இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 11

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 11

Epi11

வீட்டை வந்தடைந்த விஜய் அவனது அறைக்கு வந்தவன் அப்படியே கட்டிலில் தலையை தாங்கியாவாரு அமர்ந்து விட்டான்.

வண்டியில் வரும் போதே அவன் மனம் இதன்  பின் என்ன செய்ய வேண்டும் எனும் தீர்மானங்கள எடுத்துக்கொண்டே தான் வந்தான்.

நிவி வீட்டுக்கு வந்தால் அவளை வீட்டினர்  பார்க்கும் நேரங்கள் எல்லாம் என்மேல் இருக்கும் கோபம் இன்னும் அதிகமாகும். நானுமே அவளை பார்க்கும் நேரங்களில்   கோபத்தினால் அவளை நோகடித்திடுவேன்…

நான் வீட்டில் இருக்க யாரும் என்னுடன் பேசாது இருந்தால். என்னை பிழையாக கூறினால் எனக்கும் வீட்டினரோடு இருக்கும் நெருக்கம், பாசம் குறைந்துவிடும். பொறுமை இழந்து தருனுக்காகவே நிவி இவ்வாறு செய்ததை  கூறிவிட்டேன் என்றால்.கூற மாட்டேன் இருந்தும் காலம் நேரம் நம்மை என்னிலையில் கொண்டு நிறுத்துமோ தெரியாதே.அதன் பின் அவர்களது காதல் என்னால் பிரிந்ததாகி விடும்.எந்த காரணத்திற்காகவும் தருணை தப்பா யாரும் பேசி அதுக்கப்புறம் இந்த வீட்டுக்கு வந்தான்னா அவனுக்கு அது மரியாதையாக இருக்காது.

எல்லாம் நினைத்தவன் கொஞ்ச நாள் நான்  தூரமாக இருப்பதுவே நல்லது எனும் முடிவுக்கு வந்தான்.

ஏற்கனவே மேட்படிப்புக்காக வெளிநாடு செல்ல இருந்தவன் இதை காரணமாக கொண்டு அதன் மூலமே வெளிச்செல்ல நினைத்தான்…

இவன் கம்பனி சேர்ந்தது முதல் அவனுக்கு  துணையாக நம்பிக்கையாக இருந்தது ரமேஷ் இவனுக்கு ஜூனியர் ஆகும். இவனது பொறுப்புகளை அவன் வசம் பொறுப்பாக  கொடுத்து அவனுக்கு துணையாக இன்னும் ஒருவரையும் நியமித்து தந்தைக்கு தான் இல்லாதது விளங்காதவாறு மீண்டும் தந்தை மீது கம்பனி வேலைகளை சுமத்தாது ஒழுங்காக அங்குள்ள வேலைகள் நடக்கவும் வழி அமைக்க ரமேஷுடன் தொடர்பு கொண்டு வரும் வழியில்  பேசி இருந்தான்.

நாளை சந்தித்து ஏனைய விடயங்கள் பகிர்ந்து  கொள்வதாகவும் அதுவரை யாருடனும் இது பற்றி பேச வேண்டாம் என கூறினான். அடுத்த மாதம் பிரபாகர் இங்கு வர இருப்பதனால் அவன் தருணுக்கு துணையாக  இருப்பான்.அதனால் அவனை பற்றிய கவலையும் இல்லை.

முன்னமே ஜெர்மனியில் அவனது மேற்படிப்பை தொடர இருந்தவன் அதற்கான முன்னேற்ப்பாடுகள் ஏற்கனவே ஒருரை செய்திருக்க, இப்போது விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்பியவன் எப்படியும் அதில் சேரந்திட குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும் எனும் நிலை.

நண்பர் ஒருவர் மூலம் எல்லா ஏற்படுகளையும் செய்தவன் நாளை மாலை பிளைட்டுக்கு புக் செய்தான். அதன் பின்னரே வண்டியை  விட்டு இறங்கி வீட்டுக்குள் நுழைந்திருந்தான்.

