உனக்காக ஏதும் செய்வேன் – 10

1646358406084-7f37e428

அத்தியாயம் – 10

 

நேற்று போலவே இன்றும் தன் மனையாள் தன்னை தவிர்க்க ‘வேணுன்னே பண்றா’ என உணர்ந்து கொண்டான். ஆனால் ஏன் என்று தான் புரியவில்லை.

 

ஒருவேளை அவளுக்கு தான் அவள் மீது செலுத்தும் காதல் பார்வைகள் பிடிக்க வில்லையோ?

 

இத்தனை நாட்களாக கண்டு கொள்ளாததால் இப்போது மட்டும் என்ன என நினைக்கிறளோ….! என்றெல்லாம் எண்ணியவன் அவளிடம் விளக்கம் கூறி சமாதானம் செய்யலாமா என்று கூட நினைத்தான்.

 

ஏனோ அவள் அவனை தவிர்ப்பது கஷ்டமாக இருந்தது.

 

அப்போது இரண்டு மாதமாக நாம் அவளை தவிர்த்தோமே….! அவளுக்கும் இது போல தானே இருந்திருக்கும் என்றவனது நினைவுகளில் பின்னோக்கி சென்றது.

 

அன்று அவள் அவ்வாறு பேசியிருக்காவிட்டால் தான் அப்படி பேசியிருக்க மாட்டோமென அவனுக்கு தெரியும். ஏனென்றால் அந்த நிகழ்வுக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லாமல் அவள் மீது கோபம் எவ்வாறு தோன்றும்?

 

ஆனால் அன்று பேசியவள் பின் அது பற்றி எதுமே பேசவில்லை என்பது அவனுக்கு கோபத்தை குறைத்திருந்தது.

 

அன்றைக்கு அவள் சொன்னது போல ஒருவேளை யாருக்கும் சார்பாக பேசவில்லையோ. தன் கோபத்தை பார்த்து ஆறுதலாக தான் பேசினாளோ என்றும் தோன்றியதுண்டு.

 

ஆனாலும் பல நாட்கள் அவளோடு இயல்பாக பேச இயலவில்லை. அவளும் அவனிடம் பேச முயலவில்லை.

 

அந்த பார்வை…. அது மட்டுமே தன்னிடம் அன்பை எதிர்பார்த்து நின்றது….!

 

அவனால் அப்போது அதைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடிந்தது. ஆனால் இப்போது…. அவள் அப்படி இருப்பதை ஏற்றுக் கொள்ள இயவில்லையே….!

 

இவ்வாறு யோசனையிலேயே உலன்றவன் முகம் கடுப்பை வெளிப்படுத்தியது. இருப்பினும் அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். அப்போது மட்டுமே அவன் இருக்கும் இடம் வருகிறாள். அவளும் அவன் முகத்தில் வெளிப்பட்ட உணர்வைக் கண்டாள் ஆயினும் ஏதும் கண்டுகொள்ளாமல் அவன் முன் நிற்க,

 

தலையசைத்து விட்டு சென்றவன் ஒரு சில நிமிடத்தில் தான் முக்கியமான கோப்பு ( File ) ஒன்றை எடுக்காமல் மறந்து விட்டு வந்தது தெரிய வேகமாக தன் பைக் ஐ வீடு நோக்கி திருப்பினான்.

 

அவன் தேடிய கோப்பு வீட்டின் மண்டபத்தில் ( Hall ) இல் உள்ள மேசையில் இருக்க அதை எடுத்தவன் கண்களை சூழல விட்டான். அவனவள் தென்பட வில்லை.

 

அவளை பார்க்க அவர்கள் அறையின் வாயில் வரை வந்தவன் அவள் குரல் கேட்டு நின்றுவிட்டான். யாரிடம் இப்படி சிரித்து கொண்டு பேசுகிறாளென நினைத்தவன் மெதுவாக கதவை திறந்து நோக்க அது கூட தெரியாமல் அவள் அந்த அறையில் இருந்த அவனின் புகைப்படத்திடம் பேசிக்கொண்டிருந்தாள்.

