என் தீராத காதல் நீயே 10

என் தீராத காதல் நீயே 10

என் தீராத காதல் நீயே 10

“என்னோட ஹாஸ்ட்டல் பக்கத்தில் ஒரு வீடு இருக்கில்ல.. அங்க சின்ன தோட்டம் இருக்கு.. நேத்து அங்க ஒரு செடியில் கீயூட்டா ஒரு ஒயிட் ரோஸ் பூத்திருந்துச்சு..!! அத அந்த வீட்டுல யாருமே பறிக்கல..!! எனக்கு அந்த பூவை ரொம்ப புடிச்சிருந்துச்சஆஆஆ.. அத பறிக்க காம்பவுண்ட் சுவரேறி குதிச்சு போனேனாஆஆஆஆ.. அப்போ தான் அங்க இருந்த கண்ணாடி துண்டு கால்ல குத்திடுச்சு என்று கைகளை ஆட்டி, கண்களை உருட்டி சிறு குழந்தைகள் கதை சொல்வதுபோல் அழகாக நடந்ததை தான் கீயூட்டான மழலைக் குரலில் விளக்க.. ஷரவனுக்கு சிரிப்பு தாங்கவில்லை.. அடிப்பாவி ஒரு ஒத்த பூவுக்காடி இவ்வளவு அக்கப்போரு என்று சிரிக்க.. மிருதுளா தான் கீழ் உதட்டை பிதுக்கி.. மலங்க மலங்க முழித்து பாவமாக முகத்தை வைத்துக் கொண்டவள்.. அடுத்த நிமிடம்.!! ஆன நான் பூவை பறிச்சிட்டேனே!! என்று பெருமையாக சொல்ல.. ஷரவன் தான் பாவம் மறுபடி ஒருமுறை மிருதுளாவின் குழந்தை தனத்தில் மொத்தமாக தன்னை இழந்தான்..

“ஷரவன் அன்று மாலை மிருதுளாவை ஹாஸ்பிடலில் இருந்து ஹாஸ்ட்டல் கொண்டு வந்து விட்டவன்.. தனுவிடம் மித்துவை பத்திரமா பாத்துக்க மா என்று நூறுமுறைக்கு மேல் சொல்லி விட்டுச் சென்றான்.. மிருதுளா நடந்த அனைத்தையும் தனுவிடம் சொல்லி.. உன் அண்ணா சரியான பயந்தாங்கோலி டி.. ஒரு சின்ன காயம் அதுக்கு போய் இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று சொல்லி சிரிக்க.. தனு அவளை ஒருமாதிரி பார்த்தவள் “உனக்கு இதுல அண்ணாவோட பயம் தெரியுது மிருது.. ஆன எனக்கு இதுல அவர் உன்மேல வச்சிருக்க அன்பும், அக்கறையும் தான் தெரியுது என்று சொன்னாவள் மிருதுவை ஆழமாக பார்க்க.. தனு சொன்னதில் இருந்த உண்மை மிருதுளாவை சுட.. பதில் பேசாமல் எனக்கு தூக்கம் வருது தனு.. நான் தூங்கபோறேன் என்றவள் படுத்து கண்களை மூடிக்ககொள்ள… தனுவிற்கு ஐய்யோ என்றிருந்தது.. எப்ப தான் இவ அண்ணாவை புரிஞ்சிக்க போறாளோ என்று தலையில் கை வைத்தாவள் தன் வேலையை பார்க்க செல்ல.. மருந்தின் உதவியில் மிருது நன்கு உறங்கி இருந்தாள்..

“இரண்டு நாட்களுக்கு பிறகு காலின் காயம் முழுவதும் குணமாகி விட.. ஷரவன் மிருதுளா டான்ஸ் ரிகர்சல் நல்லபடி முடிந்து காலேஜ் கல்சுரல்ஸ் நாளும் வந்துவிட்டது.. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஷரவன் & மிருதுளா டான்ஸ் தொடங்க இருக்க.. இருவரும் மேக்கப் ரூமில் ரெடியாகிக் கொண்டிருந்தனார்..

