கனலியின் கானல் அவன் (ள்)- 4


Epi 4

 

மேலும்  சில மாதங்கள் அதன்  போக்கில் கடந்திருக்க  கயல் டென்னிஸ் பயிற்சியின்  போது அவள் மனதை கொள்ளைக் கொண்டவனைக்  காண இயலாது தவித்திருந்தாள். ஆம் அவனை பார்த்த நொடி முதல்  அவள் இதயம் நுழைந்து விட்டிருந்தான்.

 

ஆனால்  அவள் இந்தியா  வந்ததன் நோக்கம் நிறைவேறாமல் அவளுக்கான  வாழ்க்கையை அமைத்து கொள்வதில் அவளுக்கு உடன்பாடு இல்லாமையும் அவள்  வந்ததன் நோக்கத்தை நிறை வேற்ற வலி தெரியாது, யாரிடமும் உதவியும் நாட முடியாது  தவித்துக்கொண்டு இருக்கும் காலமிது…. 

 

டென்னிஸ்  அரங்கில் கடந்த மாதம்   நடைபெற்ற போட்டிகளில் பலரையும்  கவர்த்திருந்தாள். அவள் எதிர் பார்த்தவன்  அவளை தூரத்திலிருந்து தனக்கு சொந்தமானவள்  அல்ல எனும் ஏக்கத்தில் பார்த்திருக்க இவள் கண்களோ அவனை அரங்கம் முழுதும் தேடி அலைந்தது… இறுதியில் பிரெண்ட்லி மேட்ச்   ஒன்றினை அவன் வயது நண்பர்களுடன் விளையாடி அனைவரையும் அவன் பக்கம் பார்க்க செய்திருந்தான்.

 

 அவனுக்கு நிகராக  பெண்களில் கயல் நன்கு விளையாடி இருக்க  அனைவரும் அவளை பாராட்டவும் செய்தனர்… இருவரும்  ஒருவரை ஒருவர் முதன் முதலாக அருகே பார்த்துக்கொள்ளவும்  சிறு சிரிப்புடன் ஹாய் ஹலோ என விலகிக்கொண்டான்.

 

இவளுக்கு  அவனுடன் பேசும்  ஆசை இருந்தாலும்  அனைவரும் பார்த்திருக்க  அவனே சும்மாயிருக்கான் உனக்கேது  வம்பு என மனம் சொல்ல பேசாது அவளிருந்த  இடம் திரும்பிவிட்டாள்.. அதன் பின் அவனை பார்க்க  முடியவே இல்லை… 

 

அவந்தான் அவனது புது ப்ரொஜெக்ட்டில்  பிசியாக இருந்தானே… 

 

இன்று டென்னிஸ்  போட்டிகளில் ஈடுபட்டிருந்தவளுக்கு  மனம் ஒரு நிலையில் இல்லாது பட படைப்பாகவே இருக்க  ஷாட்கள் நழுவவும் சிறு பிரேக் ஒன்றை எடுப்பதாக கூறி சற்று நேரம்  அமர்ந்திருந்தாள்… அன்று அவளை உற்று நோக்கும் பார்வை அடிக்கடி தன்னை தொடர்வதை  உணர்ந்தவள் அடிக்கடி சுற்றும் முற்றும் யாரும் இருக்கிறார்களா என பார்க்க சந்தேக  படும் படி அவள் கண்களுக்கு யாரும் விளங்கவில்லை… 

 

சற்று நேரத்தில் மிஸ்  உங்களை ஒபிஸ்ல இருக்கவர்  கூப்பிடுகிறார் எனவும் “என்னையா? ”  என கேட்க? 

ஆமா  உங்களைத்தான்  எனவும் இவளும்  பீ பே பண்ணிட்டனே  எதுக்கு என யோசித்தவள்  போய்தான் பார்ப்போமே என அந்த அரங்கில்  பின் ஒரு முலையில் காணப்பட்ட சிறு ஆபிஸ்  போன்ற அறைக்கு சென்றாள்.. வரும் நாட்களுக்கு  ஒரு மணித்தியாலத்துக்கு இவ்வளவு என பணம் செலுத்தியே  விளையாட முடியும். இவள் காலையில் வந்ததுமே மூன்று மணி நேரத்துக்கு  பணம் செலுத்திய பின்னரே பயிற்சியில் ஈடு படுவாள்.. 

 

கதவை  தட்டி விட்டு  உள்ளே செல்ல அங்கு  அமர்த்திருந்தவன் இவளை  பார்த்ததும் இவளுக்கு இவளை  தினமும் உற்று நோக்கும் பார்வை  நினைவில் வந்தது… டென்னிஸ் பிரெக்டிசுக்கான உடையில்  இருந்தான் அவன் வினோத்.

அன்று இவனை ருத்ராவுடன்  பார்த்த ஞாபகம்..  

 

அவன் சிரித்த  சிரிப்பும் அவளுக்கு  சரியாக படாததால் அவ்விடம் தனியே இருப்பது  சரியில்லை என நினைத்தவள் ,எதுக்கு பேசினீங்கன்னு சொண்ணீங்கன்னா  எனக்கு போகலாம் எனவும்.. 

