என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

images (19)

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

  • JULIET
  • September 1, 2020
  • 0 comments

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ…

 

அத்தியாயம் 1

 

வால்பாறை வட்டப்பாறை
மயிலாடும்பாறை மஞ்சபாறை
நந்திப்பாறை சந்திப்பாறை
அவரு என்ன மட்டும் சிந்திப்பாறே….
பாறே… என்னை பாறேன்…

ஹ்ம்மம்ம்…ம்ம்ம்ம்….

என்று ஏற்ற இறக்கங்களுடன் பாடி கொண்டே, அவ்வீதியில் முயல் போல் வந்து கொண்டிருந்தாள் அவள்…!

புசு புசு போல் பஞ்சு தேகம்..
தோள் வரை வெட்ட பட்டிருந்த கூந்தல்… அளவான நெற்றி…
கதை பேசும் கண்கள்…
வடிவாய் நாசி..
ரோஜா நிற உதடுகள்..
இயல்பாய் சிவந்த கன்னம்…
லூசான பெனியன்… அதற்கு ஏற்றார் போல் இன்றைய காலத்து பட்டியாலா பேண்ட்.

பார்க்க பார்க்க தெவிட்டாத அழகு…! ஆனால் அந்த அழகை பற்றி அக்கறை இன்றி…
எந்தவித எதிர்கால இலக்கும் இன்றி… பெற்றோரே உலகம் என்று வாழும் வளர்ந்த குழந்தை இவள்.

அது ஒரு ரம்மியமான காலை பொழுது…!!
விடிந்தும் விடியாததுமாய்…
வரவா…
நான் வரவா என தன் உஷ்ண கதிர் வாள்களை நீட்டியும் மடக்கியும் ஆதவன் தன் சோம்பல் முறிக்க…
ஒளிந்தும் மறைந்தும் கவி பாடிய சந்திரன் தன் பள்ளி அறைக்கு வாசம் செய்ய புறப்பட…
சுகமான தென்றல் காற்று வீதியோரமாய் நின்ற பன்னீர் பூக்களை தொட்டும் தொடாமலும் தன் காதலை சொல்லி செல்ல…
சிட்டு குருவிகளின் பேச்சுக்கள் கீச் கீச் என ஒரு வகை ரகம் இழுக்க…
அந்த பூக்களின் மணத்தையும் குருவிகளின் கானத்தையும் தன் பாட்டுக்கு துணைக்கு அழைத்தவாறு கொஞ்சம் துள்ளல் நடையோடு இளவரசியாய் பவனி வந்து கொண்டிருந்தாள் நம் கதையின் நாயகி…

சொல்ல போனால் இன்றைய கால பாடல்களில் எத்தனை இனிமை இருந்தாலும் திகட்ட திகட்ட… அள்ளி அள்ளி… பருகி ருசிக்க முடியாதே..?!

எல்லாம் ஒரு எல்லை வரை தானே..! ஆனால் பழைய பாடல்கள்…

அதுவும் அம்மாவின் வயிற்றில் இருக்கும் போது கேட்ட பாடல்கள்…
அப்பப்பா… இப்பொழுது கேட்டாலும் என்னனவோ செய்யும்..
அப்படியே மயிர் கால்கள் எல்லாம் சிலிர்த்து அடங்கும். அந்த வகை உணர்வுக்கு ஈடு இணை இல்லை என்பாள் இவள். அதுவும் பழைய கால பாப் தமிழ் பாடல்கள் என்றால் அலாதி இஷ்டம்… எல்லாம் பக்கத்து வீட்டு மாலதி அக்கா புண்ணியம்…

அந்த காலனியிலே பிறந்து வளர்ந்திருந்தாலும்… எத்தனை முறை சுத்தி வந்தாலும் அவளுக்கு சலிக்கவே சலிக்காது… அத்தெருக்கள்.. அருகருகே அமைந்திருக்கும் வீடுகள்…
அத்தனை அழகு..

