உன்மத்தமானேன் பெண்ணே – 5

Downloaded from Oye Be Smartest 11609530803mir.jpeg-9cba20b1

அத்தியாயம் 5

 

        ரிசப்ஷன் முடிந்த மறுநாள் ரிஷி  அபியிடம்  ஒரு கவரை நீட்டினான். அபி, “என்ன ப்ரோ இது?”. என்று கேட்க. “உன் கல்யாணத்துக்கு என்னோட கிஃப்ட். உங்க ஹனிமூன் பேக்கேஜ். எல்லா அர்ரெஞ்ச்மெண்ட்ஸ் பண்ணிட்டேன் இன்னைக்கு நைட் ஃப்ளைட்டில் நீங்க மொரிஷியஸ் கிளம்பிறீங்க.” என்று புன்னகையித்தான் ரிஷி.

        அதே புன்னகையுடன் கவரை வாங்கிய அபி, “தாங்க்ஸ் ப்ரோ. ஆனா இப்போ நாங்க ஹனிமூன் போகல.” என்றான்.

        “ஏன்?” ரிஷி புருவம் சுருக்கி கேட்க.

        “இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு போயிக்கலாம்ன்னு டிசைட் பண்ணி இருக்கோம்.”என்று அபி சொல்ல.

        “டேய்.. கல்யாணம் ஆன உடனே போறதுக்கு பெயர் தான் ஹனிமூன். கொஞ்ச நாள் கழிச்சு குழந்தை குட்டியோட போன அது டூர்.”   என்றான்.

        அதை கேட்டு சிரித்த அபி மனதுக்குள்,  ‘எங்க நீ போற போக்கை பார்த்தா நான் டூர் போறது கூட சந்தேகம் தான். நீ சீக்கிரமே ஒரு கல்யாணம் பண்ணினா தான் எனக்கு டூர் போகாவது வாய்ப்பு அமையும்’ என்று நினைத்துக்கொண்டே, “அது வந்து ப்ரோ….. நான்  வனியை சர்ப்ரைஸ் பண்ணலாம்ன்னு எங்க ஹனிமூன்க்கு வேற ப்ளான் வச்சிருக்கேன். அதான் ……” என்று இழுக்க.  தம்பியின் தயக்கத்தை  புரிந்துகொண்ட ரிஷி, “சரி ஓகே டா. உன் இஷ்டம்.” என்று சொல்லிவிட்டு  நகர்ந்த ரிஷி திரும்பி, “அபி” என்று அழைத்தான்.

        “என்ன ப்ரோ…” என்று கேட்ட அபியை ஆராச்சியாய் பார்த்தவன். “நீ ஹனிமூன் போகாததுக்கு நீ சொன்னது  தான் ரீஸன்னா. இல்ல…. வேறு ஏதாவது காரணம் இருக்கா??” என்று கூர்மையாய் பார்த்துக்கொண்டே கேட்டான்.

        அண்ணனின் கேள்வியில் , ‘கண்டுபிடிச்சுட்டானோ’ என்று   ஒரு நொடி தடுமாறிய அபி பின் சுதரித்துக்கொண்டு, “வேற  என்ன காரணம்??? ஒண்ணுமில்லையே”. என்றான்.

        ஏற்றுக்கொண்டதாய் தலையசைத்த ரிஷி, “அபி நான் ஏற்கனவே சொன்னது தான். நீ உன் லைஃப் மட்டும் பாரு. என்னை பற்றி யோசிச்சு உன் லைஃப்பை குழப்பிக்காதே. புரிஞ்சதா??” என்று சற்று அழுத்தமாக சொல்ல.

        அபி மனதுக்குள் ‘அது எப்படி முடியும். நீ மட்டும் என் வாழ்க்கை பற்றி யோசிக்கலாம். ஆனா நான் மட்டும் உனக்காக யோசிக்க கூடாது. என்ன நியாயம் டா அண்ணா உன் நியாயம்.’ என்று  மனதுக்குள் அண்ணனிடம்  வாதிட்டாலும், வெளியே  சரி என்று தலை அசைத்துவிட்டு சென்றான்.

         அதே நேரம் கீழே ஹாலில் நந்தகுமாரும் தேவகியும்  மித்ரெஷ்யிடம்  தாங்கள் கோயம்புத்தூர் கிளம்புவதாய் சொல்ல. “என்ன அவசரம் சம்பந்தி இன்னும் ஒரு வாரம் கழிச்சு போகலாமே.” என்றார் மித்ரெஷ்.

