அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 24

ஆதித், யுக்தா  கல்யாணம் முடிந்து அனைவரும் கிளம்பிவிட.. யுக்தா எதுவும் பேசாமல் ராம் வீட்டிற்கு சென்று அமைதியாக படுத்துக் கொண்டாள்..

ஹாலில் உட்கார்ந்து சிவகாமி பாட்டி எதையோ படு சிரியஸாக யோசித்துக் கொண்டிருக்க.. அதை பார்த்து வீட்டில் இருந்த அனைவருக்கும் வயிற்றில் மீண்டும் புளி கரைத்து ரசம் கொதித்து.. “இப்ப வரை இந்த கெழவி செஞ்சதுக்கே என்னோட பொண்டாட்டி திமிரழகி ரியாக்ஷன் என்னன்னு தெரியல.. இதுல இந்த கெழவி யோசிக்கிற ஸ்டைல்ல பாத்தா ஏதோ பெருசா ப்ளான் பண்ணுது போலயே?? கயல், மது அக்காவை கூப்ட்டு காதுல ஏதோ ரகசியம் வேற பேசுது” என்று ஆதித் பேய் முழி முழிக்க.. ஜீவா, ராம், வினய், வெற்றி, விஷ்ணு நிலையும் அதே தான்..

“டேய் அண்ணாஸ்?? டேய் அண்ணாஸ்” என்று ஜீவா வெற்றியையும், ராமையும் ஹாஸ்கி வாய்ஸில் கூப்பிட..!

“டேய் என்ன டா.?? எதுக்கு எங்க சிந்தனையா கெடுக்குற” என்று எரிந்துவிழுந்தான் வெற்றி..

“ஆமா பெரிய சிந்தனை சிற்பி இவரும்.. மூஞ்சப்பாரு.. டேய் அண்ணா நம்ம தாய் கெழவி மறுபடி ஏதோ ப்ளான் பண்ற மாதிரி தெரியுது.‌ ஐ திங்க் கயல் அண்ணி, மது அண்ணியும் இதுல கூட்டுன்னு நெனைக்கிறேன்.. நீயும், ராம் அண்ணாவும் ஒரு எட்டு போய் உங்க பொண்டாட்டிங்க கிட்ட என்ன மேட்டர்னு ஒரு வார்த்தை கேட்டு வந்து சொல்லுங்களேன்..!!”

“ஆமா பாஸ்.. இந்த பாட்டி யோசிக்கிற ஸ்டைல்லே சரியில்ல.. உங்க தங்கச்சி வேற என்ன நடந்தாலும் அமைதியாவே இருக்க.. எனக்கு ரொம்ப பயந்து பயந்து வருது பாஸ்.. ப்ளீஜ் உங்க பொண்டாட்டிங்க கிட்ட என்ன விஷயம்னு கேட்டு சொன்னீங்கன்னா நா கொஞ்சம் நெஞ்ச திடப்படுத்துப்பேன்‌. ப்ளீஸ் பாஸ், ப்ளீஸ் வெற்றி மாமா” என்று ஆதித் மூஞ்சை பாவமாக வைத்துக்கொள்ள..

“டேய் டேய் நடக்காத டா.. உன்னை பத்தி எனக்கு தெரியும் டா.. நீ பேக்-ஆப் ப்ளான் இல்லாம எதுவும் செய்யமாட்டேன்னு எனக்கு தெரியாத என்ன..?? நீ ஏதோ முடிவு பண்ணிட்டு தான் சாம் கழுத்துல தாலியே கட்டி இருப்பா.. என்னமோ சாம்கு அப்படியே பயப்படுறா மாதிரி இல்ல நடிக்கிற.. போடா போ.. போய் நீ போட்ட ப்ளானை எக்ஸிகீயூட் பண்ணு டா” என்ற ராம்.. “அப்றம் இன்னொன்னு இனிமே நீ என்னை பாஸ்னு கூப்பிட கூடாது.. ஒழுங்க தங்கச்சி புருஷனா லட்சணமா மச்சான்னு கூப்டு” என்றவன் “பாவம் என் தங்கச்சி இவனை நம்பி அவளை புடிச்சி குடுத்தாச்சு.. இந்த ரவுடி பய என் தங்கச்சியை என்ன பாடுபடுத்தப் போறானோ” என்று சிரித்தபடியே செல்ல.. “என் பொண்டாட்டிய விட நீங்க தான் பாஸ் என்னை நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க” என்று புன்னகைத்தபடியே தன் அறைக்கு சென்றான் ஆதித்..

