அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 27

மறுநாள் ஹாஸ்பிடல் சென்று அனுவின் தங்கைக்கு நன்றாக பூஜை நடத்திய யுக்தா கைகளை பிடித்து அனு அழதே விட்டாள்.

“ரொம்ப தேங்க்ஸ் யுகி. நீ மட்டும் இல்லைன்னா, இன்னேரம் நாங்க என்ன பண்ணி இருப்போம்னே தெரியல” என்று கண்கலங்கிய அனுவை யுக்தாவும், நிஷாவும் சமாதானம் செய்ய, “அக்கா அந்த மந்திரி பெத்த பொறுக்கி நாயா என்னக்கா பண்ணீங்க?” என்று அனுவின் தங்கை ஆவலாக கேட்க,

 

நிஷா, யுக்தாவை பார்த்து சிரித்தவள், “அதை ஏம்மா கேக்குறா! சில கேஸ்ல நாங்க தனிபட்ட முறையில், ஆம்பளைங்க கிட்ட இருந்து உண்மையை வர வைக்க ஒரு டிரிக் ஒன்னு யூஸ் பண்ணுவோம்… அதை தான் யுகி அந்த பையனுக்கு செஞ்சிட்டா… எங்களுக்கு தெரிஞ்ச நாலு பசங்ககிட்ட அந்த பையனை செமத்திய கவனிக்க சொல்லி இருக்கா… அவனுங்களும் இவனை ஒரு வழி பண்ணிட்டாங்க.‌ இனி ஜென்மத்துக்கும் அவனுக்கு யார் மேலயும் கை வைக்கிற தைரியமே வராது” என்று நிஷா சிரிக்க,

 

“இனி அவன் உடம்பை அவன் தொடவே அவ்ளோ அருவெறுப்பா ஃபீல் பண்ணுவான். விருப்பம் இல்லாதவைங்களை அத்துமீறி தொட்ட அது எப்டி வலிக்கும்னு இப்ப அவனுக்கு புரிஞ்சு இருக்கும். நாலு ஆம்பளைங்க அவனை சுத்தி நின்னு” என்றவள் அதற்கு மேல அதை பற்றி சொல்ல விரும்பாது, “நம்ம நாட்ல (gay) கேய் என்ற வார்த்தை கூட தப்பு தான், இந்த விஷயம் எல்லாம் மக்களுக்கு பிடிக்காத விஷயம் தான். ஆனா, இது அவங்க அவங்க தனிப்பட்ட விஷயம் இதுல நம்ம யாரு? கருந்து சொல்ல. இந்த மந்திரி பையன் விஷயத்தில் அந்த மாதிரி பசங்க உதவி தான் எங்களுக்கு ஹெல்ப் பண்ணுச்சு. அந்த பசங்களை நான் இப்டி யூஸ் பண்ணது தப்பு தான். ஆனா, அந்த பசங்க எங்களால இந்த நாதாரி கிட்ட இருந்து ஒரு பொண்ணோட மானம் தப்பிக்கும்னா அது எங்களுக்கு புண்ணியம் தானக்கான்னு சொன்னனுங்க” என்ற யுக்தா. அனு தங்கை கையை படித்தவள், “லைஃப் இஸ் ஏ லாங் ஜேர்னி டியர். அதை இந்த மாதிரி அல்பா விஷயத்துக்காக முடிச்சிக்க கூடாது. பீ பிரவ்” என்றவள் அங்கிருந்து சென்றாள்.

 

அன்று குடும்பத்தில் உள்ள அனைத்து இளசுகளும் குழந்தைகளோடு சேர்த்து வீட்டையே ரெண்டாக்கி கொண்டிருந்தனர்.. அன்று மாலை விஷ்ணு, ராஷ்மி கல்யாணத்திற்கு நாள் குறிக்க முடிவெடுத்து வீட்டிலே சின்னப் பூஜை ஏற்பாடு செய்திருந்தார் சிவகாமி பாட்டி. பூஜைக்கு வீட்டில் உள்ள அனைவரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என்று முதுகில் மொத்தி சொல்லி இருந்தார் பாட்டி.. வேலை வேலை என்று அலையும் இளசுகளும் குடும்பத்தோடு ஒன்னாக இருக்கக் கிடைத்த வாய்ப்பை பெவிகால் போட்டு ஓடியது போல் பிடித்துக்கொண்டு வீட்டையே தலைகீழாகப் புரட்டிக் கொண்டிருக்க.. யுக்தா மட்டும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“ஏன்டி நிஷா? இந்த யுகிக்கு இன்னைக்கு என்ன ஆச்சு.? நானும் காலையில இருந்து பாக்குறேன். ஒரு மாதிரி ரெஸ்லெஸ்சாவே இருக்களே? நொடிக்கு ஒரு முறை வாசலயே பாக்குற.? ப்ரணவ் வந்து வெளயாட கூப்புட்டு கூட போகல. என்ன ஆச்சு இவளுக்கு?” என்று ஜானு கேட்க..

