KKA-5

Epi-5

 

நாளைய  தினத்தினை தனக்கு  சார்பாக அமைத்து தருமாறும்,தன் தேவையை  நாளை நிறைவேற்றி தருமாறும் இறைவனை வேண்டி இருந்தவள்  வீடு வந்தாள்…. 

“ஹேய்  ஹனி என்ன ஏர்லியா  இன்னக்கி வந்தாச்சு போல  இருக்கே…. “

 

‘ஆமா  கண்ணம்மா..’ அவர் பேசிக்கொண்டு இருக்கவுமே   ஒரு அழைப்பு வரவும் ‘ நீ பிரெஷ் ஆகிட்டு வாடா பேசலாம்’ எனவும்  சரி என அவள் உள்ளே செல்ல இவர் போனுக்கு பதில் அளித்துவிட்டு  அடுத்த நிமிடமே கனடா செல்வதற்கு டிக்கட் புக் செய்தார்…

 

“ஹேய் என்னாச்சு ஹனி? எதுக்கு கனடா  எனவும் ” நம்ம மேரி ஆன்ட்டி ஹஸ்பன்ட்கு  உடம்புக்கு முடியலயாம்.. நம்மளுக்கு எவ்வளவு  ஹெல்ப்பா இருந்துருக்காங்க. அதோட மெதிவ்ஸ் எனக்கு  ரொம்ப சப்போர்ட்டா இருந்திருக்கார்.. பசங்களும் நேற்றே  வந்துட்டாங்களாம்…”

 

‘ஓஹ்  ரொம்ப முடியலையோ?’ 

 

“அப்டித்தான் போலடா.நல்லா தான்  லாஸ்ட் வீக் என்கூட பேசினார். அதான்  மனசுக்கு கஷ்டமா இருக்கு.நான் போய் பார்த்துட்டு  வந்துர்றேன்.. த்ரீ டேய்ஸ் நான் இல்லாம மேனேஜ் பண்ணைப்பியா…? ” 

 

“ஹ்ம்ம்..  ஹ்ம்ம்..”என அப்படியே  சோபாவில் அமர்ந்தவள் அவரை  பார்க்க “என்ன? ” என்று அரசு  கேட்க, 

 

” ப்ச்  நாளைக்கு  எனக்கு கம்பனி  அன்னிவெர்சரி பார்ட்டி  இருக்கு இல்லன்னா கண்டிப்பா  எனக்கும் வந்திருக்கலாம்.. உனக்கும் இன்வைட்  பண்ணிருக்காங்களே நாளைக்கு அதை அட்டென்ட் பன்னிட்டு  போகலாமே… “என சிறு எதிர் பார்ப்போடு இவள் அவரை நோக்க , 

 

“கண்ணம்மா  எனக்கு எது இம்போர்ட்டண்ட்னு  உனக்கு புரியலையா? நான் உங்க கம்பனிக்கு  கிப்ட் ஒன்னு நாளைக்கு கிடைக்குறது போல ஆர்டர்  பண்ணிட்றேன்.. ஹெட்டுக்கு விஷ் பண்ணி ஒரு மெசேஜ் அனுப்பிர்றேன்  ஓகேவா ” எனவும். 

 

‘அதெல்லாம்  ஓகேதான்.. ரெண்டு  மூனு வாட்டி நம்ம  மேம்மை நீங்க பார்க்க முடியாம  எதாவது தடங்களா வருது ஹனி அதான்  ஏன்னு புரியல…’

 

” கண்ணம்மா என்னாச்சு  எனக்கு கிழவன் தோட் இருக்குன்னுட்டு  நீ நம்ம பாட்டிங்க மாதிரி யோசிக்க ஆரம்பிச்சிட்ட…..”

 

அப்படியெல்லாம்  ஒன்னுமில்லை என்றவள் மனதில் “நான் பிளேன்  பண்றதெல்லாம் நடக்காமலேயே போகுது.தப்பா ஏதாச்சும்  பன்றேனோ????? “

 

“கண்ணம்மா இப்போ மீட் பண்ணலன்னா  என்ன, நல்ல ஒரு சந்தர்ப்பத்துல அவங்களை  மீட் பண்றதுக்காக நாளைக்கு மீட் பண்ண முடியாம  போகலாம் இல்லையா. சோ இன்னொரு நாள் உங்க மேடமை மீட் பண்றேன்.ஓகேவா? ” எனவும். 

 

‘அப்பிடியும்  இருக்கா அப்டின்னா ஓகேதான்.. என்ன ஒன்னு நாள்  தான் தள்ளி போகுது’ என முணுமுணுத்தவள் “சரி ஹனி  நான் இல்லாம மூனு நாள் எப்படி மேனஜ் பண்ணிப்ப? “

 

“நானா?” என சிரித்தவாறு  அவளருகே அமர ‘நாளைக்கு நைட்டே ரிட்டர்ன்  டிக்கட் போடலாமில்லை ‘என காய்சல் வினவ,    

 

” அங்க  என்ன சிட்டுவேஷன்னு  தெரியலடா. நான் நாளைக்கு அங்க போகவே  நூன் ஆகிரும். அங்க நிலைமையை பார்த்துட்டு தானே  வரமுடியும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப்பியாம்..”

