காதல்..நரகமா?சுகமா?

காதல்..நரகமா?சுகமா?

 

“சரண் மாமா.. மெத்தை ஸ்ட்ராங்க் தானே.. ஏன் கேக்குரேனா? நான் விழுந்த பின்னாடி எனக்கு அடிப்பட்டுர கூடாது.” சுவரில் அமர்ந்துகொண்டு கேள்வி கேட்டாள்.

 

”உன்னை அப்படியே தள்ளி விட்டுருவேன் அம்மு. ஒழுங்கா சீக்கிரம் குதிச்சுரு, அந்த ஹரி பையன் வேற வர்ர டைம்.” புவன், சுவரில் அமர்ந்திருந்த ஹரிணியை குதிக்க சொல்லி அவசரப்படுத்தினான்.

 

’அந்த வளர்ந்த மாடு, கொம்பேறி மூக்கன் என்னை உள்ள விடக்கூடாது நம்ம வீட்டு வாட்ச்மேன் தாத்தாகிட்ட சொல்லி வச்சுருக்கான். அந்தா தாத்தாவும் அவன் பேச்சை கேட்டுட்டு என்னை உள்ள விடவே இல்லை. அந்த தாத்தாவுக்கு நான் என்ன என்ன கொடுத்துருப்பேன். அந்த நன்றி இல்லாம என்னை உள்ள விடமாட்டேனு சொல்லிட்டாரு மாமா.’

 

“ஆமா, போறப்போ வர்ரப்போ எல்லாம் பத்து ரூபாவும், டீயும் வாங்கி கொடுத்தா வாட்ச்மேன் தாத்தா உனக்கு விஸ்வாசமா இருப்பாரா?.. நீயே ஒரு கஞ்சம், இதுல அந்த தாத்தாவுக்கு வள்ளலோட தங்கச்சி மாதிரி பெரிய நன்கொடை கொடுத்த மாதிரி பில்டப் விடுற.”

 

ஹரிணியோ, “பத்து ரூபாவா இருந்தாலும் கொடுக்க மனசுனு ஒன்னு வேணும் மாமா.”

 

ஹரி தான் காலையில் ஹோட்டல் கிளம்பும் போதே வாட்ச்மேனிடம் எந்த நேரமும் ஹரிணி வரலாம். அவள் வந்தால் உள்ளே விடக்கூடாது என ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டான். அதுவும் யார் வந்து ஹரிணிக்கு சப்போர்ட் செய்தாலும் என் பேச்சை மீறி உள்ளே விடக்கூடாது என்று வாட்ச்மேன் தாத்தாவயே மிரட்டி விட்டு சென்றான்.

 

‘இப்படியே நீ பேசிட்டே இருந்தேனு வச்சுக்கோ நானும், புவனும் உள்ளே போய்ருவோம். அப்புரம் நீ விடியுற வரை அந்த சுவர்ல தான் தவம் கிடக்கனும். இப்போ குதிக்குறியா? இல்லையா? அம்மு.” சரண் சொல்ல.

 

”கடவுளே காப்பாத்துப்பா” என கத்திக்கொண்டே அங்கு அடுக்கி வைக்கப்பட்டுள்ள மெத்தையில் குதித்தெழுந்தாள் ஹரிணி.

 

மெத்தையில் விழுந்த ஹரிணியை இருவரும் மெதுவாக தூக்கி விட்டு தூசியை தட்டிவிட்டனர் மூவரும். ஹரி வந்ததை கூட கவனிக்காமல் இருக்க,

 

’நல்லா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு.’ கை தட்டிக்கொண்டே ஹரிணிக்கு உதவிய சரண், புவனை முறைத்தான்.

 

“ட்ரெஸ் பழசு அத்தான்.. இதை போய் நல்லா இருக்கானு சொல்லுறீங்க. உங்க டேஸ்ட் தான் நல்லாவே இல்லை.” ஹரியின் திடீர் வருகையில் சரணும், புவனும், அதிர்ச்சியில் இருக்க, ஹரிணியோ அவன் வார்த்தையை வைத்தே அவனை வெறுப்பேற்றினாள்.