        “அதுக்கு இல்ல சம்பந்தி, கல்யாணமே கோயம்புத்தூரில் தான் நடந்து  இருக்கணும். ஆனா அங்க வர ரிஷி சங்கட படுவார்ன்னு தான் இங்க சென்னையில் நடத்த சம்மதித்தோம். இப்போ பொண்ணு மாப்பிள்ளையை மறு வீடு விருந்துக்கு கோயம்புத்தூர் கூட்டிட்டு போறது தான் முறை. அது தான் எங்க ஆசையும் கூட.” என்று மனைவியை பார்த்துக்கொண்டே சொல்ல. தேவகியும் ஆமோதிப்பாய் தலையசைத்தார்.

         மித்ரெஷ்க்கு அவர்கள் ஆசை புரிந்தாலும் நேற்று தானும் வசுமதியும் பேசி முடிவெடுத்த விஷயத்தை இவர்களிடம் எப்படி  சொல்வது என்று யோசித்து சற்று தயங்கினார். அப்போது அங்கே வந்த வசுமதி, “அண்ணா நீங்க இன்னும் ஒருவாரம் இங்கே இருந்து ரிஷி கல்யாணத்தையும் முடிவு பண்ணிட்டு தான் ஊருக்கு போகணும்.” என்றதும்  நந்தகுமார் தேவகி இருவரும் அதிர்ந்து ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

        தேவகி,“என்ன வசு சொல்ற? ரிஷி கல்யாணாமா?” என்று அதிர்ச்சி விலகாமல் கேட்க.

        “ஆமா தேவா. நேத்து ரிசப்ஷன்ல பார்த்தியே என் ஃப்ரெண்ட் ஸ்ரீ அவங்க பொண்ணு தான் …” என்று மேலும் சொல்ல போன வசுமதியை இடையிட்ட நந்தகுமார்.

        “இந்த விஷயம் ரிஷிக்கு தெரியுமா? அவர் என்ன சொன்னார்?.” என்று கேட்டார் நந்தகுமார்.

        “இல்ல அண்ணா இனிமே தான் ரிஷி கிட்ட பேசணும். அதுக்காக தான் அண்ணா உங்களை இங்கேயே இருக்க சொல்றேன். நாங்க அவன் கிட்ட இந்த விஷயத்தை பற்றி பேசும் போது நீங்களும் கூட இருந்தா நல்ல இருக்கும். நீங்களும்  சொன்னா தான் ரிஷி மனசு மாறுவான். இனிமேலும் அவன் பிடிவாதத்துக்கு பயந்து அவனை அப்படியே விட முடியாது அண்ணா. அதான் லேட் பண்ணாம சீக்கிரமே இந்த கல்யாணத்தை முடிக்கணும் நினைக்கிறேன். ” என்றார்.

        நந்தகுமாருக்கு வசுமதி சொல்வது நியமாக பட்டாலும், மனதின் ஓரத்தில் சிறு உறுத்தல் இருக்க தான் செய்தது.

         அந்நேரம் ஃபோனில் பேசியபடி வந்த ரிஷி, “யாருக்கு அம்மா கல்யாணம் முடிக்கணும்?” என்று கேட்க.

        உனக்கு தான் என்று சொல்ல ஆசை தான். ஆனால் இப்போது சொன்னால் அவன் ருத்ர மூர்த்தி ஆகிவிடுவானே என்ன யோசித்தவர்கள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.  என்ன தான் ரிஷி எல்லோரிடமும் கேலி கிண்டல் என்று பழகினாலும் அவன் கோபத்தை கண்டு அனைவருக்குமே பயம் தான். மித்ரெஷ் வசுமதி உட்பட. அது மட்டுமில்லாமல் எங்கே மகன் திரும்பவும் வனவாசம் சென்று விடுவானோ என்று பயம் வேறு இருவருக்கும். அதனாலையே மகனிடம் பேச சற்று தயங்கினார்கள். இவர்களின் பார்வை பரிமாற்றத்தை கவனித்த ரிஷி நால்வரையும் புருவம் சுருக்கி கேள்வியாய் பார்க்க, அவனை மேலும் யோசிக்க விடாமல் பேச்சை மாற்றினார் மித்ரெஷ்.

        “என்ன ரிஷி சீக்கிரமே கிளம்பிட்ட? ஆஃபிஸூக்கா?” என்று கேட்க.

