என்னுயிர் குறும்பா
என்னுயிர் குறும்பா
என்னுயிர் குறும்பா
ஆதவனின் கருனை பார்வையும், கதிர்களையும் மக்களிடத்தில் சேர்த்து விடியலைத் தொடங்கிவைத்தார்.
நெஞ்சுகுள்ள குடி இருக்கும் ஹா.. ஹா.. வெறித்தனம்..
இன்னா இப்போ லோக்கலு நா
நம்ம கெத்தா ஒலாத்தனும்
நெஞ்சுக்குள்ள குடி இருகும்
நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலு நா
நம்ம கெத்தா ஒலாத்தனும்
ஆமா அழுக்காருப்போம்
வெறித்தனம் வெறித்தனம்..
கருப்பா கலையாருப்போம்
வெறித்தனம் வெறித்தனம்..
ஒண்ணா உசுராருப்போம்
வெறித்தனம் வெறித்தனம்..
புள்ளிங்கோ இருக்காங்க
வேற இன்னாவோணும்
ராவடி ராசாவா நிப்பேண்டா
என்னோட கில்லா மேல
யாருக்கும் தவ்லுண்டு
நீ இல்ல தௌலதாவே நில்லு
என் ஆளு நண்பா நீ..
நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
நம்ம சனம் வெறித்தனம்..
இன்னா இப்போ லோக்கலு நா
நம்ம கெத்தா ஏலேலேலோ
மாலு மாலு மாலு
சுராங்கணிக்க மாலு
மாலு மாலு மாலு
சுராங்கணிக்க மாலு
மாலு மாலு மாலு
என் தளபதி தான் தூளு
மாலு மாலு மாலு
சுராங்கணிக்க மாலு
மாலு மாலு மாலு
என் தளபதி தான் தூளு
சுராங்கணி சுரங்கணி
சுராங்கணி சுரங்கணி
சுராங்கணிக்கா மாலு
சுராங்கணிக்க மாலு
சுராங்கணிக்க மாலு
என் தளபதி தான் தூளு
கானா கணுக்கா
ஒரு ஆட்டம் இருக்கு
மேனா மினுக்கா
ஒரு மேளம் இருக்கு
மண்ணு முட்டு சாலு
என்ன வுட்டா யாரு
தொங்க விட்டு
துவைக்கும் ரவுச பாரு
கொரலு விட்டா நூறு
சொந்தம் வரும் பாரு
காசு பண்ணும் எல்லாம் கோளாறு
என்னாண்ட எல்லாம் நீ தானே
உன்னடா எல்லாம் நான் தானே
நம்ம சோக்கு ஊரு டால்கு
நண்பா நீ பல்லாக்கு
எக்கா பொண்ணு ஏலேலோ
முக்கா துட்டு ஏலேலோ
இன்னா இப்போ லோகலூனா
நம்ம கெத்தா ஏலேலோ
ஆமா அழுக்காருப்போம்
வெறித்தனம் வெறித்தனம்
கருப்பா கலையாருப்போம்
வெறித்தனம் வெறித்தனம்
ஒண்ணா உசுராருப்போம்
வெறித்தனம் வெறித்தனம்
புள்ளைங்கோ இருக்காங்க
வேற இன்னாவோனும்
ராவடி ராசாவா நிப்பேண்டா
என்னோட கில்லா மேல
யாருக்கும் டவலுண்டு
நீ இல்ல டௌலதாவே நில்லு
என் ஆளு நண்பா நீ
நெஞ்சுக்குள்ள குடி இருகும்
நம்ம சனம் வெறித்தனம்
இன்னா இப்போ லோக்கலு நா
நம்ம கெத்தா ஒலாதனும்
வெறித்தனம் வெறித்தனம்…
தனது சவுண்ட் சிஸ்டத்தை அலற விட்டவன், குளித்து துண்டை கட்டியவாறே ஆட்டத்தை ஆரம்பித்தான், அந்த எட்டு வயது சிறுவன் சித்தார்த் . அவனோடு இணைத்தார், அவனினும் எட்டு மடங்கு வயதைக் கொண்ட ரகுநந்தன்.
இருவரும் ஆட, அவர்களது பிளாட் மட்டுமல்ல, எதிரே எதிரே இருந்த பிளாட்டும் தான் அதிர்ந்தது..
