அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள் 30

ராம் குழப்பமாக யுக்தாவை பார்த்தபடி இருக்க.. வினய் பொறுமை இழந்தவன், “ஏய் சாம், என்ன‌ இதெல்லாம்?? உதய்க்காகத் தான் இதெல்லாம் நடக்குதுன்னு நீ எப்டி சொல்ற?? இதுல ப்ரணவ் எங்கிருந்து வந்தான்?? உன்னைக் கொல்ல யாரு நெனக்குற?? அந்த சேது, ஆதிகிட்ட இருந்த பகையில தானே ப்ரணவ்வை கடத்துனான்?? அப்ப அதுக்கு என்ன அர்த்தம்??”

“சிம்பிள் டா அண்ணா, அந்த சேது ஆதித்தை டார்கெட் பண்ணி இருந்தால், அன்னைக்கு ப்ரணவ்வை கடத்தினா விஷயத்தை ஆதிக்கு தான் ஃபோன் பண்ணி சொல்லி மிரட்டி இருப்பானே தவிர… எனக்கில்ல, அன்னைக்குக் கால் வந்தது எனக்கு, சோ… மெயின் டார்கெட் ஆதிய இருக்க வாய்பில்லன்னு எனக்கு அன்னைக்கே புரிஞ்சு போச்சு, அதோட அன்னைக்கு என்கிட்ட ஃபோன்ல பேசுனுது சேது இல்ல, பேசுனா விஷயம் வேறய இருந்தாலும் அந்தக் குரல்ல என் மேல இருந்த கோவத்தையும், வெறுப்பையும், வன்மத்தையும என்னால இப்பவும் உணர முடியுது. அப்ப இருந்த டென்ஷன்ல அதைப் பத்தி என்னால யோசிக்க முடியல. அதோட அன்னைக்கு அந்த சேது ஒரு வார்த்தை சொன்னான். ப்ரணவ்வை ஒன்னும் செய்யமாட்டேன்னு குடுத்த வாக்கை கூடப் பாக்கமாட்டேன், குழந்தையைக் கொன்னுடுவேன்னு, அவன் யாருக்கு வாக்கு கொடுத்திருப்பான்?? ப்ரணவ் மேல யாருக்கு அவ்ளோ அக்கறை?? அந்த சேது ஆதியை ப்ளாக்மெயில் செய்ய நெனச்சது உண்மை தான், ஆன முழு உண்மை அது இல்ல, சேது ஒரு டம்மி டப்பாசு, அவனுக்கு ஆதி கூட மோதுற அளவுக்கெல்லாம் தைரியம் இல்லை, ப்ரணவ்வை கடத்தினது வேற ஆள், அவங்களுக்கு ப்ரணவ் ரொம்ப முக்கியம். அவன் கூட இந்த நாய் கூட்டாணி வச்சு, இந்தக் கடத்தல அவனுக்கு ஃபேவர்ரா யூஸ் பண்ண நெனச்சிருக்கான் அவ்ளோதான்” என்ற யுக்தாவை வினய் புரியாமல் பார்க்க,

“ஆமா வினய்.. நீயே யோச்சு பாரு?? எனக்கும் ப்ரணவ்வுக்கும் நடுவுல இருக்கப் பாண்டிங் சேதுக்கு எப்டி தெரிஞ்சுது?? எனக்கும் யுகிக்கும் கல்யாணம் நடந்ததே இங்க நெறய பேருக்கு தெரியாதே… அப்படி இருக்க என்னையும் ப்ரணவ்வையும் பத்தி நம்ம வீட்டை தாண்டி வெளிய யாருக்கும் தெரிய வாய்ப்பே இல்ல, அதுவும் இந்த லாக்டவுன் ல நா அவனை வெளிய கூட எங்கயும் கூட்டிட்டு போகலயே?? அப்ப எப்டி இது நடந்திருக்கும் கொஞ்சம் யோச்சி பாரு” என்ற ஆதித் வார்த்தையில் இருந்த உண்மை அனைவருக்கும் புரிய,

“ஆமா ஆதி நீ சொல்றது கரெக்ட் தான். நம்ம வீட்ட தாண்டி உங்க ரெண்டு பேர் பத்தி வெளிய யாருக்கும் தெரியதே.. அப்போ இது எப்டி?? நம்ம வீட்டு ஆளுங்களை தாண்டி” என்று யோசித்த வினய், டக்கென ஏதோ ஞாபகம் வர, “உதய்யோட அப்பா, அம்மா அவங்களுக்குத் தெரியுமே!!”

