ஆதிரையன் -அத்தியாயம் 07

Screenshot_2021-07-27-16-11-56-1-eebadecc

ஆதிரையன் -அத்தியாயம் 07

அத்தியாயம் 07

அத்தியாயம் 6இன் தொடர்…

 

உங்கப்பாவுக்கு அரசியல் எதிரிகள் யாருன்னு நினைக்குறீங்க? “

 

“அப்பாக்கு எதிரிகள்னு எனக்கு தெரிஞ்சு இல்லை.”

 

“அப்பாக்கு தோழமை யாருன்னு கூட  உங்களுக்கு தெரியாதில்லையா? நிருபர் ஒருவர் கேட்க,

 

“உண்மைதான். எனக்கு எப்பவும் அப்பாவுடன் அரசியல் பற்றிய பேச்சுக்கள் இருந்ததில்லை, அதை பற்றி தெரிந்து கொள்ள எனக்கு விருப்பமும் இருந்ததில்லை. “

 

“அமைச்சர் இன்னிக்கு காலைல அவசரமா  நீங்க முன்பு இருந்த ஊர், அதாவது நீங்க இப்போ தொழில் பண்ணிட்டு இருக்க ஊர்ல கலெக்டரை சந்திக்க போயிருக்காரு. எதுக்குன்னு தெரியுமா?”

 

“தெரியாது.”

 

” அவருடைய பர்சனல் தேவைக்காகத்தான் சந்திக்க போயிருக்கதா சொல்லிருக்காங்க? அதுகூட உங்களுக்கு தெரியாதா?”

 

“அப்பாவோட பர்சனலன்னு நீங்களே  சொல்லிடீங்க.எனக்கு அது பற்றி தெரியாதுங்க.”

 

ஆதிரையனுக்கு எதற்குமே பதில் சொல்லிட முடியவில்லை.தவறி விழும் ஓர் வார்த்தைக்கும் இங்கே பலம் அதிகம் என்பதால் பதில் அளிப்பதை முடிந்தமட்டும் விர்த்தான். அளந்தே பதில் அளித்தான். அங்கே வந்த உயர் காவல்துறை அதிகாரி, ஆதிரையனை வைத்திசாலை உள்ளே அனுப்பி விட்டு அவர் அது சம்பந்தமாக நிருபர்களோடு பேச ஆரம்பித்தார்.

 

அவசர பிரிவின் முன்னே வெள்ளை வேட்டிச் சட்டையில் பலரும் குழுமி இருக்க, அன்னையை கண்களால் தேடியவன், ஓர் ஓரமாக பிரம்மை பிடித்தவராய் அமர்ந்திருப்பதைக் கண்டான். அவர் அருகே சென்றிட இவனைக் கண்டவறோ அவ்வளவு நேரம் அருகிருந்தவர்களின் பயத்தினில் அடக்கிவைத்திருந்த மொத்தத்தையும் மகனைக்காண கொட்டித்தீர்த்தார். அவர் தலை கோதுவதைத் தவிர அவனுக்குமே பேச்செலவில்லை.

வெளியே நிருபர்களோடு பேசிக்கொண்டிருந்த அதிகாரி உள்ளே வந்து நேரே ஆதிரையனை நோக்கி வந்தவர்,

“ஆதிரையன் நாங்க, அப்பாவோட இந்த விபத்துக்கான காரணத்தை சீக்கிரமாகவே  கண்டுபிடிச்சுருவோம். ஆனால் அப்பா இன்னிக்கு காலையில் சென்ற பயணத்தின் நோக்கம் என்னனு நீங்க விசாரிச்சா நல்லா இருக்கும். அமைச்சரோட பர்சனல்னு சொன்னதுக்கப்புறம் அதை நாம தேடுனா மீடியாக்கு போய் லீக் ஆகிடும். இந்த விபத்துக்கும் அப்போவோட இன்றைய பயணத்திற்கும் எந்த சம்பந்தமும் இருக்காதுன்னு என்னால கன்போர்மா சொல்ல முடியும். சோ வில் யூ?”

