என் உயிரே பிரியாதே 3
என் உயிரே பிரியாதே 3
பிரியாதே 3
சைக்காலஜி ஒரு கிரேக்கச் சொல் “logia” விலிருந்து உருவான சொல்லாக்கம் ஆகும்.
அதன் பொருள் ‘மனதைப் படிப்பது. சுவாசம், ஆவி, ஆன்மா, ஆய்வு அதுவும் ஒரு கல்விக் கழகத்தில் பாடப் பயிற்சி ஒழுங்குமுறை மற்றும் அறிவியலார்ந்த மானிட, விலங்குகளின் மனோ செயல்முறை மற்றும் நடத்தை பற்றியதாகும். அவ்வப்போது ஓர் அறிவியல் வழிமுறைக்கு எதிராகவோ, கூடுதலாகவோ பயன்படுத்துகின்றபொழுது, அது குறியீட்டுப் பொருள் விளக்கம் மற்றும் விமர்சன ஆய்வை சார்ந்துள்ளது. இருந்தபோதிலும் சமூக இயல் போன்ற சமூக அறிவியல்களை விட முக்கியத்துவம் குறைந்தே உள்ளது. அப்படிப்பட்ட அபூர்வநிலை ஆய்வுகளை உளவியல் ஞானிகள் புலன் உணர்வு, அறிவாற்றல், கவனம், மனஎழுச்சி, செயல்நோக்கம், ஆளுமை, நடத்தை, தனிப்பட்ட உறவுகள் இடையில் உள்ளவை ஆகிய அனைத்தும் ஆய்ந்தறிகின்றனர். சில ஆழ்நிலை உளவியல் ஞானிகள் பிரத்தியேகமாக, தன்னுணர்வற்ற மனம் பற்றி புத்தாய்வு செய்கின்றனர்.
உளவியல் ஞானம் பல்வேறு மானிட செயல்பாடுள்ள துறைகளில் பயன்படுத்தப்படுகின்றன. அன்றாட வாழ்வில் உள்ள நடைமுறைகளில் அதாவது, குடும்பம், கல்வி, தொழில் மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்குரிய சிகிச்சை யாவும் ஆராயப் படுகின்றன. உளவியல் ஞானிகள் தனி நபர் மற்றும் சமூக நடத்தை பற்றிய மனோ ரீதியான வினைச் செயல்களைப் புரிந்துகொள்ள முயல்கின்றனர். மேலும் நரம்பு மற்றும் உடல் சார்ந்த வழிமுறைகளின் அடிப்படை அம்சங்களை புத்தாய்வு செய்கின்றனர். உளவியல் ஆய்வில் துணைத் துறைகள் மற்றும் அதன் பயன்பாடுகள் அடங்கி உள்ளன. அத்தகைய துறைகளாவன: மானிட வளர்ச்சி, விளையாட்டுகள், உடல்நலம், தொழிற்சாலை, ஊடகம், மற்றும் சட்டம் முதலியனவாகும். சமூக அறிவியல்கள், இயற்கை அறிவியல்கள் மற்றும் கலை, இலக்கியங்கள், மனிதப்பண்புகள் யாவும் பற்றிய ஆராய்ச்சியை ஒருங்கிணைப்பதே உள வியலாகும். ஓர் உளவியல் ஞானி என்பார் உளவியல் பயிற்றுவிப்பவரும், தொழில்முறைக் கோட்பாட்டை பின்பற்றுபவரும் ஆவார்.
