பூவை வண்டு கொள்ளையடித்தால்

பூவை வண்டு கொள்ளையடித்தால்

கொள்ளை 26

 

 

முகத்தைத் தீவிரமாக வைத்துக் கொண்டு விஷ்ணு சொல்ல போகும் அந்த விடுதலை வீரர் யாரென்று அறிய ஆவலோடு அமர்ந்திருந்தது மொத்த குடும்பமும்… 

நமக்கெல்லாம் விடுதலை வீரர்கள் சொன்னால் முதல்ல ஞாபகம் வருவது காந்திஜி,  நேதாஜி , நேருஜி,…. ஆனா அதுக்கு முன்னாடியே சில வீரர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போராடிருக்காங்க… அதுவும் நம்ம தமிழ் நாட்டுல நிறைய வீரர்களும் விடுதலைக்காகப் போராடி இருக்காங்க.. அதுல பெண் வீராங்கனைகளும் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன், புலித்தேவன் இன்னும் நிறைய.. ஆனா இவங்க வருவதற்கு முன்னாடியே.. ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டமாட்டேன்  எதிர்த்து நின்ற வீரர் தான் அழகு முத்து கோன். 
இவரைப் பற்றி வரலாற்றுல அதிகம் பேசப் படல… இன்னும் சிலருக்கு இவரைப் பற்றி தெரியாது.. 

இது வரைக்கும் யாருமே இந்த வேசத்தைப் போட்டுருக்க மாட்டாங்க..  அவரைப் போல  நாம கபிக்கு வேசம் போடலாம்.. 
அவரைப் பத்தி நான் சொல்லுறேன்.  அதை நீ அங்க சொல்லு… ஷார்ட் அண்ட் ஸ்வீட் சொல்லுறோம் என்ன ஓ.கே வா கபி. ” என்றதும் அனைவரும் முழித்தனர்.. 

” என்ன விஷ்ணு சொல்லுற? அவர் யாருன்னு நீ சொல்லித் தான் தெரியுது எனக்கு. அவர போல வேசம் போட்டு அங்க போய் சொன்னா இவனுக்கு எப்படி பிரைஸ் கிடைக்கும். அங்க இருக்கிற ஜட்ஜெஸ்க்கு எப்படி அவரைப் தெரியும்? அவர் பாட்டுக்கு இவன போட்டில சேர்க்காம போயிட்டா! ” நிவி பதறிய படிக் கேட்க.

” அக்கா, எப்ப பாரு இவங்கள பத்தி தான் வேசம் போடுறோம் பேசுறோம். சுதந்திர தின விழா  குடியரசு தின விழா  வந்தா போதும் இந்த நாலு தலைவர் வேசம் போட்டு அவங்க செஞ்ச தியாகங்களைச் சொல்லி மிட்டாய் சாப்பிட்டு வர வேண்டியது..  இல்ல இவங்க மட்டும் தான்  விடுதலை வீரர்களா? வேற யாரும் இல்லையா… எப்ப பாரு இவங்கள பத்தியே பேசிட்டு…  இந்திய நாட்டுக்காக எல்லாரும் தான் போராடினாங்க இல்லேன்னு சொல்லல. அதுக்காக நம்ம ஊரையும் ஊர்த் தலைவர்களையும் விட்டுத் தர முடியுமா?! அவங்க அவங்க ஊர்ல பிறந்த விடுதலை வீரரைப் பெருமையா சொல்லும்  போது நம்மூர் வீரர்களின் பெருமையை நாம் ஏன் பேசக் கூடாது? வீரம் பொறந்த மண்ணுக்கா நம்ம தமிழ்நாடு. எப்பயும் எங்கயும் விட்டுக் கொடுக்க கூடாது… போட்டில ஜெய்கிறானோ இல்லையோ கலந்துகிறது தான் முக்கியம். நாம தமிழர்கள் தமிழ் வீரர்களைப் பற்றி வேசம் போடுவோம் பேசுவோம். நம்ம   வீரர்களைப்  பற்றியும் அவங்க தெரிஞ்சுகிறது ல தப்பில்ல. வீரர் அழகுமுத்து கோன் அய்யா போல வேசம் போட்டு அவரைப் பத்தி  சொல்லிக் கொடுத்தா கபி சொல்லிடுவான்… ” 

” அவர் யாரு மா? எந்த ஊர்க்காரர்? அவரைப்  பத்தி கேள்வி பட்டதே இல்லையே..” ஆதி கேட்க, அனைவரும் கேட்க தயாரானார்கள்.