        “இல்ல அப்பா, ஒரு ஃப்ரெண்ட் பார்க்கணும் அவனை பார்த்துட்டு அப்பறம் தான் ஆஃபிஸ் போவேன்.” என்றான்.

        “சரிப்பா வா சாப்பிட்டு கிளம்பு.” என்ற வசுமதி, நந்தகுமார் தேவகியையும் சாப்பிட அழைக்க. அவர்கள் பிறகு வருவதாக சொல்லிவிட.  அவர் ரிஷிக்கு பரிமாற சென்றார்.

        சாப்பிட்டுக்கொண்டு இருந்த  ரிஷி, “அம்மா நேத்து உங்க ஃப்ரெண்ட் சத்யா வந்தாங்களா? எனக்கு இண்ட்ரோ பண்ணவே இல்லை.” என்று கேட்டான்.

        ரிஷி திடீரென்று சத்யாவை பற்றி கேட்க வசுமதி  அதிர்ந்து மகனை பார்த்தார். ‘ஒரு வேலை நாம பேசினதை கேட்டு விட்டானோ?’ என்று அவன் முகம் பார்க்க. ரிஷியோ சாதாரணமாக சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். ‘இவன் தெரிஞ்சுகிட்டே கேட்கிறானா, இல்லை நம்ப கிட்ட போட்டு வாங்கரானா?’ என்று யோசித்த வசுமதி அவன் முகத்தை ஆராய்ந்தபடி நிற்க.

        அன்னை பதில் சொல்லாமல் இருபத்தை உணர்ந்து ரிஷி நிமிர்ந்து வசுமதியை பார்த்தான். சட்டென சுதாரித்த வசுமதி, “அது…. அவ வரல டா. அவளும் அவ அத்தை பையன் கிருஷ்ணாவும் வால்பாறை போயிட்டாங்கலாம். ஒரு வாரம் கழிச்சு தான் வருவாங்கலாம்.  வந்ததும் வீட்டுக்கு வருவாங்கன்னு ஸ்ரீ சொன்னாள்.” என்றார்.

         “ஓ…. அவங்களோட  கல்யாணத்தை பற்றி தான் பேசிட்டு இருந்தீங்களா?”. என்று ரிஷி அடுத்த கேள்வியை கேட்க.         அவரோ மனதுக்குள், ‘போச்சு…. போச்சு…. எல்லாத்தையும் கேட்டுட்டான் போல. இப்போ ருத்ர தாண்டவம் ஆட போறான். என்ன பண்ண போற வசு’, என்று  தனக்குள் கேட்டுக்கொண்டே ஆம் என தலை ஆடினார்.  ரிஷியோ ‘ஓ’ என்ற ஒற்றை சொல்லொடு எழுந்து கைகழுவ சென்றான். 

        சாமி ஆட போகிறான் என்று நினைத்திருந்த வசுமதி, ரிஷி ‘ஓ’ என்ற ஒற்றை சொல்லொடு சென்று விட, ‘இந்த விஷயத்தில் உன் ரியாக்சன் இவளோ தானாடா மகனே’ என்ற ரீதியில்  ரிஷியை பார்த்தார். அதே எண்ணம் தான் ஹாலில் அமர்ந்து இவர்களது சம்பாஷணையை கேட்டுக்கொண்டு இருந்த  மற்ற மூவர் மனதிலும் ஓடியது.

        இவர்கள் ரிஷி சத்யா திருமணத்தை பற்றி பேசி கொண்டிருந்ததால் ரிஷி அதை தான் கேட்கிறான் என்று நினைத்துக்கொண்டு இருக்க, ரிஷியோ சத்யவுக்கும் கிருஷ்ணாவுக்கும் தான் திருமணம் என்று நினத்துக்கொண்டு இருந்தான். அதனால் தான் அவன் அமைதியாக சென்றது. தனக்கு தான் இந்த திருமண பேச்சு நடக்கிறது என்று தெரிந்து இருந்தால் அங்கு நடப்பதே வேறு. இது தெரியாமல் வசுமதியும்  மித்ரெஷும் அவன் அமைதியை சம்மதமாக எடுத்துக்கொண்டு சந்தோஷ பட்டுப்போனார்கள்.      