ஆம்… பிரம்மனுக்கு அடுத்த படியாக கலை நயம் கலந்து வலம் வரும் இன்றைய கால தொழில் நுட்ப வல்லுனர்களால் அழகாய் வடிக்கப்பட்டிருக்கும்
நேர்த்தியான வீடுகள்..
சுத்தமான வீதிகள்…

வீடுகளின் முன் அமர்ந்து பேசி சிரித்து கொண்டிருக்கும் ஒரு சில முதியவர்கள்…
வம்பிழுக்கவே காத்திருக்கும் சில குத்து விளக்குகள்…
தெருவோர ரோமியோக்கள்(எப்படி தான் விடியற்காலையிலே டூயிட்டி பாக்க நேரம் தவறமா வந்திருதாங்களோ…ஸ்ஸ்ஸ்ஸ்….. ஷாப்ப்பா…முடியலடா சாமி….உங்க கடமை பொறுப்பிற்கு அளவே இல்லையாடா…?! )
சோம்பல் முறித்து கொட்டாவி விட்ட படி அமர்ந்திருக்கும் சிறுசுகள்… என கிராமமும் நகரமும் சேர்ந்து வாசம் செய்யும் ஸ்தலம் அது…
அவளை பொறுத்த வரை சொர்க்கப்பூமி…

அந்த பிரதான காலனியில் பார்வைக்கு பளிச்சென படும் இடத்தில் படு சுத்தமாகவே இருந்தது அவள் கடை. அது ஒரு மினி சூப்பர் மார்க்கெட்.

அவள் அப்பா நடத்தி வரும் கடை.இவள் அவ்வப்போது வந்து அப்பாவுக்கு உதவியாக இருப்பாள். அம்மாவுக்கு அதில் விருப்பம் கிடையாது. சகோதரி போல் தூசு படாமல் ஒய்யாரமாக ஹை ஹீல்ஸ், உயர் ரக ஆடை அணிந்து ஏசி அறைக்குள் நுனி விரல் பட்டும் படாமலும் தாழிசைக்கும் தொழில் நுட்ப வேலை பார்க்கவே விரும்புகிறாள். ஆனால் இவளுக்கு அதில் நாட்டம் இல்லை..

அப்பாவின் கைக்குள் சுகமாய் சாய்ந்து கொண்டு திரியவே விரும்புவாள். அதில் அந்த அப்பாவுக்குமே அலாதி இன்பம். !

என் தேவதை இவள்…! ஆராதிக்க பிறந்தவள் என் மகள்…! என் வீட்டு செல்ல இளவரசி.! எனக்கு மகிழ்ச்சியை மட்டுமே அள்ளி தருபவள் என்று பெருமிதம் கொள்வார்.

அதில் சகோதரிக்கு சின்ன சுணக்கம் உண்டு. ஆனால் அவளை தாங்கவே வருவாள் அன்னை.அதனால் பூசல்கள் இன்றி நிறைவாய் செல்கிறது அவர்களது வாழ்க்கை… கொஞ்சம் பணக்கார தோரணையில் வாழும் நடுத்தர குடும்பம்.

அப்பா தேவேந்திரன். அம்மா கீர்த்தனா. மூத்தவள் வதனா.
இளையவள்….
இவள்…
ஆம் இவள் அவளே தான். இத்துணை தூரம் தமிழ் எழுத்துக்களால் கொஞ்சமே கொஞ்சம் வர்ணிக்கப்பட்ட நம் கதையின் நாயகி… ஆராதிக்கவே பிறந்தவள் ஆராதனா….

மூத்தவள் மூளைக்காரி.படிப்பில் கெட்டி. படு பாந்தவாக வேலையில் அமர்வதே இவளது இலட்சியம். அதற்கேற்றார் போல ஒரு நல்ல பெயர் சொல்லும் கம்பெனியில் ஆலோசகராக பணி புரிய வாய்ப்பு கிடைக்கவே கடந்த வருடம் முதல் வேலை செய்து வருகிறாள்.

