என்னுயிர் குறும்பா
என்னுயிர் குறும்பா
குறும்பா
ஆழ்கடல் வழி பிறந்து அண்டமெங்கும் விடியலைப் பரப்பி தன் வேலையைச் செவ்வனே செய்துகொண்டிருந்தான் ஆதவன்.
காலை நேரமாக எழுந்து தன்னறையில் வெளிவந்த ஆர்.ஜே வை பிடித்து வைத்து கொண்டார் ராமன்.
” குட்மார்னிங் நைனா… அம்மா எங்க ? கௌரிக்கா எனக்கொரு காபி… ” அவர் அருகே அமர்ந்து டீ.வியை உயிர்ப்பிக்க, அதில் வடிவேலுவின் காமெடி ஓடியது. அதைக் கண்டு சிரித்தவன், தந்தையின் முகம் காண, அவரோ சிடுசிடுவென அவனை முறைத்த நிலையில் அமர்ந்திருந்தார்.
” நைனா, எவ்வளவு பெரிய காமெடி, இப்படி சிரிக்காம சீரியஸ்ஸா இருக்கீங்க சிரிங்க டாடி சிரிங்க…”
” நான் சிரிக்கிறது இருக்கட்டும், உன் பொழப்பு தான் சிரிப்பா சிரிக்குதே, என்னடா இது…? ” என பேப்பரை அவன் மேல் ஏறிந்தார்.
” இது பேப்பர்ப்பா… இதுக்கூடவா தெரியாது உங்களுக்கு ? “
” டேய் ஆல்ரெடி, கொதிச்சு போயிருக்கேன். அந்தப் பேப்பருல இருக்க செய்தியை பாருடா மவனே. “
அவனும் பேப்பரை பிரித்து சினிமா செய்திகளைப் பார்க்க, அவன் கொடுத்த போஸ்ட், செய்தியாக வந்திருந்தது.
” அடுத்தவன் வாழ்க்கையில் கும்பியடிக்கிறதுல, அப்படியென்ன தான் இந்த மீடியாகாரனுக்கும், பேப்பர்காரனுக்கும் ஆனந்தமோ…!” என்றவன் தன் தந்தையை காண இன்னும் அவ்வாறே அமர்ந்திருந்தார்.
” நைனா… அது வந்து…”
” அதான் வந்திருச்சே செய்தியா…! இதுக்குமேல என்ன வரணும், ஏன்டா இப்படி… ?இப்படி போஸ்ட் போட்டு தான் நீ பிரபலமாகணுமா, இதுனால உன் வாழ்க்கையை நினைச்சு பார்த்தீயா… ?எவன் நாளைக்கு உனக்கு பொண்ணு கொடுப்பான்… ?”
” முதல்ல, இந்த தேய்ந்து போன டைலாக் விடு நைனா… இத்தனை வருசத்துல கொடுக்காதவனா, நாளைக்கு கொடுத்திடுவான்… முடியல, ஒரு பொண்ணு எனக்கு தெரியாமலே எனக்கும் அவளுக்கும் அஃபேர் இருக்குன்னு போஸ்ட் போடுறா… அத பார்த்தவனுங்க என்ன டார்சர் பண்றானுங்க.. நான் அந்த பொண்ணுகிட்ட நீ என் குடும்பத்துக்கு ஒத்துவர மாட்ட, அந்த போஸ்ட் டெலிட், பண்ணிடு சொல்லிட்டு வந்தா, அதையும் டேட்டிங்ன்னு அதுக்கு ஒரு போஸ்ட் போடுறா.. அதுனால நான் இப்படி ஒரு போஸ்ட் போட்டேன்… “
” ஏன்டா மவனே ! ஒரு பொம்பல பிள்ளைக்கு பயந்தா நீ இப்படி ஒரு போஸ்ட் போட்ட “
” யோவ் நைனா.. பயம் அது இதுன்னு சொன்ன அவ்வளவு தான். சினிமா இன்டஸ்ட்டீரில எனக்கு ஒரு இடமும் மரியாதையும் இருக்கு, அத கெடுத்துக்க சொல்லுறீயா நைனா… இவ ஆடிக்கொரு ஆளு அம்மாவாசைக்கு ஒரு ஆளு சுத்துறவ, இவ கிட்ட நான் போய் வால்ன்ட்டீரீய மாட்ணுமா… எனக்கு பிரபலமாகனும் ஆசை இல்ல நைனா… ஆனா, இருக்க பெயரை கெடுத்திட கூடாதுன்னு தான் இப்படி போஸ்ட் போட்டேன்…”
” சரி எங்க கிட்ட ஒரு வார்த்தைக் கேட்க கூடாதா ? நீயா முடிவு பண்ணுவீயா? சப்போஸ் ஒரு வரன் வந்துச்சுன்னா, அந்தப் பொண்ணுவீட்டுகாரங்க, இந்த நீயூஸ் காட்டி கேட்டா என்னடா பதில் சொல்ல…?”
