எந்நாளும் தீரா காதலாக – 23

💝💝23

சிவாத்மிகாவின் பிறந்த நாள் கொண்டாட்டம், அவளே எதிர்ப்பார்க்காதது போல இருந்தது. அன்று மாலை அர்ஜுன் அவளது கடைக்கு சப்ரைசாக வந்ததில் இருந்தே அவளது பிறந்த நாள் கொண்டாட்டம் துவங்கியது..

அவனை அந்த நேரம் சற்றும் எதிர்ப்பார்க்காதவள், “அஜ்ஜு..” என்று ஆச்சரியத்தில் கண்களை விரிக்க, அவளைப் பார்த்து கண் சிமிட்டியவன்,

“போகலாமா? ரெடியா? வேலை ஆச்சா?” என்று கேட்க,

“இப்படி திடுதிப்புன்னு நீங்க வந்து கேட்டா நான் என்ன செய்வேன்? வரப் போறேன்னாவது போன் செஞ்சி சொல்லி இருக்கலாம்ல.. உங்களுக்கு ஷூட்டிங் முடிஞ்சதா?” என்றபடியே, அவனுடன் கிளம்ப பரபரவென்று தன்னுடைய வேலைகளை முடிக்கத் துவங்கினாள்.   

“மணியைப் பாரும்மா.. ஆறரை ஆகுது. சப்ரைஸ்ன்னா சொல்லாம தான் வருவாங்க.. சொல்லிட்டு வந்தா அது பேர் சப்ரைஸ் இல்ல.. வினயை வீட்டுக்கு அனுப்பிட்டு நான் அப்படியே இங்க வரேன்.. சின்னப் பையன் வேகமா சூட்டிங் எல்லாம் முடிச்சிட்டு வந்திருக்கேன்.. பார்த்துப் பண்ணும்மா.. நாம சீக்கிரம் கிளம்பலாம்..” அவளை கேலி செய்ய,

“ரொம்பத் தான்.. ஒரு பத்து நிமிஷம்.. இதோ வந்துடறேன் அஜ்ஜு..” என்று அவள் சொல்லவும், அர்ஜுன் அங்கிருந்த சேரில் அமர்ந்து தனது மொபைலில் எதையோ ஆராய்ந்துக் கொண்டிருந்தான்.

‘ஏதாவது பேசலாம்ல.. அந்த மொபைல்ல என்ன பார்வை வேண்டி இருக்கு?’ மனதினில் நொடித்துக் கொண்டவள், அவனைப் பார்த்துக் கொண்டே அனைத்தையும் எடுத்து வைத்து கிளம்புவதற்குத் தயாராக, அவளுக்கு முன்பு வெளியில் வந்தவன், 

“ப்ரியா.. நாளைக்கு உங்க மேடம் பொட்டிக்குக்கு வர மாட்டாங்க..” அவன் சொல்லி முடிப்பதற்குள்,

“மேடம் என்கிட்டே அவங்க லீவ் போடறா மாதிரி எதுவுமே சொல்லலையே..” என்று அவள் குழப்பமாகக் கேட்க,

“அவ லீவ் போடறது தான் அவளுக்கே தெரியாதே.. நாளைக்கு அவளுக்கு பர்த்டே.. அது தான் ஒரு சின்ன சப்ரைஸ்.. திடீர்னு கால் பண்ணினா உங்களுக்கு கஷ்டம் ஆகாம, நீங்க கொஞ்சம் ப்ரிபேர்ட்டா இருக்கறதுக்காக சொல்றேன்.. ஏதாவது முக்கியமானதுனா கேட்டுக்கோங்க..” என்று ப்ரியாவிடம் சொன்னவன், அவள் சிரித்துக் கொண்டே மண்டையை உருட்டவும், சிவா அவர்கள் அருகில் வந்தாள்.

“மேடம்.. நாளைக்கு என்ன என்ன வேலை இருக்கு?” என்று அவள் கேட்கவும், சிவாத்மிகா யோசனையுடன் சொல்லிவிட்டு,

“நாளைக்கு வந்த உடனே மீதி எல்லாம் ரெடி பண்ணிக்கலாம்.. ரொம்ப அர்ஜன்ட் எதுவும் இல்லை..” அவள் சொல்லவும், சரி என்று மண்டையை உருட்டிய ப்ரியா, அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்க, அர்ஜுனைப் பார்த்துக் கொண்டே அவளுக்கு நன்றி தெரிவித்தவள்,

“சரி.. பார்த்து பூட்டிட்டு போங்க.. நான் அர்ஜுன் கூட கிளம்பறேன்..” என்றவள், அர்ஜுன் அவளைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருக்கவும், அவன் அருகே குதூகலமாகச் சென்றவள்,

“போகலாம் அர்ஜுன்..” என்று சொல்லவும், அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

“என்ன அர்ஜுன்.. நீங்களே.. அதுவும் இவ்வளவு சீக்கிரம் இப்போவே வந்து இருக்கீங்க? என்ன விஷயம்?” கண்களைச் சுருக்கி சிவாத்மிகா ஆவலும், ஆர்வமுமாக மீண்டும் கேட்க, அவளைத் தன்னருகே இழுத்துக் கொண்டவன்,

“போய் சேரும் இடம் வரும் வரை அமைதியாக இருக்க வேண்டும் அம்மையாரே.. நடுவில் கேள்வி கேட்டால், நான் மூக்கைக் கடித்து விடுவேன்..” அவன் விளையாட்டாகச் சொல்லவும், வாய் மீது விரலை வைத்துக் கொண்டு அவள் அமரவும், அதில் தன்னைத் தொலைத்தவன், அவளது கன்னத்தில் இதழ் பதித்து, காரை ஓட்டுவதில் கவனம் பதித்தான்.