உளவியல், மனநலம் பற்றிய ஆய்வுகளை உலக புகழ்பெற்ற மருத்துவர்கள் கட்டுரையாக பேசிக்கொண்டிருக்க. இதையெல்லாம் சிவா மறக்காமல் தனது நோட் பேடில் குறித்துகொண்டான். அவர்களின் எக்ஸ்ப்ரீயன்ஸ் பற்றியும், அவர்கள் குணப்படுத்திய நோயாளிகளை பற்றியும் காணொளி மூலம் அந்த கான்பிரன்ஸில் கலந்துகொண்டு உரையாடிக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு மருத்துவர்களும் உளவியலின் சொல்லிலக்கணம், வரலாறு, மனோ பகுப்பாய்வு,நடத்தை இயல் மனித இனநலக் கோட்பாடும் வாழ்வியல் மெய்ம்மைக் கோட்பாடும்,அறிவாற்றல்-இயல்பு, சிந்தனைப் பள்ளிகள், உயிரிலான மருத்துவமனை, அறிவாற்றல், ஒப்பிட்டு பார்த்தல், கலந்தாய்வு, நெருக்கடி நுண்ணாய்வு, வளர்ச்சி வாய்ந்த உளவியல், உளவியல் கல்வி, சட்ட ஆய்வு (வழக்கு மன்ற தொடர்புடைய) உளவியல், வாழ்க்கை தொழில் சார்ந்த உடல்நலம், சமூக உளவியல், ஆளுமை உளவியல், நரம்பு உளவியல் முறைகள்.
இப்படியான ஆராய்ச்சிகளின் வழிமுறைகளால் தான் பல உளவியலாளர்கள் உளவியலை ஆராய்வதுடன், அதை பயன்படுத்தவும் சில கருத்திற்காக தொழில் முறையில் செய்கின்றனர்.பல மருத்துவ மனை சார்ந்த திட்டங்கள் கொண்ட நோக்கத்தின் படி, அவைகளை நடைமுறைப் படுத்தும் உளவியலாளர்கள் ஆராய்ச்சி, பரிசோதனை முறைகளை அறிவு நலனுக்காக பயன் படுத்துகின்றனர். மனோதத்துவ ரீதியாக பிரச்சினைகள் கொண்ட தனிநபர்களை சிகிச்சை அளிக்க அவர்கள் உபயோகிக்கின்றனர்.
***********
இங்கே இவன் கான்பிரன்ஸில் இருக்க, அங்கே முரளியும், பிரபாகரனும் தங்களது திட்டத்தை அடுத்து எப்படி செயல்படுத்துவது என மும்பரமாக பேசிக்கொண்டிருந்தனர்.
“ஷீப் டாக்டர் அ பார்க்கனும்..” வரவேற்பு பெண்ணிடம் அவன் உரைக்க.
“ஒன் மினிட் சார்..” அவனிடம் காத்திருக்க சொல்லிவிட்டு ஷீப்பிர்க்கு போன் மூலம் தகவல் அளித்தாள்.
“உங்களை வரசொல்லிட்டாங்க சார்.. நீங்க போகலாம்.” அவள் சொல்ல, அவனும் ஷீப் –இன் அறை கதவை நாசூக்காக தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.
“வா.. முரளி” வரவேற்று கையில் ‘ட்ரீம் சைக்கலாஜி’ என்ற புத்தகத்தை எது வரை படித்தோம் என்பதை குறித்து வைத்துவிட்டு முரளியிடம் பேச ஆரம்பித்தார் பிரபாகரன்.
“சிவாவ எப்படியோ மும்பை அனுப்பிட்டோம், ஆனா அங்க பழையை நினைவுகளால் அவன் கவலைப்படுவானோனு பயமா இருக்கு ஷீப் எனக்கு.” முரளி வருத்தம் கொள்ள.
“அவன் கவலைபடுறானோ இல்லையோ நீ ரொம்ப கவலைப்படுற முரளி. இதுக்கு அவன் கூட நீயும் போயிருக்காலாமே முரளி இப்படி கவலைப்படுறதுக்கு.”
”போயிருப்பேன் ஷீப், ஆனா என் டிக்கெட் அ நீங்க தானே கிழிச்சி போட்டீங்க. அப்புறம் எப்படி போறது, அவன் என்ன செய்யுறானு நிமிஷத்துக்கு நிமிஷம் போன், மெசேஜ் பண்ணி கேட்டுட்டு இருக்கேன்.”