யுக்தா, “எக்சேக்ட்லி டா அண்ணா!! உதய்யோட அப்பா, அம்மாவோ தான்”

வினய், “அப்ப ப்ரணவ்வை கடத்தினது அவங்களா சாம்??” என்று வினய் பதற,

“இல்ல வினய், அவங்க இல்ல, அவங்க அப்படிப்பட்டவங்க இல்ல, ஐ நோ தெம் வெரி வெல், உதய் பத்தி தெரிஞ்ச அடுத்த நிமிஷம் அவன் எங்க புள்ளையே இல்லன்னு சொல்லிட்டாங்க‌‌, அவனோட டெட்பாடியை கூட அவங்க வாங்க வரால. அவங்க ஒன்னு செய்யல டா”

“அப்ப யாரு தான் இதெல்லாம் செஞ்சது?” என்று ராம் கேட்க,

“எனக்கும் இதே டவுட் வந்தது பாஸ்.‌ அதான் நா ஹாஸ்பிடலில இருக்கும் போதே சித்தப்பா கிட்ட இதை விசாரிக்கச் சொன்னேன்” என்று ஆதி சொல்ல,
அனைவரும் பரதனை பார்க்க, “ஏன் எல்லாரும் என்னைப் பாக்குறீங்க.. நா விசாரிக்கும் முன்னையே இவ எல்லாத்தையும் கண்டு புடிச்சிட்டா அவளையே கேளுக்க” என்று யுக்தாவை கைகாட்ட,

“ம்க்கும்!! நா என்ன செஞ்சேன்?? ஹாஸ்பிடல்ல இருந்தபடியே உங்க அருமை புள்ளை பாதி வேலையை முடிச்சிட்டான்.. அவனையே கேளுங்க” என்று யுக்தா ஆதியை முறைக்க,

“அய்யோ யாராது சொல்லி தொலைங்களேன்” என்று வினய் தலையில் கை வைக்க,

“ஆதி அண்ணா என்கிட்ட உதய் அப்பா, அம்மாகிட்ட விசாரிக்கச் சொல்லி சொல்லி இருந்தாங்க” என்ற நிஷாவை வினய் உற்று பார்க்க, அவள் வேறு பக்கம் தலையைத் திருப்பியவள், “அண்ணா தான் யார்கிட்டேயும் இதைச் சொல்ல வேணாம்னு சொன்னாரு”

“அப்ப நீ சாம்கிட்ட கூட இதபத்தி சொல்லலிய??” என்ற வினய்யை அசடுவழிய பார்த்த நிஷா, “அவகிட்ட எப்டி சொல்லாம இருப்பேன்… என்னால தான் எதையும் அவகிட்ட மறைக்கமுடியாதே” என்று அப்பாவியாகச் சொல்ல,‌ “அப்ப நா உனக்கு முக்கியம் இல்லியா டி” என்று மெதுவாக வந்த வினய் குரலில் நிஷா கலங்கிவிட, “சாரி” என்று அவளும் தாழ்ந்த குரலில் சொன்னவள் கண்களால் கெஞ்ச,

“ஹலோ உங்க லவ்ஸ்சை அப்றம் பாருங்க இப்ப விஷயத்துக்கு வாங்க” என்று கத்தினான் ஜீவா,

“நானும், நிஷாவும் உதய் அப்பாகிட்ட விசாரிச்சோம், அப்பதான் ப்ரணவ் கடத்தலுக்கு ஒரு வாரம் முன்னாடி உதய் ப்ரண்டுன்னு சொல்லிட்டு ஒருத்தன் அவங்களைப் பாக்க வந்திருக்கான், ரொம்ப வருஷம் கழிச்சு அவன் அமெரிக்கால இருந்து இந்தியா வந்தானாம், உதய் பத்தி கேள்விப்பட்டு அவங்களைப் பாக்க வந்ததா சொல்லி இருக்கான், அப்படியே பேச்சுவாக்குல இவங்க ப்ரணவ் பத்தி அவன்கிட்ட சொல்லி இருக்காங்க, அதுக்கு அந்த நாய்… அவன் உதய்யோட பையன்.. உங்க பேரன்.. அவன் மேல உங்களுக்குத் தான் முழு உரிமை இருக்க, ஏன் நீங்க குழந்தையை அந்த யுக்தா கிட்ட விட்டு வச்சிருக்கீங்கன்னு கேட்டிருக்கான்… அதுக்கு அவரு ப்ரணவ்வை நம்ம எல்லாரும் நல்லா பாத்துக்குறோம்னு சொல்லி, ஆதித் ப்ரணவ் மேல எவ்வளவு உயிரா இருக்காருன்னும் சொல்லி இருக்காரு, அதுதான் இவ்வளவுக்கும் காரணம்”

ஜீவா, “அப்ப அந்தப் புது ஆள் ப்ரணவ்வை கடத்தி உதய் அப்பா, அம்மாகிட்ட குடுக்க நெனைக்கிறானா??”