“தனுவும் சிந்துவும் மேக்கப் ரூம் வெளியே அரட்டை அடித்துக் கொண்டிருக்க.. வேறு காலேஜ் ஸ்டுடென்ட் ஒருவன் தனுவை வர்ணித்து கிண்டல் செய்யவும்.. சிந்து அவனை சத்தம்போட..

தனு ” விடு சிந்து வேணாம் பொறுமையாக இரு பிரச்சனை வேணாம் என்று அவளை தடுக்க.. அவன் வரம்பு மீறி அசிங்கமாக பேசவும் பொறுக்க முடியாமல் சிந்து அவனை அடித்து விட்டு .. அவனை கண்டபடி திட்டியவள்.. இரு டா நான் என் அண்ணாவை கூட்டி வரேன் அப்ப இருக்கு உனக்கு என்று கத்த..”

தனு, “ஐய்யோ ப்ளீஸ் சிந்து பிரச்சனை வேணாம்… வா போலாம் என்று சிந்துவை அங்கிருந்து இழுத்துக்குக் கொண்டு சென்றாள்..”

“சிந்து நடந்ததை நிலவனிடம் சொல்லி.. நீ வந்து அந்த நாயை நாலு சாத்துசாத்துன்னா என்று கூப்பிட.. நிலவனுக்கு உள்ளே தனுவை கிண்டல் செய்தவனை நினைத்து கொலைவெறி வந்தாலும் காலேஜ் லைஃப்பில் இதெல்லாம் சகஜம் தான்.. இப்ப இந்த பிரச்சினை வேண்டாம் என்று நினைத்தவன்.. கோபத்தை மறைத்துக் கொண்டு..”

“சிந்துக்குட்டி இங்க நெறைய காலேஜ் ஸ்டுடென்ஸ் வந்திருக்காங்க டா.. ஒவ்வொன்னு ஒவ்வோரு மாதிரி தான் இருக்கும்.. இதெல்லாம் பெரிய மேட்டரா எடுத்துக்க கூடாது மா.. அப்படியே விட்டுடனும் என்றவன் திரும்பி தனுவை பார்த்து அவளை சீண்ட நினைத்து.. ஆனா ஒன்னு சிந்துக்குட்டி இந்த வால்டியூபையும் பார்த்து ஒருத்தன் ரசிச்சு கிண்டல் பண்ணி இருக்கான் பாரு.. அவன எல்லா என்ன சொல்றதுனே எனக்கு தெரியல டா.. சரியான ரசனகெட்ட முண்டம் என்று தன் தலையில் அடித்துக்கொள்ள.. தனுவிற்கு மூக்குக்கு மேல் கோபம் வர.. தனுவும், நிலவனும் தங்கள் சண்டையை தொடங்கினார்.. கடைசியில் தனு போயும் போயும் உன் கிட்ட வந்து ஹெல்ப் கேட்டா பாரு இந்த ஐஸ்குச்சி இவளை சொல்லனும் என்று சிந்துவை முறைத்தவள்.. நிலவனிடம் கோபித்துக் கொண்டு வாடிய முகத்துடன் அங்கிருந்து சென்றாள்.. நிலவனுக்கு அவள் முகவாட்டத்தை கண்டு உள்மனம் வலிக்க தான் செய்தது.. ப்ரோக்ராம் முடியட்டும் டி. உன் கிண்டல் பண்ண நாயை துக்கிபோட்டு நல்ல நாலு மீதி மீதிச்சு.. உன்ன பார்த்த கண்ண நோண்டி அவன் கையிலையே தரேன் என்று நினைத்தவன் ஷரவன் அறைக்கு சென்றான்..”

“ஷரவன் ரெட்கலர் ஷர்ட், பிளாக் பேண்ட்டில் கம்பிரமான ஆண்மகனாய் நிற்க, அதே ரெட் & ஒயிட் கலர் கம்பினேஷன்
லாங் கவுனில், முடியை அழகாய் விரித்து விட்டு தலையில் அதே சிவப்பு வண்ண மலரில் செய்த கிரீடம் வைத்து தேவதை போல் மிருதுளா வந்து நிற்க.. ஷரவன் கண்கள் அவளைவிட்டு நகரவே மாட்டேன் என்று சண்டித்தனம் செய்தது..”