“ம்ம் என்ன சொல்லுறான்.. நார்மல் மோட், ஆர் அன் கம்பெர்டபிளா பேசுறானா? அவனோட குரல்ல இருந்து என்ன தெரிந்தது உனக்கு முரளி.”
“நார்மலா தான் பேசுனான் ஷீப்.. குரல்ல எந்த வித்தியாசமும் இல்லை. ஹீ இஸ் ஃபைன் ஷீப்.”
“வெரிகுட்.. இனி இரண்டாவது திட்டத்தை செயல்படுத்தலாம்.” அவர் கூலாக சொல்ல, முரளிக்கு தான் பயமாகிப்போனது.
“என்ன ஷீப் அடுத்த ப்ளான்?”
“டாக்டர்.சக்கரவர்த்தி..” அவர் சொல்ல, முரளியும் யார் அந்த சக்கரவர்த்தி மாறன் என சந்தேகமாக ஷீப் ஐ பார்க்க. முரளியிடம், சிவாவின் வாழ்க்கையில் பிருந்தா வந்ததில் இருந்து, அவள் இறப்பும், அதற்கடுத்து பிருந்தா இறப்பால் பாதிக்கப்பட்ட சிவாவின் மனநிலையை பற்றியும் அவரிடம் பிரபாகரன் எடுத்து சொன்னதாகவும் முரளியிடம் கூறினார்.
“அப்போ இந்த நேரம் அவர் சிவாவை பார்த்துருப்பாறே ஷீப்.”
“இந்த நேரம் சிவாவை அவரோட கண் பார்வையில கவனிச்சுட்டு இருப்பார் முரளி.”
********
கான்பிரன்ஸிற்க்கு வந்தது முதல் அவனையே கவனித்து வந்தவர்க்கு ஒன்று புரிந்தது. அவன் உண்டு அவன் வேலை உண்டு என இருந்தான். ஒவ்வொரு மருத்துவ கலந்துரையாடல்களின் கருத்துகளை அவன் குறிப்பெடுப்பதும், பக்கத்தில் இருந்த மருத்துவரிடம் சின்ன சிரிப்புடன் சில கருத்துகளை பகிர்ந்துகொள்வதுமாக இருந்தான் சிவா.
”ஹலோ மிஸ்டர். சிவா..ம்ம் சிவகுரு.” அவனை அழைத்து நிறுத்தினார்.
“எஸ்.. நீங்க..” அவன் பார்வையில் ‘நீங்கள் யார் என தெரியவில்லையே..’ என்ற பொருள் பொதிந்திருந்தது.
கான்பிரன்ஸில் கலந்துகொண்டவர்களின் ஒரு சிலரை மட்டுமே அவனுக்கு தெரியும். அதுவும், அவன் அருகில் இருந்தவர்கள் தானாக அவனிடம் பேச்சு கொடுத்து சாதாரண்மாக உரையாட போகையில் தான் அவனுக்கு பழக்கமே ஏற்ப்பட்டுயிருந்தது.
“ஐம் டாக்டர்.சக்கரவர்த்தி.. நானும் இந்த கான்பிரன்ஸ்ல கலந்துகொள்ள வந்திருந்துருந்தேன்.” அவர் அறிமுக செய்துகொள்ள.
”ஓ.. சாரி டாக்டர்..”
“இட்ஸ் ஓகே.. எப்படி இருந்தது கான்பிரன்ஸ், உலக முன்னனி டாக்டர்ஸ் அவங்களோட எக்ஸ்பீரியன்ஸ், அண்ட் வொர்க் பற்றியும் அதிகமா சேர் பண்ணிருந்தாங்க. உங்களுக்கு எப்படி இருக்கு இந்த கான்பிரன்ஸ்.”