கார் கிழக்கு கடற்கரைச் சாலையின் வழியாக சென்றுக் கொண்டிருக்க, “கண்ணா.. நாம எங்க போகப் போறோம்? எதுவுமே சொல்லாம கூட்டிட்டு போனா எப்படி? இந்தப் பக்கம் நாம எங்க போகப் போறோம்?” வாய் மீது விரலை வைத்துக் கொண்டே, விரல் இடுக்குகளின் வழியாகக் கேட்க, அவளது கன்னத்தில் மீண்டும் இதழ் பதித்தவன்,

“போன உடனே சொல்லிடறேன்.. டீலா?” என்று கேட்டவன், அவளது முறைப்பை டீலில் விட்டு, மீண்டும் காரை ஓட்டுவது போலத் திரும்பிக் கொண்டான். அவனுக்கு பழிப்புக் காட்டி, வேடிக்கைப் பார்த்துக் கொண்டே அவள் வர, அர்ஜுனின் முகத்தில் புன்னகை அரும்பியது. மெல்ல அவன் கார்க் கண்ணாடியை இறக்கி விட, கடற்காற்று முகத்தில் படவும், கண்களை மூடி அதை ரசித்தவளை ரசித்துக் கொண்டே அர்ஜுன் வண்டியை செலுத்தினான்.       

காரை ஒரு புகழ் பெற்ற ரிசார்ட்டின் உள்ளே அவன் கொண்டுச் செல்ல, அவனைத் திரும்பிப் பார்த்தவள், “நாம ஏன் இங்க வந்திருகோம்? இங்க என்ன விசேஷம்?” என்று குழப்பத்துடன் கேட்க,

“யுவர் பர்த்டே சப்ரைசஸ் ஸ்டார்ட்ஸ் ஹியர் மை லட்டு.. இது தான் முதல் சப்ரைஸ்.. இன்னைக்கு நாம இங்க தான் ஸ்டே பண்ணப் போறோம்..” என்றவன், காரை அந்த ரிசார்ட்டில் இருந்த தனி வில்லா போன்ற இடத்தில் கொண்டு நிறுத்த, சிவாத்மிகா அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். அவளது முகத்தைப் பார்க்காமல், தனது சீட்டில் பின்னால் இருந்த ஒரு பையை எடுத்துக் கொண்டு அர்ஜுன் கீழே இறங்க, அவனது பையைப் பார்த்த சிவாத்மிகா, அவனை குழப்பத்துடன் பார்த்துக் கொண்டே அவனுடன் சென்றாள்.

“அஜ்ஜு.. இங்க நாம எதுக்கு வந்திருக்கோம்? இங்க என்ன சப்ரைஸ் பண்ணப் போறீங்க?” என்று கேட்க, தனது வாய் மீது விரலை வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்தவன், அங்கிருந்த மேனேஜரிடம் சாவியை வாங்கிக் கொண்டு,

“எல்லாம் ரெடியா?” என்று கேட்கவும், அவர் ‘எஸ் சார்.. எல்லாமே ரெடி..” எனவும், நன்றி கூறி, அவரை அனுப்பி விட்டு, சாவியைக் கொண்டு அர்ஜுன் கதவைத் திறக்க,

“ரொம்ப ஓவரா பண்ணிட்டு இருக்கீங்க.. என்ன பண்ணப் போறோம்ன்னு சொல்லலாம் இல்ல.. இங்க என்ன சப்ரைஸ் பண்ணப் போறீங்க?” என்று அவள் கேட்கவும், தனது கையில் இருந்த பையில் இருந்து, அவளுக்கு ஒரு பையை எடுத்துக் கொடுத்தவன்,

“இதை அந்த ரூம்ல போய் மாத்திட்டு வா.. நாம பீச்க்கு போயிட்டு வரலாம்.. நமக்கு ட்ராபிக்னால ஏற்கனவே லேட் ஆச்சு.. ரொம்ப கேள்வி கேட்டு லேட் பண்ணாதே..” என்று அவன் சொல்லவும், அவனுக்கு அழகுக் காட்டிக் கொண்டே, அவன் காட்டிய அறைக்குள் நுழைந்தவள், அவன் கொடுத்த பையை பிரித்துப் பார்க்க, அதில் இருந்த ஜீன்ஸ் மற்றும் டிஷர்ட்டைப் பார்த்தவள், கண்களை விரித்தாள்.

வெள்ளை நிற டிஷர்ட்டில் ‘ஹிஸ் குவியின்’ என்ற எழுத்துக்கள் கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்டு, அதன் மேலே அழகாக குட்டிக் கிரீடம் போல இருக்கவும் அதை வருடியவள், அதனுடன் இருந்த ஜீன்ஸ் பேன்ட்டைப் பார்த்தாள்.

“நான் உங்க குவியினா? ரொம்ப அழகா இருக்கு..” அதைப் பார்த்தவளுக்கு, மனதின் சந்தோசம் குமிழிட, அவன் கொடுத்த உடையை அணிந்துக் கொண்டு வெளியில் வந்தவள், அங்கு அர்ஜுன் அதே போன்ற ஒரு உடையை அணிந்து அவளுக்காக காத்திருக்க, அதைப் பார்த்தவள், முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் அவன் அருகே ஓடிச் சென்றாள்.

“ஹர் கிங்..” அவனது டி-ஷர்ட்டில் இருந்த அந்த வாசகத்தைப் படித்தவள், அவனது கன்னத்தில் எம்பி முத்தமிட்டு,

“எஸ்.. மை கிங்..” என்றவள், “பீச்சுக்கு போகலாமா?” என்று கேட்க,

“போகலாம் வா.. பீச்சுக்கு போறதுக்கு முன்ன நாம டின்னர் சாப்பிட்டு போகலாம்.. எனக்கு பசிக்குது..” என்றவன், அவளை அழைத்துக் கொண்டு, அங்கிருந்த ஹோட்டலுக்குச் சென்றான்.

