இரட்டை நிலவு – 11

eiVCMWU67234-1db4d60e

தனதறைக்கு சென்று நெடுநேரமாக யோசித்த அமீக்கா, அடுத்து என்ன செய்வது என்ற முடிவிற்கு வந்தாள்.. முதல் கட்டமாக தாய் தந்தையிடம் சென்று, “ப்பா.. ம்மா.. என்மேல நீங்க கோபமா இருப்பீங்கன்னு தெரியும்.. ஆனா அதை விட அதிகமாவே என்மேல நம்பிக்கை வச்சிருந்தீங்க.. எனக்கு தெரியும்.. நான் அதை உடைச்சிட்டேன்.. நான் உங்க கிட்ட முதல்லயே உண்மையை சொல்லியிருக்கணும்..” என்ற அமீக்கா தயங்கி நின்றாள்..

அதற்குள், “எவ்ளோ ஈசியா சொல்ற.. நாங்க உன்மேல வச்சிருந்த பாசத்தை காரணமா காட்டி நீ பண்ணினதை சரின்னு சொல்ல வர்றியா?? நீயெல்லாம் என் வயித்துல தான் பொறந்தியா.. இனியும் ஒரு வார்த்தை பேசாத.. நீ எனக்கு பொண்ணும் இல்லை.. நான் உனக்கு அம்மாவும் இல்லை..” என வாசுகி வீரவசனம் பேசி கொண்டிருக்க, “ம்மா, நான் ஹான்டிகாப்ட்டா இருந்தாலும் ட்ரான்ஸ்ஜென்டரா இருந்தாலும் எப்படி இருந்தாலும் உங்க பொண்ணு தானே.. ஒரு பொண்ணா லட்சணமா எல்லாத்துலயும் பெர்பெக்ட்டா இருந்தா தான் உங்க பொண்ணு மத்தபடி இல்லைன்னா தலை முழுகிடுவீங்களா?? என்னம்மா நியாயம்??” என கேட்டாள் அமீக்கா..

அவளின் கேள்வியில் வெடவெடத்து போன வாசுகி, “இப்படி பேசி தானடி எங்களை நம்ப வச்சு கழுத்தை அறுத்துட்ட..” என பேச்சை வளர்த்து கொண்டே சென்றவரை ஒற்றை கைபிடியில் அமைதிபடுத்தினார் குகன்.. “அமீக்கா, ஒவ்வொருத்தரும் அவங்க அவங்களோட வாழ்க்கையில ஏதோ ஒரு காரணத்துக்காக போராடுறாங்க.. அந்த போராட்டம் எந்த வகையிலானதுன்றதுல தான் அவங்களோட வாழ்க்கை முன்னேற்றம் இருக்குது.. நீ சொல்ற விஷயம் தப்பான்னு முடிவெடுக்குறதுக்கு முன்ன அதை பத்தி முழுசா நாங்க தெரிஞ்சிக்கனும்மா..” என ஆதரவாக தலையை கோதினார்..

“தேங்க்ஸ்ப்பா.. என்னை புரிஞ்சிகிட்டதுக்கு.. நீங்க புரிஞ்சிக்குற வரை நான் வெயிட் பண்றேன்.. இன்னைக்கு ஈவினிங் பேமிலி மீட்டிங் போடலாம்.. என்னோட பாய்ன்ட் ஆப் வியூல இருந்து கொஞ்சம் பேசணும்.. உங்களோட புரிதலுக்கு 5% உதவியா இருந்தா கூட சந்தோசம்ப்பா..” என்று விட்டு கடந்தவளை ஆதுரமாக நோக்கினார் குகன்..

குகனை சமாதானப்படுத்துவது எளிது தான்.. ஆனால் வாசுகியையும் நிர்மலாவையும் கலந்துரையாடலுக்கு அழைப்பதே சிரமமே… ஆயினும் கையில் விழுந்து காலில் விழுந்தாவது அழைத்து விட வேண்டும் என்ற உறுதியோடு மாலைக்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய துவங்கினாள்..