“மே பீ ஜீவா.. ஆனா, அது மட்டும் காரணம் இல்ல, அவனுக்கு நா வேணும், என்னோட உயிர் வேணும்”

“ஏய் என்னடி உலர்ர.. ஏன்?? அவன் ஏன் உன்னைக் கொல்லனும்??”

“உதய் சாவுக்குப் பழிவாங்க!! ப்ரணவ்வை காப்பாத்த நானும், ஆதியும் வருவோம்னு தெரிஞ்சு, அங்கயே என் கண் முன்னால ஆதியை கொன்னுட்டு, என்னைத் தூக்க ப்ளான் பண்ணி இருக்காங்க… ஆனா, டிரக்கர் வச்சு நாங்க சீக்கிரம் ப்ரணவ் இருந்த இடத்துக்குப் போய்ட்டானால அவனோட ஃப்ளான் உத்திக்கிச்சு, இதெல்லாம் சேது என்கிட்ட சொன்னது”

“நீ அந்தச் சேதுவை என்ன செஞ்ச டைகர்??” என்ற பரதனை பார்த்துப் புருவம் உயர்த்தியவள்.. இந்த சந்துல சிந்துபாடுற வேலைய, வேற யார்கிட்டயது காட்டுங்க மாமோய்” என்றவளை பரதன் முறைக்க, “ஆனா, எனக்கு ஒன்னு தான் புரியல?? என்னைக் கொல்ல நெனைக்கிறவன்… எதுக்குச் சேது கிட்ட என்னைக் கடத்திட்டு மட்டும்வான்னு சொல்லி இருக்கான்!! என்னால அவனுக்கு ஏதோ காரியம் ஆகனும்னு வேற சொல்லி இருக்கான், அதுதான் என்னன்னு புரியல??”

சிவகாமிபாட்டி, “உன்னால அவனுக்கு ஒரு காரியம் நடக்கனும்னா அது அவன் செத்து அவனுக்கு நடக்குற கடைசிக் காரியமா தான் இருக்கும்… வேற என்ன??”

“அது உண்மை தான் கெழவி.. அது நா அவனைப் பாத்த அடுத்த நிமிஷம் நடக்கும். ஆனா, அவனுக்குத் தேவையானது ஏதோ என்கிட்ட இருக்கு, அது என்னன்னு தான் யோசிக்குறேன். அதோட உதய்க்கும் அவனுக்கும் என்ன கனெக்சன்?? ரெண்டு வருஷம் கழிச்சு இப்ப ஏன் வந்திருக்கான்?? நம்ம ஃபேமிலி பத்தி தெரிஞ்சும்.. எப்டி இவ்ளோ தைரியம் வந்துது?? அது தான் புரியல?? எனீவே நா யூ.எஸ் ல இருக்க என்னோட ப்ரணஸ் கிட்ட உதய் கூட நெருக்கமா இருந்தவாங்களைப் பத்தி டீடெயில்ஸ் கலெக்ட் பண்ண சொல்லி இருக்கேன், பாப்போம் எலி சிக்குதான்னனு??”

“ம்ம்ம்… எது எப்படியோ ப்ரணவ்க்கு ஒரு ஆபத்தும் இல்லாம காப்பத்தியாச்சு.. யாரு இத செய்யுறன்னும் ஓரளவு தெரிஞ்சும் போச்சு, நீங்க எல்லாரும் எப்படியும் அவனைப் புடிச்சிடுவீங்க.. அப்றம் எல்லாம் சரியாகிடும்” என்ற பாட்டியை பார்த்து இல்லை என்று தலையாட்டிய யுக்தா, “பிரச்சனை முடியல பாட்டி… இப்பதான் ஆரம்பிச்சு இருக்கு… மறுபடியும் ப்ரணவ்வை தூக்க கண்டிப்பா அவன் வருவான், நா நெனக்குறது சரியா இருந்தால் அவனுக்கு என் மேல இருக்கிற பகையில என்னைச் சேர்ந்த எல்லாத்தையும் அழிக்க நெனச்ச கூட ஆச்சரியம் இல்ல” என்று ஏதோ போல் சொன்னவள்,

