உனக்காக ஏதும் செய்வேன் – 2

1646358406084-d9c46506

உனக்காக ஏதும் செய்வேன் – 2

அத்தியாயம் – 2

 

“கீர்த்தி”, என்ற சப்தமான அழைப்பில் உள்ள கோபத்தை உணர்ந்தவள் ‘ஏன் இப்படி கோபமா கூப்பிடறாரு?’ என பயந்தவாறு சமையலை விடுத்து தங்கள் அறையை நோக்கி சென்றாள்.

 

“என்னங்க? என்னாச்சு?”

 

தன் காக்கி உடையை அவள் முகத்தில் தூக்கி எறிந்தவன், “யூனிஃபார்ம் அ கூட இன்னும் அயர்ன் பண்ணாம என்ன பண்ணிட்டு இருந்த?”, என அழுத்தமாக கேட்க,

 

ஸ்…. மறந்துட்டோமா…. போச்சு….என தன்னை நொந்தவள், “சமைச்சி கிட்டு இருந்தேன் ங்க” என்று முனக,

 

“ஓ…. அப்போ யூனிஃபார்ம் போடாம நீ சமைச்சத மட்டும் எடுத்துட்டு இப்படியே ஸ்டேஷன் போ னு சொல்றியா?” என,

 

அவன் கூறுவது போல், லுங்கி மற்றும் பனியனில் இருந்தவனை ஸ்டேஷன் செல்வது போல கற்பனை செய்தவள் முகத்தில் பயம் மறைந்து லைட்டாக புன்னகை எட்டி பார்க்க,

 

அதை கண்டு கொண்டு அவன் மீண்டும் முறைக்கவும் சட்டென முக பாவனையை மாற்றியவள்,

 

“சாரிங்க. மறந்துட்டேன் தோ ஐஞ்சே நிமிசத்துல அயர்ன் பண்ணிடறேன் “, என,

 

அவன் ஃபோன் அடிக்கவும், “ம்….சீக்கிரம்”, என்று முறைத்தவாறு ஃபோனை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்.

 

ஃபோன் பேசி முடித்தவன் வந்து பார்க்க, அங்கு அயர்ன் பண்ணி இருந்த காக்கி யூனிஃபார்ம் ஐ போட்டுக் கொண்டவன் சாப்பிட வந்தான்.

 

சாப்பாடு வழக்கம் போல எவ்வளவு நன்றாக இருந்த போதிலும் எப்போதும் போல அமைதியாக சாப்பிட்டவன்,

 

பின்னர் ஷூ வை அணிந்து கொண்டு பெல்ட்டை அணிய, தான் கொண்டு வந்த அவன் வாட்ச் ஐ அவனிடம் கொடுத்தாள்.

 

ஆயிரம் தான் தன் கணவன் தன் மீது பாராமுகமாக இருந்தாலும், அவனின் கம்பீரத்தை மனதில் இந்த நேரத்தில் எப்போதும் போல இரசித்தவாறு அமைதியாக நின்றிருந்தாள்.

 

அவள் பார்வையை உணர்ந்ததும் முகத்தில் உள்ள கடுமை சற்று குறைந்தது. இருப்பினும் அவளை கண்டு கொள்ளாது வழக்கம் போல தன் பைக்கை கிளப்பியவன் ஸ்டேஷனுக்கு சென்று விட்டான்.

 

வழக்கம் போல தன் கணவனின் செயலில் உள்ளம் வலித்தது. பல வழக்கங்களும், செயல்களும், ஏக்கங்களும் மாறாது போலும் என விரக்தியாக புன்னகைத்தாள்.

 

என்றேனும் தன் அன்பை புரிந்து தன்னிடம் அன்பான கணவனாக நடந்து கொள்வான? என நினைத்தவள்,

 

சிறு தலையசைப்பே எட்டாக் கனியாக இருக்க இவற்றையெல்லாம் எவ்வாறு எதிர்பார்க்க….? என ஒரு ஏக்க பெருமூச்சுடன் வீட்டிற்குள் சென்றாள்.