தென்னிந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதல் சுதந்திர போராளியாக இருந்தவர் மாவீரர் அழகுமுத்துக் கோன் 1710-1759 . அவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தார். அவர் எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக பணியாற்றினார். பிரிட்டிஷ் மற்றும் மருதநாயகம் படைகளுக்கு எதிரான போரில் தோற்கடிக்கப்பட்டார் . தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை, அவரது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி, பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது.  அவரது ஆறு துணைத் தளபதிகளும் 248 வீரர்களும் நிறுத்தப்பட்டார்கள். தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார் என்ற அழகுமுத்துக் கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது. ஆத்திரம் கொண்டது இருநூற்று நாற்பத்தெட்டு வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் மூன்று தளபதிகளையும் வலப்பக்கம் மூன்று தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக்கோனையும் நிறுத்தினார்கள்.மாவீரன் அழகுமுத்துக் கோன் 1759 இல் பீரங்கியின் மூலம் கொல்லப்பட்டார். பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை. . இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் வீரன் அழகுமுத்துக்கோன். தாய்மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட வீரனைத் தந்து, தமிழ் சமூகம் பெருமை தேடிக் கொண்டது.
 
என்றவள் சொல்லி முடிக்க கரகோசம் தான். ” எப்படி தாத்தா நான் சொன்னது சரி தானே. என்ன இருந்தாலும் நம்மூர் வீரர்கள் போல வருமா. வெளி ஊர்ல இருந்தாலும் ஏன் சொர்க்கமாவே  இருந்தாலும் நம்ம நாடு போல வருமா? “வைகுண்டதத்தைப் பார்த்து கேட்டாள்.. 

அவளை அருகினில்  அழைத்தார். அவர் காலடியில் அமர்ந்தாள்.. 
” என்ன தாத்தா? “

அவளது தலையை மெல்ல வருடியவர்.. ” இங்க நான் பிழைப்புக்காகத் தான் வந்தேன்.. எனக்கு ஒரு வாழ்க்கை கெடச்சுருக்கு. ஆனாலும் ஒரு கவலை இருக்கு சொந்த ஊரை விட்டு இங்க வாழ்றதை நினைச்சு… எல்லாம் இருந்தும் சொந்த ஊர்ல இல்லைன்ற போது வருத்தம் வரத்தான் செய்து.. என் பிள்ளைகளுக்குத் தமிழ் மறந்து போயிடக் கூடாது தமிழையும் படிக்கச் சொன்னேன். தமிழ்ல தான் பேசணும் சொன்னேன்.. தமிழ் கலாச்சாரத்தை மறந்திடக் கூடாது. தேடி அலைந்து தமிழ் பொண்ணைப் பார்த்து என் மூத்த பையனுக்கும் என் பொண்ணுக்கும் தமிழ் பையனையை கட்டிவச்சேன். லட்சுமணனும் என் மருமகளைத் தன் கட்டிட்டு வந்துருக்கான்.. ஆதி, மயூ , மது எல்லாருக்குமே அப்படித்தான்.. இடம் மாறி தான்  வாழ்றோம நம்ம குணம் மாறி இல்ல.. அது போல தான். வேற ஊற இருந்தாலும் நம்ம பார்த்து வளர்ந்த கலாச்சாரத்தை மாத்தவே முடியாது. நீ சொன்னது சரி தான்.. நீ பேசும் போது எனக்கே புல்லரிச்சிடுச்சு… நல்லா இரு” ஆசிர்வாதம் செய்தார்… 
 அதைக்  கண்ட முத்துவின் மனம் நிறைந்தது. 

