ஆதிரையன் -அத்தியாயம் 11

ஆதிரையன் -அத்தியாயம் 11
அத்தியாயம் 11
அதிதியும் செல்வ நாயகமும் வீட்டுக்கு வர அதன் பின்னே சமையல் செய்து ஒன்றாக உண்டு, பேசி, சிரித்து என நேரம் போனதே தெரியவில்லை.மிக நீண்ட நாள் பின்னே மனம் இலகுவானதை உணர்ந்தாள்.
தன்னையும் அவர்களோடு சேர்த்து குடும்பமாய் அனுசரித்து, அன்பைக் காட்டுவதோடு, தீபாவின் கணவரும் கூட இவளோடு மிக அன்பாகவே நடந்துக் கொள்வான்.
“மாமா, இன்னிக்கு காலைல அம்மா பேசுரப்பதான் சொன்னாங்க. நம்ம சித்தி பையனுக்கு நம்ம அதிய பேசலாமான்னு சித்தி கேட்குறாங்கலாம்.”
தீபாவோடு அதிதி உள்ளறையில் இருந்தாலும் இவர்கள் பேசுவதைக் கேட்க முடிந்தது.
“நல்ல ஜோப்ல வேற இருக்கான், சித்தியும் அவனும் மட்டும்தான், நம்மளுக்கும் அதி நம்ம கூட இருக்க போலவும் இருக்கும்.”
“அவர்களே நம்ம அதியை கேக்குறாங்கன்னா சந்தோஷம் தானே மாப்ள.”
“அதி கூட பேசிட்டு சொல்லலாம்.அதோட என் மனசுலயும் ஒரு எண்ணம் இருக்கு. பார்க்கலாம் கடவுள் என்ன நினைச்சிருக்கான்னு.”
“சரி மாமா, நீங்களே அவ கூட பேசிட்டு சொல்லுங்க. “
தீபாவுக்கு அதிதியின் முகத்தினில் கண்ட சங்கடத்தை உணர முடிந்தது.அவள் கைகளை தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டவள்,
“அதி, உனக்குப் பிடிக்காத எதுவும் அப்பா எப்போவும் பண்ண மாட்டாங்க. எங்களுக்கு சங்கடம்னு நீ எப்போவும் உனக்குப் பிடிக்காததை செய்யவும் வேணாம்.சரியா?”
தன்னை உணர்ந்து பேசும் தோழியின் அன்பில் மனம் சமன் பட, “தேங்க்ஸ்டி.” என அவளை அணைத்துக்கொண்டாள்.
“ஹேய்! ஹன்சம் வீட்டுக்கு டின்னெர் போறோமாமே அப்பா சொன்னாங்க.”
“அச்சோ! நீ சொல்லவும் தான் எனக்கும் ஞாபகமே வருது.” அவள் அலைபேசி எடுத்து ரேவதிக்கு அழைத்தாள்.
“ஆன்ட்டி நான் அதி.”
“இங்க ஆன்ட்டின்னு யாரும்
இல்லையே…”
“சாரி அத்த.”
“சாரில்லாம் எதுக்கு டா.சும்மாச் சொன்னேன். உனக்கு எப்போ தோணுதோ நீயாவே கூப்டு.நானா இனி கேட்கல. அதுக்கும் என்னை திட்றான் ஆதி.”
“அப்டில்லாம் இல்ல. இனி அப்படியே சொல்லிர்றேன். “
“அத்தை,நானும் ஹெல்ப்புக்கு ஏர்லியா வந்துறவா?”
“அதெல்லாம் வேணாம்.நான் அதெல்லாம் பண்ணிப்பேன். அதுக்காக நேரத்துக்கு வர இருக்காம வந்துருங்க. கொஞ்ச நேரம் இருந்துட்டு போலாம்.”
“சரி அத்தை.”
அலைபேசியை வைத்ததும்,
தீபா ஆர்வமாக, “ஹேய் இப்போவே கிளம்ப போறோமா? “
“எதுக்கு இப்போவே? மணி இப்போதான் அஞ்சு. ஒரு ஏழு மணிப் போல போலாம். “
“ஏது? ஏழு மணிக்கா? எனக்கு ஆறுமணிக்கெல்லாம் டின்னெர் சாப்பிடணும்.”