 

“அடியேய் ஜானு, அது கல்யாணம் ஆன எல்லாப் பொண்ணுகளுக்கும் வர்ர வியாதி தான். எம் பேரன் ஜீவா வெளியூர் போன அவன் எப்ப திரும்பி வருவான்னு படிக்கட்டிலயே உக்காந்து காத்து இருப்பியே அதே வியாதி தான் அவளுக்கும் வந்திருக்கு. என்ன நீ படிக்கட்டு, அவ ஹால். அதான் வித்தியாசம். அம்மாக்கு படி இறங்கிப் போக, அவ கௌரவம் ஏடம் கொடுக்கல போல. நீங்க வேலையா பாருங்க” என்ற பாட்டி, “அடியேய் ராங்கி உம் புருஷனுக்கு வீட்டுக்கு உள்ள வர்ர வழி தெரியும். நீ வாசலயே பாத்துட்டு இருக்காம வந்து வேலைய பாரு டி” என்று கடுப்பேத்த… ஏற்கனவே பாட்டி மேல் கடுப்பில் இருந்த யுக்தா பல்லை கடித்தவள், “ஏய் கெழவி, நா இப்ப சொன்னனா? உம் பேரனுக்காக வெய்ட் பண்றேன்னு. அந்தச் சீன் எல்லாம் இந்தச் சம்யுக்தாகிட்ட நடக்காது. நா ஆன்லைன்ல சில திங்ஸ் ஆர்டர் பண்ணி இருந்தேன். அது வருதான்னு பாத்தேன். நீ வேற எதும் கற்பனை பண்ணாத. போ… போ… போய் வேலையை பாரு” என்று பாட்டியை விரட்ட. பாட்டி சிரித்துக்கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.

 

ஆதித் ஒரு கேஸ் விஷயமாக வெளியூர் சென்றிருந்தவன். இன்று திரும்பி வருவதாகப் பாட்டி வீட்டில் சொல்ல.. யுக்தாவிற்குப் பாட்டி மேலும் ஆதித் மேலும் கொலவெறி வந்தது.

 

“இவனுக்குப் பொண்டாட்டி நான்… ஆனா, இவன் பூரா டீலிங்கும் இந்தக் கெழவிகிட்ட தான். வார்த்தைக்கு வார்த்தை பொண்டாட்டி, பொண்டாட்டின்னு என்னைக் கொஞ்சுறது பொசுக்கு பொசுக்குன்னு முத்தம் தர்ரது. ஆனா, ஊருக்கு திரும்பி வர விஷயத்த மட்டும் எனக்குச் சொல்லாம, இந்தக் கெழவிகிட்ட சொல்லி இருக்கான் பாரு. ஏன்? எனக்கு ஒரு ஃபோன் பண்ணி சொன்னா என்னவாம்” என்று அவள் கருவிக் கொண்டிருக்க. ‘அவன் ஃபோன் பண்ண அப்படியே நீ எடுத்து அன்பா பேசிட்டு தான் அடுத்த வேலை பாப்ப பாரு. அவனுக்குன்னு தனி டோன் செட் பண்ணி வச்சு. அவன் கால் மட்டும் ஃபோனா அட்டென் பண்ணாம, ஃபூல் ரிங் அடிக்கவிட்டுட்டு திரியுற பிடாரி நீ. நீ அவனா சொல்றீயா?’ என்று யுக்தாவின் மனசாட்சி அவளைக் காறித் துப்ப, “அது அப்டி தான். நா எடுக்குறேனோ இல்லயோ. அவன் எனக்குக் கால் பண்ணிட்டே தான் இருக்கணும். நா அட்டென் பண்றா வரை விடாம கால் பண்ணும். அப்றம் எதுக்குத் தாலி கட்னனாம். நீ முதல்ல போ இங்கிருந்து” என்று மனசாட்சியின் மண்டையில் கொட்டி அனுப்பி வைத்தவள் மீண்டும் வாசலைப் பார்க்க. அவள் கடுப்பின் நாயகன் வந்து கொண்டிருந்தான்..

