காதல்- முதல் காதல் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத நிகழ்வு. சிலருக்கு அது வாழ்நாளிள் போற்றி பாதுகாக்க படவேண்டிய பொக்கிஷம்! சிலருக்கு நினைத்துப் பார்க்கக் கூடப் பிரியபடாத கசப்பான பக்கங்கள்!
காதல்-3
அன்று வீட்டிற்கு விரைவாகவே சென்றுவிட்டான் உதய். இந்நேரத்தில் வரமாட்டாயே என்று கேட்ட தாயிடம், இரவு மதுரைக்கு செல்ல இருப்பதையும் திரும்பி வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்பதையும் கூறினான்.
நேராக அறைக்கு வந்தவனோ, தனக்கு தேவையான பொருட்களைப் பெட்டியில் அடுக்கத் துவங்கினான். அவனின் கப்போர்டை திறந்தபொழுது, அதில் இருந்த விழுந்த ஒரு புகைபடத்தைக் கையில் எடுத்தவனின் மனமோ உலைக்களமாய் மாறியது. அந்தப் போட்டோவில் இருந்தவளை பார்த்தவனுக்கோ அத்தனை வெறுப்பு.
“என் காதல் பொய்த்து போகும் என்று நான் கனவுல கூட நினைக்கல. என் காதலுக்கு அயுசு ரொம்ப குறைவு என்று அப்போ எனக்குப் புரியவே இல்லடி. இப்போவும் என்னால எதையுமே மறக்க முடியல. ஆனா நீ இந்நேரம் ரொம்ப சந்தோஷமா இருப்ப. அப்படியே இரு. இனி உன் முகத்தை நான் என்றைக்குமே பார்க்க விரும்பவில்லை. அப்புறம் எதுக்கு இந்தப் போட்டோவை மட்டும் வச்சிருக்கேன்னு கேக்குறியா? ஏன்னா, இதுல நீ மட்டும் இல்லையே, என் உயிரும் இருக்கே”
யார் அந்த உயிர்? வெறுப்பை உமிழும் பெண்ணிடம் ஏன் அவனது உயிர் இருக்க வேண்டும்? காரணங்கள் அவனிடம் மட்டுமே உள்ளது. யாரேனும் கேட்டால் கூட அதை எல்லாம் அவன் வாய் திறந்து சொல்லுவானா? அதனையும் அவன் மட்டுமே அறிந்த சிதம்பர ரகசியம்.
நினைவுகள் முட்டிமோத, மனதில் பாரமும் ஏற, இனியும் பாரம் ஏறினால், எங்கே தான் உடைந்து விடுவோமோ என்று அஞ்சியே, அந்தப் போட்டோவை எடுத்த இடத்தில் வைத்தவன், அந்தக் கப்போர்டைப் பூட்டியது போலத் தன் இதயத்தையும் இழுத்து மூடிக்கொண்டான். இன்னும் ஒரு முறை ஏமாறவும், காயப்படவும், அவனுக்கு மனதில் தெம்பில்லை!
கதவுகளைத் திறக்க யார் வருவாரோ? வருபவரையும் இவன் காயப்படுத்துவனோ? இல்லை, காயப்பட்டுபோவானோ? விதி சிரித்தது இவனைப் பார்த்து!
*************
அந்தப் புகழ்பெற்ற துணிககடையில், துணிகளை எடுத்துக் காட்டும் சேல்ஸ்மேனைப் பாடாய் படுத்திக் கொண்டு இருந்தாள் மீரா. இவளின் சேட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்த மீனாவோ, இவள் இப்போதைக்கு துணி எடுக்கப்போவதில்லை என்று ஓரமாய் சென்று தன் மொபைல்லை ஆராய துவங்கினாள்!
“அண்ணா இந்தக் கலர் நல்லா இல்ல”
“இந்த டிஸைன் நல்லா இல்ல”
“இது நல்லா இருக்கு. பட், என்னோட அம்மாக்கு சூட் ஆகாது”
கிட்டதட்ட அங்கிருந்த மொத்த கடையையுமே காலி செய்த பின்னும் கூட, தொடர்ந்து குறை கூறி கொண்டிருந்த மீராவை மிகவும் பொறுமையாகவே கையாண்டு கொண்டிருந்தார் அந்தச் சேல்ஸ்மேன்.
