அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 29

பரதனுடன் மல்லுக் கட்டிவிட்டு ஆதித்தை பார்க்க வந்த யுக்தா அங்கு கண்ட காட்சியில் கடுப்பின் உச்சத்திற்கு சென்றாள், “ஓய் கெழவி உனக்கு வேற வேலையே இல்லையா?? எப்பாரு இவன் கூடவே உக்காந்துட்டு இருக்க??‌ அங்க உம் புருஷன் சோறு போட ஆள் இல்லாம வெறும் தட்டை உத்து உத்து பாத்துட்டு இருக்காரு… போய் அவரை கவனி” என்று அங்கு ஆதிக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்த சிவகாமி பாட்டியை இடுப்பில் கை வைத்து முறைத்தபடி சொல்ல…

பாட்டி இவளை மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தவர், “ஏன்டி திமிர் புடிச்சவளே… அதை இங்க வந்து சொல்ற நேரத்துக்கு நீயே அந்தாளுக்கு சோத்தை போட்டுட்டு வர வேண்டியது தானே” என்று முறைக்க,

“எதுக்கு…? இல்ல எதுக்குன்னு கேக்குறேன்?? நா அவருக்கு சோறு போட, நீ வந்து ஏன்டி எம் புருஷனுக்கு சாப்பாடு போடுறேன்னு என்கிட்ட சண்டை போட.. அந்த கதையே வேணாம். நீயே போய் உன் புருஷனை, அந்த ஆணழகனைப் பாரு” என்று உதட்டை சுழித்து ஒழுங்கு காட்ட, “ஏய் நா தான் ஆதிக்கு சாப்பாடு ஊட்டிட்டு இருக்கேன் இல்ல… நீயே போடி” என்று கத்த.. சிவகாமி கையில் இருந்த தட்டை வெடுக்கென பிடிங்கியவள், “அதெல்லாம் நா பாத்துக்குறேன். நீ போய் உம் புருஷனா கவனி” என்றவள், “எப்பபாரு எம் புருஷன் பின்னாடியே சுத்திட்டு.‌.. அதான் கல்யாணம் பண்ணி வச்சிடுச்சு இல்ல… பேசாம ஊருக்கு போக வேண்டியது தானே, இங்கயே இருந்து சும்மா உசுர வாங்குது” என்று வாய்க்குளேயே முனங்க, அதை கேட்டு ஆதித் சிரிக்க, பாட்டி இருவரையும் முறைத்தவர்.‌..

“எனக்கு வேணும் டி… நல்லா வேணும்” என்று தலையில் அடித்துக்கொள்ள,

“டைனிங் டேபிள்ல திங்குறதுக்கு எல்லாம் இருக்கு, வேணும்னா போய் கெட்டிக்கா, அப்படியே முத்து டார்லிங்குக்கும் எதாவது மிச்சம் மீதி இருந்த போடு” என்ற யுக்தா தலையில் நங்கென கெட்டி பாட்டி சிரித்துக்கொண்டே அறையை விட்டு வெளியேற, “ஏன்டி எப்ப பாரு பாட்டிக்கிட்ட வம்பு பண்ணிட்டே இருக்க??” என்ற ஆதியை கோவமாக பார்த்தவள், “நீ சும்மா இரு டா. அந்த கெழவி பத்தி உனக்கு தெரியாது. நா அது புருஷன் கிட்ட சும்மா ஒரு ரெண்டு வார்த்தை சிரிச்சு பேசுனா போதும். திருப்பரங்குன்றம் கழுகு மாதிரி வந்து, “உனக்கு என்ன டி எம் புருஷன் கிட்ட பேச்சும், சிரிப்பும் வேண்டிக் கெடக்குன்னு என்னை திட்டும்… இப்ப இது மட்டும் எம் புருஷனுக்கு சோறு ஊட்டி விடுமாம், நா பாத்துட்டு சும்மா இருக்கணுமாம்??” என்றவள் சாதத்தை ஆதி வாய் அருகே கொண்டு செல்ல… அவன் கண்கள் குறும்பாக இவளையே வருடிக் கொண்டிருந்தது. அது ஏன் என்று அவளுக்கு புரிய… மெதுவாக தலை கவிழ்ந்தவள், “டைம் ஆகுது ஆதி சீக்கிரம் சாப்புடு” என்றவள் பாட்டி விட்ட வேலையை முடித்து வைத்தாள். சாப்பாடு ஊட்டி முடித்து ஆதிக்கு வாயை துடைத்து விட. அவளின் ஒவ்வொரு செயலையும் ஆதித் நிதானமாக ரசித்துக் கொண்டிருந்தான்.