வெறித்தனம் வெறித்தனம் வரிகள் வரும்போதெல்லாம், தன் நெஞ்சை தொட்டு ஆடினான் அவன். இருவரும் அங்கே மகிழ்ச்சியோடு குத்தாட்டம் போட்டனர்.
எதிர் வீட்டு மாமி, இந்தக் கூத்தைப் பொறுத்திட முடியாமல் திறந்திருந்த வீட்டில் புயலென நுழைந்தார்.. இருவரின் ஆட்டத்தைக் கண்டவர் தலையில் அடித்துக் கொண்டார்.
‘ பிள்ளையில்லாத வீட்டுல கிழவன் துள்ளிக்குதுச்சானாம். ஆனா, இங்க இரண்டும் குதிக்கிதுங்க. ராமா ராமா… ‘ எனத் தலையில் அடித்தவர்.
” சத்த அத ஆப் பண்றேளா!” சவுண்ட் சிஸ்டத்தையும் தாண்டி சவுண்ட் விட்ட மாமியைப் பார்த்து தன் ஆட்டத்தை நிறுத்தினர் இருவரும்.
” வாங்க வாங்க.. வாங்க… மாமி.. என்ன சக்கரை வேணுமா?” பாட்டை நிறுத்தயவர், கேட்க.
” நேக்கு எதுக்கு அதெல்லாம்.. உங்க ஆட்டம் பாட்டத்தை எங்களால தாங்க முடியல. அதை சொல்லத்தான் வந்தேன். அவன் தான் சிறு பிள்ளை ஆடுறானா, நீங்களும் சேர்ந்து ஆடுவேளா அண்ணா? என் புருசன் ஹார்ட் பேசண்ட் உங்களுக்கு தெரியாதா? இப்படி குழந்தையோடு சேர்ந்து குதிக்கிறேளே! இது எங்கேனும் அடுக்குமா? ” என்றவர்
கத்த ,
” மாமி…. ” என அவரிழுக்க. ” ரகு.. நிறுத்து. பாட்டி… மனுசளா தான் வீட்டுல வைச்சிருப்பா, பேசண்ட்டை எல்லாம் ஹாஸ்பிட்டல் தான் வச்சிருப்பா. நீங்க வேணா, தாத்தாவ ஹாஸ்பிட்டலை சேர்ந்திருங்கோ. அப்ப அவரு நன்னா இருப்பார்..,” என்றான் கேலியாக,
” வாய கழுவுடா அம்பி, முளைக்கவே இல்ல பேச்சை பாரு. என் வீட்டுக்கார் இப்பதான் நன்னாயிட்டு வர்றார் நோக்கு பொறுக்கலையா? “
” அதேதான் பாட்டி கேக்குறேன், நானும் சனி , ஞாயிறு தான் சந்தோசமா பாட்டு போட்டு டான்ஸ் ஆடுறேன். நோக்கு பொறுக்கலையா சும்மா வந்து கத்துறேளே!! நீங்க மட்டும் காத்தால ஐந்து மணிக்கே சுப்ரபாதம் போடுறேளே அப்ப தெரியலையா, தாத்தா ஹார்ட் பேசண்ட்.. நான் போட்டதும் தான் ஞாபகத்துக்கு வருதோ…” என்று கேட்டவனை, அவர் முறைக்க, அவனும் அவரை போல முறைத்து நின்றான்.
” வளர்ந்திருக்கு பாரு…. இப்போவே இவ்வளவு வாய் இதெல்லாம் வளர்ந்தா ” என்று முனங்கினார்.
” வளர்ந்தாலும் அதே அளவுக்கு தான் பாட்டி வாயிருக்கும்… போங்க போங்க, போய் லொக்கு லொக்கு தாத்தாவ பாருங்க… ” என்றவன் மேல் சட்டையும் பேண்ட் சகிதம் போட்டான்.. தன் முகத்தை திருப்பிக் கொண்டு அவ்விடம் விட்டு அகன்றார்.
” அடேய்… சித், இப்படி பேசி அனுப்பிட்ட, அந்த நான்ஸ்டாப் மாமி, ஜானுக்கிட்ட பத்த வைக்க போகுதுடா!!”
“ரகு… போரப்போ! ஜானு ஆஸ்யூஸ்வல் திட்டுவா, கத்துவா பழகி போச்சு எனக்கு. சரி எனக்கு பசிக்கிது டிபன் எடுத்து வை ” டைனிங் டேபிளில் எக்கி அமர்ந்தான்.