 

ஆதியை பார்த்ததும் தாமரை போல் மலர்ந்து முகத்தை யாரும் பார்க்கும் முன் மறைத்த யுக்தா. வழக்கம் போல் முகத்தைக் கடுகடுவென வைத்துக் கொள்ள. ஆதித் அவள் முக மாற்றத்தை கண்டு ரசித்தவன், “திமிரு திமிரு உடம்பு முழுக்கத் திமுரு டி உனக்கு” என்று முனுமுனுத்துக்கொண்டே, யுக்தாவை கண்டும் காணாமல் குழந்தைகளிடம் சென்றவன். அவர்களுக்காக வாங்கி வந்த விளையாட்டுப் பொருட்களைப் பரப்பி வைக்க.. குட்டிகள் கொடுத்த முகத்தில் அவன் கன்னம் நிறைந்து விட்டது.

 

குழந்தைகளை அடுத்து வீட்டில் உள்ள அனைவருக்கும் எதாவது ஒரு பொருளை வாங்கி வந்தவன். அதை அவரவர் கையில் கொடுத்துப் பேக்கை காலி செய்ய. யுக்தா முழு‌ கொதிநிலையை அடைந்தவள். ஆதித்தை பார்வையால் எரித்த படியே தன் ரூம்மிற்குச் சென்று, ஆதியை வாயில் போட்டு வறுத்துக் கொண்டிருந்தாள், “எரும, பன்னி, கழுத, பிசாசு எல்லார்க்கும் ஏதோ ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கான். ஆனா, எனக்கு மட்டும் ஒன்னு வாங்கிட்டு வர்ல. பக்கி, பரதேசி” என்று ஆதியை புகழ்ந்தவள் திரும்பி பார்க்க. அங்கு கைகளை முதுகுக்குப் பின்னால் கட்டியபடி கதவில் சாய்ந்து நின்று இவளையே கள்ள சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தவனைப் பார்த்து இன்னும் கடுப்பாகி முகத்தைத் திருப்பிக்கொள்ள.

 

“என்ன மேடம்? என்னை ரொம்பப் புகழ்ந்து ஏதோ முனங்கிட்டு இருந்த மாதிரி இருந்துது” என்று அவளை நோக்கி வர, “டேய் மரியாதையா போய்டு சொல்லிட்டேன். அப்றம் வெளிய போய் எம் பொண்டாட்டி அடிச்சிட்ட இந்த அநியாயத்த யாரு தட்டி கேக்கமாட்டீங்கலான்னு பஞ்சாயத்து வைப்ப. போ டா…” என்று அவள் முறுக்கி கொள்ள. ஆதித்தின் இதயம் மகிழ்ச்சியில் ரோலாகோஸ்டர்யில் போவது போல் மேலே மேலே போனது. இதுவரை ஆதித் தான் வாய் ஓயாமல் யுக்தாவை ‘பொண்டாட்டி, பொண்டாட்டி’ என்று கொஞ்சுவனே தவிர. யுக்தா ஒருமுறைகூட தங்கள் இருவரும் இடையே உள்ள உறவை வெளிப்படையாகப் பேசியது இல்லை. இன்று ஆதி மேல் உள்ள கோவத்தில் அவள் சொன்ன அந்தப் பொண்டாட்டி என்ற வார்த்தை அத்தனை தித்திப்பான இனித்தது ஆதிக்கு…

 