“அந்த சேதுவ என்ன டி பண்ண??” என்ற ஆதித் கேள்வியில் அவனை திரும்பி பார்த்தவள், “எதுக்கு உடனே ஃபோன் பண்ணி உங்க சித்தப்பு கிட்ட இது இது இப்படின்னு போட்டுக் கொடுக்கவா..”

“ஏய்.. இல்ல டி.. நீ எப்படியும் அவனை உயிரோட விட்டிருக்க மாட்ட.. அது அவருக்கும் தெரியும். எனக்கும் தெரியும். பட் நீ அவனை என்ன செஞ்சேன்னு தெரிஞ்சுக்கணும் டி… ரொம்ப கீயூரியஸ்ச இருக்கு யுகி, ப்ளீஸ் டி! சொல்லேன்!” என்று கண்ணை சுருக்கி அழகாய் கெஞ்சும் அவள் அழகனின் கேள்விக்கு அவன் அழகியால் பதில் சொல்ல முடியாது என்று சொல்லமுடியுமா என்ன??

“என் நிழலை தொட்டவனையே நா உயிரோட விட்டதில்லை ஆதி… அந்த சேது என் உசுர தொட்டுட்டான்.. அவனை அவ்ளோ ஈசியா ஒரு நிமிஷத்தில் சாக விட்டுவேனா என்ன??” என்றவள் கண்ணில் கோவம் அக்னியாக ஜொலிக்க…

“அவனை என்ன டி செஞ்ச?? இப்ப அவன் உயிரோட இருக்கானா?? இல்ல??” என்று கேட்ட ஆதித்தை பார்த்து ஒற்றை கண்ணை அடித்து காட்டியவள், “உயிர் இருக்கு‌ ஆனா,” என்று இழுத்தவள், “உயிர் மட்டும் தான் இருக்கு” என்றபடி ஆதித் அருகில் அமர்ந்து, உனக்கு டாக்டர் வினோத் தெரியுமா?” என்று கேட்க

“ம்ம்ம் தெரியும்.. உன்னோட ப்ரண்ட் ராஜியோட அப்பா தானா?” என்க

அவன் உதய் பேரை சொன்னாள் எங்கு தனக்கு கஷ்டமாக இருக்குமோ என்று அவன் பேரை தவிர்த்து, ராஜீயின் அப்பா என்றதும், அவன் தன் மீது வைத்திருக்கும் அன்பை எண்ணி நெகிழ்ந்தவள், “ம்ம்ம் அவரே தான். அவர் பாய்சன்ஸ் பத்தி ஒரு ரீசர்ச் பண்ணிட்டு இருந்தாரு, இப்ப அதை அவரோட ஜுனியர் வருண் கன்டீன்யூ பண்றாரு, அந்த பாய்சன்ஸ் ரொம்ப ஹெவி தெரியுமா? அது மட்டும் சக்சஸ் ஆச்சு… நெறய நோய்க்கு மருந்தாக யூஸ் பண்ணலாமாம். பட் அதை வச்சு டெஸ்ட் பண்ண தான் யாரும் கெடைக்கல, ப்ச்! சோ சேட் ஆதி. அந்த பாய்சனை யார் மேலயாது டெஸ்ட் பண்ண அவங்க கதை அவ்ளோ தான். அனுஅனுவ சாகணும். ஆசிட்ல முக்குனா மாதிரி உள்ளுக்குள்ள உடம்பு எல்லாம் அப்படியே பாத்திட்டு எரியும், கண்ணு தெரியாம போய்டும், காது அவுட், பேசா வராது, கை, கால் சுருங்கி போய்டும்” என்று அவள் அடிக்கொண்டே போக, “ஏய்! ஏய்! நிறுத்து நிறுத்து, நீ சேதுவை என்ன செஞ்சேன்னு எனக்கு புரிஞ்சு போச்சு” என்று அர்த்தமாய் சிரிக்க