 

ஹரியோ, ஹரிணியின் பேச்சில் பல்லை கடித்துகொண்டு நின்றிருந்தான்.

 

”நான் எவ்வளவு சொல்லியும் முன்பக்க வாசல் வழியா வர கூடாதுனு சொல்லியிருந்தா நீங்க  சுவர் ஏறிக்குதிக்க வழிகாட்டிருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு உங்க ஹெல்பிங்க் மைண்ட்.” மூவரின் மீது கோவத்தை காட்டிவிட்டு உள்ளே சென்றான்.

 

மூவரும் அவன் பின்னே உள்ளே செல்ல, அங்கு “அச்சோ, என்னடி அம்மு.. சுவர்ல இருந்து பார்த்து குதிக்கமாட்ட. இப்படியா சுண்ணாம்பு ஒட்டுற மாதிரி குதிப்ப. எங்கயாவது அடிப்பட்டுருக்கா அம்மு.” தேவியும், எழிலும் அவள் உடலில் காயம் இருக்கிறதா என ஆராய. அதையெல்லாம் பார்த்துகொண்டே படியேறினான் ஹரி.

 

“இவ பண்ண வேலைக்கு இவளுக்கு அடிபட்டுருக்கானு பார்க்குறது தான் ரொம்ப முக்கியமா அண்ணி. ஹரி வந்துட்டான், டின்னர் எடுத்து வைங்க. போடி நீயும் குளிச்சுட்டு வா.” கல்யாணி மகள் செய்த வேலைக்கு வந்த உடனே கன்னத்திலே அறை விட்டிருப்பார். ஆனால் அங்கு தான் அம்மு ராஜ்ஜியம் ஆச்சே அதனால் திட்ட மட்டுமே முடிந்தது.

 

“அடியெல்லாம் இல்ல அத்தை.. நான் குதிச்சு அடிபடக்கூடாதுனு தானே சரண், புவன் மாமாங்க மெத்தையை அடுக்கி வச்சுருந்தாங்க. நான் போய் ஒரு குளியல் போட்டு வந்துரேன்.” இருவரையும் கொஞ்சிவிட்டு அவளது அறைக்கு சென்றாள்.

 

குளித்துவிட்டு, இரவு உடையுடன் கீழே வந்தவளை சாப்பிட அமர வைக்க. அங்கு, தட்டுடன் பிரசனமானார் தேவிகா. எழிலோ ஹரிணிக்கு பிடித்த சிக்கன் வறுவலை சின்ன பவுலில் போட்டு எடுத்து வந்தார்.

 

“ரொம்ப இழைச்சுட்டியே அம்மு இந்த மூனு நாள்ல.. அத்தை ஊட்டி விடுரேன் நீ சாப்பிடு.” தேவிகா செய்கையே பார்த்துகொண்டிருந்த ஹரிக்கு கோவம் வந்தது.

 

சிறு வயதில் ஹரி விளையாடிக்கொண்டே அன்னையிடம் ஊட்டிவிட சொல்லி சாப்பிட்டுக்கொண்டிருக்க. அதை பார்த்த அம்மு தனக்கு ஊட்டி விடுமாறு தேவிகாவிடம் செய்கை காட்ட. அதை பார்த்த ஹரி, “ம்மா.. எனக்கு மட்டும் தான் நீங்க அம்மா. அவளுக்கு இல்லை சோ எனக்கு தான் ஊட்டி விடனும்.”

 

“அம்மு குழந்தைடா ஹரி, சின்ன குழந்தையை பார்க்க வச்சு சாப்பாடு ஊட்டிவிடக்கூடாது ஹரி.” என சொல்லிகொண்டே ஹரிணிக்கு ஊட்டிவிட்டதில் இருந்து அவன் அன்னையிடம் தனக்கு ஊட்டி விட வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

 

’ஆமா அத்தை, என்னோட குர்தி டாப் கூட ரொம்ப லூசாகிருச்சு.’ அவருடன் அவளும் கொஞ்சிய படி அவர் ஊட்டிவிட்டதை சாப்பிட,

 

“அண்ணி அவ என்ன சின்ன குழந்தைய ஊட்டிவிட்டு இருக்கீங்க.” கல்யாணி கேட்க.