“ஷரவன், மிருதுளா டான்ஸ் தொடங்கியது..

“இரவாக நீ நிலவாக நான்
உறவாடும் நேரம் சுகம்தானடா”

“தொலையும் நொடி கிடைத்தேனடி
இதுதானோ காதல் அறிந்தேனடி”

என்ற பாடல் ஒலிக்க ஷரவனும் மிருதுளாவும் இணைந்து ஆட தொடங்க.. அங்கிருந்த அனைவரும் அவர்களை விட்டு இம்மியளவும் கண்களை நகர்த்த முடியாதபடி தாங்க நடனத்தின் மூலம் அனைவரையும் கட்டி வைத்தனார் இருவரும்..”

“அந்த பாடலும் இவர்களுக்காகவே எழுதியது போல் இருக்க.. பாடல் வரிகளை இருவரும் உணர்ந்து இருவரும் இணைந்து இழைந்து ஆடினார்..

“கடைசியில்”

“அடியே பெண்ணே அறியாத பிள்ளை நானே
தாய் போல் என்னை நீ தாங்க வா” என்ற வரிகளில் ஷரவன் தன் மொத்த காதலையும் கண்களில் தேக்கி தன் மித்துவை பார்க்க.. அந்த பார்வை மிருதுளாவை அவன் கண்களிலேயே கைது செய்து வைத்தது.. பாடல் முடிந்தும் மிருது, ஷரவன் கண்களையே பார்த்துக் கொண்டிருக்க.. மாணவர்களின் கை தட்டும் ஒசையில் தான் இருவரும் பூமிக்கு இறங்கி வந்தனர்..

“தனு அழுகையும் பதட்டமுமாக ஷரவனின் மேக்கப் ரூம் வந்தவள்.. அங்கு நிலவனை பார்க்க.. தனுவின் பயந்த முகம், கலங்கிய கண்களை பார்த்து அதிர்ந்தவன்.. ஏய் தனு?. ஏன் டி இது.?? என்ன ஆச்சு உனக்கு..?? ஏன் இப்படி பயந்துபோய் இருக்க.?? என்ன மா என்ன ஆச்சு என்று பதட்டமாக கேட்க..”

தனு, ” சுற்றி அந்த ரூமை பார்த்தவள் ஷரவனண்ணா எங்க என்று கேட்க.?? அவள் குரலே சொன்னது எதோ பெரிய பிரச்சினை என்று.?? அவன் அமுல்பேபியை பாக்க போயிருக்கான்.. நீ சொல்லு மா என்ன ஆச்சு உனக்கு.?? ஏன் இப்படி பேயறஞ்ச மாதிரி இருக்க என்று கேட்கும் முன்னே தனு மிருதுளாவின் அறைக்கு ஷரவனை தேடி ஓடிவிட.. நிலவனுக்கு ஒன்றும் புரியவில்லை.. என்ன ஆச்சு இவளுக்கு..?? ஏன் இப்படி பயந்துபோய் இருக்க என்று நினைக்க அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை.. உடனே தனுவை தேடி ரூமை விட்டு வெளியே வர.. சிந்து வேகமாக வந்தவள் நிலவன் மீது மோதி நிற்க.. ஏய் பாத்து வா டி.. என்று அவளை விழாமல் பிடித்தான்..

அவள் எதையும் கவனிக்காமல் “டேய் அண்ணா நீ தனுவை பார்த்தியா?? என்று பதட்டமாக கேட்க.. நிலவனுக்கு மனதில் பயம் அதிகமானது.. ஏய் என்ன ஆச்சு டி.. ஏன் ரெண்டு பேரும் இப்படி பேயறஞ்ச மாதிரி இருக்கீங்க என்ன ஆச்சு நீயாவது சொல்லி தொலையேன் டி என்று கத்த..

