இருளை ஈர்க்கும் ஒளி

Screenshot_2022-12-26-14-13-56-38_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

இருளை ஈர்க்கும் ஒளி

💙இருளை ஈர்க்கும் ஒளி💙

 

ஈர்ப்பு – 23

 

 

உனக்கு ஒன்று  என்றால் இதயம்  கூட  ஒரு நிமிடம் நின்று       தான் அதன்       இயக்கத்தைத்  தொடர்கிறது.

 

அன்று மதியம் 2 மணி…..

 

வர்ஷா தன் அண்ணனின் நண்பன் கம்பெனிக்கு  ப்ராஜெக்ட்க்காக காரில் சென்று கொண்டிருந்தாள். காலை அங்கே பரபரப்பாய் இருக்கும் என அவன் நண்பன் தான் மதிய வேலை வரச் சொன்னான்.

அவள் நினைவு முழுக்க காலை லட்சுமியும் ராதாவும் பேசியதிலேயே இருந்தது.

தியா மற்றும் ஷ்யாமை  அலுவலகம் அனுப்பிவிட்டு லட்சுமியும் ராதாவும் மேலே இருந்த ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

“அப்புறம் மாப்பிள்ளை எப்படி இருக்காரு அண்ணி”.

“அவனுக்கு என்ன….”, எனச் சாதாரணமாய் பேச வந்தவர் தன் அறைக்குச் செல்ல வந்த வர்ஷாவை பார்த்து,

“அவன் ரொம்ப பாவம் அண்ணி” என்றார்.

“ஏன் அண்ணி மாப்பிள்ளைக்கு என்ன ஆச்சி”.

“நைட்லாம் அவன் அறையில் லைட் போட்டே இருக்கு, தூங்குறதே இல்ல.  எப்போ பாரு ஏதோ யோசனையிலேயே இருக்கான். பாவம் பிள்ளைக்கு என்ன கஷ்டம்னே தெரியல” என ராதாவிடம் குறைபட்டுக் கொண்டார்.

“எதாவது வேலை சம்பந்தமா இருக்கும் அண்ணி நீங்க ஒன்னும் கவலை  படாதீங்க” என ராதா ஆறுதல் கூறினார்.

லட்சுமி நினைத்ததை போல் வர்ஷா அவர்கள் பேசியதைக் கேட்டாள்.

ராஜ் வேளையில்  கெட்டிக்காரன். அது எவ்வளவு பெரிய கேஸ் என்றாலும் அசால்ட்டாய் முடித்துவிட்டுச் செல்வான். எனவே அனைத்தையும் கேட்டவள் அது வேலை சம்பந்தமாய் இருக்க வாய்ப்பு குறைவு தான் என உணர்ந்து ‘தன்னால்தானோ’, என மனம் வெதும்பினாள்.

 

அதைப் பற்றித் தான் இப்போது யோசித்திருந்தாள். அவளின் யோசனையை  கலைத்தது ‘டோம்’ என்ற பெரும் ஒளி. அதைத் தொடர்ந்து கார் தாறுமாறாய் ஓடியது.

“ஐயோ ண்ணா என்னாச்சு”, என ஓட்டுனரைக் கேட்க.

“டையர் வெடிச்சிடுச்சிமா”, எனக் காரை நிறுத்த முயற்சி செய்தார் அப்போது எதிரே லாரி வர, அதில் மோதாமல் இருக்க வண்டியைத்  திருப்பியவர் அருகே இருந்த மரத்தில் வேகமாய் மோதினார்.

அப்போதுதான் உதவி கேட்கலாம் எனக் கண்ணாடியை இறக்கி வெளியே கை நீட்டினாள் வர்ஷா, அதற்குள் கார் வேகமாய் மரத்தில் மோதவும் அவள் கை மடக்கிய நிலையில்  கீழேயும், தலை மேலேயும் பலமாய் கதவில் மோதியது. அதில் வலி உயிர்போக “அம்மா” எனக் கத்தினாள். தலையில் இடித்த வேகத்தில் இரத்தம் வரத்  துவங்கியது.

ஓட்டுனர் ஸ்டேரிங்கில் தலை முட்டி மயங்கிய நிலையிலிருந்தார்.