அவளுக்கு பிடித்த உணவுகளை ஆர்டர் கொடுத்தவன், “டி-ஷர்ட் உங்க அண்ணன் டிசைன் பண்ணிக் கொடுத்தது..” என்று சொல்லவும்,

“அழகா இருக்கு.. அதோட எனக்கு அந்த வர்ட்ஸ் ரொம்ப பிடிச்சிருக்கு.. மை கிங்..” என்றவளின் கையை அழுத்தியவன்,

“இது தான் அடுத்த சப்ரைஸ்..” என்று கூறிக் கண்ணடிக்க,

“வேற என்ன எல்லாம் ப்ளான் பண்ணி இருக்கீங்க? ப்ளீஸ்.. எனக்கு இப்போவே சொல்லுங்க.. எனக்கு ரொம்ப ஈகரா இருக்கு..” ஆவலாக அவள் கேட்க, மறுப்பாகத் தலையசைத்தவன்,

“ஒண்ணு ஒண்ணா தான் சொல்லுவேன்.. அப்போ அப்போ எச்சைட்டா அனுபவி..” என்றவன், உணவு வரவும், பேசிக் கொண்டே உண்டு முடித்து, பீச்சிற்கு சென்றனர்.

இரவின் இருளும், அங்கிருந்த லைட் வெளிச்சத்துடன், நிலாவின் வெளிச்சமும் சேர, அழகாகத் தெரிந்த கடலலையில் இருவரும் ஒருவர் கையை ஒருவர் இறுகக் கோர்த்துக் கொண்டு, மற்றவர்களின் அருகாமையை ரசித்தபடி அந்த அலைகளில் நின்றிருந்தனர்.   

“அஜ்ஜு ஐ லவ் யூ” அந்த நேரத்தின் இனிமையில், மனதில் தோன்றிய மகிழ்ச்சியில் அவள் சொல்லவும்,

“செல்லமே..” என்றபடி அவளை அணைத்தவன், அவளை அணைத்தபடியே தனது செல்போனில் அந்த நிமிடத்தை பதிவு செய்துக் கொண்டான்.

‘பீச்சில் விளையாடிவிட்டு அடுத்து என்ன?’ அவளது மண்டையில் அந்தக் கேள்வி வண்டாகக் குடைய, அதை அர்ஜுனின் கையைப் பிடித்துக் கொண்டு அவள் கேட்கவும் செய்ய, அவளைப் பார்த்தவன், குறும்பாகப் புன்னகைத்தான்.

“என்ன? உங்க சிரிப்பே சரி இல்லையே.. என்ன விஷயம்?” இடுப்பில் கையை வைத்துக் கொண்டு, கண்களைச் சுருக்கி சிவாத்மிகா கேட்கவும், அவளது காதில் சரசமாக பேசியவனின் கையில் அடித்து,

“என்னது? என்ன்ன? என்ன சொல்றீங்க? அஜ்ஜூ சும்மா தானே சொல்றீங்க?” அவள் திகைப்புடன் கேட்கவும்,

“காலையில கோவிலுக்கு கட்டிட்டு வந்த அந்த புடவையில சும்மா கும்முன்னு இருந்தடி.. அந்த பச்சைக் கலர் புடவையில உன் இடுப்பு வேற அழகா தெரிஞ்சதா.. அப்போவே கிள்ளணும் போல கை துருதுருன்னு இருந்தது.. என் கண்ணு வேற அங்க தான் போச்சு.. சின்னப் பையன் நான் என்ன செய்ய? வாலிப வயசு.. பக்கத்துல கட்டிக்கப் போறவ.. பாவம் மீ.. அது தான்.. ரூம் போட்டுட்டேன்..” என்றவன், அவளை நெருங்க, அவனது முகத்தைப் பார்த்தவள்,

“அஜ்ஜு.. நிஜமாவா சொல்றீங்க? என்ன இப்படி எல்லாம் பேசறீங்க?” என்று கேட்கவும், அவன் இதழில் புன்னகையுடன் ‘ஆம்’ என்று தலையசைக்க, அவனது கண்கள் குறும்பில் தத்தளிப்பதை உணர்ந்தவள்,

“அவ்வளவு தானே.. உங்களுக்கு நான் தான் வேணும்ன்னா.. ஹ்ம்ம்.. சரி..” என்று சொல்லவும்,

அர்ஜுன் “ஹான்.. நிஜமாவாடி சொல்ற?” என்று பார்க்கவும், கலகலவென்று சிரித்தவள்,

“எப்படி எப்படி.. இடுப்பை பார்த்தீங்களா? அதுவும் கோவில்ல.. என்ன வேலை அது? கண்ண நோண்டிருவேன் நோண்டி.. கல்யாணம் ஆகற வரை சமத்து பிள்ளையா இருக்கணும்..” என்று அவனை அடிக்கத் துவங்க, அர்ஜுன் சிரித்துக் கொண்டே ஓட, சிவாத்மிகா அவனைத் துரத்தத் துவங்கினாள். அவளது கைக்குச் சிக்காமல், அர்ஜுன் ஓட, அவள் துரத்திக் கொண்டிருக்க, நெடுநேரம் ஓடிய பிறகு, ஓரிடத்தில் கீழே விழுந்தவன், அவளையும் தன்னுடன் இழுத்துக் கொண்டான்.

சிரிப்பினூடே அவன் அருகில் சரிந்தவள், அவனது மார்பில் சாய, அவளது முகத்தை நிமிர்த்தி அவளது மூக்கில் மென்மையாக இதழ் ஒற்றியவன்,

“ஆனா.. காலையில உன் இடுப்பைப் பார்த்தேன்.. பொய் எல்லாம் சொல்லல.. எனக்கு சொந்தமான இடம் தானே.. அது தான்..” அவளது கழுத்து வளைவில் முகம் பதித்து, அவளது கன்னத்துடன் இதழ்களை உறவாடிக் கொண்டே, மெல்ல அவளது இதழ்களை நெருங்கி,

“நம்ம கல்யாண நாளுக்கு இன்னும் ஏழு மாசம் வெயிட் பண்ணணும்.. எவ்வளவு நாளைக்கு இப்படி உன்னை பக்கத்துல வச்சிக்கிட்டே எட்டி இருக்கற கஷ்டமோ?” என்று ஏக்கமாகச் சொன்னவன், மென்மையாக இதழ்களில் இதழ் ஒற்றி, அவளை மணலில் சாய்த்து, அவளது இதழ்களை வேகத்துடன் சிறை செய்தான்.