இரு குடும்பத்திற்கும் ஒரு வழக்கமான பழக்கம் உண்டு.. சில நேரங்களில் வீட்டின் பின்னே இருக்கும் தோட்டத்தில் குடும்பமாக அமர்ந்து சூடான காபி ஆறும் வரை அமர்ந்து அரட்டை அடித்து விட்டு வருவர்.. ஓடி ஆடி கலைத்த மனிதர்கள் இளைப்பாறுவது என்பது அவசியமானது தானே.. அந்த யுக்தியை தான் அமீக்கா தற்பொழுது கையாளுகிறாள்..

சரியாக ஐந்து மணியளவில் ஒவ்வொருவராக வந்து சேர, ஒருவரின் முகத்தை மற்றொருவர் காணவில்லை.. முதலில் நிர்மலாவின் அருகே அமர்ந்திருந்த தன்வி திடீரென அமீக்காவின் அருகே சென்று கரம் கோர்த்து கொண்டாள்.. அவளின் இந்த செய்கையை அதிர்ச்சியுடன் நோக்கி கொண்டிருக்க, “அத்த, நீங்க தனுவை இப்படி முறைக்க வேணாம்.. என்கூட சேர்ந்ததால கோபப்படாதீங்க.. ஆக்சுவலா தன்வியும் என்னை மாதிரி தான்..” என்ற அமீக்காவின் குரல் தேங்கி நின்றது.. தவறு செய்து விட்டோம் என்பதனால் அல்ல.. எதிரில் இருக்கும் அத்தையாரின் மனம் வெதும்பி விடுமே என்ற மரியாதை..

“அமீ, நீ கண்டபடி உளறாத.. தன்வி அப்படி இல்லை.. நீ இங்க வா..” என தன்வியை பிடித்து இழுக்க, இந்த முறை தைரியமாகவே தாயின் கரத்தை தட்டியிருந்தாள் தன்வி.. மீண்டும் ஒரு முறை சமூகத்திற்காக தன் காதலை தியாகம் செய்து விட கூடாது என்ற உறுதியில் நிலைத்திருந்தாள்.. வாழ்வோ சாவோ அமீக்காவின் முறைப்படி அவளுடன் தான் என்றிருந்தாள்..

மகளின் இந்த மறுப்பை ஏற்று கொள்ள இயலாத நிர்மலாவோ, “அமீ.. நீ அவளை என்ன பண்ணி வச்சிருக்குற.. உங்க மாமா போனதுக்கு அப்புறம் மொத்த உலகமா தன்வியை மட்டும் தான் நினைச்சிட்டு இருந்தேன்.. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுக்க கூட விடாம உன்னோட சுயலாபத்துக்காக மாத்தி வச்சிருக்குற.. உனக்கு மனசாட்சி இருக்குதா?? இப்படி ஒரு பழியை சொல்லுறதுக்கு..” என தான் வளர்த்த அமீக்காவினை சீறி கொண்டிருக்க, அவரை எதிர்த்து பேசும் தைரியம் இல்லாது நின்றாள்..

அதற்குள், “இப்படி ஒரு குண்டை தூக்கி அண்ணி மேல போடுறதுக்கு தான் வர சொன்னன்னு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன் அமீ.. எப்போ இருந்து இப்படி போய் சொல்லி அடுத்தவங்க மனசை நோகடிக்க ஆரம்பிச்ச..” என வாசுகி பேசி கொண்டிருக்கும் போதே, தன்வியின் அழுத்தம் அதிகரிக்க அவளுக்குள்ளே நொறுங்கி கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்த அமீக்கா தேற்ற துவங்கினாள்.. வாசுகியோ நிர்மலாவினை தோளோடு அனைத்து ஆறுதல் சொல்வதாக அமீக்காவினை வசைபாடி கொண்டிருந்தார்..

அப்பொழுது, “நிறுத்துங்க…” என உரத்த சத்தத்தோடு குகன் எழ, அனைவரும் அதிர்ச்சியை அவரை நோக்கினர்.. “அமீ, நீ ஒரு நல்ல ஸ்பெக்கர் தான்.. ஆனா பேமிலிக்குள்ள இல்லை.. அடுத்த மனுஷங்களை காயப்படுத்தாம பேச தெரியனும்..” என கண்டிக்க, “ப்பா, எங்க பக்கம் இருக்குற நியாயத்தை எக்ஸ்ப்ளைன் பண்ண தான் ட்ரை பண்ணிட்டு இருக்குறேன்..” என்ற அமீக்கா, தன்வியை தன் தோளோடு அணைத்திருந்தாள்..

