இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 16

இரும்புக்கோர் பூ இதயம் -அத்தியாயம் 16
Epi16
தாரா விஜயின் வீட்டிற்கு வர அவளுடன் உள்ளே வந்த பிஏ “ஹால்ல வெய்ட் பண்ணுங்க மேம் சார் வந்துருவாங்க. ” என அவன் உள்ளே செல்ல, ஹாலில் அமர்ந்து அவள் விழிகள் வீட்டை ஒரு வளம் வர வாவ்! கண்கள் குளிரும்படி வீடு இருந்தது. வீட்டின் ஒவ்வொரு அணுவும் பண செழுமையை காட்டியது.அவள் அவற்றை ஆசையாக பார்த்துக் கொண்டு இருக்க அவ்விடம் வந்தார் வள்ளிப்பாட்டி.
“ஹாய் பாட்டி.’ என எழுந்தவள் அவர் பாதம் தொட்டு வணங்க,
” நல்லாருடா. உட்காரு.’ எனவும் அமர்ந்தவள் ‘யாரை பார்க்க வந்திருக்க?” என பாட்டி வினவ,
“ராஜ் சார் வர சொன்னாங்க.” என்றாள் தாரா.
“எங்கேயோ பார்த்தா மாதிரி இருக்கு உன்னை. ஆனா சட்டுனு ஞாபகம் தான் வரமாட்டேங்குது.” என்றார்.
“தருணோட சிஸ்டர் பாட்டிம்மா’ என்றாள்.
“ஓஹ்! நம்ம தருண் தங்கையா? அதானே பார்த்தேன்,பாண்ட் சட்டை போட்ட பொண்ணு கால்ல விழுறான்னு.”
சிரித்தவள், “இது ஆபிஸ் டிரஸ் பாட்டிம்மா ‘ என்றவள்,’அருணா ஆண்ட்டிக்கு உடம்புக்கு என்ன? எனவும்,
“நைட்ல இருந்து பிவர் மா. மகனுக்கு அக்கா போல இருந்தவ அவன் போனதுல இருந்து அவனுக்கு பாட்டியாட்டம் ஆகிட்டா.” என வருத்தப்பட, யாரைப்பற்றி பேசுகிறார் என புரிந்தவள்,
” சரியாகிருவாங்க பாட்டிம்மா.என அவர் கையை தடவிக்கொடுத்தவள், ” நான் ஆன்டியை போய் பார்க்கட்டுமா?” எனவும் ‘போடாம்மா அந்த ரூம்லதான் இருக்கா. ” என ஒரு அறையை காட்ட அவ்வறையில் இருந்து ராஜ் வெளியில் வந்தார்.
“சாரி தாரா லேட் பண்ணிட்டேனா ?” என்றபடி அவளருகே வர,
“இல்ல சார் இப்போதானே வந்தேன்.” என எழும்பினாள்.
“முக்கியமான டாக்குமெண்ட் மா அதான் வர சொன்னேன்.” என்றவர் அவரது ஆபிஸ் அறைக்கு செல்ல,
“டேய் அவ அருணாவை பார்க்கணும்னா.” என பாட்டி கூறினார்.
“இல்ல சார் நா வேலையை முடிச்சுட்டே
பார்க்கிறேன்.” என்றவள் அவருடன் சென்று அவர் கூறியபடி வேலைகள் செய்து முடிய மதிய உணவு வேளை வந்திருந்தது. “சார் நா ஆண்ட்டிய கொஞ்சம் பாத்துட்டு கிளம்பட்டுமா? ” எனவும்,
“ஓஹ் தாராலாமா வா.” என்றவர் அவளை அவர்களது அறைக்கு அழைத்து செல்ல அருணா கட்டிலில் அமர்ந்து இருந்தார். உணவு கொண்டுவரப்பட்டிருக்க உண்ணாது அமர்ந்திருந்தார்.
