உனக்காக ஏதும் செய்வேன்

1662455813139-a794f85b

உனக்காக ஏதும் செய்வேன்

அத்தியாயம் – 10

 

நேற்று போலவே இன்றும் மனையாள் தன்னை தவிர்க்க ‘வேணுண்டே பண்றா.’ என உணர்ந்து கொண்டான். ஆனால் ஏன் என்றுதான் புரியவில்லை.

ஒருவேளை அவளுக்குத் தான் அவள்மீது செலுத்தும் காதல் பார்வைகள் பிடிக்க வில்லையோ?

இத்தனை நாட்களாகக் கண்டு கொள்ளாததால் இப்போது மட்டும் என்ன என நினைக்கிறளோ? என்றெல்லாம் எண்ணியவன் அவளிடம் விளக்கம் கூறி சமாதானம் செய்யலாமா என்று கூட நினைத்தான்.

ஏனோ அவள் அவனைத் தவிர்ப்பது கஷ்டமாக இருந்தது.

அப்போது இரண்டு மாதமாக நாம் அவளை தவிர்த்தோமே!

அவளுக்கும் இது போலதானே இருந்திருக்கும் என்றவனது நினைவுகளில் சில காட்சிகள் தோன்றின…

அன்று அவள் அவ்வாறு பேசியிருக்காவிட்டால் தான் அவ்வாறு பேசியிருக்க மாட்டோம் என அவனுக்கு நன்கு தெரியும்.

ஏனென்றால் அந்த நிகழ்வுக்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லாமல் அவள்மீது கோபம் எவ்வாறு தோன்றும்?

ஆனால் அன்று பேசியவள் பின் அது பற்றி எதுமே பேசவில்லை என்பது அவனுக்கு கோபத்தை குறைத்திருந்தது.

அன்றைக்கு அவள் சொன்னது போல ஒருவேளை சப்போர்ட் செய்து பேசவில்லையோ?

தன் கோபத்தை பார்த்து ஆறுதலாக தான் பேசினாளோ என்றும் தோன்றியதுண்டு.

ஆனாலும் பல நாட்கள் அவளோடு இயல்பாக பேச இயலவில்லை. அவளும் அவனிடம் பேச முயலவில்லை.

அந்த பார்வை… அது மட்டுமே தன்னிடம் அன்பை எதிர்பார்த்து நின்றது!

அவனால் அப்போது அதை கண்டுக்காமல் இருக்க முடிந்தது. ஆனால் இப்போது… அவள் அப்படி இருப்பதை ஏற்றுக் கொள்ள இயவில்லையே!

இவ்வாறு யோசனையிலே உலன்றவன் அவளிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். அப்போது மட்டுமே அவன் இருக்கும் இடம் வருகிறாள்.

தலையசைத்து விட்டு கிளம்பியவன் ஒரு சில நிமிடத்தில், முக்கியமான பைல் ஒன்றை எடுக்காமல் மறந்து விட்டு வந்தது தெரிய வேகமாக தன் பைக்கை வீடு நோக்கி திருப்பினான்.

அவன் தேடிய பைல் ஹாலில் உள்ள மேஜையில் இருக்க அதை எடுத்தவன் கண்களை சூழல விட்டான். அவனவள் தென்பட வில்லை. 

அவளை பார்க்க அவர்கள் அறையின் வாயில் வரை வந்தவன் மனைவி பேச்சுக் குரல் கேட்டு நின்றுவிட்டான்.

யாரிடம் இப்படி சிரித்து கொண்டு பேசுகிறாள் என நினைத்தவன் மெதுவாக கதவை திறந்து நோக்க அது கூட தெரியாமல் அவள் அந்த அறையில் இருந்த அவனின் புகைப்படத்திடம் பேசிக்கொண்டிருந்தாள்.

சுவரஸ்யம் மேலோங்க என்ன பேசுகிறாள் என்ன கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தான்.

»»»»

“கடுப்பாகுதா இன்ஸ்பெக்டர் சார்?”

“நல்லா ஆகட்டும். அதானே எனக்கு வேணும்.”

“எத்தனை நாள் என்னை கடுப்பேத்தனீங்க?”

“திடிர்னு இப்படி பொண்டாட்டிய சைட் அடிச்சிகிட்டு டெரர் பீஸ்ஸா இருந்தவரு ரொமான்டிக் ஹீரோ ஆக ட்ரை பண்றாரு.”

“ம்ம்…. கொஞ்ச நாள் உங்கள சுத்தல்ல விடறேன். அப்போதான் மறுபடி என்கிட்ட இப்படி நடந்துக்க மாட்டீங்க. நல்ல குழம்புங்க.” என்று சிரித்து கொண்டே பேசி கொண்டிருக்க,

‘அடிப்பாவி… நான் என்னலாம் யோசிச்சிட்டு இருக்கேன். இவ இங்க என் போட்டோகிட்ட சிரிச்சி சிரிச்சி பேசிட்டு இருக்கா.’

‘விளையாட்டுக்கு தான் இப்படி பண்ணிட்டு இருக்காளா!’ என பெருமூச்சுவிட்டவன் மனதிலிருந்த வருத்தம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.

அவள் பேசிக் கொண்டிருந்ததை கேட்டவன் ‘இவளுக்கு இப்படி லாம் பேச தெரியுமா?’ என ஆச்சர்யப்பட்டும் போனான். 

‘நீ எப்போடா அவள பேச விட்ட?’ என கேள்வி கேட்ட மனசாட்சியிடம் பதில் இல்லாமல் முழித்தவன், அமைதியாகவே நின்றிருந்தான்.