தன்மகளுக்கு மட்டும் தனியாக எடுத்து வைத்து விட்டு பின் இருவருக்கும் சப்பாத்தி, குருமா என டேபிளில் அடுக்கி வைத்தார்.
” ரகு, உண்மை சொல்லு… நீ மில்டரி சீப் தானா? இல்லை மில்டரில சேப்பா? ” என்றான்.
” ஏன்டா ! அப்படி கேட்கிற? நான் மில்ட்ரி சீப் டா.. ” என்று மீசை முறுக்கிட, ” இல்ல, உன் பொண்ணைவிட, நீ நல்ல சமைக்கிறீயே அதான் கேட்டேன்… ” என்றவனின் தட்டில் சப்பாத்தியை வைத்தார்.
” அரே ரகு ! இந்த சாப்பாத்திய போட்டு ஓய் மேன் கொல்லுற?”
” நாங்க அங்க அதிகம் சப்பாத்தியை தான் மேன் சாப்பிடுவோம். அந்த பழக்கத்தில இங்கையும் அதே தான் வருது…” என்றார்.
” யோவ், இதெல்லாம் அந்த லொக்கு லொக்கு தாத்தா, உன்னை மாதிரி சுகர் பேசண்ட் சாப்பிடுறது, நான் ஓய் மேன் திண்ணனும்? இதையே சாப்பிட்டா, நான் குச்சியா ஆயிடுவேன்.. எனக்கு கன்னமே இருக்காது ரகு…” என்றான் சாப்பாத்தியை பிய்த்து வாயில் வைத்தவாறு
” அடேய்…. ப்ளேபாய். எட்டு வயசு தான் ஆகுது, அதுக்குள்ளவாடா?” என்றதும் தனது அழகிய சிரிப்பை உதிர்த்தான். மூன்று சப்பாத்தியை உள்ளே முழுங்கியவன் கைகழுவி விட்டு.
” ரகு…. வீட்டுலே இரு, கீழே போய் உன் கிழம்கேங் கூட அரட்டை அடிக்காத, ஜானு வந்தா திட்டுவா. அப்புறம் ட்பெலட் மறக்காம போடு, இல்லைன்னா அதுக்கும் திட்டுவா. ஓ.கே வீட்டுல சின்சான் பார்த்திட்டு இரு. நான் வரேன்” அவரை பார்த்து கூறிக்கொண்டே வாசலுக்கு வர அங்கே மோதி நின்றான்.
” குட்மார்னிங் ஜானு..” தனது அழகிய சிரிப்போடு கூறினான். ” ம்ம்… தாத்தாக்கு அட்வைஸ் கொடுத்திட்டு சார் எங்க போறீங்க? “
” சிவாளி வீட்டுக்கு” தனது ஹேரை சரி செய்தவாறே ஸ்ஸூவை மாட்டினான்.
” ஏன் சார், பசங்க கூடலாம் விளையாட மாட்டிங்களா? பொண்ணுங்க கூடத்தான் விளையாடுவீங்களா..”
” என்ன ஜானுமா.. நீதான் சேட்டை பண்ற பசங்க கூட சேரகூடாதுன்னு சொன்ன அதான் நான் பசங்க கூட சேராம பொண்ணுங்க கூட விளையாடுறேன். உன் பேச்சை என்னைக்காவது மீறி இருக்கேன்னா சொல்லு…” என்றான் நல்லவனாய்..
” மகனே ! கூஸ்பம்ப்ஸ் தான்… பார்த்து விளையாடு, எதுவும் கம்பளைண்ட் வந்துச்சு தொலைச்சிடுவேன்” என்றவளின் சத்தமட்டுமே இருக்க அவன் சென்றுவிட்டான்.
” என்னப்பா சாப்பிட்டீங்களா ? “
” நான் சாப்பிட்டேன் ஜானு, நீ குளிச்சிட்டு வந்து சாப்பிடுமா…” என்றார்.
” இல்லப்பா, இன்னைக்கு கொஞ்சம் கிரிட்டிகளான கேஸ் பார்த்தேன். கொஞ்சம் தலைவலிக்கிது நான் தூங்க போறேன். கொஞ்சம் நேரம் கழிச்சு சாப்பிடுறேன்ப்பா… ” என்றாள்.