சிந்து, “போ டா நாயே எல்லா உன்னால தான்.. நா அப்பாவே எங்களை கிண்டல் பண்ண அந்த ராஸ்கல வந்து அடின்னு சொன்னேன் நீ கேட்டியா.. பெருச இதெல்லாம் சகஜம்னு டைலாக் பேசுனா… இப்ப என்ன ஆச்சு பாரு என்று அவனை திட்ட.. நிலவனுக்கு நொடிக்கு நொடி உள்ளம் பதறி துடித்தது.. “ஏய் என்ன டி ஆச்சு எனக்கு ஒன்னும் புரியல.. ப்ளீஸ் டி தயவுசெஞ்சு சொல்லு.. தனுக்கு என்ன டி ஆச்சு..?? ஏன் அவ பயந்துபோய் இருக்க.??

“கொஞ்ச நேரம் முன் சிந்துவிடம் அடிவாங்கிய கோபத்தில் இருந்தவன்.. தனு தனியாக ரெஸ்ட் ரூம் செல்வதை பார்த்து தன் நண்பர்களுடன் சென்று.. தனு அசந்த நேரம் பார்த்து.. அவளை பின்னால் இருந்து கட்டிபிடித்து, அவள் உடலில் கண்ட இடத்தில் கை வைக்க.. தனு உடலெல்லாம் நெருப்பு பட்டது போல் துடித்தாள்.. கத்தி யாரையாவது கூப்பிட பார்க்க, இன்னோருவனோ அவள் வாயை இறுக்கி மூடி விட அவளால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.. கண்களில் கண்ணீர் கோடுகளாக விழ.. தன் முழுபலத்தையும் திரட்டி அவனிடம் இருந்து தப்பிக்க பார்க்க பாவம் அதுவும் அவளால் முடியாமல் போனது..

“உன்ன சும்மா கிண்டல் பண்ணதுக்கே உன் ப்ரண்ட் என்ன அடிச்சுட்டு.. பெருசா அவ அண்ணை கூட்டிட்டு வரேன்னு முறுக்கிட்டு போனாலே.. இப்ப போய் சொல்லு டி.. இங்க என்ன நடந்துச்சுன்னு.. சொல்லி யாரை வேணும்னாலும் கூட்டிட்டு வா டி என்று திமிராக சொன்னவன் அவளை தள்ளிவிட்டு அங்கிருந்து சொல்ல.. தனுவிற்கு உயிரே போய்விட்டது.. மொத்த உடலும் ஊசி குத்தியது போல் இருக்க.. நிற்க கூட முடியாமல் தரையில் அப்படியே உட்கார்ந்து முகத்தை கைகளால் முடி கதறியாவள் மனம் அடுத்த நொடி நிலவனை தான் தேடியது.. நடந்ததை அவனிடம் சொல்ல உடனே வேகமாக நிலவனை தேடி வந்தவள்!! நிலவனை பார்த்ததும்.. அவன் கொஞ்ச நேரம் முன் அவளை கிண்டல் செய்து நினைவு வர.. தன் நிலையை அவனிடம் சொல்ல விரும்பாமல் ஷரவன் தேடி ஓடினாள்.. தனுவிடம் சிலபேர் வம்பு செய்வதை கவனித்த தனுவின் தோழி.. உடனே ஓடிவந்து சிந்துவிடம் விஷயத்தை சொல்ல.. சிந்து உடனே தனுவை தேடி ஓடினாள்..”

“சிந்து சொன்னதை கேட்ட நிலவனின் ஒவ்வொரு நரம்பும் கோபத்தில் விடைத்து நிற்க.. சிந்துவின் கையை இறுக்கி பிடித்தவன். அவன் யாருன்னு எனக்கு காட்டு சிந்து.. என்றவன் கொலைவெறியுடன் சிந்துவை இழுத்துச் சென்றான் தன்னவளை தொட்டவன் கைகளுக்கு அவன் உடலில் இருந்து விடுதலை கொடுக்க..”