இத்தனையும் நினைத்தபடி கட்டிலில் அமர்த்திருந்தவன் எழுந்து குளித்து ஆடை மாற்றி வந்து தருணுக்கு கால் செய்ய அவன் நிவியுடன் பேசியதாகவும். இப்போது தாராவை  பார்த்து விட்டு வீடு செல்வதாகவும் கூறினான்..

“டேய் சாரிடா. உண்மையா இப்படியான ஒரு நிலை நமக்கிடையில் வரும்னுதான் பயந்தேன் . உண்மையா ரொம்ப கஷ்டமா இருக்கு.

நமக்கிடையில் இப்படியான ஒரு நிலை வந்தால்  எப்படி ஹண்ட்ல் பண்ணனும்னு தெரியாதனாலதான். என் மனச திறக்கவே இல்லை. “

“விடு தருண். அவளுக்கு உன்னை பத்தி நல்லா தெரிஞ்சிதான் எப்படி உன் வாய திறக்கணும்னு இப்படி பண்ணிருக்கா.இனி என்ன ரெண்டு  பேரும் கையை கோர்த்துக்கிட்டு காதல் பண்ணலாம் இல்ல.” அவனை சகஜமாக்கும் பொருட்டு அவனுக்கு ஆறுதலாக பேசினான்.

“என்னன்னாலும் அவ பண்ணினது தப்பு தானடா. இவ்வளவு சுயநலமா இருக்கா.இப்பவே இப்படின்னா கஷ்டம்டா.”

“டேய் என்ன பேசுற நீ? அவளுக்கு அவ காதல் மட்டுமே பெருசா தெரிஞ்சிருக்கு. அவளை மட்டுமே யோசிச்சிருக்கா. இனி என்ன ரெண்டு பேரும் ரெண்டு பேருக்காகவும் ஒன்னா நினச்சு வாழுற வழியப்பாருங்க.”

“ஹ்ம்ம் ஸ்ரீ குட்டியும் இதையே தான் சொன்னா  டா.”

“ஓஹ்.” மனதில்ஸ்ரீ குட்டியை மெச்சியவன்

 

“ஆஹ் அதோட தருண், நீ எப்பயும் எனக்கும்  அவளுக்கும் இடைல வர வேணாம். உன் காதலை நீ பார்த்துக்கோ ஓகே. ஆனால் என்ன காரணத்கதிற்காகவும் உனக்காகதான் இப்படி  பண்ணினானு எங்க வீட்டுக்கு தெரிஞ்சது அதுக்கப்புறம் உன் வாழ்க்கையில் விஜய்னு ஒருத்தன் இருந்ததையே மறந்து விடு .”

 

” என்னடா இப்படியெல்லாம் பேசுற. சத்தியமா என்னால முடியல டா விஜய். “

 

“சரி விடு. அப்புறமா உன்கூட பேசுறேன்.நீ வீட்டுக்கு போய்ட்டு மெசேஜ் ஒன்னு பண்ணிரு. எனக்கு இப்போ சின்ன வேலை ஒன்னு இருக்கு.”

விஜய் போனை வைக்க அங்கே  தருணோ யோசனையில் ஆழ்ந்தான்.

 

விஜய் வெளியில் செல்ல மாடிப்படி இறங்கி வர  ஹரியின் மனைவி காவ்யாவின் மடியில் அமர்ந்திருந்த ஹரினிக்குட்டி இவனை பார்த்து  தூக்குமாறு கைகள் நீட்ட இவனும் அவளை தூக்கினான்.

“ஹனி பேபி சாப்புட்டாச்சா?”

‘ ஆம்’ என தலை ஆட்டிடியவள்,

“ஸ்ரீப்பா மம்மா…?” என அவனைக் கேட்க.

 

” நானா ஹ்ம்ம்ம்…?’ என யோசித்தவன், 

 

‘ஸ்ரீப்பாக் கூட எல்லாரும் டூ விட்டுட்டாங்களே. அதுனால நோ மம்மா… ‘ என்று விட்டு அவள்  கன்னங்களில் இதழ் பதித்தவன் வெளியில் போய்ட்டு வரேன் பேபி’ என அவளை இறக்கிவிட்டவன்,

‘வெளில சின்ன வேலையா போறேன் காவ்யா.  அம்மா எங்கன்னு கேட்க மாட்டாங்க கேட்டா சொல்லிடுங்க. ” என்றவன் சென்றுவிட்டான்.