 

******

 

ஸ்டேஷனிற்கு செல்லும் வழியில் பஸ் ஸ்டாப் இல் சிரித்து பேசிக்கொண்டிருந்த இருவரை பார்த்ததும் அவன் முகம் மீண்டும் கடுமையாக மாறியது.

 

குடும்பத்தின் கௌரவத்தையும், மரியாதையையும் பறித்து விட்டு இவர்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருப்பதா….? என நினைத்து அவர்களை முறைத்தவன் பின் சூர்யா வை அலட்சியமாகவும், ஏளனமாகவும் பார்க்க,

 

அவன் பார்வையைக் கண்டதும் புருவம் சுருக்கி பார்த்தவன், அவன் என்ன நினைத்து அப்படி பார்கக்கிறான் என புரிந்து கொண்டான். ஆனாலும் எதையும் காட்டாது அமைதியாக நின்றான்.

 

மஹா வோ அவன் பார்வையை கண்டு ஸ்டேஷனுக்கு தான போய்ட்டு இருந்துருப்பாங்க….!இப்போ எதுக்கு இங்க பைக்கை நிறுத்திவிட்டு இப்படி பார்த்துகிட்டு நிக்குறாரு என நினைத்தவாறு சூர்யா வை பார்க்க, அவனோ என்ன என்று புரிந்து கொள்ள முடியாத முகபாவனையில் நின்றிருந்தான்.

 

அந்த பாவனை அவளுக்கு சந்தோஷமானதாக தோன்றவில்லை. எனவே அவன் மனநிலையை மாற்ற,

 

“ஹலோ Mr.சூர்ய பிரகாஷ்”, என சொடக்கிட்டு அழைத்தாள்.

 

அந்த அழைப்பில் அந்த நொடி அனைத்தையும் மறந்தவன் அவளிடம் திரும்பி, “எஸ் Mrs.மகா லட்சுமி”,என்றான்.

 

சிறு இடைவெளி விட்டு இருவரும் இனிமையான புன்னகைத்தனர்.

 

(லவ் பண்ணும் போது செல்லமா பேசும்போதோ,சண்டை வந்து பேசாம போனவோ, இல்ல எதுனா பிரச்சனையால சோகமா இருந்தாவோ,இப்படி தான் சூர்யா அ கூப்பிடுவாங்க. அவரும் அவங்கள இப்படி தான் கூப்பிடுவாரு.)

 

“இப்படி நீ என்ன கூப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு இல்ல….? லவ் பண்ணுமோது அடிக்கடி இப்படி தான கூப்பிட்டுப்போம்.”, என காதல் நினைவுகளை கூறவும் அவளும் புன்னகையுடன் ஆமோதித்தாள்.

 

“ஆனால் இப்போலாம் நமக்கு எங்க லவ் பண்ண டைம் கிடைக்குது சண்டை போடவே உனக்கு டைம் பத்த மாட்டக்குது இல்ல?”, என குறும்புடன் வினவ,

 

அவனை முறைத்து பார்த்தாள். அவனும் சிரித்துக்கொண்டே திரும்ப அப்போது தான், தன்னை முறைத்து கொண்டு நின்ற போலீஸ்காரன் நினைவு வர அவன் முகம் பழையபடி மாறியது. அங்கு பார்த்தான், யாருமில்லை.

 

“அங்க யார தேடறீங்க ?”,

“…..”

“இன்ஸ்பெக்டர் அப்பவே கிளம்பிட்டார்”,

 

“ஒ….”,

 

“உங்க மனசுல என்ன நினக்கறீங்க னு எனக்கு புரியல. ஆனால் ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்கோங்க டைம் எல்லாத்தையும் சரி பண்ணிடும்”,

 

“நாம பண்ணது தப்புதான். பட் நாம வேணும் னே அத பண்ணல. நம்ம நிலைமை அப்படி. நடந்தத மாத்த முடியாது. பட் இனி நடக்கறத மாத்த ட்ரை பண்ணலாம்.”, என அவனுக்கும் அது சரி என்றே பட்டது.

 

இருப்பினும் ஏதும் கூறாமல் அவளை பார்க்க, அவன் கையை ஆதரவாக பற்றி கொண்டாள்.

