காதலின் விதியம்மா 14

KV -183ee48f

சீரான வேகத்தில் சென்ற கார் தஞ்சாவூரை தொட்ட உடன் தேஜூ பைரவை பார்க்க, அவனோ கடமையே கண்ணாக காரை ஓட்டி கொண்டு வந்தான். ‘ம்ம்ம்…. பைரவ் சாரை கேட்டா வீட்டுக்கு அனுப்ப மாட்டாங்க….. எல்லாரையும் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு….. நம்ம பெரிய சார் கிட்ட கேட்கலாம் நம்ம லக் போக சொன்னாலும் சொல்லலாம்’ என்று எண்ணி கொண்டே, 

 

“சார்…. இங்க இருந்து பக்கத்தில் தான் என்னோட வீடு நான் போய்ட்டு நாளை மார்னிங் பைரவ் சார் சொல்ற இடத்துக்கு நேரத்தில் வந்துடுவேன்” என்று நாராயணனை பாவமாக பார்த்து கொண்டு கேட்க, 

 

“சரிமா உன்னோட வீட்டுக்கு போக ஏன் இவ்வளவு தயக்கம்…..” என்று அனுமதி கொடுக்க, பூமகள் “அது சரி தான்…. நீ எங்க வேணாலும் போ ஆனால் வெள்ளி கிழமை மறக்காமல் வீட்டுக்கு வந்திடனும்….. வீட்டில் பூஜை இருக்கு…. சரியா அப்படியே வரும் போது இதோ உன் ப்ரெண்ட் அவளையும் கூப்பிட்டு வரனும்” என்று பக்கத்தில் இருக்கும் கௌசியை காட்ட, 

 

‘ரையிட்டு நம்ம பத்து நாள் லீவு அம்போ தான் போல…. கௌசி மனசை தேத்திக்கோ உன்னால தூங்க முடியாது’ என்று உள்ளுக்குள் புலம்பி தள்ளினால் கௌசல்யா. 

 

அதுவரை அமைதியாக இருந்த பைரவ் “எப்படி போவ” என்றது க்கு “சார் இங்கே இறங்கி நாங்க பஸ்ஸில் போய்டுறோம்….. புதுப்பட்டினம் பக்கத்தில் தானே” என

 

அனைவரிடமும் விடை பெற்று கீழே இறங்க தேஜூ “கௌசி என்னோட பெஸ்ட் ப்ரெண்ட் ரம்யாவை உனக்கு அறிமுக படுத்திறேன். நம்ம மூன்று பேரும் ஜாலியா ஊர் சுத்தலாம்” என்று பேசிக் கொண்டே இருவரும் பக்கத்தில் இருக்கும் சந்தில் நுழைய அங்கே இருந்த இருவரை கண்டு அதிர்ந்த தேஜூ மெதுவாக அவர்கள் பக்கத்தில் நெருங்கி “அண்ணா!!!! ரம்யா!!!!!” என

 

ஒருவர் அணைப்பில் ஒருவர் இருக்க இவளின் குரல் கேட்டு பதறிக் கொண்டு இருவரும் விலகினர். 

 

எதிர்பாரா நேரத்தில் அதுவும் எதிர்பாராத நிலையில் இருந்த இருவரையும் தேஜூ கேள்வியாக பார்க்க, தோழி தன்னை தவறாக எண்ணிவிடுவாளோ என்ற அச்சத்தில் “ஸாரி அச்சு….. இவர் தான் இப்பத்திக்கு இதை பற்றி யார் கிட்டவும் சொல்ல வேண்டாம் உனக்கு நல்லது நடக்கும் போது சொல்லலாம்னு சொன்னார் அதான் உன் கிட்ட மறச்சிட்டேன்…. என்னை தப்பா நினைக்காத டி உன் கிட்ட சொல்லாமல் என் வாழ்க்கையில் நடந்த ஒரே விசயம் இது தான்டி” என்று ஒரு பக்கம் தோழியிடம் மறைத்த குற்ற உணர்ச்சி மற்றொரு பக்கம் தன்னை தவறாக நினைத்து விடுவாளோ என்ற பயம் என்று கண் கலங்க சொல்ல, 

 

அவளின் நிலையை உணர்ந்து தேஜூ “எனக்கு என் ரம்யாவை பற்றி தெரியாதா….. என் ரம்யா குட்டி எனக்கு அண்ணியா வரது எனக்கு சந்தோஷம் தான்….. உங்களுக்கு எல்லாம் அதிர்ச்சி தரலாம்னு நினைச்சேன் பட் நீங்க எனக்கு கொடுத்திடிங்க…. இது கௌசி என்னோட செல்ல ப்ரெண்ட்…..” என்று இருவருக்கும் பரஸ்பர அறிமுக படலத்தை நடத்த, 

 

தன்னிடம் வந்ததில் இருந்து பேசாத தன் செல்ல தங்கையின் கோபத்தை உணர்ந்து அமைதியாக அவளின் முகத்தை பார்க்க, அவளோ “ரம்யா நீங்க வந்தா மாதிரியே கிளம்புங்க நானும் கௌசியும் பஸ்சில் வரோம்” என

 