“நானே போக சங்கடப்பட்டுட்டு இருக்கேன். என்ன நீ? அண்ணா தப்பா எடுத்துக்க போறாங்க.”
“அண்ணா என்ன தப்பா எடுத்துக்க போறாங்க? “
அறை வாயிலில் நின்றுக்கொண்டு தீபாவின் கணவன் சுமன் கேட்க,
“ஒன்னில்லண்ணா.சும்மாதான்.” என அதிதி கூறிக்கொண்டே எழ,
“பொய்ப்பா, நான் காலைல சொன்னனே, அவங்க வீட்டுக்கு டின்னெருக்கு வர சொன்னாங்கன்னு நேரத்துக்கு சாப்பிட போக முடியுமா? கொஞ்சம் முன்னாடியே போலாம்னா வேணாங்குறா அதான்.”
“ஆறு மணிங்குறது உனக்கு கொஞ்சம் முன்னாடி?”
சிரித்த சுமன், “அவ உங்க மில் ஓனருக்கு பேன் ஆகிட்டா அதான். “
‘எப்டி என் புருஷன்?’ என தீபா கண்களாலேயே கேட்க,
“ஜாடிக்கு எத்த மூடிதான்.” என அருகிருந்த தலையணைக் கொண்டு அடித்தவள்,
“நீங்க பேசிட்டு இருக்கண்ணா நான் டீ போடறேன்.” என அறைவிட்டு வெளியே சென்றாள்.
இவர்கள் ஆதிரையன் வீட்டுக்கு வர மணி ஏழை தொட்டிருந்தது.
உள்ளே வரவேற்ற ரேவதி அவர்களை அமரச் சொல்ல,
“அத்தை, இது செல்வாப்பா. ரிடயர்ட் ஜஜ்.எனக்கு அம்மா அப்பா,அப்றம் என்னோட கார்டியன் எல்லாமே.”
“வணக்கம் ண்ணா.ரொம்ப சந்தோஷம் உங்களைப் பார்க்க கிடைத்தது. அதியை சின்னதுல பார்த்தது.இந்த ஊர் விட்டு போனத்துக்கப்றமே என்னால பார்க்கவோ வரவோ சூழ்நிலை அமையல. இல்லன்னா கண்டிப்பா தனியா விட்டிருக்க மாட்டேன்.”
“அது நம்ம நினைக்கிற எதுவும் நடக்குறதில்லையே. கடவுள் சித்தம் அதுதான்.இப்போ பார்க்கறதுக்கு நல்லா தானே இருக்கா. அதை நினைத்து சந்தோஷப்படலாம் ம்மா.” கூறியவர்,
“தம்பி இல்லையாமா?” கேட்க,
“ஏதோ தோப்புல ஒரு பக்கம் கரண்ட் லைன் எரியலன்னுச் சொல்லி கால் பண்ணாங்க. அதான் என்னனு பார்த்துட்டு வரேன்னு போயிருக்கான். இப்போ வந்துருவாண்ணா நீங்க இருங்க.”
“இது சுமன் அண்ணா அப்றம் இது அவங்க வைப் தீபா. என்னோட பெஸ்ட்டு பிரன்ட்.”
அவர்களை அறிமுகம் செய்தவள் அவரோடு உள்ளே சென்று இவர்களுக்காகக் குடிக்கத் தயாரித்து வைத்திருந்த பானத்தைக் கொண்டுவந்து கொடுத்தாள்.
இவள் கொடுக்கவுமே ஆதிரையனும் உள்ளே வந்தான்.
“ஹாய் அங்கிள், நீங்க வர்றப்ப இருக்கணும்னு இருந்தேன் திடீர்னு கால் பண்ணவும் போய்ட்டேன்.”
“பரவால்லப்பா.சரிபண்ணியாச்சா? “
“சரி பண்ணிட்டாங்க. நைட் எப்போதும் லைட் போட்டேதான் வைத்திருப்போம். தோப்பு புல்லா வெளிச்சமா தான் இருக்கும்.”
“அதுவும் நல்லது தான்.”