 

அவனும் அவளின் கையை இறுக பற்றிக் கொண்டு லேசாக சிரிக்க, அந்த சிரிப்பு அவன் கண்களை எட்டவில்லை என்பதை உணர்ந்தாலும் இது கேள்வி கேட்கும் சமயம் அல்ல என புரிந்தவள் புன்னகைத்து விட்டு அமைதியானாள்.

 

சிறிது நேரத்தில் பேருந்து வர இருவரும் அதில் ஏறி சென்றனர் தங்கள் வேலைக்கு.

 

அவள் ஸ்கூல் டீச்சர்….

 

அவன் காலேஜ் லெக்சுரர்….

 

******

 

ஸ்டேஷனில் அகத்தியன், இன்று தனக்கு கீழ் உள்ள அதிகாரிகள் அனைவரிடமும் எரிந்து விழுந்து கொண்டிருந்தான்.

 

காலையில் அவர்களை கண்டதுமே வந்த கோபம் அதனாலே அவர்களை முறைத்து பார்த்தான். பின் அழைப்பு வர சட்டென கிளம்பி விட்டான்.

 

அவனுக்கு சூர்யா வை பிடிக்கவே இல்லை. அவனை பார்த்த நாளிலிருந்தே….!

 

தான் கூறிய ஒன்று தன் கை மீறி நடந்ததை அவனால் ஏற்று கொள்ள இயலவில்லை. அதற்கு காரணமானவனைக் கண்டு கோபமாக வந்தது.

 

வீட்டில் கூட அவன் கூறுவதற்கு அவன் அப்பாவே பெரும்பாலும் மறுப்பு கூற மாட்டார். அவன் சொன்னால் சொன்னதுதான் நடக்கும். அப்படி இருக்க தான் அவ்வளவு சொல்லியும் தன் முடிவை மீறி நடந்த விஷயங்களுக்கு அவனே காரணம் என அவனை வெறுத்தான்.

 

மேலும் நடந்த விஷயம் அவன் எதிர் பார்க்காதது என்றால் அதன் பின் நடந்ததோ அவனின் கோபத்தை அதிகமாக்கியது.

 

ஆனால் அவனுக்கு புரியவில்லை தானும் அந்த தவறு நடக்க மிகப் பெரிய காரணம் என….!

 

அதில் தன் தவறும் உள்ளது என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லை என்பதை விட புரிந்து கொள்ள விரும்பவில்லை என கூறுவதே பொருந்தும்.

 

மேலும் தான் விரும்பியது போல தன் வாழ்க்கை அமைந்தும் அதில் முழுதாக மகிழ்ச்சி கொள்ள இயலவில்லை. அதற்கும் அவனை பொருத்த வரை சூர்யாவே காரணம்.

 

அவனிடம் உள்ள கெட்ட பழக்கம் தனக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களை சார்ந்தவர்களையும் பிடிக்காது….!

 

மேலும் அவனுக்கு புரியத்தான் செய்தது மற்றவர் செய்த தவறுக்கு அவளை உதாசீனம் செய்வது தவறு என்று. ஆனால் யாரிடமும் கோபத்தை காண்பிக்க முடியாமல் அனைத்தும் அவள் பக்கம் திரும்புகிறது.

 

அதையும் எப்போதும் கோபமாக வெளிப்படுத்த இயலாமல் அவளை கண்டு கொள்ளாமல் அவளை உதாசீனம் செய்தான்.

 

அவளிடம் அவனும் அன்பாக நடக்கவே நினைத்தான் என்ன செயல்படுத்த தான் இயலவில்லை.

 

எங்கே அவளை ரொம்ப காயப்படுத்தி விடுவோமோ என பயந்தே அவளிடம் அதிகம் பேசாமல் தவிர்த்தான்.

 

அதையும் மீறி பேசும் சமயங்களில் கோபமாகவே பேச என்ன செய்வது என்று அவனுக்கு இன்று வரை தெரியவில்லை.

 

அவளின் குணமும் இவனுக்கு சாதகமாக அமைந்து விட அவளிடம் கோபம் கொள்வதையும், உதாசீனம் செய்வதையும் நிறுத்திய பாடில்லை.