 

எதுக்கு  அவசரப்படறீங்க.. இருங்க  என்றவன் அவன் இடம் விட்டு எழுந்து  இவள் அருகே வர இவள் சட்டென கதவை திறந்துகொண்டு வெளி செல்ல பார்க்க  அவனோ சட்டென அவன் ஒரு கையால் இவள் கை இண்டையும் பிடித்து பின்னால்  அவள் முதுகோடு வைத்துக்கொண்டான்.அவள் நின்றிருப்பதற்கு நேராக முன்னே அறையின் சுவர் முழுதும்  கண்ணாடி இருக்க இவள் அவன் மேல் சாய்ந்திருப்பது போல இருந்தது.. 

 

ஹேய்  என்ன அவசரம்  அதான் இருன்னு  சொன்னேன்ல. எத்தனை  நாளா நானும் பார்த்துகிட்டு மட்டுமே  இருக்க.. இன்னிக்கிதான் நேரம் கிடைச்சது. கொஞ்சம்  தொட்டு பார்க்கலாமேன்னு நினச்சா ரொம்பத்தான் மேடம்  அலட்டிக்கிற. 

கனடால தான்  ரொம்ப பேரோட டென்னிஸ்  விளையாடி இருப்பியே.. இன்னக்கி  என்கூட கொஞ்சம் நேரம் விளையாடு… எனவும்  

“என் கையை  விடு எனக்கு போகனும்”  என இவள் திமிறிக்கொண்டு இருக்க  

 

ஹேய்  கத்தின அப்றம்  உனக்குத்தான் அசிங்கமா போயிரும்.. நானும்  உன்னைவிட பெரியவந்தான்.ரொம்ப கேப் வெச்சுதான்  மேடம் பசங்க கூட பழகுவீங்களோ..அதுதான் உன் டேஸ்ட்  போல.. “

அவள்  திமிறி  சத்தமிடவும்  “ஷ்… கீப் குய்ட்”  என கூறியவன், மேசை மேல்  இருந்த ஸ்டிக் ஒன்றினை எடுத்தவன்  கண்ணாடியில் அதனைக்கொண்டு அவள் அங்கம்  தொட்டான்.. 

“ஹேய் யூ… “என  கெட்ட வார்த்தைகளைக்கொண்டு திட்டியவள் உடலும் மனமும்  கூச கத்தினாள்… சவுண்ட் ப்ரூப் ரூம் என்பதால் அவள் சத்தமோ  வெளி இருப்போருக்கு கேட்க வில்லை. 

“ஹேய்  ஸ்டிக்கால உன்னை தொடவே  இல்லை. கண்ணாடில இருக்க உன்  விம்பத்தை அதுவும் இந்த ஸ்டிக்கால தானே  தொட்டேன் அதுக்கே இவ்வளவு ரியாக்ட் பண்ற  அப்போ என் கை தொட்டா எப்டி இருக்கும்? ” என  வினோத் கேட்க 

 

“ச்சீ…. யூ…”என  மீண்டும் திட்ட ஆரம்பித்தவள்  அவன் எதிர் பாரா நொடி அவள் காலினால்  பின்னோக்கி அவனுக்கு வேகமாக உதைத்திருந்தாள். அவன் சட்டென அவள் கைகளை விட  பட்டென திரும்பி மீண்டும் முன்னாள் அவனை உதைத்தவள், 

” யூ ராஸ்கல்  கொன்னுருவேன்…” என அவனை கை நீட்டி எச்சரித்தவள் கதவை  திறக்க, 

“என் மேல காலை வெச்சதுக்கு ரொம்ப வருத்தப்படுவடி” எனவும் ” “போடா…” என திட்டியவள் வெளிவர அவ்விடம்  பொறுப்பான ருத்ராவின் நண்பன் ஹரி அவள் முகம் பார்த்து எதுவோ சரியில்லை என் யூகித்தவன், 

” என்னாச்சு? ”  எனவும்  

 

அவனை பார்த்தவள், 

” உள்ள ஒருத்தருக்கு  கால் சுழுக்கிகிச்சாம்  கொஞ்சம் பாருங்க ” என்று விட்டு விறுவிறுவென சென்று விட்டாள்.. 

உள்ளே யாரிருக்கா என இவன் உள்ளே  செல்ல இன்னும் கீழே அமர்ந்தவாறு இருந்த வினோத்தை பார்த்தவன் ‘இங்க என்ன பண்ற’ என்றவன் ‘ எதுக்கு கீழ  இருக்க என்னாச்சு எதுக்கு அந்த பொண்ணு அப்படி போகுது? ” என கேள்வியெழுப்ப,  

 

“ப்ச்  எதுக்குடா இவ்வளவு கேக்குற கொஞ்சம் பேசிட்டு இருக்கலாமேன்னு  கூப்பிட்டா ரொம்பதான் பண்ரா “என வினோத் கூற,  

 

  “டேய் உன் வேலையெல்லாம்  இங்க வெச்சுக்காத ருத்ராவுக்கு தெரிஞ்சது  தெரியும் தானே… பொண்ணுங்க நிறைய பேர் விளையாட வர இடம்  அவன் என்னை நம்பித்தான் விட்டிருக்கான்.. 