வண்டியில் ஏறியவன் ரமேஷுக்கு கால் செய்து  அவனை இன்று மாலையே அலுவலகத்தில் சந்திப்பதாகவும் அவன் வரும் வரை காத்திருக்கவும் சொன்னவன். வண்டியை நிவி அனுமதித்திருந்த ஹாஸ்பிடலுக்கு விட்டான்…

அவன் ஹாஸ்பிடல் வரும் போது மூன்று மணிபோல இருந்தது. வீட்டில் உணவு கொண்டு வர வேண்டாம் என்றிருந்த ஹரி மீனாவை  கேன்டீனுக்கு அழைத்து சென்றிருந்தான். 

டாக்டரை சந்தித்த விஜய் அவருடன் முழு உண்மை விபரத்தை சொல்லி மன நல மருத்துவர் தேவைப் படாது எனக்கூற, டாக்டரோ

“அப்படியில்லை விஜய,அவங்க பிழையை உணரவும் வேணும் இல்லையா. சோ அவங்க பேசட்டும் அது ஒன்னும் பிரச்சினை இல்லை.” “தேங்க்ஸ் டாக்டர், அப்புறம் இதை பற்றி வீட்ல யாருக்கும் தெரிய வேணாம். “

“டோன்ட் வொரி நான் யார்கூடவும் இது பற்றி  டிஸ்கஸ் பண்ணல ஓகே.

“நான் நிவியை கொஞ்சம் பார்க்கணுமே.”

“ஓஹ்  தாராலமா.’

“இல்ல அத்தை இருக்காங்க.ஓஹ் வெய்ட்  என்றவர் நர்சை அழைத்து கேட்க ‘இப்போதான் என்னை அருகே இருக்க சொல்லி கேன்டீன்  போனாங்க .” 

நீங்க போய் பாருங்க விஜய். அவங்க அத்தை வரும் போது இவர்கிட்ட சொல்லிருங்க நர்ஸ். “எனவும் அவரும் புரிந்தவராக

“ஓகே டாக்டர்.” எனவும் விஜய் நிவியின் அறையினுள் நுழைந்தான்…

கட்டிலில் சாய்ந்தவாறு படுத்திருந்தவள் இவனை காணவும் அத்து என கூப்பிட  உதடுகள்தான் அசைந்தது. அவளருகே வந்தவன், 

“ஸ்ட்ரைன் பண்ணிக்கவேணாம்.போகப் போக சரியாகிரும். உன் ஈகோ வினால உன் காரியத்தை சாதிச்சுக்கிட்ட  இல்ல… ஹாப்பியா? நானும் அப்பாகிட்ட பேசிட்டேன். நான் வேணாம்னு சொன்னதாலத் தானே அவ்வளவு துணிஞ்சு இந்த காரியத்தை பண்ணின.

இப்போ நான் ஓகே சொல்லிட்டேன் நீ வீட்டுக்கு வந்தப்புறம் கல்யாணம் பண்ணிக்கலாம் ஓகேயா?’ அவள் முகம் அதிர்ச்சியில் அவனை காண,

‘ஆனால் நாம கல்யாணம் பண்ணிக்கலாம்தான் இடைல தருண்? அவனை என்ன பண்ணலாம்? அவன் உன்கிட்ட காதலை சொல்லிட்டானாமே. நான் உன்னை வேணாம்னு சொன்னதுக்காக இங்கே வந்து படுத்துட்ட. நான் இப்போ ஓகே  சொல்லிட்டேன் இப்போ தருணுக்கு என்ன பதில் சொல்லப்போற?’

‘சொல்லுடி, பைத்தியகாரி போல நீ செஞ்ச வேளைக்கு என்னை என்னமோ கொலை செஞ்சவன் மாதிரி எல்லோரையும் பார்க்க வச்சுட்ட. உண்மையா நானும் உன்னைக் கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொல்லிருந்தா  என்ன பண்ணியிருப்ப.?’