“மேடம், உங்களோட எதிர்பார்ப்ப சொன்னீங்கனா அதுக்கு ஏற்ற மாதிரி பார்ப்போம்”
“ம்ம், அதுவும் சரி தான்!”
“சரி மேடம், சொல்லுங்க?”
‘ஐயோ பாவம், இவளை நம்பி இவரு இப்படி கேக்குறாரே மனுசன் பாவம்’ மீனாவின் மனது அவளோடு பேசியது.
“அதாவது லைட் கலரும் இல்லாம, டார்க் கலரும் ் இல்லாம, நடுவுல ஒரு கலரு”
“சரி, மேடம்!”
“நிறைய டிஸைனும் இல்லாம, கம்மி டிஸைனும் இல்லாம, ஒரு டிஸைன். சேரில பீட்ஸ் இருக்கனும். காட்டனும் இல்லாம சின்தட்டிக்கும் இல்லாம நடுவுல ஒரு துணி. ஹெவியா இருக்கக் கூடாது, அதுக்காக ரொம்ப லைட் வெய்ட்டும் வேண்டாம்”
“அடியேய், போதும் டீ! முடியல” – மீனா.
“நீ சும்மா இரு, இப்படியொரு சேரி வேணும் எனக்கு” – மீரா
“மேடம் அப்படி சேரி இனிமே தான் நெய்யனும்!”
“அப்போ செய்யச் சொல்லுங்க” என்று கைகளைக் கட்டிக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.
“மேடம் உங்க நம்பரைக் கொடுத்திட்டு போங்க, நீயூ டிஸைன் வந்ததும் கூப்பிடுறேன்”
“சரி” என்று நம்பரைக் கொடுத்து விட்டு, அந்தக் கடையை விட்டு மீனாவோடு வெளியே வந்தவள், நேராக ஒரு ஜிகர்தண்டா கடைக்குச் சென்றாள்.
முன்பு வரை மதுரை என்றாலே மரிக்கொழுந்து, மல்லிகை, மீனாட்சியம்மன் கோவில்தான் நினைவுக்கு வரும். இப்போது மதுரையின் ஸ்பெஷலில் ஜிகர்தண்டாவும் சேர்ந்துகொண்டது. மதுரையில் ஃபேமஸ் ஜிகர்தண்டா கடை என்றால், மஞ்சனக்கார வீதியில் ஒரு கடை இருக்கிறது. அதுதான் பழைய, ஒரிஜினல் ஜிகர்தண்டா என்று மதுரை மக்கள் சொல்கின்றனர். ஜிகர்தண்டாவின் பெயர் காரணம் தெரியுமா? ஜிகர் என்றால் இந்தியில் இதயம் என்று அர்த்தம், தண்டா என்றால் குளிர்ச்சி என்று அர்த்தம். இதன் தமிழ்ப் பெயர் ‘இதயத்திற்கு குளிர்ச்சி தரும் பானம்’ என்பதே!
முகமதியர்கள் மதுரை நகரை ஆண்டபோது, இஸ்லாமியர் தங்களுக்கு பிடித்த பானமாக இந்த ஜிகர்தண்டாவை அருந்தியிருக்கின்றனர். மதுரை நகரில் இன்று எங்குப் பார்த்தாலும் இது கிடைக்கிறது. ஆனால் மதுரை ஜிகர்தண்டா என்றாலே நினைவுக்கு வர வேண்டிய பெயர் ஷேக் அப்துல் காதர். இவர்தான் மதுரையில் இன்றும் பிரபலமாக விளங்கும் ஃபேமஸ் ஜிகர்தண்டா கடை நிறுவனர். இவர் தயாரிக்கும் ஜிகர்தண்டாவில் பால், பாதாம் ரெசின், கடல் பாசி/பாலாடை, சர்பத், சர்க்கரை, ஐஸ்க்ரீம், ஐஸ்கட்டி இருக்கும். இதில் கடல் பாசி என்பது கடலிலிருந்து கிடைக்கும் பாசி அல்ல. அதன் தோற்றத்தை வைத்து அந்தப் பெயர் வைத்திருக்கின்றனர். இது ஒரு வித செடியின் தண்டுப் பகுதியிலிருந்து எடுக்கப்படும் நைலான் போன்ற நார்ப்பகுதி. இதைச் சைனா கிராஸ் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். ஜெல்லி வகை இனிப்புகளையும் இதில் இருந்துதான் செய்கின்றனர்.நாங்கள் அதாவது மைப்பேமிலி ஒவ்வொரு மதுரை செல்லும் போதும் எங்கள் பயணத்தில் ஜிகர்தண்டா மிக்கிய பங்கு வகிக்கும்! குறிப்பாக ஆரப்பாளையம் பஸ் ஸ்டாப்பின் உள்ளே உள்ள ஒரு கடையில் அவ்வளவு அருமையாக இருக்கும.
