இரட்டை நிலவு – 12

eiVCMWU67234-7803c686

இரட்டை நிலவு – 12

தன்வியின் செய்கையை எவரும் எதிர்பாராது திகைத்து நிற்க, பல நாட்களாக மனதில் உள்ள ஆதங்கத்தை கொட்டி தீர்த்த நிம்மதியில் தன்விக்கு மூச்சு மேலும் கீழுமாய் வாங்கியது.. முதுகுதண்டில் நீவி விட்டு சகஜமாக்க முயன்று கொண்டிருந்த அமீக்கா, “அத்த நீங்க பேசுறது நிஜமாவே அபத்தமா இருக்குது.. நான் என்ன சொல்லி புரிய வைக்குறதுன்னு யோசிச்சிட்டு இருக்கும் போதே தன்வி எமோஷனல் ஆய்ட்டா.. இப்போ தெளிவாவே புரியுற மாதிரி சொல்றேன்.. சின்ன வயசுல நீங்க ட்ரெஸ் எடுத்துட்டு வரும் போது ரெண்டு பேருக்கும் ஒரே மாதிரி கவுன் எடுத்துட்டு வருவீங்க.. ஸ்டார்டிங்ல எனக்கு புடிக்கலைன்னாலும் போட்டுப்பேன்.. வளர வளர எனக்கு பிடிக்காததை ஒப்பனா சொல்ல ஆரம்பிச்சேன்.. அடுத்து கராத்தே, டிரைவிங் கிளாஸ் போக ஆரம்பிச்சதுக்கு அப்புறம்  எனக்கு அந்த மாதிரி ட்ரெஸஸ் ஒத்துக்கலை.. சோ அவாய்ட் பண்ணிட்டு கம்பர்ட்டபிளா ஜீன் ஆர் ஷார்ட்ஸ் யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்.. கோலாட்டம் ஆடுற தன்வி என்னோட வயசுல தாவணி போட்டா… சோ யாருக்கு என்ன பிடிக்குதோ அதை தானே பண்ண முடியும்.. பரிமளா ஆண்ட்டி மாதிரி எங்களோட உணர்வு உடல்ல இல்லன்னு புரிஞ்சிக்கிட்டீங்க.. கொச்சையா நினைக்கல.. நல்ல விஷயம்.. பட் மனசுல இருக்குற எங்களோட உணர்வுகளை மாத்த ட்ரை பண்றது.. அன்பேர்(unfair).. யாருக்கு எது கம்பர்டபிளோ காம்பாக்டிபிலோ அப்படியே வாழ விடுங்களேன்..” என பொறுமையாகவே விளக்கினாள்..

“ஏண்டி, ரொம்ப பேசுற.. பிசிக்கல் ரிலேஷன்ஷிப்க்காக தானே இந்த லெஸ்பியன்ற அடையாளம்..” என வாசுகி கூறியது தான் தாமதம்.. அமீக்கா தன் பொறுமையை கடந்து விட்டாள்.. “எவ்ளோ கேவலமான புரிதலா இருக்குது.. ஏம்மா, செக்ஸ் பத்தி பேசுற இடமா இது.. நாங்க லவ் பத்தி புரியவைக்க ட்ரை பண்றோம்.. ஈசியா லஸ்ட்டோட கம்பேர் பண்ணிட்ட.. ச்சே.. உடம்பு கூசுதும்மா.. இங்க நிறைய பேரு கே(guy), ட்ரான்ஸ்ஜென்டர், லெஸ்பியன், பைசெக்சுவல் எல்லாமே வெறும் செக்ஸ்னு மட்டும் நினைக்குறீங்க.. இல்லவே இல்லை.. காதலால சேருற ஒரு உறவை எப்படி தப்பா உருவகப்படுத்த முடியுது.. சத்தியமா இந்த கேள்விக்கு அப்புறம் தான் எனக்கு மேல மேல வெறி ஏறுது.. ஆமா நான் லெஸ்பியன்.. அதுனால உங்களுக்கு என்ன??ன்னு கத்தனும் போல இருக்குது.. உங்களை சொல்லி குத்தமில்லை.. ட்ரான்ஸ்ஜென்டரையே இப்போ தானே கொஞ்சமா மனுஷங்களா பாக்குறீங்க.. பல வருஷமா இருட்டுல வாழுற எங்களை மாதிரியான ஆட்கள் வெளிய வந்து எங்களுக்கான அடையாளத்தை உருவாக்குறதுக்குள்ள உலகமே அழிஞ்சிடும் போல..” என்றவளின் கண்களில் அப்படி ஒரு வலி..

