இதயத்தின் ஓசைதான் காதல்!

இதயத்தின் ஓசைதான் காதல்!

அத்தியாயம் – 6

அன்று வெள்ளிக்கிழமை வைஷ்ணவி கிளம்பி வேலைக்குப் போகும்போழுதே, ஸ்ரீயின் வீட்டின் முன்னே இரு கார்கள் நின்றிருந்தது.

காலையிலையே அவள் அப்பா கூறியிருந்தார், இன்று ஸ்ரீக்குப் பெண் பார்க்கப்போவதாய்.

ஸ்ரீ நேரமே வரக்கூறியதால் எட்டுமணிக்கே அவர் தோட்டத்துக்குச் சென்றுவிட்டார்.

இந்தப் பெண்பார்க்கும் சம்ப்ரதாயம் ஸ்ரீக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் வைஷ்ணவியின் நினைவு வரும் என்பது அவனுக்கு நன்கு தெரிந்தது. இந்த ஒருவாரக் காலத்தில் நன்கு அறிந்து கொண்டான்.

ஆனாலும், அவன் தகுதிக்கு குறைந்து ஆசைபட்டது அவனுக்குச் சரிவரும் போல் தெரியவில்லை. சரி வராததை எண்ணி ஏன் வெதும்புவானே என்று எண்ணி இந்தப் பெண்ணிற்கு சம்மதம் கூறிவிட்டான்.

அதனால்தான், பெண் வீட்டார் வரக்கூறியதும் ஒருவாறாக முயன்று தன்னைச் சரி செய்து கிளம்பி விட்டான்.

விக்கியைப் பற்றி மாறனிடம் கூற அவரையும் காலமே தோட்டத்துக்கு வரக்கூறிவிட்டான். தனக்கு முன் அவளுக்குத் திருமணம் முடிந்தால் தன் மனம் ஒரு நிலையில் இருக்கும் என்ற எண்ணத்தில்.

ஆனால், மாறனிடம் ஆர அமர்ந்து பேசமுடியாமல் வேலைகள் இழுக்க, அவரிடம் கூறாமலே இதோ பெண் வீட்டுக்கு கிளம்பியும் விட்டாகிவிட்டது.

என்ன செய்வது எல்லாம் விதியின் சதி போலும்.

பெண் கீர்த்தனா அழகாக இருந்தாள். போட்டோவை விட நேரில் மிக அழகு. உண்மையைச் சொல்லப்போனால் வைஷ்ணவியை விடப் பல மடங்கு அழகாகத் தெரிந்தாள்.

அந்த அழகு ஸ்ரீயை எட்டவில்லையோ என்னவோ? பார்த்தான். ஒருமுறை அல்ல மீண்டும் மீண்டும் பார்த்தான்.

ஆனால் அந்த அழகு ஸ்ரீக்கு புலப்படவில்லை. சரியாகச் சொல்லவேண்டும் என்றால் அவனுக்கு வைஷ்ணவியை விட யாரும் அழகாகத் தெரியவில்லை.

கண்களை அப்படியே சுழல விட்டு வீட்டை ஆராய்ந்தான். அவர்கள் வீட்டைப் போலப் பெரிய பங்களாதான். அவன் தகுதிக்கு இந்த வீட்டை பிடித்திருந்தது.

பெண்ணைப் பிடிக்கவில்லை!

செய்யும் சீர்களைக் கேட்டார் ஸ்ரீ கரண் இவர்களைப் போல நிறைய நிறைய அடுக்கினர். அந்தத் தகுதி பிடித்திருந்தது.

பெண்ணைப் பிடிக்கவில்லை!

இவர்கள் வீட்டிலிருந்து வந்தவர்கள் பெண்ணின் படிப்பை விசாரிக்க, யாரோ MBA என்று கூறினார்கள் அந்தப் படிப்புப் பிடித்திருந்தது. அதுவும் அவனது தகுதிக்குப் பிடித்திருந்தது.

பெண்ணைப் பிடிக்கவில்லை!

அவனுக்குப் பெண்ணைப் பிடிக்கவில்லை என்பது பெரிய விஷயமாகத் தெரியவில்லை.

பெண்ணைப் பார்த்தான் அழகாக இருந்தாள், வசதி வாய்ப்பைப் பார்த்தான் அவன் தகுதிக்குப் பொருத்தமாக இருந்தது சரி என்று விட்டான்.

பெண்ணின் வீட்டில் இவனைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. ஸ்ரீ கரண் பேரன், அம்மா, அப்பா இல்லை.

வெளிநாட்டில் இருந்தவர்கள் அப்பா, அம்மாவின் மறைவிற்கு பின் தாத்தாவுடன் இருக்கிறான் என்பது வரை ஊரறிந்த விஷயம் அதேதான் இங்கேயும் கூறப்பட்டது. நல்ல பேரும், வசதி வாய்ப்பும் உள்ளவர்கள் என்பதால் மேலே விசாரிக்க நினைக்கவில்லை.