இங்கு ராம் வீட்டில் கயல்விழியும், மதுவும் யுக்தாவை விரட்டிக் கொண்டிருந்தனர்..

“ஏய் சமி இன்னும் இங்க என்ன பண்ணிட்டு இருக்க.. எந்திரிச்சு கெளம்பு டி” என்று கயல்விழி சொல்ல..

“ஏய் மது இப்ப அவளா எங்க கெளம்ப சொல்றீங்க நீங்க ரெண்டு பேரும்.. அவ சும்மா தானா உக்காந்திருக்கா” என்று ராம் யுக்தாவிற்கு பரிந்து கொண்டு வர??

“ம்ம்ம்… எல்லா அவ புருஷன் வீட்டுக்கு தான்..!! கல்யாணம் முடிஞ்சும்.. இன்னும் இங்க ஏன் உக்காந்திருக்கணும்.. அதான் கழுந்துல தாலி ஏறிடுச்சு இல்ல.. இன்னும் நம்ம வீட்லயே இருந்த என்ன அர்த்தம்” என்று மது சொல்ல..

ராம், வெற்றி இருவருக்கும் கோவம் வந்து விட்டது.. “ஏய் மது!‌ என்ன இது உன் வீட்டு என் வீடுன்னு பிரிச்சு பேசிட்டு!! எப்ப இருந்து இந்த பழக்கம் வந்துது…” என்று ராம் குதிக்க.. வெற்றியும் கயல்விழியை திட்டிக் கொண்டிருந்தான்..

கயல், மது இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து.‌ “இதுங்களுக்கு எப்ப தான் மூளை வளரப்போகுதோ” என்று மானசீகமாக தலையில் அடித்துக்கொண்டவர்கள்.. தன் இணைகளின் அருகில் சென்றவர்கள் அவர்கள் காதை பிடித்து இழுத்து.. “டேய் லூசு பசங்களா.. உங்களுக்கு ஒரு மருமகனோ, இல்ல மருமகளோ பாக்கணும்றா ஆசயே இல்லயா டா” என்று அவர்கள் காதை கடித்து துப்பா??

“ஏன் இல்லாம.. எங்களுக்கும் சீக்கிரம் தாய்மாமன் ஆகணும்ற ஆச நெறய இருக்கு டி..!‌!”