        அனைத்தையும் கேட்டுவிட்டு  அமைதியாக செல்லும் ரிஷியை பார்த்த நந்தகுமார்க்கு சற்று தவிப்பாய் இருந்தது. தன் மகள் இருக்க வேண்டிய இடத்தில் இப்போது இன்னொரு பெண் வருவதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் இந்த நிலமைக்கு முழு காரணம் தன் மகள் தான் என்பதையும் அவரால் மறுக்க முடியாத நிலையில், ரிஷியின் நல் வாழ்வுக்காக தன் மனதை தேற்றிக்கொண்டு இந்த திருமணம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு தங்களுக்கு ஒதுக்கி இருந்த அறைக்கு சென்றார். தேவகியும் கணவனை பின் தொடர்ந்து சென்றுவிட்டார்.

        ரிஷி சாப்பிட்டு கிளம்பிவிட. நந்தகுமார் தேவகியின் அறைக்கு வந்த வசுமதியும் மித்ரெஷும் சத்யாவை பற்றி சொல்லி திருமண ஏற்பாட்டை பற்றி பேச இருவரும் மகிழ்ச்சியுடனே இந்த திருமணத்தை நடத்த முடிவெடுத்தார்கள்.

         ரிஷி அலுவலகம் வந்த சற்று நேரத்தில் அபி ரிஷியின் அறைக்குள் நுழைந்தான். தம்பியை பார்த்ததும், “வா டா எங்க போன நான் ஆஃபிஸ் வந்த போது உன்னை காணோம்?” என்று ரிஷி கேட்க.

        “நம்பளோட நியூ ப்ராடக்ட்  பேடண்ட்ல ஏதோ இஷ்யுன்னு சொன்னாங்க அதான் என்னன்னு பாத்துட்டு வரேன்”.  என்று சொல்ல.

        ரிஷி, “ஆல் ஓகே நவ்”. என்று கேட்க.

        அபி, “ம்ம்ம்….. அல்ல செட். நம்ப பிளான் பண்ணின மாதிரி நெக்ஸ்ட் மன்த் லாஞ்ச் பண்ணிடலாம். ப்ராடக்ட் டீடெயில்ஸ் உங்களுக்கு மெயில் பண்ணி இருக்கேன் பார்த்துக்கொங்க.” என்றான்.

        ரிஷி சரி என்று தலை ஆட்ட. அபி தொடர்ந்தான். “அப்பறம் இந்த ப்ராடக்ட் லாஞ்ச் விஷயமா ஏதாவது தேவைன்னா கதிர் கிட்ட கேளூங்க அவன் தான் எல்லாத்தையும் பார்த்துகிறான்.” என்றான்.

        “ஓகே நான் பார்த்துகிறேன். உன்னோட ப்ராஜக்ட் எல்லாம் எப்படி போகுது?” என்று கேட்டான் ரிஷி.

        “நான் இப்போ அதை பற்றி பேச தான் வந்தேன். ஒரு புது ப்ராஜக்ட் வந்திருக்கு. அமெரிக்காவில் ஒன் ஆஃப் தி பிக்கேஸ்ட் கம்பெனி, செக்யூரிட்டி சாஃப்ட்வேர் வேணும்னு கேட்டிருக்காங்க.  இங்க புது ப்ராடக்ட் லாஞ்ச், கல்யாண வேலைன்னு என்னால அதுல சரியா கான்சன்ட்ரேட் பண்ண முடியல. இப்போ நீங்க இங்க எல்லாம் பார்த்துக்கிட்டா நான் அந்த வேலையை பார்ப்பேன்.” என்றான்.

        “ஓகே டா …. நான் இனி பார்த்துகிறேன். நீ உன் வேலையை பாரு.” என்று ரிஷி சொல்ல. அபி சற்று நேரம் அங்கிருந்துவிட்டு தனது ஐ‌டி கம்பெனிக்கு சென்றான்.

        அன்று மாலை ஆஃபிஸில் இருந்து வந்த அபி கண்டது தங்கள் அறையில் தீவிர யோசனையில் அமர்ந்திருந்த மனைவியை தான்.

காலையில் வசுமதி, ரிஷி சத்யா திருமணத்தை பற்றி பேசியதையும், அதற்கு ரிஷி மறுப்பேதும் சொல்லாமல் சென்றதையும் கண்ட  பாவனாவால், நிம்மதியாக இருக்க முடியவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் தவித்துக்கொண்டு இருந்தாள்.

        “என்ன வனி என்ன யோசிச்சுட்டு இருக்க?” என்ற குரலில் யோசனையில் இருந்து மீண்டவள், “அபி வந்துடியா? உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன். உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.” என்றாள் பாவனா.