 

“கண்டிப்பா சார் நான் போய் பார்த்துட்டு உங்களை சந்திக்க வரேன். சரியென்று க்கூறி அவர் செல்வதற்காக திரும்பவுமே  அவசரப்பிரிவில் இருந்து வெளியே வந்தார் வைத்தியர்.

” மன்னிக்கக்கணும் ஆதிரையன், நம்மலால முடிந்த அளவுக்கு முயற்சி பண்ணுனோம், ஆனாலும்.சாரிப்பா.”

 

“டேய் ஆதி, என்ன சொல்ராங்க?”

 “ம்மா…”

வார்த்தைகள் அங்கே சிக்கிக்கொள்ள அன்னையும் மகனும் நிலையிழந்து நிற்க, அவ்விடம் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த காவல் அதிகாரி அங்கிருந்த நிலைமையை சரிசெய்தார்.

 

அதிதிக்கு தொலைக்காட்சியின் வழியாக  கேட்ட அமைச்சருடைய மரணச் செய்தி மனதுக்கு பெரும் பதப்பதைப்பை ஏற்படுத்த, மீண்டும் ஆனந்தன் அழைத்திருந்தார்.

 

“ம்மா, உங்களை சந்திக்கணும்னு எப்போ வேணும்னாலும் யாரும் வரலாம். நாம  எதாவது… என்ன பேசணும்னு… சொல்லிட்டீங்கன்னா? “

 

இந்தப்பெண் எந்த சிக்கலிலும் சீக்கிக்கொள்ளக் கூடாதே என்று அவர் மனக்கவலையோடு கூற,

“அப்டில்லாம் ஒன்னும் இல்லை அங்கிள். அவங்க கேட்குறதுக்கு சரியா பதில் சொல்லிட்டாலே போதும். பார்த்துக்கலாம்.”

 

“சரிம்மா. எதாவதுன்னா எனக்கு தயங்காம கால் பண்ணும்மா. “

 

“சரிங்க அங்கிள். “

 

அழைப்பை வைத்தவள், தொலைக்காட்சியினை அணைத்துவிட்டு திரும்ப,அலைபேசி ஒலிதத்து.யாரென்று பார்த்தவள், ஜீவா அழைத்திருந்தார்.

 

“ஹலோ அண்ணா?”

“எங்கம்மா இருக்க?”

“வீட்லதான் ண்ணா.”

” சரிம்மா நான் ஊருக்குத்தான் வந்துக் கொண்டு இருக்கிறேன். நாளைக்கு, இல்லன்னா, அமைச்சரோட இறுதி சடங்கு முடிந்த பிறகுதான் உன்னை யாரும் பார்க்க வருவாங்க. அதுக்கு முன்ன வாய்ப்பில்லை. நீ என்ன பேசணுமோ பேசு, எப்போவும் என்னால முடிந்த உதவியை கண்டிப்பா பண்ணுவேன். “

 

“இந்த நிலம் சம்பந்தமான விஷயங்கள் மீடியாக்கு போகவேணாம். அவங்க பெயர் என்னால கெட்டதுனு இருக்க வேணாம்ணா. நான் அவங்க பிரென்டோட பொண்ணுன்னு தெரிஞ்சுதால பார்க்க வந்தாங்கன்னு மட்டும் தான் சொல்லப்போறேன்.”

 

“அதி…”

 

“அப்புறம் பார்த்துக்கலாம்ணா. நானே இதை எதிர் பார்க்கல.”

“சரிம்மா நான் ஆபிஸ் போய் பார்த்துட்டு என்னனு உனக்கு இன்போர்ம் பண்றேன். “

 

என்ன செய்ய நினைத்து, என்ன நடந்து விட்டது.அதிதிக்கு அன்றைய இரவு எப்போதடா விடியும் என்றிருந்தது.

 

***

அமைச்சர் அழகனின் இறுதி சடங்குகள் முடிந்திருந்தது. அதிதியை அவர் சந்தித்து அதன் பின்னே விபத்து,உயிரிழப்பு என மொத்தம் ஓர் நாளில் முடிவுற்று இன்றோடு நான்கு நாட்கள் கடந்துவிட்டிருந்தது.