“ம்ம்ம் இருக்கில்ல.‌ அப்ப வாயமூடிட்டு கம்முன்னு கெடங்க.. சமி இங்கேயே இருந்த அப்றம் குழந்தை எங்க இருந்து வருமாம்.. பாட்டி இன்னைக்கு அவங்க ரெண்டு பேருக்கும் வெற்றி அண்ணா வீட்ல சாந்தி மூகூர்த்தம் ஏற்பாடு செஞ்சிருக்காங்க.. அதான் அவளா இங்கிருந்து விரட்டிட்டு இருக்கோம்.. நீங்க ரெண்டு பேரும் உங்க திருவாயா மூடிட்டு கொஞ்ச நேரம் உங்க பாசமலர் படத்தை நிப்பட்டிட்டு கம்முன்னு இருங்க.. இன்னும் கொஞ்ச நேரம் நாங்க எங்க நாத்தனார் பவரை தறுமாற யூஸ் பண்ணுவோம். நீங்க எதையும் கண்டுக்காத மாதிரியே இருக்கணும் புரியுதா” என்று அவர்கள் மண்டையில் கொட்டிய பெண்கள் இருவரும்.. “ஏய் சமி நீ இன்னும் கெளம்பலயா..?? எழுந்து போய் குளிச்சுட்டு வாடி” என்று மீண்டும் விரட்ட.. யுக்தா அவர்கள் இருவரையும் முறைக்க.. “என்னாடி முறைப்பு.. இவ்ளோ நாள் நீ எங்களுக்கு நாத்தனார்.. அதனால நீ சொல்றத நாங்க கேட்டோம்.. இன்னைக்கு நீ எங்க தம்பி பொண்டாட்டி சோ அஸ் பர் தீ நாத்தனார் ருல்ஸ்.. நாங்க சொல்றத நீ கேட்டே ஆகணும்.. மரியாதையா எழுந்து போய் குளிச்சிட்டு.. உன் ரூம்ல பாட்டி புது புடவை வச்சிருக்கு.‌ அதை கட்டிடு வாடி” என்று விரட்ட.. “ஓஓஓ இதெல்லாம் அந்த கெழவி வேலையா.. வர வர அது தொல்ல தாங்க முடியல.. முதல்ல கிரைண்டர் கல்ல தூக்கி போட்டு அது ஜோலிய முடிக்கணும்” என்று முனங்கியபடியே யுக்தா எழுந்து குளிக்கச் செல்ல.. மதுவும், கயலும். Hi-fi அடித்துக்கொண்டு “நம்ம வேலை முடிஞ்சிது.. இனி எல்லாம் ஆதி கையில தான் இருக்கு. கடவுளே காப்பாத்து..”

“ஏன் பாட்டி.. ஏற்கனவே அவ தீடிர்னு கல்யாணம் நடந்ததுல, ரொம்ப குழம்பி போய் இருக்கா.. இதுல இன்னைக்கே சாந்தி மூகூர்த்தம் ஏற்பாடு செய்யணுமா?? பாவம் பாட்டி அவ.. அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கலாமே பாட்டி” என்று நிஷா, யுக்தாவுக்காக பேச…

“கொஞ்ச டைம் இல்லாடி அவ ஆதித் கூட சேர்ந்து வாழ எத்தனை வருஷம் வேணும்னாலும் டைம் எடுத்துக்காட்டு.. ஆனா அந்த டைம்மை அவ நம்ம சமியா இல்ல.. ஆதி பொண்டாட்டியா அவன் கூடவே இருந்து எடுத்துக்கட்டும்.. அவ ஆதி கூட ஒரே வீட்ல இருந்தா தான் அவளுக்கு ஆதி அவ புருஷன்.. அவ அவனுக்கு பொண்டாட்டின்றா நெனப்பு மனசுல நல்லா பதியும்.. அதுக்கு தான் இந்த சாந்தி மூகூர்த்த ஏற்பாடு.. சும்மா ஆதியோட ஒரே வீட்ல இருன்னு சொன்னா அவ மதிக்க மாட்ட.. அதான் கயல், மதுவ பேச சொன்னேன்.. நா சொன்னா கேக்காத அந்த கழுத அண்ணிங்க சொன்னா மறு வார்த்தை பேசாம அவங்க சொன்னத செய்யும்.. நா எது செஞ்சாலும் அது அவ நல்லதுக்காக தான் செய்வேன்.. அது சமிக்கும் நல்லா தெரியும்.. அதோட ஆதிய பத்தியும் எனக்கு தெரியும்.. சமி விருப்பம் இல்லாம அவங்க கல்யாண வாழ்க்கையை அவன் தொடங்க மாட்டான்.. அவனுக்கு அவளோட உணர்வுகள் ரொம்ப முக்கியம்.. கல்யாணம் விஷயத்தில் அவளா காயப்படுத்திட்டேன்னு ஏற்கனவே அவன் கவலையில இருக்கான்.. அதனால சமி சம்மதம் இல்லாம எதுவும் தப்பா நடக்காது நிஷா.. நீ இன்னுமும் சமியையே நெனச்சிட்டு இருக்காம உன்னை பத்தியும் உன் புருஷனை பத்தியும் யோசி.. சீக்கிரம் எனக்கு பேத்தியோ, பேரனோ பெத்து குடுக்குற வழிய பாருங்க” என்க நிஷாவின் கன்னங்கள் வெட்கத்தில் சிவந்து விட்டது…