இவளை கண்ட நொடி ” ஹேய்! ஸ்ரீ குட்டி வா வா… எப்போ வந்த? ” எனவும்
“காலைல வந்தது ஆண்ட்டி. இப்போ தான் வேலை முடிஞ்சது. இப்போ உடம்புக்கு எப்டி இருக்கு ‘எனவும்,
“இருக்கேன்டா… கொஞ்சம் உடம்புக்கு முடியல பாரு ரூமுக்கே சாப்பாடெல்லாம் அனுப்பி என்னை நோயாளி போல ட்ரீட் பண்றாங்க.” என ராஜை பார்த்துக்கொண்டு குறை கூற,
“உங்க மேல உள்ள அக்கறையால தானே இப்படி பண்றாங்க. இப்படி நீங்க இருந்ததை அவங்க பார்த்ததில்லை தானே, அதான் ஆன்ட்டி இப்படி. ” எனவும்,
“பாரு இன்னகி வந்தவக்கே புரியுது, ஆனா உன் பையனுக்கு. அவரே பிழையும் செஞ்சுட்டு, அவரே அவருக்கு தண்டனைனு அவரே கிளம்பி போய்ட்டாரு, கஷ்டப்படறது யாரிப்போ?” என மனைவியின் சோர்வைத் தாங்காது ராஜ் சத்தம் போட,அவர் இப்படி பேசுவார் என எதிர் பாராத தாராவுக்கும் ஒரு மாதிரி ஆகி விட்டது…
அருணாவின் கண்களோ குளம் என நிரம்பி வழியக்காத்திருக்க தாராவை பார்த்தவர்,
“சாரி ம்மா…’ என்று விட்டு ஆன்ட்டிய பார்த்துட்டு ‘கிளம்பு ம்மா.’ என்று அவ்விடம் விட்டு அகன்றார்.
“ஆன்ட்டி…” என அவர் அருகே அமர்ந்தவள் அவர் கையை பிடித்துக்கொண்டு,
“பாருங்க அங்கிள் நீங்க இப்படி இறுக்கதால மனசு தாங்காம பேசிட்டு போறாங்க. சாப்பாடெல்லாம் அப்படியே இருக்கு. சாப்பிடுங்களேன் ஆன்ட்டி எனவும்.”
” முடியலடா…’ என அவள் தோள் சாய்ந்து கொஞ்சநேரம் அழுதார்.’ என் பையனை விட்டு நா இருந்ததே இல்லை . என்னை விட்டுபிரிஞ்சு இருக்காத ஒருத்தன். காலேஜ்ல இறுக்கப்பதான் ஒரு வருஷம் ஹாஸ்டெல்ல இருந்தான். அப்பவும் எப்படியும் என்னை வந்து பார்த்துட்டு தான் போவான். இப்போ ஒரு போன் கூட பண்ணல. தாராவிட்கும் அழுகை. மனதால் நேசித்த எனக்கே பார்க்காமல் இருக்கா முடியவில்லை. உயிர் கொடுத்த தாய்க்கு.தேவையா இது. ப்ச்…”
கொஞ்சம் அவர் இலகுவானதும், ” சாரிடா முதல் முதலா நம்ம வீட்டுக்கு வந்திருக்க நான் பாட்டுக்கு அழுந்துட்டு, சாரிடா குட்டி…
“அச்சோ அப்டில்லாம் இல்லை ஆன்ட்டி. நீங்க சாப்பிடுங்க அப்புறமா நாம பேசலாம்… ” என்றாள்.
“முடியல ஸ்ரீ வாய்க்கு ஒண்ணுமே ருசிக்க மாடேங்குது.”
“காய்ச்சல் தானே அதுதான் அப்படி இருக்கு. ஊறுகாய் கொஞ்சம் தொட்டுக்கோங்க நல்லா இருக்கும் நானும் அப்படித்தான் சாப்பிடுவேன்.’ என பெரியவளாட்டம் கூற,
“அப்போ வா டைனிங் ஹால் போய் சாப்பிடலாம் இங்க இருந்து சாப்பிடவே கஷ்டமா இருக்குடா குட்டி.” என அருணா கூற ஓகே வாங்க போகலாம் என அவரை சாப்பாட்டறைக்கு அழைத்து வந்தவள் அனைவரும்
அமர்ந்திருப்பதை கண்டு தயங்கியவள் இவர்களை கண்டு எழுந்த ராஜ் என்னாச்சு அருணா என வர, “இல்ல நான் இங்கயே எல்லோர் கூடவும் சாப்பிடுறேன்.” என்றார்
அருணா.