இதுக்கப்றம்  இப்படி நடக்காம பார்த்துக்க. அதோட  நான் இல்லாதப்ப இந்த அறைக்குள்ள வர்றது இதுவே கடைசியா  இருக்கட்டும் “என கூறி அவனை அனுப்பி விட்டான். 

‘இவனை கொஞ்சம் கண்காணிச்சிக்கணும்.ரொம்ப  தைரியமான பொண்ணுதான் ‘என அவளையும் மெச்சிய ஹரி  அவன் வேலையை தொடர்தான். 

வெளியில் வந்த கயல்விழியின் கண்கள்  கலங்கி இருந்தது.. இவ்வளவு பேர் இருக்க  இடத்துலயே இப்படி நடந்துக்குறான்.. ச்சே. 

என்றவள்  அவள் வீடு வந்து  குளித்து தன் உடல்  நடுக்கத்தை தணித்துக்கொண்டாள்..

அவள் விம்பத்தை அவன் கை இல்லாது ஒரு கம்பினை  கொண்டு தொட்டாலும் அது அவளுக்கு எவ்வாறிருக்கும்  என்பதை உணர முடிகின்றது அல்லவா … 

 

நல்ல வேலை அரசு வெளியில்  சென்றிருந்தார்.. சும்மா சரி  ஹனிக்கு தெரியணும் டேய் நீ இன்னக்கி  எங்க விட்டல பொரியல் தான் டா என நினைத்தவள்…. 

அன்னக்கி  அவர் கூடத்தானே  இருந்தான் இந்த ராஸ்கல்.அவர்  பிரெண்டு இப்படி இருக்கான் அவரும்  இப்படித்தானோ?ச்சே ச்சே… அப்படி இருக்காது  அவன் மட்டும் தான் அப்படியா இருக்கும் என  மனதில் கூறிக்கொண்டாள்.. 

மாலை  கயல் மற்றும் அரசு  ஒன்றாக அவர்களது முன்  தோட்ட இருக்கையில் அமர்ந்தவாறு  தேநீர் அருந்திக்கொண்டு இருந்தனர்..  

 

கண்ணம்மா  வேலையெல்லாம் எப்படி  போகுது எனவும் சூப்பர் ஹனி. எனக்கு  வேலை எப்படி போகுதோ இல்லையோ மேம் கூட  இருக்கது ரொம்ப ஹாப்பியா பீல் ஆகுது ஏன்னு  தெரில.. ரொம்ப பிரெண்ட்லிப்பா.. நல்லா பேசுவாங்க.. “இப்பல்லாம்  வீட்டு கதையும் பேச ஆரம்பிச்சிட்டோம் … 

ஓஹ்  இது நல்லதுக்கில்லையே “என அரசு சிரித்துக்கொண்டே  கூற,   

 

“அச்சோ  ஹனி தப்பா  எல்லாம் இல்லை  அவ்வளவு கிளோஸ் பிரென்ட்  ஆகிட்டோம்னு சொல்ல வரேன்… கனடால  இருக்கும் போதும் ரொம்ப கிலோசா யார்கூடவும்  பழகினது இல்ல.. அதோட யேனோ அவங்க கூட ரொம்ப கிலோசா  இருக்கணும்னு தோணுது.. நீயும் அவங்க கூட பேசினா இப்படி  தான் சொல்வ…”

அவர் அவள் தலை  கலைத்து விட்டவர். “உனக்கு  ஹாப்பியா பீல் ஆகுதுன்னா அது எதுன்னாலும்  எனக்கு ஓகே தான்.. எனக்கு அது மட்டும் தான்  வேணும்டா கண்ணம்மா.. “

 

“ஹனி  உன்னை பார்த்தால் தான்  யூத் லுக்..ஆனா பேச்செல்லாம்  பக்கா ஓல்ட்.”என்றாள். 

 “அப்டிங்குற… “

“ஆமாங்குறேன்’ என்றவள், ‘ஹனி  நாளைக்கு செவென்க்கு xy ஹோட்டல்ல  என் கோர்ஸ்ல செட்டான பிரெண்ட்க்கு பர்த்டேன்னு  பார்ட்டிக்கு இன்வைட் பண்ணிருக்கா நான் போகட்டுமா?”

 

ஓகே டா  லேட் பண்ண வேணாம்” என அரசு  கூற,

 “ஜஸ்ட்  கொஞ்சநேரம்  டைம் ஸ்பென்ட்  பன்னிட்டு வந்துருவேன்.எனக்குமே  போக இன்டெரெஸ்ட் இல்லை.ஆனா கனடால  பிறந்து வளர்தவன்னு எதுக்கெடுத்தாலும் என்னை  கேட்டு கேட்டே ஒவ்வொருவரும் பேசும்போது எனக்கு  அன் ஈஸியா இருக்கு. இதுக்கும் போகலேன்னா தப்பா எடுத்துப்பாங்க.அதான்  போகணும் “என கயல் கூற 

“சரிடா போய்ட்டு  வா” என கூறினார். 

