என்னுயிர் குறும்பா
என்னுயிர் குறும்பா
குறும்பா 22
தன் கன்னத்தில் கைவைத்தவாறு சித் அழுதுகொண்டிருந்தவன், அதிர்ச்சியோடு நிற்க, அவனருகில் கன்னத்தில் வைத்தவாறு ஜானுவும் நின்றாள்.
ஆர்.ஜேவின் வலிய கரம் அவளின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது… ரகுவும் சரி ஜகதீஸ்ஸூம் எதுவும் கூறாது அந்த மேடையில் ஒருவித சங்கடத்துடனே,நின்றிருந்தனர்..
டான்ஸ் ஷோவில் சித் தேர்வானது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தாலும் சித்திற்கு மட்டும் ஒருவித பயம் ஜானுவை நினைத்து உள்ளுக்குள் இருக்க.. முகத்தில் அவனது பயம் தெரிய ஆரம்பித்தது….
ரகுவிலிருந்து சிவாளி வரைக்கும் பேசி பார்த்துவிட்டனர், அவனது பயம் குறைந்த பாடு இல்லை.. சனி, மற்றும் ஞாயிறு இரவு ஒளிபரப்பாகும் அந்த ஷோ, காலையிலே சூட்டிங் எடுக்க இருந்தனர்.,
அன்று சனிக்கிழமை முதன்முறையாக அவன் டான்ஸ் ஷோவில் கலந்துக்க வேண்டும்… என்பதால், ஜானவிக்கு வேலை காலையில் இருப்பதால் மூவரும் கிளம்பிக்கொண்டிருந்தனர்.
சக்தி, சிவாளி, வெங்கி, மூவரும் வொன்டர்லேன்ட் செல்வதாகவும் சித்தையும், ரகுவையும் அழைத்து போவதாகவும் பொய் சொல்ல, அவளுக்கும் முக்கியமான வேலை இருப்பதால் அவர்களை மட்டும் அனுப்ப ஒத்துக்கொண்டாள்..
அவனோ, ஜானுவிடம் ப்ளஸ் வாங்க வேண்டும்.. ஆனால் ஜானுவுக்கு தெரிய கூடாது என்று யோசித்தவன்…
தன் தலையை சீவியவாறே அவளை மோதி, சீப்பை அவளது காலடியில் போட்டு சாஷ்டாங்கமாய் விழுந்தான் சித்…
ஜானு அவனை எழ வைத்தாள்.. ” என்ன சித் காலுல விழுகிற.. ?”
” ஜானு, சீப் கீழ விழுந்திடுச்சு அதை எடுக்க… ” என வழிந்தவனை.. ” சரி சரி கால் விழுந்துட்ட, நல்லாரு மகனே.., ” என ஆசிர்வதித்தாள்.
” நேத்து பார்த்த சூர்யவம்சம் படம் எப்க்ட் இருக்குமோ ! பேராண்டி இலைமறைகாய் உங்கம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்ட, நடத்து நடத்து…. “
” ரகு, அடுத்து உன் கால் தான் விழுக போறேன்… ஆனால் என்னத்தை போடன்னு தான் யோசிக்கிறேன்… “
” டேய்,. பேராண்டி ! என் ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் இருக்கு அதற்காக, என் காலை பதம் பார்த்திடாத, மீ பாவம்,.. ” என அஞ்ச..
” சரி மேன்… பொழச்சு போ ” என்றான்..
சாமியறையில் பூஜை செய்துவிட்டு தன் மகனுக்கு விபூதி குங்குமம் இட்டு… ” ஆன்டி , அங்கிள் , தொல்லை பண்ண கூடாது…. சமத்தா விளையாடனும், பத்திரமா போயிட்டு வாங்க ” என்று அவர்களை வழியனுப்பிவைத்தவள், மருத்துவமனைக்கு விரைந்தாள்.
அனைவரும் கிளம்பி, டான்ஸ் ஷோ நடக்கும் அந்த சேனிலின் ஆபீஸ்ஸிற்கு விரைந்தனர்…
அங்கே பயத்தோடு நின்றிருந்தவன், ஆர்.ஜே வை கண்டதும் கொஞ்சம் குறைந்தது, தனியாக அழைத்து சென்றவன்,. ” சித்,. நீ எதற்கும் பயப்பிடாத.. பிடித்த விஷயம் செய்யும் பொழுது அங்க பயம் எதற்கு.. நீ கேஷ்வலா வீட்டுல க்ளாஸ்ல எப்படி ஆடுவீயோ ஆடு… எந்த இடம் எங்க இருக்க எதையும் பார்க்காதே… உன் டார்கெட் டான்ஸ் அதை மட்டும் பலோவ் பண்ணு, உன்னை சுத்தி யாரு இருக்காங்க இல்லை எதையும் பார்க்காத.. பாடலை உள்வாங்கி ரசிச்சு ஆடு… சரியா.. எது நடந்தாலும் ஐ யம் ஆல்வேஸ் வித் யூ மை பாய்.. ” என்று நெற்றியில் இதழ் பதித்தான்.
அவனது காலிலும் விழுந்தான்.. ” ஆர்.ஜே… ஜானு கிட்ட சொல்லாம வந்தது கஷ்டமா இருக்கு… எல்லாரையும் போல அவளும் எங்ரைஜ் பண்ணணும் ஆசை படுறேன்…, ஆனா… ” என முகம் சோகத்தை கொள்ள..