        “என்ன விஷயம் வனி?”, என்று கேட்ட படி அவள் அருகில் அமர்ந்தவனிடம், ‘தான் சொல்ல போகும் விஷயத்தை கேட்டு  என்ன சொல்ல போகிறானோ?’ என்று யோசித்துக்கொண்டே ரிஷியின் திருமண ஏற்பாட்டை பற்றி அபியிடம் கூறினாள்.

        இதை  கேட்ட அபி சந்தோஷதில், அருகில் இருந்தவளை காட்டிக்கொண்டு, “சூப்பர் நியூஸ் சொல்லி இருக்க வனிம்மா. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்ஃபாக்ட் நானே அம்மா அப்பா கிட்ட அண்ணா கல்யாணத்தை பற்றி பேசலாம்ன்னு இருந்தேன். தெரியுமா” என்று சொல்ல. அவன் சந்தோஷத்தை கண்ட பாவனா அதிர்ந்து அவன் முகத்தை பார்த்தாள்.

        மனைவியின் அதிர்ந்த முகத்தை பார்த்தவன் புருவங்கள் உயர்த்தி என்ன என்று கேட்க. “என்ன அபி இப்படி பேசுற? அப்போ ஜான்??” என்று கேட்க.

        அந்த பெயரை கேட்டதும் அபியின் முகத்தில் இருந்த சந்தோஷம் முற்றிலும் காணாமல் போக, சட்டென்று அவள் அருகில் இருந்து எழுந்து விலகி சென்று, “இப்போ அவங்களுக்கு என்ன பாவனா?.” என்று கேட்டான்.

        கணவனது ‘பாவனா’ என்ற அழைப்பும், அவனது விலகளுமே  அவன் கோபத்தின் அளவை  சொல்ல, உள்ளுக்குள் சற்று பயந்தாலும் தையிரியத்தை வர வழைத்துக்கொண்டு.

        “அவளுக்கு என்னவா?.  ரிஷி பாஸ் ஜானை தான் விரும்புகிறார் அபி.” என்றாள்.

        “உண்மைதான்… ஆனா அண்ணா மட்டும் தான் அவங்களை விரும்பினார். அவங்க இல்ல.” என்றான் அபி.

        “இல்ல அபி அவளும் தான் விரும்பினா. ரிஷி பாஸ் எந்த அளவுக்கு அவளை நேசிக்கிறரோ அதே அளவுக்கு அவளும் ரிஷி பாஸை நேசிக்கிறா. அதை என்னால் உறுதியாய் சொல்ல முடியும்.”

        “அப்பறம் ஏன் விட்டுட்டு போனாங்க?. அப்படி அன்பு வைச்சிருக்கிறவங்க ஏன் சொல்லாமல் கொள்ளாம போனாங்க?. அண்ணாவை விடு அவங்க ரெண்டு பேருக்கும் இடையில் ஏதோ பிரச்சனை அது என்னணு நமக்கு தெரியாது. ஆனா நீங்க எல்லாம் என்ன பண்ணிங்க?. மாமாவும் அத்தையும் உன் மேல பாசம் வைச்ச மாதிரி தானே அவங்க மேலையும் பாசம் காட்டினாங்க.  அதுனால தானே அவங்க போனதும் மாமாக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு. ஆனா அவங்களுக்கு அந்த பாசம் இருந்துச்சா? உங்களை பற்றி கொஞ்சமும் அவங்க  யோசிக்கலையே. விட்டு போயிட்டாங்க தானே” என்று அபி கேட்க.

        பாவனாவுக்கு இதற்கு என்ன பதில் சொல்லவது என்று தெரியவில்லை. அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது.  மனைவியின் கண்ணீரை கண்டவனுக்கு அவளது மன வேதனை புரிய, அவள் அருகில் வந்து  அவள் முகத்தை கையில் ஏந்தி அவள் கண்ணீரை துடைத்துவிட்டான். பாவனாவின் கண்ணீர் நிற்காமல் இருக்க, மனைவியின் கண்ணீரை கண்டு தன் கோபத்தை கைவிட்டவன், “சரி இப்போ என்ன பண்ணனும்ன்னு  சொல்ற?” என்று கேட்டான்.

         சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்த பாவனா, “ஜனனியை எப்படியாது கண்டு பிடிச்சு ரிஷி பாஸ் முன்னாடி கூட்டிட்டு வந்து நிறுத்தலாம்.” என்று சொன்னதும் அபி கேலியாக சிரித்தான். அதை கண்ட பாவனா அவனை முறைக்க.