அடுத்தநாள்  மாலை கயல் அடர்  சிவப்பு நிற டாப்  கருப்பு நிற ஜீன்ஸ்  அணிந்து ப்ளாக் ஷோலை கழுத்தை  சுற்றி ஒரு பக்கமாக போட்டிருந்தவள்  தயாராகி தந்தையிடம் கூறிக்கொண்டு பார்ட்டிக்கு  அவர்களது காரில் சென்றாள். 

இரவு  வர வேண்டும் என்பதால்  பைக் சேபில்லை என காரை  எடுத்து போகுமாறு அரசு சொல்லி இருந்தார். 

 

அவள் பார்ட்டி  ஹாலை வந்தடைய மணி ஏழு  முப்பதாகி விட்டது வாகன  இடையூறினால்.. “ஹேய் கயல் கம்  கம் நீ வருவான்னு எதிர் பார்க்கவே  இல்லை” என அவளை அழைப்பு விடுத்திருந்த   நிஷா கூறி அவளை உள்ளே அழைத்து செல்ல.. 

 

‘அம்  சாரி கொஞ்சம்  லேட்டா வந்துட்டேன்  டிராபிக்னால’ எனக் கூறிவிட்டு அவளை வாழ்த்தி  தான் கொண்டு வந்த பரிசினை வழங்கினாள். 

தேங்க்ஸ்  அ லட்.நீ வந்ததே  உண்மையா ஐ பீல் மச்  ஹாப்பி என்றவள் மற்றைய நண்பர்களுக்கும்  அவளை அறிமுக படுத்திட.ஆண்கள் பெண்கள் என  நிறைந்திருக்க அனைவருடனும் இன்முகத்துடன் ஒரு ஹாய்  கூறினாள்..  

 

சிறிது நேரம்  கழிய திடீர் என  லைட்ஸ் அணைக்கப்பட்டு மங்கிய  விளக்கொளி எங்கும் ஒளிர ஒரு பக்கமிருந்து இசையின்  முழக்கம் மெதுவாக ஆரம்பமானது… மேல் தட்டு வர்க்கத்தினருக்கு  இது ஒன்றும் புதிதல்லவே.. அதோடு கனடாவில் பிறந்து வளர்த்தவளுக்கு  இதுவெல்லாம் சகஜமான விடங்களாச்சே … அப்படித்தான் அவளை அனைவரும் நினைத்திருந்தனர்.. 

 

ஆனால்  அவளுக்கு  பாடல்கள் அதிக சத்தத்துடன் ஒலிக்க கேட்டாலே  தலை வலி உயிரெடுத்து விடும்… இவ்வாறான பார்ட்டிகள்  எப்போதும் எதாவது காரணம் கொண்டு தவிர்த்து விடுவாள். 

 அவள்  பார்ட்டிகளுக்கு  சென்றாலும் கூட ஒரு மூலையில்  அமர்ந்து அனைவருக்கும் தான் வந்ததாக  காட்டிவிட்டு சிறிது நேரத்தில் அவ்விடத்தை  விட்டு நழுவி சென்றிடுவாள்.

 

 இன்றும்  அதே எண்ணத்தோடு  வந்திருக்க நடக்க  போறதுதான் அவள் நினைத்ததற்கு  மாற்றமானது.   

 

முதலில்  இதமான இசையில்  அவ்விடம் நிரம்ப நிஷா  அவளையும் வருமாறு அழைத்தாள்… இன்னும் கொஞ்சம் நேரத்துல  ஜோஇன் பண்ணிக்குறேன் நீ போ என அவளை அனுப்பி விட்டு அவள் அமர்வதற்க்காக  இடம் தேடி கண்கள் சுழல விழுந்தான் அவள் கண்களில் அவன்.ருத்ரா… 

 

“RV” என அவள் இதயம் அவளிடம் கூற, அவனும்  இவளைத்தான் பார்த்திருந்தான் . மஞ்சள் நிற டீ  ஷர்ட் டெனிமில் இருந்தான். அடர் சிகை கலைத்து விடப்பட்டு அவனை சூழ அவனது புது  நட்பு வட்டம்… சிறிபும் கேலி கிண்டலிலும் ஈடுபட்டிருந்தனர். 

 

அவ்வட்டத்தில் வினோத்தும்  அவள் கண்களுக்கு பட அவனுக்கும் இவளை  கண்டு கொள்ள டேய் மச்சீஸ் அன்னக்கி ஒன்ன  மிஸ் பண்ணேன்னு சொன்னனே இன்னக்கி கிடைச்சிரும்  போலடா.பாரு வந்திருக்கா என்றவன் யாருக்காவது வேணும்னா  இப்போவே ஆர்டர் பண்ணிடு. எனக்கூறிக்கொண்டே அவளை நோக்கி செல்ல 

 

ருத்ராவும்  அவன் யாரிடம் செல்கிறான் என்பதை  புரிந்து கொண்டவன் அவனும் அவன் நண்பர்களும்  எப்படி பட்டவர்கள் என்பதை இந்த நான்கு மாதங்களில்  நன்கு அறிந்ததனால் ( அவன் ப்ராஜெக்டின் ஒரு பகுதி இந்த நண்பர்கள் கூட்டம் ) 

வினோத்  செல்வதற்கு   முன் அவளிடம்  செல் என அறிவு கூற   மனமோ அவளுக்கு ஏற்கனவே ஆலிருக்குடா, அவ  எவன் கூட போனா உனக்கென்ன என கேட்க மனத்துக்கு  ஒரு அரை விட்டவன் வினோத்துக்கு முன்னே அவளிடம் சென்றிருந்தான்.. 

