொடுத்து படுத்தவன் இந்த நிமிடத்தை இந்த நொடியை பரிபூரணமாக அனுபவித்தான்.அவள் இப்படி திடிரென்று முத்தம் எல்லாம் கொடுப்பாள் என்று அவன் கனவில் கூட நினைத்து பார்த்தது இல்லை.அவளிடம் பேசுவதற்கு வார்த்தைகள் கூட வரவில்லை.தொண்டை வரை சந்தோசம் அடைத்து கிடந்தது.திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குனு வந்துச்சாம் கல்யாணம்ன்ற மாதிரி என்ற பழமொழிக்கு உதாரணமாக மனதெல்லாம் இன்ப பேரூற்று ஓட அமைதியாக படுத்துக்கிடந்தான்…

    சில நிமிடங்கள் கழித்து தன்னை போல தான் தன் தர்ம பத்தினியும் உணருகிறாளா இன்று தெரிந்துகொள்ள மெதுவாக திரும்பி ஒரு கையை தலைக்கு முட்டுக்கொடுத்து அவளை பார்த்தான்…

          சுருதி அமைதியாக எந்த அசைவுமின்றி மின்விசிறியை வெறித்தவாறு படுத்துக்கிடந்தாள்.கருங்குந்தல் பக்கவாட்டில் பரவி கிடக்க.கடைக்கண் வழியாக கண்ணீர் நிற்காமல் வடிந்துகொண்டு இருந்தது.

    சுருதி அழுவதை பார்த்த ஜெயகுமாரிற்கு எதுவோ புரிவது போல் இருந்தது.சுருதிக்கு தன் மீது அளவுகடந்த possessiveness  இருக்கிறது.அவளை பொறுத்தவரை தான் அவளுக்கே மட்டுமே சொந்தம் என்பது போல்.அதில் புரளியாக கூட யாரோ இடையில் வருவதை அவள் விரும்பவில்லை.அதனால் தான் பதட்டமாகி தன்னை யாரும் பிரிக்கமுடியா அளவில் அவளுடன் இணைக்க விரும்பி முத்தமிட்டு இருக்கிறாள்…

      இப்பொழுது அழுவதற்கான காரணம்.அவளின் இறந்தகாலத்தில் ஏற்பட்ட வலி.இந்த காதலும் அடிபட்டு போய் விடுமோ.ஏமாற்ற பட்டுவிடுவோமோ என்ற முன்பே அடிவாங்கியதால் வந்த பயஉணர்வு….என்று நல்லகணவனாக அவளின் முகம்பார்த்தே அனைத்தையும் சரியாக கணித்தான்…

       “சுருதி…” என்று தன்னுள் இருக்கும் மொத்த காதலையும் திரட்டி ஒத்த வார்த்தையில் அவளை அழைத்தான்…

      அவனின் காதல் அவளை சென்று தாக்கியதாலோ என்னவோ சிறியதாக முகத்தை மட்டும் இவனை நோக்கி திரும்பியவள் கண்கள் எல்லாம் தவிப்போடு உயிர் உருகும் குரலில்”டூ.டூ.டூ….யூ லவ் மீ.” என்று வலக்கரத்தை அவனை நோக்கி நீட்டியவாறு கேட்டாள்…

     அந்த கண்களில் ஆமாம் என்று சொல்லிவிடேன்.உன்னுளே கரைந்து விடுகிறேன்.என்று அந்த கண்கள்அவனிடம் மன்றாடுவதை போல் தோன்றியது ஜெயக்குமாரிற்கு…

   எங்கள் வீட்டு இளவரசி.என் மனதின் முடிசூடா ராணி.அவள் விரும்பும் அனைத்தும் அவள் கேட்பதற்குளே அவளின் கைகளில் இருக்கும் தன் சுருதி தன்னிடம் இறைஞ்சுவதை கண்கொண்டு பார்க்கமுடியவில்லை அவனால்.ஒரு துளி கண்ணீர் கூட வந்துவிட்டது.