        “என் அண்ணனை பற்றி என்ன நினைச்ச நீ ம்‌ம்‌ம்‌…??. அவருக்கு கொஞ்சமும் சுயமரியாதை இல்லைனா? தன்னை வேண்டாம்னு விட்டுட்டு போன பொண்ணு பின்னாடியே கெஞ்சிக்கிட்டு போறதுக்கு.” என்று கேட்க. பாவனா வேகமாய் இல்லை என்று தலை ஆடினாள்.

        “அவர் எவளோ பெரிய ஆள் தெரியுமா.  இந்தியாவிலே டாப் 5 பிஸ்னேஸ் மேன்ல ஒருத்தர். அவர் முன்னாடி பேசவே எல்லோரும் ஒருதடவைக்கு ரெண்டு தடவை யோசிச்சுதான் பேசுவாங்க. அப்படி ஒரே பார்வையில் அடுத்தவர்களை ஆட்டிவைப்பவர் அவர். அவர் எப்படி  நீ வேண்டாம்ன்னு விட்டு போன உன் அக்காவை தேடுவார். ம்‌ம்‌ம்‌…??.  அவர் நினைச்சா இப்படின்றதுக்குள்ள உன் அக்காவை கண்டு பிடிச்சுட முடியும்.” என்றவன் தன் விரலை சுடக்கிட்டு காட்டினான். “ஆனா உன் அப்பா ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடலில் இருந்த அப்போ கூட அவர் அதை செய்யாமல் அமைதியா இருக்காருன்னா என்ன அர்த்தம்.?” என்றவனை நிமிர்ந்து பார்த்து  “என்ன அர்த்தம்?” என்று கேட்டாள் அவன் மனைவி.

         “உன் அக்கா மேல கொலவெறில இருக்கருன்னு அர்த்தம்.  அவங்களை நேர்ல பார்த்த அவரே தன் கையால அவங்களை கொன்னு போட்டுருவாருன்னு அர்த்தம்.” என்றான் அபி.

        இதை கேட்ட பாவனாவோ அதிர்ந்து நெஞ்சில் கை வைத்தவள் விழி விரிய கணவனை பார்த்தாள். மனைவியின் அதிர்ந்த முகத்தை கண்டவன் அவள் அருகில் வந்து கைகளை பற்றி,

        “இதோ பார் பாவனா உனக்கு  இன்னும் அண்ணாவை  பற்றி சரியா தெரியல. அவர் எந்த அளவுக்கு ஜாலி டைப்பொ அந்த அளவுக்கு பிடிவாதக்காரர். அவர் ஒன்று வேணும்னு நினைச்சா அதை எந்த எல்லைக்கும் சென்று அவருடன் தக்க வைச்சுக்குவார்.  அதே போல ஒண்ணு  வேண்டாம்னு ஒதுக்கி விட்டால் பின் எந்தக் காரணம் கொண்டும் அதை திரும்பி கூட பார்க்க மாட்டார்.  அவர் உன் அக்காவை தேடாமல் இருக்கும் போதே அவர் மனசில் என்ன இருக்குன்னு உனக்கு புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன். சோ நாம் உன் அக்காவை கண்டுபிடிச்சு அவர் முன்னாடி நிறுத்தினாலும் எதுவும் மாறாது.  இப்போ தான் அவர் கொஞ்சம் மனசு மாறி இருக்கிறார்ன்னு நினைக்கிறேன். அதுனால தான் அம்மா கல்யாணத்தை பற்றி பேசியும் அவர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து  இருக்கிறார். எனக்கு அவரோட சந்தோஷம் தான் முக்கியம். அதுனால நீ தேவைல்லாததை யோசிச்சு இந்த விஷயத்தை குழப்பாம இருந்தாலே போதும். எல்லாத்தையும் அம்மா அப்பா பார்த்துக்குவாங்க. இந்த பேச்சை இதோவிட்டுட்டு வேற வேலையை பார்.  இப்போ  நீ  போ போய் எனக்கு டீ கொண்டு வா. நான் ரெஃப்ரெஷ் ஆகி வரேன்.” என்று சொன்னவன் குளியல் அறைக்குள் புகுந்துகொண்டான்.

