கனலியின் கானல் அவன் (ள்)-13.2

 

அன்று ஞாயிற்றுக்கிழமை,கயல் வார  இறுதியில் செல்லும் வகுப்பை நிருத்தியிருந்தாள்.யேனோ மனதில் பயம்  சூழ்ந்துக்கொள்ள செல்வதை தவிர்த்தாள். அரசுவும் விரும்பவில்லை, வேண்டு -மென்றால் ஆன்லைன் மூலம்  தொடர்ந்துக் கொள்ளலாம் அதுவும் இரண்டொரு மாதம் செல்லட்டும் என்று சொல்ல அவளோ அந்த நேரத்தை அரசுவோடு செலவழிக்க நினைத்தாள்.

 

“ஹனி,இன்னக்கி வெளில போலாம்னு சொல்லிட்டு இன்னும் வீட்டுக்கு வரல? “

 

“கண்ணம்மா கொஞ்சம் பிஸி ஆகிட்டேன், எப்படியும் நா வர்ரதுக்கு சிக்ஸ் ஆகிருமே டா? “

 

“ஹனி…. “

 

“அப்போ நான் இங்க இருந்தே நேரா  வந்துர்றேன்,நீ கிளம்பி வர்றியா? “

 

“ஹ்ம்ம் ஓகே…பட் யு பீல் டையர்ட் நாஹ்!”

 

“நோ மா,ஜஸ்ட் ஷேர் தி லொகேஷன் ஐ  வில் ஜோஇன் வித் யூ …”

 

“ஓகே ஹனி,டேக் கேர் “

 

என்று தொடர்பை துண்டித்தவள் அடுத்து  செய்ய வேண்டிய வேலைகளை மனதில் பட்டியலிட்டவாறே தயாரானாள்.

 

பிரபல உணவகம் ஒன்றில் அமர்ந்திருக்க  அவள் எதிரில் அவளை பார்த்தவாறே அமர்ந்திருந்தார் மீனாட்சி.

 

கீழ் தளம் உணவகமும் அதன் மேல் இரு தளங்களும் ஷாப்பிங் காம்ப்லெஸ் என அமைந்திருந்தது.

 

இருவருக்குமாக காபி ஆர்டர் செய்து பருகிக்கொண்டிருக்க, 

“என்ன கயல் திடிர்னு கிளம்பி வர  சொல்லிட்ட.இங்க என்னன்னு கேட்டா சொல்லவும் மாட்டேங்குற “

 

அவரை பார்த்தவள்,”சின்ன சர்ப்ரைஸ்…” என்று ஆரம்பிக்கும் போதே அரசு அவளை  அழைத்திருந்தார். 

“கண்ணம்மா எங்க இருக்க?உள்ளே  வந்துட்டே இருக்கேன்”

 

“ஹனி லெப்ட்ல தர்ட் டேபிள்,அன்ட் யூ ஹேவிங் ஆ சர்ப்ரைஸ் டூ… “

 

“கண்ணம்மா மீ பாவம் டா “

அவர் பதில் கேட்டு சிரித்துக்கொண்டே  தொலைபேசியை அணைக்க,அரசு அவளை பார்த்தவாரே வந்துக் கொண்டிருந்தார்.

 

அவளும் அவரையே பார்த்திருக்க மீனாட்சி  திரும்பி யாரென பார்க்கப் போக அவரை திரும்ப விடாது தடுத்தவள், 

 

“ஹேய் ப்ளீஸ் ப்ளீஸ் திரும்பிராதிங்க ஹனி  வன்டாங்க… “

 

“என்ன பண்ற கயல்? “என்று அவளது முகத்தில் இருக்கும் மகிழ்வை ரசித்தவாறே மீனாட்சி பார்த்திருக்க, 

 

“ஹாய் கண்ணம்மா.சாரிடா கொஞ்சம் லேட்  பண்ணிட்டேன்.”

 என அவள் தலையில் கை வைத்து ஆட்டியவர் அவளெதிரே அமர அவருக்கு  நேராக அமர்ந்திருந்தார் மீனாட்சி. 

 

ஆபிஸ் விட்டு நேராக இங்கேயே வந்திருந்த அரசு,கறுப்பு பேண்ட் அடர் சாம்பல் நிற ஷர்ட் அணிந்து முழுக்கை சட்டையை முழங்கை  வரை ஏற்றி விட்டிருக்க,மீனாட்சியின் கண்களோ அவரை பார்த்ததும் அவரை விட்டு நகராது நின்று விட்டது.