“ஆஹ் வா வா என அவரை அழைத்து வர,இவளைக் கண்ட நிவி,
“ஹேய்! தாரு பேபி.” என அவளை அணைத்து நலம் விசாரிக்க மற்றவர்களும் தருண் தங்கை
எனவும் கூடுதல் கவனிப்பு தான்.அந்தளவுக்கு எல்லோர் மனதிலும் நல்ல பெயர் எடுத்திருந்தான் விஜயின் நண்பன்
என்ற வகையில். மீனாவும் தருணோடு அன்பாகவே பேசுவார். ஆம் அம்மதிப்பு அவளுக்கும் அவ் வீட்டில் கிடைக்க
கொஞ்சம் அவர்கள் வீட்டில் சகஜமாக பழக முடிந்தது.
“ஸ்ரீ குட்டி வாடா நீயும் நம்ம கூடவே லஞ்ச் சாப்புட்டு போகலாம் ” என அருணா அருகில் அமர்த்திக் கொண்டார். எல்லோரும் நீண்ட நாட்களுக்கு பின் ஸ்ரீ என்ற பெயர் அம்மேசையில் கேட்க எல்லோருக்குமே அவன் நினைவுதான்… ‘உன் பேரும் ஸ்ரீ யா? ” என பாட்டி கேட்க “ஆம்’ என தலையாட்டி ‘தாரா ஸரீ ” என்றாள்.
அருணா அவளுக்கு பரிமாறப்போக நா போட்டுக்குறேன் ஆண்ட்டி நீங்க சாப்பிடுங்க. கொஞ்சமா போட்டு சாப்பிடுங்க சாப்பிடலாம் ” என அவளே அவருக்கு ரசம்,ஊறுகாய் என பரிமாற, அவனே அருகில் அமர்ந்திருப்பது
போல் உணர்ந்தார் அருணா.
அனைவரும் சாப்பிட்டு முடிய, ” ஸ்ரீ குட்டி உனக்கு இப்பவே போகணுமா? ஒரு மணிநேரம் கழிச்சு போறியா? ” எனவும் அவள் ராஜை பார்க்க, அவரோ, ” நா பிஏ கிட்ட சொல்றேன் தாரா நீ அவ கூட கொஞ்சம் இரு என்றார். சரி என தலையாட்டியவள் அவருடன் அவர் அறைக்கு செல்ல தாராவின் அன்னையும் கால் செய்து அருணாவின் உடல்நலம் விசாரித்து வைத்தார்.அவளை அருகே அமர்த்திக் கொண்டவர்.
“உன்கிட்ட ஒன்னு கேட்பேன் உனக்கு தெரிஞ்சிருந்தா என்கிட்ட உண்மையை சொல்வியா? ‘ என,
“கண்டிப்பா ஆண்ட்டி. என்ன?” எனவும்,
“அது நம்ம நிவியும் உங்கண்ணனும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்களா? என்றார்.
‘அச்சோ! வசமா மாட்டிகிட்டோமே கடவுளே காப்பாற்று.’ என மனதில் வேண்டியவள் அவள் விழிகளை அகல விரித்து என்ன பதில் கூறுவதென்று முழிக்க அவள் முழியிலேயே அவளுக்கு தெரியும் என்பதாய் உணர்ந்தவர்.
“ஆன்ட்டி… ‘ என அவள் வாய் திறக்க.
“ஸ்ரீ குட்டி பொய் சொல்ல வேண்டாம் டா. நிவி தருணை லவ் பண்ணினான்னா எதுக்கு விஜய்க்காக சாக துணிந்தாள் ?அதுதான் எனக்கு புரியல.தருண் கூட என்கிட்ட இது பற்றி ஒன்னுமே சொல்லல்ல பாரேன். என் பையன் போலத்தான் அவனுக்கு இந்த வீட்ல உரிமை இருக்கு . அவன் இப்படி பண்ணுவான்னு நினைக்கல. எனவும்,
அவர் முகம் பார்த்தவள் எதாவது ஒன்று நடக்கட்டும். அவங்களும் அவங்க அம்மாவை, குடும்பத்தை விட்டு கஷ்டப்படறாங்க. இங்க இவங்களும் இப்படி இருக்காங்க. எங்க அண்ணனுக்கும் கெட்ட பெயர் என நினைத்தவள்,
“எங்கண்ணன் மேல எந்த பிழையும் இல்லை. அவங்க அவங்க காதலை நிவிதா கிட்ட சொல்லாதது தான் அவங்க செய்த பிழை ஆன்ட்டி.’ என்றவள், நிவியின் விளையாட்டு வினையானது முதல் தன் அண்ணன் காதல் கொண்டது வரை அனைதக்தையும் கூறினாள்.