அவளை இறுக்கமாக தன்வி கட்டியணைத்து, ஆத்திரத்தை மட்டுப்படுத்த முயன்று கொண்டிருக்க அணைந்து விட தீக்குச்சியாக இருந்தால் தானே.. உள்ளே காட்டுதீயே பற்றியிருந்தது.. “தன்வி, அவளை உள்ள கூட்டிட்டு போம்மா.. இங்க இருந்தீங்கன்னா எமோஷனல் ஆகி எல்லாருக்குமே வருத்தம் தான் வரும்..” என குகன் கூற, அப்படியே செய்தாள்.. அறைக்கு வந்த பின்னும் அமீக்காவின் வெறி அடங்குவதாக இல்லை.. தன்னுடைய இயலாமையை அங்கிருந்த அனைத்து பொருட்கள் மீதும் காட்டிக்கொண்டிருக்க, தன்வி பதைபதைத்து போனாள்.. எங்கு தன்னைதானே காயப்படுத்தி கொள்வாளோ என்ற பதட்டத்தில், ஆத்திரத்தில் நின்றவளை ஆதுரமாக அணைக்க அவளின் திமிரலையும் கட்டுப்படுத்த முயன்றாள்..

அமீக்கா எதிர்த்து போராடுவது தன்னவளையே என்ற சுயத்திற்கு வரும் பொழுது, தன்வியின் கண்களில் பயம் மட்டுமே ஒட்டிக்கொண்டிருந்தது.. “தனு.. தனு.. இட்ஸ் ஓகே.. நோ ப்ராபளம்.. டோன்ட் வொர்ரி.. நான் எல்லாத்தையும் சார்ட் அவுட் பண்ணிடுவேன்.. நீ கவலைப்படாத.. நமக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்குது.. நீ அதுல மட்டும் கான்சென்ரேட் பண்ணு ஒகேவா..” என கன்னம் ஏந்தி சமாதானம் கூறியவள் தன்வியின் கண்களுக்கு குழந்தையாகவே தெரிந்திட்டாள்..

“தனு..” என நீர் பொங்கிய விழிகளுடன் வலிய வலிநிறைந்த புன்னகையை விரியவிட்டு, “இங்க எதுவும் மாறுமா மாறாதான்னு தெரியாது மீகா.. ஆனா நாம மாறமாட்டோம்.. நம்ம காதல் மாறாது.. நமக்குள்ள எதுவும் மாறாது.. கடைசி வரை கையை பிடிச்சிட்டு என் ராங்கியும் உன் ராணியாவும் வாழ்வோம்..” என்றவளை என்செய்வது.. கூந்தல் கோதி காதலாக நெற்றிஒற்றலை வைத்தாள்.. அதில்தான் எத்தனை காதல்?? எத்தனை புரிதல்?? எத்தனை வாக்குகள்?? எத்தனை சத்தியங்கள்.. இது போதாதா ஒரு வாழ்விற்கு.. ஆணும் பெண்ணும் மட்டும் தான் இவ்வுணர்வில் திளைக்க முடியுமா?? அந்த மோன நிலையில் லயித்து கொண்டிருக்கும் போதே பலமாக கதவு தட்டப்பட்டது..