” உண்மை சொல்லுவோம். அவங்க ஏத்துக்கிட்டா ஒ.கே இல்லைன்னா போட்டும் விட வேண்டியது தான். போதும் நைனா, எனக்கு கல்யாணம் ஆகும் நம்பிக்கையும் இல்லை, ஆசையும் இல்லாம போச்சு..” என்று விரக்த்தியில் பேசும் மகனை காண கஷ்டமாக தான் இருந்தது.
அதற்குள் கோயிலுக்கு சென்ற சீதாவும் கோபத்தோடே வீட்டுக்கு வந்தார். இப்பொது அவர் முறையல்லவா, ” டேய், நான் கேட்ட செய்தி உண்மையாடா.. ?ஏதோ டூட்டருல , நீ உனக்கு கல்யாணம் ஆகி விவாகரத்து வாங்கிட்டதாவும், உனக்கு ஒரு பையன் இருக்கிறதாகவும் சொல்லிருக்கியாமே உண்மையாடா, அந்த சாந்தி என்கிட்ட கேட்டு விசாரிச்சிட்டு போறா….”
ஒரு போஸ்டை போட்டு விட்டு, வீரபாபுவாய் நிற்கும் ஆர்.ஜேயின் நிலமை ஐயோ பரிதாபம்.
” ஆமாமா நான் தான் போஸ்ட் போட்டேன்… இப்ப என்னாங்கற, நைனா உன் பொண்டாட்டிக்கு புரியவை ப்ளீஸ்,. இப்ப சொல்லுறேன் கேட்டுகோங்க, எனக்கு ஒருத்தி பிறந்திருந்திருந்தா கண்டிப்பா என்னை வந்துசேருவா. இல்லையா உங்க பிள்ளையாவே இருந்திடுறேன்… இதுக்கு மேல எதையும் கேட்காதீங்க….” என விறு விறுவென சாவியை எடுத்துகொண்டு வெளியே சென்றுவிட்டான்… அவனது கோபம், எரிச்சல் கடுப்பு எல்லாமே காரை செலுத்தும் வேகத்தில் தெரிந்தது..
ஜானு தன் தோழிக்கு குழந்தை பிறந்திருப்பதால் அவர்களைக் காண வந்தவள், பார்த்துவிட்டு வெளியே வர, அந்தவீட்டு குழந்தை வீதியில் விளையாடிக்கொண்டிருந்தது… அதே அவ்வழியில் ஆர்.ஜே வந்த வேகத்தில் குழந்தை குறுக்கே வர வண்டியை திருப்பினான். அது சரியாக ஜானுவின் காரை மோதியது.
இதைக் கண்ட ஜானு பயந்து நடுங்கிக் கொண்டிருந்தத குழந்தையைத் தூக்கிக்கொண்டாள்… குழந்தைக்கு எதுவுமானதோ அவனும் பயந்து கொண்டே என்று இறங்கி வந்தான்.
” குழந்தைக்கு ஒண்ணும் ஆகலேலங்க…” என மென்மையாகாவும் பதற்றமாகவும் கேட்டு ஜானுவின் அருகில் வந்தான்.
” ஏன் எதுவும் ஆகனுமா… ?நீ எல்லாம் மனுசனாயா… எங்கெங்க வேகமாக ஓட்டணும் மெதுவாக ஓட்டணும் கூட உனக்கு தெரியாத…? இப்படிதான் கண்ணுமுன்னு தெரியாம ஓட்டுவீயா..! குழந்தைக்கு எதுவும் ஆகிருந்தால்?”