“என்னை பேச விடு அமீ..” என கடிந்து கொண்ட குகன், “வாசு, நீ கொஞ்ச நேரம் பேசாம இரு.. அக்கா, உங்களுக்கு ஒன்னு நியாபகம் இருக்குதா.. சின்ன வயசுல அம்மா அப்பா இல்லாதப்போ அன்னை பக்கத்துல வச்சு காமிக்ஸ் ஸ்டார்ட் பண்ணி கலாட்டா வரை கதை வாசிச்சு எக்ஸ்ப்ளைன் பண்ணுவ.. அப்படி நிறைய பேரோட லைப் ஸ்டோரி கூட இருந்துச்சு.. அன்னை தெரசா, கல்பனா சாவ்லா, தில்லையாடி வள்ளியம்மை, அஞ்சலயம்மாள், முத்துலட்சுமி ரெட்டி.. ஏன் பூலாந்தேவி வரை கதையில வந்திருக்குறாங்க.. அந்த வயசுல என்னோட மனசுல பதிஞ்சது ஒன்னு தான்.. பொண்ணுங்க போல்ட்டா இருக்கணும்.. சாதிக்கணும்னு.. ஆனா உன்னோட விஷயத்துல மாமா இறந்தப்போ வீட்டுக்குள்ளேயே ஒடுங்கி வெளிய வராம போன.. ஏன்?? நாட்டோட பாதுகாப்புக்கு போராடுன மாமாவை கல்யாணம் பண்ணின நீ வீட்டுக்குள்ள ஜெயில் வாழ்க்கை வாழ்ந்த.. ஏன்?? ஊருக்குள்ள யாரும் எதுவும் சொல்லிட கூடாதுன்னு… அம்மா சொல்லி குடுத்த ஒழுக்கங்கள்ல ஒன்னு.. அடுத்தவங்க பேசுற மாதிரி நாம நடந்துக்க கூடாது.. அது சரி தான்.. ஒரு குடும்பத்தோட ஒழுக்கம் பெண்ணோட நடத்தயில தான் இருக்குது.. சின்ன வயசுல நீ சொல்லி குடுத்த கதைகளும் உன்னோட வாழ்க்கையில நடந்த சம்பவங்கள் எல்லாமே எனக்குள்ள ஒரு தாக்கமா மாறி நீங்க ரெண்டு பேர் என்ன திட்டுனாலும் காதுல வாங்கிக்காம என்னோட அமீக்காவையும் தன்வியையும் தைரியமா அவங்களோட சிறகை விரிச்சு பறக்கணும்னு கத்து குடுத்து வளர்த்தேன்… என் அக்கா சாதிக்க முடியாததை இவங்க ரெண்டு பேரும் நடத்தி முடிக்கணும்னு நினைச்சேன.. ஆனா இப்படி ஒரு திருப்பம் வரும்னு யோசிக்கவே இல்லை.. சம்பந்தியம்மா சொல்லும் போது நம்பாத நான் அமீ சொல்லவும் எனக்கு எப்படி இருந்திருக்கும்.. ஏன்னா உங்க எல்லாரையும் விட ரெண்டு பேர் மேல அதிக நம்பிக்கை வச்சது நான் தான்.. நம்பிக்கை ஒரு கண்ணாடி மாதிரி.. உடைச்சிட்டா ஓட்டமுடியாது.. ஓட்டினாலும் பிரயோஜனம் இல்லை.. ஆனா என்னோட கண்ணாடி உடைஞ்சது இப்போ இல்லை அக்கா.. ரெண்டு வாரத்துக்கு முன்னாடியே கீறல் விழுந்து போச்சு.. இந்த “ஹோலி” புக்கை தன்வி சூசைட் ட்ரை பண்ணின அன்னைக்கு அவளோட கபோர்ட்ல இருந்து எடுத்தப்போவே.. அன்னைக்கே எனக்கு தெரியும்.. தன்விக்கு இந்த ப்ராப்ளம் இருக்குதுன்னு.. உடனே அமீக்கா கிளம்பி போகவும் எனக்கு இன்னொரு விஷயமும் உறுதி ஆய்டுச்சு.. திரும்பி வரும் போது அமீ மட்டும் உண்மையை ஒத்துப்பான்னு நான் எக்ஸ்பேக்ட் பண்ணல.. இப்போ ரெண்டு பெரும் லெஸ்பியன்ஸ் தான்.. அமீ சொல்றது உண்மை தான்.. இதை நாம நம்பி தான் ஆகணும்..” என்று விட்டு மறுபுறமாய் திரும்பி கொண்டார்..