 

அரசுவும்,மீனாட்சியை எதிர் பார்க்காததால் அவரை கண்டு மனதில் சிறு தடுமாற்றத்தை உணர்ந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை. 

 

“ஹேய் மீனாட்சி,என்ன பிரீஸ்  ஆகிட்ட?’என்ன கண்ணம்மா உங்க மேம்  இப்டி பிரீசாகிட்டாங்க,ஓஹ் எனக்கு மாதிரியே அவங்களுக்கும் சர்ப்ரைஸா?”

 

தினமும் பார்த்து பேசும் நபரோடு உரையாடுவதை போல பேசினார் அரசு. “

 

“ஹனி உனக்கெப்படி இவங்களை? “

 

“பொண்ணு வேலைக்கு யார்கிட்ட போறா, எங்க போறான்னு அப்பாக்கு தெரியாதா? ” 

 

“ஆமால்ல,அப்போ எனக்குதான்  சர்ப்ரைஸா? “

 

“ஹேய் மீனாட்சி,என்னாச்சு?ரொம்ப  நாளைக்கப்புறம் இல்ல?”

 

அரசு மீனாட்சியை பார்த்து சகஜமாக பேச அவருக்குத்தான் என்ன பேசவென்றே தெரியவில்லை.கிட்டத்தட்ட  நீண்ட இருபத்திமூன்று வருடங்களின் பின்னர் சந்தித்துக்கொள்கின்றனர்.முன்பை விட இப்போது தான் பார்க்க பார்க்க  தெவிட்டவில்லை அவருக்கு.

 

ஆண்கள் மட்டுமா பெண்களை பார்த்து ரசிப்பர்,பெண்களும் தான்…இது ரசிப்பு  என்பதை விட ஒரு வித ஈர்ப்பு,நெடிய நீண்ட நாட்களின் பின்னர் தொலைந்த ஒன்று தன்னிடம் மீண்டு வந்ததை பார்ப்பதை  போல பார்த்திருந்தார்.ஆனால் அரசுவுக்கு அப்படி இல்லை போலும் என நினைக்கவும் தவறவில்லை.

 

ஒரு சிலநொடிகள் தான்.மீனாட்சி தன் சுயம்  உணர்ந்து தன்னை மீட்டுக்கொண்டார். பக்கத்தில் கயல் வேறு ‘தன்னை என்ன  நினைப்பாள்…’ 

 

“எப்டி இருக்கீங்க அரசு?கயல் வேலைக்கு  சேர்ந்த அப்றம் கூட எனக்கு தெரியாது. கொஞ்ச நாள் முன்னாடி தான் இவளே சொல்லவும் எனக்கும் தெரிஞ்சது.”

 

“எனக்கு கண்ணம்மா இங்க ஆபிஸ்ல இன்டவிவ் அட்டென்ட் பண்ணின அன்னைக்கே தெரியும்”என்றார். 

 

‘தன் தந்தை மீனாட்சியை பற்றி தெரிந்தும்  சந்திக்காமல் இருந்திருக்கிறார் என்றால், தன் நினைப்பு தெரிந்தால் என்ன  சொல்வாரோ’என யோசித்துக் கொண்டிருக்க,கயலின் கை பிடித்தவர், இங்க எதுக்கு வந்த அந்த வேலையை பார்க்கலாமே” எனவும்,

 

” ஓஹ் சூர்,என்ன சாப்பிடலாம்? ” என்ன அவர்கள் இருவரையும் பார்த்து கேட்க,  

 

“பட்டர் நாண் வித் சிக்கன் மகானி.”அரசு  கூற, 

 “மேம் உங்களுக்கு? “

“அவங்களுக்கும் அதுவே பிடிக்கும் நீ ஆர்டர்  பண்ணுடா. “அரசு கூறினார்.  

 

“ஓகே”என்றவள் ஆர்டர் செய்து விட்டு,உணவு வரவும் மூவருமாக இன்றைய  விடயங்கள் பற்றி பேசிக்கொண்டு உண்டு முடித்தனர்.அதன் பின் கயல் அவர்களிடம் சொல்லிக்கொண்டு ஒரு அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாக கூறிவிட்டு  சென்றாள்.