அத்தோடு சுமனோடும் அறிமுகமாகியவன் அவனோடு பேச ஆரம்பிக்க அவர்களது தொழில், நட்பு எனப் பேச்சு நீண்டுக் கொண்டே போனது. அதிதியும் தீபாவும் அருகருகே அமர்ந்திருக்க, தீபாவோ,
“அடி லைட்லாம் போட்டிருக்காம், நாம வெளில போலாமா?”
“சும்மா இருக்க மாட்டியா? இப்போ எப்படி போறதாம்? காலைல பார்க்கலாம்? “
“கர்ப்பமா இருக்கப்ப ஆசையா கேட்குறதெல்லாம் பண்ணிக்கொடுக்கணும்டி, நீயெல்லாம் பிரெண்டா? “
முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு கேட்க,
“உன் வாலு தனம் இதுக்கெல்லாம் சரியாகாதுடி, சும்மா இரு. “
அதிதியும் தீபாவும் மெதுவாக அவர்களுக்குள் பேசிக்கொள்ள,
“என்னம்மா அதி,என்ன வேணும்? “
அதிதியை முந்திக்கொண்ட தீபா,
“ஒன்னில்ல ஆன்ட்டி வெளில போகலாமா போறிங்கா இருக்கு சொல்றா அதான்.”
‘அடிப்பாவி! என்னையா மாட்டி விடற?’ அவளை முறைக்க,
“அதுக்கென்னம்மா போய்விட்டு வாங்களேன் வெளிச்சம் இருக்கே. “
ரேவதி கூற,
“அதானே வா போகலாம்.” என தீபா அழைக்கச் செல்வ நாயகமோ,
“தீபா இந்த டைம்ல வெளில போகக் கூடாது.காலைல போகலாம் ம்மா.”
என்றவர், “அவ கர்பமா இருக்காமா. இப்போ கூட டாக்டரை பார்த்ததும் அதியை பார்க்கணும்னு கிளம்பி வந்துட்டா.”
“ஓஹ், அப்பன்னா வெளில போகவேணாம்டா. இருட்டிருச்சில்ல. வேணும்னா மொட்டை மாடிக்குப் போய் பாருங்களேன், புல்லா முழு ஊரும் தெரியும்.”
“ஆதி இவங்கள மேல் மாடிக்கு அழைச்சிட்டு போப்பா.கொஞ்சநேரம் இருக்கட்டும். “
அவர்களை அழைத்தவன் முன்னே செல்ல அவர்களைத் தொடர்ந்து தீபா சுமனோடு செல்ல,அதியும் பின்னோடு சென்றாள்.
மேலே செல்லவுமே குளிர் கற்று முகத்தை தீண்டியது. தென்னங்கீற்றின் உரசல் சத்தம் இசையாய் இருந்தது.தோட்டம் முழுதும் ஆங்காங்கே மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருக்க, பார்க்க அத்தனை அழகாய் இருந்தது. தெரு விளக்கின் ஒளிர் பாதை நெடுகிலும் இருக்க,அவ்வப்போது வந்து செல்லும் ஓரிரு வாகனச் சத்தம் மட்டுமே இருக்கே அவ்விடம் மிக ரம்மியமாக இருந்தது.
“ஆதி, நம்ம அதியை உங்களுக்கு சின்ன வயசுல இருந்தே தெரியும் சொன்னாங்க மாமா.ஞாபகம் இருக்கா உங்களுக்கு?”
அதிதியை பார்த்தவன் அவள் இவனை பார்ப்பதும் பார்வையை திருப்புவதுமாக இருப்பதை உணர்ந்தவன், “ஹ்ம் ஞாபகம் இருக்கு, மேடம் ரொம்ப சுட்டி அப்போல்லாம். வாய் மூடி பேசாம பார்த்ததே இல்லை.”
“நம்மளுக்கு தெரியாதுன்னு நீங்க பொய் சொல்லக் கூடாது.அவ வாய் தேவைக்கு பேசுறசுத்துக்கும் திறக்குறது அபூர்வம் தான்.”சுமன் கூறிச்சிரிக்க,
“ஹேய் அதி, உனக்கு ஞாபகம் இருக்கா? “
தீபா அவளிடம் கேட்டிட,
புன்னகைத்தவாறே ‘இல்லை’ என தலையசைக்க,
“அப்போ மகேஷ் மட்டும் எப்படி ஞாபகம் இருக்கு? ” என ஆதிரையன் பட்டென்று கேட்டான்.