” சரிம்மா, நீ நல்ல ரெஸ்ட் எடு.. நான் சும்மா பார்க்ல வாக்கிங் மாதிரி போயிட்டு வரேன்.. ” அவரும் வெளியே செல்ல, ” அப்பா… அவனுக்கு சொன்னது தான் உங்களுக்கும் எதுவும் கம்பளைண்ட் வரமா பார்த்துங்க” என்று அவளும் மிரட்டினாள்.
” என்னடா சின்னபிள்ளைகிட்ட சொல்றத என் கிட்டையும் சொல்ற?”
” எவ்வளவு ஸ்ட்ரிட் ஆபீசரா இருந்த நீங்க, இப்ப சில்லியா, உங்க கிராண்ட் சன்கூட சேர்ந்து, பண்ற கூத்துனால தான் சொல்லுறேன். கம்பளைண்ட் வரமா பார்த்துக்கோங்க… ” எனவும்
அசடு வழிய சிரித்தவர் பூனை நடைபோட்டு வெளியே சென்றுவிட்டார். கதவை தாழிட்டு உறங்கச்சென்றாள்.
Mr.வெங்கடேஷ் M.B.B.S M.D பெரும் பலகை மாட்டியிருந்து அந்த சுவரில். அதற்கு கீழ் காலிங் பெல் இருக்க, என்றும் போல அவனால் எட்டி அழுத்த முடியவில்லை.. எக்கி எக்கி ஒவ்வொரு முறையும் முயற்சிப்பான் ஆனால் முடித்திடாது, ‘ இந்த கம்பிளான்காரனை நம்பவே கூடாது. இரண்டு நேரம் குடிக்கிறேன். இந்நேரம் எவ்வளவு மடங்கு வளர்ந்திருக்கணும். இனி ஜானுகிட்ட, வேற ட்ரீங் தான் வாங்க சொல்லணும் ‘ தன்னோடு பேசிக்கொண்டவன், தன்னையும் பெல்லையும் மாறி மாறி பார்த்தான்.. வேண்டாம் வெள்ளை கொடியே காட்டுவோம்.. என கதவை தட்ட செல்கையில். அவனை யாரோ தூக்க, பெல்லை அழுத்தினான்.
” வெங்கி அங்கிள்”
” என்ன சித்து…. இன்னைக்கும் எட்டலையா ? “
” என்னைக்கும் எனக்கு எட்டாது போல அங்கிள்….”
” இல்ல சித்… இன்னும் நீ வளருவ. உன் முயற்சி எப்பையும் வீண் போகாது இதுவும் ஒரு உடற்பயிற்சி தான் ” என்றதும் கதவு திறக்கப்பட, இருவரும் உள்ள நுழைந்தனர்.
” குட்மார்னிங் சித்… ” வெங்கியிடம் காபியைக் கொடுத்து அவன் பக்கத்தில் அமர்ந்தாள் சக்தி.
” குட்மார்னிங் ஆன்ட்டி… “
” என்ன சித், இன்னைக்கும் உன் முயற்சி டவுன் தானா ? “
” ஆன்ட்டி… கண்டிப்பா, ஐ கேன் டூ இட். வெய்ட் ஆண்ட் சி” என்றவன், ” ஆன்ட்டி வேர் இஷ் சிவாளி? “
” இன்னும் தூங்கிற சித், கோ ஆண்ட் வேக் ஹேர்…”
” ஓ.கே ஆன்ட்டி..” சிவாளியின் அறைக்குள் நுழைய., டெடிபியர்களும் ரேபிட் பென்குயின், பப்பி பொம்மைகள் சூழ உறங்கிக் கொண்டிருந்தாள்.
” ஓ.காட் இவ, இதுங்க இல்லாம தூங்க மாட்டா போல… வாட் இஸ் திஸ் ” என எல்லா பொம்மைகளை கலைத்தவன் ” சிவாளி வேக் அப்… சிவாளி வேக் அப்….” என்று எழுப்பினான்.
” சித்.. ப்ளீஸ் டோன் டிஸ்டர்ப் மீ. ஐ வான்ட் டு ஸ்லீப்…” என்று இழுத்துப் போர்த்திக் கொண்டாள்.
” ஹேய் சீலிப்பி ஹேர்ள் வேக் அப்.. டைம் டென் ஹேர்ள் வேக் அப்…”
” சித்… எனக்கு தூக்கம் தூக்கமா வருது. நைட் லேட்டாதான் தூங்கினேன்” என்றவள் கண்ணை கசக்கி கொண்டு எழுந்து அமர்ந்தாள்.