“ஏதோ என்னால முடிஞ்ச நல்லா காரியம். நாட்டுக்கு நானும் ஏதாவது செய்யணுமில்ல… ஆனா, அவன் செஞ்சதுக்கு இது கொஞ்சம் கம்மி தான் டா… அந்த நாய் என்கிட்ட மோதி இருந்தா பாவம் பார்த்து ஒரே புல்லட்ல அவனை முடிச்சிருப்பேன். ஆனா, அவன் என் குடும்பத்த தொட்டிருக்க கூடாது” என்றவள் முகம் சட்டென ரௌத்திரமாய் மாறிவிட, கொஞ்ச நேரம் கண்ணை மூடி எதையோ யோசித்தவள், “நீ தூங்கு ஆதி எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு” என்று எழுந்து கொள்ள,

“உனக்கு ப்ரணவ்னா உயிர் இல்ல யுகி? அவனை தூக்கினானால தானா சேதுக்கு இந்த தண்டனை?” என்றவன் குரலில் கதவின் கைப்பிடியை பிடித்தபடி ஒரு நிமிடம் அசையாமல் நின்றவள். இதழ்கள் மெல்லியதாக விரிய, “ம்ம்ம்… ஆமா. ஆனா, ப்ரணவ் மேல மட்டும் இல்ல” என்றவள் திரும்பி அவனை இதமாக பார்க்க, அவள் கண்ணில் அவள் மனது அப்பட்டமாக தெரிந்தது. ஆதித் அவள் கண்ணையே ஆர்வமாக, ஆசையாக பார்ப்பதை கண்டவள் கன்னம் வெட்கத்தில் சிவக்க, அவள் அங்கிருந்து ஓடி விட. அவள் மனதில் தனக்காக இடம் என்னவென்று அவள் சொல்லாமல் சொன்னதைக் கேட்ட அவள் கணவன் உடல் வலி அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது,

“நீ எங்க போற?? என்ன செய்யப் போறேன்னு எனக்கு நல்லா தெரியும் டி. நா எதிர்பாக்குறதும் அதை தான். நீ என்ன செஞ்சாலும் நா உனக்கு துணைய இருப்பேன். இது இன்னைக்கு நீ மனசார உன்னோட புருஷன ஏத்துக்கிட்ட இந்த… உன் ஆதித்தனோட சத்தியம் டி” என்றவன், அவள் வார்த்தையின் இனிமையில் தனிமையாக உறங்கி போனான்.

பரதன் யாரிடமும் எதுவும் பேசாமல் உர்ர் என்று உட்கார்ந்திருக்க, “என்ன கயல்? உங்கப்பா எப்பவும் வந்தவுடனே, ‘எங்க அந்த திமிர் புடிச்சவன்னு’ கேட்டுட்டு தான் மாத்ததையே பேசுவாரு… இன்னைக்கு என்ன வந்து கம்முன்னு உக்காந்திருக்காரு? இது புயலுக்கு முன் அமைதியா?? இல்ல சாம் எதாவது செஞ்சு இவரு அடிச்சு ஓஞ்சு போயிருக்க, புயலுக்கு பின் அமைதியா தெரியலயே? என்ற வெற்றியை முறைத்த கயல், “டேய் தைரியம் இருந்த இத அவர் கிட்ட போய் கேளு இங்க எதுக்கு என் காதை ஏன்? கடிக்கிற??”

வெற்றி, “யாரு உங்கப்பன் கிட்ட? நானு!! அப்படியே பேசிட்டாலும் போடி இவளோ”

“தெரியுது இல்ல அப்ப மூடிட்டு இரு… அந்த பிசாசு தான் வெளிய எதாவது செஞ்சிருக்கும், அது வீட்ல இல்லைனு தெரிஞ்சு தான் அப்பா கம்முன்னு இருக்காரு… அவ வந்ததும் இரண்டு பேரும் நீயா, நானா ஷோ நடத்து வாங்க நம்ம எல்லாரும் வேடிக்கை பாப்போம். இப்ப நீ சும்மா இரு” என்றதும் வெற்றி வழக்கம் போல வாயை மூடிக்கொண்டான்…