 

‘அத்தைக்கு நான் சின்ன குழந்தை தான்ம்மா.. நீங்க பெரிய மாமாவுக்கும், சின்ன மாமாக்கு சாப்பாடு வைங்க.’

 

“உன் அப்பா ஊருல இருந்து வரட்டும் அப்புரம் இருக்கு உனக்கு.” மகளை மிரட்டினார்.

 

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், சாப்பிட்டு முடித்த ஹரிணியிடம் தாத்தாவும், பாட்டியும் விசாரணையை ஆரம்பித்தனர்.

செல்லமாக வளர்ந்த பேத்தியிடம் கோவத்தை கூட காட்ட முடியாமல் சுந்தரம் அமர்ந்திருக்க. பாட்டியோ, ஹரிணிக்கு அட்வைஸ் செய்துகொண்டிருந்தார். இவர்களை பார்த்த  ஹரிக்கு தான் எங்காவது முட்டிகொள்ளலாம் போல் தோன்றியது.

 

ஒரு பெண் பிள்ளை ஆபத்தை மீறி இப்படி ஒரு காரியம் செய்திருக்கிறாள் அவளை திட்டாமல், அடிக்காமல் இப்படி அருகில் அமர வைத்து செல்லம் கொடுத்து அட்வைஸ் செய்துகொண்டிருக்கிறார்கள்.

 

“ப்பா.. ம்மா.. பேச வேண்டிய விசயத்தை பேசுங்க. அம்மு வந்த பின்னாடி தான் பேசனும் சொல்லிட்டு இப்படி அவளுக்கு எவ்வளவு மணி நேரம் அட்வைஸ் பண்ணிட்டு இருப்பீங்க”. என தேவராஜன் சரணுக்கு பார்த்த பெண் பற்றி பேச ஆரம்பித்தார்.

 

’ஆமா, இவ தான் இந்த கல்யாணத்தை நடத்தி வைக்க போற மாதிரி இவ வந்த பின்னாடி பேசனும்னு காத்திருந்திருக்காங்க.’ ஹரி மைண்ட் வாய்ஸில் பேச.

 

“ஆமா, அம்மு சரணுக்கு பொண்ணு பார்த்திருக்கோம். உன்கிட்ட தான் முதல்ல பொண்ணு போட்டோ காட்டனும் சரண்  சொல்லிருந்தான். இதான் அந்த பொண்ணு போட்டோ, பேரு மல்லிகா.” பாட்டி, ஹரிணியிடம் பொண்ணு போட்டாவை காட்டினார்.

 

‘வாவ்… சரண் மாமாவுக்கு ஏத்த ஜோடி தான். எப்போ பொண்ணு பார்க்க போறீங்க பாட்டி.’

 

“நீ இல்லாமா எந்த விசயம் நடந்திருக்கு அம்மு. இனிமே தான் பொண்ணு பார்க்க போகனும், அதுக்கு முன்னாடி சரண், மல்லிகாவ மீட் பண்ணி பேசனும் சொல்லிட்டான்.” எழில் ஹரிணியிடம் சொல்ல.

 

‘அத்தை முதல் மீட்டிங்க் அதனால நம்ம ஹோட்டல்ல பிக்ஸ் பண்ணிடலாம்.’

 

“அப்போ நாளைக்கே மீட் பண்ணாலாம் அம்மு, நீயும் என்கூட வரனும்.” சரண் அழைக்க.

 

‘கண்டிப்பா மாமா.. நான் இல்லாம உங்க மீட்டீங்கா?.’