சிம்பிளான அலங்காரத்தில் அந்த அறை அழகான ஜொலிக்க.. ஜன்னல் ஓரமாக தெரிந்த நிலாவினை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் யுக்தா.. மெல்லி ஜரிகை போட்ட சந்தன நிற பட்டுப்புடவையில் அழகு ஓவியம் போல் இருந்தவளை ரசிக்க அவள் கணவனுக்கு சத்தியமாக இரண்டு கண்கள் போதாது தான்..

பட்டு வேட்டி சட்டையில் ராஜகுமாரன் போல் நடந்து வந்த ஆதித் அந்த அறையின் கதவை திறக்க.. சரியாக அவன் மண்டயை நோக்கி வந்தது காலியான பால் டம்ளர்.. அதை அழகாக கேட்ச் பிடித்த ஆதித்.. “ஏய் என்னடி இது மொத்த பாலையும் நீயே முழுங்கிட்டியா?? அதுல பாதி தான் டி உனக்கு, மீதிய எனக்கு குடுக்கணும்” என்று கிண்டலாக சொல்ல..

“டேய் நா ஏற்கனவே உன்மேல கொலவெறியில இருக்கேன்.. மேல பேசி என் ஆத்திரத்தை கெளப்பாம வெளிய போய்டு டா” என்று கத்த..

“ஏய் லூசு இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட் டி உனக்கு மறந்துப் போச்ச.. நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு டி.. ஒன்னுக்கு ரெண்டு தடவ நா உனக்கு தாலி கட்டி இருக்கேன்…”

“ஆமா பெரிய தாலி.. நா அசந்த நேரம் பார்த்து நீ தாலி கட்டிட்ட நீ எனக்கு புருஷனாகிடுவியா டா..”

“சரி நா ஒத்துக்குறேன்.. அன்னைக்கு கோயில்ல நீ அசந்த நேரம் பார்த்து தான் நான் தாலி கட்டினேன். ஓகே ஐ அக்செப்ட்.. ஆனா இன்னைக்கு காலையில் நா உன் கழுத்துல மறுபடி தாலி கட்டபோறேன்னு உனக்கு நல்லா தெரியுமே.. ஏன் அப்ப நீ ஒன்னும் செய்யாம சும்மா என் பக்கத்துல உக்காந்துட்டு இருந்தேன்னு சொல்லுடி.. எனக்கு உன்னை கல்யாணம் பண்ண புடிக்கல போடான்னு சொல்லிட்டு.. கோயில்ல நா கட்டுன தாலிய கழட்டி போட்டுட்டு போக வேண்டியது தானாடி” என்ற ஆதித்தை யுக்தா தீயாக முறைத்தவள்..