        அபி சொன்னதை கேட்ட பாவனாவுக்கு ரிஷியின் தரப்பு நியாயம் புரிந்தாலும், அவன் திருமணம் ஜனனியை  தவிர வேறு பெண்ணுடன் நடபத்தை அவளால் கொஞ்சமும்  ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  அதற்க்கு காரணம் ரிஷி ஒருவனால் மட்டுமே ஜனனியை சந்தோஷமாக பார்த்துக்கொள்ள முடியும் என்று அவள் திண்ணமாக நம்பினாள்.

        குளியல் அறையில் இருந்து நைட் பாண்ட் உடன் வெளியே வந்த அபி பாவனா இன்னும் யோசித்தபடி அதே இடத்தில் நிற்பதை கண்டதும், “நான் உன்கிட்ட டீ கேட்டேன் பாவனா. நீ நின்னுட்டே தூங்குறியா என்ன?” என்று கேட்டு கொண்டே கண்ணாடி முன் வந்து தலை வார துவங்கினான்.

        “நீயும் இதை தான் பண்ணுவியா அபி?” என்ற கேள்வி பாவனாவிடம் இருந்து வந்தது.

        அபி புரியாமல் அவளை திரும்பி பார்த்தவன், “வாட்??” என்று கேட்டான்.

        நிதானமாக அவனை பார்த்தவள், “நீ ரிஷி பாஸ் இடத்தில் இருந்து. ஜான் மாதிரி நான் உன்னை விட்டுவிட்டு போயிருந்தால் நீ இப்படி தான் வேற கல்யாணம் பண்ணுவியா அபி?” என்று மீண்டும் கேட்டாள்.

        இவ்வளவு தூரம் எடுத்து சொல்லுயும் புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அதை பற்றியே பேசுவதும் மட்டும் இல்லாமல். தன்னை விட்டு பிரிந்து போவேன் என்று சொன்னவளின் மீது ஆத்திரம் எழ கோபமாக அவளை நெருங்கியவன் அவள் தோள் பற்றி உலுக்கி, “லூசா டி நீ. இவ்வளோ சொல்லியும் திரும்ப திரும்ப அதையே பேசிட்டு இருக்க. இதுல  நீ என்னை விட்டு போக போறியா?. போய் பாரு …. நீ இந்த உலகத்தில் எந்த மூலைக்கு போனாலும் உன்னை தூக்கிட்டு வந்து குடும்பம் நடத்த எனக்கு தெரியும்.” என்று கர்ஜித்தான் அபி.

        அவன் கோபத்தில் மனம் குளிர்ந்தவள் புன்னகையுடனே, “இதை தான் அபி நானும் சொல்றேன்.  எப்படி உன்னால என்னை தவிர வேற யார் கூடவும் சந்தோஷமா இருக்க முடியாதோ அதே மாதிரி தான் ரிஷி பாஸும். அவராலும் ஜானை தவிர வேற யார் கூடவும் சந்தோஷமா வாழ முடியாது.  அவரே நினைச்சாலும் ஜானை வேண்டாம்னு அவரால் ஒதுக்க முடியாது. நான் ஒண்ணு மட்டும் உறுதியா சொல்லுவேன் அபி ரெண்டும் பெரும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் கண்டிப்பா சந்தோஷமா இருக்க மாட்டாங்க. இப்போ கூட ரிஷி பாஸ் நம்ம எல்லாருக்காகவும் தான் சிரிச்சு பேசிட்டு இருக்கார். ஆனா இந்த செகண்ட் கூட அவர் நினைப்பில் ஜான் மட்டும் தான் இருக்கா. அது உனக்கும் நல்லா தெரியும்.  ஒரு வேலை  அத்தை மாமா அவரை கண்வின்ஸ் பண்ணி இந்த கல்யாணம் பண்ணி வெச்சலும் நீயும் நானும் வாழுற மாதிரியான ஒரு  வாழ்க்கையை அவரலா வாழ முடியாது. கடைசி வரைக்கும் ஜான் அவர் மனசில் உருத்தி கிட்டே தான் இருப்பா.” என்று சொல்ல அபி யோசிக்க துவங்கினான்.

        “நாம எப்படியாது ஜானை கண்டுப்பிடிச்சு அவர் முன்னாடி நிறுத்துவோம், அவர் கோபபட்டாலும் சரி,  கூட சேர்ந்து வாழ்ந்தாலும் சரி, இல்ல அவர் கையாலையே  அவளை கொன்னுப்போட்டாலும் சரி, அது அவங்க ரெண்டு பெரும் பார்த்துக்கட்டும். பிளீஸ் அபி இதுவரைக்கும் என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்கட்டும் நவ் தே டிஸெர்வ் எ செகண்ட் சான்ஸ்.” என்றாள்.