” ஏங்க… அதான் எதுவும் ஆகலேலங்க. ஏதோ ஒரு ஞாபகத்தில வேகமாக…” என முடிப்பதற்க்குள் அவள், ” ஏதோ ஒரு ஞாபகமா? நானும் ஏதோ ஞாபகத்தில ஏத்திட்டேன் சொன்னா சும்மா விடுவீயா நீ….”
” சாரிங்க…. அது…”
” சாரி சொன்ன, போதுமா, குழந்தைக்கு ஏதாவது ஆகிருந்தால்… நீ சொன்ன சாரி சரி பண்ணிடுமா….”
” ஏங்க இப்ப என்னதாங்க உங்க பிரச்சனை….? அதான் எதுவும் ஆகலேலங்க… அப்படி எதுவுமிருந்தால் பணம் செலவழிச்சு நான் பார்த்துகிறேங்க ..”
” ஓ…. பணம் இருக்குன்னு நீ திமிருல பேசுறீயா.. உயிர் போனா வாங்கி தருவீயா உன் பணத்தால…” அதற்கும் அவள் கத்த… அமைதியாக நின்றான்.
” அடியே அதான் குழந்தைக்கு தான் ஒன்னும் ஆகலேல விடு டி….. உனக்கு வேலைக்கு நேரமாச்சு நீ போ ” என்றவள் கார் பக்கம் அழைத்து செல்ல, ஆர்.ஜேயின் கார் மோதி ஜானுவின் கார் பல்ப் உடைந்து ஒரு பக்கம் நசுங்கிருந்தது.
” ஐயோ… ஐயோ.. யோவ் இங்க பாருயா, என்ன பண்ணிருக்கன்னு. கண்ணு முகத்தில இருக்கா? முதுகில இருக்கா..? என் காரை டேமேஜ் பண்ணிட்டு நிக்கிறான் பாரு விளக்கு தூண்கணக்காக…..”
” ஹலோ மேடம், டேமேஜ் ஆனதுக்கு பணம்கொடுக்கிறேன்.. அதுக்காக என் இமேஜ் டேமேஜ் பண்ணாதீங்க. நான் யாருன்னு தெரியுமா ? “
” நீ யாரென வேணா இருந்துட்டு போ, எனக்கென்ன? என்னது பணம் தருவீயா.. உன் பணம் யாருக்கு வேணும் இன்னொரு முறை இந்த மாதிரி வண்டி ஓட்டிட்டு வந்தேன்னு வை அவ்வளவு தான் ” என மிரட்டியவள் காரில் ஏறி அவனைக் கடந்து சென்றுவிட்டாள்..
” சாரி சார் அவ…” என கூற தடுத்தவன்,” சாரிங்க…. குழந்தை பத்திரமா பார்த்துகோங்க..” என்றவன் காரில் ஏறி சென்றான்..
‘ பொண்ணா அவ… இந்த கத்து கத்துறா, இவளுக்கு புருசனா வரபோறவனை என்ன மிரட்டு மிரட்டுவாளோ, அந்தப் புண்ணியவானை காப்பாத்துப்பா கடவுளே.’ வேண்டிக்கொண்டான், அது தனக்கான வேண்டுதலென்றே அறியாமல் போனது.
இங்கோ காலையிலிருந்து மாத்தி மாத்தி பேப்பரைக் கொடுத்து குழந்தைகளை படுத்தி எடுத்துவிட்டனர் ஆசிரியர்களும்.
ஃபெயிலான குழந்தைகள் தன் மார்க்கை கண்டு, தனது பேப்பரை ஆராய்ந்து அதில் குறைகளைக் காண வேண்டும் எண்ணமே வந்திடாது. தேர்ச்சி பெற்ற குழந்தைகள் ஒருமுறை, ஆராய்ந்து மதிப்பெண்கள் குறைவாகவோ, திருத்தவில்லை என்றால் வந்துகேட்பதோடு சரி…. நன்றாக படிக்கும் குழந்தைகள் எப்படியாவது மதிப்பெண்களை கூட்ட வேண்டும் குறைத்துபோட்டால், ஏன் எதற்கு என்று கேள்வியோடு நின்றுவிடுவார்கள், அவர்களுக்கு விளக்கம் அளிப்பதற்குள் ” உப் ” என்று ஆகிவிடும்
அனைத்தும் பேப்பர்களை வாங்கிகொண்ட அமைதியாக சித் அமர்ந்திருந்தான். வைஷ்ணவி , சூர்யா அமைதியாக அமர்ந்துவிட்டனர். சிவாளி தான் மிஸ் டேபிளுக்குமாக அழைத்துகொண்டிருந்தாள்.