கதவோ லாக்காகி விட,  தன் பேசியில் வீட்டைத் தொடர்பு கொள்ள நினைத்தாலும் அது வண்டி மோதிய வேகத்தில் எங்கோ கீழே விழுந்திருந்தது ஒரு கையில் அடிப்பட்ட நிலையில் அவளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தலை வேறு வின் வின்னேன தெறிக்க ஒரு கையால் அதைப் பிடித்துக்கொண்டாள்.

ஓட்டுனரை எழுப்ப முயன்றாள் அவர் எழுந்த பாடில்லை, இவளுக்குப் பயம் சூழ்ந்தது. அவருக்கு என்ன ஆனதோ என்று பதறியவள் மறுநொடியே பயம், வலி அனைத்தும் சேர்ந்ததோ இல்லை தலையில் அடிப்பட்டதாலோ மெது மெதுவாய் தன் நினைவிழந்தாள் பெண்.

காலம் யாருக்கு என்ன வைத்திருக்கிறது? நிலையான வாழ்வு என்பது இவ்வுலகத்தில் இல்லை,அது வர்ஷாவிற்கும் பொருந்தும்,விதி வர்ஷாவை அவளது வாழ்வைத் தொடர அனுமதிக்குமா?

 

*********

 

அலுவலகத்தில்……..

 

அவன் அறை உள்ளே மற்றொரு சிறு கதவு இருந்தது.

அதைத் திறந்து சென்ற ஷ்யாமின் பின்னே வந்த தியா அந்த அறையில் தன் பார்வையைச் சுழல விட்டாள்.

ஒரு சிறு பெட் ஒருவர் படுக்கும் அளவிலிருந்தது. அதன் அருகே கழிவறை. சற்று தள்ளிச் சாப்பிடச் சிறு மேசை மற்றும் இரண்டு நாற்காலிகள் என ஒரு சிறு வீடு போல் இருந்த அறையைக் கண்டு ஷ்யாமிடம் “நீங்க உண்மையா வேலைதான் செஞ்சிகளா இல்ல…. “

“தூங்கினனானு கேட்கிற”

“அதே தான்”

“கொழுப்பு தான் உனக்கு, நானே பைவ் டேஸ் ஒர்க் சேர்த்து பாத்துட்டு வரேன், நீ  என்னனா என்னையே கலாய்க்கிற”

“பைவ் டேஸ் ஒர்க்கா ? ஏன் இந்த டூ டேஸ் நீங்க ஆபீஸ் வரல”

“வந்தேன் ஆனா எந்த வேலையும் பாக்கல்ல. பாக்க முடியலை”.

“ஏன்”

“ம்…நீ என்னை அவொய்ட் பண்ணிட்டு போயிட்ட, எனக்குத் தான் கஷ்டமா போச்சி மைண்ட்  பூரா அதே யோசனை, அப்புறம் எப்படி வேல செய்ய முடியும்”

“சாரி” என்றாள் உண்மையான வருத்தத்துடன்.

“இல்ல தியாம்மா நான் தான் கொஞ்சம் ஓவரா  போய்ட்டேன் நான் தான் சாரி சொல்லணும்”.

நிலைமையைச் சகஜமாக்க நினைத்த தியா “இப்படியே மாறி மாறி சாரி கேட்டா போதுமா? எனக்கு ரொம்ப பசிக்குது”, என்றாள்.

அவள் பசி என்றவுடன் துரிதமாய் செயல்பட்டான் ஷ்யாம்.

அனைத்து உணவும் அழகாய் தனித் தனியே ஹாட் பேக்கில்  அடுக்கி வைக்கப் பட்டிருந்தது.

ஒன்றென்றாய் அவன் திறக்க சோறு, சாம்பார், வறுவல், பொரியல், அப்பளம் என ஒரு ஃபுல் மீல்ஸ் இருந்தது.

மற்றொரு டப்பா இருந்தது ‘இது என்ன புதுசா?’, என அதைத் திறக்கப் போனவனின் பேசி அடிக்க அதில் கவனமானான்.

இவளுக்குத் தட்டில் அனைத்தையும் நேர்த்தியாய் பரிமாறிக் கொண்டே தான் பேசினான்.

“சொல்லுங்கம்மா”.

“சாப்பிட்டீங்களா”.