         துடைத்தவன் தன் இடக்கரத்தை சுருதியை நோக்கி நீட்டியவன் அவளது வலக்கரத்தை பிடித்து தன்னை நோக்கி இழுத்து அணைத்துக்கொண்டான்.

           “நான் உன்னை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப விரும்புறேன்.இந்த உலகத்துல யாராலயும் உன்னை என் அளவுக்கு விரும்ப முடியாது.உன் அப்பாவால கூட.”என்று அவளை தனக்கு மேலே கொண்டு வந்திருந்தவன் அவளது கண்களை பார்த்து கூறினான்.

              “உன்னை விரும்புன.விரும்புற.விரும்ப போற அளவுக்கு யாரையும் நான் விரும்பமாட்டேன்.நம்ம பொண்ணுக்கு கூட உனக்கு அப்புறம் தான்.”என்று கூறியவன் சுருதியின் இதழில் மிக மிக மெதுவாக தன் காதலை அவளுக்கு புரியும் விதமாக கொஞ்சம் கொஞ்சமாக தன் இதழ் வழியே அவளுக்குள் செலுத்தி கொண்டிருந்தான்..

            குமாரின் வார்த்தைகளில் செயலில் சுருதியின் மனம் சிறிது சிறிதாக அமைதியை.. நிம்மதியை.. பேரானந்தத்தை. அடைந்தது…

          சுருதியின் இதழில் இருந்து இதழை பிரித்தவன் லேசாக புரண்டு சுருதியை தன் மீதிருந்து படுக்கையில் விட்டான்.வெட்கம் நெட்டி தள்ள.தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலே ச்சை ச்சை இல்லை இல்லை சுருதியின் வாழ்கை வரலாற்றிலே முதல் முறையாக தன் கணவனை நேராக பார்க்க வெட்கப்பட்டு ஒருக்களித்து திரும்பினாள்.

      ஒருக்களித்து படுத்திருப்பவளின் கழுத்துவளைவில் தன் முகத்தை அழுத்தியவன் அவளின் சிவந்த காதுமடலில் அவனது இதழ்கள் உரச ஏதோ முணுமுணுத்தான்.

        ” எத்தனை ஆயிரம் பேருக்கு நடுவில நீ நின்னாலும் யாரை பத்தியும் கண்டுக்காம அப்டியே உன்னை இறுக்கி அணைச்சு முத்தம் குடுக்கணும் போல..”

         “அப்புறம் உன்னை விடாம உரசிகிட்டே உன் பக்கத்துலயே இருக்கனும் போல தோணுது டி. “

            “உன்னோட சடையை பிடிச்சு வலிக்க வலிக்க இழுத்து.நீ கோவப்பட்டா உன் இந்த கேள்விக்குறி மூக்கு சிவக்கும் பாரு டி. நல்லா தக்காளி பழம் மாதிரி…அப்ப அந்த மூக்கை கடிச்சு வைக்கணும் போல தோணுது.”

              “அப்டியே உன்னை அரைச்சு குடிக்கணும்.எனக்குள்ளையே உன்னை ஒளிச்சு வைச்சுக்கணும் போல கை பரப்பரங்குது டி. உன் மேல பைத்தியம் ஆயிட்டேன் டி நான்..தயவுசெஞ்சு இதுல இருந்து என்னை காப்பாத்து டி.இல்லை இதுக்கெல்லாம் ஏதாவது மாற்றுமருந்து இருந்தா கொடுடி .” என்று கூறியவன் அவளது காது மடலை லேசாக கடித்து வைத்தான்.