பரதன் முகத்தை பார்த்து யாராலும் எதுவும் புரிந்து கொள்ள முடியாமல் போக? பாட்டி ராம்க்கு கண்ணை காட்ட. அவனும் எனக்கு எதுவும் தெரியாது என்று இதழ் பிதுங்க, ஜீவா, விஷ்ணு, வினய் மூவரும் தங்கள் வீட்டம்மாக்களின் முகம் பார்க்க, மூனும் திருட்டு முழி முழித்துக் கொண்டு வாசலையே பார்த்துக் கொண்டிருக்க, “ரைட்டு! நாலும் சேர்ந்து தான் ஏதோ பண்ணி இருக்குங்க… அதுக்கு பேயோட்ட தான் மாமா வந்திருக்காரு… இவரு இதுங்களை ஓட்டுறாரா? இல்ல அந்த சாம் பிசாசு இவரா ஓட்டப்போகுதன்னு தான் தெரியல” என்று மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, “லெட்ஸ் வெய்ட் ஆன் வாட்ச்” என்று வினய் சொல்ல. அங்கு பின் ட்ராப் சைலென்ஸ்…

நேரமாக ரெக்கை கட்டி பறக்க வீட்டில் உள்ள அனைவரும் பரதனையே தவிப்போடு பார்த்திருக்க, பரதன் வாசலையே பார்த்திருக்க, அவர் பார்வையில் தீடிரென மின்னல் கீற்று போல் வெளிச்சம் தோன்றி மறைய, அனைவரும் திரும்பி வாசலைப் பார்க்க அங்கிருந்தவர்களின் மொத்த கண்களில் தெரிந்த வெளிச்சத்தில் அந்த வீடே சூரிய மண்டலம் ஜொலித்தது.

அடங்காத கூந்தலை அள்ளி அழகாய் கொண்டை போட்டு, சிறிதும் மேக்கப் இல்லாத முகத்தில் சின்னதாக சிவப்பு நிற பொட்டு மட்டும் நடு நெற்றி மையத்தில் இருக்க, இடது கையில் வாட்ச்சும், காலில் காக்கி ஷூ வும் போட்டு, அடங்காத ஜல்லிக்கட்டு காளை பெண்ணாக பிறந்தது போல் காக்கி சட்டையில் மிடுக்காக நடந்து வந்தவளை பார்த்து அவள் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் மிதக்க!!! பரதன் தான் மகிழ்ச்சியை தன் கோவம் என்ற பொய் போர்வைக்குள் ஒளித்து வைக்க பெரும் பாடு பட்டுக் கொண்டிருந்தார்.

யுக்தா கம்பீரமாக நடந்து வந்தவள். கொஞ்சமும் அசராமல் புருவம் உயர்த்தி பரதனை பார்த்து, “இது வீடு, உங்களுக்கு நா சல்யூட் வைக்க வேணாம்னு நெனைக்குறேன். ஐ ஆம் மிஸஸ். சம்யுக்தா ஆதித்தன்.. அசிஸ்டென்ட் கமிஷ்னர், ஸ்பெஷல் ரெக்யுட்” என்று திமிராக சொன்னவள், “இப்ப அந்த கேஸ் ஃபைல்ஸ் எல்லாம் குடுக்குறீங்கல மிஸ்டர் கமிஷ்னர் சார்? பிகாஸ் நா இப்ப வெறும் போலிஸ்காரன் பொண்டாட்டி மட்டும் இல்ல, இந்த கேஸ்காகவே திரும்ப, திரும்பி வந்திருக்க சம்யுக்தா ஐபிஎஸ்” என்று மிடுக்காக சொன்னவள் தன் கையை நீட்ட, பரதன் அவளை முறைப்பது போல் நடித்துக்கொண்டே கேஸ் ஃபைல் அனைத்தையும் அவள் கையில் தினிக்க, “தட்ஸ் குட் மைடியர்” என்று பரதன் கன்னத்தை கிள்ளியவள், “வர்ட்டா மாமா” என்று கண்ணடித்து விட்டு நகர, “ஏய் உன்னா” என்று பரதன் அவளை பிடிக்கும் முன் அங்கிருந்து ஓடி இருந்தாள்.