” ஏன் பட்டீ சேட்டா இருக்க, நீ சேட் ஆக மாட்டியே… வாட் ஹெப்பன்…? “
” இல்ல பட்டீ, டான்ஸ் காம்பெடிசன்ல சேர, ஜானுவ கன்வீன்ஸ் பண்ணா இந்த மார்க் யூஸ்ஃபுல் இருக்கும் நினைச்சேன்… பட் இங்கிலிஷ் தவிர மத்ததெல்லாம் லோ மார்க் தான்… அதான் “
” சித்… அத்தைக்கு டான்ஸ் பிடிக்காதே, மார்க் வைத்து கன்வீயன்ஸ் பண்ண ஒத்துப்பாங்களா… ?”
” அப்படி பண்ணலாம் ரகு தான் ஐடியா கொடுத்தார். பட் எனக்கும் ஸ்டடீஸ்க்கும் ரொம்ப தூரம்… இப்ப அவங்களை எப்படி கன்வீயன்ஸ் பண்ணுவேன்…? நவ் ஐ யம் ஹேல்ப்லஸ் வைஷூ…”
” நான் வேணா டாடி கிட்ட சொல்லி, கன்வீயன்ஸ் பண்ண சொல்லவா சித்…!”
” நோ.. வைஷு, நான் ஜானுவ சமாளிச்சுக்கிறேன்… ” என்றவன் அமைதியாக அமர்ந்துவிட்டான்..
பள்ளி முடிந்தது சித் சோகமாக அமர்ந்திருந்தான்.
“ஏன் சித் சோகமாக இருக்க என்னாச்சு ? ” கிரேஸி அருகில் அமர… ” மிஸ், மார்க்ஸ் ரொம்ப லோ.. கண்டிப்பா ஜானு திட்டுவா… ” என்றான் கிரேஸிக்கு சிரிப்பே வந்தது.
” உன் பேப்பர் எடு சித்… ” என்றதும் எடுத்து காமித்தான்.. அவள் மதிப்பெண் குறைந்த பாடத்தை ஆராய… ஒன்வர்ட் எல்லாம் சரியாக இருந்தது. சிறு மற்றும் பெரு வினாவில் மதிப்பெண் அறைகுறையாக போட்டிருந்தது…
” நல்லதானே எழுதிருக்க சித்…. ஏன் மார்க் கம்மி பண்ணிருக்காங்க.. ” என திருப்பி திருப்பி பார்த்தாள்…
” ஐ டோன் நோ மிஸ்… “
” சித்.. நீ கேட்கலையா ? “
” மிஸ்… கேட்டேன், ஆனா, அவங்க நீ ஆன்ஸர் சரியாக பண்ணல, நீ புக்ல இருக்கிறது போல எழுதல சொல்லிட்டாங்க.. “
” இரு… ” என்றவள், விளையாடிகொண்ட்டிருந்த ஸ்ரவனை அழைத்தாள்.. ” ஸ்ரவன் உன் பேப்பர் எடுத்திட்டுவா..”
அவனும் கொண்டு வந்து கொடுக்க, அதில் புத்தகத்தில் இருந்தது போலவே வார்த்தைமாறாமல் எழுதிருந்தான். சித் கேட்டு வைத்ததை புரிந்து எழுதிருந்தான்.
” பாரு சித்…. அவன் அப்படியே எழுதிருக்கான், சோ ஃபுல் மார்க் போட்டிருக்காங்க, ஆனா, நீ எழுதினதும் சரி. பட் உன்னோட ஓன் ரைடிங்ல.. அதான் மார்க் போடுல… ” வேறு படுத்தி காமித்தார்.
” மிஸ்… மக்கப் பண்ணி எழுதினாத்தான் மார்க் வருமா.. ஓன் கிரியெட்டிங் மார்க் போடமாட்டாங்களா..”