சிந்து, “அண்ணா அந்த ராஸ்கல் தான் தனுகிட்ட மிஸ்பிகேவ் பண்ணான் என்று சொல்லி முடிக்கும் முன்.. நிலவன் கொடுத்த அடியில் வாயில் பற்கள் உடைந்து ரத்தம் சொட்ட கீழே விழுந்துகிடந்தான் சிந்து கைகாட்டியவன்.. நிலவன் அடிப்பதை பார்த்த அடிவாங்கியவன் ப்ரண்ட்ஸ் நிலவனை அடிக்க வர.. சரியான நேரத்தில் ஷரவன், விஷ்வா, பரத், பிரேம் அங்கு வந்துவிட.. ஏற்கனவே தனு சொன்னதை கேட்டு கோபத்தின் உச்சியில் இருந்த நண்பர்கள்.. நிலவனை அடிக்க வந்ததை பார்க்கவும்.. நண்பர்கள் ஐந்து பேரின் அடியும் அந்த பசங்க உடம்பில் இடியென இறங்க.. முகம் எங்கும் ரத்த சொட்ட, கை, கால் உடைந்து சுருண்டு விழுந்தவர்களை பார்த்தும் நிலவனுக்கு கோபம் குறையவில்லை.. மேலும் அவனுங்களை தூக்கிப்போட்டு மீதிக்க.. ஷரவன் தான் அவனை தடுத்து அழைத்து வந்தான்..”

“தனு தன் கைகள் கொண்டு தன்னுடலை இறுக்கி பற்றி அழுதபடியே இருக்க.. சிந்து அவளை அணைத்தபடி இருந்தாள்.. நிலவன் இன்னும் கோவம் சற்றும் குறையாத முகத்துடன் தனுவை முறைத்துக் கொண்டு இருந்தான்..”

ஷரவன், ” டேய் நிலவா, தனு ரொம்ப பயந்துபோய் இருக்க.. இப்ப அவ ஹாஸ்ட்டல் போன.. சரியா இருக்காது… நீ அவள உன் வீட்டுக்கு கூட்டிட்டு போ.. மித்துவுக்கு இங்க நடந்தது தெரியாது.. அவ back stage ல இருக்கா.. நா அவளையும், சிந்துவையும் கூட்டிட்டு வரேன்.. நீ முதல்ல தனுவை இங்க இருந்து அழைச்சிட்டு போ.. பிரியாம்மா கூட இருந்த அவ பெட்டர்ர பீல் பண்ணுவா.. நீ சீக்கிரம் அவளை கூட்டிட்டு போ டா என்று நிலவனை விரட்ட.. நிலவனும் தனுவை பார்க்க.. அவளும் எதுவும் சொல்லாமல் அவனுடன் சென்றாள்.. “காரில் வரும்போது அவனும் பேசவில்லை.. தனுவும் எதுவும் பேசவில்லை..”

“நிலவன், தனுவுடன் வீட்டிற்குள் நுழைய.. அங்கு யாரும் இல்லை என்ற போது தான் நிலவனுக்கு நினைவு வந்தது. அவன் அம்மா பிரியா ஒரு கல்யாணத்திற்காக வெளியே சென்று இருப்பது.. அதுவும் நல்லதுக்கு தான் என்று நினைத்தவன்.. திரும்பி தனுவை பார்க்க.. அவளும் நிலவனை தான் பார்த்துக்கொண்டீருந்தாள்..

“நிலவனின் இழுத்து பிடித்து வைத்திருந்த பொறுமை எல்லை தாண்ட.. தனுவின் கையை பிடித்து இழுத்தவன் அவளை சுவரோடு சாய்த்து அவள் நகர முடியாதபடி இறுக்கி பிடித்தவன் கண்களில் அத்தனை கோபம், வேதனை, இயலாமை என்று எல்லா உணர்வுகளும் கலந்திருக்க.. தனுவும் அவனை கண்கள் சிவக்க முறைத்துக் கொண்டிருந்தாள்..”