‘எங்கண்ணாக்கு உங்க கிட்ட, உங்க வீட்ல இப்படி நம்பிக்கையா உங்க வீட்டுக்குள்ள விட்டதுக்கு இப்படி ஒரு வார்த்தை பேசிடக்கூடாதுன்னு தான் அவங்க லவ்வ சொல்லல்ல. அதோட உங்க பையன் பிரென்ஷிப்பை இழக்கவும் விரும்பல. ” என்றாள்.
“ஓஹ் இவ்வளவு நடந்திருக்கா.ஆனா நான் என் பையனை பிரிஞ்சு கஷ்டப்படறேன்.”என அழ,
“ஆன்ட்டி இப்பவும் உங்களுக்கு தெரிஞ்சதை காட்டிக்க வேணாம் பிலீஸ்.நல்லபடியா யாரும் மனசு கஷ்டப்படாம இதுக்கு ஒரு முடுவு பண்ணிட்டு உங்ககிட்ட வருவாங்க.”
என்றாள் தாரா.
(இவள் இங்கு இவ்வாறு கூற அங்கு இவள் பூ இதயம் கொண்டவனோ அவளது தந்தையுடன் தருண் காதல் பற்றி பேசிக்கொண்டிருந்தான்)
“ஆனா அவன் மனசு கஷ்டப்படுமில்ல. யாரோட மனசையும் கஷ்டப்படுத்த மாட்டான். வீட்ல ஒவ்வருத்தரையும் பார்த்து பார்த்து அன்பு காட்டுவான். அதுக்காகத்தான் இப்போவும் பிரிஞ்சிருக்கான்னு தோணுது.”
“சாரிடா உன்னை வச்சுட்டு நா புலம்பி உன்னையும் கஷ்டப்படுத்திட்டேனா? “
“அச்சோ அப்டில்லாம் இல்ல ஆன்ட்டி.” என்றாள்.
” அப்டின்னா ஆன்ட்டி பார்க்க அடிக்கடி வரியா?” என அருணா கேட்க, சரி யென்பதாய் தலையசைத்தாள்..
“ஹ்ம்ம் அங்கிள் ஆபிஸ்ல வேலைனு வந்துட்டா புலி தான்னு சொன்னாங்க. ஆனா எனக்குன்னா முயல் குட்டியாட்டம் தான் இருக்க. உங்கம்மா உன்னை குட்டின்னு கூப்பிட்றதுல தப்பில்லைனு தான் தோணுது…”
“.ஆன்ட்டி … என அவள் சிணுங்க,
” சும்மா சொன்னென்ன்டா.டைமாச்சு கிளம்பு. இப்போ ஆபிஸ் போக வேணாம். அங்கிள்கிட்ட சொல்லி நேர வீட்டுக்கே போய்டு.சரியா? ” எனவும்,
“ஓகே ஆன்ட்டி அப்போ நான் வரேன். நீங்க உங்க உடம்பை பார்த்துக் கோங்க.” என இருவரும் வெளியில் வர ஹாலில் அமர்த்திருந்த
பாட்டியிடம் வந்தவள்,
” பாட்டி போய்ட்டு வரேன்” என்றிட
“சரிடா பத்திரமா போடாம்மா.” என அவள் கன்னத்தில் வருடியவர் விடை கொடுக்க வெளியே வண்டி அருகே வந்தவள் நிவி அவ்விடம் நிட்பதை கண்டு யாரும் இல்லை என்பதாய் உறுதி செய்துக்கொண்டு அவளருகே
சென்றவள்.
“எப்டிருக்கீங்க அண்ணி? ” எனவும் அவள் கையை பிடித்துக்கொண்டவள்.
“நான் நல்லா இருக்கேன் தாரா.’ என சிரித்தவள். ‘எப்போடா உங்க வீட்டுக்கு வரலாம்னு இருக்கு.” என்றாள்.
“சீக்கிரமே வரலாம் அண்ணி வொர்ரி பண்ணிக்காதிங்க… வரேன் அண்ணி டைமாச்சு.” என்றாள்.
“ஓகே பாய்… ” என அவளை வழி அனுப்பி விட்டு உள்ளே சென்றாள். வண்டியில் ஏறியவளுக்கோ மனதில் கோபம்.வீட்டுக்கு போனதும் அண்ணா கூட பேசனும் என நினைத்துக் கொண்டவள், புன்யாவுக்கு தனக்காக காத்திராமல் வீட்டுக்கு வரும் படி மெசஜ் அனுப் பின்னாள். வீட்டுக்கு வந்து குளித்து உடைமாற்றியவள் முதல் வேலையாக தருணுக்கு கால் செய்தாள்..