” டேய் தம்பி, உன் பொண்டாட்டி ரொம்ப தெளிவா இருக்கா டா. எப்படி சமாளிக்கிற? நிவியவே  அப்ப அப்ப அடக்கிறதுக்குள்ள போதும் போதும் ஆகிடும்…  இதுல இவள கன்ட்ரோல் பண்றது ரொம்ப கஷ்டமாச்சே! ” அவன் காதுக்குள் கடிந்திட.. 

‘ அவ தெளிவா மட்டுமா இருக்கா போல்டாவும்  தான் இருக்கா. அவள எங்க நான் கன்ட்ரோல் பண்றேன். என்னை தான் அவ கன்ட்ரோல் வச்சிருக்கா!’  அவளை ரசனையோடு பார்த்து எண்ணிக் கொண்டான்.

“ப்ரோ, என்ன கேட்டதுக்குப் பதில காணோம்? என்ன உன் பொண்டாட்டியோட டூயட் ட்ரீம்ஸ்ஸா… ” அவனை இடிக்க

” ஆதி ப்ரோ, போன ஜென்மம் புண்ணியமோ.. விஷ்ணு எனக்கு மனைவியா கிடைச்சிருக்கா. அவ எங்கிட்ட ஆட்டிட்டுட் காட்டினாலும் நான் ரசிப்பேன்.. அவளை சமாளிக்கிறது ஈசி. அதுக்கு எங்கிட்ட சில டெக்னிக் இருக்கு அதை யூஸ் பண்ண போதும் சீ ஸ் இன் மை கண்ட்ரோல்” 

” கல்யாணம் ஆகி ஒரு மாசம் தானே ஆகிருக்கு நீ புண்ணியம் அது இது தான் பேசுவ. போகப்போக பாரு புண்ணியம் பாவமா  மாறுதா இல்லையான்னு. இப்பதைக்கு, யூ நாட் பிட் போர் ஹஸ்பண்ட் சங்கம் ” என்றான். சிரித்துக்கு கொண்டான் மயூரன்.
 
இரவு உணவு முடிய இருவரும் அறைக்கு வந்தனர்… மயூ வழக்கம் போல சோபாவில் உறங்க.. மெத்தையில் அமர்ந்துவாறு அவனையே பார்த்திருந்தாள் விஷ்ணு..

“என்ன விஷ்ணு என் முகத்தையே பார்த்துட்டு இருக்க? தூங்கணும் எண்ணம் இல்லையா?  
இல்ல என் முகத்தைப் பார்த்தா தான் உனக்கும் தூக்கம் வருமா?” நக்கலாக சிரித்த படியே கேட்டான்.

” மயூ, நீ சோபால படுக்க வேணாம் மெத்தையில் வந்து படு.. நாம ஷேர் பண்ணிக்கலாம். எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. நீ இங்கயே படு ” மெத்தையைக் காட்டி அவனை அழைக்க

‘தான் கேட்டது உண்மை தானா ? இல்லை கனவா?’ தன்னைத் தானே கிள்ளிக் கொண்டான்.. 

” விஷ்ணு, நீ நார்மலா தானே இருக்கா. உனக்கு எதுவும் ஆகலையே !” சந்தேகமாய் கெட்டவனை முறைத்தவள்

” தினமும் காலைச் சுருட்டி படுத்திருக்க  உன்னால திரும்பி கூட படுக்க முடியல. எனக்காக நீ ரொம்ப கஷ்ட படுற. அதான் அதுல படுக வேணாம் சொல்லுறேன் ” 

காலை சுருட்டிக் கொண்டு தான் தினமும் தூங்குவான். ஒரு பாங்கை தான் அவனால் படுக்க முடியும். திரும்பிப் படுத்தால் தூக்கம் கலைந்து விடும்.. சில நேரம் ஒரு பக்கமே நமத்து போய்விடும்.. இப்படியாக அவனது இரவின் உறக்கம் இருக்க.. இடையில் எழும் போதெல்லாம் பார்த்து வருத்தப்படுவாள்.. 