” ஹ்ம்ம் ” என்றவள்  அவர் கைகளைகட்டிக்கொண்டு  தோள் சாய்ந்தாள்..

 

“நாளைக்கு  ஈவினிங் தான்  பார்ட்டி இல்ல. நைட்  லேட்டாகுமா வர? அப்டின்னா  பார்த்து கவனமா வரணும்டா 

அப்பப்ப  எனக்கு மெசேஜ் பன்னிரு. டைம்க்கு  சாப்பிடணும். நேரத்துக்கு துங்கிரனும் டா”  என அவர் மூனு நாளைக்கு அவள் என்ன செய்ய வேண்டும் என்ன சாப்பிட வேண்டும். உடுத்த  வேண்டும்..என கூறி “ரொம்ப நேரம் ஷவர்ல நின்னுட்டு இருக்க படாது.குளிச்சதும் வெளில  வந்தரனும். இல்லன்னா நாள் முழுக்க தும்மிட்டே இருப்ப சரியா? ” எனஅவள் நெற்றியில் இதழ் பதிக்க,    

 

“கோயிங்  டு மிஸ் யூ பேட்லி  ஹனி” என்றாள்…

“எனக்கும் டா…   கண்ணம்மா, ஏலி மோனிங்  4 கு பிளைட் இருக்குடா.”

 

“அப்போ  இன்னுமும் ட்ரெஸ்ஸல்லாம் பாக்   பண்ணலயே. எடுத்து வை ஹனி டின்னெர் சாப்பிட்டு பாக்  பண்லாம். இங்க இருந்து 2கு போனாதான் லேசா இருக்கும் கெட்டப்”  என அவள் எழுந்து அவரும் சேர்ந்து உண்டு விட்டு அவருக்கான உடையை பாக்  செய்ய உதவியவள் 

 

” ட்ரோப்  பண்ண வரட்டுமா  ஹனி? ” எனவும்  

‘வேண்டாம் டா.கார்  எடுத்துட்டு போனேன்னா  ஏர்போர்ட்லேயே வெச்சுட்டு வரும்போது  அதுலயே வந்துருவேன்’ என்றார்.. 

‘சரி  ஹனி உன்கூடவே  தூங்கட்டுமா? ‘ என  அவர் பெட்டிலேயே உறங்கிப் போனாள். 

 

தந்தையை  விட்டு இவ்வளவு  நாட்களும் பிரிந்திராதவள் ரொம்ப  சிரமப்பட்டு தன்னை நிலைப்படுத்திக்கொண்டாள். தனக்கு  நினைவு தெரிந்தது முதல் தந்தை எனும் உறவை தவிர வேறெந்த உறவும்  இல்லாது வளர்ந்தவள்..

 

மேரி  வீட்டினருடன்  தான் அதிக பழக்கம்  அங்கிருந்த வரையில்… 

பாடசாலை  நண்பர்கள்  என பெரியளவில்  யாருடனும் அவ்வளவு நெருக்கமில்லை. 

 

இவ்வளவுக்கும் சட்டென  அனைவருடனும் பேச்சு கொடுத்து  இவள் நட்பு அவர்களுக்கு வேணும்  எனும் அளவுக்கு பேசுவாள். 

 

ஆனால்  மற்றவர்கள்  இதுவரையில் அவளுக்கு  தேவையான நற்பை தந்தனரா  என்றாள் அவள் இல்லை என்பாள். 

 

தலையணையோடு  சண்டையிட்டு துயில்  கொள்ளும் தன் மகளை பார்த்தவருக்கு  ‘உன்னை கல்யாணம் பண்ணிக் கொடுத்துட்டு  எப்படித்தான் என் காலத்தை கொண்டு செல்வேனோ?என்  வாழ்க்கை அதன் பின்னர் …. நினைக்கவே பொறுக்குதில்லை  கண்ணம்மா.’மனம் வருந்தினார் தந்தை… 

 

தேனரசன் ” நான்”  என தனக்காக அமைத்ததை  தவிர கயலைக்கொண்டே அவர்  தேவைகளை அமைத்துக் கொண்டது  தான் அதிகம்… அவளுக்காகவே அனைத்தும் என  வாழ்பவர்… 

 

அவருக்கான  வாழ்வை ஏற்று   அவர் அதனை சரியாக அமைத்துக்கொள்ள  நினைத்தாலும் கயலின் அன்னை அதற்கு  முற்று புள்ளியிட்டே சென்றார் என இது வரையில்  இன்னொரு வாழ்வினை அமைத்து கொள்ளாது வாழும் மனிதர்  இவர்.  

 

ஹ்ம்ம்  பார்க்கலாம்  கடவுள் என்ன எழுதிவைத்தார்  அன்றே.. நாளை அதுவே நடக்கும்  நன்றே. 