” ஓ.,. சித்.. இப்ப தான் ஆட ஆரம்பிச்சிருக்கோம். சீக்கிரமா உன் டான்ஸ் பார்த்து உன் ஜானுவே பாராட்டுவாங்க சரியா மை பாய் நீ.. பீல் பண்ணலாமா ? ஹாப்பீயா இருக்கனும்.. ” என்றவன், அவனது நெற்றியில்மீண்டும் இதழ் பதிக்க.. அவனை கட்டிக்கொண்டான்
” ஆர்.ஜே நீ இல்லைன்னா இதெல்லாம் சித்துக்கு ஒரு கனவாய் போயிருக்கும்., உனக்கு எப்படி நன்றி சொல்ல தெரியலைடா “
” என்னடா,.. என் கடமையை தான் செய்தேன்… சித்தோட கனவை நிறைவேற்றுவது என் கடமை., இதுக்கு போய்… ” என்றதும் ஜகதீஸ்க்கு சிறு சந்தேகம் வர, அதை கேட்டுகொள்ளவில்லை.
ரகுவும் கையெடுத்து கும்பிட, ” ஐயோ , அங்கிள் ஜகாகிட்ட சொன்னததான் உங்களும்… இதெல்லாம் வேணாம் என்றான்..”
” சித்… சித்… ” அவனை வளைத்தனர்சிவாளியும்,வைஷூவும்..
” சித்.. நீ சூப்பரா டான்ஸ் ஆட, நான் ப்ரேயர் பண்ணி உனக்கு கயிறு எடுத்துட்டு வந்திருக்கேன் ” சிவாளி கூற..
” நானும் தான் சித்… நீ கைகாட்டு… ” என்றாள் வைஷூ.
” நான் தான் முதல் கட்டுவேன்.. ” சிவாளியும்.., ” இல்லை நான் தான் முதல் கட்டுவேன்.. ” என வைஷூவும் சண்டை இட, ” ஓ.. காட், சண்ட போடாதீங்க.., எனக்கு ஒருக்கை மட்டுமில்ல, இரண்டு கை இருக்கு… ” என நீட்ட கட்டினார்கள்,
” சித்… யாரு இந்த டூ ஏன்ஜல்ஸ்…” என பீட்டர் கேட்க, ” இவங்க இரண்டு பேரும் என்னுடைய ஹேள் ப்ரண்டு, சிவாளி , வைஷூ… “
” எஸ் எஸ்.., சித் ஆல் தி பெஸ்ட் ” என கன்னத்தில் இதழ் பதித்தாள் வைஷூ, அவளை தொடர்ந்து சிவாளியும் வைக்க.. “
” பாஸ்… ” என பீட்டர் அதிர, ஆர்.ஜேக்கும் பேரதிர்ச்சிதான்.. ” அடப்பாவி…. நீ பாஸை மிஞ்சிடுவ போல… பாஸ் பார்த்தீங்களா நீங்களும் தான் இருக்கீங்களே.. முத்தம் கொடுத்தா குழந்தை பொறக்குமான்னு… ஆன அவன் ஈஸியா முத்தம் வாங்கிட்டான்.. இப்ப இருக்க பிள்ளைகளை அட்வான்ஸ்ஸா போகுது.. நீங்க இன்னும் நைன்டீஸ் இருங்க.. ” என்றதும்..
” டேய்… குழந்தைங்க முன்னாடி மானத்தை வாங்காதடா.. “
நேரம் செல்ல,.. ப்ரோகிராமை ஆரம்பித்தனர்.. ஒவ்வொரு குழந்தையாக ஆட ஆரம்பித்தனர்.. சித்தும் தனது திறமையை ஆடிக் காமித்தான்… அனைவரும் எழுந்து நின்று கைத்தட்ட, ரகுவிற்கு கண்கலங்கியது…
அதே நேரம் இங்கு அவள் வேலை பார்த்துகொண்டிருந்தாள்.. சரியாக சைன்ஸ் டீச்சர்… வயிறு வலி காரணமாக அந்த மருத்துவமனைக்கு வந்தார்.. ஜானுவே அவரை பரிசோதித்துவிட்டு மாத்திரை ஊசி என எழுதி கொடுத்தாள்..
” நீங்க சித் மம்மி தானே.. ” என்றதும், ” எஸ் மேம்…”
” நான் சித் சைன்ஸ் டீச்சர் ஞாபகம் இருக்கா ? ”
” இருக்கு… மேம்… ” என்றாள்.. அவளுக்கும் சித்தை போல அந்த சைன்ஸ் டீச்சரை பிடிக்கவில்லை, தன் மகனை குறைச்சொல்லுபவரை எப்படி பிடிக்கும்.