தருண் மற்றும் பிரபா அவர்களது ஷோரூம் ஆபிஸ் அறையில் அமர்ந்து லேப்டாபில் வீடியோ கோளில் விஜயுடன் முக்கியமாக ஏதோ விவாதித்துக்கொண்டு இருக்க, சரியாக அவ்வேளை தருணின் அலைபேசி இசைக்க யாரென பார்த்தவன், தாரா எனவும் தினமும் ஸ்பீக்கர் ஒன் பண்ணி அவளுடன் பேசுவது போல இன்றும் ஒன் பண்ண அது லேப்பில் பாத்திருந்தவனுக்கும் கேட்க நேர்ந்தது.
“ஹலோ ண்ணா…”
” ஸ்ரீ குட்டி என்னடா விஜய் வீட்டுக்கு
போய்ட்டு வீட்டுக்கு வந்துட்டியா? ” எனவும்,“ஹ்ம்ம்’ என்றவள், ‘அங்கதானே அண்ணியும் இருக்காங்க. அதென்ன விஜய் வீடு. நிவி வீடுன்னு சொல்றதுக்கு என்ன உனக்கு? ” என தாரா கேட்க…
” ஸ்ரீகுட்டி என்னாச்சு. அண்ணி ஏதாச்சும் சொன்னாளா?” என்றான்…
(நிவி ஏதும் பேசினாலோ எனும் நினைவில்… )
“அண்ணி என்ன சொல்லபோறாங்க. நீங்க ரெண்டு பேரும் தான் வாயே திறக்க மாட்டிங்களே. மத்தவங்களை வச்சே உங்க வேலையை செய்துக் கொள்றீங்களே.”
“என்னாச்சு ஸ்ரீ, ஒழுங்கா சொன்னா தானே புரியும்…”தருண் கொஞ்சம் கோவப்பட..
“இப்போ எதுக்குண்ணா சத்தமா பேசுற, பண்றதெல்லாம் பண்ணிட்டு, அங்க வீட்ல ஆன்ட்டி, பாட்டிம்மா எல்லாம் எவ்வளவு வொரி பண்றாங்க தெரியுமா? பார்க்கவே கஷ்டமா இருக்கு. அதோட ஆண்டிக்கு நேற்றிலிருந்து காய்ச்சல் வேற .அவங்க அப்பாவும் உங்க பிரெண்ட தான் திட்றாங்க. உங்க பிரெண்டும் அங்க என்ன சந்தோஷமாவா இருப்பாங்க. தேவயாண்ணா இதெல்லாம்? பேசாம அப்பா கூட பேசி அவங்க வீட்ல பேச சொல்லு. உன் பிரெண்டுக்கு உன் கெளரவம், உன் பிரென்ஷிப் முக்கியம்னு அவங்க அம்மாவை கஷ்டப்படுத்தான்னு சொல்லு. முதல்ல கிளம்பி வர வழியை பார்க்க சொல்லு. பெரிய பிரென்ஷிப்.எதையும் சமாளிச்சு லவ்வ சொல்ல உனக்கு தைரியம் இல்ல. இதுல உனக்கு அவரு ஹெல்ப்பாம். அவரு வேணாம்னா நீயும் பேசாம இருக்க,அண்ணியும் ஒன்னும் பேசாம இருக்காங்க. கடைசில அவர் தான் பிழைன்ற மாதிரி ஆகிரும்ல. செல்பிஸ் ஆகிட்ட நீ.” அவனை வறுத்தெடுத்தவள்.
“ஆனா ஒன்னு, நான் மட்டும் லவ் பண்ணேன்னா உன்னை மாதிரி பிரெண்டுன்னெல்லாம் பார்க்கமாட்டேண்ணா சொல்டேன்.”