அதிகாலை  குளிர் உடலை  ஊடுருவ தன் தந்தை  காரில் ஏறி பயணமாகும்  வரை வாசலில் இருந்து பார்த்திருந்தாள்… 

 

“கவனமா  இருக்கணும்  கண்ணம்மா. ஏர்போர்ட்  போய்டு நான் காள் பண்றேன்  நீ தூங்குடா” என்றவர் அவள் நெற்றியில்  இதழ் பதித்து கிளம்பினார்.

 

அரசு சென்றதும்  மீண்டும் துக்கத்தை  தொடர்த்தவள் அவர் ஏர்போட்டில்  இருந்து அழைத்தும் எடுக்கவில்லை.. அவள்  எழுந்து நேரம் பார்க்க மணி ஏழு.. 

 

அரசு  வாய்ஸ்  மெசேஜ் ஒன்றை  அனுப்பியிருந்தார்.. அதை கேட்டவள். அன்றைய  நாளை பெரிய எதிர்பார்ப்போடு எதிர்நோக்க இருந்தவள், சரி போனப்  போகுது மேம் கூட இன்னக்கி பார்ட்டி என்ஜோய் பண்ணலாம் என மனதை தேத்திக்கொண்டவள்  பணிக்கு செல்ல தயாரானாள்….

 

ஆபிஸ்  வந்தவளுக்கு  வேலைகள் பலவும்  கொட்டிக்கிடக்க அனைத்தையும்  செய்து முடித்து நிமிர அப்போதும்  மீனாட்சி வந்திருக்க வில்லை…. 

அவள் காலை உணவை ஆபிஸ் மெஸ்ஸில்  சாப்பிட்டு கொண்டிருக்க அழைத்தார்  மீனாட்சி. 

“ஹாய்  கயல்”

“ஹாய் மேம்”  எனவும், 

” சாரிடா  நான் மூன்று  மணி போலத்தான் ஆபிஸ்  வருவேன்… உனக்காக பாலர்ல  அப்பொய்ன்மெண்ட் போட்டிருக்கேன் அங்கேயே  உனக்கு சாரியும் அனுப்பிருவேன்.

கரெக்டா  நீ பார்லர்க்கு  மூன்று மணி போல கிளம்பினேன்னா சாரியை இருக்கும்.. “

 

“எதுக்கு மேம்  இவ்வளவு? நார்மலா  சுடி எதாவது போட்டுகொல்றனே… “

 

‘எனக்குத் தான் உன் சுடி  பத்தி தெரியுமே, நான் சொன்னா கேட்ப்பியா மாட்டியா? 

 

“சரி மேம்   டைம்க்கு போறேன்  அதுக்கு முன்ன நீங்க வந்துருவீங்களா?” 

 

‘நான் வந்துருவேன். ஆனா நான் வரும் வரை நீ  வெய்ட் பண்ண வேணாம். லொகேஷன் அனுப்புறேன் போய்ரு  சுகுட்டிலையா வந்திருக்க?’ எனவும் 

‘ஆமா  மேம்’ என்றாள்  கயல். 

 

“அப்போ  அதுல எப்டி சாரி  உடுத்திட்டு வருவ? 

‘நான் டாக்ஸி  புக் பண்ணி போய்கிறேன் மேம் கயல் கூ, ற 

“வேணாம் அதெல்லாம் சேபா  இருக்காது.. நான் நம்ம கார்ட்  கிட்ட சொல்லி உனக்கு வண்டி அரேஜ் பண்றேன்  அதுல போய்ட்டு அதுலயே வந்துரு “என்று கூறி விட்டு  வைத்தார்… 

 

‘ப்பா  ஒரு சாரி உடுத்த  இவ்வளவு கஷ்டமா…அம்மா இருந்திருந்தாக்  கூட இப்படித்தான் இருந்திருப்பங்களோ?? ச்சே ச்சே  அவங்களே எனக்கு கட்டி விட்டிருப்பாங்கல்ல..’

‘ மிஸ் யூ ஹனி  நீ போய் ஒரு நாள்  கூட அகல இல்லாத அம்மாவும் எனக்கு  ஞாபகம் வந்துட்டாங்க’. 

 

அப்படியே அரசுவுக்கு மெசஜ் ஒன்றை வைத்தவள்  ஹோல் டெகரேஷன் வேலைகளை கவனிக்க சென்றாள். 

 

அனைத்து வேலைகளும் நேர்த்தியாக நடந்தாலும்  இவளால் முடிந்தளவு சிறு சிறு மாற்றங்களுடன்  டெகரேஷன் மட்டுமல்லாது அனைத்திலும் பார்த்து பார்த்து  செய்து முடித்தாள்.. 

 

நான்கு  பேர் ஒன்றாக அமரும்  வகையில் ஐம்பதுக்கு  மேற்பட்ட மேசைகள், ஒரு பக்கம்  செல்ப் புட் அரேஜ் மென்ட், கம்பனி  தொழிலாளர்களுக்கான வருடாந்த பரிசளிப்பு  விழாவுக்கான ஏற்பாடுகள் என அனைத்தும் செய்தாகி  விட்டது. 