அநேகமாக பலநாள் நெஞ்சில் ஒளித்து வைத்த உண்மை இறக்கி வைத்து விட்டதினால் கண்ணீர் துளிர்த்திருக்கலாம்.. அமீக்காவிற்கோ தந்தையை ஓடி சென்று அனைத்து குலுங்கிட வேண்டும் என்றிருந்தது.. ஆணால் தன்வியோ பேச்சு மூச்சின்றி வாயடைத்து போயிருந்த நிர்மலாவை கண்டு உடைந்தவள் அங்கேயே அமர்ந்து குலுங்க தொடங்கி விட்டாள்..

“ஆமா ம்மா.. நான் ஒரு லெஸ்பியன்.. இது எனக்கு முன்னாடியே தெரியும்.. இந்த உண்மையை உங்க கிட்ட எப்படி சொல்றது?? என்னன்னு சொல்றதுன்னு தெரியல.. அன்னைக்கு கூட மீகா என்னோட உண்மை வெளிய வந்துட கூடாதுன்னு தான் எல்லாத்தையும் அவமேல தூக்கி போட்டுக்கிட்டா.. என்ன மன்னிச்சிடுங்கமா.. என்னால உங்களுக்கு ஒரு நல்ல பொண்ணா இருக்க முடியலை.. மன்னிச்சுடுங்கம்மா..” என தரையை வெறித்தவாறு மன்னிப்பினை நிறுத்தாது வேண்டி கொண்டிருந்தாள்.. 

உடனே அவளை பற்றி தூக்கி நிறுத்திய குகன், “நீயோ அமீயோ மன்னிப்பு கேக்க கூடாதும்மா.. உங்களோட பீலிங்க்ஸ புரிஞ்சிக்காம இந்த நிலைமைக்கு கொண்டு வந்த சொசைட்டி தான் மன்னிப்பு கேக்கணும்.. இனிமே தான் நீங்க ரெண்டு பெரும் ரொம்ப தைரியமா இருக்கணும்.. இன்னும் பேஸ் பண்ண வேண்டியது நிறைய இருக்குது.. நீங்க பண்ணின தப்பு என்ன?? எந்திரிம்மா.. கண்ணை துடைச்சிக்கோ..” என ஆறுதல் கூறி கொண்டிருக்க, “ஏங்க.. சின்ன புள்ளைங்க எதோ ஒரு விளையாட்டு தனமா பண்ணுதுங்கன்னா நீங்களும் அதுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்குறீங்க..” என குறுக்கிட்டார் வாசுகி..

“எது?? சின்ன புள்ளைங்களா?? சின்ன புள்ளைங்க பண்ணின தப்புக்கு தண்டனை கொடுக்குற மாதிரியா நீங்க எல்லாரும் நடந்துக்கிட்டீங்க?? உங்களை நீங்களே கேட்டுபாருங்க.. யாரு சின்னப்புள்ளத்தனமா நடந்துக்குறான்னு..” என அதட்டினார் குகன்..

“ம்மா, நாங்க இவ்ளோ நேரம் பொறுமையா உங்க கிட்ட எடுத்து சொன்னது எங்களை நியாயப்படுத்திக்குறதுக்காக இல்லை.. இந்த உலகம் எங்களுக்கு தெரியுறதுக்கு நீங்க தான் காரணமா இருந்தீங்க.. அந்த வகையில இதெல்லாம் நீங்க தெரிஞ்சிக்கணும்னு நினைச்சோம்.. தட்ஸ் ஆல்.. ம்மா.. அத்த.. ஒரு விஷயம் நல்லா புரிஞ்சிக்கோங்க.. நாங்க எந்த தப்பும் பண்ணலை.. எங்ககிட்ட எந்த குறையும் இல்லை.. நாங்களும் ஆர்டினரி தான்..” என தீர்க்கமாக உரைத்தாள் அமீக்கா..