அவனது தலை முடிக்குள் விரல்களை நுழைத்தவள், அவனது இதழ்களுடன் உறவாட, அவளை மெல்ல அணைத்துக் கொண்டவன், அவளது இதழ்களுக்குள் புதைந்தான். நொடிகள் நிமிடங்களாகக் கரைய, அவளது விரல்களின் அழுத்தம் கூடவும், மூச்சிருக்கு இதழ்களைப் பிரிந்து அவளது முகத்தைப் பார்த்தவன், அவள் கண்களை மூடிக் கிடக்கவும், நெற்றியில் அழுந்த இதழ் பதித்து, அவளது முகத்தை மெல்ல வருடி,

“ஸ்வீட்டு.. ஐ லவ் யூ டி என் செல்லமே..” என்றபடி, அவளது கன்னத்தில் மென்மையாகக் கடித்து, அவளைத் தனது மார்பில் சாய்த்துக் கொள்ள, கண்களைத் திறந்து நாணத்துடன் அவனது முகத்தைப் பார்த்தவள், அவனது பார்வை வீச்சில் முகம் சிவந்து, அவனது மார்பிலேயே சாய்ந்துக் கொள்ள, அவளை இறுக அணைத்துக் கொண்டவன், நிலாவைப் பார்த்துக் கொண்டே அவளது தலையை மெல்ல வருடி,  

“நாம மீட் பண்ணின டேட்லையே நம்ம கல்யாண நாளை ஜோசியர் குறிச்சித் தந்தது எனக்கு செம சப்ரைஸ் தெரியுமா? ரொம்ப சந்தோஷமாவும் இருந்தது.. யூ வில் பி மைன் தட் டே..” என்றவன், அந்த நிலாவை ரசிக்கத் துவங்கினான்.

அவனது கையில் தலை சாய்த்திருந்தவள், அவனது டிஷர்ட்டை வருடிய படி, அந்த நிமிடங்களை ரசிக்க,

“சரிடா தங்கம்.. நாம ரூமுக்கு போகலாமா?” என்று கேட்டபடி, தனது கடிகாரத்தைப் பார்க்க, மணி பன்னிரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது.

“இப்போவே போகனுமா? இப்படியே நல்லா இருக்கே..” அவள் கேட்க, அவளது நெற்றியில் மீண்டும் அழுந்த இதழ் பதித்தவன், மெல்ல எழுந்துக் கொண்டு, அவளையும் கைக் கொடுத்து எழுப்பினான்.

அவனை கேள்வியாகப் பார்த்துக் கொண்டே சிவாத்மிகாவும் எழுந்துக் கொள்ள, “ரூமுக்கு போயிட்டு டிரஸ் மாத்திட்டு, ஒரு குட்டி குளியல் போட்டுட்டு தூங்கலாம்வா.. ரொம்ப டயர்ட்டா இருக்கு..” என்று அழைத்தவன், அவளை அணைத்தவாறே மீண்டும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு, அவளை அழைத்துக் கொண்டு கிளம்ப, சிவாத்மிகாவின் நெஞ்சத்தில் ஒரு குறுகுறுப்பு.. தனது கடிகாரத்தில் மணியைப் பார்த்தவள், அர்ஜுனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே நடக்க, அவளை அழைத்துக் கொண்டு, மீண்டும் அறைக்கு வந்தவன், தனது சாவியைப் போடவுமே, அறையின் கதவு தானாகத் திறந்துக் கொள்ள, உள்ளிருந்து,

“ஹாப்பி பர்த்டே டூ யூ..” என்ற குரல்கள் கேட்க, அவசரமாக கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தவள், அங்கிருந்த நிர்மலா, வினய், ராதா மூவரையும் பார்த்து, வேகமாக ஓடிச் சென்று, “ஹே.. நீங்க எல்லாம் இங்க என்ன பண்றீங்க? எப்போ வந்தீங்க?” என்று கேட்டுக் கொண்டே, நிர்மலாவைக் கட்டிக்கொண்டு,

“நீங்க எல்லாரும் என்ன சப்ரைசா வந்திருக்கீங்க? ராதாக்கா கூட சொல்லல.. இதெல்லாம் அர்ஜுன் வேலையா?” என்று கேட்க,

“என்னோட செல்லப் பொண்ணுக்கு பர்த்டே.. நான் வராம இருப்பேனா?” என்று கேட்டபடி, அவளது கன்னத்தில் முத்தமிட்டவர்,

“ஹாப்பி பர்த்டே ராஜாத்தி.. எப்பவுமே சந்தோஷமா இருக்கணும்..” என்று வாழ்த்த, அவரது காலில் பணிந்து எழுந்தவளை,

வினய் தோளோடு அணைத்து, “ஹாப்பி ஹாப்பி பர்த்டே மை டியர் லிட்டில் சிஸ்டர்.. காட் ப்ளஸ் யூ..” என்றவன், அவளது தலையை செல்லமாக கலைக்க,

“தேங்க்ஸ் மை டியர் ப்ரதரே..” என்றவளை அணைத்து விடுவித்த ராதா,

“என் தம்பியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, புருஷன் பிள்ளைக் குட்டிங்களோட சந்தோஷமா இருக்கணும்.. என்னைக்குமே சந்தோஷமா இருக்கணும்..” என்று வாழ்த்தவும், சிவத்மிகாவின் பார்வை நாணத்துடன் அர்ஜுனை நோக்க, அனைவரின் வாழ்த்துக்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவன், மெல்ல அவள் அருகே நெருங்கினான்.

அவளது கையை எடுத்து தனது கையில் வைத்துக் கொண்டவன், “மெனி.. மெனி மோர் ஹாப்பி ரிட்டர்ன்ஸ் ஆஃப் தி டே மை லிட்டில் ஸ்வீட் ஹார்ட்..” என்றபடியே, அவளது கையை மென்மையாகப் பிடித்து, அவளது கண்களைப் பார்த்துக் கொண்டே, அவளது விரலில் மோதிரத்தை அணிவிக்க, ‘ஹே’ என்ற கூச்சலுடன் வினய் அதை புகைப்படம் எடுத்துக் கொண்டான்.