 

நேரமோ  மூன்று பத்து என  காட்ட போனின் திரையில்  மேம் காலிங்… என வர.. “மேம்..”  என இவள் பேசும் முன்னமே 

 

“நீ  இன்னும்  கிளம்பல்லயா  கயல்? ” எனவும்  ‘இதோ கிளம்பிட்டேனே… ”  என்றாள்… 

 

“யாரு உனக்கு மத்தவங்க   வேலை யெல்லாம் பார்க்க சொன்னா..பாரு இப்போ டைம்  என்னாச்சுன்னு. நான் கால் பண்ணலேன்னா இன்னக்கி அப்படியேதான்  பன்ஷனை அன்டன் பண்ணிருப்ப.”

 

“மேம்  இதோ வண்டில  ஏறிட்டேன்…வண்டி  ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.. இதோ போய்கிட்டே இருக்கேன்…” என கயல் கூற   ‘இரு உன்னை வந்து வெசிக்கிறேன்’ என சிரித்துவிட்டு போனை வைத்தார் மீனாட்சி…. 

 

ப்பா நல்லா வேலை  கோள் பண்ணாங்க இல்லன்னா   இன்னக்கி என் கதி….. 

 

வண்டி ஒட்டிக்கொண்டிருந்த ராமு  என அழைக்கப்படுபவர் அவ்வப்போது மீனாட்சிக்கு  ஓடுனராக இருப்பார். 

 

“மேம்  நீங்கள்  நம்ம அம்மாவுக்கு  சொந்தமா? ” என கேட்க, 

“எதுக்கு   அப்படி கேக்குறீங்க? ” எனவும், 

 

“எப்பயுமே யார்கூடவும்  அதிகமா பேசமாட்டாங்க.. அதோட வேலை  பார்குறவங்க கூட இப்படி பேசி பார்த்ததும்  இல்லை.

அதோட உங்க கூட இருக்கப்ப  தான் அவங்க சிரிச்சே பார்த்திருக்கேன். மத்தப்படி நம்ம சின்னவரு  கூட இருக்கும் போது தான் அவங்க உங்க கூட இருக்கா மாதிரி இருப்பாங்க…  அதான் நீங்க அவங்க சொந்தமான்னு கேட்டேன்.. “

 

“ஆஹ் அதுவா… கிட்டத்துல சொந்தமாக  போறவங்க அங்கிள்…”என்றாள்..  

 

‘அப்படியா  மேம் ரொம்ப சந்தோஷம் ‘ என்றவர், நீங்க இறங்க வேண்டிய இடம்  வந்தாச்சு வேலை முடிஞ்சதும் எனக்கு பேசுங்க நான் வந்துர்றேன்’

என அவரது நம்பரை  கொடுத்து விட்டு அவள் உள்ளே செல்ல இவர்  பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திக்கொண்டார். 

மீனாட்சி  கம்பனிக்கு  வந்து மேலோட்டமாக  அனைத்து வேலைகளையும்  பார்க்க அவரருகே வந்த வேலையாள்  ஒருவர் “உங்க பிஏ எல்லாம் பார்த்து  கரெக்ட் பண்ணிட்டாங்க மேம். 

 

சரியான  ஆளைத்தான்  வேலைக்கு வெச்சிருக்கீங்க” என்று கூற, 

” ஓஹ்..  அவர் மெலிதாக சிரித்து விட்டு  அவர் கேபினில் அமர்ந்திருந்தார்…. 

 

மாலை மங்கி  சூரியன் கடலில்  மாலைக்குளியளுக்கு  தயாராக RVC யின் அரங்கம்  அவர்களது கம்பனியுடன் தொடர்புடைய  நபர்களின் வருகையால் நிரம்ப ஆரம்பித்தது…

 

“வரு  எங்க இருக்க? ”  என மீனாட்சி கேட்க  

 

“இதோ ஒன் த வே அத்தம்மா. நீங்க  ஹாலுக்கு போங்க நான் பின்னாடியே வந்துர்றேன்”என்றான்.  

 

“சரிடா  அப்பாவும்  கால் பண்ணாங்க  வந்துக்க முடியலன்னு.பீல்  பண்ண வேணாம் சொல்டேன்.சரி மாதவா  வரானா?”

” வருவான்  அத்தம்மா…நான்  கீழ பார்க்கிங்குக்கு  வந்துட்டேன். நீங்க வாங்க”எனவும், 

”  சரிடா  வரேன்”என அழைப்பை  துண்டித்து கயலுக்கு  எடுக்க

 

அவளோ “ப்ரோமிஸ்ஸா…. மேம் ட்ராபிக்ல  மாட்டிகிட்டேன். டென் மினிட்ஸ்ல வந்துருவேன்  கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க மேம் என்றாள்..”