“கொஞ்சம் வேல ஜாஸ்திமா இப்போ  தான் சாப்பிட வந்தோம்”.

’சாப்பிடு’ என அவளுக்குச் செய்கை செய்தான்.

“என்னப்பா இது இவளோ லேட்டாவா  சாப்பிடுறது. சரி சரி சாப்பிடுங்க தியாக்கு ஸ்பெஷலா ஸ்வீட் வெச்சி இருக்கேன் அதை மறக்காம கொடுத்திரு”. என வைத்துவிட்டார்.

 

குழந்தை பசி என்றவுடன் பதறும் தாயின் நிலையில் செயல்பட்ட அவனின் அக்கறையில் மனம் நெகிழ அவனையே பார்த்திருந்தாள்.

அவள்  முகத்தின் முன் சொடுக்கிட்டு, “பசிக்கிதுனு சொல்லிட்டு இப்போ என்னை ஏன் சைட் அடிக்கிற”. என்றான் அவன்.

“ஐயோ! ரொம்ப தான்”, என உணவில் கவனமானாள்.

முதல் வாய் வைக்கவும் பசி நன்றாய் உரைக்க மடமடவென அவள் திட்டில் உணவு காளியானது.

காலியாகக் காலியாக அவளுக்குப் பார்த்துப் பார்த்துப் பரிமாறி அவனும் உண்டான்.

இறுதியாய் கையளம்பி அந்த ஸ்வீட் இருந்த பாக்சை  திறக்க, அதில் தியாக்கு பிடித்த ரசகுல்லா இருந்தது.

அங்கே இருந்த ஒரு குட்டி பௌலில் அவனுக்கு இரண்டு ரசகுல்லாவும் அதில் கொஞ்சம் சக்கரை  தண்ணீரும் ஊற்றிக் கொடுத்தாள்.

ஒன்றை ஸ்பூனில் எடுத்து வாயில் போட்டுக்கொண்டவன் “நீயும் சாப்பிடு”, என அவள் புறம் அந்த பௌளை நீட்டினான்.

அந்த இனிப்பு நீரில் நன்றாய் ஊரி, அழகுக்காய் போட்ட குங்குமப்பூ அதில் மிதக்க, வானில் இருக்கும் நிலா சிறுத்தாய் உருமாறியதைப் போல் இருந்த அந்த வெள்ளை ரசகுல்லாவை வாயில் போட்டு அதன் சுவையில் கண்மூடி மெய்மறந்து ரசித்து உண்டாள் அவள்.

கண்மூடிய நிலையிலேயே ஸ்பூனில் இருந்த ஜீராவைச் சுவைக்க அது சிரித்தாய் இதழில் வழிந்தது. ‘ஏய் எங்க போற’, என தன் நாவால் அதை வழியாமல் தடுத்தாள்.

அதை மட்டுமே தடுக்க முடிந்தது அவளால். எதிரே ஒருவன் இவளின் செயலில் லிட்டர் லிட்டராய் விட்ட ஜொல்லை பார்க்கவில்லை அவள்.

அவளைத் தான் பார்க்கவிடாமல் தடுத்திருந்ததே அவளின் மூடிய இமை.

அவளின் இதழ் மீது பார்வையைப் பதித்த படி “ம்…”, என்ற இவனின் பெருமூச்சின் சத்தத்தில் விழிகள் மலர்தியவள்.

தன் இதழையே கண் கொட்டாமல் பார்த்த ஷ்யாமை கண்டு அவசரமாய் நகர்ந்தாள்.

‘இவர் ஏன் அப்போ அப்போ இப்படிப் பார்த்து வைக்கறார்’ என நினைத்துக்கொண்டே அங்கே இருந்த சிங்கில் கையிலிருந்த ஸ்பூனை கழுவினாள்.

அவள் நகரவும் தன்னை நிலைப்படுத்திக் கொண்டவன் “ச்ச இன்னைக்கி தான் சாதாரணமா பேசினாள் அதை நானே கெடுத்துப்பனோ’ என மானசீகமாய் தலையில் குட்டிக்  கொண்டான்.

பின் அவள் உண்ட தட்டையும் சேர்த்துக் கழுவச் செல்ல அவளோ “நானே கழுவுறேன் குடுங்க” எனக் கேட்க.