இளையவள் படிப்பில் கெட்டி இல்லை என்றாலும் மோசம் இல்லை. நல்ல கற்பனை திறன் கொண்டவள்.எதையும் எளிதில் மனதிலே பதிய வைத்துவிடும் நியாபக சக்தி கொண்டவள். பெரிய ஓவியராக வர அத்தனை தகுதியும் மிக்கவள். ஆனால் வேலைக்கு செல்வது இழுக்கு என்று எண்ணுபவள்.

ஆடி பாடி கதை பேசி சிரித்து மகிழ்ந்து பெற்றோருடனும், அண்டை உறவுகளுடனும், குழந்தை பருவ நட்புகளுடனும் நேரம் செலவிடமால் இப்படி மாங்கு மாங்கு என்று இயந்திரம் போல் உழைத்து கொட்டி என்னத்தை சாதிக்க…?! சந்தோசமாய் இருக்க வேண்டிய காலம் வரை அப்படியே இருப்போமே. அவசியம் வரும் போது மெதுவாக வேலைக்கு செல்லலாம் என்பதே இவள் எண்ணம்.

இப்போதைக்கு தந்தைக்கு உதவியாக கடைக்கு சென்று வருகிறாள். இப்போது கூட கடையை காலையிலே திறந்து வைக்க தான் அம்மணி அன்ன நடை நடந்து சென்று கொண்டிருக்கிறாள்…

எத்தனை மெதுவாக நடந்தாலும் காலம் இவள் சொல்வதை என்ன கேட்டுக் கொண்டா இருக்கும்… ?!!

 

______________________________________________________

 

“அம்ம்ம்மாமாமாமா…..
அம்ம்மா….”

“ஏன்டி…. இப்படி கத்தி கூப்பாடு போடுற…?! உங்க அம்மா என்ன டெல்லிலயா இருக்கா…!இந்த கத்து கத்துற…..?”

“ச் ச் ச்……. அம்ம்மா….நான் உங்ககிட்ட என்ன சொன்னேன்….?!
நீங்க என்ன பண்ணி வச்சிருக்கீங்க…
போச்சு… எல்லாம் போச்சு….!!
ஹைய்யோ..! நான் இப்போ என்ன பண்ண போறேன்…???!”

“ஏன்டி இப்படி காட்டு கத்தல் போடுற…
இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி துள்ளுற…?!”

“இன்னும் என்ன ஆகணும்?
இப்போ உங்களுக்கு சந்தோசமா…?!”

“என்னன்னு முதல சொல்லி தொலைடி…. “

“என்னவா… ?! நான் தான் நேற்றைக்கே சொன்னேனே… இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு.. 8 மணிக்கு அங்க இருக்கணும்ன்னு சொன்னேனா இல்லையா… சீக்கிரமே எழுப்பி விட்ருக்கலாம்ல… இப்போ நான் எப்படி ஆஃபீஸ் போறது….”

என்று புலம்பியபடி வராத. . . காவேரி தண்ணீரை மூக்கால் உறிஞ்சி தள்ளியபடி குடும்ப சீரியலை பிரதி பலிக்க ஆயத்தமானாள் அவள்.. அவள் வதனா…

“இப்போ என்னடி…. ? பிள்ளை கொஞ்சம் அசந்து தூங்குறாளே… ஒரு நாள் தானே தூங்கிட்டு போகட்டும்னு விட்டேன்.. அதுக்காக என்ன என்னடி பண்ண சொல்ற….?!”

“நீ ஒரு நாள்ளாவது வேலை டென்ஷன் இல்லாம நிம்மதியா தூங்கிறீயா…. எப்போ பாரு வேலை வேலை…!!”

“ஏன்டி இப்படி அலையுற…?
கொஞ்சம் உன் வயசுக்கு ஏத்த மாதிரி மத்த பசங்க போல இருக்க வேண்டியது தானே…”

“அம்ம்மா…..”