ஆனால் இப்போது அவனுக்கு ஒரு யோசனை வந்தது. அவளுடன் சற்று விளையாடி பார்க்கத் தோன்றியது.

‘இரு… இரு… உன்ன பாத்துக்கறேன். என்னையவா கடுப்பேத்தணும்னு நெனைக்கற?’ என எண்ணியவன் உதட்டில் வசீகரமான ஒரு புன்னகை தோன்றியது.

அவனின் அந்த புன்னகையைக் கண்டிருந்தாள், அவள் எண்ணியது போல கணவனை கண்டுக்காது சைட்டடிக்காமல் இருந்திருப்பளா என்பது கண்டிப்பாக சந்தேகம்தான்!

ஆறடியில் அதற்க்கேற்ற உடற்கட்டோடு, ஆராயும் பார்வை பார்க்கும் தீட்சன்யமான இரு விழிகள், காவலன் என்பதால் தினமும் கிளீன் ஷேவ் செய்யும் தாடை, அளவாக கத்திரிக்கப்பட்ட மீசை, போலீஸ் ஹேர் கட்டில் இருந்த சிகை, அவன் கம்பீரத்திற்கு மேலும் கம்பீரம் சேர்க்கும் அவனின் கருமையான நிறம்.

இத்தகையவனிடம் தோன்றும் அந்த புன்னகை அடுத்தவரை வசீகரிக்காமல் போனால்தானே ஆச்சர்யம்.

ஆனால் அப்போது அதை அவள்தான் பார்க்காமல் போனாள்.

நேரமாவதை உணர்ந்தவன் வந்த சுவடு தெரியாமல் ஸ்டேஷன்னுக்கு கிளம்பிவிட்டான்.

இதை உணராது கீர்த்தி அவனோடன பேச்சை தொடர்ந்து கொண்டிருந்தாள்.

»»»»

வகுப்பில் இருந்த அனைத்து மாணவர்களும் பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு இருந்தனர்.

“ப்ரீத்தி முடிலடி.” தோழி புலம்ப,

“சேம் பிஞ்ச்…” பதிலுக்கு அழுதுவிடுபவள் போல சொன்னாள்.

கமலி மேம்தான் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். நன்றாக பாடம் நடத்துபவர்தான்.

ஆனால் மாணவர்கள் மனநிலை பற்றி சற்று கருத்தில் கொள்ளமாட்டார். அவர் நினைத்த நேரத்தில், அவரது பாடத்தின் போர்ஷன்னை முடித்தே ஆகவேண்டும்.

இன்று காலை அவருக்கு ஆரம்பத்திலேயே இரண்டு பீரியட் கிளாஸ் இருந்தது. அதுவே அவர்களுக்கு சற்று கடுப்பைத் தந்தது.

வகுப்பு முடியும் போது ஒரு பத்து நிமிஷம் ப்ரீயாக விடவில்லையென ஏற்கனவே காண்டில் இருந்தவர்கள், அவர் மதியம் சாப்பிட்டு வந்த பின் அந்த பீரியட் ஆசிரியரிடம் அந்த ஹவர்ரை கடன் வாங்கி பாடம் நடத்த வரவும் ‘ஏன்டா கிளாஸ் வந்தோம்?’ என்றானது.

சலிப்பாலும் கடுப்பாலும் அவர்களுக்கு தூக்கம் தொண்ணூறில் வர அனைவரும் கவனிப்பதை போல ஆக்ட்டிங்தான் செய்து கொண்டிருந்தனர்.

பாடத்தை கவனிப்பதை போல நடிக்க கல்லூரி மாணவர்களை மிஞ்ச முடியுமா என்ன?

ஒருவழியாக அவர் பாடத்தை முடித்து விட்டு சென்றுவிட அவர்களுக்கு ஏதோ சுதந்திர காற்றை சுவாசிப்பது போல இருந்தது.

ஆனாலும் அடுத்த கிளாஸ் ஆரம்பம் ஆகியாதே!

காலையில் நான்கு பீரியட். இரண்டு பீரியட் முடிந்து இன்டெர்வல். மறுபடி இரண்டு பீரியட். பின் லஞ்ச் ஹவர் அண்ட் பிரேக். மறுபடி மூன்று பீரியட்.

பிறகென்ன நான்கு மணியாகிவிடும் பையை தூக்கிக் கொண்டு அனைவரும் வீட்டிற்கு ஜாலியாக கிளம்பிவிடுவர்.

அப்படி இருக்க அவர்களுக்கு இன்னும் இரண்டு வகுப்புகள் உள்ளதால், கொட்டவி விட்டபடி அந்த ஹவர் ஆசிரியர் நடத்துவதை கவனித்தேன் என்ற பெயர் பண்ணிக் கொண்டிருந்தனர்.

அப்போது சில மாணவர்கள் ஆக்ட்டிங் போதாத காரணத்தால் அவர்கள் பாடத்தை கவனிக்கவில்லையென அறிந்தவர் முதலில் திட்டிவிட்டு பின் அது இது என்ன ஆரம்பித்து, கதை பேச அதை கேட்க மட்டும் ஏனோ தூக்கம் பறந்து ஆர்வம் வந்தது.

யாருக்கு தான் ஆசிரியர் பாடம் நடத்தாமல் கதை பேசினால் பிடிக்காது?

அந்த பீரியட் அவர்களுக்கு பிடித்தது போல சென்று விட்டதால் அடுத்த ஹவர்ரை நெட்டி தள்ளியவர்கள் மணியோசை கேட்கவும் ஜாலியாக வீட்டிற்கு கிளம்பினர்.

நாமும் கிளம்புவோம்…

 

தொடரும்…

Leave a Reply

error: Content is protected !!