“டேய் தேவை இல்லாம பேசி என்னை காண்டாக்காத சொல்லிட்டேன்.. என்னால என் அண்ணானுங்களும், என்னோட ப்ரண்ட்ஸம் அவங்க வாழ்க்கையை வாழம இருக்காங்களே. அட்லீஸ்ட் இந்த கல்யாணத்தலாது, அவங்க பிரச்சனை ஒரு முடிவுக்கு வரடும்ணு தான் நா அமைதியா இருக்கேன்.. இல்லாட்டி நீ என் விருப்பம் இல்லாம தாலி கட்னதுக்கு இன்னோரம் உன்ன உரிச்சு உப்பு கண்டம் போட்டிருப்பேன்.. நா அமைதியா இருக்குறானால.. நீ அட்வான்டேஜ் எடுத்துக்கலாம்னு பாக்காத புரிஞ்சுதா” என்றவள்.. “தாலியா கழட்டி போட்டுட்டு போகணும்.. அந்த வார்த்தையா சொல்ற அந்த வாயை அப்படியே ஒடைக்கணும்.. இதெல்லாம் இவனுக்கு வெளயாட்ட போச்சு போல” என்று வாய்க்குள் முனங்கியவள்.. “இப்ப நீ மரியாதைய இந்த ரூம்மை விட்டு வெளிய போறீயா இல்லயா டா” என்று சத்தம் போட்டு கத்த…

“ஏய் கொஞ்சம் மெதுவா பேசு டி.. எதுக்கு இப்படி நாலு தெருவுக்கு கேக்குற மாதிரி கத்துறா நீ!!”

“அது என் இஷ்டம்.. நா அப்படி தான் டா கத்துவேன்.. நீ என்ன டா செய்வ…” என்று சொல்ல வாயெடுத்தவள் இதழ்கள் அடுத்த நிமிடம் ஆதித் இதழில் சிறைப்பட்டு கைதியானது..??

யுக்தாவின் விரிந்த விழிகள் வியந்தபடி பார்த்திருக்க.. தன் மனைவியாகிய காதலிக்கு தன் முதல் முத்தத்தை தன் திருமண பரிசாக வழங்கினான் ஆதித்..

யுக்தாவுக்கு மூச்சு திணற ஆரம்பிக்க.. மனமே இல்லாமல் தன் மனைவியின் தேனுரும் இதழ்களுக்கு தன் இதழ் சிறையில் இருந்து விடுதலை கொடுத்தான்..

“இனிமே நீ இப்படி வால்வால்லுனு கத்துனா இதுதான் டி உனக்கு பனிஷ்மென்ட்” என்று அவளை விட்டு நகர்ந்தனர்.. “நீ இப்படி அடிக்கடி கத்தனும்னு நா ஆசப்படுறேன் டி.. ம்ம்ம் அப்றம் உனக்கு கிஸ் வேணும்னு தோனும் போது, என்கிட்ட கேக்க வெக்கமா இருந்தா.. இப்டியே கத்து டி நா புரிஞ்சுக்குவேன்” என்று அவளை பார்த்து கண்ணடித்தவன்.. கட்டிலில் கால் நீட்டிப் படுத்துக்கொள்ள

யுக்தா அவன் கொடுத்த முத்தத்தில் திகைத்து நின்றவள்.. “டேய் உனக்கு எவ்ளோ தைரியம் இருந்த என்னை கிஸ் பண்ணுவா” என்று மீண்டும் கத்த ஆரம்பிக்கும் போதே மீண்டும் அவன் இதழ்களால் சிறைபிட்டிக்கபட்டது அவள் அதரங்கள்..

அதற்குள் மேல் யுக்தா வாயே திறக்கவில்லை அமைதியாக தன் படுக்கையை எடுத்து தரையில் விரக்க…!! “ஏய் அழகி, என்ன டி பண்றா?? என்ற ஆதித்தை முறைத்தவள்.. “நா என்னமோ பண்றேன் உனக்கென்ன.. உன்னோட வெட்டிய சண்ட போடா எனக்கு இஷ்டமில்ல.. எனக்கு தூக்கம் வருது.. நா தூங்கப்போறேன்..”

“உனக்கு தூக்கம் வந்த கட்டில்ல படுத்து தூங்கு.. அதென்ன தரையில படுங்குறா பழக்கம்..??”

“என்னால உன் கூட எல்லாம் சேர்ந்து ஒரே கட்டுல்ல படுக்க முடியாது..”