“ம்ம்ம்… இப்ப தான் நான் கஷ்ட படுறது  தெரியுதாமா உனக்கு. இதுக்கு முன்னாடி இந்த பரிதாபம் எங்க போச்சு?” அவளைப் பார்த்து அமர்ந்தவாறு கேட்டான்.

” பச்… நீ கஷ்ட படுறத பார்த்துருக்கேன். ஆனா சொல்ல தயக்கம் ” தலை குனிந்தவாறு கூறினாள்..

” ஆஹான்… இப்ப மட்டும் எங்க போச்சு அந்தத் தயக்கம்?” 

“ப்ச்… இப்ப என்ன உனக்கு? பாவமே பையன் கஷ்ட படுறானே பாவம் பார்த்து உனக்கு ஒரு ஆஃபர் கொடுத்தா கேள்வியா கேட்டுட்டு இருக்க. ஆஃபர் டைம் முடிய போகுது வந்தா வா இல்லேன்னா போடா ” மெத்தையில் படுத்துக் கொண்டாள்.. 

‘ என்ன ஒரு மாற்றம்? என்ன ஒரு மரியாதை… புருசன்னா இல்லாத போதே  மரியாதை பலமா இருக்கே. புருஷனாகிட்டா? மரியாதை என்ற வார்த்தையை அழிச்சுடுடிவா போல. இனி சூடு சொரணை எல்லாத்தையும் மறைந்திடு மயூரா’  தலையணையை எடுத்துக்குக் கொண்டு அந்தப் பக்கமாக படுத்துக் கொண்டான். இருவர்  நடுவிலும் இடைவெளி நிறையவே இருந்தது…
அவளோ சிறு சிறு தலையணையை நடுவில் வைக்க அவனோ ஒற்றைப் புருவம் உயர்த்தி முறைத்தவன். ” என் மேல் நம்பிக்கை இருக்கிறது என்று சற்று முன் கூறிய தங்களா இவ்வாறு செய்வது விஷ்ணு தேவியாரே! “

” உங்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது மயூரா! ஆனால் பாருங்கள் என் மேல் தான் எனக்கில்லை.. உங்களை வரச்சொல்லிவிட்டு பின் இன்னல்களைக் கொடுத்தால் நல்லாவா இருக்கும். சொல்லுங்கள் நாதா! ” கையை வாய் அருகே வைத்து கேட்க.. சிரித்து விட்டான் உடன் அவளும்  சிரித்தாள். நைட் இங்க படுகிறவ காலை  பார்த்தா அங்கப் படுத்துருப்பேன். அதான் இந்த சீன பெருஞ்சுவர்… குட் நைட் மயூ.. “
 
” குட் நைட் விஷ்ணு ஸ்வீட் ட்ரீம்ஸ்” என்றான். அவள் கண் மூடி உறங்க.. அவளையே பார்த்திருந்தான்.

இடைவெளிக்
குறைந்து
உன்னை
இறுக்கி
அணைகிற
நாட்களுக்காய்
காத்திருக்கிறேன் டி
காதலோடு…

வாய் மொழித்
தாண்டி
உன் விழிமொழியை
ரசிக்க
உதடுகள்
பேசாத
உன் மௌனமொழியோடு
என் இதழ்
முத்தமொழியில்
பேசுமடி!
 அவளை ரசித்தவனின் விழிகள் உறக்கத்தை தழுவியது..

கதிரவன் கண் விழிக்க, இருளாகன்று வெளிச்சத்தைக் கொடுத்தது…  விஷ்ணுவும் தன் பணியினைச்  செய்ய ஆரம்பித்தாள். உறவுகளோடு ஒன்றிப் போனாள். வலி உள்ளே இருந்தாலும் வெளியே காட்டாது சிறப்பாய் நடித்தாள்.. 

அவளது வலியை அறிந்தவர்கள் நால்வர் மட்டுமே… அவளது நடிப்பைக் கண்டு வருந்தினர். 