“குகா.. நீ சொல்ற மாதிரி நாங்க இவங்க ரெண்டு பேரையும் எதுவும் சொல்லலை.. திட்டக்கூட இல்லை.. ப்ளீஸ் ஏதாவது சைக்கியாரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போய் சரி பண்ண பாப்போம்.. நாளைக்கு மாப்பிள்ளை வீட்டுகாரங்க வந்து கேட்டா நான் என்ன பதில் சொல்லுவேன்..” என்றதும் தான் தாமதம்.. தன்னை பிடித்திருந்த மாமாவின் கைகளையும் அணைத்திருந்த மனம் கவர்ந்தவளின் தோள்களையும் உதறி விட்டு, “ம்மா.. நீங்க என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா?? ம்மா.. இங்க இத்தனை பேரு தெளிவா தானே சொல்லிட்டு இருக்குறாங்க.. புரியலையா.. நானும் மீகாவும் காதலிக்குறோம்.. இதை சொல்ல தான் போராடிகிட்டு இருக்குறோம்.. ஏன் நாங்க எல்லாம் காதலிக்க கூடாதா?? கவிதையில மட்டும் தான் காற்று புகா இடத்துல கூட காதல் நுழையும்னு ஏத்துப்பீங்களா?? நிஜ வாழ்க்கையில அப்படி நடந்தா ஹையோ பாவமே.. தப்பேன்னு புலம்புவீங்க.. இதென்னமா லாஜிக்.. எவனோ ஒருத்தன் என்னை புடிச்சிருக்குன்னு வந்து நிக்குறான்.. கல்யாணத்துக்கு உடனே சரின்னு சொல்லியாச்சு.. உங்க சொந்த தம்பி பொண்ணு தானே.. பிடிச்சிருக்குன்னு சொல்றேன்.. அருவருப்பா பாக்குறீங்க.. சைக்கியாரிஸ்ட் கிட்ட கூட்டிட்டு போக சொல்றீங்க.. ம்மா எனக்குள்ள இந்த பீல் அஞ்சு வருஷமா என்னை அரிச்சிட்டு இருக்குது.. யார் கிட்ட சொல்ல?? என்ன சொல்லன்னு தெரியாம தவிச்சிட்டு இருக்குறேன்.. அதை புரிஞ்சிக்க முடிஞ்சிதா?? சரி.. நீங்க சொல்ற மாதிரியே அவனை கல்யாணம் பண்ணிக்குறேன்.. எனக்கும் விருப்பமில்லாம அவனுக்கும் நிறைவில்லாம வாழுவோம்.. நீங்களும் அப்பாவும் மாதிரி தான்மா நாங்க.. மீகா இல்லாம இன்னொரு வாழ்க்கையை என்னால யோசிக்க முடியாது..” என வெடித்திருந்தாள் தன்வி.. 

பல நாடுகளில் தடைசெய்யப்பட்டும் சில நாடுகளில் அனுமதிக்கபட்டும் வரும் நிலையில் இந்தியாவில் அனுமதி மறுக்கப்பட்டது.. 1862ம் ஆண்டில் பிரிவு 377 அறிமுகப்படுத்தப்பட்டு “இயற்கைக்கு மாறான குற்றங்கள்” என்ற வகையில் இது போன்ற பாலினங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.. அதனை தொடர்ந்து நாஸ் அறக்கட்டளையால் தொடர்ந்த போராட்டத்திற்கு பிறகு செப்டம்பர் 6, 2018 அன்று மறுபரிசீலனை செய்து ஓரினசேர்க்கையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.. ஆனால் திருமணம் செய்யும் சுதந்திரம் மறுக்கப்பட்டது..

அந்த நாளை ஓரினசேர்க்கையாளர்கள் அனைவரும் கூடி சாலையில் வண்ணபொடிகள் தூவி கொண்டாடினர்.. இதில் அவர்களுக்கான கொடியின் அடையாளத்தை வெளிப்படுத்தினர்.. [25]

2010ல் லிப்ஸ்டிக் லெஸ்பியன் கொடி வடிவமைப்பு இருந்து பெறப்பட்டது. [26][27]

லெஸ்பியன் சமூக கொடி 2018 இல் சமூக ஊடகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது, பாலின மாறுபாட்டைக்குறிக்கும் இருண்ட ஆரஞ்சு கோடு.    

  -அமீக்கா