“தெரியாததை தெரிஞ்சுக்க முடிந்தது டாக்டர்.. உலக நாடுகள்ல இன்னும் என்ன புது புது ட்ரீட்மெண்ட் பண்ணுறாங்கனு தெரிஞ்சுக்க முடிந்தது. அதுவும் பேமஸ் டாக்டர்ஸோட ட்ரீட்மெண்ட் வீடியோஸ் எனக்கு எக்ஷம்பிளா இருக்கு.”
அவன் கான்பிரன்ஸ் பற்றிய பேச்சில் கவனமாக அவன் தெரிந்துகொண்டதை சாதாரணமாக பேச, அவருக்கு அவனின் முகத்தில் வேறு எதாவது தெரிகிறதா என அவன் முகத்தையே பார்த்திருந்தார். அவன் கண்களும், பேசும் போது உடல் சார்ந்தா மொழிகளும் அவர் கவனித்து்கொண்டே இருந்தார். அப்போது, “குரு..” மெல்லிசை சாரலாக ஒரு பெண் அவனின் பேரை கூற. பேசிகொண்டே இருந்தவன், சட்டென்று திரும்பி பார்த்தான்.
அவர்கள் இருவரையும் தவிர அந்த வரண்டாவில் யாரும் இல்லை. ஆனால் அவன் காதில் கேட்ட ‘குரு’ குரலில் அவன் அக்கம், பக்கம், தேடி பார்க்க. அவன் எதிரில் இருந்த சக்கரவர்த்தி இப்போது அவனின் மனநிலையை சரியாக குறித்துகொண்டார்.
“என்ன என்ன.. தேடுறேங்க சிவா..” அவர் கேட்க.
“நத்திங்க் சார்..” பார்த்து ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை அதற்குள்ளே இவரிடம் எப்படி என்னை யாரோ அழைத்தது போல இருந்தது என சொல்ல முடியும்.
“ஓகே சிவா.. ஃப்ரீயா இருந்தா என்னோட வீட்டுக்கு வாங்க. இதான் என்னோட அட்ரெஸ், மறக்காம ஒரு நாள் வாங்க சிவா. மூனு நாள் கான்பிரன்ஸ் இருக்கு அதனால தினமும் பார்க்கலாம்.” அவனிடம் விடைபெற்று அவர் செல்ல. அவன், அந்த விசிட்டிங்க் கார்டை பார்க்காமல் யார் தன்னை அழைத்தது என யோசிக்க ஆரம்பித்தான். அவன் யோசனையை கூட சக்கரவர்த்தி வரண்டாவின் கடைசி கோடியில் நின்று பார்த்துகொண்டிருந்தார்.
*****
”கங்க்ராட்ஸ் மிஸ்டர் அண்ட் மிசஸ். கீர்த்தி, உங்க மனைவி கர்பமா இருக்காங்க.” கீர்த்தியிடம், அவள் கணவனிடம் மகிழ்ச்சியாக சர்மிளா கூற. இருவரும் மகிழ்ச்சியாக ஒருவரின் கையை அழுத்தி பிடித்துகொண்டு தங்களது மகிழ்ச்சியயை வெளிப்படுத்தினர்.
“தாங்க்ஸ் டாக்டர்..” அவள் கணவன் சொல்ல.
”இனிமே உணவுகளை அதிகமா எடுத்துகனும், காய், பழம், ட்ரை ப்ரூட்ஸ் எல்லாமே சத்தானதா இருக்கனும். வாமிட்டிங்க் சென்ஸ் இருக்கும், ரொம்ப அதிகமா இருந்தா மட்டும் நான் எழுதி தற்ர மருந்தை யூஸ் பண்ணுங்க. அப்புறம், கனமான பொருள் எதையும் தூக்க கூடாது, அதிகமா நடக்க கூடாது, புல் அண்ட் புல் ரெஸ்ட்ல தான் இருக்கனும்.” ஒரு மகப்பேறு மருத்துவராக ஒரு பெண்ணின் பாதுக்காப்பையும், குழந்தையின் வரவில் அவர்கள் மேற்கொள்ளும் முறைகளையும் அவள் கூறினாள்.