“பாட்டி நா இல்லாட்டி நீ ப்ரணவ்வையும், ஆதியையும் நல்லா பாத்துக்குவ இல்ல??” என்ற யுக்தாவின் வார்த்தையில் மொத்த குடும்பமும் பதறி நிற்க.,

“அடியேய் என்னடி பேசுற நீ.?? போய் வாயா கழுவு டி முதல்ல” என்று சிவகாமி கத்த, “அய்யோ கெழவி!!! நா அப்டி சொல்லல, இந்தக் கேஸ்காக நா அடிக்கடி வெளிய போக வேண்டி இருக்கும்.. ஆதிக்கு உடம்பு சரியில்ல அவனைப் பாத்துக்கோன்னு சொன்னேன்” என்று சமாளித்து விட்டு அங்கிருந்து நகர.. போகும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ஆதித்தன்

யுக்தா எதையே யோசித்துக் கொண்டு கண்மூடி இருக்க, “ஏன்டி அப்டி சொன்ன??” என்ற ஆதியின் குரலில் கண்விழித்தவள், “கம் ஆன் ஆதி, நீயும் ஒரு போலிஸ்மேன் தானா?? நா ஏன் அப்படிச் சொன்னேன்னு உனக்குத் தெரியாத?? நம்ம லைஃப்பே ரிஸ்க் தானா டா, அதான் அப்டி சொல்லிட்டேன்” என்றவளை ஆதி நம்பாது பார்க்க, ம்ம்ம் என்று பெருமூச்சு விட்டவள், “ஓகே… என்னால உன்கிட்ட பொய் சொல்ல முடியல, ஓகே ஆதி… நீ ஹாஸ்பிடல்ல இருக்கும்போது எனக்கு ஒரு ஃபோன் வந்துச்சு. அதுல ‘இந்த முறை ப்ரணவ்வும், உன் புருஷனும் தப்பிச்சிடாங்க.‌!! ஆனா, அடுத்த முறை உன் கண் முன்னால உன் புருஷனை கொன்னுட்டு, நீ கதறி துடிக்கிறதை ஆச தீர பாத்து ரசிச்சிட்டு, அப்றம் உன்னைக் கொன்னுட்டு ப்ரணவ்வை தூக்கிட்டு போனேன்னு சொன்னான் டா” என்ற யுக்தாவை புரியாமல் பாரர்த்த ஆதி,

“இதெல்லாம் நமக்குச் சகஜம் தானா யுகி, இதுக்கு ஏன் நீ இவ்ளோ யோசிக்கணும்??”

“இல்ல டா!! கோவத்துல பேசுற வார்த்தைக்கும், தீராத பகையில வெளிய வர்ர வார்த்தைக்கும் நெறய வித்தியாசம் இருக்கு, அன்னைக்கு என்கிட்ட பேசுன அந்தக் குரல்ல இருந்தது, ரெண்டாவது வகை… என் மேல அவனுக்கு இருக்குறது தீராத பகை, அடங்காத கொலைவெறி, நா உதய்யை இழந்து எப்டி தவிக்கிறேனே, அப்படி நீயும் உன் புருஷன், புள்ளையை இழந்து துடிச்சு சாகனும்னு சொன்னான், இந்த அளவுக்கு உதய்க்கு நெருக்கமான ஆள் யாருன்னே தெரியல?? நானும் யூ.எஸ்ல, இங்க, அவனோட அப்பா, அம்மா எல்லார்கிட்டையும் விசாரிச்சு பார்த்துட்டேன்… பட் அது யாருன்னு தெரியல, எனக்கென்னவோ அது ஒரு” என்று எதையோ யோசித்தவள்.. சட்டென ஏதோ தோன்ற, வேகமாக வெளியே வந்தவள், “டேய் அண்ணாஸ் அந்த உதய் உங்க ஸ்கூல்மேட் தானா?? படிக்கும்போது அவனுக்கு ரொம்ப நெருக்கமா இருந்தது யார் யார்னு சொல்லுங்க” என்று அவசரமாகக் கேட்க,