 

சுவாரசியம் மேலோங்க என்ன பேசுகிறாளென கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

 

******

 

‘கடுப்பாகுதா இன்ஸ்பெக்டர் சார்?’

 

நல்லா ஆகட்டும்….’

 

‘அதானே எனக்கு வேணும்….!’

 

‘எத்தனை நாள் என்னை கடுப்பேத்தனீங்க….?’

 

‘திடிர்னு இப்படி பொண்டாட்டி அஹ் சைட் அடிச்சிகிட்டு டெரர் பீஸ் அஹ் இருந்தவரு ரொமான்டிக் ஹீரோ ஆக ட்ரை பண்றாரு….!’

 

‘ம்ம்…. கொஞ்ச நாள் உங்கள சுத்தல் அஹ் விடறேன் அப்போதான் மறுபடி எங்கிட்ட இப்படி நடந்துக்க மாட்டீங்க.’

 

‘நல்ல குழம்புங்க….!’

 

என்று சிரித்து கொண்டே பேசிக் கொண்டிருக்க,

 

‘அடிப்பாவி…. நான் என்ன லாம் யோசிச்சிட்டு இருக்கேன். இவ இங்க என் போட்டோ கிட்ட சிரிச்சி சிரிச்சி பேசிட்டு இருக்கா.’

 

‘விளையாட்டுக்குத் தான் இப்படி பண்ணிட்டு இருக்காளா….!’

 

என பெருமூச்சுவிட்டவன் மனதில் இருந்த வருத்தம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.

 

அவள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டவன்…. ‘இவளுக்கு இப்படியெல்லாம் பேச தெரியுமா’ என ஆச்சர்யப் பட்டு போனான்.

 

( உங்களுக்கு அவங்கள பத்தி என்ன தான் தெரியும் இன்ஸ்பெக்டர் சார்….?)

 

‘நீ எப்போ டா அவள பேச விட்ட’ என கேள்வி கேட்ட மனசாட்சி யிடம் பதில் இல்லாமல் முழித்தவன் அமைதியாகவே நின்றிருந்தான்.

 

ஆனால் இப்போது அவனுக்கு குறும்பாக ஒரு யோசனை வந்தது. அவளுடன் சற்று விளையாடி பார்க்கத் தோன்றியது.

 

‘இரு…. இரு…. உன்ன பாத்துக்கறேன். என்னையவா கடுப்பேத்தணும் னு நெனைக்கற’ என எண்ணியவன் உதட்டில் வசீகரமான ஒரு புன்னகை தோன்றியது.

 

அவனின் அந்த புன்னகையைக் கண்டிருந்தாள் அவள் எண்ணியது போல அவனைக் கண்டு கொள்ளாது சைட் அடிக்காமல் இருந்திருப்பளா என்பது கண்டிப்பாக சந்தேகம் தான்….!

 

ஆறடி யில் அதற்கேற்ற உடற்கட்டோடு, பார்ப்போரை ஆராயும் படி நோக்கும் தீட்சன்யமான இரு விழிகள், காவலன் என்பதால் தினமும் கிளீன் ஷேவ் செய்யும் தாடை, அளவாக கத்திரிக்கப்பட்ட மீசை, போலீஸ் ஹேர் கட் ல் இருந்த சிகை, அவன் கம்பீரத்திற்கு மேலும் கம்பீரம் சேர்க்கும் அவனின் கருமையான நிறம். இத்தகையவனிடம் தோன்றும் அந்த புன்னகை அடுத்தவரை வசீகரிக்காமல் போனால் தானே ஆச்சர்யம்.

 

ஆனால் அப்போது அதை அவள் தான் பார்க்காமல் போனாள்….!

 

நேரம் ஆவதை உணர்ந்தவன் வந்த சுவடு தெரியாமல் காவல் நிலையத்திற்கு கிளம்பி விட்டான்.