 

ஜீவா, ஆதிரையனோடு பேசி இவள் நிலங்களை பற்றி பேசுவதாகக் கூறினான். ஆனாலும் அதிதி அதற்கு சம்மதிக்கவில்லை. இவளுக்கும் அவனுக்கும் இடையே முகம் அறியா ஓர் உறவும் இருக்க, இப்போது இந்த உறவு அதில் எத்தகைய மாற்றத்தினை ஏற்படுத்தும் என்பது பற்றி இந்நாட்களில் யோசித்துக்கொண்டிருக்கிறாள்.

 

ஆதிரையன் தன் அன்னையின் இழப்பை எப்படி சரிசெய்வதென்று தவங்கிக்கொண்டிருந்தான். காதல்  கணவர், தன் குடும்பங்களையெல்லாம் எதிர்த்து தனியாய் இவர் காதல் மட்டுமே போதுமென்று வந்தவர், இன்றளவும் தன் குடும்பத்தை நினைத்து வருந்தச்செய்திடும் நிலையில் அவரை வைத்ததில்லை மதியழகன். மிகவும் அன்பாய், அத்தனைக் காதலை கொடுத்தவர். அவரது இழப்பை எப்படி தாங்கிகொள்வார். இடிந்து முடங்கிப்போய் இருந்தார். ஆதிரையனின் கண்டிப்பில் கொஞ்சமாய் அவ்வப்போது உணவை ஊட்டியவன் அவர் நிலை எண்ணி மிகவும் சோர்ந்து போயிருந்தான்.

 

 ஊரில் அவனது ஆலையின் வேலைகளை மகேஷின் உதவியோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

அமைச்சர் அழகனின் பதவி வேறொருவருக்கு கொடுக்கப்பட அதற்கு முன்னே இத்தனை வருடங்கள் அவரின் பொறுப்பில் இருந்த அனைத்து பொறுப்புக்களும் சரியாக, ஒழுங்கான முறையில் கையளிக்க வேண்டும். அதைக்கொண்டு தன் தந்தைக்கு எத்தகையே அவப் பெயரும் வந்திடக் கூடாது என்று மிக நிதானமாய் ஒவ்வொன்றையும் செய்து முடித்தான்.

 

சற்றே ஓய்வு தேவையாக இருக்க, தபாலகத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னே, ‘கடிதம் வந்திருப்பதாகவும், ஆலைக்கு அனுப்பி வைக்கவா?’ என்றும் கேட்க, தானே வந்து இன்னும் இரண்டு நாட்களில் பெற்றுக்கொள்வதாய் கூறினான். 

அத்தியாயம் 7.2

 

ஆதிரையன் ஊருக்கு வர முன் கலெக்டரோடு தன் தந்தை என்ன பேசினார்,அன்றைய நாள் எதற்காக சந்தித்துக் கொண்டனர் என்பது பற்றி விசாரிக்க கூறியிருந்தான்.

ஊரில் இவனுக்கு வேலைகள் அதிகமாக  இருந்தது. இங்கு இனி இருப்பதில் பலனில்லை. இவன் போகும் போது தன்னோடு அன்னையையும் ஊருக்கு அழைத்து செல்ல வேண்டும். இனி அவருக்கு தான் மட்டுமே. எனவே ஊருக்கு செல்வதற்காக அன்னையிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். அப்போது அழைத்த மகேஷ்,

“அண்ணா, பிரீயா இருகீங்களா?”

“சொல்லு மகி என்ன?”

“கலெக்டர்க்கு உங்கப்பாக்கூட ஏதோ சொத்து பிரச்சினைனு பேசிக்கிறாங்க.”

 

“சொத்து பிரச்சினையா? என்ன சொல்ற? “

 

“ஆமா அவங்களோட இடம்னும் ஏதோ  பொண்ணுன்னும் பேசிக் கொண்டதாகச் சொல்றான் அந்த ராம்.”