இரண்டு ஜிகர்தண்டாவை ஆர்டர் செய்தவளோ, இருவர் அமரும் டேபிளிற்க்கு சென்று அமர்ந்தாள், உடன் மீனாவும் வந்தமர்ந்தாள்.
“ஏன் டி இப்படி அவசரபடுத்தி எடுக்கற” – மீனா
“நான் என்ன பண்ணினே?” என்றாள் மீரா, அப்பாவியாக.
“ம் அந்தக் கடையிலே டான்ஸ் ஆடின”
“எதேய்!”
“அம்மாக்கு தானே! எதையோ ஒன்ன எடுக்க வேண்டியதுதானே!”
“தப்புடி, நமக்குனு எடுக்கும்போது மட்டும் கடையையே தேடி எடுக்குறோம். அதுவே அம்மாக்கோ, அப்பாக்கோ எடுக்கும்போது தேடுவோம்தான் இல்லங்கல, பட், அவ்ளோவா தேட மாட்டோம். இதுவே போதும்னு எதையோ எடுத்துட்டு போய்க் கொடுத்திடுறோம். அவங்களும் நம்ம பொண்ணு நமக்காக வாங்கிட்டு வந்திருக்கானு ஆசையா போட்டுக்குவாங்க. இந்த உலகத்துல குறை சொல்றதுக்குனு எப்பவுமே ஒரு கூட்டமே ரெடியா இருக்கும் தெரியுமா? அப்படி குறையே சொல்லாம நம்ம வாங்கிட்டு வந்து கொடுக்குறத போட்டுகிறது, ரெண்டே பேரு தான்! ஒன்னு நம்ம அம்மா, இன்னொன்னு அப்பா. ஏன் தெரியுமா? உன்னோட அக்கா, தங்கை, அண்ணண், தம்பினு யாருக்கு நீ டிரஸ் எடுத்திட்டு போனாலும் அவங்களுக்கு பிடிக்கலனா அதை அவங்க உன் முகத்துக்கு முன்னாடியே சொல்லிடுவாங்க. நீ யாருக்காச்சும் கிப்டா டிரஸ கொடுத்தாலும், அவங்களுக்கு பிடிச்சா அத போட்டுபாங்க, பிடிக்கலனா அத ஒரு ஓரமா ஒதுக்கி வச்சிடுவாங்க. அதுதான் இயல்பு! ஏன் நீயும் அப்படி தான், ஏன் நானும் அப்படி தான். ஆனா நம்மளோட பேரன்ட்ஸ் அப்படி கிடையவே கிடையாது! அப்படி பட்டவங்களுக்கு நம்ம எப்படி டரஸ் எடுத்துத் தரனும்?”
“…………..”
“நீ என்ன யோசிக்கிறனு எனக்குத் தெரியுது!”
“இதுக்கு நீ!அவங்கள கூடிட்டு வந்து, அவங்களுக்கு பிடிச்சத எடுத்துக் கொடுக்க வேண்டியது தானே? அதானே?”
“ஆமா”
“அதுக்கும் காரணம் இருக்கு. எங்க அம்மா இங்க வந்தா எனக்குத் தான் டிரஸ் எடுப்பாங்களே தவிர, அவங்களுக்கு எடுத்துக்க மாட்டாங்க. அப்படியே எடுத்தாலும் ரொம்ப கம்மி ரேட்ல, 1990 ல வந்த ஒரு பழைய டிஸைன்ன எடுத்திட்டு, இது நல்லா இருக்கு, எனக்கு இது போதும்னு சொல்லுவாங்க. அதுவும் இல்லையா, ஒரு ஐநூறு ரூபாய்க்கு ஒரு சேலைய எடுத்திட்டு இது போதும்னு சொல்லிடுவாங்க. அதுக்காகத்தான் நானே என் அம்மாக்கு சேரி வாங்குறேன்.”
அவள் பேசி முடிக்கவும் ஜிகர்தண்டா வருவதற்க்கும் நேரம் சரியாக இருந்தது.