 

டியூட்டி முடிந்து வீடு திரும்பியவன் சாப்பிட்டு விட்டு மாடிக்கு சென்றான்.

 

சாப்பாடு பரிமாறிய போது அவளின் வாடிய முகத்தை பார்த்தவன், மனம் முழுக்க காலையில ஏன்டா யூனிஃபார்ம் அ துக்கி அவள் முகத்தில போட்ட என தன்னை தானே கடிந்து திருப்பி திருப்பி கேட்டு கொண்டவாறு நின்றிருந்தான்.

 

அவனுக்கு புரியவில்லை அவளிடம் உதாசீனமாக அவன் செய்யும் ஒவ்வொரு செயலுமே அவளின் வாடிய முகத்துக்கு முக்கிய காரணம் என….!

 

இனி இப்படிலாம் நடந்துக்க கூடாது என முடிவெடுத்தவன், ஒரு சிகரெட்டை பற்ற வைத்து இழுத்து கொண்டிருந்தான்.

 

அவன் மனதில் அப்போது காலையில் தான் கண்ட இருவரை பற்றி நினைப்பே வரவில்லை….!

 

துணி காயவைத்ததை மறந்திருந்தவள் நியாபகம் வந்து எடுக்க வர, அவன் புகைப்பிடிப்பதை கண்டு முகம் சுளித்தவாறு அவனை பார்த்தாள்.

 

அவளுக்கு புகைப்பிடிப்பவர்களை கண்டாலே சுத்தமாக பிடிக்காது.

 

அவள் முகத்தை பார்த்தே என்ன உணர்கிறாள் என்பதை கண்டவன்,அவளை அந்த நேரத்தில் அங்கு எதிர்பார்க்காததால் சற்று அதிர்ச்சியில் நிற்க,

 

ஏன் தன்னால் உரிமையாய் அவனிடத்தில் கோபம் கொள்ள இயலவில்லை. எனக்கு உரிமை இல்லையா என வருத்தமாக நினைத்தவளுக்கு தான் ஒரு நாள் உரிமையாக பேசியதும் அதற்கு அவனின் செய்கையும், பேச்சும் நினைவு வர ஏதும் பேசாமல் கீழிறங்கி சென்றுவிட்டாள்.

 

அவள் சென்றதும் அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. ஆக்சுவலி வீட்ல ஸ்மோக் ஏ பண்ணியிருக்க கூடாது. அட்லீஸ்ட் தூக்கியாவது போட்டிருக்கலாம் இப்போ வேணும் னே புடிச்சோம் னு நினச்சிருப்பா.

 

என்னைக்கோ ஒரு நாள் கோபத்தில் பேசனத்துக்கு இன்னைக்கு வர நம்மகிட்ட சரியா கூட பேச மாட்றா. நமக்கும் பேச வர மாட்டேங்குது. இது தானாகவே சரி ஆகிடும் னு நெனச்சது தப்போ? என்றெல்லாம் யோசித்தவன், ச்சே…. என சளித்தவாறு அதை தூக்கி எறிந்தான்.

 

அவளுக்கு பிடிக்காது என தெரிந்து தான் மாடிக்கு வந்து புகைப்பிடித்தது. ஆனால் அவளை பார்த்ததும் டக்கென சிகரெட்டை கீழே போடுவதற்க்குள் அவள் சென்றுவிட்டாள்‌.

 

பல்வேறு சிந்தனையில மூழ்கியவன் வெகு நேரம் கழித்து கீழிறங்கி வந்தான்.வந்தவன் தங்கள் அறைக்குள் செல்ல அவன் மனைவி உறங்கி கொண்டிருந்தாள்.

 

மெல்ல சத்தமிடாமல் நடந்து அவளருகே வந்தவன்,அவள் முகத்தில் பட்டு அவனை தொல்லை செய்த முடி கற்றையை ஒதுக்கி விட்டான்.

 

பின் தன்னவளின் முகத்தை சில நொடிகள் இமைக்காமல் நோக்கியவன், கட்டிலில் படுத்து உறங்கி விட்டான்.

 

 

தொடரும்….

Leave a Reply

error: Content is protected !!