 

’கல்யாணம் செய்ய போறவன் அவன், இவ எதுக்கு நந்தி மாதிரி நானும் வருவேனு சொல்லிட்டு இருக்க. இதுல சரணும் அவளும் வரனும்னு சொல்லுறான்.’ ஹரி இப்பவும் மைண்ட் வாய்ஸில் நினைக்க. அப்போது தான் அந்த யோசனை அவனுக்கு வந்தது.

 

“சரண், நீயும் புவனும் முதல்ல போங்க.. நான், அம்முவ கூப்பிட்டு வர்ரேன்.” முதல் முறையாக ஹரியே, அம்மு அழைத்து வருகிறேன் என்று சொன்னதை அனைவரும் அதிர்ச்சியாக பார்க்க. ஹரிணியோ, “என்னா புலி பதுங்குது, இத்தனை வருஷத்துல என்னை கூப்பிட்டு ஷாப்பிங்க் கூட போகமாட்டேனு சொல்லுறவன், நாளைக்கு அவன்கூட என்னை அழைச்சுட்டு போறேனு சொல்லுறான். சரியில்லையே நம்ம ஆளு. எதுக்கும் தயாரா இருக்கனும் ஹரிணி.” ஹரியே சந்தேகமாக பார்த்துகொண்டிருந்தாள் ஹரிணி.

 

’என்ன எல்லாரும் என்னையே அதிர்ச்சியா பார்க்குறீங்க. கூப்பிட்டு போறேனு சொன்னது தப்பா?.’

 

“அப்படியெல்லாம் இல்லை ஹரி, நாளைக்கு நீயே அம்முவ உன்கூட அழைச்சுட்டு போ.” தாத்தா சொல்லிவிட, மற்றவர்களும் சாதாரணமாக எடுத்துகொண்டனர்.

 

’வாடி என் எலிக்குட்டி உன்னை நாளைக்கு நடுரேட்டுல இறக்கிவிட்டு, ஹோட்டலுக்கு நடந்து வரவைக்குறேனா இல்லையானு பாரு.’ ஹரி, மனதில் நினைத்துகொண்டே நாளைய தினத்தை எதிர்ப்பார்த்தான்.

 

பகலவனின் வேலை ஆரம்பமாக, அன்றைய வேலை அவர்களுக்கு அதிர்ச்சியும், ஆச்சர்யமும் வைத்திருந்தது. முதலில் சரணும், புவனும் ஒரு காரில் செல்ல, அடுத்ததாக ஹரியின் காரில் ஹரிணி செல்ல தயாராக இருந்தாள்.

 

“சரண் மாமா, போகும் போது புஃல் ரெட் ரோஸ் இருக்குற பொக்கே வாங்கிட்டு போங்க. புவன் மாமா நீங்க கார் ஓட்டுங்க.”

 

‘சரி அம்மு.. நீ சொன்னமாதிரி நான் வாங்கிட்டு போறேன்.’

 

“திஸ் இஸ் டூ மச் அம்மு, அவன் எதை செய்யனும், வாங்கனும் நீ ஏன் சொல்லி தர்ர. ஏன் அவனுக்கு பொக்கே வாங்க தெரியாத?. நீயும் அவ சொல்லுறதை கேட்டு செய்யுறேனு சொல்லுற. நாளைக்கே கல்யாணம் ஆனாலும் இவ பேச்சை தான் கேட்ப்பியா சரண்.”  ஹரி அவளிடம் சண்டையை தொடங்கி, சரணிடம் கோவத்தை காட்ட.

 

‘ஹரி எனக்கு அந்த யோசனை வரல, அம்மு சரியான நேரத்துல சொன்னாதால் தான் செய்யுறேனு சொன்னேன். இன்னொரு விஷயம் ஹரி, கல்யாணத்துக்கு பின்னாடி எந்த தவறு வந்திரக்கூடாதுனு தான் சின்ன சின்ன விஷயத்தை சொல்லுறா. இதுல எந்த தப்பும் இல்லை. முன்ன பின்ன பொண்ணு பார்த்திருந்தாளோ, இல்ல காதலிச்சிருந்தாளோ தானே பொக்கே, கிப்ட்னு வாங்கி கொடுக்க தோனும். எனக்கு இது தான் முதல் முறை அதனால் அம்மு என்னை கேர்புல்லா ட்ரீட் பண்ணுறா. இதுல எந்த தப்பும் இல்லை ஹரி.’ சரண் ஹரியிடம் விளக்கமாக சொல்லிவிட்டு புவனை அழைத்துக்கொண்டு சென்றுவிட்டான்.