 

அவளும்  விநோதை பார்த்துவிட்டு  இவனெல்லாம் நிஷா பிரெண்டா  அப்போ இது நல்ல இடமில்லையோ  RV யும் இங்கதான் இருக்காருன்னா…. ??? மனம் யோசிக்க  அதோடு இவளை நோக்கி வினோத் வருவதும் தெரிய அன்று அவன் சொன்னதும்  நினைவில் வந்தது. அச்சோ வசமா மாட்டிக்கிட்டோமே என நினைத்த நொடி,  

 

“ஹாய்! வாட்  அ சர்ப்ரைஸ் “என ருத்ரா  கூறிக்கொண்டே கயலிடம் வந்தவன்  பட்டென அவள் முன் கை நீட்டி “டக்குனு  பிடிச்சுக்கோ இல்லன்னா அவன் வந்து உன்னை  பிடிச்சிக்குவான்” எனவும் இவளும் பட்டென அவன் கைகளை  பற்றி இருந்தாள்… அவன் ஒரு கையால் அவள் இடையில் சுற்றி போட்ட வாரு   கொஞ்சம் நேரம் பேசாம இரு இப்படியே என கூறினான்… 

 

அவளெங்கே  பேச அவன் அவள்  இடை தொட்ட மறுநொடி ஷாக்  அடித்தவள் போல அப்படியே அவனை பார்த்தப்படி  அவன் கட்டுப்பாட்டுக்குள் நின்றிருந்தாள்… 

 முதன் முதலில் அவள் அகம் தொட்டவன் இன்று அவள் புறம்  தொட மேனி சிலிர்த்திருந்தாள். 

 

“ஹேய்  இது என்  ஆளு மச்சி  என்றவாறு வினோத்  வர 

“டேய் இது எப்பயோ என்  ஆளுடா என கயலை இடையோடு  பிடித்திருந்தவன் தன்னோடு இன்னும் அருகே அணைத்தவாறு ருத்ரா  கூற 

நீதான்  இதுக்கெல்லாம்  ஆசை பட மாட்டியே  எனவும்

  “தெரியலடா…ஆனா ஆசை  வந்திருக்குன்னு தோணுது என ருத்ரா  கயலை பார்க்க

அவளும் அவனை தான்  விழி விரித்து பார்த்திருந்தாள்… ‘இவங்களுக்கும்  என்னை பிடிக்குமா’ அவன் கூறக் கேட்டவள் மனமோ சிறகின்றி பறக்க துடிக்க  

 

அப்டின்னா  என்ஜோய் பண்ணுடா மச்சி  உனக்கில்லாததா முதல் முதல்  ஆசை பட்டிருக்க என வினோத் கயலை  மேலிருந்து கீழ் ஓர் பார்வை பார்க்க அவள் மேனியெங்கும் தீ  சுட்டது போல உணர்ந்தவள் ருத்ராவையும் பார்க்காது தலை குனிந்தாள். 

 

தேங்ஸ்  டா மச்சி  என ருத்ரா அவனுக்கு  பதில் கொடுத்து அவனை அனுப்பிவிட்டு  கயலை பார்க்க அவள் தலை குனிந்திருக்கவும் அவள் காதருகே அவன்  போய் ரொம்ப நேரமாகுது மேடம் இப்படியே என்னை பிடிச்சிக்கிட்டு  நிக்கிறதுன்னா எனக்கும் ஓகே தான்… என அவன் கூற பட்டென பதட்டத்தில்  அவனிடம் இருந்து விலகப்பார்க்க அருகே இருந்த மேசையில் இடித்துக்கொண்டு அவன்  டீஷர்ட்டையே பிடிமானத்துக்கு பிடித்து அவன் மேலே விழுந்தாள்…. 