“நானே பாத்துக்குறேன் நீ அந்த பாத்திரத்தை  ஒதுக்கி வை”, என்றான்

அவனைப் பற்றி அறிந்தவள் அதற்கு மேல் ஏதும் கேட்காமல் அவன் சொன்னதைச்  செய்தாள்.

அதன் பின் இருவரும் அவர் அவர் வேலை பார்க்கச் சென்றனர்.

கோப்புகள் அறைக்குள் சென்ற தியா விழி விரித்தாள்.

காதல் ஒரு மாய சக்தி அதுவரை யாரென்றே அரியாதவரை கூட, நமக்கு அவர்கள் தான் உலகம் என உணர வைக்கும். நம் கண்ணனுக்கு அது புலப்படாமல் இருந்தாலும் செய்யும் செயலில், பார்க்கும் பார்வையில், பேசும் பேச்சில் தன் இருப்பை அது காட்டிக் கொண்டே இருக்கும்.

ஷ்யாமின் செயல்களும் அப்படிதான் அவனின் காதலை அவளிற்கான அவனின் ஒவ்வொரு செய்யலிலும் வெளிப்பட்டது அதைப்  புரிந்துகொள்வாளோ பாவை?

 

*********

அன்று மதியம் 2:30 மணி……

 

அந்த பக்கம் வந்தவர்கள் பார்த்து போலீஸ்க்கும்  ஆம்புலன்ஸ்க்கும் தகவல் கொடுத்தனர்.

‘ஒரு கார் விபத்தாகி இந்த இடத்தில் இருக்கிறது அதில் இரண்டு பேர் மாட்டி இருக்கின்றனர்’, என்ற செய்தி கண்ட்ரோல் ரூம்க்கு வர அது ராஜின் பொறுப்புக்குள் இருக்கும் பகுதி ஆகையால் இவனுக்கும் தகவல் அளிக்கப் பட்டது.

அந்த நேரம் பாத்து அவன் அந்த புறம் ஒரு கேஸ் விடயமாய்  செல்லத் தானே சென்று பார்ப்பதாய் கூறினான்.

அவனின் உயிரானவள் தான் அங்கே விபத்துக்குள்ளக்கி  இருக்கிறாள் என்பது தெரியாமல் விதி அவனையே அங்கே அனுப்புகிறதே!

விதி வலியது தான் அதில் சந்தேகமே இல்லை.

அவன் சென்ற போது ஒரே கூட்டமாய் இருக்க அந்த கூட்டத்தை விலக்கிச் சென்று பார்த்தவனுக்கு உயிரே இல்லை.

பின்னே அது வர்ஷா வீட்டு கார். அது தானா என நம்பர் பிளேட் பார்த்து உறுதி செய்து கொண்டான். காரின்  பின்புறம் நின்றதால் அவனுக்கு யார் இருக்கின்றனர் எனத் தெரியவில்லை.

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு சென்று பார்த்தவனுக்கு அது செல்லும் அளவு வலி.

 

ஆம், வர்ஷா தான் அவனின் உயிரே தான் ‘ஐயோ! என்ன ஆனது ஏன் இப்படி இருக்கிறாள்’ என மனம் கதற அவளை தன் அருகே மெதுவாய் இழுத்து கைகள் நடுங்க நாசியில் விரல்  வைத்துப் பார்க்க, மூச்சு வந்தது. அப்போதுதான் சென்ற உயிர் மீண்டும் அவனிடமே வந்து சேர்ந்தது போல் உணர்ந்தான் அவன்.

அதன் பின் நினைப்பெல்லாம் அவளைக் காப்பாற்ற வேண்டும் என்பதே.

“ஆம்புலன்ஸ்க்கு போன்  பண்ணிங்களா”, சுற்றி இருந்தவர்களை கேட்டான்.

“பண்ணிட்டோம் சார் இதோ வந்துடுவாங்க”, எனப் பதில் உரைத்த நேரம் ஆம்புலன்ஸ் வந்தது.

அவளை மெதுவாய் கதவை உடைத்து வெளியே எடுத்து ஆம்புலன்ஸில்  அவனே தூக்கிக் கொண்டு போய் கிடத்தினான்.

பின் ஓட்டுனரையும்  மற்றொரு ஆம்புலன்ஸில் ஏற்றி ஹாஸ்பிடல் நோக்கி பயணப் பட்டனர்.