 

“வேறென்ன சொன்னான்? “

 

“அது ஏதோ சொத்துக்களில் உரிமை  வேண்டியே இந்த இடம் தொடர்பில் அமைச்சரோடு வாக்குவாதம் ஏற்பட்டதாய் சொன்னான்.”

அன்று ராம் அதிதியின் அறையினுள் பேசிக்கொண்டிருப்பதை அரைக்குறையாக  கேட்டு, மகேஷ் அவரிடம் விசாரிக்க இப்படியாக கூறியிருந்தான்.

“மகி நீ உங்க மாமாவை கேட்டிருக்கலாமே.”

 

“அவங்க ஒன்னும் சொல்ல மாற்றாங்க. ஆனா சொத்து சம்பந்தமான பிரச்சினைனு மட்டும் சொன்னாங்க.”

 

“சரி மகி நாளைக்கு நான் காலைலேயே கிளம்பிருவேன். நாம நேர்ல போய் சந்தித்து பேசலாம்.”

 

ஆதிரையனுக்கு மனதில்,’உறவு,சொத்து, உரிமை என்றும் கூறிக்கொண்டு இது என்னடா புதுக்கதை?’ தனைத்தானே கேட்டுக்கொண்டான்.

 

தன் தந்தையின் மேல் துளி சந்தேகமில்லை, அன்னை தந்தையின் உறவு, அவர்களிடையான பிணைப்பை நன்கு கண்டிருக்கிறான். அத்தோடு அரசியலில் இதுவெல்லாம் சாதாரணம் தானே எனவும் மனதில் ஒரு எண்ணம் எழ, தன்னையே திட்டிக்கொண்டவன், நாளை கலெக்டரை சந்தித்து சற்று காரமாகவே நடந்துக்கொள்ள வேண்டும், அத்தோடு வேலை விட்டு நாளைக்கே மாத்திரனும். இப்போது அம்மாவையும் அங்கே கூட்டிச்செல்ல அவர் மனம் நோக எதுவும் நடந்து விடக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டான்.

 

மனதில் வேறு யோசனைகள் அதாவது, ‘தங்களுடையது என்று நினைத்திருக்கும் சொத்துக்கள் வேறொருவருடையதாக இருக்கக்கூடும்’ என்ற எண்ணம் எழவே இல்லை.

 

தன் அன்னையோடு அதிகாலையே கிளம்பி ஊருக்கு வந்தான். வந்தவன் காலை உணவை அன்னையோடு சேர்ந்து உண்டபின், அவர் மனம் வேறெதுவும் யோசிக்க விடாது, சில நாட்களாக சரியாக  உண்ணவில்லை பகல் உணவு எதாவது நன்றாக செய்து தருமாறு கூறினான். சீக்கிரம் வருவதாக அன்னையிடம் கூறிக்கொண்டு தன் ஆலைக்கு பத்துமணியளவில் கிளம்பிச்சென்றான்.

 

அங்கே இருந்த வேலைகளை பார்த்துவிட்டு, மகேஷை அழைத்துக்கொண்டு கலெக்டரை சந்திக்க வந்திருந்தான்.

 

அதிதியை சந்திக்க ஏற்கனவே ஜீவா வந்திருக்க அவனோடு  பேசிக்கொண்டிருந்தாள். ஆனந்தன், ஆதிரையன் வந்திருப்பதாகக்கூற, இன்னும் பத்து நிமிடங்களில் அழைப்பதாகக்  கூறினாள்.

“அவனே வந்திருக்கான் மா. இன்னுமே என்கிட்டக் கூட இது பற்றி பேசவே இல்லை. சோ அவன் என்ன பேசுறான் பார்த்துட்டு முடிவு பண்ணு. நான் கிளம்புறேன். நான் இருந்தா பேசமாட்டான்.”

கூறிக்கொண்டு ஜீவா வெளியே வர ஆதிரையனுடனும் பேசிவிட்டு கிளம்பினான்.