“முதல்ல இதைக் குடி மா” -மீனா
“இரு இரு இன்னும் இருக்கு”-மீரா
“குடிச்சுட்டு சொல்லு நான் கேக்குறேன்”
“……..…”
“இப்போ சொல்லு”
“அப்பா துபாய் போனதும், அம்மா அவங்கள அவ்ளோவா ரெடி பண்ணிக்கிட்டு நான் பாத்ததே இல்ல. எப்பவும் சிம்பிளா இருப்பாங்க, நேரம் எடுத்துகிட்டு அவங்கள அலங்கரிச்சுகிட்டதும் கிடையாது! ஏதாச்சும் கல்யாணத்திற்கு போகும்போதும் சரி, சிம்பிளாதான் போவாங்க. முதல்ல எங்க அம்மா கொஞ்சம் நல்லாவே போனாங்கதான், அப்போ ஒரு கல்யாணத்துல ஒரு ஆண்டி, உன் வீட்டுகாரு துபாய்ல இருக்கும்போதே இப்படி வந்திருக்கியே, உன் கூட இருந்திருந்தா எப்படி வந்திருப்பனு கேட்டிருக்காங்க. அத எங்க அம்மாவால தாங்கிக்கவே முடியல. அவங்க எத மீன் பண்ணினாங்கனுலாம் தெரியாது, பட் இப்படி சொல்லும்போது அவங்க எப்படி தாங்கிக்க முடியும். அதுவும் அப்போ எனக்கு இரண்டு வயதுதான், எங்க அம்மாக்கு இருபத்தி ஏழு வயதுதான்!அந்த வயதுல ஒரு பொண்ணு வேற எப்படி இருப்பா? சொல்லு?”
“ம்”
“ஒரு பொண்ணோட கணவன் அவள் கூட இல்லாம போய்ட்டா அவ ஒரு பௌடர் கூடப் போட்டுக்க கூடாதா, என்ன? இந்தச் சமூகம் எப்போதான் மாறும்? எங்க அம்மாக்கு அது ரொம்ப வேதனைய கொடுத்துடுச்சு. அதுல இருந்து இப்படிதான் ஆகிடாங்க! எங்க அப்பா இங்க வர்ற நாட்களில கூட, அம்மா இப்படிதான் இருப்பாங்க. அப்பா ஏன் இப்படி இருக்குறனு கேட்டா, இதுதான் எனக்குப் பிடிச்சிருக்குனு சொல்லி முடிச்சிடுவாங்க!”
“புரியுது டி”
“அதுல இருந்து எங்க அம்மா எந்த நல்லது, கெட்டதுக்கும் போறது கிடையாது! போனா, உன் வீட்டுகாரு எப்போ வருவாரு? பணம்லாம் கரெக்டா அனுப்புறாரனு, ரொம்ப அக்கறை எடுத்துகிறோம்ங்கிற பேருல எங்க அம்மாவ நோகடிப்பாங்க. இன்னும் சிலர் ஒருபடி மேல போயி, டெய்லியும் போன் போடுறாரா? ஏன் கேக்குறேன்னா இந்த மாறி வேலைக்குனு வெளி நாடு போறவங்க, இன்னொரு குடும்பமும் வச்சு, இங்க ஒன்னு, அங்க ஒன்னுனு இருப்பாங்கனு சொல்லுறாங்க! எங்க அம்மாக்கு எப்படி இருக்கும்? அதுனால எங்க அம்மா எங்கையும் போறது இல்ல”
“உங்க அம்மா பாவம்டி”
“ம், அம்மாக்கு இப்படி கஷ்டம் னா, அப்பாவுக்கும் கஷ்டம் தானே? அதுலாம் விவரிக்க ஒரு நாள் பத்தாது, இன்னொரு நாள் சொல்றேன்!”
பில் ஐ செட்டில் செய்துவிட்டு, வெளியே வந்தவர்களோ, மீராவிற்கும், மீனாவிற்கும் தலா இரண்டு செட் லெக் இன், டாப்ஸ் மற்றும் மேட்சாகத் துப்பட்டா வாங்கிவிட்டு வீட்டை நோக்கிச் சென்றனர்.
**************
சென்னை!
இரவு பன்னிரண்டு மணிக்கு இரயில் என்பதால் வீட்டில் அனைவரிடமும் சொல்லிவிட்டு இரயில் நிலையத்தை நோக்கித் தன் பயணத்தைத் துவங்கியவனோ, தன் ராயல் என்பீல்டில் பதினைந்து நிமிட பயணத்தில் சென்னை சென்ட்ரலை அடைந்தான்.