 

“அவசரமில்லை  வா” என்றவர் 

ஹாலுக்கு  செல்ல அவரை  அருகே வந்து அழகிய வெள்ளை  பூக்களின் கொத்தொன்றை வழங்கி  வரவேற்றான் ருத்ரா…

 

சிரித்த  முகமாய் அதை ஏற்றுக்கொண்டவர் ஏனையோரையும் அதே இன்முகத்துடன்  வரவேற்றுக்கொண்டு உள்ளே செல்ல வெள்ளை பட்டில் வயலட் நிற அறை அடிக்கு  பார்டர் வைத்த சாரி அவர் அழகை இன்னும் இளமையாய் காட்ட முகத்தில் தெரிந்த  கம்பீரம் அவரை யாரும் தவறாக பார்க்க தூண்டாது.. 

 

முன் இருந்த  ஒரு மேசையில் அவனும்  மீனாட்சியும் அமர சிறு மேடை போன்று  அமைக்கப்பட்டிருந்த இடத்தில் கம்பனியின்  ஒரு சிலர் கம்பனி பெருமைகளை பேசி பாராட்டிக்கொண்டிருக்க  மீனாட்சி பின்னாடி திரும்பி பார்த்தபடியே இருக்க “யாரை பார்க்குற  அத்தம்மா? ” எனவும், 

 

“என்  பிஏ வை  இன்னும் காணும்டா. அதான் “…..

 

‘வெளில  சொல்லிறாதீங்க  எம்டி பிஏக்காக   வெயிட்டிங்னு. சிரிக்கப்போறாங்க…உங்களுக்குன்னே  எங்களத்தான் மாட்டுமோ.. ‘

 

“நான்தான்  அவளை அனுப்பினேன்டா.. பாவம்  சின்ன பொண்ணு.. 

 

“வரட்டுமே  உங்க சின்ன பொண்ணு  இன்னக்கி பார்க்கத்தானே  போறேன்” என்றான்.

‘ நானும்  அதுக்காகத்தானே  வெயிட்டிங்’ என மனதில்  கூறிக்கொண்டவர் ‘உன்னைத்தான்  பேசுறாங்க போ’ என அவனை அனுப்பி விட்டு  கயலுக்காக காத்திருக்க வந்திறங்கினாள் அவள்…. 

 

கயல்  உள்ளே வரவும்  மீனாட்சி யாருடனோ  பேசிக்கொண்டு இருக்க  ருத்ரா பரிசில் வழங்க  சென்றிருந்தான்… 

 

 

 

“ஹாய்  மேம்” என கயலின்  குரல் கேட்டு மீனாட்சி  திரும்ப அவர்கள் நின்றிருந்த  இடத்தை சுற்றியிருந்தவர்களும் அவளைத்தான்  பார்த்திருந்தனர். 

 

 வயலட் நிற  ஜாஜட் சாரி  அதே நிறத்தில்  ஸ்லீவ்லஸ் ப்லவ்ஸ், உயர்த்தி  கட்டிய கூந்தல் கண்களில் தீட்டியிருந்த  மை அவளை அவள் அழகை இன்னும் 

மெருகூட்ட  அவை பிரம்மனின்  கலை திறமையை எடுத்துக்காட்டியது. 

 

“வாவ் ! என பார்ப்பவரை  வியக்க வைக்க அவளை அருகில்  அழைத்துக்கொண்டார் மீனாட்சி. அவளை  அருகில் அழைத்தவர்  

 

“முடியாதுன்னு  சொன்ன, பாரு என் கண்ணையே  உன்னை விட்டு எடுக்க முடியல….”

‘ அச்சோ  மேம் நீங்க  வேற எப்ப வேணா  விழும் போலவே இருக்கு  எனக்கு எங்கெங்க முடியுமோ  அங்கெல்லாம் பின் பண்ணியிருக்கு ‘ என்றாள்  கயல். 

 

‘பார்த்தா அப்படி  தோணல்லேயே.. உன் உடலுக்கு  அம்சமா பொருந்தியிருக்கு..  நார்மலா இரு.. ‘என்றார். 

 

“அச்சோ  மறந்தே போய்ட்டேன் மேம்  என்றவள், 

 ‘பெஸ்ட்  விஷஸ்..இன்னும்  இன்னும் நீங்க உங்க லைஃப்ல  ஜெயிக்கணும், ரொம்ப நாளைக்கி சந்தோஷமா வாழனும்’ என  வாழ்த்தி அவருக்காக கொண்டு வந்திருந்த வெள்ளை மலர்களிலான  செண்டை வழங்கினாள். 

 

 ” தேங்ஸ் டா”  என வாங்கிக்கொண்டார். ‘இது  யாருக்கு? ‘ என அவள் கைகளில்  இருந்த வயலட் பூக்களினாலான செண்டை  காட்டி கேக்க  

 

“இது  நம்ம பாஸ்க்கு. வந்திருக்காங்கலா? ”  எனவும், 

சிரித்தவாறு, “இரு  இப்போ வந்துருவான் ” என  அவளை அருகே நிறுத்திக்கொண்டு  கிளையண்ட் ஒன்றுடன் பேசிக்கொண்டு  இருந்தார் மீனாட்சி.  