விலகி கொண்ட இருவரும் கதவை திறக்க, நின்றிருந்த குகனோ அவசரஅவசரமாக பொருட்களை எடுத்து வைத்தார்.. நல்ல வேளையாக வரும்பொழுது எடுத்து வந்த பெட்டிகள் கலைக்கப்படாமலேயே இருக்க, டாக்சியில் ஏற்றி இருவரையும் அழைத்து கொண்டார்.. ரயில் நிலையத்தில் மும்பைக்கான இரு டிக்கெட்டுக்களை நீட்டியவரை புரியாமல் விழித்தனர்.. “அமீ, தன்வி.. நீங்க திரும்பவும் மும்பை போயிட்டு வாங்க.. நீங்க திரும்பி வரும் போது வீடு வித்தியாசமா இருக்கும்.. ஹாப்பி ஜேர்னி..” என்றவர் ஒரு வார்த்தை கூட பதில் மொழியவிடாது அனுப்பி விட்டார்.. அவர்களின் வாழ்வு அவர்களின் கைகளில்..

“சோ இது தான் உங்க ஸ்டோரி இல்லையா?? வாங்க நம்ம நிகழ்ச்சிக்குள்ள போகலாம்.. ஹாய் ஹலோ வணக்கம் பிரெண்ட்ஸ்.. நான் உங்க லில்லி.. நம்ம கூட இருக்குற அமீக்கா அண்ட் தன்வியோட லைப் ஸ்டோரி தான்.. இவங்க யாரு?? எதுக்காக இன்வைட் பண்ணியிருக்குறோம்னு நீங்க யோசிக்கலாம்..

கண்டிப்பா அதையும் தெரிஞ்சிக்கலாம்.. இப்போ trendingல டீனேஜர்ஸ் மைண்ட்ல ஓடிட்டு இருக்குற ஷேட்ஸ் ஆப் லவ்ன்ற ஆப்பை டிசைன் பண்ணினவங்க இவங்க தான்.. சோ, இந்த அப்ப்ளிகேஷன் பில்ட் பண்ணும்னு உங்களுக்கு எந்த பாய்ன்ட்ல தோணுச்சு.. அண்ட் அதை பத்தி சில வேர்ட்ஸ் எங்க கிட்ட ஷேர் பண்ணிக்கிட்டா உங்களை மாதிரி வளர நினைக்குற யங்ஸ்டர்ஸ்க்கு இன்ஸ்பிரேஷனா இருக்கும்..”

தன்வி: இந்த கேமிங் அப்ப்ளிகேஷன் பில்ட் பண்ண கண்டிப்பா நாங்க ரெண்டு பேரும் தான் காரணம்.. இந்த ஜெனரேஷன் பசங்களுக்கு காதல் அப்படின்ற ஒன்னு ஒரு வேடிக்கை பொருளா மாறிட கூடாது.. லைக் அதுல இருக்குற ஸ்ட்ரகிள்ஸ் அண்ட் சோல்புல் எமோஷன்ஸ கன்வே பண்ணனும்னு நினைச்சோம்.. காதல்ல மூழ்கி எழுந்தவங்களுக்கு தான் அதுல இருக்குற ஒவ்வொரு சுகதுக்கமும் தெரியும்.. சோ இந்த வேலையே செஞ்சு முடிக்குறதுக்கு நாங்க தான் பெஸ்ட் சாய்ஸ்னு நினைச்சோம்.. இந்த ஆப் பத்தி சொல்லனும்னா.. லைக் பப்ஜி அண்ட் ப்ரீபயர்.. நாமளே ஒரு அனிமாட்டிக் கேரக்டரா உள்ள போய் நம்மளோட பெட்டர் ஹாப் யாருன்னு கரெக்ட்டா சூஸ் பண்றது.. அதுக்கு அப்புறம் நாம பேஸ் பண்ற எமோஷனல் சிச்சுவேஷனை ஹாண்டில் பண்றது பத்தியெல்லாம் இன்க்லூட் பண்ணியிருக்குறோம்.. இதுல எந்த விதமான அடிக்ஷனும் கிடையாது.. சிம்ப்ளி சேஸ் நோ சைட் எபெக்டஸ்.. ஹஹா…