ராமும், வினய்யும் அவர்களுக்குத் தெரிந்த வரை சொல்ல, “இவங்க யாரும் இல்லடா அண்ணா, நா ஏற்கனவே இவங்களை எல்லாம் விசாரிச்சிட்டேன், எல்லாம் கிளீனா தான் இருக்கு, வேற யாராது.. உதய் மேல ரொம்பப் பாசமா, ரொம்பப் பொஸசிவ்வ இருந்தவாங்க?? யாராது இருந்தாங்கள?? யோசிங்க யோசிங்க” என்று யுக்தா பரபரக்க,

“தெரியலயே சாம் என்று மண்டையை தடவிய ராம், “ஹான்… ஒரு பொண்ணு இருந்தாலே? எப்பவும் உதய் பின்னாடியே வால் புடிச்சிட்டு சுத்துவாளே? ஆனா, உதய் அவளா கண்டுக்காவே மாட்டான், ஆனா, அந்தப் பொண்ணு இவனையே தான் சுத்தி சுத்தி வரும்.. அவ பேர் கூட, “ஹான் பிரீத்தி, அவ இப்ப டாக்டர்” என்றவன் தயங்கி தயங்கி, “உதய் கூட உனக்கு நடந்த கல்யாணத்துக்குக் கூட அவ வந்திருந்தா சாம்” என்று சொல்ல,

“எலி சிக்கிடுச்சு டா அண்ணா” என்று குதித்தவள், நா நெனச்சது சரிதான்.. அது அவன் இல்ல!! அவள்..!! அன்னைக்கு உதய் வீட்டுக்கு வந்தது ஆம்ளா இல்ல, பொண்ணு தான், அது பிரீத்தி தான்.‌.. அன்னைக்கு என்கிட்ட ஃபோன்ல பேசுனது, அந்த வாய்ஸ்ல இருந்த ஏதோ ஒன்னு என்னை ரொம்ப டிஸ்டப் பண்ணுச்சு.. அப்பவே எனக்கு சந்தேகம் தான், இது ஒரு ஆம்பளையா இருக்க வாய்ப்பில்லன்னு.. இப்ப அந்த டவுட் கிளீயர் ஆகிடுச்சு, நிஷா நீ யூ.எஸ் ல இருக்க நம்ம ப்ரண்ஸ்சுக்கு கால் பண்ணி பிரீத்தி பத்தி விசாரிக்கச் சொல்லு, தடை செய்யப்பட்ட அந்த மருந்தை உதய் இங்க இருக்க மக்கள் மேல டெஸ்ட் பண்ணது வரை தான் நமக்குத் தெரியும்… ஆனா, அந்த மருந்து அவன் கைக்கு எப்டி வந்துதுன்னு நமக்குத் தெரியாது, கண்டிப்பா இதுக்குப் பின்னால் பிரீத்தி தான் இருக்கணும்.. நீ அவளைப் பத்தி விசாரி, நா உதய் அப்பா வீட்டுச் சிசிடிவி புட்டேஜ்ல இருந்து அது அவ தானான்னு பாக்குறேன்”

அடுத்த ரெண்டு நாளில் பிரீத்தி பற்றிய அனைத்து தகவல்களும் யுக்தா கையில் கிடைக்க.. தடை செய்யப்பட்ட மருந்து, ப்ரணவ் கடத்தல் என்று அனைத்தையும் செய்தது பிரீத்தி தான் என்று தெரியவந்தது.

ஜானவி, “என் யுகி இந்தப் பிரீத்தி உதய்க்கு மேல இருப்பா போல..!! அமெரிக்கால அவ பேஷன்ஸ் மேலயே இந்த மருந்த யூஸ் பண்ணி இருக்க, அதுக்காக அந்த நாட்டு மெடிக்கல் கவுன்சில் அவளா டாக்டர்ர பர்க்டிஸ் பண்ணக் கூடாதுன்னு தடை பண்ணி இருக்காங்க, ச்ச ஒரு டாக்டர்ர இருந்துட்டு இப்டி செஞ்சிருக்காளே”

ராஷ்மி, “அதைவிட ஜானு.. அவளுக்கும் இந்த உதய்க்கும் என்ன கனெக்ட்.. அவ ஏன் அவனோட சாவுக்குப் பழிவாங்க நெனைக்குற??”