என்று தன் கோபத்தை பற்களை கடித்து அடக்க முற்பட்டாள்….

அம்மாவிற்கு நன்றாக தெரியும் இவளது லட்சியம் பற்றி… அதில் பெருமையும் கூட… இருந்தும் இப்படி பேசுவது வதனாவிற்கு கோபத்தை கிளரியது….

“சரி சரி.. கோவிச்சிக்காத…. அழகான உன் முகம் கலையிழந்து போகுதுடி… நான் உனக்குள்ள எல்லா பொருளையும் எடுத்து வச்சாச்சி. நீ சாப்பிட்டு கிளம்புனா நேரம் சரியா இருக்கும்…

நோ வொர்ரி பேபி… கூல்…
போ.. போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா…” என்று சமாதானம் கூறி அவளை அனுப்பி வைத்தாள் அம்மா…

வதனா… அம்மாவை போல் கொள்ளை அழகு… ஒல்லியான உடல்வாகு தான்.ஆனால் அவள் அணியும் நவநாகரீக உடைக்கு ஏற்றவாறு வெகுகச்சிதமாக பொருந்தி அவள் அழகை இன்னும் மெருகேற்றி காட்டும்….

ஆள் பாதி.. ஆடை பாதி.. என்பார்கள்…! அது இவளுக்கு நன்றாக பொருந்தும். அத்தனை கவனம் அதில்.

அது போல் இவளுக்கு எல்லாவற்றிலும் ஒரு நேர்த்தி இருக்க வேண்டும்.. பேச்சு சுத்தம். தொழில் என்று வந்துவிட்டால் அத்தனை பக்தி.

அவள் வேலை செய்வது வி.கே குரூப்ஸ் கம்பெனியில் பங்கு சந்தை மற்றும் தொழில் ஆலோசகராக. மனதுக்கு நிறைவான வேலை.
.
“பாய் பாய்…. அம்மா… பாய்..”

“யெஸ்.. யெஸ். எல்லாம் எடுத்தாச்சி.. போய்ட்டு வரேன் மா…”

என்று கூறி தான் செல்ல வேண்டிய பேருந்து நிறுத்தத்தை நோக்கி ஓடினாள் வதனா….

“ஷ்ஷ்ஷ்…. ஓ காட்.. எப்படியாவது பஸ் சீக்கிரம் வந்துரனும்…”
என்று கடவுளிடம் சிறு வேண்டுதலை போட்டப்படி தன் நடையை கட்டினாள்.

“ஹேய் வதனா… என்ன இவ்வ்ளோ அவசரமா போகிற?”

என்றபடி வந்தான் ராம். அக்காலனியில் வசிப்பவன். சிறு வயது முதலே பழக்கம்..

“இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு. சீக்கிரம் ஆபிஸ் போகணும்ப்பா.. அதான்…”

“ச்சு… இவ்ளோ தானா… சரி வா.. வந்து என்னோட கார்ல ஏறு.. நான் என்னோட பேக்கரிக்கு தேவையான சாமான்கள் வாங்க அந்த ஏரியா தான் போறேன்…”

ராம் பேக்கரி கடை ஒன்று அவர்கள் காலனியில் நடத்தி வருபவன். ஒரு தங்கை உண்டு. அம்மா அப்பா இல்லை. பாட்டியின் அரவணைப்பில் வாழ்பவர்கள்.

“நோ ராம் நோ…ஐ கேன் மனேஜ். யு கோ..”

“ஹேய்… நோ ப்ராப்லம்… உன்னை நான் ஒன்னும் சுமந்துட்டு போக போறது இல்லை… வண்டி தானே… கம்…”

“ஹே….. அப்படி இல்லை… பட் இட்ஸ் நாட் குட் ஐ திங்க்…”

என்று காலனியில் வம்பு பேசவே காத்திருக்கும் சில பெண்மணிகளை சுட்டி காட்டி … “சோ… நோ….”