  ஜெயக்குமார் அனைத்தையும் கூறியதை கேட்டவள் இவன் தன்னை இவ்வளவு காதலிக்கிறானா.தன்னிடம் இது வரை கூறியதே இல்லையே.திருமணத்திற்கு முதல் நாள் முன்பு வரை நாய் மாதிரி வல் வல்லென்று தானே விழுந்தான்.என்று அவனின் முகத்தை பார்க்காமல் அவன் சொல்ல சொல்ல நினைத்துக்கொண்டவள் ஜெயக்குமாரை நோக்கி திரும்பி அவன் மூக்கை பிடித்து திரும்பியவாறு அவனிடம் விசாரித்தாள்…

      “என்னை எப்ப இருந்து உனக்கு பிடிக்க ஆரம்பிச்சுச்சு.எப்ப பார்த்தாலும் சண்டை போட்டுட்டு தானே இருப்ப.”என்று தயங்கி தயங்கி கேட்டாள்…

         “உன்னை எனக்கு பிடிக்காதுன்னு யாரு சொன்னா.எனக்கு மூணு வயசு இருக்கும் போது உன்னை பார்க்கறதுக்கு முன்னாடியே உங்க அம்மா வயத்துல நீ இருக்கும் போதே உன்னை பிடிக்கும்.நீ பிறந்தப்ப ரோஸ் கலர்ல எலிக்குட்டி மாதிரி இருப்ப தெரியுமா.மூணு வயசுல எதுமே ஞாபகம் இருக்காதுன்னு சொல்லுவாங்க.ஆனால் உன்னை பத்தின எல்லா விஷயமும் எனக்கு ஞாபகம் இருக்கும்.இப்படி உனக்கு நான் சொல்லணும் தான் எனக்கு எல்லாம் ஞாபகம் இருந்ததோ என்னவோ.தெரில.நீ குறும்பு பண்ணப்ப திட்டுவேன்.அதுக்காக உன்னை பிடிக்காதுன்னு அர்த்தமா.”

             “சரி சரி.இந்த பிடித்தம் எப்ப உனக்கு காதலா மாறுச்சு.எப்ப நீ உணர்ந்த.”

 

              “அதெல்லாம் சொல்ல முடியாது…போடி.நேத்து ஏன் டி அப்டி பேசுன….நா உனக்கு மேல பெரிய லூஸாகி இந்த பட்டு போல இருக்க கன்னத்துல அடிச்சுட்டேன்.” (ஹா ஹா ஹா.விவரம் ஆனவன் டா.நீ காதலை உணர்ந்த நொடியை மட்டும் சொல்லிருக்கணும்.சீன் வேற மாதிரி ஆயிருக்கும்.ஜஸ்ட் மிஸ்.)

                 நேற்று அடித்ததுக்கு முத்தங்களால் அவள் கன்னத்தில் இன்று மருந்திட்டு கொண்டிருந்தான் ஜெயக்குமார்…

    அதில் அவள் கூறவந்த மறுமொழி மறந்து போக நாணசிவப்பு உடல் முழுவதும் ஏற அவனின் நெஞ்சுக்கூட்டில் தஞ்சமடைந்தாள்…

       தனது நெஞ்சில் சாய்ந்திருந்த சுருதியை இறுக்கி அணைத்தவன்.அவளின் சிரத்தில் தன் தாடையை பதித்து “பேபி மா.என்னால முடியலை டி.என்ன என்னமோ பண்ணுது டி.அடுத்த லெவெல்க்கு போகலாமா.”என்று ஹஸ்கி வாயிஸில் கேட்டான் ஜெயக்குமார்…

        குமாரின் நெஞ்சில் தாடையை பதித்து அவனை அண்ணாந்து பார்த்தவள் கண்களில் சிரிப்பு மற்றும் சிறிது வெட்கம்.சிறிது குறும்பு தனம் கலந்திருக்க புருவத்தை உயர்த்தி “ஏன் வாத்தி.இதெல்லாம் கூட உனக்கு பேச தெரியுமா.உன்னை இந்த விசியத்துல பாப்பானுல நினைச்சேன் நான்.”என்று தலையை மேலும் கீழும் ஆட்டி உதட்டை பிதுக்கினாள் சுருதி…