“ஏன் டார்லிங்? உனக்கு எதுவும் வாங்கிட்டு வரலன்னு காண்டுல இருக்கிய?” என்று கேட்க.. யுக்தா கண்ணைச் சுருக்கி அவனை முறைத்தவள், “யாரு நானு… நானு நீ எனக்கு ஒன்னு வாங்கிட்டு வரலன்னு..!! எனக்குக் காண்டு..!! போ டா டேய் போ டா. எனக்கு எதாவது வேணும்னா வினய் கிட்ட சொன்னப் போதும் கடையையே இறக்கிடுவான். நானாது உன் கிட்டயாது” என்று அலட்சியமாகச் சொல்ல,

 

“ஓஓஓ அப்டியா கதை? அச்சோ! இப்ப என்ன பண்றது? நா உனக்காக ஒன்னு வாங்கிட்டு வந்துட்டேனே.‌..! இப்ப இத என்ன பண்றது” என்று கையில் இருந்த பார்சலை காட்டிவன், “சரி இட்ஸ் ஓகே. நா இத பாட்டிக்கு குடுத்துடுறேன்” என்றது தான் தாமதம். ரூம்மை விட்டு வெளிய சென்ற ஆதித் சட்டையைப் பிடித்து இழுத்த யுக்தா அவன் கையில் இருந்த பார்சலை பிடிங்கி கொண்டவள், “அதெல்லாம் முடியாது, இது எனக்காகத் தானா வாங்கிட்டு வந்த. அப்றம் எதுக்கு அந்தக் கெழவிக்குக் கொடுக்கணும், அதெல்லாம் தரமுடியாது. இது எனக்குத் தான்” என்று ஆர்வமாக அவள் பார்சலை பிரிக்க. ஆதித் ஆசையாக அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

 

பார்சலை பிரிக்க. அதில் இளம் மயில்கழுத்து நிறப் பட்டுப் புடவையில் அடர் ரோஸ் நிற பார்டர் போட்டு பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது. அதைப் பார்த்த யுக்தா‌ கண்கள் மகிழ்ச்சியில் வைரம் போல் ஜொலித்த அடுத்த நிமிடம். இதழ் பிதுக்கி அழுவது போல் ஆகிவிட, “ஏன் டா உனக்கு வேற எதும் கெடக்கலயா? புடவையைப் போய் வாங்கிட்டு வந்திருக்க” என்று திட்ட.

 

“ஏய் என்ன டி? புடவை நல்லா தானா இருக்கு. அப்றம் எதுக்குத் திட்ற நீ? அங்க குழந்தைங்க எல்லாரும் கிஃப்டுக்கு பதில் எனக்கு கிஸ் குடுத்தாங்க தெரியுமா? ஆனா, நீ!! போடி.. நா எது செஞ்சாலும் உனக்குப் புடிக்காது. அதை குடு பேசாம நா பட்டிக்கே குடுத்துடுறேன்” என்று புடவையில் கைவைக்க. பட்டென அவன் கையில் அடித்தவள். “இது என்னோடது, எனக்கு மட்டும் தான் யாருக்கும் தரமாட்டேன்” என்றவள், “வர வர அந்தக் கெழவி என் ரூட்ல ரொம்பக் கிராஸ் பண்ணுது. பேசாம அது திங்குற பிரியாணில வெசத்த வச்சிட வேண்டியது தான்” என்று முனங்கியபடியே செல்ல.

 

“என்ன டா?? உன் பொண்டாட்டி ஏதோ முனங்கிட்டே போற என்ன ஆச்சு?? என்று முத்து தாத்தா கேட்க.

 

“பாருங்க தாத்தா? அவளுக்காகத் தேடி அலஞ்சு, அவளுக்குப் பொருத்துற மாதிரி சுப்பரா ஒரு புடவை வாங்கிட்டு வந்தா, என்னை திட்டிட்டுப் போறா தாத்தா அவ. அவளுக்குப் புடவை புடிக்கட்டி கூடப் பரவாயில்ல. அவளுக்கு அது ரொம்பப் புடிச்சிருக்குன்னு அவ மொகத்துலயே தெரியுது. இருந்தும் திட்டிட்டுப் போறா தாத்தா” என்று ஆதி புலம்ப.

 

“டேய் அவளுக்குப் புடவை புடிச்சிருந்து என்ன யூஸ்? அத அவளுக்குக் கட்ட தெரியணும் இல்ல” என்று சிரிக்க.‌ ஆதி முதலில் திகைத்தவன், “அடக்கடவுளே! இவ்ளோ வாய் பேசுறா. ஒரு புடவை கட்ட தெரியாத” என்று சிரிக்க.