என பேசியவள்,பேசிய பிறகுதான் என்ன பேசுறோம்,’அதிகமா பேசி நாம நம்ம மேட்டர சொல்லுவோம் போல இருக்கே. இருக்க பிரச்சினை போதாதுன்னு.’ மனதில் நினைத்தவள், அப்படியே பேச்சை நிறுத்த, ‘ என்ன சொன்ன டா ஸ்ரீ? ” என தருண் கேட்க…
இவள் பேசுவதை அழகாக கன்னத்தில் கை வைத்தவாறு கேட்டுக்கொண்டிருந்தவன்.தனது அன்னை, வீட்டை பற்றி பேச மனம் கஷ்டமாக இருந்தாலும் சிரித்த வண்ணமே அவள் பேசுவதை ரசித்திருந்தவன், “டேய் தங்கச்சி சொல்றாள்ள கேட்டுக்கோ என்றான்… “
“டேய் எப்படிடா ரெண்டு பேருமா ஒன்னே சொல்றிங்க? ” என தருண் விஜயை கேட்டு விட. அத்தோடு பிரபாவோ,
“டேய் என்னடா இவ்வளவு பேசுறா உன் தொங்கச்சி…’என்றவன்,
‘ உனக்கும் நல்லா வேணும்டா என அவளுக்கு கேட்காத வகையில் கையால் சைகை செய்து கை தட்டி விஜயோடு ஹைபை காட்ட அவர்கள் இருவரையும்
முறைத்தவன், “ஸ்ரீ குட்டி …’ எனவும்,
” சும்மா குட்டி, குட்டின்னாத.ஆமா உன் பக்கத்துல யாரும் இருக்காங்களா? ” என்றாள்.
“அது நா, பிரபா அப்புறம் விஜய்.” எனவும்.
“விஜய்?”
“இல்ல… லாப்லா வீடியோ கோள்ல இருக்கான்”
‘ஓஹ்?அப்போ அண்ணா நா பேசினது அவங்களுக்கு கேட்டிருக்குமோ? அவள் குரல் இப்போ உள்ளே சென்றிருந்தது .
அது ஸ்ரீ மா ஸ்பீக்கர்ல தான் போட்டிருந்தேன் டா. சாரி என்றான் .
“அச்சோ என்னண்ணா நீ…”
“ஸ்ரீ ப்ரோமிஸ் டா இப்போ தான் விஜயும் அப்பா கூட பேசுன்னு சொல்லிட்டு இருந்தான். அதை பற்றித்தான் பேசிக்கிட்டு இருக்கோம். கூடிய சீக்கிரமே வந்துருவான்டா..
நீ சொல்ற மாதிரியெல்லாம் இல்லடா.நான் பேசுறேன்னுதான் சொல்றேன் இவன்தான் பேசினால் பிரெண்டில்லை அப்படி இப்படின்னு என்னை குழப்பி விடறாங்க டா…நீயும் இப்போ செல்பிஸ் அப்படி இப்படின்னு. யேண்டா லவ் பண்ணோம்னு இருக்கு.” தருண் வருந்திக்கூற,
” அதுவும் பிரெண்டு வீட்ல..தேவையா ” பிரபா இடையில் சிரித்துக்கொண்டே போட்டுக் குடுக்க தருண் அவனை முறைத்த வண்ணம், “நான் நைட் பிரபா கூட வீட்டுக்கு தான் வருவேன், பேசிக்கலாம்டா டா. “
” ஹ்ம்ம் சரி.எதுவோ பார்த்து பண்ணு… ஆன்ட்டி கூட அவங்களை பேச சொல்லு முதல்ல. பாக்கவே பாவமா இருக்குண்ணா.ரொம்ப வீக்கா இருக்காங்க.”
“சரிடா.. வெச்சிடட்டுமா’ என, ஹ்ம்ம்.” என்று கூறி வைத்தாள்…
‘அச்சோ! நாம பேசினது கேட்டிருப்பங்களோ… ஒருவார்த்தை எப்பிடி இருக்கன்னு கேட்க என்ன வந்தது அவங்களுக்கு. ப்ச் அவங்களுக்கு தான் நான் யாருமில்லையே.நான் தான் புலம்பிக்கிட்டு.’ அவள் கண்கள் கலங்கி விட்டன. ‘பொல்லாத காதல் வந்து என் மனசுல உட்கார்ந்து கிட்டு என்னை பாடாப்படுத்துது…’ இவள் வாய்விட்டே புலம்ப அவள் அருகே வேலை விட்டு வந்த புன்யா, “என்ன பேபி தனியா பேசிட்டு இருக்க?” எனவும் ஒன்னு மில்லை என்றவள் அன்றைய வேலைகளை பற்றி பேசிக்கொண்டு உள்ளே சென்றனர்.