 

‘அத்தம்மா  ஜூஸ் சாபிடறிங்களா? ‘  என கையில் ஜூஸ் க்ளாஸுடன்  வந்தான் ருத்ரா.

 

மீனாட்சிக்கு  பக்கத்தில் இருந்தவள்  யாருடனோ பேசிக்கொண்டு இருக்க  அவள் தோள் தட்டி திருப்பிய மீனாட்சி

 

 ‘ஹேய்  வரு மீட்  மை பிஏ கயல்விழி’  எனவும் இருவரும் ஒருவரை  ஒருவர் பார்க்க   

கண்கள்  நான்கும்  சந்தித்த வேலை பர்த்த  காட்சிதான் நான்கு கண்களுக்கும்  பொதுவானதோ… 

 

 அவள்  கண்கள்  கூறிய காதலை படிக்க மறந்தான்  அந்த புதுக்காதலன் 

 

அவன் கண்கள்  அவளை கண்ட நொடி  உயிர் நாடி நரம்புகளில்  புது இரத்தம் பாய உடல் சிலிர்த்து அவளை  முழுதாய் கண்களில் நிரப்பிக்கொள்ள,  

 

அவளுக்கோ  அகம் மட்டுமல்ல  முகமும் அவனை கண்ட  மகிழ்வில் அதனை வெளிக்காட்டிட  சிவந்தது வதனம். உள்ளமும் உயிரும்  புத்துணர்வு பெற்றாலும், 

 

அடுத்த நொடியே  “மீனாட்சியின் அண்ணன்  மகன் இவன் தானா? இவர் என்னை  தப்பா புரிஞ்சிகிட்டு இருக்கவர்.என் திட்டத்தை  சொன்னால் எனக்கு உதவி பண்ணுவாரா எனக்கு மட்டும் ஏன்  தான் இப்படியெல்லாம் நடக்குதோ….

 

 மேமோட அண்ணன்  பையனைத்தானே நம்பி இருந்தேன். இப்போ  அது இவங்களா இருக்கப்போ நா எப்படி.. என்னையே தப்பா  புரிஞ்சிருக்கவர் என்பேச்சை புரிஞ்சிப்பாரா? “

 

அவனை  பார்த்த  அடுத்த நொடி மனம்  சுழன்று பலதையும் யோசிக்க  அவள் முகமும் அதை காட்டிக்கொடுத்தது. 

 

சட்டென்று  ருத்ரா அவன்  பார்வையை மீட்டிருக்க  கயலோ அவனை பார்த்தவாறே  இருந்தாள்.. 

 

” என்ன  அத்தம்மா  உங்க பிஏ இப்படி  ஷாக் ஆகி நிக்கிறாங்க.. என்னாச்சு? ”  எனவும்  

 

‘சாரி  மேம் இவங்களை  இதற்கு முன்ன பார்த்திருக்கேன்  ஆனா உங்க பையன்னு தெரியாது’ என்றாள்  கயல். 

 

“ஆஹ்  உனக்கு  முன்னமே தெரியுமா? ” என்றவர்  “ஹேய் வரு உனக்கும் தெரியுமா? ” என அவனைக் கேட்கவும், 

 

‘ பார்த்திருக்கேன்  அத்தம்மா ஆனால் சரியா ஞாபகம் இல்லை டெயிலி எவ்வளவு  பேரை மீட் பண்றோம்’ என்றான்.

 

கயலோ  மனதில் ‘அப்போ  நானும் மத்தவங்களும் உங்க பார்வைக்கு ஒன்னாதான்  தெரியிரேனா? ‘என வருந்திக்கொள்ள 

 

 ‘ஹேய்  கயல் கையில  இருக்கத இப்போ வாச்சும் கொடு’ எனவும் 

 

” ஆஹ்  ஓகே மேம்.”  என்றவள் “பெஸ்ட்  விஷஸ் சார்” என பூச்செண்டை  நீட்ட தேங்ஸ் என பெற்றுக்கொண்டான்….

 

 

 

“சரி  வா உட்காரலாம்”  என ஒரு மேசையில் அமர அவ்விடம்  மாதவனும் வந்து அமர்ந்தான். ‘ஹாய்  அத்தை’என்றவன்  

 

‘யாரிந்த  தேவதைப் பெண்’ என கயலை  காட்டி கேட்க, ருத்ராவும்  அவர்களைத்தான் பார்த்திருந்தான்.. 

 

சிரித்துக்கொண்டே ‘மை  பிஏ என்றவர் கயல் இது  வருவோட தம்பி காலேஜ்  

பைனல்ல  இருக்கான்.’ எனவும் 

 

“ஹலோ  ப்ரோ என இவள்  கரம் நீட்ட அப்பாடா  என்று ருத்ரா பார்க்க  

“ஹாய் “என  இவனும் நட்புக்கரம்  நீட்டினான்….