” ஆமா… இன்னைக்கு சித்துக்கு, டான்ஸ் ஷோ இருக்கே நீங்க போகலையா ?… “
” சித்துக்கு டான்ஸ் ஷோ வா அவன், வொன்டர்லேண்ட் போயிருக்கான் என் ப்ரண்ட் பேமிலியோட.. “
” என்ன சொல்லுறீங்க.. உங்களுக்கு விசயம் தெரியாத.. ” என்றவள் அனைத்தையும் கூற.. அதிர்ந்து போனாள்.. ” இந்நேரம் டான்ஸ் ஷோ சூட்டிங் போயிட்டு இருக்கும்… ஒ.கே பாய் மேம்…” என அவள் கிளம்ப அவள் இன்னும் அதிர்ச்சியில் இருக்க,
தனது போனில் சேனல் பெயரை போட்டு அட்ரஸை கண்டுபிடித்து மருத்துமனையில் சொல்லிவிட்டு காரை எடுத்து கொண்டு கிளம்பினாள்…
அனைத்து குழந்தைகளும் ஆடி முடிக்க, பெஸ்ட் டான்ஸ்ர் ஆப் தி டே என்று சித்துவையே தேர்ந்தெடுத்தனர்.
அவனை அனைவரும் பாராட்டிக்கொண்டிருந்தனர்.. வெளியே ஜானு வந்தவள், உள்ளே செல்ல அனுமதிகேட்க, அவர்கள் யாரும் விடவே இல்லை… தான் சித் அம்மா என்று கூறியதும் விட்டனர்…
செட்டினுள்ளே வந்தவள்… ” சித்… ” என்று மேடையேற தன்மொத்த கோபத்தையும் சித்தின் கன்னத்தில் அடியாய் இறக்கினாள்…
அவள் அடித்த அடியில் கீழே விழுந்தான்… ” என்னை ஏமாத்திட்ட சித் நீ… டான்ஸ் ஆட மாட்டேன் , எனக்கு ப்ராமிஸ் பண்ணிட்டு இங்க இந்த டான்ஸ் ஷோவில் கலந்து ஆடி இருக்கிற… உன் மேல எவ்வளவு நம்பிக்கை வைத்தேன், இப்படி என்னை ஏமாத்திட்டியே… ஏன் சித் பொய் சொன்ன… “
” ஜானு… ” என்றவனுக்கு மேல் பேச்சு வராமல் இருக்க.. அவனை பிடித்து உலுக்கியவள், ” சொல்லு சித்… இந்த ஜானு வார்த்தையை மதிக்க மாட்டேன்னு, சொல்லாம சொல்லிட்டேல, எப்படி சித், என்னை, உன் ஜானுவை ஏமாத்த தோணுது…?”
” ஜானு, நான்… “
” என்ன ரீசன் சொல்ல போற சித்… நான் ஆடலை பார்க்க வந்தேன் என்றா.. ” இன்னும் ஒரு முறை அவனை அடிக்க செல்ல, அவளது கைப்பற்றி, தடுத்தான்..
” என்னடி உனக்கு ப்ரச்சனை நானும் பார்த்துட்டே இருக்கேன், ஓவரா பேசிட்டே போற, எதுக்கு சித்தை அடித்த, அவன் பொய்சொல்லல, ஏமாத்தவுமில்லை, அவன் வேணான்னு தான் சொன்னா, நான் தான் இந்த ஷோவில் ஆட சொன்னேன்… யாரோ ஒரு டான்ஸ் மாஸ்டர் பண்ண தப்பினால், எல்லா டான்ஸ் மாஸ்டரும் தப்பானவங்க, டான்ஸ்ஸையே வெறுக்கிறது எந்த விதத்துல நியாயம் டி… “
” சித்… என் மகன், அவன் நான் சொல்லறதை கேட்கனும், கேட்பான். நீங்க யாருங்க, அவனை ஆட சொல்ல, உங்களுக்கு என்ன உரிமை இருக்கு…?”
” சித்… எனக்கும் பிள்ளைதான் அந்த உரிமையில் தான் நான் அவனை ஆட சொன்னேன்… ” என்றதும் அனைவரும் அதிர..
“ஆர்.ஜே… நான் உங்களை ரிஜட் பண்ணதுனால சித் மூலமா நீங்க டரை பண்றீங்க அப்படிதானே, டான்ஸ் வேணான்னு சொன்னவனை, மனசை மாத்தி ஆசை வளர்த்திருக்கீங்க.. ச்ச.. நீங்க எல்லாம் மனுசன் தானா.. ” என்றதும் கோபம் வர, அவளது கன்னத்தை பதம் பார்த்தது ஆர்.ஜேவின் கைகள்..
” என்னடி விட்டா ரொம்ப பேசுற, உன்னை பாதித்ததுனால. அவனுக்கு கிடைத்த வாய்ப்பை, விட சொல்லுறீயா… அவன் என்ன உன்னையும் என்னையும் போல பெரிய மனுசனா… வேண்டாம் என்றதும் அந்த வலியை அடக்கிக்க, குழந்தைடி, அத்தோட ஆசை வேணான்னு சொல்லிட்டு என்ன சந்தோசத்தை அவனுக்கு கொடுப்ப… நீ என்ன பத்தி என்ன வேணா நினைச்சுக்கோ ஆனா நான் சித்தோட ஆசை நிறைவேற்றுவேன்.. அவன் என்னோடு மகனா பார்த்து ரொம்ப நாளாச்சு… சித் எனக்கும் மகன் தான், அவன் ஆடுவான்..” என்றதும்,.