 

இதை உணராது கீர்த்தி அவனுடனான பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தாள்.

 

******

 

வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களும் பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு இருந்தனர். அதில் ப்ரீத்தி யும் ஒருத்தி.

 

கமலி மேம் தான் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். நன்றாக பாடம் நடத்துபவர் தான். ஆனால் மாணவர்கள் மனநிலையை பற்றி சற்று  கருத்தில் கொள்ளமாட்டார். அவர் நினைத்த நேரத்தில், அவரது பாடத்தின் பகுதியை ( Portion ) ஐ முடித்தே ஆகவேண்டும்.

 

இன்று காலை அவருக்கு ஏற்கனவே இரண்டு வகுப்பு இருந்தது. அதுவே அவர்களுக்கு சற்று கடுப்பை தந்தது.

 

வகுப்பு முடியும் போது ஒரு பத்து நிமிடம் கூட ஓய்வாக விடவில்லை என ஏற்கனவே காண்டாக இருந்தவர்கள் அவர் மதியம் சாப்பிட்டு வந்த பின் அந்த பாடவேளை வரும் ஆசிரியரிடம் அந்த வகுப்பை கடன் வாங்கி பாடம் நடத்த வரவும் ‘ஏன்டா வகுப்பிற்கு வந்தோம்?’ என்றானது.

 

சலிப்பாலும் கடுப்பாலும் அவர்களுக்கு தூக்கம் தொண்ணூறில் வர அனைவரும் கவனிப்பதை போல நடித்து தான் கொண்டிருந்தனர்.

 

ஆனால் பாடத்தை கவனிப்பதைப் போல நடிக்க கல்லூரி மாணவர்களை மிஞ்ச முடியுமா என்ன….?

 

( முடியாது…. நானும் நெறய வாட்டி நடிச்சிருக்கேன் ப்பா…. )

 

ஒருவழியாக அவர் பாடத்தை முடித்து விட்டு சென்று விட அவர்களுக்கு ஏதோ சுதந்திர காற்றை சுவாசிப்பது போல இருந்தது.

 

ஆனாலும் அடுத்த வகுப்பு ஆரம்பம் ஆகியதே….!

 

காலையில் நான்கு பாடவேளைகள் (Peroid) . இரண்டு வகுப்புக்கள் முடிந்து இடைவேளை. மறுபடி இரண்டு வகுப்புக்கள். பின் மதிய உணவு இடைவேளை. பின் மூன்று பாடவேளைகள். அதன் பிறகு என்ன நான்கு மணி ஆகிவிடும் பையைத் தூக்கி கொண்டு அனைவரும் ஓடிவிடுவர் வீட்டிற்கு.

 

அப்படி இருக்க அவர்களுக்கு இன்னும் இரண்டு வகுப்புகள் உள்ளதால் கொட்டாவி விட்டபடி அந்த வகுப்பின் ஆசிரியர் நடத்துவதை கவனித்தேன் என்ற பெயர் பண்ணிக் கொண்டிருந்தனர்.

 

அப்போது சில மாணவர்களின் நடிப்புத் திறமை போதாத காரணத்தால் அவர்கள் பாடத்தை கவனிக்கவில்லை என அறிந்தவர் முதலில் திட்டி விட்டு பின் அது இது என்ன ஆரம்பித்து அவர் கதை பேச அதை கேட்க மட்டும் ஏனோ தூக்கம் பறந்து ஆர்வம் வந்தது.

 

யாருக்குத் தான் ஆசிரியர் பாடம் நடத்தாமல் கதை பேசினால் பிடிக்காது….!

 

அந்த வகுப்பு அவர்களுக்கு பிடித்தது போல் சென்று விட்டதால் அடுத்த வகுப்பை நெட்டித் தள்ளியவர்கள் மணி ஓசை கேட்கவும் மகிழ்ச்சியாக வீட்டிற்கு கிளம்பினர்.

 

நாமும் கிளம்புவோம்….!

 

தொடரும்……