தனது கையைத் தூக்கி விரலைப் பார்த்தவள், அர்ஜுனைப் பார்க்க, “இதை என் கையில போடு..” என்று அதன் ஜோடி மோதிரத்தை அவள் கையில் கொடுத்து, தனது கையை நீட்டவும்,

“தேங்க்ஸ் மை ஸ்வீட் ஹார்ட்..” என்றவள், அதை அணிவித்து, அவனது கையை எடுத்து தனது கன்னத்தில் பதித்துக் கொண்டவளைத் தன்னுருகே இழுத்துக் கொள்ள, நிர்மலா இருவரையும் மனம் நிறைந்து பார்த்துக் கொண்டிருந்தார்..

“வா கேக் கட் பண்ணலாம்..” என்று நிர்மலா அழைக்க, ராதாவும் வினயும் அர்ஜுன் ஆர்டர் செய்திருந்த கேக்கைக் கொண்டு வந்து வைக்க, அந்தக் கேக்கைப் பார்த்தவள், கண்களை விரித்தாள். சிவப்பு நிற இதய வடிவிலான கேக்கில், அழகாக வெள்ளை பூக்களைத் தாங்கி இருந்தது அந்த இரண்டு லேயர் கேக், அதைப் பார்த்தவள், கண்கள் கலங்க அர்ஜுனைத் திரும்பிப் பார்த்தாள்.

அர்ஜுன் அவளது கண்களைத் துடைத்துக் கொண்டே, கத்தியை அவளது கையில் கொடுக்க, “சிவாம்மா.. இங்க பர்த்டே டைம்ல கண் கலங்கக் கூடாது.. சந்தோஷமா கட் பண்ணு..” நிர்மலா சொல்லவும், அர்ஜுன் அவளது கைப் பிடித்து கேக்கின் அருகே வைக்கவும், அவள் கேக்கை கட் செய்ய, அனைவரும் மீண்டும் பிறந்த நாள் பாடலைப் பாடி வாழ்த்தினர்.

முதல் துண்டை எடுத்து நிர்மலாவிற்கு கொடுத்தவளின் நெற்றியில் இதழ் பதித்தவர், அவளை வாழ்த்திவிட்டு, அர்ஜுனைப் பார்க்க, அர்ஜுன் அவளுக்கு ஒரு துண்டை எடுத்து ஊட்ட வர,

“சிவாம்மா.. நீயும் அவனுக்கு கொடு..” என்று வினய் சொல்லவும், இருவரும் ஒரே நேரம் ஊட்ட வரவும், ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு, கையோடு கை பிணைந்து, தங்களது கையில் இருந்த கேக்கையே உண்ண, ‘ஹே.. சூப்பர்’ என்று குரல் கொடுத்துக் கொண்டே, வினய் அனைத்தையும் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.

“டேய்.. அப்படியே சாப்பிடுங்க.. நான் பூமராங்கா எடுக்கறேன்..” என்ற வினய், ஒவ்வொரு நிகழ்வையும் அழகாக தனது செல்போனில் பதித்துக் கொண்டான்.

அதே போலவே அர்ஜுனின் நெஞ்சின் மீது அவளைக் கை வைக்கச் சொன்ன வினய், அவனது விரலில் இருந்த மோதிரம் தெரியும்படி, அவளது கை மீது கை வைத்துக் கொள்ளச் சொல்லி புகைப்படம் எடுத்துக் கொள்ள, இருவரும் அவன் சொல்லும்படி போஸ் கொடுக்க, நிர்மலாவும், ராதாவும் அவர்களைப் பார்த்து ரசித்தனர்..

ஒரு பெட்டியை கொடுத்த அர்ஜுன், “உன்னோட பர்த்டேக்கு..” என்று சொல்லவும், அதை ஆசையாக வாங்கிப் பிரித்துப் பார்த்தவள், அதில் இருந்த புடவையைப் பார்த்து வினயைப் பார்க்க,

“இப்படி தான் சாரீ வேணும்னு அய்யா உத்தரவு..” என்று கிண்டல் செய்தவன், அர்ஜுனிடம் போனைக் கொடுத்துவிட்டு,

“ராதா வரியா பீச்சுக்கு போயிட்டு வரலாமா?” என்று கேட்க,

“எனக்கு தூக்கம் வருது.. காலையில போகலாம்..” என்ற ராதாவைப் பார்த்தவன்,

“சரி.. காலையில எழுப்பறேன்.. நாம சன்ரைஸ் பார்க்கப் போகலாம்..” என்று சொல்லிவிட்டு,

“அம்மா.. நீங்க இந்த ரூம் எடுத்துக்கோங்க. வாங்க..” என்று அழைத்துச் சென்றவன், நிர்மலாவை ஒரு அறையில் விட்டுவிட்டு, அருகில் இருந்த ஒரு அறைக்குச் செல்ல, அர்ஜுனைப் பார்த்துக் கொண்டே சிவாத்மிகா நின்றாள்.

அவர்களுக்கு தனிமை அளிக்க எண்ணிய வினய், “அந்த ரூமுக்கு போ..” என்று கைக் காட்ட, சிவத்மிகா தங்கி இருந்த அறைக்குள் ராதா நுழையவும், சில நிமிடங்கள் அர்ஜுனைப் பார்த்துக் கொண்டே சிவாத்மிகா நின்றாள்.  

அவன் புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்கவும், அவனை நெருங்கியவள், இறுக அணைத்து, அவனது இதழில் இதழ் பதித்தவள், அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டு, அவனது காலில் ஏறி நிற்க, அர்ஜுன் அவளை அணைத்துப் பிடித்துக் கொண்டான்.  