அதற்குமேல் அவள் அங்கிருக்காமல் சித்தை இழுத்துக்கொண்டு சென்றாள்.. அவனோ, ” ஆர்.ஜே… ஆர்.ஜே ” என அழைத்தவாறே அவள் இழுத்த இழுப்பிற்கு சென்றான்…
அங்கே அந்த சூழ்நிலை பரபரப்பானது.. எல்லோரும் ஆர்.ஜேவையே கண்டனர்… கண்களில் கண்ணீர் வடிய நின்றான்..
” தம்பி, எங்களுக்கு உதவ போய்.. உங்களுக்கு அவமானமாகிருச்சே… அவ கோபத்தில ஏதோ பேசிட்டா. மன்னிச்சிடுங்க தம்பி… “
” ஐயோ… அங்கிள் அதெல்லாம் எதுவுமில்லை… வாங்க முதல் போய், சித்தை பார்க்கலாம்.. அவ கோபமாக அவனை அழைச்சுட்டு போற வாங்க போலாம்… ” என்று ரகுவை தன் காரில்,அழைத்து சென்றான். வெங்கி அவனது காரில் வர… ஜகா தனது பைக்கில் வந்தான்…
அவனை இழுத்துதான் வந்தாள், தன் வீட்டிற்கு வந்தவள் கதவை கோபத்தில், டப்பென்று சாத்தினாள்…
அவன் அழுதுகொண்டே நின்றான்… சோபாவில் அமர்ந்தவளும் அழுதாள்… ” அந்த ஆள் யாருன்னு, என்னான்னு தெரியாம… ஆர்.ஜே ஆர்.ஜே கத்திற சித்.. உனக்கு அம்மாவை விட அந்த டான்ஸ் முக்கியமா போயிருச்சா… அந்த ஆள் முக்கியமா போயிட்டாரா… ஏன் சித்து அன்னைக்கு நான் அவ்வளவு சொல்லியும் நீ ஆடிருக்க, உனக்கு இந்த ஜானவோ, இந்த ஜானுக்கு கொடுத்த சத்தியம் நியாபகம் வரலையா சித்… ”
என்றவள் கேட்க மௌனம் சாதித்தான்…
” சொல்லு, சித்… என் பையன் என் பேச்சை கேட்பான், தட்ட மாட்டான்னு நான் வைச்ச நம்பிக்கை உடைச்சுட்ட, இன்னொருந்தவங்க சொல்லி நீ ஆடினதை தெரிஞ்சுகிற, அளவுகொண்டு வந்துட்ட, ஏன் சித்து, என்ன இருக்கு இந்த டான்ஸ்ல.. அம்மாவை ஏமாத்தி ஆடுற அளவுக்கு இந்த டான்ஸ் உயிரா நினைக்கிறீயா…
அந்த டான்ஸ் உனக்கு வெறும் ஏமாற்றதை தான் கொடுக்கும் சித்.. நான் என் தோழியை இழந்தது போல உன்னை இழக்க கூடாதுன்னு நினைக்கிறேன். ஆனா நீ அது தான் வேணும் நிக்கிற.. ஏன் சித்.. “
அமைதியாக நின்றான்.. உடல் இன்னும் நடுக்கம் கொள்ள அடித்த அடியில் கண்ணம் வீங்கிருக்க.. கொஞ்சம் கொஞ்சமாய் தன் பலனை இழந்து கொண்டிருக்கிறான் என்பதை அறியாதவள் கேள்வியால் அவனை துளைத்தாள்
” பேசு சித்… இப்படி நின்னா என்ன அர்த்தம் உனக்கு அம்மா வேணுமா ? இல்ல இந்த டான்ஸ் வேணுமா.. எது உனக்கு இப்ப சொல்லு… உனக்கு டான்ஸ் தான் முக்கியம்ன்னா.. நான் உன்னை கான்வென்ட் சேர்கிறேன் நீ அங்கே இருந்து படி, டான்ஸ் ஆடு.. இல்லை இந்த ஜானு தான் முக்கியம்ன்னா, இந்த டான்ஸை விடு… சொல்லு சித், எது உனக்கு முக்கியம் சொல்லுடா… அவள் மேலும் அவனை குலுக்க, அவனது நிலையை அறியாமல் கோபத்தில் இருந்தாள்…
” வாய் மூடு ஜானு… ஏன் இன்னும் அவனை கஷ்டபடுத்திற… “
” அப்பா… நீங்களும் என்னை ஏமாத்திட்டீங்க… நீங்க இரண்டு பேரும் தான் காலம் முழுக்க என்னோடு வருவீங்க, எனக்கு துணையா இருப்பீங்கன்னு நினைச்சா… நீங்க என்னை ஏமாத்துடீங்கப்பா…”
” ஆமா, எனக்கு வேற வழி தெரியல.. என் பேரனோட ஆசை, அவனுடைய கனவை தவிற வேற ஒன்னும் எனக்கு தெரியலை… நைட் வேலைன்னு நீ போகும் போது அவன் என் கூடத்தான் தூங்குவான்… அவனுடைய புலம்பலை நான் கேட்டுருக்கேன்.. நாம இத்தனை பேர் இருந்துமா அவனை விட்டுடுவோம்… எனக்கு உனக்கு எப்படி புரியவைக்கிறது தெரியலை ஜானு.. ஏன் இன்னும் இந்த விசயத்தில நீ அடமென்ட்டா இருக்க… உன் சித்தை பார்த்தும் உன் மனசு இறங்கலையா.. ”
” ஜானு.. இங்க பாரு, இது வெறும் டான்ஸ் ஷோ தான்… அவனுக்கு இதெல்லாம் ஒரு அனுபவம், குழந்தை அவங்க வழியில விடனும் டி.. நம்ம வழிக்கு இழுக்க நினைக்காத… நான் சொல்லும் போதே அவன் உன்னை பத்திதான் யோசித்தான்.. அந்த குழந்தை உன்னை பத்தி யோசிக்கும் போது… ஒரு அம்மாவா ஏன்டி யோசிக்க மாட்டிக்கிற… ”
” போதும்.. நீங்க ஏன் வந்தீங்க.. இது என் பேமிலி மேட்டர்… ஆர்.ஜே நீங்க தலையிடாதீங்க வெளிய போங்க… ” என கத்த, இழுத்து பிடித்த பொறுமை இழந்தான்.. ” இவளை…. ” என தனது பின்னந்தலை கொதி பொறுமையை கட்டு படுத்த முயல. சித் அங்கே மயங்கி சரிந்தான்.