என்ன பண்ணியிருப்ப பேசாம கல்யாணத்தை பண்ணிக்கிட்டு மூனுபேரோட லைபயும் அழிச்சிருப்ப இல்ல.அவ்வளவுக்கு உனக்கு உன் ஈகோ தானே பெருசா போயிடிச்சு. நானும் என்மேல பாசத்துல கல்யாணம் பண்ணினானு  ஏமாந்ததிருப்பேன்ல. உன் கண்ணுல அவனுக்கான காதலை நா முன்னமே புரிஞ்சிக்கிட்டதால ஓகே. நீ இப்போ செய்த பைத்தியக்காரத்தனம், தருணோட வாயால உன்னை லவ் பண்றத சொல்ல வெக்கிறதுக்காக பண்ணினனு எனக்கும் உனக்கும் தானே தெரியும்.

நீ செத்து கித்து போய்யிருதன்னா நான் சொல்லி எங்க வீட்ல எல்லாரும் நம்பி இருப்பாங்ன்னு நினைக்கிறியா? அவன் வாயை திறக்க வெக்கப் போய் இப்போ யாரு வாய  மூடவேண்டி இருக்கு. எல்லோருக்கு முன்னாடியும்

” நீ மட்டுமே என்ன புரிஞ்சி வச்சவன்னு  நினனச்சேன் நீயும் இப்படி பண்றியேன்னு சொன்ன?’

‘ஆமாடி உன்னை நா புரிஞ்சி வச்ச விதம்  தப்புதான் போல. அதுதானே என்னையே நீ உனக்கு தேவைக்கு யூஸ் பண்ணிக்கிட்ட இல்ல..

இனி தருணுக்காவது உண்மையா உன் ஈகோ வை விட்டு ஒழுங்கா  இரு. உன்னை உண்மையா லவ் பண்ணினதாலதான் அவன் இவ்வளவு நாளும் சொல்லாம இருந்தான். 

என் நட்பையும் விட்டு போகாம. நீ லவ் பண்றியா இல்லையான்னே புரிஞ்சிக்க முடியாம இருந்திருக்கான்…

நீதான் அவன வெறுப்பேற்ற என்கூட  பாசம் காட்டிகிட்டு இருந்த. அவன் எது உண்மை எது பொய்னு குழம்பி என்ன பேசுறதுன்னு தவிச்சிருக்கான். இப்படி  நடந்திருக்காட்டி அவன் எப்பவுமே சொல்லிருக்க மாட்டான். ஏன்னா அவன் நட்புக்கும் அவன் காதலுக்கும் உண்மையா இருந்திருக்கான்… இனி நீயாச்சு அவனாச்சு.’

‘நீ வீட்டுக்கு வர்ரப்ப நா வீட்ல இருக்க மாட்டேன். உன்னை பாக்குற நேரமெல்லாம் நானும்  உன்னை நோகடிச்சுருவேன். வீட்ல இருக்கவங்களும் என்னை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க.அவங்க கூட இருக்கப்ப  இன்னும் இன்னும் நா துராமகிருவேனோனு தோணுது. கொஞ்ச நாள் வெளில போகலாம்னு இருக்கேன்.நா வரேன்.

ஆஹ்! அவளை அவள் முகத்திற்கு முன் விரல் நீட்டி ஒன்னே ஒன்னு எந்த காரணத்துக்காகவும்  நீ தருணுக்காகத்தான் இந்த விளையாட்ட பண்ணினேன்னு யாருக்கும் தெரியக்கூடாது. நான் உன்னை வேணாம்டத்துக்காக நீ இப்படி உயிர விட துணிஞ்சதாகவே இருக்கட்டும். நம்ம வீட்டுக்கு மருமகனா உனக்கு கணவனா தருண்  வரணும்னு நீ நினச்சன்னா,அவன் எந்த அவமரியாதையும் சந்திக்காம வரணும்னு நான் நினைக்கிறேன்.