பாட்டி கண்ணில் கண்ணீர் நிற்கவே இல்லை, எத்தனை நாள் ஆசை!! அவளை காக்கிச்சட்டையில் பார்த்து குடும்பம் மொத்தமும் ஆனந்த கண்ணீரில் நனைய, பரதன் மட்டும் ஏதோ போல் இருந்தார்.

“என்ன பரத? நீ ஏன் ஒரு மாதிரி இருக்க? உன்னோட, எங்ளோட எவ்வளவு நாள் ஆசை இப்ப நடந்திருக்கு, ஆனா, உன் முகம் சரியவே இல்லயே? ஏன்? அவ மறுபடி போலிஸ்ல சேர்ந்தது உனக்கு புடிகலயா” என்று சிவகாமி கேட்க.

“அவ மறுபடி யூனிபார்ம் போட்டதுல என்னைவிட வேற யாருக்கு ம்மா சந்தோஷம் இருக்க முடியும். ஆனா, இந்த கேஸ் அவளுக்கு வேணாம் ம்மா. எனக்கு மனசுக்கு சரிய படால.. அதனால தான் அவளை இதுல இருந்து தள்ளி வச்சேன். ஆனா, அவ ஹோம் மினிஸ்டர் கிட்ட பேசி போஸ்டிங் வாங்கி இந்த கேஸ்சை டேக்கோவர் பண்ணிட்ட” என்க,

“ஏன் மாமா?? இந்த கேஸ்க்கு என்ன?? அப்படி என்ன பெரிய கேஸ் இது.. இத விட அவ எவ்ளோ ரிஸ்க்கான கேஸ்ல எல்லாம் இருந்தப்போ கூட நீங்க இப்படி சொன்னதில்லயே?? இப்ப என்ன வந்துச்சு??” என்று வெற்றி புரியாமல் கேட்க,

“ஏன்னா இந்த கேஸ் என்னடோ இறந்தகாலத்தோட, இறந்து போன உதய்பிரதாப் போட, ப்ரணவ் கூட கனெக்ட் ஆகி இருக்கு வெற்றிண்ணா, அதான் மாமா தயங்குறாரு” என்ற யுக்தா வார்த்தையில் அனைவருமே குழம்பி நிற்க,

யுக்தா இழுந்து மூச்சு விட்டவள், “ஆமா… ப்ரணவ் கடத்தலோட டார்கெட் ஆதி இல்ல… முதல் டார்கெட் ப்ரணவ், அடுத்து நான்… என்னை கொன்னுட்டு ப்ரணவ்வை தூக்கத் தான் இதெல்லாம் நடக்குது, அதனால தானே என்னை இந்த கேஸ்சை விட்டு தள்ளி வச்சீங்க?” என்ற யுக்தாவின் கேள்வியில் பரதன் அதிர்ந்து நிற்க, மீண்டும் அந்த வீட்டில் ஒலித்த உதய்யின் பெயர், யுக்தா உயிருக்கு ஆபத்து என்ற செய்தி… அந்த மொத்த வீட்டையும் பதறி வைத்தது.

யுக்தா மெதுவாக பரதன் அருகில் வந்தவள் அவர் காலுக்கு கீழே உட்கார்ந்து அவரை ஆழமாக ஒரு பார்வை பார்த்தவள், “நா அந்த நாய் உதய்யை மறக்க முடியாம ஓடிப் போல மாமா, அவன் செத்த அடுத்த நிமிஷமே எல்லாமே முடிஞ்சு போசு. இனிமே எதுவுமே இல்லனு நா முடிவு பண்ணிட்டேன். என்னை பொறுத்தவரை உதய் ஒரு அக்யூஸ்ட் அவ்ளோ தான்,
நடந்த கசப்பான விஷயங்களை மென்னு முழுங்கி தொலைக்க எனக்கு டைம் தேவைப் பட்டுச்சு. அதான் தனிய போனேனே தவிர, அந்த பொறுக்கி உதய்க்காக இல்ல… அதான் இப்ப எல்லாரும் சேர்ந்து ஒரு மிட்டாய் கடையையே என் தலையில கட்டி வச்சு கசப்பை முறிச்சிட்டீங்களே… அப்றம் என்ன?? அப்ப நான் வெறும் சம்யுக்தா. ஆனா, இப்ப நான் மிஸஸ் சம்யுக்தா ஆதித்தன். ஆதித்தன் பொண்டாட்டி, இந்த கமிஷ்னர் பரதனோட மருமக. எனக்கு வேற எதை பத்தியும் அக்கறை இல்ல மாமா, என் குடும்பம், எம் புருஷன், என் ஃப்ரண்ஸ், என் பையனை தவிர” என்றவள் பரதன் கையை அழுத்த, அதில் அவள் மனவுறுதியை உணர்ந்த பரதன், எங்கு இந்த கேஸ் யுக்தாவின் பழைய காயத்தை கிளறி விடுமோ என்று பயந்து தான் பரதன் தயங்கினார். ஆனா, இப்போது யுக்தா பேச்சில் கவலை மறைய, “சீக்கிரம் இந்த கேஸ்ச முடிச்சிட்டு வந்து சேரு.. நெறய கேஸ் பென்டிங்ல இருக்கு” என்க,