குறும்பு தொடரும்…
தன் கன்னத்தில் கைவைத்தவாறு சித் அழுதுகொண்டிருந்தவன், அதிர்ச்சியோடு நிற்க, அவனருகில் கன்னத்தில் வைத்தவாறு ஜானுவும் நின்றாள்.
ஆர்.ஜேவின் வலிய கரம் அவளின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது… ரகுவும் சரி ஜகதீஸ்ஸூம் எதுவும் கூறாது அந்த மேடையில் ஒருவித சங்கடத்துடனே,நின்றிருந்தனர்..
டான்ஸ் ஷோவில் சித் தேர்வானது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்தாலும் சித்திற்கு மட்டும் ஒருவித பயம் ஜானுவை நினைத்து உள்ளுக்குள் இருக்க.. முகத்தில் அவனது பயம் தெரிய ஆரம்பித்தது….
ரகுவிலிருந்து சிவாளி வரைக்கும் பேசி பார்த்துவிட்டனர், அவனது பயம் குறைந்த பாடு இல்லை.. சனி, மற்றும் ஞாயிறு இரவு ஒளிபரப்பாகும் அந்த ஷோ, காலையிலே சூட்டிங் எடுக்க இருந்தனர்.,
அன்று சனிக்கிழமை முதன்முறையாக அவன் டான்ஸ் ஷோவில் கலந்துக்க வேண்டும்… என்பதால், ஜானவிக்கு வேலை காலையில் இருப்பதால் மூவரும் கிளம்பிக்கொண்டிருந்தனர்.
சக்தி, சிவாளி, வெங்கி, மூவரும் வொன்டர்லேன்ட் செல்வதாகவும் சித்தையும், ரகுவையும் அழைத்து போவதாகவும் பொய் சொல்ல, அவளுக்கும் முக்கியமான வேலை இருப்பதால் அவர்களை மட்டும் அனுப்ப ஒத்துக்கொண்டாள்..
அவனோ, ஜானுவிடம் ப்ளஸ் வாங்க வேண்டும்.. ஆனால் ஜானுவுக்கு தெரிய கூடாது என்று யோசித்தவன்…
தன் தலையை சீவியவாறே அவளை மோதி, சீப்பை அவளது காலடியில் போட்டு சாஷ்டாங்கமாய் விழுந்தான் சித்…
ஜானு அவனை எழ வைத்தாள்.. ” என்ன சித் காலுல விழுகிற.. ?”
” ஜானு, சீப் கீழ விழுந்திடுச்சு அதை எடுக்க… ” என வழிந்தவனை.. ” சரி சரி கால் விழுந்துட்ட, நல்லாரு மகனே.., ” என ஆசிர்வதித்தாள்.
” நேத்து பார்த்த சூர்யவம்சம் படம் எப்க்ட் இருக்குமோ ! பேராண்டி இலைமறைகாய் உங்கம்மா கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்ட, நடத்து நடத்து…. ”
” ரகு, அடுத்து உன் கால் தான் விழுக போறேன்… ஆனால் என்னத்தை போடன்னு தான் யோசிக்கிறேன்… ”
” டேய்,. பேராண்டி ! என் ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் இருக்கு அதற்காக, என் காலை பதம் பார்த்திடாத, மீ பாவம்,.. ” என அஞ்ச..
” சரி மேன்… பொழச்சு போ ” என்றான்..
சாமியறையில் பூஜை செய்துவிட்டு தன் மகனுக்கு விபூதி குங்குமம் இட்டு… ” ஆன்டி , அங்கிள் , தொல்லை பண்ண கூடாது…. சமத்தா விளையாடனும், பத்திரமா போயிட்டு வாங்க ” என்று அவர்களை வழியனுப்பிவைத்தவள், மருத்துவமனைக்கு விரைந்தாள்.