 

ஆதிரையன் உள் நுழையவும் அவனை அன்றே நேரில் காணும் அதிதிக்கு மனம் உள்ளுக்குள் சொல்ல முடியா உணர்வலைகளை உண்டுசெய்ய சற்றே முகத்தில் அதன் பிரதிபலிப்பு. அதைக்கண்ட ஆதிரையனோ ‘அத்தனை மிரட்ட வேண்டியதில்லை’ என்று நினைத்துக்கொண்டே இருக்கையில் அவள் எதிரே அமர்ந்தான்.

 

அதிதிக்கு இப்போது இவள் நிலங்கள் பற்றி ஆதிரையனோடு பேச விருப்பம் இல்லை. அத்தோடு அவள் தந்தையின் சொத்தினை அபகரித்து, நட்பை இழுக்காக்கியது மதியழகனே. அவர் செய்த பிழைக்கும் மகனுக்கும் சம்பந்தமில்லாத போது எப்படி இவனிடம் தன் சொத்துக்களை கேட்க முடியும் என்று, இத்தனை வருடங்கள் எதற்காக காத்திருந்தாளோ அந்த காத்திருப்பின் பலனை பெற வேண்டாம், இப்படியே விட்டு விடலாம் என்றும் முடிவெடுத்திருந்தாள்.

 

ஆக இப்போது இவனோடு என்ன பேசவென்று தெரியாது, அவனே பேசட்டும் என காத்திருக்க, இவளை நோக்கி ஓர்  பத்திரத்தை நீட்டினான். அவளும் என்னவென்று பார்க்க, அவளுக்கான மாற்றல் கடிதம். இச்செயல் அவளை சற்றே கோபப்படுத்தியது.

 

“இதைக் கொடுக்கதான் வந்தீங்கன்னா, உங்க வேலை முடிந்தது இல்லையா? கிளம்பலாம்.”

 

ஆதிரையன் இவளை முறைக்க,

 

“தப்பு பண்ணுன உங்கப்பாவே அன்று அத்தனை தைரியமாக பேசினார்.”

 

“என்னாச்சு மிஸ்டர் ஆதிரையன்? எதுக்கு இவ்வளவு அவசரமா என்னை ஊர் விட்டு அனுப்புறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? “

 

ஆகிரையன் என்ன சொல்வதென்று தெரியாது மகேஷை முறைக்க, அவனோ திருத்திருவென  முழித்துக்கொண்டிருந்தான்.

 

“நான் எனக்கு சொந்தமானதை மட்டும் தானே உங்கப்பாக்கிட்ட கேட்டேன்.நான் என் உரிமையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று மட்டும் தானே நினைத்தேன். “

 

அதிதியின் வார்த்தைகள் அத்தனையும் நேற்று மகேஷ் கொண்டு வந்திருந்த  தகவலோடு இணைந்து வேறு அர்த்தம் சொல்ல ஆதிரையனோ,

 

“கலெக்டர் அம்மா,எங்கப்பா இப்போ உயிரோடு இல்லை. அதுவும் போக, புதுசா நீங்க வந்து உரிமை கொண்டாடற அளவுக்கு எங்கப்பா அவ்வளவு கீழா இருக்க மாட்டாங்க. உங்களுக்கு சொந்தம்,உரிமை, உறவு அப்டின்னு சொல்லிட்டு எதுக்கு வேண்டாத வம்பு? அதுவும் இவ்வளவு காலம் எங்க இருந்தீங்க? இப்படி திடீர்னு வந்து உரிமை இருக்கு, உறவு இருக்குனு சொல்லிட்டா நம்பிருவாங்களா? “

 

“கலெக்டர் அம்மா, நம்மளுக்கு இந்த அரசியல் பண்ணி பழக்கமும் இல்லையா? அதுனால பேசி தீர்க்கவெல்லாம் தெரியாது. நம்ம கை,கால் பயன்படுத்தித்தான் நம்மளுக்கு பழக்கம். உங்கக்கிட்ட அப்டில்லாம் பண்ணவேணாமேன்னுதான் இந்த மாற்றளுக்கான ஏற்பாடு.”