“எனக்காக இவ்வளவு பார்த்து பார்த்து செஞ்சீங்களா? நான் உங்களுக்கு அவ்வளவு ஸ்பெஷலா? நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா? இது போல ஒரு பர்த்டேவ நான் கொண்டாடினதே இல்ல.. இது தான் ஃபர்ஸ்ட் டைம்..” என்றவளின், இதழ்களை இதழ்கள் கொண்டு உரசியவன்,

“இனிமே எல்லா பர்த்டேவும் இப்படித் தான் இருக்கும்.. கல்யாணம் ஆன அப்பறம் இதை விட சந்தோஷமா.. காலையில நாம சன்ரைஸ் பார்த்துட்டு ஸ்விம் பண்ணப் போகலாம்.. அப்பறம் எல்லாரும் ஒரு நாள் ஜாலியா டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு மதியம் போல வீட்டுக்குப் போலாம்..” என்றவன், அவளது நெற்றியில் அழுந்த முத்தமிட்டு,

“குட் நைட்.. அன்ட் வெரி ஹாப்பி பர்த்டே மை ஸ்வீட் லட்டு..” என்றவன், அவளது கழுத்தின் அடியில் இதழ் பதித்து,

“இதுக்கும் மேல நான் இங்க இருந்தா அப்பறம் நான் நல்ல பையனா இருக்க மாட்டேன்.. அந்த லைன் க்ராஸ் பண்றதுக்குள்ள நாம தூங்கப் போகலாம்..” என்றவன் அவளது சிவந்திருந்த கன்னத்தைத் தட்டி விட்டு அறைக்குச் செல்ல, சிவாத்மிகா அவனைப் பார்த்துக் கொண்டே, பாத்ரூமில் சென்று ஒரு குளியல் போட்டுவிட்டு, ராதா எடுத்துக் கொண்டு வந்த உடையை, அணிந்துக் கொண்டு, படுக்கையில் விழுந்தவளுக்கு உறக்கம் வர மறுப்பதாய்..

அறைக்குச் சென்ற அர்ஜுன், அன்று இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன், அவளது பிறந்த நாள் வாழ்த்தை, தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் முதலில் பதிந்து, அடுத்து தங்களது விரலுடன் விரல் கோர்த்து மோதிரம் தெரியும் படியாக வினய் எடுத்திருந்த புகைப்படத்தைப் போட்டு, அடுத்ததாக இருவரும் கையோடு கை கோர்த்து கேக் சாப்பிடும் புகைப்படத்தையும் போட்டு, “Flowers, smiles and laughter are waiting for you.. you are the love of my life my sweet heart.. Happy Birthday” என்று போட்டு ஒரு இதயம் துடிப்பது போல GIF ம் பதிந்துவிட்டு, சிவாத்மிகாவின் நினைவுகளுடன் நிறைவாக கண்களை மூடினான்..

அதிகாலையிலேயே ராதாவை போன் செய்து எழுப்பிய வினய், அவளை அழைத்துக் கொண்டு பீச்சின் அருகே சென்றான்.. அந்த அதிகாலை விடிந்தும் விடியாத வேளையில், அலைகளின் நிசப்தத்தைத் தவிர எந்த சத்தமும் இல்லாமல் போகவும், ராதாவிற்கு நெஞ்சை எதுவோ செய்ய, அவனை ஒட்டி நடந்தாள்.

இது போல ஒரு வேளையில் தான், தான் தற்கொலை செய்துக் கொள்ள, கடலுக்குச் சென்றது நினைவு வரவும், அவளது கை தானாக எழுந்து, வினயின் கையைப் பிடித்துக் கொண்டது. வினய் அவளைத் திரும்பிப் பார்க்க, அவளது முகத்தில் இருந்த இறுக்கத்தைப் பார்த்தவன், அவளைத் தனது தோளோடு அணைத்துக் கொள்ள, ராதா அவனது முகத்தைப் பார்த்தாள்.

மெல்ல அவளை அழைத்துக் கொண்டு அலையின் அருகே வந்தவன்,  “இங்கப் பார்த்தியா? அந்த சூரியன் அந்த மேகத்தை கிழிச்சிக்கிட்டு வெளிய வரது எவ்வளவு அழகா இருக்குள்ள? இதெல்லாம் இயற்கையோட ஓவியம்..” என்று ரசித்துச் சொன்னவன்,

“அதே போல தான் நமக்கும்.. சில நாள் இருட்டா இருந்தா.. சில நாள் ஒளிமயமா இருக்கும்.. நம்ம வாழ்க்கையும் அப்படித் தான்.. என்னைக்குமே ஒரே மாதிரி இருக்காது.. உன்னோட அந்த வாழ்கை இப்போ இருக்கற இருட்டு போல.. உன்னோட இருளை கிழிச்சிக்கிட்டு சூரியன் வந்தாச்சுன்னு நினைச்சிக்கோ.. இந்த கடலைப் பார்த்து நீ கஷ்டப்படற இல்ல.. நான் இதுல இன்னொரு பக்கம் சொல்லவா?”  இதமாக அவன் கேட்க, அவள் கேள்வியாக அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.   

“அந்த வீட்ல நீ கஷ்டப்பட்டுட்டு இருந்த இல்ல. உன்னை யாரும் மனிஷியா கூட மதிக்கலை தானே..” என்று அவளது நாடியைப் பிடித்து மென்மையாகக் கேட்க, கண்கள் கலங்க அவள் தலையசைக்கவும்,

“சரி.. சிவா உன்னை எப்படி நடத்தறா?” அவன் அடுத்த கேள்வியைக் கேட்க,

“என்னை அவ சொந்த அக்கா போல பார்த்துக்கறா.. என் மேல அவ்வளவு அன்பை வச்சிருக்கா..” மெல்லிய விசும்பலுடன் அவள் சொல்ல,

“அவ தான் உன் வாழ்க்கையோட விடியல்.. அவளை நீ எங்க சந்திச்ச? இது போல ஒரு கடற்கரையில தானே.. உன் வாழ்க்கையில இனிமே சந்தோஷம் மட்டும் தான் இருக்கணும்ன்னு உன்னை விதி அங்க கொண்டு வந்து விட்டுச்சு.. யோசி.. சிவாவைப் பார்த்த, இப்போ என்னைப் பார்த்து இருக்க.. அதுக்காகவே நீ இந்த கடற்கரைக்கு இனிமே சந்தோஷமா தான் வரணும்..” என்று சொன்னவன், மென்மையாக அவளது நெற்றியில் இதழ் பதிக்க, விழிகள் விரிய, கண்களில் கண்ணீர் வழிய அவள் வினயைப் பார்க்க,