தன்னவளின் குருதி படிந்த நெற்றியைப் பார்த்தவனின்  கண்களில் கண்ணீர் நிற்காமல் வந்தது. ஏற்கனவே தாய் தந்தையை கார் விபத்தில் இழந்த நினைவு இப்போது வந்து அவன் சிந்தையைச் சூழ  வர்ஷாவின் கைகளைப் பற்றிக் கொண்டு “என்கிட்ட திரும்பி வந்துடு வர்ஷுமா இனி ஒரு உயிருக்கு உயிரானவங்க இழப்ப என்னால தாங்க முடியாது”, எனக்  கதறினான் அவன். அவனின் கண்ணீர் அவள் கைகளை நனைத்தது.

கல்லும் கரையும் என்பார்களே அப்படி இருந்தது அவனின் துடிப்பு. இறைவன் அவனுக்குக்  கருணை காட்டுவாரா இல்லை அவனின் தாய் தந்தை நிலை தான் இவளுக்கும் நேருமா? விடை காலத்தின் கையில்!

 

***********

 

அலுவலகத்தில்………

 

சிறு மேசை நாற்காலி இருந்த இடத்தில் இப்போது ஒரு பெரிய சோபாவும் நீண்ட மேசையும் இருக்க அவள் குவியலாய் போட்டிருந்த கோப்புகள் சீராய் அந்த நீண்ட மேசையில் அடுக்கி இருந்தது.

அவள் பின்னே வந்த ஷ்யாம் அவளின் பார்வையில் ‘எப்போ பாரு இப்படி முட்டக் கண்ண விரித்து பாத்து  பாத்தே மனுசன உசுப்பேத்துறது அப்புறம் எசக்கு பிசக்கா நம்ப மனசு யோசிச்சி அவ கிட்ட போன நம்பல அவொய்ட்  பண்ணிட்டு போய்ட வேண்டியது இதே பொழப்பா அலையுறா’ என அவளை செல்லமாய் வைய.

அவள் அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள்.

அவள் முறைப்பில் ஜெர்கானவன், ‘என்னடா இது காளியத்தா மாதிரி பாக்குறா ஒரு வேல மைண்ட் வாய்ஸ்னு  நினைச்சி வெளிப்படையா பேசிட்டோமா’ குழம்பினான்.

“என்ன இது” எனப் புதிதாய் அங்கே குடி வந்த பொருளைச் சுட்டிக்  காட்டி கேட்க.

“இது தெரியாத தியாம்மா உனக்கு அது பேரு சோபா”

“ம்…. இன்னும் ‘எ’ ஃபார் ஆப்பிள்  ‘பி’ ஃபார் பால்னு பாடம் எடுங்க இது வேலை செய்யவா இல்ல தூங்கவா”

“2 இன் 1 எப்படி வேணா யூஸ் பண்ணிக்கலாம். அப்புறம் ‘எ’ ஃபார் ஆப்பிள் னு சொல்லித் தராது ஓல்ட்”.

“அதுனால எ ஃபார் ஏரோபிளைன்னு சொல்ல  போறிங்களா”

“ஐயோ! தியாம்மா நீ இன்னும் LKG லேயே இருக்க ‘எ’ ஃபார் அங்கில் கிஸ் (angle kiss)”

“அங்கில் கிஸ்சா அப்படினா”

“உன்னக்கு நிறைய கிளாஸ் எடுக்க வேண்டியதா இருக்கு”, என அலுத்துக் கொண்டவன் அவளை நெருங்கி அவள் முகத்தைருக்கே வர  பயத்தில் விழி மூடினாள் அவள்.

அதை எதிர்பார்த்தவன் போல் அவள் இமையில் தன் முதல் முத்திரையை பதித்தான். பெண்ணின்  தேகம் சிலிர்த்தது.

அந்த சிலிர்ப்பு இவனைத் தாக்க அவள் முகத்தை தன் கரங்களில் ஏந்தினான். அதற்கு மேல் என்ன நடத்திருக்குமோ  ஆனால் விதியென்று ஒன்று உள்ளதே, அது எவை? எப்படி? எங்கே? நடக்க வேண்டுமென்று நினைக்கிறதோ அப்படி தான் அனைத்தும் நிகழும்.