 

‘என்னடா இப்டில்லாம் பேசுறாரு’மகேஷ்  ஆதிரையனை வியப்பாய் பார்திருக்க, அதிதியும் அவனது பேச்சினை மிகக் கடினப்பட்டு உள்வாங்கிக் கொண்டிருந்தாள்.

 

“என் உரிமையை நீங்களாகவே என்கிட்ட கொண்டு வந்து தருவீங்க மிஸ்டர் ஆதிரையன். நான் இந்த ஊர்லதான்  இருக்கப்போறேன். எனக்கான உரிமை நான் எப்போவும் அடுத்தவங்களோடதை கொண்டு பெற்றுக்கொள்ள நினைக்கவே இல்லை. எனக்கு உங்கப்பா கூடத்தான் பிரச்சினை, அதுனால அது பற்றி இனி பேச வேண்டாம் நீங்க போகலாம்.”

 

அதிதிக்கு,’அவனிடம் இருந்து சொத்துக்கள் எடுக்கப்பப்பட்டால் அவன் நிலை என்னவாகும், அவன் மரியாதைக்கு இழுக்காகுமே’ அதுப்பற்றியே உள்ளுக்குள் உறுதிக்கொண்டே இருக்க அவனை அப்போதைக்கு பேசி அனுப்பிட நினைக்க இவனோ விடுவதாய் இல்லை.

 

“எங்கப்பாவோட பிரச்சினைன்னா அது இனி என்னோடதும் கூட. இனி அவருடைய எல்லாவற்றுக்குமே நான் தான் பொறுப்பு.”

 

“ஓஹ் சரிங்க, அப்போ உங்கப்பாவிடம் பெற்றுக்கொள்ள நினைக்கும் உரிமையை உங்ககிட்ட எடுத்துக்கலாம். உங்களுக்கு அதுல எந்த பிரச்சினையும் இல்லையா?”

 

“உங்களுக்கான உரிமை உங்களுக்கு கிடைக்கும். ஆனால் எந்த வகையிலும் எங்கப்பாவோட பெயருக்கு 

எந்த கறையும் வரக்கூடாது.”

 

புன்னகைத்தாள் அதிதி.

“மிஸ்டர் ஆதிரையன்,அரசியல் பண்ற எல்லோருமே அரசியல் கொண்டுதான் அவங்களோடு தப்புக்களை செய்து அதைக்கொண்டே மறைத்தும் கொள்கிறார்கள். ஆனால் உங்கப்பா கொஞ்சம் வித்தியாசமான ஒரு நபர். எதுல தப்பு பண்ணலாமோ அதுல நேர்மையா இருந்து, எதுல துரோகம் பண்ணக் கூடாதோ அதுல நம்பிக்கை தகர்த்து மூன்று மனங்களை கொன்னுட்டாரு.”

 

“எப்போவும் அவங்க பெயர் கெடுக்கணும்னு நான் நினைக்கவே இல்லை, அதேவேளை என்னுடைய உரிமையை  விட்டுக்கொடுக்கவும் நினைக்கவே இல்லை. ஆனால் இப்போ…”

 

இடை நிறுத்தி ஆதிரையனை பார்த்தாள்.

 

‘ஹ்ம்ம் சொல்லுங்க ‘என்பதாய் ஆதிரையன் அவளை எறிட,

தன்னுடைய மேசையில் அவள் பக்கம் இருந்த ஒரு பத்திரதை எடுத்து அவன் பக்கம் திருப்பி விரல்கள் கொண்டு நகர்த்தினாள்.

 

“நீங்க இப்போ கிளம்புங்க, நிதானமா நீங்க அப்றமா வந்து கூட இதைப்பற்றி  பேசிக்கொள்ளலாம். இப்போ நீங்க இருக்க நிலைல எதுவும் பேசிக்கவேணாம்.

 

இந்த பத்திரங்களை வீட்டுக்கு கொண்டுபோய் நல்லா படிச்சு பாருங்க. அப்புறம் என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க.”