ஹேய்  ரிலாக்ஸ்  ரிலாக்ஸ் என கூறியவன்  வினோத் இன்னும் இவர்களையே  பார்த்திருப்பதை கண்டவன், “அவன்  இன்னும் நம்மள தான் பார்த்துக்கொண்டு  இருக்கிறான் சோ இப்படியே கொஞ்சம் நேரம் நில்லு” என்றான்… 

 

கயலுக்கு  என்ன செய்வதென்றே தெரியவில்லை. இன்று நான்  வந்திருக்கவே கூடாதோ..கண்கள் வேறு கலங்கி இருக்க 

 

 அவளை  பார்த்தவன்  அவள் கண்கள்  தன்னை பார்த்து  என்ன பேசுகிறது என சில  நொடி மையிட்ட விழிகளை உற்று நோக்கினான்… 

 

“இந்த மாதிரியான  இடங்கள் எல்லாம் உனக்கு  சகஜமான இடங்கள் தானே..” என அவள் கனடாவில்  வளர்ந்தவள் என்பதை வைத்து இவன் கூறி, இவங்கெல்லாம்  உனக்கு பிரெண்ட்ஸா? எனவும் இவள் நிஷாவை மட்டுமே நினைத்து  அவனிடம் “ஆம்” என்று கூறிவிட அவனோ ஒட்டுமொத்த கும்பலும் அவள் நட்பு  வட்டம் என நினைத்தவன் அப்போ நீயும் எல்லோரும் மாதிரிதான் போல..என்றான்.  

“என்ன? ” என்பது போல அவனை கயல்  பார்க்க   

 

எங்க  உன் ஹனி? என்று ருத்ரா கேட்க  இவளோ அவங்க இங்கெல்லாம் வரமாட்டாங்க  என்றாள்… ஓஹ் அவவளவு நல்லவரு… என்றதற்கு 

 “ரொம்ப ” என்றாள்  அவனை பார்த்து.. 

 

ஓஹ்  அதான்  உன்னைவிட ரொம்ப  வயசானாலும் பரவாயில்லன்னு  அவர் கூட சுத்துறியா என்றான்? 

“ச்சே ச்சே ஹி  ஜஸ்ட் போர்ட்டி த்ரீ  தான். என் மேல ரொம்ப லவ் அவங்களுக்கு.. அதான்  எப்போவும் என்கூடவே இருப்பாங்க என்றாள். 

 

அவளோ அவள் தந்தையை பற்றி  கூற இவனோ அதை தப்பாக புரிந்து கிட்டத்தட்ட  டுவெண்ட்டி இயர்ஸ் கேப் இருக்குமில்ல. ஜஸ்ட்  போர்ட்டி த்ரீங்குற வெக்கமாயில்ல அவர் கூட கை கோர்த்துக்கிட்டு  சுத்துறதுக்கு.. அதுவும் ஒரே வீட்ல…ச்சே என்றான். 

 

 ஏன்  அதுல என்ன தப்பு?  என் ஹனி தானே என இவள் கேட்க…

 நீ வளர்ந்த  நாட்ல அது வேண்ணா  சகஜமா இருக்கலாம் ஆனால்  இங்க.. 

 

ஏன்  இங்க அப்படி  இருந்தா என்ன? நா  என் ……

 (அப்பாவோடத் தானே  இருக்கேன். அப்பாகூட அப்படி கை கோர்த்து போனா என்ன தப்பு?இங்க அப்பா பொண்ணு  ஒன்ன போனா தப்பு பேசுவார்களா? )

 

என  இவள் எதுவோ கூற வர  அவனை அவசரமாக யாரோ அழைத்திருக்க  பட்டென அவளை விட்டவன் ” உன்னை மாதிரி  இங்க இருக்கவங்களுக்கு பேரே வேற ” என கூறிவிட்டு  அவ்விடம் விட்டு அகன்றான். 

 

இவன் என்ன பேசுறான்  என இவளுக்கு அப்போதும்  புரியவில்லை. இவளும் சட்டென்று  அவ்விடம் விட்டு வெளி வந்தவள் பார்க்கிங்கில்  இருந்த அவள் காரில் ஏறி அமர்ந்தாள்… 

அரசுவுக்கு  கோள் செய்தவள்  ஹனி இப்போதான் கிளம்ப போறேன்  எனக்கும் டின்னெர் வேணும் அங்க வந்துதான்  சாப்பிடுவேன் என கூறி போனை வைத்தாள்.. 

 

அவளது காருக்கு  சற்று தள்ளி ருத்ரா  யாருடனோ பேசிக்கொண்டு இருக்க  அவனையே பார்த்தவளுக்கு அவன் கூறியவை  நினைவில் வர அன்று வினோத்தும் இதே தானே  சொன்னான்.. என யோசித்தவளுக்கு அப்போது தான் தன்னையும்  அரசுவையும் தப்பாக புரிந்து பேசுவது விளங்கியது.

 

ச்சே  இப்படி  தப்பா புரிஞ்சிகிட்டு  இருக்காங்களா என்னை? என்கிட்டே யாருன்னாவது  கேட்டிருக்கலாமே… ஒருத்தரை பார்த்து எப்படி இப்படி  கணிச்சு பேசமுடியுது.. என்னை பார்த்தால் அப்படி போர பொண்ணு மாதிரியா  தெரியுறேன்.. நான் தப்பா யார்கூடவும் இதுவரைக்கும் நடந்தது இல்லையே.. நான் பார்க்க தப்பான  பொண்ணு மாதிரியா அவங்க கண்ணுக்கு தெரிஞ்சிருக்கேன்… ச்சே… 

 

அப்படியே  ஸ்டெரிங்கில் தலை வைத்து  படுத்திருந்தவள் கண்களில்  கண்ணீர்.. 