“எனக்கு அர்ஜுனும் அம்மாவும், இப்போ சிவாவும் தவிர சொந்தம்ன்னு யாருமே இல்ல.. என்னோட சரி பாதியா.. என்னை சொந்தம் கொண்டாட வரியா?” அவளது கண்களைப் பார்த்துக் கொண்டே வினய் கேட்கவும், ராதா அதே நிலையில் அதிர்ந்து நிற்க,

“இப்போ அவசரமா சொல்லணும்ன்னு இல்ல.. ஆனா.. அர்ஜுன் சிவா கல்யாணத்துக்குள்ள சொல்லிடு.. சரியா?” என்றவன், அவளை அதே போலவே தோளோடு அணைத்து தன்னோடு சேர்ந்து பிடித்துக் கொள்ள,

“நான் என்னைப் பத்தி சொல்லி இருக்கேன் இல்ல.. நான் எப்படி?” என்று அவள் திக்கித் திணறிக் கேட்க, அவளது உதட்டின் மீது விரலை வைத்தவன், அங்கு உதயமாகிக் கொண்டிருந்த சூரியனை அவளுக்குக் காட்ட, அந்த அழகான காட்சியைக் கண்டவள், அவனது தோளின் தலை சாய்த்துக் கொண்டாள்.

சிவாத்மிகாவின் காலைப் பொழுது மிகவும் அழகாக விடிந்தது.. வினய் எழுந்துக் கொள்ளும் பொழுதே விழித்துக் கொண்ட அர்ஜுன், அவசரமாக தன்னை சுத்தம் படுத்திக் கொண்டு, சிவாத்மிகாவின் அறைக்குச் சென்றான். அங்கு அவள் நிர்மலமாக உறங்கிக் கொண்டிருக்கவும், அவளது தலையை மெல்ல வருடியவன், அவளது நெற்றியில் இதழ்களைப் பதித்து, “ஹாப்பி பர்த்டே மை டியர் கண்ணம்மா..” என்று அவளது காதில் வாழ்த்தவும்,

அவனது ஸ்பரிசத்தில் மெல்ல கண் விழித்தவள், புன்னகையுடன் “தேங்க்ஸ் மை க்யூடு..” என்று அவனது நெற்றியில் இதழ் பதித்தவள்,

“இன்னைக்கு நான் கடைக்கு லீவ் சொல்லவே இல்லையே.. நீங்க பாட்டுக்கு திடீர்னு இன்னைக்கு இங்க ஸ்டேன்னு பிளான் பண்ணி இருக்கீங்க.. நான் ப்ரியாவுக்கு மெசேஜ் அனுப்பிட்டு குளிச்சிட்டு வரேன்..” என்று அவள் எழவும்,  அவளது காலை மெல்லப் பற்ற,

“என்ன அஜ்ஜு இது காலையிலேயே விளையாட்டு.. காலை விடுங்க..” என்று அவள் உருவிக் கொள்ள முயல,

“கொஞ்சம் பேசாம இருடி பட்டு..” என்றவன், தனது பாக்கெட்டில் இருந்த ஒரு மெல்லிய கொலுசை எடுத்து அவளது காலில் போட்டு விட, அதைப் பார்த்தவள், திகைப்புடன், அவனது தலையைப் பிடித்து நிமிர்த்த, அவளது கையிலேயே இதழ் பதித்தவன்,

“நேத்து கோவில்ல புடவை கட்டி இருந்தியா.. அப்போ.. கால்ல கொலுசு இருந்தா நல்லா இருக்கும்ன்னு தோணிச்சு.. அது தான் வாங்கிட்டேன்..” என்றவன், அவளது பாதத்தை மெல்ல பிடித்துவிட்டு, அவளது நெற்றியில் இதழ் பதிக்க, அவனை இறுக கட்டிக் கொண்டவள், அவனது மார்பில் சாய்ந்து கதறத் துவங்கினாள்.

“என்னடா ஆச்சு?” என்று அவளது தலையை மெல்ல வருடிக் கொண்டே, அவளது முகத்தை நிமிர்த்த முயல,

“எனக்கு.. எனக்கு சின்ன வயசுல இருந்தே கொலுசு போட்டுக்கணும்ன்னு ரொம்ப ஆசை.. அப்பறம்.. அப்பறம் பெருசாக ஆக ‘சீ.. சீ.. இந்தப் பழம் புலிக்கும்ங்கறது போல.. கொலுசு போட்டா அனாவசியா சவுண்ட் வரும்னு அதைப் பத்தி யோசிக்கிறதே விட்டுட்டேன்.. இப்போ நீங்க வாங்கித் தந்து இருக்கீங்க..” என்றவளை இறுக அணைத்துக் கொண்டவன்,

“உனக்கு தான் நான் எல்லாமா வரேன் இல்ல.. இனிமே உன்னை எதுக்குமே ஏங்க விட மாட்டேன்டி என் செல்லம்..” என்று அவளை சமாதானப்படுத்தியவன், அவளது முகத்தை துடைத்து விட்டு, அவளது கைப் பிடித்து எழுப்பினான்.