“தோ பாரு டா!!! அதெல்லாம் முடியாது, நா இந்த கேஸ்சை முடிச்சிட்டு மறுபடி டெல்லிக்கு போறேன்” என்று முறுக்கிக்கொள்ள,

“யாரு நீ?? போடி போடி, சும்மா காமெடி பண்ணிட்டு, நீயாது உம் புருஷனை விட்டு போறாதாது, போடி போய் கேஸ்ல உன்கிட்ட சிக்கி இருக்க ஆட்டை எப்டி குழம்பு வைக்குறதுன்னு யோசி டி, ஆதி உன்னை இந்த டிரெஸ்ல பாத்த ரொம்ப சந்தோஷப்படுவான் சீக்கிரம் போ” என்று பாட்டி விரட்ட,

யுக்தா ஆதி ரூம்க்கு போனாள். அவளை முதல் முதலில் புடவையில் பார்த்தப் போது எப்படி மயங்கி நின்றனோ அதைவிட இப்போது காக்கி சட்டையில் பார்த்து கிறங்கி விழுந்தே விட்டான் ஆதித்!! கண்களால் அவளை தன் அருகில் அழைத்தவன், “செம்ம அழகா இருக்கடி, சன்ஸ்சே இல்ல, சுப்பரா இருக்க திமிரழகி” என்றவனை இயல்பாக பார்த்தவள், “இது உனக்கு பெரிய சர்ப்ரைஸ் இல்ல இல்ல டா?? நா இதை தான் செய்வேன் உனக்கு நல்லா தெரியுமில்ல?? என்றவளை பார்த்து அழகாய் சிரித்தவன், “நீ வாய் திறந்து பேச வேணாம் டி?? உன் ஒரு பார்வை போது உன்னோட எண்ணத்தை நா படிக்க, எம் பொண்டாட்டிய‌ பத்தி எனக்கு தெரியும் டி!!” என்றவனை காதலாக பார்த்தவள், மனைவியாக அவனை அணைக்கும் ஆசை உள்ளுக்குள் எழுந்தாலும், ஏதோ தயக்கம் அவளை தடுக்க அங்கிருந்து எழுந்து கொள்ள, ஆதித் சட்டென அவள் கையை பிடித்து இழுத்தவன் அவள் கன்னத்தில் இதழ் பதித்து, “நீ நெனச்ச நா செஞ்சுட்டேன் பாத்திய?” என்று கண்ணடிக்க., “நா ஒன்னு கிஸ் பண்ண நெனைக்கல!! ஹாக் பண்ண தான் நெனச்சேன்” என்றவள் சட்டென நாக்கை கடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட. ஆதித் வாய்விட்டு சிரித்தவன், “சீக்கிரம் கேஸ்சை முடிச்சிட்டு வாடி, உம் புருஷன் உனக்கு ஹாக் மட்டும் இல்ல!! அது கூடவே ஒரு அழகான குட்டி பாப்பாவும் குடுக்கவும் வெய்ட்டிங்க” என்று கத்தியவன் நிம்மதியாக உறங்க விட, அன்றில் இருந்து கேஸ்சுக்காக அலைந்த யுக்தாவின் பொழுதுகள் அனைத்தும் உறக்கம் ‌தொலைந்த நாட்களாகிப் போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!