 

ஹனிக்கு  தெரிஞ்சா எவ்வளவு  கஷ்டப்படுவாங்க.. அப்படியே அவள் தலை  கவிழ்ந்து இருக்கவும் சைடு மிரர் தட்டும்  சத்தத்தில் யாரென கண்ணாடி கீழிறக்கி பார்க்க ருத்ரா  இருந்தான்… 

 

வண்டிய எடுத்தாத் தான்  பின்னாடி இருக்க என் வண்டியை  நான் எடுக்க முடியும் எனவும் 

சாரி  என்றவள்  வண்டியை ஸ்டார்ட்  செய்தாள். 

அவள் கண்களில் கண்ணீர்   வழிந்த தடயம் இருக்க அவளை  உற்று நோக்க அவன் பார்ப்பதை  உணர்ந்தவள் சட்டென வண்டியை கிளப்பி விட்டாள்… 

 

இருவரும்  ஒரே லேனில்  வசிப்பவர்கள் வண்டியும் ஒன்றன் பின் ஒன்றாகவே  வந்தது…. கயல் அவன் வண்டியை கவனிக்காவிடினும்  ருத்ரா அவளை முன் விட்டு பின் தொடர்ந்து சென்றான்… 

அதிகமா பேசிட்டோமோ… 

 

“எதுக்கு இப்போ நீ அவ பின்னாடி போறே. அவ எப்படி  போனா உனக்கென்ன” என மனம் கூறினாலும் 

” நீ  பேசின எதுவோ தான்  அவ அழுறதுக்கு காரணம்  போல.. சும்மா உனக்கெதுக்கு அடுத்தவங்க உறவு பத்தி..” அறிவு  அறிவுரை கூற ஆமால்ல அதிகமா பேசிட்டேனோ என இவன் வீட்டு கேட் திறக்கும்  வரை வண்டி நிற்க்கவும் 

 

 இவன்  வண்டிக்கு முன்னாள்  இரண்டு வீடு தள்ளி அவள் வண்டி அவள் வீட்டினுள்  செல்லாது நிறுத்தி அவள் பக்க கதவை திறந்து கயல் முகத்தை நீரால் அடித்து  கழுவுவதைக் கண்டான்… 

 

 மங்கிய காரின்  ஒளியில் அவள் வதனம்  நிலவென கண்டான்… எதுக்குத்தான்  என் கண்ணுல பட்டியோ தெரிலடி… இவ்வளவு  கிட்ட இருந்தும் என்னால எட்டாத தூரத்துல  இருக்க மாதிரிதான் தோணுற என புலம்பியவன் அவள் வண்டி உள் செல்லும் வரை இருந்து விட்டே இவன் வீட்டினுள்  நுழைந்தான்.  

வீட்டுக்கு வந்த கயலின்  முகம் கண்டவர் ஏதுவோ சரியில்லை என்பதை உணர்ந்து  “கண்ணம்மா நீ வரும் வரை வெய்ட் பண்றேன் டின்னெர்  சாப்பிட வரியா? ” எனவும்  

“இதோ  ஹனி ஜஸ்ட்  வோஷ் ஒன்னு எடுத்துட்டு  வந்துர்றேன்” என உள்ளே சென்றாள்… 

இருவருமாக  சாப்பிட “கண்ணம்மா  என்னாச்சு வாசல்ல வண்டியை நிப்பாட்டிட்டு  கொஞ்சம் நேரத்துலதான் உள்ள வந்த.

 

 “அதையும்  பார்த்திட்டியா? ஜஸ்ட்  தெரிஞ்சவங்க யாரோ நின்னா மாதிரி  இருந்தது அதான் பார்த்தேன்” என்றாள்.. 

 

ருத்ரா வண்டியில்  இருந்து பார்த்ததை  இவளும் முகம் கழுவி நிமிரும் போது  கண்டாள். 

“நம்மளுக்கு தெரிஞ்சவங்களா?  “என அரசு கேட்க  

“அச்சோ ஹனி ! நம்மளுக்கெங்கே  தெரிஞ்சவங்க இருக்காங்க.இது எனக்கு தெரிஞ்சவங்க.” என  சற்று கோவமாக கூற, 

 

“எதுக்கு  இவ்வளவு கோவப்பட்ற சாரி”    என்றவர் எதுவும் கூறாது சாப்பிட்டு எழுந்துக்கொண்டார். 

 

அவர் முன்னறையில் இருக்க அவர் அருகே  அமர்ந்தவள் அவர் தோள் சாய்ந்து 

 

” சாரி  ஹனி… இன்னக்கி  பார்ட்டி போகாமலேயே  இருந்திருக்கலாம்… கனடா  நல்லம் போல இருக்கு … இங்க ரொம்ப மோசம்.. எதுக்கு இப்படியெல்லாம் பிஹேவ்  பண்றங்கண்ணே புரியல.. அதான் கிளம்பி வந்தேன். அந்த கோவத்துல இருந்தேன்னா அதான்  சாரி ” என்றவள் அவர் கன்னத்தில் இதழ் பதித்தாள்.. 