அனைவரும் கிளம்பி, டான்ஸ் ஷோ நடக்கும் அந்த சேனிலின் ஆபீஸ்ஸிற்கு விரைந்தனர்…
அங்கே பயத்தோடு நின்றிருந்தவன், ஆர்.ஜே வை கண்டதும் கொஞ்சம் குறைந்தது, தனியாக அழைத்து சென்றவன்,. ” சித்,. நீ எதற்கும் பயப்பிடாத.. பிடித்த விஷயம் செய்யும் பொழுது அங்க பயம் எதற்கு.. நீ கேஷ்வலா வீட்டுல க்ளாஸ்ல எப்படி ஆடுவீயோ ஆடு… எந்த இடம் எங்க இருக்க எதையும் பார்க்காதே… உன் டார்கெட் டான்ஸ் அதை மட்டும் பலோவ் பண்ணு, உன்னை சுத்தி யாரு இருக்காங்க இல்லை எதையும் பார்க்காத.. பாடலை உள்வாங்கி ரசிச்சு ஆடு… சரியா.. எது நடந்தாலும் ஐ யம் ஆல்வேஸ் வித் யூ மை பாய்.. ” என்று நெற்றியில் இதழ் பதித்தான்.
அவனது காலிலும் விழுந்தான்.. ” ஆர்.ஜே… ஜானு கிட்ட சொல்லாம வந்தது கஷ்டமா இருக்கு… எல்லாரையும் போல அவளும் எங்ரைஜ் பண்ணணும் ஆசை படுறேன்…, ஆனா… ” என முகம் சோகத்தை கொள்ள..
” ஓ.,. சித்.. இப்ப தான் ஆட ஆரம்பிச்சிருக்கோம். சீக்கிரமா உன் டான்ஸ் பார்த்து உன் ஜானுவே பாராட்டுவாங்க சரியா மை பாய் நீ.. பீல் பண்ணலாமா ? ஹாப்பீயா இருக்கனும்.. ” என்றவன், அவனது நெற்றியில்மீண்டும் இதழ் பதிக்க.. அவனை கட்டிக்கொண்டான்
” ஆர்.ஜே நீ இல்லைன்னா இதெல்லாம் சித்துக்கு ஒரு கனவாய் போயிருக்கும்., உனக்கு எப்படி நன்றி சொல்ல தெரியலைடா ”
” என்னடா,.. என் கடமையை தான் செய்தேன்… சித்தோட கனவை நிறைவேற்றுவது என் கடமை., இதுக்கு போய்… ” என்றதும் ஜகதீஸ்க்கு சிறு சந்தேகம் வர, அதை கேட்டுகொள்ளவில்லை.
ரகுவும் கையெடுத்து கும்பிட, ” ஐயோ , அங்கிள் ஜகாகிட்ட சொன்னததான் உங்களும்… இதெல்லாம் வேணாம் என்றான்..”
” சித்… சித்… ” அவனை வளைத்தனர்சிவாளியும்,வைஷூவும்..
” சித்.. நீ சூப்பரா டான்ஸ் ஆட, நான் ப்ரேயர் பண்ணி உனக்கு கயிறு எடுத்துட்டு வந்திருக்கேன் ” சிவாளி கூற..
” நானும் தான் சித்… நீ கைகாட்டு… ” என்றாள் வைஷூ.
” நான் தான் முதல் கட்டுவேன்.. ” சிவாளியும்.., ” இல்லை நான் தான் முதல் கட்டுவேன்.. ” என வைஷூவும் சண்டை இட, ” ஓ.. காட், சண்ட போடாதீங்க.., எனக்கு ஒருக்கை மட்டுமில்ல, இரண்டு கை இருக்கு… ” என நீட்ட கட்டினார்கள்,
” சித்… யாரு இந்த டூ ஏன்ஜல்ஸ்…” என பீட்டர் கேட்க, ” இவங்க இரண்டு பேரும் என்னுடைய ஹேள் ப்ரண்டு, சிவாளி , வைஷூ… ”
” எஸ் எஸ்.., சித் ஆல் தி பெஸ்ட் ” என கன்னத்தில் இதழ் பதித்தாள் வைஷூ, அவளை தொடர்ந்து சிவாளியும் வைக்க.. ”
” பாஸ்… ” என பீட்டர் அதிர, ஆர்.ஜேக்கும் பேரதிர்ச்சிதான்.. ” அடப்பாவி…. நீ பாஸை மிஞ்சிடுவ போல… பாஸ் பார்த்தீங்களா நீங்களும் தான் இருக்கீங்களே.. முத்தம் கொடுத்தா குழந்தை பொறக்குமான்னு… ஆன அவன் ஈஸியா முத்தம் வாங்கிட்டான்.. இப்ப இருக்க பிள்ளைகளை அட்வான்ஸ்ஸா போகுது.. நீங்க இன்னும் நைன்டீஸ் இருங்க.. ” என்றதும்..
” டேய்… குழந்தைங்க முன்னாடி மானத்தை வாங்காதடா.. ”
நேரம் செல்ல,.. ப்ரோகிராமை ஆரம்பித்தனர்.. ஒவ்வொரு குழந்தையாக ஆட ஆரம்பித்தனர்.. சித்தும் தனது திறமையை ஆடிக் காமித்தான்… அனைவரும் எழுந்து நின்று கைத்தட்ட, ரகுவிற்கு கண்கலங்கியது…
அதே நேரம் இங்கு அவள் வேலை பார்த்துகொண்டிருந்தாள்.. சரியாக சைன்ஸ் டீச்சர்… வயிறு வலி காரணமாக அந்த மருத்துவமனைக்கு வந்தார்.. ஜானுவே அவரை பரிசோதித்துவிட்டு மாத்திரை ஊசி என எழுதி கொடுத்தாள்..