லில்லி: வாவ்.. சூப்பர்.. நீங்க ரெண்டு பேரும் இன்னும் இன்னும் நிறைய வெற்றிகளை அடையணும்னு யங்ஸ்டர்ஸ் சார்பா வாழ்த்துறோம்.. அண்ட் உங்க ரெண்டு பேரோட பேர் ரொம்பவே கியூட்.. இந்த மாதிரியான ஒரு காதலை இந்த உலகம் பார்க்குறது இது தான் பர்ஸ்ட் டைம்.. சோ உங்களோட காதலுக்கும் ஆர்டினரி காதலுக்கும் இருக்குற வித்தியாசமா எதை பாக்குறீங்க..

அமீக்கா: யா.. கண்டிப்பா.. காதல்ல எந்த வித்தியாசமும் கிடையாது.. காதல் அது காதல் தான்.. பட் செக்சுவாலிட்டி மாறும்.. அவ்ளோ தான்.. நாங்க ரெண்டு பெரும் சின்ன வயசுல இருந்தே ஒண்ணா தான் இருந்தோம்.. பட் எங்களோட காதல் வெளிய வர்றதுக்கு டைம் எடுத்துச்சு.. எல்லாரையும் போல..

லில்லி: இந்த சொசைட்டில தன்னோட அடையாளத்தை மறைச்சு வாழணும்னு நினைக்கும் போது தைரியமா உங்களை அடையாளத்தை வெளிப்படுத்தினதுக்கான ரீசன் என்ன?? உங்களை மோட்டிவ் பண்ணின விஷயம் என்ன??

அமீக்கா: இதுக்கான பதிலை நீங்களே சொல்லிட்டீங்க.. எல்லாரும் மறைச்சு வாழும் போது நாம வெளிப்படுத்திக்கிட்டா என்னன்னு தோனுச்சு.. அண்ட் என்னோட தனு சொன்ன ஒரு விஷயம் என்னை யோசிக்க வச்சுது.. ரியாலிட்டில பிராக்டிகலா யோசிக்கணும்.. இப்போ நான் ஒரு லெஸ்பியன்னு எக்ஸ்போஸ் பண்ணிக்கிட்டா கண்டிப்பா இந்த உலகம் எங்களை ஏத்துக்காது.. ஏதோ ஒரு சாதனை எங்க பின்னாடி இருக்கணும்.. பத்தொன்பதாம் நூற்றாண்டுல ஒரு மேதை தன்னோட செக்சுவாலிட்டி பத்தின பயத்துனால சூசைட் பண்ணிகிட்டாறு.. பட் இப்போ செலிப்ரிட்டி கரண் ஜோகர் தன்னோட அடையாளத்தை வெளிப்படுத்தி இந்த சொசைட்டில நல்ல ஸ்டேட்ல இல்லையா?? சோ எங்களுக்குன்னு ஒரு அடையாளம் கிடைக்கும் போது எங்களோட அடையாளத்தை வெளிப்படுத்தனும்னு நினைச்சோம்.. நடத்தி காட்டிட்டோம்..

லில்லி: கண்டிப்பா இந்த விஷயங்கள் எல்லாமே வெளிய வரவேண்டிய தகவல்கள்.. உங்களோட ஜேர்னி பத்தி தெரிஞ்சிகிட்டதுக்கு அப்புறமா உங்களுக்கு எல்லா விதத்துலேயும் சப்போர்ட்டிவ்வா இருந்தவங்க பத்தி தெரிஞ்சிக்கணும்னு தோணுது.. சோ ப்ளீஸ்..