“ஏய்… நீ ஓவரா தான் பண்ணற… நம்மல தான் இங்கே எல்லோருக்கும் தெரியுமே… சோ ஐ திங்க் நோ ஒர்ரி..”

அவள் முகம் பிடிவாதத்தை காட்ட… அவன் பேச்சை மாற்றும் பொருட்டு…,

“போ போ… போற வழியில உன் பஸ் எங்காவது போய் முட்டிக்க போகுது… அப்போ பீல் பண்ணுவ பாரு…”

என்று வராத கோபத்தை காட்ட முயன்று தோற்றான் அந்த காலனியின் ஆணழகன்…

“அட ச் சீ..போடா..”

“சரி விடு… என் கூட தான் வர மாட்டேன்னு சொல்லிட்ட… உன்னை பஸ்லயாவது ஏற்றி விட்டுட்டு போறேன்…”

“ஹா ஹா ஹா…..
ஆமா ஆமா…. இவர் தான் டெய்லி என்னை பஸ் ஏற்றி விட்டுட்டு போறார்….
வரார்ராம்… அட போடா…”

‘நீ சொன்னாலும் சொல்லாட்டியும் தினமும் நான் தான் உன் கூடவே வரேன்.. ஆனால் உனக்கு தெரியாம… தெரிஞ்சா அலவ் பண்ணுவியே மாட்டியோன்னு கொஞ்சம் பயம்… இல்லை இல்லை… தயக்கம்…’

அவசரமாய் கவிதை ஒன்று இதயத்தில் பூத்தது அந்த அழகிய மன்மதனுக்குள்…

இந்த காதல் இருக்கிறதே…அப்பப்பா…!
கோழையை கூட வீரனாக்கும்… வீரனை கூட தயக்கம் கொள்ளச் செய்யும்…

அவனது மனதில் காதல் சடுகுடு ஆட்டம் துவங்க… அவன் விழிகள் காதல் பாஷை பேச ஆரம்பித்தது பெண்ணவளிடம்…

அழகே உருவாய்.. கச்சிதமாக செதுக்கிய சிலை போல் முன்னாள் நிற்கும் அந்த பேரழகியின் முன் சட்டென மண்டியிட்டான் ராம்…

புன்னகையை சுமந்து நிற்கும் அந்த நீள் வட்ட பெரிய கயல்விழிகளை நோக்கி…

“ஐ லவ் யூ .. லவ் யூ சோ மச்…”

சொல்லி விட்டான்…
ஆம்..!
அந்த காதல் வார்த்தையை கடைசியில் சொல்லியே விட்டான்…
மனதினுள் பொக்கிஷமாய் அவன் இந்நாள் வரை சேமித்து வைத்த நினைவுகளை மடை திறந்த வெள்ளமாய் கொட்ட ஆரம்பித்தான் அந்த காதல் பித்தன்…

“என் கடைசி ஜென்மம் வரை…
வாழ் நாள் முழுமைக்கும்..
குழந்தைகள் பேர்க்குழந்தைகள்…
என மகிழ்ச்சி மட்டுமே பிரதானமாக கொண்டு…
காதலெனும் ஊஞ்சல் கட்டி…
திகட்ட திகட்ட… அன்பை காட்டி… அழகான ஒரு வாழ்க்கை நாம் வாழ… எனக்கொரு வாய்ப்பு தருவாயா என் கண்மணி…?!”

பொது இடம் என்று பாராமல்…
அத்தனை பேர் முன்னிலையில்…
அனைத்தையும் மறந்து….

பெண்ணவள்… அவனவள் முன் மண்டியிட்டு காதல் யாசகம் கேட்டான் அவனவன்…?!?

விழி திறந்து… உலகம் மறந்து…. கனா காண்பது இப்போது அவள் வழியா…?! இல்லை அந்த காதல் நாயகனா???

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!