“சீக்கிரம் கிளம்பி வா.. நாம ரிலாக்ஸ்ட்டா பீச்சுக்கு போயிட்டு.. அப்படியே ஸ்விம்மிங் பூல்ல கொஞ்சம் நேரம் ஆடிட்டு.. பிரேக்பாஸ்ட் சாப்பிட்டு வரலாம்.. இன்னிக்கு வேலையைப் பத்தி யோசிக்காதே.. நேத்திக்கு கிளம்பறதுக்கு முன்னலாயே ப்ரியாகிட்ட சொல்லிட்டு தான் உன்னைத் தள்ளிட்டு வந்தேன்..” என்றவனின் கன்னத்தில் எம்பி முத்தமிட்டவளை,   

“ஓடு.. ஓடு.. வேகம் வேகம்..” என்று அவளை பாத்ரூமின் அருகே தள்ளிக் கொண்டு சென்று நிறுத்திவிட்டு, அறையை விட்டு வெளியில் செல்ல, நிர்மலா ஓய்வாக அங்கிருந்த நாற்காலியில் கடலைப் பார்த்தபடி அமர்ந்தவரைப் பிடித்து எழுப்பியவன்,

“அவ ரெடி ஆகி வந்த உடனே நாம தண்ணி கிட்ட போகலாம்.. சும்மா இங்கயே உட்கார்ந்துக்கிட்டு இருக்காதீங்க.. மத்த நாள்ல எல்லாம் நீங்க வீட்டு உள்ளேயே இருக்கீங்கன்னு தானே இங்க கூட்டிட்டு வந்தது.. உங்களை மட்டும் இங்க விட்டுப் போனா உங்க மருமக என்னை பிச்சிடுவா..” அர்ஜுன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அங்கு வந்த சிவாத்மிகா,

“அம்மா நீங்க ரெடியா? வாங்க நாம அப்படியே கொஞ்ச நேரம் தண்ணியில ஆடிட்டு வரலாம்..” என்று அழைக்கவும், அர்ஜுன் நிர்மலாவைப் பார்த்து சிரிக்க, அவளது அருகில் வந்தவர், மீண்டும் அவளுக்கு வாழ்த்து தெரிவித்து,

“போகலாம் வாங்க..” என்று இருவருடனும் செல்ல, அங்கு வினய்யின் தோளில் சாய்ந்திருந்த ராதாவைப் பார்த்த சிவாத்மிகா,

“அஜ்ஜு அங்க பாருங்க..” என்று கூவியபடி அர்ஜுனுக்கு அவர்களைக் காட்ட,

“அம்மா உங்க செல்லப் பையன் உங்க ஆசிர்வாதத்தோட ராதா அக்கா மனசை மாத்திட்டான் போல… அப்போ இனிமே சீக்ரெட்டா இல்லாம அவங்க கல்யாண வேலையை சேர்த்தே பார்த்துடலாம் போல இருக்கே..” அர்ஜுன் கேலி செய்ய,

“என்னது? சீக்ரெட்டா செஞ்சீங்களா?” என்று கேட்டு அவள் வாயைப் பிளக்கவும், அவளது இதழ்களை மூடியவன்,

“ஆமா.. வினய்க்கு ராதாவை ரொம்ப பிடிச்சு இருக்கு.. அவனுக்கு அவன் சண்டைக் கோழி தான் வேணும்னு சொல்லிட்டான்.. அது தான் ராதாவும் ஓகே சொன்னா ரெண்டு கல்யாணத்தையும் ஒண்ணா முடிச்சிடலாம்ன்னு நான் சொன்னேன்.. அதைத் தான் இப்படி சொல்றான்..” நிர்மலா சொல்லவும்,

“அம்மா.. அம்மா. நிஜமாவா.. வாவ்.. இது தான் என்னோட பெரிய பர்த்டே கிஃப்ட்.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. இப்போ எனக்கு துள்ளிக் குதிக்கணும் போல இருக்குத் தெரியுமா?” என்று அவரது தோளில் முகம் பதித்தவள், சந்தோஷத்துடன் அவர்கள் அருகில் செல்ல நகர, அவளது கையைப் பிடித்து இழுத்த அர்ஜுன், அவளைத் தன்னுடன் இழுத்துச் சென்றான்.

“அஜ்ஜு.. அஜ்ஜு.. நிஜமாவா?” அவள் மறுபடியும் மறுபடியும் கேட்க,

“ஆமாடா.. வினய்க்கு கொஞ்ச நாளா சண்டை போட ரொம்ப பிடிச்சு இருக்காம்.. அது தான்.. ராதா அக்கா தான் என்ன சொல்லுவாங்களோன்னு கொஞ்சம் எல்லாருக்குமே டென்ஷனா இருந்தது.. இப்போ அவங்களை இப்படிப் பார்த்து ரொம்ப சந்தோஷமா இருக்கு.. அதுனால கல்யாண வேலையை சேர்த்தே பார்த்துடலாம்.. வினய் வரட்டும் பேசலாம்..” அர்ஜுன் சொல்லிக் கொண்டிருக்க, அவர்களைப் பார்த்துவிட்டு, வினயும் ராதாவும் அவர்கள் அருகே வரவும்,

“வினய் அண்ணா.. சோ.. சோ ஹாப்பி.. என்கிட்டே ரெண்டு பேரும் இதைச் சொல்லவே இல்லையே.. நான் கோபமா இருக்கேன்..” என்று சந்தோஷத்தில் சண்டையிட,

“பர்த்டே பேபி இப்படி கோவிச்சுக்கக் கூடாது.. இப்போ தானே ஏதோ டிக்கெட் நமக்கு கன்ஃபார்ம் ஆகற போல இருக்கு..” வினய் ராதாவைப் பார்த்துக் கொண்டே கேலியாகச் சொல்ல,

“டிக்கெட்டா.. நான் டிக்கெட்டா?” என்று கேட்டவளைப் பார்த்து சிரித்த வினய்,

“இல்ல.. சண்டைக் கோழி.. என்னோட சண்டைக் கோழி..” என்று கேலி செய்ய, ராதா அவனை அடிக்க துரத்தத் துவங்கினாள்.  சிரிப்பினூடே அந்த நாளை மகிழ்ச்சியாக கழித்தவர்கள், மாலையில் வீட்டிற்கு கிளம்பும் பொழுது, அர்ஜுன் கொடுத்த புடவையை சிவத்மிகா கட்டிக் கொண்டு வர,  

“மை ஸ்வீட் லிட்டில் ப்ரெட்டி டால்..” என்று கொஞ்சியவன், அவளை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்று, அந்த நாளை இதுவரையில் கழிந்த நாட்களிலேயே இனிமையானதாக அர்ஜுன் மாற்றி இருக்க, சிவாத்மிகா அவனது அன்பில் கரைந்து போனாள்.