 

“நானும்  என்னவோன்னு உன் முகம்  பார்த்து பயந்துட்டேன்  டா. சரி தூங்கு காலைல ஆபிஸ்  போகணும்” என்று விட்டு குட் நைட்  என்றவர் அவளை உறங்க அனுப்பினார்.. 

 

காலையில்  ஆபிஸ் வந்தவளுக்கு  மலர்ந்த முகத்தோடு அமர்ந்திருந்த  மீனாட்சியை கண்டதுமே உடம்பில் புத்துணர்வு  வந்துவிட்ட உணர்வுதான்.” ஹாய் மேம் என்றவளை அழைத்தவர்  கயல் நம்மளுக்கு இன்னக்கி முக்கியமா எதாவது இருக்கா? ” எனவும்

” நோ  மேம்” என்றாள் கயல்விழி. 

 

“அப்போ  நாளைக்கு  தேவையான அரேஞ்மன்ட்ஸ் எல்லாம்  ஓகேவா ? “

எனவும்,  

” மேம்  அதெல்லாம்  உங்க பையன்  பார்த்துகிறதா  சொன்னிங்களே” எனக்கூற, 

“சொன்னேன் ஆனா அவனுக்கு உன்கூட  எதுவோ பேசணும்னான் நம்பர் கூட குடுத்தனே…”

 

“பேசல்லயே  மேம்…”எனவும்  அவள் போன் அடிக்கவும்  சரியாக இருந்தது…

 

“அவனேதான்  எடுத்து பேசு”  எனவும் “ஹலோ மோனிங்  சார் “என்றாள்.. 

 

“மோனிங்  மிஸ்…” என  அவன் பெயர் தெரியாது  இழுக்க  

 “அம்  கயல்விழி  சார் ” எனவும்.. 

“கயல் விழி”  ஓர் நொடி அவன்  மனதை கொள்ளையிட்டவளின் கண்கள்  அவன் நினைவில் வந்து செல்ல,  

 

“ஓகே  மிஸ் கயல்விழி  நாளை ஹோல் டெகரேஷன்  மட்டும் என்னால வந்து பார்க்க முடியாது.. வயலட்  கலர் தான் செலக்ட் பண்ணி கொடுத்திருக்கேன்.சோ நீங்க அதை மட்டும்  நாளை கொஞ்சம் ஏர்லியா வந்து பார்த்துக்கொள்ள முடியுமா?” எனவும் “ஓகே சார்  நான் பாத்துக்குறேன்” என்றாள்…  

 

“தேங்ஸ்  கயல்விழி அத்தை  பக்கத்துல இருக்காங்களா? ” எனவும்  மேம், என இவள் போனை கொடுத்து விட்டு செல்ல 

 “என்னடா  நாளைக்கு காரணம்  எதாவது இருக்கா உனக்கு? ” என்று  மீனாட்சி வினவ, 

 

” நான் டைம்க்கு  வந்துருவேன் அத்தம்மா  டோன் வொரி அதோட நீங்க வயலட்  வித் வைட் சாரி கட்டுங்க” என்றான். 

“சரிடா சரி”  என்று விட்டு வைத்தவர், 

 

“ஹேய்  கயல் நாளைக்கு   நீயும் சாரி கட்டிக்கிட்டு  வரியா? எனவும்  

 

“நானா!!!  அய்யோ மேம், நான் சாரியை  கையாள தொட்டு கூட பார்த்ததில்லை. நான் எப்டி?  அதோட எனக்கு அன்ஈஸியா இருக்கும் ” என்றாள். 

 

“அப்படியெல்லாம்  ஒன்னும் இல்லை நாளைக்கு  நான் உனக்கு சேலை ஒன்னு கொண்டு வந்து தரேன். நாளைக்கு  நான் சொல்ற பாலர் போ அழகா சாரியை கட்டிவிடுவாங்க அப்படியே இங்க வந்துரு  ஓகே?” எனவும்.. 

“மேம் வேணாமே “கயல் கெஞ்ச,    

 

“என்ன கயல்  எனக்காக இதுகூடவா  செய்யமாட்ட? ” எனவும்

 

”  ஓகே  மேம் டன் ” என்றுவிட்டாள்.. 

 

கயலை  பார்த்த நொடி  முதல் அவர் அண்ணன்  மகனுக்கு மிக பொருத்தமாக  இருப்பாள் என நினைத்திருந்தார்  மீனாட்சி. 

ருத்ரா இவளை  பார்க்கும் போது  சேலையில் இருந்தாள்  நன்றாக இருக்கும் என தோன்றவும்  அவளிடம் கட்டுமாறு கூறினார். 

 

அதோடு நாளை பார்ட்டியின்  போது அவள் வீட்டினர் பற்றி அவளுடன்  பேச வேண்டும் யாரெவரென கேட்டு அண்ணனிடம் கூற  வேண்டும் என மனதில்  

நினைத்துக்கொண்டார்.. 

 

 பார்க்கலாம்  நாளைய விடியலில் யார்  யாரை அறிந்துக் கொள்ள போகிறார்கள்  என்று…