“ஏன் டி உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா அங்க நா அவ்வளவு கேட்டும் என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம, ஷரவன் அண்ணா எங்கன்னு கேட்டுட்டு அவன்கிட்ட ஓடி இருப்ப.?? என்ன விட ஷரவன் உனக்கு அவ்வளவு முக்கியமா போய்ட்டானா டி?? சொல்லு டி..?? அப்போ உனக்கு என்ன விட ஷரவன் தான் முக்கியமில்ல.. உனக்கு ஒரு ப்ராப்ளம்னா என் கிட்ட சொல்லனுன்னு உனக்கு தோனல இல்ல?? என்று கேட்டவன் குரலில் கோபம் அனலாய் தெறிக்க.( நிலவனுக்கு இப்போது புரிந்திருக்கும், மிருதுளா நிலவனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் போது ஷரவனுக்கு ஏன் உள்ளே பற்றி எரிந்ததென்றும், தன் மீது அவ்வளவு கோபம் வந்ததென்று…)

“தனுவும் அவனை விட அதிகமான கோபத்தோடு.. சத்தமாக கத்தி ஆமா டா ஷரவன் அண்ணா தான் டா எனக்கு முக்கியம்.. நான் ஏன் டா உன் கிட்ட என் பிரச்சனையை சொல்லனும்.. ஹான் எதுக்கு சொல்லனும்?? ஏன் சொல்லனும்..?? நான் யாரு டா உனக்கு?? நான் என்ன உன் அருமை தங்கச்சி சிந்துவா இல்ல ஆச தங்கச்சி மிருதுவா.. எனக்கு ஒன்னுன்னா நீ வந்து நிக்குறதுக்கு.. நான் உனக்கு யாரோ தானே.. நான் எதுக்கு டா உன்கிட்ட சொல்லனும்?? நீ யாரு டா எனக்கு என்று கண்களில் கண்ணீர் பெருக வலியோடு வந்த அவள் வார்த்தைகள் சொல்லி முடியும் முன் அவளின் மென்மையான இதழ் நிலவனின் வன்மையானா இதழால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தது.. அவள் இதழில் தன் மனதின் மொத்த கோபத்தையும் நிலவன் இறக்கி வைக்க.. இதுநாள் வரை தனுவிடம் அவனுக்கு ஏற்பட்ட உணர்வுக்கு என்ன அர்த்தம் என்று பதில் தேடிக் கொண்டீருந்தவனுக்கு அதற்கான பதில் இன்று, இப்போது, இந்த முத்தத்தில் கிடைத்தது.. கோபத்தில் ஆரம்பித்த முத்தம் இப்போது தாபத்தில் கொண்டுவிட.. முழுவதுமாக தனுவை ஆட்கொண்டான்..”

“தன்னை முழுவதும் உணர்ந்தவன்.. தன்னவளுக்கும் அதை உணர்த்தினான் தன் முத்தத்தின் வழி.. அழகாக முத்த யுத்தத்தை மூச்சுத்திணறல் வந்து முடித்துவைக்க.. தனு இமைக்காமல் நிலவன் கண்களையே பார்க்க.. அந்த முத்தமே அவளுக்கு உணர்த்தியது.. நிலவன் அவளுக்கு யாரென்றும், தனக்கு ஒரு பிரச்சனை என்றதும் தன் மனது முதலில் ஏன் அவனை தேடியதென்றும்..”

நிலவன், தனு காதருகில் குனிந்தவன்.. சிந்துவும், மிருதுவும் எனக்கு உயிருன்னா, நீ என்னோட உயிர் மூச்சு டி.. இனி நீ இல்ல, உன் மூச்சு காத்து கூட எனக்கு மட்டும் தான் சொந்தம்.. எவனாவது உன்ன தொடுறதில்ல.. பார்த்தாலே அவனை கொன்னுடுவேன் என்ற நிலவனின் உறுதியான குரல் தனுவின் செவியோடு அவள் மனதையும் நிறைக்க.. அவன் மேல் அவள் மனதில் இருந்த காதலை உணர்ந்த தனு அவனை காத்து கூட நுழைய முடியாதபடி இறுக்கி அணைத்தாள்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!