 

“என்ன மீனாட்சி,எதுவுமே பேசாம இருந்தா  என்ன அர்த்தம்?வீட்ல எல்லாம் எப்டி இருக்காங்க?அண்ணா,அண்ணி அப்றம் பசங்க எல்லாம் பெரியவங்களா  இருக்குமே? “

 

“ஹ்ம்ம் எல்லோருமே நல்லா  இருக்காங்க. ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணி ரெண்டு பசங்க இருக்காங்க,அடுத்து பையன் என்னோட ஆபிசிஸ்ல அப்றம் என்.சி.பி லயும் இருக்கான்.அவனுக்கடுத்து ரெட்டை பசங்க.பையனும்  பொண்ணும். காலேஜ் பைனல் இயர் படிக்குறாங்க. 

 

“ரெண்டாவது பையனை நான் இங்க வந்து  ஒரு த்ரீ மந்த்ஸ் இருக்கும் போது மீட் பண்ணிருக்கேன் உங்க கம்பனி சார்பா, அப்போ உன்னைத்தான் வருவன்னு எதிர்பார்த்தேன்,அப்றம் லாஸ்ட் வீக் கயலோட இன்சிடென்ட் அப்போ. அன்னைக்கி பார்த்ததுமே நம்ம அருண் நினைவு தான் வந்தது..”

 

“ஹ்ம்ம்… இந்தியா வந்து கிட்டத்தட்ட ஒரு வருஷம் கிட்ட ஆகப்போகுதில்ல, பக்கத்துலதான் வீடும் இருக்கு ஆனா என்னை பார்க்கணும்னு ஒருமுறை கூட தோணவே இல்லையா?எனக்கு இப்போ சமீபமா தான் தெரிஞ்சது.இல்லன்னா நான் அப்போவே வந்திருப்ப்பேன்.”மீனாட்சி  அரசுவிடம் கேட்க அவரோ, 

 

“உன்னை வந்து பார்த்திருக்க வேண்டிய  காலம் நான் பார்க்க தவறிட்டு.இப்போ வந்து பார்க்கப் போய் நீ வாழ்ந்துட்டு  இருக்க லைஃப ஸ்பாயில் பண்ண வேணாமேன்னு தான் வரல.கயல் இப்படி நம்மளை சந்திக்க ஏற்பாடு  பண்ணுவான்னு எதிர் பார்க்கல.அவளுக்கு நீ எனக்கு தெரிஞ்சவங்கன்னு முன்னமே தெரிஞ்சிருக்கும் போல.அவரை பார்த்த மீனாட்சி மனதில் ‘அவளுக்கு நான் உங்களுக்கு தெரிஞ்சவள்ன்றதை மீறி ரொம்ப  வேண்டியவள்னே தெரிஞ்சிருக்கு’ என நினைத்துக்கொண்டார்.

 

“நீ முன்னமே வந்து பார்த்திருப்பன்ற,பட் என்னை தெரிஞ்சு இப்போ ஒருமாசம் கிட்ட  இருக்குமா?அப்போ ஏன் வந்து பார்க்கல? “

 

“அது  வந்து…”மீனாட்சி தடுமாற கயல் வந்து விட்டாள்.

“ரொம்ப லேட் பண்ணிட்டேனா சாரி…”

அவள் ஐஸ் சாப்பிட்டவாறே வந்திருக்க 

 

“கண்ணம்மா நைட்ல தொண்டை வலின்ன அப்றம் இருக்குனக்கு’அரசு அவளை பார்த்து கூறிவிட்டு ‘கிளம்பலாமா? “எனக் கேட்க ஓகே என்று கிளம்பியவர்கள் மீனாட்சியையும் அவரது கார் அருகே சென்று விட,அவர் சென்றதும் அவர்களது வண்டியில் இவர்களும் கிளம்பினார்கள். 

 

வண்டி ஒட்டிக்கொண்டிருந்தவர் மனதில்  கிளம்பும் போது மீனாட்சி கூறிய’நாளைக்கு ஈவினிங் இதே டைம் இங்கேயே மீட் பண்ணலாம் வெய்ட் பண்றேன் வரீங்களா அரசு?’என்று கேட்ட வார்த்தைகளே,அவரோ கயல் அருகே இருக்கவும் சரியென்று விட்டார்.

 

அடுத்தநாள் அவரை சந்திக்க தன்னிடம் அவர் கேட்டதை எப்படி செய்ய முடியும், அதோடு கயல் விருப்பமும் அதுவே என்று மீனாட்சி கூறியதை ஏற்க முடியாமல் அந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமர்த்திருந்தவர் கயலின் வண்டி சத்தத்தில் தன்னை மீட்டுக்கொண்டார்.