 

சற்று  நேரம் பொதுவாக  பேசிக்கொண்டு இருக்க  கயல் ருதராவை பார்ப்பதும்  தலைக்கவிழ்வதுமாய் இருந்தாள்.. அவன் முன்னே  சகஜமாய் அமர முடியவில்லை. 

 

காதல் கொண்டவனிடம்  உரிமையாய் பேசவும் முடியாது.தன்னை  தெளிவு படுத்தவும் தெரியாது தவித்தாள்.

 

அவன்  மனமும் தப்பு  தப்பாக போட்டுக்கொடுக்க அறிவோ  நிதானமா இருடா என எச்சரிக்க பேசாது விழிகளால்  அவளை காதல் செய்தான்.   

 

சிறிது நேரத்தில்  மாதவனுடன் ருத்ரா எழுந்து செல்ல கயலும்  மீனாட்சியும் மேசையில் அமர்ந்திருந்தனர். 

 

சற்று சகஜமானவள்  நாமே கலத்துல இறங்குவோம்  என முடிவெடுத்திருந்தாள்  

 

“மேம்  என்னை ஒரு  போட்டோ எடுக்க முடியமா  அப்பாக்கு இன்னும் சாரி  வியர் பண்ணினேன்னு சொல்லவே  இல்லை. போட்டோ அனுப்பினா ஷாக்  ஆகிருவாங்க “என்றாள். 

அவளை  போட்டோ  எடுக்கவும்  ரெண்டு பேருமாக  செல்பி ஒன்றும் எடுத்துக்கொண்டனர்… 

 

“ஹேய்  கயல் உங்க  அப்பா அம்மாவெல்லாம்  நேடிவ்வே கனடாவா? ” என  பேச்சை ஆரம்பித்தார் மீனாட்சி. 

 

“இல்ல  மேம் அம்மாவும்  அப்பாவும் மெரி பண்ணிக்கிட்டதும் அங்க  போய்ட்டாங்களாம். அப்படியே ஜாப் பிக்ஸாகவும்  அங்கேயே செட்ல் ஆகிட்டாங்க.

 

இங்க பெருசா சொல்லிக்க உறவுகள்  யாரும் இல்லயாம்.. “

 

“ஓஹ்! அப்டியா என பேசிக்கொண்டு  இருக்க உங்க அப்பா பெயர் என்ன என கேட்கவும்,ருத்ரா  அவ்விடம் வரவும் சரியாக இருந்தது.

 

“அத்தை  ஷெல் வீ  டான்ஸ் “என கை நீட்ட  “அச்சோ வரு என்னால முடியாது.”  என்றவர் என்ன நினைத்தாரோ “கயல்  நீ போ..” எனவும் ‘நா எப்டி…. ‘என அவரை  பார்க்க “என் பையன் நம்பி போகலாம்” என்றார்  சிரித்துக்கொண்டே.   

 

எழுந்தவள் அவரைப் பார்த்து “எங்கப்பா  பெயர் ‘தேனரசன்’ என்றவள் இதோ என் கெளரில நம்ம  பேமிலி ஸ்னாப்ஸ் இருக்கு பாருங்க மேம்” என்று போனை  கொடுக்க  

 

அவளருகே  குனிந்த ருத்ரா ” இன்னும் எவ்வளவு  நேரம் உனக்காக வெய்ட் பண்ணனும் என  கேட்க சட்டென அவ்விடத்தை விட்டெழுந்தவள் மீனாட்சியின்  முகம் பார்க்காது ருத்ராவின் கண்களுக்கு கட்டுண்டு அவன் நீட்டியிருந்த  கையை பற்றி அவனுடன் சென்றாள். 

மெல்லிய  இசை, அதோடு  கண்களை மயக்கும்  ஒளி எங்கும் பரவியிருக்க ருத்ராவின்  இடக்கை அவள் இடையில் தழுவி, வலக்கை அவள் கை கோர்த்து   இருந்தது. 

 

 கயலின் வலக்கை  ருத்ராவின் தோள்  பற்றியிருக்க இடக்கை  அவன் வலக்கையோடு கோர்த்து  மெலிதான உடல் அசைவுகளுடன் ஒருவரை  ஒருவர் பார்த்திருந்தனர். 

 

“எங்க அத்தை  நான் நல்லவன்னு   ரெகமெண்ட் பண்ணித்தான்  என்கூட ஆடணும்னு இல்ல… நான்  எப்பிடி இவன்கூடெல்லாம்னு போவேன்னு…  தானே சொல்ல வந்த? ” 

 

 “இல்ல  நீங்க பிரியப்படுவீங்களோ  மாட்டிங்களோன்னு தான் நான் எப்படின்னு…  சொன்னேன்.. பிடிக்கலனெல்லாம் இல்ல.” என கயல்  கூற  

 

“சரி  அன்னைக்கு  பார்கிங்ல நான்  பார்த்திட்டு இருக்கும் போதே போய்ட்ட என்னாச்சு?முகம் வேற  என்னமோ போல இருந்தது ” 

என அவள்  அன்று அழுந்தது  எதற்காக வென அறிந்துக்கொள்ள  இவன் வினவ, 

 

அப்போதுதான்  அவளுக்கும் ருத்ரா தன்னையும்  அரசுவையும் பிழையாக புரிந்து பேசியது  நினைவில் வந்தது. 