” இதே உனக்கு வேலையா போச்சு , டோன்ட் ப்ளே இன் தீ செல் ஹேர்ள்.. ஐ ஹேட் இட்… ” என்றான். நம்மாளு கொஞ்சம் வித்தியாசம் தாங்க.
” நோ, எஸ்டர் டே ஐ சாய மூவி. அதுனால தான் லேட்.. ” என்று எழுந்து அமர்ந்தாள்.
” இப்ப சைக்கிளிங்க்கு நீ வரியா? வரலையா ? இல்லைன்னா, நான் ஸ்வே கூட விளையாட போவேன் ” என்று பெட்டிலிருந்து குதிக்க.,
” நோ சித். ” நான் வரேன். நீ வெய்ட் பண்ணு ” என்றாள்..
” ஓ.கே ” என்றவன் வெளியே வந்தான்.
” என்ன சித்.. உன் மம்மி வந்துடாளா ? “
” எஸ் அங்கிள் கேம் ” அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். ” சித்… வா சாப்பிட,. ” சக்தி அவளை அழைக்க,
” இல்ல ஆன்ட்டி ஆல்ரெடி ஏட் ” தனது கையை வயிற்றில் தடவினான்.
” மா… பசிக்கிது ” எனகுளித்து விட்டு உடைமாற்றி வந்தாள் சிவாளி.
” பார்த்தீங்களா, உங்க பொண்ண எப்ப எழுந்து வரான்னு? சித் வந்ததால எழுந்தா.. இல்லைன்னா லன்ஞ்க்கு தான்..”
” சக்தி, அவ குழந்தை. சீக்கிரமா எழுந்து என்ன பண்ண போறா ? ”
” அதுக்கு இல்ல. இப்படியே லேட்டா எழுந்தா, லேசியா தான் ஆவா. சித்தை பாருங்க எப்படி பொறுப்பா, நேரமா எழுந்த இருக்கான். இவ் ப்ரண்ட் தானே இவனும்…”
” ஓ..காட் … எல்லா அம்மாவும் இப்படி தானா? ஏன் ஆன்ட்டி, கம்பேர் பண்றீங்க? ஜானுவும் சிவாளியோட கம்பேர் பண்றா திஸ் இஸ் டூ மச்.. எங்களைக் கம்பேர் பண்ணி குறை சொல்லாதீங்க.
சிவாளிக்கும் எனக்கும் என்ன பிடிக்கிதோ அதை தான் செய்றோம். ஆனா, ஏன் உங்களுக்கு அது பிடிக்கலன்னு தெரியல? நீங்களும் சைல்ட்குட் தான்டி வந்தவங்க தானே! தென் ஓய் ஆல் மாம்ஸ் ஆர் கம்பேரிங்க? ” என்று கேட்டான்.
” ஹாஹா…. சித்… யூ ஆர் ரைட் .
சைல்ட்டா நீங்க எதிர்பார்க்கிறதும் பெரண்ட்டா நாங்க எதிர்பார்க்கிறதும் வேற வேற தான் என்ன பண்றது? அந்த பொஷிஷனுக்கு வந்தா, ஆட்டோமெடிக்கா பெரண்ட் பார்முக்கு வந்திடுறோம்… இனி சக்தி கம்பேர் பண்ணமாட்டா, ஜானு டூ ஒ.கேவா..” என்று அவர்களை சமாதானம் செய்தான்.
” நோ அங்கிள், ஆன்ட்டி இஸ் மச் பெட்டர் தான் ஜானு. ஜானுவால கம்பேர் பண்ணாம இருக்கவே முடியாது.”
” ஒ.கே சித்… போலாம் வா. ” என அவனது கையைப்பற்றி அழைத்துச் சென்றாள். இருவரும் கீழே வந்து தனது சைக்கிளை எடுத்துக் கொண்டு அருகே உள்ள பார்க்கில் சுற்றினர்.
” சித்…. ஐ யம் சோ டயர்ட் போய் உட்காரலாம்…” சைக்கிளை நிறுத்தி கல்பெஞ்சில் அமர்ந்தனர்.
” சித் ரொம்ப போர் அடிக்கிது, யாரையாவது வம்பிழுக்கலாமா ?”