வண்டியை நிறுத்திவிட்டு டோக்கனை வாங்கி கொண்டவன், இரயில் நிலையத்திற்குள் சென்று, இரயிலை அடைந்து, டிக்கெட் முன்பதிவு செய்யப் பட்டுவிட்டதால் தனக்கான இடத்தைக் கண்டுபிடித்து அதில் அமர்ந்தான்.
அவனுக்கு முன் நேர் இருக்கையில் இவன் வந்தது முதலே இவனையே பார்த்துக் கொண்டிருந்த பெண்ணைப் பார்வையாலே எரிக்க முயன்றான். அவளோ அதனைக் கண்டுக்கொள்ளாது, இவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்!
அவள் விடாது பார்ப்பதைக் கண்டு கடுப்பானவன், ஹெட்செட்டைக் காதில் மாட்டிக் கண்களை மூடிச் சீட்டில் சாய்ந்து கொண்டான். அவன் கண்களை மூடிக் கொண்டதை கண்டு கடுப்பானவளோ, அவனைத் திசைதிருப்ப ஏதேதோ முயற்சி செய்து, இறுதியாக அவனைத் தொட செல்ல, சுதாரித்தவனோ எழுந்துகொள்ள, பயந்தவளோ சட்டெனக் கீழே விழுந்தாள்.
அவன் முன் அடி பட்ட அவமானத்திலும், அவனால்தான் என்ற கோபத்திலும்,
“ஏய்! அறிவு இல்லையா” என்றாள்.
“மிஸ் ஆர் மிஸஸ் வாட் எவர். கிவ் ரெஸ்பெக்ட்”, என்றான்.
“ரெஸ்பெக்டா? ஏய் உன்னைய இப்போ நான் என்ன பண்ணினே? எதுக்கு என்னைத் தள்ளிவிட்டே?”
“உங்களுக்குக் கண்ணு தெரியாதா? நீங்களாதானே விழுந்தீங்க? அண்ட் அகைய்ன் ஐ எம்டெல்லிங்க் யூ. கிவ் ரெஸ்பெக்ட்!”
“முடியாதுனா என்ன பண்ணுவ?” “உங்க மேல கேஸ் போடுவேன்”
“அதுக்கு முன்னாடி நான் உன்மேல போடுவேன், நீ என்கிட்ட தப்பா நடந்துகிட்டனு?”
“ஓஹோ, போடேன்! ஏன் பயப்படுற? நான் வேணுணா கால் பண்ணி தரவா? ”
“என்ன உனக்குப் பயமே இல்லயா?”
அப்போது சரியாக அவன் தொலைப்பேசி அடித்தது. “ஹலோ ஏசிபி உதய் சரண் ஸ்பீக்கிங்”, சர்வமும் ஆடிப் போனது அவளுக்கு. அதுக்கு அப்புறமும் அவள் அங்கு இருப்பாளா என்ன ? ஓடியே விட்டாள்.
இவனுக்குத்தான் சேய் என்று இருந்தது. “இந்தப் பெண் இனமே இப்படி தானோ ? அன்று, அவள்! இன்று, இவள்! இவர்களுக்கு இதே வேலை தானா? இப்படி எல்லாம் செய்து இவர்களுக்கு என்ன கிடைக்க போகிறது? ஒருவனின் வாழ்வில் விளையாடுவது என்றால் இந்தப் பெண்களுக்கு இத்தனை பிரியமா? ஒருத்தி கொடுத்த காயமே ஆயுசுக்கும் போதும்!” என்று மனதோடு ஒட்டுமொத்த பெண் இனத்தையே வறுத்தெடுத்துக் கொண்டிருந்தான்.
இவன் பெண் இனத்தை இப்படி நினைபதற்கான காரணமும்தான் என்ன?
இவனின் காயங்களுக்கு மருந்தாவாளா மீரா?
இல்லை அந்தக் காயத்தைக் கீறி மீண்டும் காயப்படுத்துவாளா?
இவர்களுக்குள் காதல் வருமா? மோதல் வருமா? இல்லை ஏற்கனவே வந்துவிட்டதோ?
நாம் தான் லேட்டா?
பொறுத்திருந்து பார்ப்போம் வாங்க!
காதல் தொடரும்!
**********
Leave a Reply