“அத்து… ” மெதுவானதொரு சத்தம் அவள் இதழ் வழியே…

“ஷ்…’அவளை பேசவேண்டாம் என்று கை  காட்டியவன்,

‘உனக்காக இல்லை இது என் பிரெண்டுக்காக. புரிஞ்சுதா. இதை பற்றி நான் வீட்ல கதைக்கிற வரைக்கும் நீயும் தருணும் இது பற்றி  யார்கூடவும் கதைக்க கூடாது.உன்மேல ஏஸ் அ சிஸ்டரா, தோழியா வீட்ல மத்தவங்க தரவேண்டிய பாசமெல்லாம் மொத்தமா நா உனக்கு தந்ததால நீ எனக்கு தந்தது ரொம்பே பெரிய கிப்ட்டு தான்…’

அத்து என்றவளின் கண்களில் வடியும் கண்ணீரை காணப்பொறுக்கத்தவன்,

‘உன்கூட பேசாமையே போகணும்னு தான்  இருந்தேன்.மனதுக்குள்ளே வச்சுக் கிட்டு கோபம் இன்னும் அதிகமாகும்னு தான் வந்தேன். வீட்ல இருக்க ஹனி பேபிக்கும் உனக்கும் வித்தியாசம்  பார்த்ததில்லை டி .ஆனால்…”

பெருமமூச்சொன்றை விட்டவன்,

“இனி கோபம் குறையுதான்னு பார்க்கலாம் வரேன்.”  என்றவன் திரும்பியும் பாராது சென்று விட்டான்…

‘கடவுளே என்ன காரியம் பண்ணிட்டேன். என் அத்து என்னை புரிஞ்சிகிட்ட அளவு கூட நான்  என்னை புரிஞ்சிக்கல்லயே.கண் மூடியவள் இதயம் ரணமாக இருந்தது..

 

 

ரமேஷை சந்திப்பதற்காக தமது  கம்பெனிக்கு வந்தவன் தனது அறையில் சீட்டில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான். எவ்வளவு அழகாக விடிந்த காலை. ஒரு கனம் போதுமே ஒட்டு மொத்த நிம்மதியையும் கொன்று போட. தலை வேறு வின் வின் என்று வலிக்க. அப்போது தான் காலையில் இருந்து சாப்பிடாதது நினைவு வர டீ குடித்தால் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும் என்றெண்ண,அவனது கதவை தட்டி அனுமதி கேட்டவாறே கையில் மாலை  சிற்றுண்டிகள் சிலதுடன் டீ எடுத்து வந்திருந்தான் ரமேஷ்.

“ஹேய் என்னப்பா நீ எடுத்துட்டு வர. பாலு போய்ட்டானா?” என.

“ஹ்ம்ம் சார் டைம் என்னாச்சு சிக்ஸ்தர்ட்டி ஆகுது. அவங்க பைவ்கே போய்ட்டாங்க.”

” ஆமால்ல. ஆனால் டீ வேணும்னு  தோணவுமே கொண்டு வந்துட்ட,

தேங்க்ஸ். ” என்று அதனை சாப்பிட்டு டீ  குடித்தான். அவன் குடிக்கும் வரை அமைதியாக இருந்தவன்,

“என்ன சார் பகல் சாப்பாடும் சாப்பிடாத அளவுக்கு டென்ஷன்?”

 

“ஹ்ம்ம்ம்…கொஞ்சம் பர்சனல் ரமேஷ்.

எதுக்காக கூப்பிட்டேன்னு நினைக்குறீங்க? ” என 

“தெரில சார்…”

“ரமேஷ் நாளைக்க நா ஜர்மனி போறத இருக்கேன்.”

 

” சார் என்ன இப்படி திடிர்னு சொல்றீங்க? “

 

“வெயிட் மேன். பேச விடு என்னை.. அப்பாக்கு சப்போர்ட்டிவா இருந்தாலும் நா கூடுதலா வெஹிகள் பார்ட் பிக்சிங்  ஏரியால தான் என் முழு கவனமும் இருந்தது.இங்க ஆபிஸ்ல அக்கௌன்ட் செக்க்ஷன் பார்த்துக்க நம்பிக்கையா இன்னும் யாரும் எனக்கு இந்த ஆபிஸ்ல பிடிபடல்ல. அதுனால நாளைல இருந்து அதை நீ பொறுப்பா பார்த்துக்க. கொஞ்சநாள் போகட்டும் உனக்கு நம்பிக்கையாக யாரையாவது  சேர்த்துக்கலாம் ஓகே.”