 

“அது அர்ஜன்ட்டா  கால் வரவும் கிளம்பிட்டேன்  என்றாள்”

 

“ஓஹ்  அர்ஜன்ட்டா  கோள் பண்றதுன்னா  யாரினி உன் ஹனி தான்  பேசியிருப்பார்” என இவன்  கூற  

கயலோ  “ஆமா” என்றவள், 

அவனிடம் இருந்து  செல்லலாம் என தோளில்  இருந்த கையை எடுத்தவளுக்கு  அவன் கைக்குள் இருந்த மற்றைய கையை  விட மறுத்தான். 

 

‘ விடுங்க ‘எனவும்  எதுக்கு? என்றான் 

 

‘எனக்கு  போகணும் ‘என்றாள். 

 

” அப்படி  இடைல போக முடியாது ஆரம்பிச்சவங்களோட தான்  முடிக்கணும்” என்றான்.

  “ப்ளீஸ்.. “என அவனை  பார்க்க அவன் கண்களில்  இருந்த காதல் அவள் உள்ளத்தை  ஏதோ செய்ய முகம் பார்க்காது தலைக்கவிழ்ந்தாள்..

 

இப்போ  அவள் கை  அவன் இதயம்  தொட்டுக்கொண்டு  இருக்க, அவன் அவள் இடையில்  இருந்த கையை சற்று அழுத்த அதே நேரம் அவன் மார்பு  பகுதியில் ஷர்ட்டை கைகளால் அழுந்தப் பற்றினாள். 

 

சில நொடி  லைட்ஸ் ஒபாகி  ஒன் ஆகவும் அவளின்  சிவந்த ஆப்பிள் கன்னங்களில்  திராவிட இதழ்கள் அழுந்த தன் தடத்தை  பதித்து மீண்டிருந்தன.. 

 

அவள் பற்றியிருந்த  இடத்திலேயே கைகளால்  குத்தியவள் ” நீங்க நினைக்கிற  அளவுக்கு நான் கெட்ட பொண்ணு இல்ல வரு”  என்றவள்,

” ஐ  ஹேட் யு” என  கலங்கிய கண்களுடன் அவனை பார்த்தவள்  மீனாட்சி இருந்த இடம் வந்தாள். 

 

அவள்  அவனருகே நின்றிருக்க  கண்கள் இரண்டும் காதல் கதை பேச காதல் கொண்டவனிடம் ‘ தன்னவள்  தனக்கில்லயா? ‘ என மனம் அவனிடம் கேள்வி எழுப்பிய அடுத்த நொடி  இவள் என்னவள், எனக்கு மட்டுமானவள் என்ற எண்ணத்தில் முதல் முதலாய்  தீண்டினான் பெண்னை.

 

அதன் பிறகே  செய்த காரியம்  விளங்க அவன் அறிவோ, ‘ மடையன்  நிதானத்தை தவறவிடாதே என கூறினேனே  கேட்டியா.இப்போ அனுபவி ராஜா அனுபவி..’ என ராகம்  பாட, 

 

  அவளோ தன்  அத்தையிடம்  சென்றிருந்தாள்..

 

அனைவரும்  விடைபெற்று  சென்றுகொண்டிருக்க  நேரம் ஒன்பது என காட்டியது மீனாட்சியிடம்  தன் போனை கொடுத்திருந்ததை மறந்திருந்தாள் கயல்   இந்த ருத்ராவின் கன்ன முத்தத்தால்… 

 

ஆனால்  அதை பார்த்திருந்தவரது  மனம்….. 

 

” மேம்  நான் கிளம்பட்டுமா? “என அவர் கைகளை  தட்டி கேட்க அவர் முகம் பார்த்தவள்

 

  “என்னாச்சு  மேம் முகம் ஒரு மாதிரி  இருக்கு” என கேட்கவும் அவளது  போனை கொடுத்தார். 

 

மனதாrல் தலையில்  அடித்துக்கொண்டவள், ‘அச்சோ  இதை எப்பிடி மறந்தேன்’ என அவர் முகம் பார்க்க, 

அவள்  கண்ணம் வருடியவாறு  நெஞ்சை தடவிக் கொண்டவாரே ” இங்க இருக்கி பிடிக்கிற  மாதிரி இருக்கு முடியல கயல்” எனவும் “என்னாச்சு” என பதறியவள்  

 

“வரு மேம்க்கு  ஏதோ பண்ணுதாம் சீக்கிரம் வாங்க ஹாஸ்பிடல்  போகலாம்” எனக் கூறிய அடுத்த பதினைந்து நிமிடங்களுக்குள் புயலென ஹாஸ்பிடலை  அடைந்திருந்தனர்…