         “அடியே.உன் மாமனுக்கு பேச மட்டும் இல்லை டி.நல்லா வைச்சு செய்யவும் தெரியும் டி.”என்று கூறியவன் அவள் கன்னங்களில் பல் தடம் பதியாதவாறு கடித்துவைத்தவன் அவளை தன்னில் இருந்து கீழே புரட்டி அவளின் மீது படர்ந்தான்…

      தனது செயலின் தன்மையை அவளுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு புரியவைத்து விட்டு விலகியவன் களைத்து அவனின் நெஞ்சாங் கூட்டில் சாய்ந்து இருந்தவளின் நெற்றியில் ஆத்மார்த்தமாக முத்தமிட்டான்…

      இதழ் முத்தத்தில் ஆரம்பித்து.மெய்கள் இணைந்து.நெற்றி முத்தத்தில் முடியும் காமத்துக்கு காதல் என்று பெயர்.

 

     “நான் இந்தியால இல்லாதப்ப யாரோ ஒரு வாத்தி சொன்னியே?வேல் மகன்கிட்ட பிரச்னை பண்ணான்ணு…அவன் டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணியா?”என்று தனது கையில் இருந்த சிகரெட்டை இழுத்து புகையை விட்டவாறு கேட்டான் அவன்…

     “ம்ம்…சாதாரண வாத்தி தான்…background  பெருசா எதுவும் இல்லை. அம்மா டீச்சர்,அப்பா கவர்மெண்ட் எம்ப்லாய். ஒரு தம்பி சென்னையில வேலை பாக்குறான்…இப்ப தான் புதுசா கல்யாணம் ஆகிருக்கு. பொண்ணும் ஏதோ பால்வாடி டீச்சர்.”என்று கேள்வி கேட்டவனின் கையில் இருந்த சிகரெட்டை வாங்கி இழுத்தவாறு கூறினான் வசந்த்.

        “நல்லா விசாரிச்சையா?இப்படி பொங்குறவன் நம்ம காலேஜில வேலை பாக்குறது ரொம்ப ரிஸ்க்.”என்று நெற்றியை ஆள்க்காட்டி விரலால் தேய்த்தவாறு கேட்டான் அவன்.

  “அதான் நம்ம காளிட்ட குடுத்து விசாரிக்க சொல்லிருந்தேன்.இன்னைக்கு தான் டீடெயில்ஸ் கொண்டு வரேன்னு சொன்னான்.இங்கே வர சொல்லிருக்கேன்.இப்ப வந்துருவான். அதோட மட்டுமில்லாம அந்த வனிதா அவங்களையும் அவன் மேல ஒரு கண்ணு வைச்சிருக்க சொல்லிருக்கேன். நாளைக்கு அவனை செக் பண்ணவும் ஒரு பிளான் இருக்கு..”வசந்த் அவனிடம் கூறிக்கொண்டிருக்கும் போதே வசந்தின் காரியதரிசி அவன் வந்திருப்பதாக சொல்லி சென்றாள்…

         “சரி…நான் போய் பேசி வாங்கிட்டு வரேன். நீ வெளியே வராதே.இங்கயே இரு.”என்று கூறிய வசந்த் அவன் அறையில் இருந்து இறங்கி வரவேற்பறைக்கு வந்தான்…

         அந்த காளியிடம் இருந்து பென்ட்ரைவ் வாங்கிவிட்டு முதலில் இருந்த அறைக்கு வந்தான்…

        மடிக்கணினியில் இணைத்தவன் இருந்த குறிப்புகளை பார்த்தான்…அனைத்தும் இவன் சொன்னது தான் இருந்தது. பெரிதாக வேறு ஒன்றும் இல்லை. அதை அவன் நண்பனிடமும் கூறியவன் அதில் இருந்த புகைப்படத்தை பார்த்தனர். பார்த்த இருவருமே அதிர்ந்தனர்….

        “இவ்வ்வளா….”என்று இருவரும் ஒரே நேரத்தில் கூறினர்.

    

 

 

 

 

 

ஆதிக்கம் தொடரும்.