” நீங்க சித் மம்மி தானே.. ” என்றதும், ” எஸ் மேம்…”
” நான் சித் சைன்ஸ் டீச்சர் ஞாபகம் இருக்கா ? ”
” இருக்கு… மேம்… ” என்றாள்.. அவளுக்கும் சித்தை போல அந்த சைன்ஸ் டீச்சரை பிடிக்கவில்லை, தன் மகனை குறைச்சொல்லுபவரை எப்படி பிடிக்கும்.
” ஆமா… இன்னைக்கு சித்துக்கு, டான்ஸ் ஷோ இருக்கே நீங்க போகலையா ?… ”
” சித்துக்கு டான்ஸ் ஷோ வா அவன், வொன்டர்லேண்ட் போயிருக்கான் என் ப்ரண்ட் பேமிலியோட.. ”
” என்ன சொல்லுறீங்க.. உங்களுக்கு விசயம் தெரியாத.. ” என்றவள் அனைத்தையும் கூற.. அதிர்ந்து போனாள்.. ” இந்நேரம் டான்ஸ் ஷோ சூட்டிங் போயிட்டு இருக்கும்… ஒ.கே பாய் மேம்…” என அவள் கிளம்ப அவள் இன்னும் அதிர்ச்சியில் இருக்க,
தனது போனில் சேனல் பெயரை போட்டு அட்ரஸை கண்டுபிடித்து மருத்துமனையில் சொல்லிவிட்டு காரை எடுத்து கொண்டு கிளம்பினாள்…
அனைத்து குழந்தைகளும் ஆடி முடிக்க, பெஸ்ட் டான்ஸ்ர் ஆப் தி டே என்று சித்துவையே தேர்ந்தெடுத்தனர்.
அவனை அனைவரும் பாராட்டிக்கொண்டிருந்தனர்.. வெளியே ஜானு வந்தவள், உள்ளே செல்ல அனுமதிகேட்க, அவர்கள் யாரும் விடவே இல்லை… தான் சித் அம்மா என்று கூறியதும் விட்டனர்…
செட்டினுள்ளே வந்தவள்… ” சித்… ” என்று மேடையேற தன்மொத்த கோபத்தையும் சித்தின் கன்னத்தில் அடியாய் இறக்கினாள்…
அவள் அடித்த அடியில் கீழே விழுந்தான்… ” என்னை ஏமாத்திட்ட சித் நீ… டான்ஸ் ஆட மாட்டேன் , எனக்கு ப்ராமிஸ் பண்ணிட்டு இங்க இந்த டான்ஸ் ஷோவில் கலந்து ஆடி இருக்கிற… உன் மேல எவ்வளவு நம்பிக்கை வைத்தேன், இப்படி என்னை ஏமாத்திட்டியே… ஏன் சித் பொய் சொன்ன… ”
” ஜானு… ” என்றவனுக்கு மேல் பேச்சு வராமல் இருக்க.. அவனை பிடித்து உலுக்கியவள், ” சொல்லு சித்… இந்த ஜானு வார்த்தையை மதிக்க மாட்டேன்னு, சொல்லாம சொல்லிட்டேல, எப்படி சித், என்னை, உன் ஜானுவை ஏமாத்த தோணுது…?”
” ஜானு, நான்… ”
” என்ன ரீசன் சொல்ல போற சித்… நான் ஆடலை பார்க்க வந்தேன் என்றா.. ” இன்னும் ஒரு முறை அவனை அடிக்க செல்ல, அவளது கைப்பற்றி, தடுத்தான்..
” என்னடி உனக்கு ப்ரச்சனை நானும் பார்த்துட்டே இருக்கேன், ஓவரா பேசிட்டே போற, எதுக்கு சித்தை அடித்த, அவன் பொய்சொல்லல, ஏமாத்தவுமில்லை, அவன் வேணான்னு தான் சொன்னா, நான் தான் இந்த ஷோவில் ஆட சொன்னேன்… யாரோ ஒரு டான்ஸ் மாஸ்டர் பண்ண தப்பினால், எல்லா டான்ஸ் மாஸ்டரும் தப்பானவங்க, டான்ஸ்ஸையே வெறுக்கிறது எந்த விதத்துல நியாயம் டி… ”
” சித்… என் மகன், அவன் நான் சொல்லறதை கேட்கனும், கேட்பான். நீங்க யாருங்க, அவனை ஆட சொல்ல, உங்களுக்கு என்ன உரிமை இருக்கு…?”
” சித்… எனக்கும் பிள்ளைதான் அந்த உரிமையில் தான் நான் அவனை ஆட சொன்னேன்… ” என்றதும் அனைவரும் அதிர..
“ஆர்.ஜே… நான் உங்களை ரிஜட் பண்ணதுனால சித் மூலமா நீங்க டரை பண்றீங்க அப்படிதானே, டான்ஸ் வேணான்னு சொன்னவனை, மனசை மாத்தி ஆசை வளர்த்திருக்கீங்க.. ச்ச.. நீங்க எல்லாம் மனுசன் தானா.. ” என்றதும் கோபம் வர, அவளது கன்னத்தை பதம் பார்த்தது ஆர்.ஜேவின் கைகள்..