“சின்ன வயசு நினைவுகள் நம்ம மனசுல பதிந்து போன, நமக்கு வேண்டப்பட்டது மட்டும் தான் ஞாபகம் இருக்கும். மகேஷ் நான் இந்த ஊர் விட்டு போறப்ப என்கூட இருந்த பிரன்ட். அதுனால நினைவிருக்கும் போல. “
“ஹ்ம், அப்போ நீ ஆதி சர் மனசுல பதிஞ்ச ஒரு விஷம்னு சொல்ற? “
தீபாசிரித்துக்கொண்டே சொல்லிட,
“நான் அப்டி சொல்ல வரல.” அதிதி தடுமாற,
“கரெக்ட் தான், நான் இந்த ஊர் விட்டு போறப்ப ரொம்ப ஆர்ப்பாட்டம் பண்ணித்தான் கிளம்பினேன்.எனக்கு அப்போ இருந்தது இவ மட்டும்தான், அதான் எனக்கும் நினைவிருக்குனு நினைக்குறேன். அவ பிறந்ததுல இருந்து அவளை பிரிந்து போற வரைக்கும் நினைவுல இருக்கு.”
அவனை வியந்து ‘அப்படியா?’ எனும் விதமாய் பார்க்க?அவனும் அவளை நிதானமாக பார்த்தான்.
இவர்கள் மாடியில் அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அதிதி மெதுவாக எழுந்து சற்று நகர்ந்தவள் மதிலில் சாய்ந்து சுற்றி வர இருந்த எழிலை ரசித்துக் கொண்டிருந்தாள்.
அப்படியே இவர்கள் அமர்ந்திருந்த இடம் பார்க்க அங்கே தீபாவும் சுமனும் மட்டுமிருக்க இவள் அவர்களுக்கு தனிமைக் கொடுத்து பார்வையை திருப்பிக்கொண்டாள்.
கீழே முன் வாயில் பக்கம் வண்டி நிறுத்தியிருந்த இடத்தில் ஆதிரையன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான். தன்னவனாய் எண்ணியவனே கண்முன் இருக்க,அதுவும் தன் மழலை மொத்தம் அவனோடு கழத்தேனாம் கூறுகிறான்.ஓர் பார்வைக்கூட உரிமையாய் பார்க்க முடியாததை எண்ணி கண்கள் நீர் திரண்டது.’எனக்கு,நான் மட்டும் என்றே கடவுள் எழுதியிருக்கான் போல.’ திரண்ட நீர் பார்வையை மறைக்க ஒரு கையால் கண்ணை துடைத்துக்கொள்ள இவளைத்தான் கீழிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். அவனையே தன்னை மறந்து சில நொடி பார்த்தவள் சட்டென திரும்பிக்கொள்ள யோசனையோடு ஆதிரையனும் உள்ளே சென்றான்.
இவர்கள் மேலே செல்லவும் ரேவதியோடு பேசிகொண்டிருந்தார் செல்வநாயகம். அவள் திருமணம் பற்றி பேச,
“அவளுக்கு நல்லதா நல்ல வாழ்க்கை அமையும் அண்ணா. “
“தம்பிக்கு பார்க்கலயா மா?”
பார்க்கணும் அண்ணா.இப்போ மூனு வருஷமா கேட்டுட்டே இருக்கேன் பிடிக்கொடுக்காம இருக்கான். பிடிக்காம செய்யக் கூடாது, அவங்க வாழ்க்கை சந்தோஷமா வாழ அவனே சொல்லட்டும்னு இருக்கேன் ண்ணா. இப்போ அவங்க அப்பாவும் போனதுக்கப்புறம் இன்னும் யோசனையா இருக்கு.”
“கடவுள் விதிச்சது, நடந்தே ஆகும். பார்க்கலாம்.அவங்களுக்கான நேரம் கூடி வரணுமே.”
இவர்கள் பேசிக்கொண்டிருக்கவுமே வெளியில் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த ஆதிரையன் உள்ளே வந்தான்.