ஷிவானி, “அண்ணா ஓகேவா?” என்றதற்கு,

அவன் கட்டை விரலைக் காட்ட, அவள் அப்படியே தாத்தாவிடம் கூற, திருமணப் பேச்சு ஆரம்பித்தது.

விசாரித்தவரை ஸ்ரீகரணுக்குத் திருப்தியாக இருக்க, அடுத்த மாதத்தில் வரும் நல்லநாளில் நிச்சயதார்த்தத்தையும், திருமணத்தையும் வைத்துக் கொள்ளலாம் எனப் பேசப்பட்டது.

“அண்ணா, அண்ணிக்கிட்ட எதாவது பேசணுமா?” என ஷிவானி கேட்க,

யாரையும் பார்க்காமலே ‘வேண்டாம்’ என்று தலையாட்டிவிட்டான் ஸ்ரீ.

இவனிடம் பேச வேண்டும் என்று எண்ணியிருந்த கீர்த்தனா எண்ணம் நிறைவேறாமலே, இந்தத் திருமணத்தை உறுதி செய்து வந்திருந்தனர் ஸ்ரீ வீட்டினர்.

வீட்டுக்கு வந்த ஸ்ரீக்கு மனது ஒரு நிலையில் இல்லை. தவறு செய்வதாகத் தோன்றியது, அவசரத்தில் எல்லாம் முடிவெடுப்பதாகத் தோன்றியது.

மனம் மிகவும் குழப்பத்தில் இருக்க, செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தாலும், தன்னறைக்கு வந்து படுத்துக் கொண்டான்.

“என்னாச்சுண்ணா?” என்ற ஷிவானியின் கேள்விக்கு,

“டிராவல் பண்ணினது கொஞ்சம் தலைவலிக்குது ஷிவானி” எனக் கண்ணை மூடி தூங்காமல், யோசித்துக் கொண்டிருந்தான்.

மிகவும் பயங்கரமான யோசனை அது!

அவனைப் பற்றியும், வைஷ்ணவியைப் பற்றியும்!

யோசனையின் முடிவுகள் எல்லாம் வைஷ்ணவிக்குக் காதல் கரம் நீட்ட, கடுப்பாக வந்தது, அப்படியே மேலும் யோசித்தப்படி படுத்திருந்தான்.

சிறிது நேரத்தில் அவனைதேடி வந்தார் ஸ்ரீ கரண்.

ஒரு கையை மடக்கி நெற்றியில் வைத்துப் பாதிக் கண்களை மறைத்தபடி படுத்திருந்தான் ஸ்ரீ.

அவன் தூங்குவது போல் அவருக்குத் தெரியவில்லை.

“என்னப்பா ஸ்ரீ… தூங்கலியா?” அவனது நெற்றியில் கை வைக்க,

டக்கென்று எழுந்தான் ஸ்ரீ.

“சொல்லுங்க தாத்தா”

அவனது வாயில் தாத்தா என்ற அழைப்பு அபூர்வமாகதான் வரும், இன்று வரவும், அவனது முகத்தைக் கூர்ந்துப் பார்த்தார் அவர்.

“என்னாச்சு உனக்கு, அந்தப் பொண்ணு பிடிக்கலியா?” நேரடியாகக் கேட்டார் அவர்.

“அப்படிலாம் இல்ல, கொஞ்சம் தலைவலி அதுதான், என்ன விஷயம்?”

“அது நம்ம செந்தில் இருக்கான்ல, அவனால் இனி நம்ம ஆடிட்டிங் பார்க்க முடியாதாம். அவனால் ரொம்ப அலைய முடியலியாம். அவன்கிட்ட வேலை பழகின பொண்ணு ஒன்னை வர சொல்லட்டான்னு கேட்டான், நானும் சரின்னு சொல்லிட்டேன்.

இப்போ முன்ன போல என்னால கணக்கு பார்க்க முடியல ஸ்ரீ, பழைய கணக்கு நிறைய அப்படியே நிக்குது, நீயும் பாக்க மாட்டேன்னு சொல்லிட்ட, சிவா மில் கணக்குப் பாக்குறான், அவன்கிட்ட எல்லாப் பொறுப்பும் குடுக்க முடியாது,

கணக்கை சிஸ்டம்ல சேர்த்தா ரொம்ப ஈசியா இருக்கும்னு நம்ம ஷிவானி பொண்ணு சொன்னா, அதுதான் நானும் வர சொல்லிட்டேன்” என,

“சரிங்க ஐயா.”

“ஏன் ஸ்ரீ நான் எது சொன்னாலும் சரின்னுதான் தலையாட்டுவியா?”