” சித்… இப்ப இருக்க எடுக்கேசன் சிஸ்டத்தை பொறுத்தவரை மனம்பாடம் பண்ணி எழுதினாத்தான் மார்க். சில டீச்சர்ஸ் அப்படிதான் பலோவ் பண்றாங்க, சில ஸ்கூல் அத தான் பலோவ் பண்றாங்க, ஏன்னா டென்த் டூவ்ல்த் ரிசால்ட் காட்டனுமே… சோ அப்படியே பழக்குறாங்க சித்… சிலர் இப்பார்டென்ட் வோர்ட்ஸ்க்கு மார்க் போடுறவங்களும் இருக்காங்க சித்… எல்லாருக்கும் மார்க் மார்க் அது மேலத்தான் கவனம் செலுத்திறாங்க தவிர.. யாரும் குழந்தைகளுக்கு சரியா கல்வி போய் சேர்ந்ததான்னு நினைக்கிறது இல்ல சித்… உன் கிட்ட இந்த க்வ்ஸ்டின் எக்ஸ்பிளைன் பண்ண சொன்ன நீ பண்ணுவ, அதுவே ஸ்ரவன் கிட்ட கேட்டால் அவனுக்கு தெரியாது ஒப்பிப்பான்… நீ இந்த மார்க் நினைச்சு பீல் பண்ணாத.. அன்னைக்கு சொன்னேன் மார்க் வைச்சு எதையும் வாங்க முடியாது… பட் அப்படியே விட கூடாது அடுத்த முறை டரை பண்ணு,. நீ போர்த் தான் படிக்கிற.. இன்னும் நிறைய எக்ஜாம் இருக்கு பார்த்துக்கலாம் சித் சியரப் மை பாய்.. ” எனத் தட்டிக் கொடுத்தாள்.
அவளது அறிவுரைகளை ஏற்று மெல்ல சிரித்தான்…. ரகுவும் வந்திட அவளிடம் விடைப் பெற்றுக்கொண்டு சென்றான்.
மாலையாகியது… சமத்தாக தனது ஹோம்வொர்க்கை செய்தவாறு அமர்ந்திருந்தான்.. ரகு அவனது பேப்பரை ஆராய்ந்தார்..
” சித்… பரவாயில்லை நீ கொஞ்சம் முன்னேறிருக்க பேரா “
” உனக்கு புரியது… ஆனா, உன் பொண்ணுக்கு, இன்னைக்கு நமக்கு இருக்கு ரகு…”
” நமக்கு இல்லை உனக்கு, நான் என்ன பண்ணினேன்…? “
” என்ன ரகு என்னை கலட்டிவிடுற? நீயும் நானும் அப்படியா பழகிறோம். நீ என் பிரண்ட் இல்லையா…?”
” அதுக்காக, உன்னோடு சேர்ந்து நானும், திட்டுவாங்கணுமா ? நல்லாருக்குடா பேரா, நான் என்ன சொன்னேன், ஒழுங்கா படிச்சு மார்க் எடுக்க சொன்னேனா இல்லையா “
” நான் தான் என்னால முடிந்த அளவு பெட்டரா எடுத்திருக்கேன் ல போதாதா? இன்னும் வேணும்ன்னா என்னால அவ்வளவு தான் முடியும்…”
” இத ஏன் என்கிட்ட சொல்லுற சித்? உன் அம்மா வருவா அவகிட்ட சொல்லு… ”
மணியைப் பார்க்க அவள் வரும் நேரம் ஆனது. இருவருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது.
” ரகு.. நீ எனக்கு பதில பேப்பரைக் காட்டு நான் போய் தூங்கிறேன். நான் தூங்கிட்டேன் சொல்லிறீயா..”
” மறுநாள், கேட்பா சித், காலை கிளம்பும் போது திட்டு வாங்கமா, பெட்டர் இப்பையே அந்த திட்டை வாங்கிரு சித்..”
இருவரும் பயத்தில் கண்ணத்தில் கைவைத்து அமர்ந்து விட்டனர்.
குறும்பு தொடரும்…ஆழ்கடல் வழி பிறந்து அண்டமெங்கும் விடியலைப் பரப்பி தன் வேலையைச் செவ்வனே செய்துகொண்டிருந்தான் ஆதவன்.

குறும்பு தொடரும்…