” எப்படி சிவாளி? ஜானு கிட்ட என்னை மாட்டிவிட்டுட்டு. நீ நல்ல பெயர் வாங்கிக்க தானே இப்படிசொல்லுற? ” எனவும்
” சித்… அப்படி எல்லாம் இல்ல, பட் நாம இது வழக்கமா பண்ணுறது தானே! ” என்றாள்.
” எஸ். பட் இப்பலாம் ஜானு அதிகமா திட்றா… அதான் அமைதியா இருக்கேன் ” என்றான்.
” சித்… நீ பீல் பண்றீயா ? இதெல்லாம் பண்ண மாட்டியே பாய்” அவன் தாடையைக் உயர்த்தி கேட்டவள்
” ஹேய்.. நம்ம சொட்ட செக்கரட்டிரி ” என்றதும் அவனது பார்வை அங்கே சென்றது.
” அன்னைக்கு அம்மாகிட்ட கத்திருக்கான், நாம சைக்கிளை ஒழுங்க நிறுத்தி வைக்கலையாம். அவன் சொன்ன இடத்தில நிப்பாட்டனுமா இல்லைன்னா, சைக்கிளைத் தூக்கி போட்டுருவேன் கத்திருக்கான். அவனை எதாவது பண்ணனும் சித்.. ” என்றாள்.
அவரையே பார்த்து யோசித்தவனுக்கு, சிக்கியது ஒரு பெரும் திட்டம். அங்கே பூக்கள், செடிகளுக்கு நீர் இறைத்துக்கொண்டிருந்தார் தோட்டக்காரர். அவர் நிற்கும் இடமும், தண்ணீர் டேப் இருக்கும் இடம் தூரமாக தான் இருந்தது. பெரிய டீப்புகளை மாட்டி தண்ணீர் பாய்ச்ச, அங்கே சென்றவர்கள், தண்ணீர் டேப்பை பூட்டி ஒளிந்து கொள்ள தண்ணீர் வருவது நின்றது. அவரோ புரியாமல் டிப்பின்னுள்ளே பார்த்து நின்றார்…
” என்ன சாமி, என்ன பார்க்கிற ? ” என்று செக்ரட்டிரி வர.. ” ஐயா தண்ணீ திடிர்னு நின்னுப் போச்சுயா. அதான் என்னானு பார்க்கிறேன்? ” எனவும்
” இங்க பார்த்தால், போய் டேபிப்பிலிருந்து பைப் ஏதுவும் விலகிருக்கா பாரு… ” என்றவர் டிப்பை கையில் வாங்க.இங்கே இருவரும் டேபை திறக்க, தண்ணீர் முழுவதுமாக அவரை நனைத்தது… தண்ணீர் வந்த போர்ஸ்ஸில் அவருக்கு மூச்சு திணறியது.” ஜயா ஜயா… ” என அவர் அருகில் ஒடி வந்தான்.
” எஸ்… ” இருவரும் ஹைபைப் போட்டுவிட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு ஓடி வந்தனர். அவர்கள் ஓடியதைப் பார்த்தவர் ” சித்…” என கத்திக் கொண்டு வந்தார்.
ரகுவிடம் சொல்லி மூவரும் சிரிக்க, நனைந்தவாறே ரகுவிடம் வந்தார்.
” மிஸ்டர் ரகு.. உங்க பேரன் பண்ணினதை பார்த்தீங்களா? ” எனக் கேட்க,
” சேகர் சார், நான் எதுவுமே பார்க்கலையே என்ன பண்ணினாங்க? ஆமா நீங்க ஏன் குளிச்சிட்டு அப்படியே வந்திருக்கீங்க? என்னாச்சு சார் எதுவும் வேண்டுதலா ? எந்த கோயிலுக்கு? ” என ரகு நக்கலாக கேட்டார்.
” ரகுசார் ஸ்டாப் இட்.. இதெல்லாம் உங்க பேரன் பண்ணது தான். உங்க கிட்ட சொல்லி எந்த பிரோஜனமும் இல்லை? நான் ஜானு கிட்ட பேசிக்கிறேன்” என்று மிரட்ட,
” நில்லுங்க சேகர் சார்.. என் பேரன் தான் பண்ணான்னு உங்களுக்கு எப்படி தெரியும்? அவன் தான் உங்க மேல தண்ணீர் ஊத்தினான்னு . எதை வச்சு அவன் தான்னு சொல்லுறீங்க? எப்ப பாரு அவனை எதாவது சொல்லி என் பொண்ணுகிட்ட திட்டு வாங்க வைக்கிறீங்க. எப்படி சார் அவன் தான் பண்ணான்னு சொல்லுறீங்க? ” என குரலில் கடுமையை காட்டினார்.