“அவளுக்கு ஸ்கூல் டேஸ்ல இருந்தே உதய் மேல பைத்தியம் ராஷ்மி.. அவன் பின்னாடியே தான் சுத்து வா. ஆனா, உதய் அவளா பாக்கக்கூட மாட்டான். உதய்க்குப் பணம் ஒன்னு தான் வீக்னஸ்!! அதான் இவ பணத்தை வச்சு.. அவனைக் கவுத்திருக்கப் போல என்றவள், “ஏய் நிஷா, இப்ப தான் ஞாபகம் வருது.. உதய்யோட இடத்துல இருந்து நம்ம எடுத்த பணம் என்ன ஆச்சு?? அது எவ்ளோ இருக்கும்??”

“அது எங்க கிட்ட தான் இருக்கு யுகி, நீ எதுவும் சொல்லாம போய்ட்டா, சோ… நாங்க அதை அப்படியே நம்ம இடத்துல வச்சிட்டோம்.. சுமார் ஒரு நூத்தி பத்து கோடி இருக்கும் யுகி”

“ம்ம்ம் பிரீத்திக்கு என்கிட்ட இருந்து என்ன தேவைன்னு இப்ப புரிஞ்சு போச்சு நிஷா. என்னைக் கொல்லும் முன்ன அந்தப் பணத்தை எடுக்க ப்ளான் பண்ணி இருக்க, அதுக்கு அவளுக்கு நா வேணும்”

ஜானவி, “அப்ப இந்தக் கேஸ்ல இருந்த எல்லா முடிச்சுப் அவுத்து போச்சு.. இனி பிரீத்திய புடிச்சு பொறிக்க வேண்டியது தான் பாக்கி இல்ல யுகி” என்க,

யுக்தாவிடம் ‘ம்ம்ம்’ என்ற சத்தம் மட்டும் தான் வந்தது, “சரி அதெல்லாம் இருக்கட்டும், ஏய் நிஷா. உன் கதை என்னடி… நீயும் வினய்யும் சந்தோஷமா இருக்க மாதிரியே தெரியலயே.. நானும் பாத்துட்டு தான் இருக்கேன், என்ன ஆச்சு??”

“என்ன ஆகும்?? உங்கொண்ணானுக்கு வாய்ல வாஸ்து சரியில்ல.. தேவையில்ல பேசி.. என்னை டென்ஷன் பண்ணிட்டான்”

“ஏன்டி என்ன ஆச்சு?? அந்தக் குரங்கு என்ன பண்ணுச்சு??”

“ம்ம்ம் அவருக்குத் தான் உன்மேல பாசம் இருக்காம், எனக்கெல்லாம் ஒன்னு இல்லையாம், உன்னோட வாழ்க்கை சரியாகும் வரை நாம்ம ரெண்டு பேரும் தனித்தனின்னு சொல்லுச்சு.‌ அதுவரை ஒகே… ஆனா, அதுக்கு அப்புறம் ஒன்னு சொல்லிச்சு பாரு அதுல தான் நா கடுப்பாகிட்டேன், இதுல உனக்குச் சம்மதம் இல்லாட்டி சொல்லு நா சாம்கிட்ட பேசி கல்யாணத்தை நிறுத்துறேன், நீ வேற யாரையாச்சும் கல்யாணம் பண்ணிக்கோன்னனு!! எனக்கு வந்துதே கோவம், போ டா வெண்ணெ!! நானும் யுகிக்காகத் தான் உன்னைக் கல்யாணம் பண்றேன்னு உன் மொகரய பாத்து இல்லன்னு சொல்லிட்டேன், அப்ப ஆரம்பிச்ச இடைவெளி, ரெண்டு பேர்க்கும் நடுவ விழுந்த கோடு, இப்ப வரை நீளுது.. யார் முதல்ல அந்தக் கோட்டை தாண்டுறதுன்னு தெரியமா முழிச்சிட்டு கெடக்கோம்” என்று நிஷா அலுத்துக் கொள்ள,

யுக்தா, ஜானு, ராஷ்மி மூவரும் விழுந்து விழுந்து சிரிக்க,

“சிரிக்க டி சிரிங்க.. எம் பொழப்பு இங்க சிரிப்ப சிரிச்சு தான் கெடக்கு”

“சரி சரி பொலம்பாத..?? இப்ப என்ன கோடுதான பிரச்சனை, விடு… நா அந்தக் கோட்டையே அழுச்சிடுறேன், டோன்ட் வொரி மை டியர் அண்ணி” என்று நிஷாவை அணைத்துக்கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!