தன்வி: கண்டிப்பா இது மாமா ஷ்ரவன் இல்லைன்னா நடந்துருக்க சான்சே இல்லை.. எங்களை மும்பை அனுப்பி வச்சதுக்கு அப்புறமா தேடி வந்த மாப்பிள்ளை வீட்ல பேசி அதுக்கு அப்புறமா வந்த எல்லா ப்ராப்ளமையும் நாங்க இல்லாமலேயே எங்களுக்காக பேஸ் பண்ணினாங்க.. இந்த வெற்றி கண்டிப்பா அவங்களுக்கானது தான்..

லில்லி: வாவ் ரியலி கிரேட் தான்.. லெஸ்பியன் பத்தின பார்வை எப்படி இருந்துச்சு.. இனி எப்படி இருக்கணும்னு நினைக்குறீங்க??

அமீக்கா: முன்ன வெளிய போகும் போது நாங்க நிறைய அவமானகளை கடந்து வந்துருக்குறோம்.. இந்த கேட்டகிரி பத்தி முழுசா புரிஞ்சிக்காம கேலி பேசுறது.. ட்ரோல் பண்றது.. இந்த மாதிரி நிறைய.. பட் இதுக்கு அப்புறமாவது எங்களை புரிஞ்சி முழுசா தெரிஞ்சு ஆர்டினரியா ட்ரீட் பண்ணலாம்.. மத்தவங்களுக்கு ஆண்களை பிடிச்சிருக்கு.. எங்களுக்கு பெண்களை பிடிச்சிருக்கு.. பிடித்தம்ன்ற ஒன்னு பொதுவானது தானே.. சோ உங்க வீட்ல இப்படி ஒரு குழந்தை இருந்தா திட்டாம தப்பான முடிவு எடுக்காம அவங்களுக்கான ஸ்பேஸ் குடுங்க.. இது தப்போ குறையோ கிடையாது.. இது ஒரு உணர்வு..

லில்லி: கண்டிப்பா.. உங்கள்ல தொடங்குன மாற்றம் இங்க நிறைய பேர் கிட்ட பிரதிபலிக்கணும்.. நன்றி..

இந்த நேர்காணலை டிவியில் பார்த்து கொண்டிருந்த நிர்மலாவிற்கு வாசுகிக்கும் அன்று குகன் கூறிய வார்த்தைகளின் வீரியம் புரிந்தது..

அன்று,

“என்னங்க நீங்க அப்படியே எல்லாத்துக்கும் சப்போர்ட் பண்றாங்க.. நீங்க சொல்ற எல்லாம் எங்களுக்கு புரியாமையா நாங்க இப்படி நடந்துக்குறோம்.. ஊர் என்ன பேசும்.. நம்ம புள்ளைங்கன்னு ஏத்துக்கலாம்.. ஆனா இது நடைமுறைக்கு சரியா வராது..” என வாசுகி பொரிந்து தள்ள, நிர்மலாவும் அதில் தனக்கும் சம்மதம் என்பது போல அமைதியாக குகனை ஏறிட்டார்..

“வாசு.. ஊர் உலகம் பத்தி கவலைப்படுறியா?? எப்போ இருந்து இப்படி யோசிக்க ஆரம்பிச்ச.. அமீக்காவும் தன்வியும் நம்ம பொண்ணுங்க.. அவங்களோட உணர்வுகளை நம்மள மதிச்சு சொல்லுறாங்க.. அதுக்கு நாம மரியாதை குடுக்கணும்.. தேவையில்லாம பேசி குழப்பாத வாசு..”