“ஆதி பிள்ளைங்கள வர சொல்லுப்பா நேரமாகுது சாப்பிடலாம். “
“சரிம்மா.” என்றவன் மேலேச் செல்ல அதிதி கீழே வந்துக்ககொண்டிருந்தாள்.இவனைக் கண்டவள் பேசவா வேண்டாமா என யோசிக்க,
“எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.”
“இப்போவா? “
“இப்போன்னாலும் ஓகேதான்.” என்றவன்,
“வா.”எனக் கூறி மேலே படியேற இவளும் பின்னோடு சென்றாள்.
“சுமன், அம்மா சாப்பிட வரச் சொல்ராங்க. போகலாமா?”
“போலாம், நேரம் போனதே தெரில. கண்டிப்பா நாமலும் இங்க ஒரு வீடு அமைச்சுக்கணும். இருக்க வேலைகளோட டென்ஷனுக்கு இங்கதான் கொஞ்சம் மனசு ரிலாக்ஸ் ஆகுது.”
“அதுக்கென்ன கண்டிப்பா வாங்கலாம். அதுவரைக்கும் எப்போவும் நம்ம வீட்ல நீங்க வந்து இருக்கலாம்.”
‘சரி போகலாம்.நமக்காக மாமாவும் வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க.” எனக் கூறிக்கொண்டு சுமன், தீபாவை அழைத்துக்கொண்டு முன்னாடி செல்ல,
“அதி, ஒரு நிமிஷம்” எனவும், அவள் அவனைப் பார்க்க,
“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா? “
இவளோ அவனை விழிவிரித்து ‘என்ன?’ என்பதாய்ப் பார்க்க,
“இந்த ஒரு மாசமா என்னால ஒன்னுமே பண்ண முடில. என்ன முடிவெடுக்குறதுன்னும் தெரில. இந்த நிலம், சொத்து ஒன்னுமே எனக்கானது இல்லைனு தெரிஞ்சப்பறம் என்னால இங்க இருக்க முடில. இதையெல்லாம் பயன்படுத்த பிடிக்கல. ஆனாலும் உனக்கு மொத்தமா எப்படி தூக்கி தர்றதுன்னும் தெரில. கண்டிப்பா எப்போவும் என் அப்பாக்கு அவப்பெயர் வர விடமாட்டேன். அதோட, என் சுயமரியாதையும் இதுல இருக்கு. தெரியாம பயன் படுத்திக்குறது வேற, தெரிந்த பின் என்னால சாத்தியமா முடில.”
“இந்த வீட்டை மட்டுமே தர்றதுன்னாலும் அங்கேயும் கண்டிப்பா கேள்வி வரும். அதுக்கு மொத்தமா கொடுத்துறலாம். அதோட அம்மாவையும் கண்டிப்பா யோசிக்கணும்.அவங்க அப்பா மேல ரொம்ப மரியாதை வச்சிருக்காங்க அதை எப்போவும் நான் சிதைக்க விரும்பல.’
‘நமக்குள்ள உறவுனு ஒன்னு வந்துட்டா அப்றம் உனக்கு வேண்டியவங்க வச்சு உனக்கு இதையெல்லாம் பார்த்துக்கலாம். நான் ஏற்கனவே வேலை பார்த்த கம்பனியில் மறுபடியும் ஜோஇன் ஆகிட்டேன். சோ எனக்கு அதுபோதும்.”
“கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கத்தான் போற, நானும் கூட, அது நாமலாவே இருந்துப்போம். நான் ரொம்ப நல்லா யோசிச்சுதான் முடிவெடுத்திருக்கேன். நீயும் யோசிச்சி சொல்லு.”
“கண்டிப்பா இந்த சொத்துக்களை உனக்கு சேர்ப்பிக்குறதுக்காக மட்டுமே கல்யாணம் பண்ணிக்க கேட்குறேன்னு நினச்சுக்க வேணாம்.அது காரணமா இருந்தாலும், கல்யாணதுக்கப்றமா நமக்காக நாம வாழலாம்.யோசிச்சி சொல்லு.”
கூறியவன் அவளிடம் எவ்வித பதிலும் இன்றி அமைதியாக இருக்க, அவளைப் பார்த்தவன் கீழேச் சென்றான்.