” இல்ல, அவன் தான் சைக்கிள்… அந்தப் பக்கமா.. ” என பயந்து வார்த்தைகள் வர,
” நல்லாருக்கு சார். அந்தப் பக்கமா யாரு போனாலும், அவங்கதான் பண்ணிருப்பாங்க அப்படிதானே! அப்ப நான் போயிருந்தாலும் நான் தான் பண்ணிருப்பேன் நீங்க சொல்லிருப்பீங்க..” என்றதும் வேகமாக “இல்லை “என்றார் அவர்.
” போங்க சார் போய் வேற வேலைய பாருங்க…” எனக் கத்தியவர் இருவரையும் அழைத்துச்சென்று விட்டார்.
” ரகு, லவ் யூ…. ” என அவரைக் கட்டிக் கொண்டான்
மாலையாகியது. ஜானு, தன் மகனைக் கஷ்டபட்டு அமரவைத்தாள், வேற எதற்கு ஹோம்வொர் செய்ய வைக்கத்தான்.
” அப்பா…. ” என உள்ளே நுழைந்தான் ஜகதீஸ். ” மாமா…” என சித் அவனை கட்டிக்கொள்ள, ” சித்… ” என ஜகாவும் அவனைத் தூக்கிகொண்டவன், அவனுக்காக வாங்கி வந்ததைக் கொடுத்தான்.
” வா ஜகா… வா வைஷூ குட்டி..” தனது மருமகளை தூக்கி மடியில் அமர்த்தினாள்.
” அத்த…” என அவள் முத்தம் வைத்தாள். ” அட்வான்ஸ் ஹாப்பி பெர்த்டே மருமகளே ! ” என்றாள்.
“போ அத்த… நீ நாளைக்கு வந்து விஷ் பண்ணு. இந்த விஷ்,எனக்கு வேணாம் ” என்றதும் அவளைத் தயங்கியே பார்த்தாள்.
” என்ன ஜானு, நாளைக்காவது நீ வாயேன்”
” இல்லை ஜகா, அப்பா வருவார். அவரை வேணா கூட்டிட்டுப் போ, நான் வரலை ” என்றாள்.
” வைஷூ குட்டி, அத்தைக்கு வேலை டா. நான் தாத்தா கிட்ட, உன்னோட கிப்ட் கொடுத்து விடுறேன்.. சாரிடா ” என அவள் கெஞ்சவும்
” எனக்கும் தெரியும் அத்தை… ப்ளீஸ், சித் வரட்டும். நீங்க அவனுக்கு பெர்மிஷன் கொடுங்க ப்ளீஸ். என் பெர்த்டேக்கு சித் வரலைன்னா, நான் கேக் கட் பண்ணமாட்டேன். ப்ளீஸ் அத்தை… ” என்றாள் முகத்தை சுருக்கி.
” ப்ளீஸ், சித்தையாவது விடேன் ஜானு மா! !” என ஜகதிஸ்ஸூம் கெஞ்சிட,
” ஆமா ஜானு, நான் அவனை கூட்டிட்டுப் போறேன் ” என்றார் ரகு,
” இல்லப்பா….” என இழுத்தவள் சித்துவைப் பார்க்க, அவன் எதையுமே எதிர்பார்க்க வில்லை அமைதியாக நின்றான்.
” சரி அண்ணா… நாளைக்கு சித் வருவான். நல்லா என்ஜாய் பண்ணுங்க ஒ.கே வா வைஷூ! ” என்றாள்.
” ஹேய்… தாங்க்ஸ் அத்த. சித் நாளைக்கு உனக்கு ஒரு சப்ரைஷ் இருக்கு ” என்றாள்.
” என்ன வைஷூ அது ? ” எனவும்
” அது தான் சப்ரைஸ். நாளைக்கு நீ வா…” என்று கன்னத்தில் முத்தமிட்டாள். அவனோ, ஜானுவைப் பார்க்க அவனை முறைத்தாள்.
குறும்பு தொடரும்….