”அடுத்த மாசம் கண்டிப்பா செக்கப்க்கு வாங்க. இப்போ நான் சொன்ன இன்ஸ்டக்ஸ்னை பாலோ பண்ணுங்க.” அவர்களின் ரிப்போர்ட்டை கையில் கொடுத்து வழியனுப்பி வைத்தாள்.
போகும் அவர்களின் மகிழ்ச்சையை பார்த்து கொண்டிருந்தவளின் மனம் கௌதமுடன் இருந்த நினைவுகள் அலைமோதியது.
கௌதமின் வீட்டில், “என்ன குழந்தை பிடிக்கும் கௌதம் உனக்கு.” அவள் திடிரென கேட்க.
“மேடம்க்கு என்ன திடீரெனு குழந்தை ஆசை.”
“சொல்லு, கௌதம் என்ன குழந்தை பிடிக்கும்.” அவள் அதிலே நிற்க.
“உன்னை மாதிரி பொண் குழந்தை ஒன்னுக்கு இரண்டு வேண்டும் உனக்கு ஓகே வா.”
“டபுள் ஓகே..” அவனை கட்டியணைத்துகொண்டு சொன்னவளின் மகிழ்ச்சியே அதிகமாக தெரிந்தது.
“என்ன திடிர் கேள்வி குழந்தையை பற்றி.”
“நான் ஓடி பார்த்த வார்டுல ஒரு பொண்ணுக்கு பிரசவம் ஆனது. அந்த குழந்தையை முதல் முதலா நான் தான் தூக்கிட்டு அந்த பொண்ணோட குடும்பத்துகிட்ட கொடுத்தேன். அந்த கையில இருக்கும் போது சொல்ல முடியாதா சந்தோஷம் இருந்தது எனக்கு. அப்போ தான் உன் நியாபகம் வந்துச்சு, உனக்கும் குழந்தைனா பிடிக்குமே அதன கேட்டேன் என்ன குழந்தை பிடிக்கும்னு.” அவள் நடந்ததை கூற, அதை கேட்டவன் முகம் மாறியது அறியாமல் அவள் குழந்தை பற்றிய நினைப்பிலே மூழ்கி இருந்தாள்.
“குழந்தையெல்லாம் வந்துட்டா நீ என்னை சுத்தமா காதலிக்க மாட்ட, அதனால குழந்தை வேண்டாம். அப்படியே குழந்தை வேணும்னு நினைக்குறப்போ நான் சொல்லுறேன் என்ன குழந்தை வேணும்னு. இப்போ நாமா கிளம்பலாமா டைம் ஆச்சு உனக்கு செமினார் இருக்கு சொன்னேல.” அவன் அவள் கேட்ட கேள்வியை மிக அழகாக சமாளித்து அவளை அழைத்து சென்றான்.
’ஏன் கௌதம் குழந்தை வேண்டாம்னு சொல்லுறான்’. அவள் சிறிதும் யோசிக்கவில்லை, ஏன்னென்றால் கௌதம் மீது அவளுக்கு அவ்வளவு நம்பிக்கை, அதனால் தான் மறு பேச்சு பேசாமல் அவனுடம் கல்லூரிக்கு புறப்பட்டாள்.