“அக்கா, பசங்க வளரும் போது நாம எல்லாத்தையும் கொடுக்கலாம்… ஆனா ஒரு கட்டத்துக்கு மேல அவங்க வாழ்க்கைக்கான ஆதாரத்தை தெரிந்தெடுக்க நம்மளால ஆதரவும் தைரியமும் மட்டும் தான் கொடுக்க முடியும்.. நாம அந்த நிலமையில தான் இருக்கப்போறோம்.. அவங்களுக்கு எது சரி எது தப்புன்னு புரிஞ்சிக்குற வயசு.. நாம பின்னாடி இருந்து நம்பிக்கை கொடுத்தா மட்டும் போது.. வாசு நீ என்ன சொன்ன நடைமுறையில இல்லையா?? இதுக்காக சட்டமே இருக்குது 377 முறைப்படி கல்யாணம் பண்ணிக்க முடியாது.. ஆனா சேர்ந்து வாழலாம்.. அதை தான் அவங்க நம்ம கிட்ட கேக்குறாங்க.. சப்போர்ட் பன்னலைன்னாலும் பரவாயில்லை.. ஊரை பத்தி பேசி பயமுறுத்தாதீங்க.. ஒரு நாள் இதே ஊர் ரெண்டு பேரையும் தூக்கி வச்சு கொண்டாடும்.. அப்போ இந்த வித்தியாசம் எல்லாம் காணாம போகும்..” என்றார்..

மும்பையில்,

“வாவ்.. அமீ.. இப்படி சூப்பரா பேசுவன்னு தெரியும் பட் இந்த அளவுக்குன்னு எதிர்பார்க்கவே இல்லை.. தேங்க்ஸ்யா..” என அவர்களால் தனக்கும் தொகுப்பாளினி தகுதி நிலைபெற்று விட்டதை எண்ணி குதூகலித்தாள் தோழி லில்லி.. “நாங்க தான் லில்லி உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்.. இப்படி ஒரு சான்ஸ் எங்களுக்கு அரேஞ் பண்ணி கொடுத்ததுக்கு..” என மறுத்தாள் தன்வி.. நீண்டு கொண்டே சென்ற அந்த உரையாடலில் சலித்து போன அமீக்கா, மெல்ல அங்கிருந்து விலகினாள்..

சற்று நேரத்திற்கு பின் அங்கு வந்து சேர்ந்த தன்வி, “என்னாச்சு??” என மெல்ல கரங்களில் கரம் பதிக்க, “ப்ச்.. வீட்டை விட்டு வந்து ஒரு வருஷம் ஆச்சுது.. அப்பா வர சொல்லி கால் பண்ணியிருந்தாங்க.. திரும்பவும் அங்க போகணும்னு நினைக்குறப்போ ஒரு தயக்கம் வருது..” என்ற அமீக்கா இந்த ஒரு வருடத்தில் அதிகம் மாறி போயிருந்தாள்..

முன்பு போல வீறுகொண்டு போராட்டமோ புரட்சியோ செய்வதில்லை.. மெதுவாக அமைதலாக முடிவெடுத்து நகர்கிறாள்.. இந்த ஒருவருடம் அவளுக்கு கற்று கொடுத்த பாடம் அவ்வாறு.. ஆனாலும் தன்வியின் காதலி என்று மாறுவதில்லை.. இந்த ஒருவருடத்தில் கோர்த்த கரங்கள் விலகியதே இல்லை..

“பரவாயில்ல மீகா.. நீதானே சொன்ன எவ்ளோ பிரச்சினை வந்தாலும் இப்படியே சால்வ் பண்ணலாம்னு.. எனக்கு நம்பிக்கை இருக்குது.. என் ராங்கி விடமாட்டா..” என்ற தன்வியை காதலோடு அள்ளி நெற்றியில் இதழ் பதித்தாள்.. அன்றைய நேர்காணலை தொடர்ந்து கல்லூரியில் ஓரினசேர்க்கையாளர்கள் பற்றி தெளிவாக பேசிய அமீக்காவின் வீறுகொண்டு பேசிய காணொளியும் வெளியிட அன்றைய பிரபலமே அவர்கள் தான்.. இறுதியாக அவள் கூறிய கவிதை தான் நிஜமாகி போனது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!