 

“ஆமா டா பேராண்டி. அவ வேலைக்கு எப்பவும் ஜீன்ஸ், சட்டை தான் போட்டுக்குவா. விஷேசம்னா ஆனந்தி புடவை கட்டி விடுவா. ஏன்? உங்க கல்யாணத் தன்னைக்குக் கூட மது தான் அவளுக்குப் புடவை கட்டிவிட்டது.”

 

“சரி தாத்தா. அதுக்கு ஏன் என்னைத் திட்டனும்? இப்பவும் மது அக்காகிட்ட இல்ல கயல் கிட்ட சொல்லி கட்டிக்க வேண்டியது தானே??”

 

“அது தான்டா முடியாது பேராண்டி. காலையில சமி புடவை கட்டிவிடச் சொல்லி கயல் கிட்ட கேட்க. எம் பொண்டாட்டி, உன் பாட்டி அந்தக் கெழவி இருக்காளே. யாரும் அவளுக்குப் புடவை கட்டிவிடக்கூடாதுன்னு சொல்லிட்டா. எப்பவும் அடுத்தவங்களே கட்டிவிட்டுட்டு இருந்த அவ எப்ப தான் புடவை கட்ட கத்துக்கிறது. நீங்க யாரும் சமிக்கு ஹெல்ப் பண்ணக்கூடாதுன்னு முடிவா சொல்லிட்டா..ன அந்தக் கடுப்புல இருந்த புள்ளை கிட்ட நீ புடவையை நீட்னா உன்னைக் கடிக்காம வேற என்ன செய்வா. நீ பேசாம யூடியூப் போய், புடவை கட்டுவது எப்டின்னு வீடியோ பாத்துக் காத்துக்க டா” என்க..

 

“நா எதுக்குத் தாத்தா கத்துக்கானும்? யுகி தானா கத்துக்கானும்!” என்று கேட்க தாத்தா தலையில் அடித்துக்கொண்டவர்.. “அடப்போடா. நீ எல்லாம்… ச்சே… நீ அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்ட டா. போ டா… போ… கடைசி வரை இப்டியே வெளங்காமயே தான் திரிவா… எம் பேத்தி பாவம்” என்று புலம்பிக் கொண்டே போக, தாத்தாவையே பார்த்துக்கொண்டிருந்த ஆதிக்கு, அவர் சொன்னதின் அர்த்தம் புரிய “தாத்தா நீ சரியான ஆள் தான். பாட்டி ஏன் இப்பவும் உங்களைக் கண்கொத்தி பாம்பா வாட்ஸ் பண்றாங்கன்னு எனக்கு இப்ப தான் புரியுது. செம்ம ரொமாண்டிக் ஹீரோ தான் நீங்க” என்று சிரித்தவன். யுக்தாவிடம் போய், தான் அவளுக்கு புடவை கட்டிவிடுவதாகச் சொன்னால் என்ன நடக்கும் என்று யோசித்துப் பார்க்க.. “அய்யோ யுகி அடிக்காத” என்று கத்தியே விட்டான்..

 

பூஜையில் அனைவரும் அமர்ந்திருக்க. ஆதித் தந்த புடவையில் தோகைவிரித்தடும், அழகு மயில் போல் நடந்து வந்த தன் மனதிற்கினியவளிடம் நங்கூரம் போட்டது போல் நின்றது ஆதித்தன் கண்கள்.

 

நட்பா, காதலா, இல்லை வேறு எதுமா என்று புரியவிடுலும். அழகான நீரோடை போல் அமைதியாக இருந்தது யுக்தா, ஆதித் வாழ்க்கை.. அதை ஆழிப்பேரலை போல் புரட்டி போடா காத்திருந்தது விதி…

 

அன்று யுக்தா வீட்டில் இல்லை. ஆனந்தி, சாருமதி, கோதை மூவரும் குழந்தைகளை வீட்டுப் பக்கத்தில் உள்ள பார்க்கிற்கு விளையாட அழைத்துச் சென்றனர். வானம் இருட்டிவிடக் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டிக்கு திரும்பும் போது வேகமாக வந்த கார் ஒன்று, ப்ரண்வ்வை காருக்குள்ள இழுத்துப் போட்டுக்கொண்டு வேகமாகச் சென்றுவிட்டது.