        பாவனா சொன்னதை யோசித்தவனுக்கு காலையில் ஆஃபிஸில் ஃபைல் பார்த்துக்கொண்டு இருந்த ரிஷியின் கையில் இருந்த அந்த சிகப்பு கைக்குட்டை நினைவு வர, ஒரு பேரு மூச்சை வெளியேற்றி, “சரி ஒன் வீக் டைம் கொடு நான் அண்ணியை தேடி கண்டு பிடிக்கிறேன்.” என்றான்.

        வெகு நாட்கள் கழித்து அபி ஜனனியை அண்ணி என்று அழைத்தான். தன் அண்ணனை கஷ்டப்பட விட்டு சென்ற ஜனனி மேல் அவனும் கோபமாக தான் இருந்தான்.

        அபி ஒத்துக்கொண்டதும்  சந்தோஷதில் துள்ளி குதித்தவள், “தாங்க்ஸ் அபி” என்று சொல்லிக்கொண்டே எக்கி அவன்  தோளளை கட்டிக்கொண்டு அவன் கன்னத்தில் முத்தம்மிட்டாள்.

        திருமணத்துக்கு பிறகு ஆனா  மனைவியின் முதல் முத்தத்தை  ரசித்தவன், அவள் இடையில் கை கோர்த்து தன்னோடு இறுக்கிக்கொண்டு, “உனக்கு அவங்க மேல கோபமே இல்லையாடி?” என்று கேட்க.

        “யார் சொன்னா கோபம் இல்லைன்னு. அவளை கண்டு பிடிச்ச உடனே அவ கண்ணம் சிவக்கிற மாதிரி ரெண்டு அரை விடணும். 4 வருஷம் எங்களை தவிக்க விட்டதுக்கு ஒரு நாலு நாளாவது அவக்கூட பேசாம அவளை தவிக்க விடணும்.” என்றாள்.

        “அடி பாவி….. உன்னோட நாலு வருஷ கோபம் எல்லாம் வெறும் நாலு நாளைக்கு தானா?” என்று அபி கேட்க.        “ஊக்கும்… என்று உதட்டை சுழித்தவள், நானாவது 4 நாள் தாக்கு பிடிப்பேன். அப்பாவும் அம்மாவும் 4 நிமிஷம் கூட தாங்க மாட்டாங்க. பார்த்த உடனே ஜனனிம்மான்னு ஓடி போய் கட்டிப்பிடிச்சுக்குவாங்க. அவளோ பாசம் அவ மேல.” என்றாள் பாவனா.  இதை கேட்ட அபி சிரித்துவிட்டான்.

        “சிரிக்காத அபி, அவ என்ன செஞ்சாலும் சரி, எங்களால் எப்போவுமே அவளை வெறுக்க முடியாது.”என்றாள்.

        “போதும் போதும் உன் அக்கா புராணம், கொஞ்சம் உன் புருஷனையும் கவனி வனிம்மா. நான் தான் உங்க அக்காவை கண்டுபிடிக்கிறேன் சொல்லிட்டேன் இல்ல, இப்போவது எனக்கு ஒரு வாய் டீ குடுங்க  மேடம்.” என்று கேட்க.

        “அச்சச்சோ…. சாரி அபி இதோ 2 மினிட்ஸ்ல வரேன்” என்று சொல்லிக்கொண்டே அவனிடம் இருந்து விலகி கிச்சன்க்கு ஓடினாள்.

        அவளை பார்த்து சிரித்தவன் பின் தன் ஃபோனை எடுத்து தனக்கு தெரிந்த டிடெக்டிவுக்கு அழைத்தான்.

*******************

  தன் மீது இத்தனை அன்பை வைத்திருக்கும் குடும்பத்தை விட்டு ஜனனி எங்கு சென்றாள்? என் சென்றாள்? அவள் விட்டு சென்றத்தினால் அவள் மீது கடும் கோபத்தில் இருக்கும் ரிஷிக்கு, அபி ஜனனியை கண்டு பிடித்த பின் தன்னுடைய  இத்தனைவருட கோபமும்  அர்த்தமற்றதாக போகும் என்று அறிந்தால் என் செய்வான்?.

அடுத்து வரும் அத்தியாயங்களில்……