“சாரி கௌதம், சர்மிளாவால குழந்தை எப்போவும் பெத்துக்க முடியாது. அப்படியே குழந்த வந்தாலும், அவளோட உயிருக்கு மிகபெரிய ஆபாத்தா தான் முடியும். இதுக்கு முன்னாடி யார்க்கிட்ட நீ சர்மிளாவ அழைச்சிட்டு போய் செக் பண்ணியோ, அவங்களே சரியா தான் ரிப்போர்ட் கொடுத்துருக்காங்க, அதுவும் நீ பார்த்த ரெண்டு டாக்டர்ஸூம் கைனாக்லாஜிஸ்ட்ல பேமஸ் டாக்டர்ஸ். அவங்களே சரியா ரிப்போர்ட் கொடுத்திருக்கும் போது, நான் மட்டும் என்ன மாத்தியா சொல்லிறப்போறேன்.” அவனின் தோழி ரியா கௌதமிற்க்கு, சர்மிளாவின் உடல் சார்ந்த பிரச்சனை பற்றி சொன்னாள்.
“எனக்கு தெரியும் அவளுக்கு குழந்தை பிறாக்காதுனு, ஆனா ஏதாவது ஒரு டாக்டராச்சும், பாசிடிவ் அ சொல்லமாட்டாங்களாம் தான் உன்னை தேடி வந்தேன் ரியா.”
“கௌதம், எனக்கு அடுத்து நீ, இன்னொரு டாக்டர் அ பார்த்தாலும் அவங்களும் நான் சொன்னது, இதுக்கு முன்னாடி, டாக்டர்ஸ் சொன்ன அதே வார்த்தையே தான் சொல்லுவாங்க. நூத்துக்கு ஒரு சதவீதம் பாசிபில்லா இருந்தா ஓகே, நூத்துக்கு நூறு சதவீதம் சர்மிளாவால குழந்தை பெத்துக்க முடியாது கௌதம் இதான் உண்மை.” நண்பனின் வருத்தம் கொண்ட முகத்தை காண முடியாமல் ரியா வேதனையுடம் சர்மிளாவின் ரிப்போர்ட் பற்றி அனைத்தையும் சொன்னாள். கௌதம் குழந்தை பற்றிய விசயத்தை சர்மிளாவுக்கு தெரியாமல் பார்த்துகொண்டது வேறு கதை. சர்மிளாவின் ரிப்போர்ட் கூட கௌதமின் அறையில் இன்று வரையில் இருக்கிறது ஆனால் அது இன்னும் சர்மிளாவுக்கு தெரியாது.
நடந்தவைகளை நினைத்துகொண்டு அவன், சர்மிளாவை கல்லூரியில் இறக்கிவிட்டான். அவளும், அவனுக்கு விடை கொடுத்து கல்லூரிக்கு சென்றாள், போகும் அவளையே பார்த்தவன் மனம் கவலையாக இருந்தது. குழந்தையை பற்றி பேசியவளிடம், குழந்தை நம் வாழ்வில் இல்லை என்பதை எப்படி சொல்ல போகிறோம் என்பது தான் அவனது பெரும் கவலை.
நினைவுகளில் மூழ்கி இருந்தவளை கலைத்தது போன் கால். போனில் தெரிந்த நம்பரை பார்த்ததும் தான் அவளுக்கு நினைவு வந்த காலையில் கொடுத்த கோப்புகளை அவள் பார்க்கவில்லை என்பது தான்.
போனை அட்டென் செய்து, “இன்னும் நான் ஃபைல் பார்க்கலை.. பார்த்துட்டு சொல்லுறேன்.” கொஞ்சம் பயந்த குரலில் அவள் சொல்ல, அந்த பக்கம் சிரிப்பு சத்தம் தான் கேட்டது.
“தெரியும், உன் முகம் காலையில இருந்து சோர்வா இருந்தது. இப்போ நான் ஃபைல் பற்றி கேட்க்கலை, எப்போ கிளம்புறேனு கேட்டேன்ன்.”
”ஃபைல் பார்த்துட்டு, நான் முடிவு செய்யுறேன்.”
“சீக்கிரம்… தாமதம் பண்ணாதே ம்மா..”
“ம்ம்.. சரி..”
பிரியாதே………….