 

“சார் அவ்வளவு பெரிய பொறுப்ப நான் எப்படி ஹன்ட்ல் பண்றது. நாளைக்கே  எனக்கு போக வேண்டிய தேவை இருந்தாலும் மூன்று மாதங்களுக்கு நா பிரீயாகத்தான் இருப்பேன் சோ உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்.ரெண்டு பேருமா பார்த்துக்கலாம். நாளைக்கு அப்பா முன்னாடி ஒழுங்கா பொறுப்ப ஏத்துக்கோ.  அப்பா முன்னாடி கேள்வி கேட்க்காத. அதுக்கு தான் இப்போ கூப்பிட்டேன். புரிஞ்சதா?’

 

‘உன்னை நம்பித்தான் போறதுக்கு முடிவு பண்ணினேன். சோ அதை காப்பாற்றும் வழியப்பாரு மேன்.”

 

“ஓகே  சார். எவ்வளவு நாளைக்கு போறதா இருக்கீங்க?”

 

“அது எப்படியும் ஒரு டூ இயர்ஸ் ஆகலாம்.”

“சார் !”

 

அவனை பார்த்து மெல்லிய சிரிப்பினை வழங்கியவன்,

” நாளைக்கு பார்க்கலாம் ரமேஷ் அதுவரை  யாருக்கும் தெரிய வேணாம்.எனக்கு கொஞ்சம் வேலைகள் இருக்கு நான்  முடிச்சிட்டு கொஞ்சம் லேட்டா தான் கிளம்புவேன். நீங்க கிளம்புங்க. “

எனவும் ரமேஷ் அவனிடம் விடை பெற்று  சென்றான்.

 

ரமேஷுக்கு பொறுப்பை  கொடுப்பதென்றாலுமே அவனுக்கு செய்ய வேண்டிய சில வேலைகள் மீதமிருக்க அவற்றை முடித்து வைத்தான்.

 

நேரத்த பார்க்க மணி பத்து என காட்ட, மாலை அருந்திய டீ மட்டுமே.வீட்டில்  இருந்து யாரும் இது வரை அழைத்திருக்கவில்லை. ‘ம்மா.. நீ கூட என்னை தப்பா புரிஜிக்கிட்டியா? ‘

தலைவலியும் இன்னும் மீதம் இருக்க  அப்படியே அவனது சீட்டில் சாய்ந்து கால்களை மேசைக்கு மேல் நீட்டி அமர்ந்தவன் அவனது போனில் ஹரியின் வெட்டிங் ஆல்பத்தில் தாராவின் போட்டோ ஒன்று இருக்க அதனை தனது போனில் படம் பிடித்து வைத்திருந்தான். அதனை ஓபன் செய்து பார்த்தவன் பக்கவாட்டில் அமர்ந்து அனிதாவிடம்  பேசிக்கொண்டிருந்த படம் அது .

அதனை ஜூம் செய்து அவளை மட்டும்  கிராப் பண்ணி வைத்திருந்தான்.

 

மீசை முடிகள் கொண்டு உரசி கூசிட தோன்ற வைக்கும் காதில் அழகிய ஜிமிக்கி, அவளின் நீண்ட சங்குக்கழுத்தில் ஆபரணம் ஏதும் இன்றி முத்தமிட அழைக்கும் வெண் கழுத்து. தோளில் புரண்ட கூந்தல் ஒரு பக்கம் இருக்க அவளிடம் அவனை கவர்ந்த கூர் மூக்கின் அழகை இன்னும் மினுக்கும் வைரக்கல் மூக்குத்தி,அவனை மூக்கோடு மூக்குரச அழைக்க அவள் மூக்கினை தன் விரலால் வருடியவன் அதன் கீழிருந்த ஆரஞ்சு சுளை இதழ்கள்..

 

‘ஹ்ம்ம்ம் அழகு டி நீ…. இந்த லவ் கொஞ்சம் முன்னாடி தோனி இருக்கலாம்.பார்க்க சின்ன பெண்ணாட்டம் இல்ல முன்ன இருந்த. இது முன்னமே வந்திருந்தா உன்கூட பேசி பழகி இருப்பேன் டா.  