 

ஹரியோ, ஹரிணியை திரும்பி பார்க்க, அவளோ அவனின் காரின் முன் இருக்கையில் ஏறியமர்ந்தாள்.

 

“ப்பா, நீங்களும் சித்தப்பாவும் இன்னைக்கு தாம்பரம் ப்ராஞ்சுல நீங்க போய் பார்த்துக்கோங்க நான் ஈவ்வினிங்க் போல அங்க வரேன்.” தேவராஜிடம் சொல்லிவிட்டு அவனது காரில் ஏறினான்.

 

’அத்தான் இளையராஜா சாங் இல்லையா..?’ காரில் சாங் ப்ளேயரில் இளையராஜா பாட்டை தேடிகொண்டிருந்தவளை எவ்வளவு முறைக்க முடியுமோ அவ்வளவு முறைத்தான்.

 

“இல்லை.. ஒன்லி ஏ.ஆர்.ரகுமான் சாங்க் தான் அப்லோட் பண்ணிருக்கேன்.” அவளுக்கு பிடிக்காது என நினைத்து தான் ஏ.ஆர்.ரகுமான் பாட்டை இரவோடு இரவாக பிளேயரில் மாற்றியமைத்தான். ஆனால்?

 

“வாவ் அத்தான்.. ரகுமான் சாங்க் இருக்கா.. எங்க எனக்கு பிடிக்காதுனு நினைச்சு அப்லோட் பண்ணிருக்கமாட்டீங்கனு நினைச்சேன். ஆனா எனக்கு பிடிச்ச சாங்க் எல்லாத்தையும் அப்லோட் பண்ணிருக்கீங்க. சோ சுவீட் அத்தான் நீங்க.” அவனுக்கே ஆப்படித்தாள்.

 

‘ஹான்.. உனக்கு ரகுமான் சாங்க் பிடிக்குமா?’ அதிர்ச்சியாக வினாவ.

 

“பின்ன இல்லையா?” பிளேயரில் ரகுமான் பாட்டை ஒலிக்கவிட்டவளை கொலை வெறியுடன் பார்த்தான்.

 

பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்
வண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்
துளைசெல்லும் காற்று மெல்லிசையாதல் அதிசயம்
குருநாதர் இல்லாத குயில் பாட்டு அதிசயம்
அதிசயமே அசந்துபோகும் நீயெந்தன் அதிசயம்
கல்தோன்றி மண்தோன்றிக் கடல்தோன்றும் முன்னாலே
உண்டான காதல் அதிசயம்ho
பதினாறு வயதான பருவத்தில் எல்லோர்க்கும்
படர்கின்ற காதல் அதிசயம்” ஜீன்ஸ் பட பாடலை ஒலிக்கவிட்டாள்.

பாடல் பாடிகொண்டே வந்தவள், ஒரு இடத்தில் கார் நிற்கவும் ஹரியை என்னாச்சு என்பது போல் பார்க்க.

 

“அம்மு, டிக்கி ஓபனா இருக்கானு இறங்கி பாரேன்.” அவன் சீரியசாக சொன்னதை. அவள் உடனே இறங்கி பார்க்க செய்தாள்.

 

‘டிக்கி நல்லா மூடி தானே இருக்கு.’ என அவள் நினைத்து முடிக்க, ஹரி காரை கிளப்பி கொண்டு சென்றுவிட்டான். அவனின் செயலில் முதலில் அதிர்ந்து, அவள் சுதாரிப்பதற்க்குள் அவன் காரை வேகமாக ஓட்டிகொண்டு சென்றான்.