ஊருக்குச் செல்லாமல் மகளை எண்ணி இங்கயே இருந்தார் பலராமன். லட்சுமணனுக்கும் முத்துவிற்கும் இதில் வருத்தம் இருந்தது… 

மயூரனிடம் இதைப் பற்றி பேசினார் முத்து.. அவன் வேலைக்குச் செல்ல தயாராகி வந்தவன் சாப்பிட அமர்ந்தான். 

” மயூ, உன்கிட்ட விஷ்ணு எதுவும் சொன்னாளா?” அவனுக்கு உணவைப் பரிமாறிய படியே கேட்டார், ” விஷ்ணுவா எதுவும் சொல்லலமா.. ஏன் கேக்கிறீங்க?” 

” இல்ல மயூ, அண்ணா இங்க வந்து ரொம்ப நாளாச்சு. அவர், விஷ்ணு ஏன் மேல  கோபமா இருக்காளா? என்னை மன்னிக்க மாட்டாளா?  புலம்புறார். அவ மன்னிக்காம இங்க இருந்து போக மாட்டேன் இருக்கார். விஷ்ணு உன் கிட்ட அவரைப்  பத்தி சொன்னாளா? இன்னும் கோபமா தான் இருக்காளா? எப்படியாவது அவளை அண்ணனோடு சேர்த்து வை மயூ. என்னால  என் அண்ணே கஷ்ட படுறத பார்க்க முடியலடா… ”  பலராமனை எண்ணி வருத்தம் கொண்டார்.

” மா.. நீங்க பீல் பண்ணாதீங்க மா விஷ்ணுவை மாமா கூட சேர்த்து வைக்கிறது என் கடமை.. ” சாப்பிட்டு எழுந்தவன்.. தன் அறைக்குச் சென்றான்.. 
அங்கே அவள் வானை வெறித்து பார்த்து அமர்ந்து இருந்தாள். 

” விஷ்ணு, சீக்கிரமா கிளம்பு வெளிய போலாம்… ” மயூரன் அழைக்க.. 
அவனை வித்தியாசமாகப் பார்த்தாள். அவனும் புருவத்தை உயர்த்தி என்ன என்று கேட்டான்..

” உனக்கு வேலைக்குப் போகணும் எண்ணமே இல்லையா? ஏதோ வருண் டெத் அப்றம் அந்த ஷ்பனா கேஸ்ல ஹெல்ப் பண்ணிருக்க. அதுக்காக  ரிவார்ட் கொடுத்து நீ ஆஃபீஸ்கே வர வேணாம் வீட்டுல இருந்து வேலைப் பார்க்கச் சொல்லிட்டாங்களா? இல்ல அய்யோ  ராசா நீ பண்ண காரியத்துக்கு வேலைக்கே வர வேணாம் சொல்லிட்டாங்களா? எப்பா பாரு என்னைய வெளிய கூட்டிப் போயிட்டே இருக்க? உனக்கு வேலையே இல்லையா? “

” என் பேச மாட்டிங்க,   ஏதோ மேடம் இங்க இருந்து மூச்சு முட்ட நடிக்கிறாங்ளே! அவங்களை ரிலாக்ஸ் பண்ணி விடலாமே கேட்டா. நீங்க பேசுவிங்க விஷ்ணு மேடம்..” என்றதும் அமைதியின் திருவுருவமாய் நின்றாள் விஷ்ணு.. 

” என் கூட வா ” அவளை அழைத்துச் சென்றவன் பலராமனிடம் தான் நிறுத்தினான். 
இருவரும் தயங்கி இருக்க மாலையில்  அழைத்துக் கொள்ளவதாகக் கூறி அவளை அங்கே விட்டுச் சென்றான்.. 

மாலையில் வேலை முடிய வீட்டிற்குச் செல்ல எத்தனித்த மயூரனின் போன் ஒலித்தது. அதனை எடுத்து பேச. அங்கு என்ன கூற பட்டதோ  அதிர்ந்தவன் அப்படியே  அமர்ந்து விட்டான்…..

கொள்ளை தொடரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!