“செந்தில் அங்கிள் நல்லவங்களைதான் இங்க அனுப்புவாங்க, அதிலும் அவங்க கிட்ட வேலை பழகிருந்தா அந்தப் பொண்ணு நல்லாவே வேலை செய்யும். சோ பிரச்சனை இல்லை.”

“மதியம் போல நம்ம மில்லுக்கு வர சொல்லிருக்கேன், சிவா பாத்துகிறேன்னு சொல்லிருக்கான். அவனுக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணாம்” என்றார் கூடுதல் தகவலாய்.

“சரிங்கய்யா”

“சரி நீ ரெஸ்ட் எடு” என்பதாய் கிளம்பி சென்றார் ஸ்ரீ கரண்.

***

“வைஷ்ணவிமா, உனக்கு ஒரு நல்ல இடத்துல வேலை பாத்துத்தாறேன்னு நான் சொல்லிருந்தேன் தானே?” வேலை செய்து கொண்டிருந்த வைஷ்ணவியைப் பார்த்துக் கேட்டார் ஆடிட்டர் செந்தில்நாதன்.

“ஆமா சார் சொன்னீங்க? வேலை பார்த்தாச்சா?” சந்தோஷ குரல் அவளிடம்.

“பார்த்தியா என்னை விட்டுட்டு போறதுல உனக்கு அவ்ளோ சந்தோஷம்” பெரியவர் முகம் சுருக்க,

“ஐயோ! இல்லை சார். இது ஒரு எக்ஸைட்மெண்ட், புது வேலை புது இடம் அதுதான்” உள்ளே போன குரலில் கூற,

அவளைப் பார்த்து சிரித்தவர், “புது இடம்லாம் இல்ல வைஷு, உனக்கு ரொம்ப நல்லாவே தெரிஞ்ச இடம் உனக்கு ரொம்பப் பக்கம் வேற” புதிர் போட,

“எனக்கு ரொம்பத் தெரிஞ்ச இடமா?” யோசிக்க,

“உன்னோட பக்கத்து வீட்டுலதான் இனி நீ வேலைக்குப் போகப் போற? ஸ்ரீ தெரியும்தானே அவன்கிட்டதான் அவங்க எல்லா வேலையும் நீதான் இனி பாக்கணும், என்னை விட அதிகச் சாலரி தருவான். உனக்கு இனி எந்தப் பிரச்சனையும் இல்லை வைஷு”

“உண்மையாவா சார்” உண்மையாகவே ரொம்பச் சந்தோஷமாக இருந்தது வைஷ்ணவிக்கு.

“ஆமா வைஷு, நான் ஸ்ரீ கிட்ட எல்லாம் பேசிட்டேன். உனக்கு அவங்க மில் தெரியும் தானே, அங்கதான் வரசொன்னான். நான் உன்னைக் கொண்டு விட்டுட்டு வாரேன்” அவளையும் அழைத்துக் கொண்டு சென்றார் செந்தில்நாதன்.

அவளை அங்கு அழைத்துக் கொண்டு போக, அங்குச் சிவாவைக் கண்டவள் “சிவாண்ணா” அழைக்க,

“வைஷு! நீ எங்க இங்க?”

“நான் உனக்குப் போட்டியா இங்க வந்துட்டேன்” கண்ணடிக்க,

“இந்த வாய்தான் உன்னைக் காப்பாத்துது” சிரிக்க,

அவளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார் செந்தில்நாதன்.

“சொல்லுங்க சார்” என்றபடி சிவா அவரிடம் விசாரிக்க, ஸ்ரீ கரண் அவரிடம் கூறியதைக் கூறி அவளை விட்டு சென்றார்.

***

மாலை 5 மணி

வைஷ்ணவியைப் பார்க்க வேண்டும் போல் மனம் உந்த வாசலில் வந்து அமர்ந்து கொண்டான் ஸ்ரீ.

தூரத்தில் சிவா பைக் வர, ‘இவன் ஏன், இப்போ வாரான்?’ என்பதாய்ப் பார்திருந்தான் ஸ்ரீ.

ஆனால், சிவா இவன் வாசலில் அமர்ந்திருந்ததைக் பார்க்கவே இல்லை.

வைஷ்ணவியிடம் பேசியபடியே வந்து கொண்டிருந்தான்.

சிவா பைக்கில் அமர்ந்து பேசிக் கொண்டு வந்த வைஷ்ணவியைக் காணவும், இத்தனை நேரம் கூறிக் கொண்டிருந்த தலைவலி தானாகவே அவனுக்கு வந்திருந்தது.

இத்தனை நேரம் யோசித்துக் கொண்டிருந்தது எல்லாம் ஒன்றாக அவனை விரட்ட, வீட்டின் உள் வேகமாகச் சென்றான்.

வெளியில் இருந்து கோபமாக உள்ளே வந்த ஸ்ரீ, அவன%LS

Leave a Reply

error: Content is protected !!