 

அந்த வீடே புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது. ராம், ஆதி ஒரு பக்கம் ப்ரணவ்வை தேட… வெற்றி, விஷ்ணு, ஜீவா, வினய், ஜானு, ராஷ்மி, நிஷாவும் சென்னையையே அலசிக் கொண்டிருந்தனர்.

 

எங்கு தேடியும் ப்ரணவ் கிடைக்காமல் போக. வீட்டில் அனைவரும் பதறிப்போய் இருந்தனர். ஆதித் கலங்கிப் போய் உட்கார்ந்து இருக்க, அவனைப் பார்க்கவே அனைவருக்கும் பாவமாக இருந்தது. இதுவரை அவன் எதற்குக் கலங்கி அங்கு யாரும் பார்த்ததில்லை. ஆனால், இன்று ப்ரணவ்வை நினைத்து அவன் கலங்கி விட்டான்.

 

புயல் வேகத்தில் வீட்டிற்குள் நுழைந்த யுக்தாவை நிமிர்ந்து பார்க்க கூட முடியவில்லை அவள் கணவனால்.

 

“டேய் இப்ப எதுக்கு நீ இப்டி இடிவிழுந்த குட்டிச் செவரு மாதிரி உக்காந்திருக்க.‌ எம் புள்ளை” என்றவள் நிறுத்தி, “நம்ம புள்ளைக்கு ஒன்னு ஆகாது… ப்ரணவ்வை தூக்குனாவனுக்குத் தான் ஏழ்ரா ஆரம்பிக்கப் போகுது” என்று கையை முறுக்கியவள். “நிஷா என் லாப்டாப் எடுத்திட்டு வா” என்னும் போதே யுக்தா ஃபோன் அடிக்க. அதை எடுத்து பார்க்க. அது ஒரு ப்ரைவேட் நம்பர். யுக்தா ஃபோனை அட்டென் பண்ணி ஸ்பீக்கரில் போட எதிர் பக்கம், “என்ன சம்யுக்தா மேடம் உங்க எக்ஸ் புருஷனோட புள்ளையைக் காணும்னு பதறிட்டு இருக்கீங்க போல?? என்று சிரிக்க…

 

“டேய் யார்ரா நீ” என்று அனல் தெரிக்க வந்தது யுக்தா குரல்.  

 

“அத விடுங்க மேடம்.. அதுவ இப்ப முக்கியம்.‌ இப்ப நா எதுக்கு ப்ரண்வ்வை தூக்குனேன்னா?? உங்க போலிஸ் புருஷன் ஆதித்யன் இருக்கான் இல்ல. அவன் இப்ப எடுத்திருக்கக் கேஸ்சை இத்தோட இழுத்து மூடிட்டு போகணும். இனி அந்தக் கேஸ் பத்தி எதுவும் இன்வஸ்டிகேட் பண்ணக்கூடாது. உடனே அவன் வேலையா ரிசைன் பண்ணணும். இதெல்லாம் நாளைக்கே நடக்கணும் இல்ல… ப்ரண்வ் பிணம் கூட உங்களுக்குக் கெடக்காது, அதோட உன் புருஷன் உயிரும் இருக்காது” என்று எச்சரிக்க.. 

 

“நாளைக்கு எம் புள்ளையைக் கொல்ல நீ உயிரோட இருக்கணுமே டா!! உன் சாவு என் கையில தான் டா. இன்னைக்கு நைட்டே என்னோட ப்ரண்வ்வை நா உன்கிட்ட இருந்து தூக்கிடுவேன். நீ‌…‌ எம் புருஷன், புள்ளையைப் பத்தி கவலைப் படாத..‌. முடிஞ்சா எங்க கிட்ட இருந்து உன் உசுர நீ காப்பாத்திக்கே” என்றவள் தன் லாப்டாப்பை எடுத்துக்கொண்டு ஆதியோடு கிளம்பியவள், “இன்னைக்கு நைட்க்குள்ள ப்ரணவ் வீட்ல இருப்பான்” என்று உறுதியாகச் சொல்லிவிட்டு சென்றாள்.

 

Leave a Reply

error: Content is protected !!