அவர்களின் மோன நிலையைக்  கலைத்தது ஷ்யாமின் பேசி முதலில் கடுப்பாய் ‘ச்சி’ என எண்ணியவன் தன் நிலை உணர்ந்து அதற்கு நன்றி உரைத்தான்.

பெண்ணின் நிலையோ வேறு பேசியின் சத்தத்தில் விழிமலர்த்தியவள் அசையாமல் நின்றாள்.

“அது….வந்து……நீ அங்கில் கிஸ் தெரியாதுனு சொன்னல அது தான் இது. அப்புறம் நீ தான் அந்த டேபிள் வசதியா  இல்லனு சொன்ன. அதுனால தானே கீழ உட்கார்ந்து கால் மறுத்தது. இது உனக்கு வசதியா இருக்கும். இனி கீழ உட்காராத” என்று அவள் பதிலைக் கூட கேட்காமல் சென்றுவிட்டான்.

இவளுக்கு என்ன சொல்வதென்ன தெரியவில்லை ‘இவர் ஏன் இப்படி நடக்கிறார்? நான் ஏன் எப்படி இருக்கிறேன்?’,  என்ற கேள்விகள் மனதில் ஓட, அந்த சோபாவில் போய்  தொப்பென அமர்ந்தாள். தன் மீது அமர்ந்தவளை தன்னுள் பாந்தமாய் உள்வாங்கிக் கொண்டது அது.

 

தன்னவனுக்கு மட்டுமே மனமும் உடலும் கட்டுப்படும். பெண் தன் மனம் முழுக்க நிறைந்தவனை மட்டுமே முழுமனதுடன்  அவளைத் தொட அனுமதிப்பாள்.

தன் மனதைச் சிறிது சிறிதாய் அவன் ஆக்கிரமிக்கிறான்  என உணர துவங்கினாள் அவள். அதற்குள் அவள் எண்ணத்தைக் கலைத்தான் அதன் நாயகனே.

அவளை அவசரமாய் தேடி வந்தான் அவன்.

“தியா….. தியா……”, என்ற  பதட்ட குரலில் அவளை அழைத்தபடி வந்தான்.

வந்தவனின்  குரலின் பதட்டம் முகத்திலும் பிரதிபலித்தது.

“என்னாச்சி ஷ்யாம்”, என்றவளின் குரலிலும்  இவனின் பதட்டம் தொற்றிக் கொண்டது.

“ராஜ் போன் பண்ணான்  ஹாஸ்பிடல்க்கு வரச் சொன்னான்”.

“என்ன……ஹாஸ்பிடல்கா…..”

“ஆமா சீக்கிரம் வா போகலாம்”.

“அண்ணாக்கு ஏதும் இல்லையே”.

“அவன் எதுவும் சொல்ல மாட்டுகிறான்”.

காரில் ஏறியவள் கைகள் நடுங்கியது.

அவள் கை பற்றி, “ஒன்னும் இல்ல தியா அவனே போன் பண்ணி இருகானா அவன் நல்லா இருக்கான் தானே அர்த்தம். ஒன்னும்  ஆகியிருக்காது பயப்படாதே” ஷ்யாம்.

“ம்…..”, என்றாளே தவிர இன்னும் அவள் முகம் பயத்தில் தான் இருந்தது.

விரைவாகவே அவர்கள் மருத்துவமனையை அடைந்தார்கள்.

அங்கே வரவேற்பறையில் ராஜைப் பற்றி விசாரித்து அவன் இருந்த அறைக்கு முன் வந்தார்கள்.

நாம் பிறக்கும் போதே நம் கணக்கை எழுதி விடுகிறார் சித்திரகுப்தர்.  வர்ஷாக்கு அவர் எழுதிய கணக்கு தான் என்ன?

தியா அவள் மனதை முழுதாய் உணர்ந்தாளா?   ராஜின் கதறல் இறைவனின் செவியை அடைந்ததா?  பொறுத்திருந்து பார்ப்போம்..

 

(போன எபிக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட் போட்ட நல்ல உள்ளங்களுக்கு நன்றி🙏. அடுத்த எபில பாக்கலாம் பை பை….)

Leave a Reply

error: Content is protected !!