” என்னடி விட்டா ரொம்ப பேசுற, உன்னை பாதித்ததுனால. அவனுக்கு கிடைத்த வாய்ப்பை, விட சொல்லுறீயா… அவன் என்ன உன்னையும் என்னையும் போல பெரிய மனுசனா… வேண்டாம் என்றதும் அந்த வலியை அடக்கிக்க, குழந்தைடி, அத்தோட ஆசை வேணான்னு சொல்லிட்டு என்ன சந்தோசத்தை அவனுக்கு கொடுப்ப… நீ என்ன பத்தி என்ன வேணா நினைச்சுக்கோ ஆனா நான் சித்தோட ஆசை நிறைவேற்றுவேன்.. அவன் என்னோடு மகனா பார்த்து ரொம்ப நாளாச்சு… சித் எனக்கும் மகன் தான், அவன் ஆடுவான்..” என்றதும்,.
அதற்குமேல் அவள் அங்கிருக்காமல் சித்தை இழுத்துக்கொண்டு சென்றாள்.. அவனோ, ” ஆர்.ஜே… ஆர்.ஜே ” என அழைத்தவாறே அவள் இழுத்த இழுப்பிற்கு சென்றான்…
அங்கே அந்த சூழ்நிலை பரபரப்பானது.. எல்லோரும் ஆர்.ஜேவையே கண்டனர்… கண்களில் கண்ணீர் வடிய நின்றான்..
” தம்பி, எங்களுக்கு உதவ போய்.. உங்களுக்கு அவமானமாகிருச்சே… அவ கோபத்தில ஏதோ பேசிட்டா. மன்னிச்சிடுங்க தம்பி… ”
” ஐயோ… அங்கிள் அதெல்லாம் எதுவுமில்லை… வாங்க முதல் போய், சித்தை பார்க்கலாம்.. அவ கோபமாக அவனை அழைச்சுட்டு போற வாங்க போலாம்… ” என்று ரகுவை தன் காரில்,அழைத்து சென்றான். வெங்கி அவனது காரில் வர… ஜகா தனது பைக்கில் வந்தான்…
அவனை இழுத்துதான் வந்தாள், தன் வீட்டிற்கு வந்தவள் கதவை கோபத்தில், டப்பென்று சாத்தினாள்…
அவன் அழுதுகொண்டே நின்றான்… சோபாவில் அமர்ந்தவளும் அழுதாள்… ” அந்த ஆள் யாருன்னு, என்னான்னு தெரியாம… ஆர்.ஜே ஆர்.ஜே கத்திற சித்.. உனக்கு அம்மாவை விட அந்த டான்ஸ் முக்கியமா போயிருச்சா… அந்த ஆள் முக்கியமா போயிட்டாரா… ஏன் சித்து அன்னைக்கு நான் அவ்வளவு சொல்லியும் நீ ஆடிருக்க, உனக்கு இந்த ஜானவோ, இந்த ஜானுக்கு கொடுத்த சத்தியம் நியாபகம் வரலையா சித்… ”
என்றவள் கேட்க மௌனம் சாதித்தான்…
” சொல்லு, சித்… என் பையன் என் பேச்சை கேட்பான், தட்ட மாட்டான்னு நான் வைச்ச நம்பிக்கை உடைச்சுட்ட, இன்னொருந்தவங்க சொல்லி நீ ஆடினதை தெரிஞ்சுகிற, அளவுகொண்டு வந்துட்ட, ஏன் சித்து, என்ன இருக்கு இந்த டான்ஸ்ல.. அம்மாவை ஏமாத்தி ஆடுற அளவுக்கு இந்த டான்ஸ் உயிரா நினைக்கிறீயா…
அந்த டான்ஸ் உனக்கு வெறும் ஏமாற்றதை தான் கொடுக்கும் சித்.. நான் என் தோழியை இழந்தது போல உன்னை இழக்க கூடாதுன்னு நினைக்கிறேன். ஆனா நீ அது தான் வேணும் நிக்கிற.. ஏன் சித்.. ”
அமைதியாக நின்றான்.. உடல் இன்னும் நடுக்கம் கொள்ள அடித்த அடியில் கண்ணம் வீங்கிருக்க.. கொஞ்சம் கொஞ்சமாய் தன் பலனை இழந்து கொண்டிருக்கிறான் என்பதை அறியாதவள் கேள்வியால் அவனை துளைத்தாள்
” பேசு சித்… இப்படி நின்னா என்ன அர்த்தம் உனக்கு அம்மா வேணுமா ? இல்ல இந்த டான்ஸ் வேணுமா.. எது உனக்கு இப்ப சொல்லு… உனக்கு டான்ஸ் தான் முக்கியம்ன்னா.. நான் உன்னை கான்வென்ட் சேர்கிறேன் நீ அங்கே இருந்து படி, டான்ஸ் ஆடு.. இல்லை இந்த ஜானு தான் முக்கியம்ன்னா, இந்த டான்ஸை விடு… சொல்லு சித், எது உனக்கு முக்கியம் சொல்லுடா… அவள் மேலும் அவனை குலுக்க, அவனது நிலையை அறியாமல் கோபத்தில் இருந்தாள்…
” வாய் மூடு ஜானு… ஏன் இன்னும் அவனை கஷ்டபடுத்திற… ”