இப்போ பாரு உன்னையும் விட்டு போக வேண்டியதா இருக்கு.நா வரும் வரை  இருப்பியா ஸ்ரீ? உனக்கும் இப்படியெல்லாம் தோணுதா, இல்ல அண்ணன் பிரெண்டுன்னு மட்டுமேதான் நினைச்சுட்டு இருக்கியா? நா வரும் வரை எனக்காக இருந்தன்னா அதுக்கப்பறம் என் லவ் போதும் போதும்ற வரை உனக்கு மட்டுமே  தான். நம்ம காதலை நாம புரிஞ்சிக்கவும் இது நல்ல சந்தர்ப்பம். உனக்கு என் மேல காதல் இருந்தாலும் இந்த பிரிவு கண்டிப்பா உனக்கு உணர்த்தும் டா.என் லவ்வோ இனி எக்கச்சக்கமா கூட போகுது… மிஸ் யூ மை டக்லிங்…’

 

அங்கு தன் அறையில் விஜயின் நம்பரை பார்த்திருந்தவள்,’அவனுடன் பேசலாமா, ரொம்ப பீல் பண்ராங்களோ என்ன பண்ணலாம். தப்பா நினச்சுப்பாங்களா, ஹ்ம்ம்ம்… என யோசித்திருந்தவள் நேரத்தை பார்க்க அதுவோ பத்து என காட்டவும். தூங்கிட்டாங்களோ. காலைல கண்டிப்பா பேசணும்.இல்லன்னா மெசேஜ் ஒன்னு சரி அனுப்பலாம்’ என்று எண்ணியவாறே தூங்கிப்போனாள். 

 

நாளைக்கு நீ போன் எடுக்க அவன் எடுத்தால சரி. இல்லை என்றால் அவனுடன் பேச காத்திருக்க வேண்டிய நாட்கள் அதிகமல்லவோ.

 

இரவு பதினோரு மணியளவில் வீடு வந்தவன் குளித்து அவனது அறையில் இருந்த மினி கிட்சனில் டீ தயாரித்து  கொண்டவன்

(அவனது அறை ஒரு மினி வீடென  அமைக்கப்பட்டிருந்தது ) 

அவனது பெல்கனி ஊஞ்சலில் அமர்ந்து இருளை பார்த்திருக்க அவன் மனமோ ஊமையாய்…..

 

” பூவாய் இருந்த என்னுள்ளம் இன்று இரும்பென இருகியதேனோ

என் தோட்டப் பூவென உனை 

பார்க்க முள்ளாக நீ குத்தியதேனோ.

 

பாசம் வைத்தேன் தோழிநீ

வேஷம் கொண்டாய்…

இரும்பென இறுகி விட்டேன் இன்று

என் பூவுக்கும் இடம் தராது…

 

உன் காதலை மட்டும் நீ காண

வெற்றி கொண்டாய் தோழிநீ…

 

காதலை அடைந்தாய் இனி உன்  தோழனை நீ துறந்துவிட்டாய்…

 

நானோ என் தோழன் காதல் வெற்றி  கொள்ள என் காதல் மறைத்தேன்

 

நட்பை துறக்கவும் இல்லை 

காதலை கைவிடவும் இல்லை…

 

காதலே காத்திருப்பாயா?

 உனை நான் வரும் வரை….

இடையே துயரங்கள் கடந்து யாரும் துயர்

கொள்ளா காதலை பெறவேண்டும்…”

‘எனை விட்டு எங்கும் போகாதே என் இதய தேவதை யே!

ஸ்ரீ …  உனக்காக காத்திருக்கிறேன்….

நீ வரும் வரை பார்த்திருக்கிறேன் வருவியா ஸ்ரீ…

 

திடுக்கிட்டு எழுந்தமர்ந்தவள் நேரம் பார்க்க மணி நான்கு…

‘ஸ்ரீ…’  என அவள் இடை சுற்றி கைகளை படர விட்டவள் அப்படியே அதனை பற்றியவாறு தலையணையில் தலை வைத்தாள். தூக்கம் தான் ஏனோ தூர சென்றது.

Leave a Reply

error: Content is protected !!