 

ஆதிரையனுக்கும் அதுவே சரியென்று தோன்ற அவனும் அவற்றை 

திறந்து கூட பார்க்காது அப்படியே எடுத்துக்கொண்டு எழுந்தான்.

 

“ஒரு நிமிஷம்,நீங்க எதுக்காக வந்துட்டு போறீங்கன்னு எழுதி கொடுத்துட்டு போறீங்களா?”

 

“ஏன்னா அன்னைக்கு உங்க அப்பா வந்துட்டு போறப்ப விபத்து ஏற்பட்டு விட்டது, இன்னும் யாருன்னே கண்டு பிடிக்கல. அதுனால என்மேலக் கூட சந்தேகங்கள் வரலாம் இல்லையா? அதோட இப்போ நீங்ககூட வந்துட்டு போறீங்க, யாரும் எதுக்கு என்ன காரணம்னு கேட்டாங்கன்னா எனக்கு பதில் சொல்ல கஷ்டமிருக்காது. ப்ளீஸ்… “

 

அவள் வெற்றுகாகிதம் ஒன்றையும் பேனா ஒன்றிணையும் அவனை நோக்கி நீட்ட, அவசர அவசரமாக ஏதோ ஆங்கிலத்தில் எழுதி அவளிடம் நீட்டினான்.

 

அதில் அவர்களின் நிலம் சம்பந்தமாக  கலந்தாலோசிக்க வந்ததாக எழுதியிருந்தான்.

கடிதத்தின் கீழே கையொப்பதை கண்டவள் அதற்கு கீழே தானும் கையொப்பமிட்டவாரே,

 

“நான் எப்போவும் தமிழ் மட்டும் தான் பயன்படுத்துவேன் மிஸ்டர் ஆதிரையன். என்னோட கையொப்பம் கூட தமிழ்லதான் இருக்கும்.என்னை அப்படி பழக்கப் படுத்தி வச்சிருக்காங்க.நல்லா தமிழ் தெரியுமே, அதுலேயே எழுதி கொடுத்திருக்கலாம்.”

 

கூறியவள்,அவள் கையொப்பமிட்டு அவளுடைய முத்திரை பதித்து,

“ஆனந்தன் இதுல ஓர் காப்பி இவங்களுக்கும் கொடுத்துருங்க.”

ஆனந்தன் அதைப் கொடுக்க,

 

அவள் இருக்கை விட்டு எழுந்த அதிதி,

“உங்க அப்பாவோட இறப்புக்கு என்னால வரமுடில.உங்கம்மா உங்ககூட வந்திருக்கதா சொன்னாங்க.நான் அவங்களை சந்தித்து பேசலாமா?”

 

“கண்டிப்பா… “

 

கூறியவன் கிளம்பிவிட்டான். செல்லும் அவனையே பார்த்திருந்தவள்,இவள் கையொப்பம் பார்தத்தும் இவளை யாரென்று தெரிந்துகொள்வான்.அவன் நிலை எவ்வாரிருக்கும் என்று  மனதில் சிறு ஆசை துளிர்க்கவே கையொப்பம் பற்றி கூற அவன் பார்க்காமலேயே எடுத்து சென்று விட்டான்.

 

‘வருவது வரட்டும்.சொத்துக்கள் மீட்டெடுப்பது இனி நோக்கம் அல்ல. அதை அவனிடம் இருந்து பெற்றிட அவன் எத்தனை வருந்துவான். அவன் தன் கண்முன்னே வருந்த எப்படி தாங்குவேன்.’ எனவேதான் இவள் வீடு இருந்த நிலத்தின் பத்திரத்தை மட்டும் காண்பித்து அதை மட்டும் பெற்றுக்கொள்ள நினைத்தாள்.

 

 தொடரும்…

 

அதிதியின் நிலங்கள் திருப்பி ஆதிரையனால் கொடுக்கப்படுமா?

அதிதி யாரென்று தெரிய ஆதிரையன் நிலை என்ன?

அவன் சிறுவயது தோழியும் அவளாகவே இருக்க,இனி என்ன?

பார்க்கலாம்…

 

Leave a Reply

error: Content is protected !!