“ஏன்டி?? உனக்கு என்னை ரேப் பண்றா ஐடியா எதும் இருக்க என்ன?? அதுக்கு பயந்து தான் தரையில படுக்குறீயா?? நா ஆணழகன் தான்.. அதனால உன் மனசு தடுமாறுது.. இது ஜகஜம் தான்.. இருந்தாலும் இட்ஸ் ஓகே. நான் உன் புருஷன் தானே” என்றவனை வெட்டவா குத்தவா என்பது போல் பார்த்த யுக்தா.. “டேய் இது உனக்கே ஓவரா தெரியல.. பேசாம மூடிட்டு படுடா..!!”

“இது பெரிய கட்டில் தான்.. நீ ஒழுங்கா வந்து கட்டில்ல படு.‌ இல்லஆஆஆஆ” என்று ஆதித் மிரட்ட!‌

“அதெல்லாம் முடியாது போடா.. உன்னால முடிஞ்சத பாத்துக்கோ..”

“ஓஓஓ அப்டியா.. நா இப்பவே வெளிய போய் எல்லார்கிட்டயும் உங்க பொண்ணுக்கு என்னை புடிக்கல.. உங்க எல்லார்காகவும் தான் அவ என் கட்டிக்கிட்டன்னு சொல்றேன்..”

“டேய்.. டேய் அப்படி எல்லாம் எதுவும் பண்ணி தொலச்சிடாதா.. அப்றம் அவங்க எல்லாரும் கில்டி ஆஃ ஃபீல் பண்ணுவாங்க..!!”

“அப்ப ஒழுங்க கட்டில்ல படு.. ஐ ப்ராமிஸ் உன்னோட விருப்பம் இல்லாம நா உன்னை தொட மாட்டேன்.. நீ அந்த பக்கம் படு.. நா இந்த பக்கம் படுத்துக்குறேன்.. உன் பக்கத்துல கூட நா வரமாட்டேன் போதுமா” என்றவனை அசடுவழிய பார்த்த யுக்தா… “டேய் உனக்கு என்னை பத்தி தெரியாது டா.. பேசாம என்னை கீழ படுக்க விடுடா” என்று அவள் கெஞ்ச ஆதித் காதில் எதுவும் விழவில்லை.. வேறு வழி இல்லாமல் யுக்தா கட்டிலின் மூலையில் படுத்துக்கொள்ள.. ஆதித் மனதில் நின்றவள் மனைவியான சந்தோஷத்தில் நிம்மதியாக உறங்கினான்..

விடியல் காலையில் லேசாக தூக்கம் கலந்த ஆதித் எழுந்திருக்க பார்க்க.. அவனால் ஆசையா கூட முடியாதபடி அவன் மீது கால் போட்டு.. ஆதித்தை இறுக்கி அணைத்தபடி நன்கு உறங்கிக் கொண்டிருந்தாள் அவன் காதல் அழகி..

“ஓஓஓ மேடம்கு தூக்கத்துல கை, கால் தூக்கிப் போடுறா பழக்கம் இருக்கா.. அதான் நைட் கூட படுக்க அப்படி யோச்சாளா” என்று சிரித்த ஆதித்.. “எப்டியே வந்த வரை நமக்கு லாபம் தான்” என்று நினைத்தவன்.. அவளை தன்னோடு இன்னும் இறுக்கிக்கொண்டான்..

சின்ன சின்ன சீண்டல், சின்ன சின்ன சண்டை, அத்திப்பூத்தார் போல் யுக்தா கன்னத்தில் பரவும் சிறு வெட்கம்.. ஆதித் தரும் முத்த பனிஷ்மென்ட் என்று யுக்தா, ஆதித், யுக்தா திருமண வாழ்க்கை டாம் அண்ட் ஜெர்ரி ஷோ போல் அனைவருக்கும் நல்லா என்டர்டெயின்மென்ட்டாக இருந்தது..

Leave a Reply

error: Content is protected !!