ஆதிரையன் திருமணம் பண்ணக் கேட்பான் என்று சற்றும் எதிர் பார்க்கவில்லை. அத்தோடு கவிஞனாய் அவளுக்கு அவன் விருப்பம் தெரிவித்திருக்க, இப்போது இவன் இப்படி கேட்பது யோசனையாக இருந்தது. ‘நான்தான் அவன் எழுதியதை பிழையாகப் புரிந்துக்கொண்டேனோ?’
என் கவிஞனே எனக்கு கிடைக்க வரமாய் இது அமைந்தாலும், இப்போது ஆதிரையனாய் அவனை ஏற்க மனம் ஒத்துழைக்கவில்லை. ‘நான் இந்த சொத்துக்களுக்கு ஆசைப் படுகிறேன் என்று நினைத்திருப் பானோ?’
இதில் யோசிக்க ஒன்றும் இல்லை.இந்த சொத்துக்காகவெல்லாம் கல்யாணம் பண்ணிக்க முடியாது.என் காதல் போதும் தனியே வாழ்ந்துக்கொள்வேன்.’ மனதோடு கூறிகொண்டவள்,கீழேச் செல்ல மேசையில் உணவுண்ண அனைத்தும் தயார் நிலையில் இருந்தது. ஆதிரையனுக்கு எதிர் இருக்கையில் அமர, அவளையே பார்த்துக்கொண்டு உணவுண்டான். அவள் முகத்தினில் எவ்வித மாற்றமும் இன்றி சாதாரணமாகவே இருந்தாள். மனதில்,’ சரியான அழுதக்காரி’ என்றவன் அதன் பின்னே அவளை திரும்பியும் பார்க்கவில்லை.
இவர்கள் கிளம்ப, வண்டியில் ஏறும் போது, “அதி ‘ என அழைத்த ரேவதி, ‘இனி அடிக்கடி வரணும்டா சரியா?” என்றிட,
“கண்டிப்பா வரேன் அத்தை.” என்றாள்.
வண்டியில் அமர்ந்திருந்த தீபவோடு ரேவதி பேச, அவர்கள் அருகே வந்த ஆதிரையன்,
“நாளைக்கு உன் முடிவு தெரியணும். இல்லன்னா திங்கட்கிழமை இதையெல்லாம் அப்படியே விட்டுட்டு போய்டுவேன். அதுக்கப்றம் இங்க எது நடத்தாலும் அதுக்கு நான் பொறுப்பெடுத்துக்க மாட்டேன். என்னை நம்பி நிறையப் பேர் இங்க வேலை செய்றாங்க. அவங்க மொத்தப்பேரோட தொழிலும் என்னை நம்பியே தான் இருக்கு. புரிஞ்சிப்பன்னு நினைக்குறேன்.”
“மிரட்டுரீங்களா? “
“ஆமா மிரண்டுருவன்னு நல்லா புரிஞ்சிட்டதால மிரட்றேன்.”
அவனை முறைந்தவள் வண்டியில் ஏறிக்கொள்ள, வண்டி கிளம்பியது. இதழில் சிரிதாய் தவழ்ந்த புன்னகையோடு பார்திருந்தவன் மனம் முழுதும் இருந்தது என்னவோ, ‘என்னை மன்னிச்சிருடி தீ, உன்னை மொத்தமா மனசுல சுமந்துட்டு எப்படி இவகூட வாழப்போறேன் தெரில, ஆனாலும் எனக்கு வேற வழி தெரில.”
வீட்டுக்கு வந்தவர்கள் இரவு உறங்கச் செல்ல,
“அதி, இந்தா காலைல இவங்க வீட்டுக்கு போய்ட்டுதான் வந்திருக்காங்க.அப்போ உன் நேம்ல லெட்டர் இருக்கவும்
கொண்டு வந்திருக்காங்க. வந்ததும் தர மறந்துட்டாங்கலாம். கூறிக்கொண்டே தீபா நீட்டினாள் அவளுக்கான கடிதத்தை.
“சரிடா.” என வாங்கிக்கொண்டவள்
‘தான் அன்று வந்த கடிதத்திற்கு பதிலும் அனுப்பவில்லையே.’ இன்று அவன் பேசியதையும் வைத்துப் பார்த்தவள் பதபதைப்போடு திறந்தாள் கடிதத்தை.
அடுத்த அத்தியாயம் அவன் மடலோடு தொடரும்.