 

“அத்தான்.. அத்தான் நில்லுங்க..” அந்த நடுரோட்டில், அனாதையான ரோட்டில் அவள் மட்டுமே இருந்தாள்.

 

‘ச்சே.. இப்படி பழிவாங்கிட்டானே இந்த ஹரி. கொஞ்ச மூளைய வச்சு யோசிச்சுருந்தா ரிவ்யுவர்லயே டிக்கி திறந்திருக்கானு பார்த்துரக்காலாம் அவன் சொன்னதால இப்போ நடுரோட்டுல நின்னுட்டு இருக்கேன். ஹரி உன்னை சும்மா விடமாட்டேன்.இதுக்கு தான் என்னை அவனோட அழைச்சுட்டு வந்தானா?.’ எரிச்சலில் அவன் மீது கோவத்தில் திட்டி தீர்த்தாள். ஹேண்ட் பேக், போன் எல்லாமே அவனின் காரில் தான் இருக்கிறது. இப்போது என்ன செய்யலாம் அவள் நினைத்துகொண்டே மெதுவாக நடக்க. அவளை உரசிக்கொண்டே கார் வந்து நின்றது.

 

யார்ரா இவன்… போக இடமில்லாம என் பக்கம் வந்து காரை நிறுத்திருக்கான். ஹரிணி, ஹரி மீது உள்ள கோவத்தால் காரில் வந்தவனையும் சேர்த்தே திட்டினாள்.

 

காரில் இருந்து இறங்கி ஹரிணியின் பக்கம் வந்து நின்றவனை பார்த்து பின் தான் தெரிந்தது அவன் யார் என்று.

 

“நீங்களா? நான் எதிர்பார்க்கவே இல்லை.”

 

’எதிர்ப்பார்க்காதப்போ தானே என்னோட அறிமுகம் இருக்கும் ஏஞ்சல்.’

 

அவனின் ஏஞ்சல் என்ற வார்த்தையில் அழகாக சிரித்தாள் ஹரிணி.

 

”இந்த ஊருல எனக்கு சின்ன வேலை, அதான் சென்னை பக்கம் விசிட் பண்ணிருக்கேன். சத்தியமா உன்னை பார்ப்பேனு நினைச்சு பார்க்கலை. என்ன நடுரோட்டுல சத்யாகிரகம் பண்ணிட்டு இருக்க. அதுவும் யாரும் இல்லாத இந்த வழில.”

 

இவனிடம் எப்படி சொல்வது ஹரி, அவளை நடுரோட்டில் இறக்கிவிட்டு சென்றான் என்பதை. அதுவுமில்லாமல், ஹரியை யாரிடமும் விட்டுகொடுத்து பேசுவது அவளுக்கு பிடிக்காது.

 

‘ப்ரண்டுக்காக வெயிட் பண்ணுரேன், அவள் இன்னும் வரலை அதான்.’ அவனிடம் மறைத்து பேசினாள்.

 

“சரி என்கூட வா.. எங்க ட்ராப் பண்ணனுமோ அங்க ட்ராப் பண்ணுறேன் ஏஞ்சல்.” அவனின் அழைப்பிற்கு அவள் உடனே சமதித்து ஏறினாள்.

 

அங்கு, சரண், புவன், மல்லிகா தனக்காக காத்திருப்பார்கள் என்ற காரணமும் இருந்தது ஹரிணியின் மனதில்.

 

ஹரிணியை வழியில் தவிக்கவிட்டு வந்தவன் மனம் காஷ்மீரில் இருப்பது போனற உணர்வுடன் மகிழ்ச்சியாக விசில் அடித்துகொண்டே ஹோட்டலின் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இறங்கியவன் பார்வையில் விழுந்தாள் ஹரிணி. அவளுடன், அவளை ட்ராப் செய்தவனும் நின்று சிரித்து பேசி அவனை வழியனுப்பி வைத்ததையும் அதிர்ச்சியாக பார்த்துகொண்டிருந்தான் ஹரிஹரன்.

 

தொடரும்…..

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!