தேவேஷ் “அதெல்லாம் வேண்டாம் நம்ம கார் இருக்கு எல்லோரும் அதிலே போய்டலாம்” எங்கே தேஜூ மறுத்திட போறாளோ என்ற பயத்தில் பதில் கேட்காமல் முன்னே காரை நோக்கி செல்ல, 

 

தேஜூ அண்ணன் வேகமாக செல்வதை இதழில் அரும்பிய புன்னகையை மறைத்து கொண்டு ரம்யாவிடம் “லூசே…. காரில் வந்ததுக்கு வராமலே இருந்து இருக்கலாம்…. பைகில் வர வேண்டியது தானே” என்று அவளின் தோளை இடிக்க, கௌசி “அடிப்பாவி அது உங்க அண்ணா டி” என

 

ரம்யா “கிண்டல் பண்ணாத புள்ள அவங்களே முதல் முறையா என்னையே வெளியே கொண்டு வந்தாங்க இதுல நீங்க வேற” என்று சிணுங்க

 

கௌசி “எப்ப இருந்து லவ் பண்றீங்க” என்றதுக்கு முகத்தில் சிவப்பேற “இரண்டு வருசமா” என்று காலில் கோடு போட்டு கொண்டே கூற, அதை கேட்ட தேஜூ மனதில் வேதனை தன்னால் கூடிக் கொண்டது இவர்கள் காதலால் அல்ல காதலை தன்னிடம் மறைத்த காரணத்தால், சில நொடிகளில் அதனை முகத்தில் தெரியாமல் மறைத்துக் கொண்டாள். 

 

இவளின் அமைதி மற்ற இருவருக்கும் தெரியாத வரையில் இருவரும் நட்பை வளர்த்து கொண்டு இருக்க, அவர் முன் தேவேஷ் காரை நிறுத்த, அதில் ஏறிக் கொண்ட பின் அவர்கள் இல்லம் நோக்கி சென்றது இவர்களை சுமந்த மகிழுந்து. 

 

தஞ்சையின் மையத்தில் இருந்த பல தலைமுறையை பார்த்த பழங்காலத்து மாளிகை முன் நின்றது பைரவின் கார். இப்பெரும் மாளிகையில் வசிப்பதோ கணவன் மனைவி இருவர் மட்டுமே. 

 

கார் சத்தம் கேட்டு வெளியே வந்தார் பார்த்திபன், நாராயணனின் ஆருயிர் தோழன் மற்றும் ஒரே தங்கையின் கணவன். 

 

பார்த்திபன் “அடடே… போங்க மச்சான் நெசமா மழை தான் வர போகுது….. வராத மனிசங்க எல்லாம் இந்த பக்கம் தல காட்டுறீங்க….. வாமா பூ எப்படி இருக்க…. இது யாரு என்னோட மாப்பிள்ளையா இது அடையாளமே தெரியலை ராஜா கணக்கா இருக்கான்” என்று வாயில்லே தன் விசாரிப்புகளை தொடங்க, 

 

“உள்ள வாங்க அண்ணா வாங்க மதனி…. வாப்பா பைரவ் உன்னை சின்ன பிள்ளையில் பார்த்து…. ஏங்க அவங்களை உள்ள விடாமல் என்ன பேச்சு” என்று கணவனை முறைத்தார் மாளவிகா தேவி. 

 

அவங்க உள்ள போற நேரத்தில் நம்ம அவங்க குடும்பத்தை பற்றி பார்ப்போம்….. 

 

நாராயணனின் முன்னோர்கள் ஆங்கிலேயர் காலத்திலே அந்த தஞ்சையை ஆண்ட மன்னர் பரம்பரை. பின் அது சுருங்கி குறுநில மன்னராக பின் அதுவும் சுருங்கி தற்போது ஜமின் பரம்பரையாக இருக்கார்கள். 

 

ஹரிஹரன் வர்மா பத்மினி தேவி தம்பதிகளுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் நாராயண வர்மா, இரண்டாவது அஷோக் வர்மா, மூன்றாவது தான் மாளவிகா தேவி. 

 

நாராயண வர்மா வேலை விசயமாக சென்ற இடத்தில் பூமகளை பார்த்து பிடித்து போக, வீட்டில் சொன்ன உடன் ஒரே இனத்தைச் சேர்ந்து இருந்ததால் வசதி அவ்வளவு இல்லாத நிலையிலும் பெரியவர்கள் சம்மதத்துடன் கல்யாணம் பண்ணி கொண்டார். 

 

சிறிது காலத்தில் குடும்பத்துடன் ஏற்பட்ட மன கசப்பு காரணமாக அஷோக் குடும்பத்தை விட்டு மொத்தமாக விலகி விட்டார். சில வருடங்கள் பின் நாராயணன் தன் நெருங்கிய நண்பனான பார்த்திபனை தன் செல்ல தங்கைக்கு மன முடித்து வைத்தார். அவர்களின் காதல் கல்யாணத்திற்கு பிறகு தொடங்க, அவர்களின் காதலுக்கு பரிசாக கிடைத்த வரம் தான் சதிகா தேவி. அந்த குடும்பத்தின் ஒரே பெண் வாரிசு. 

 

மாளவிகா “அப்பாடா இப்ப தான் இந்த மாளிகை வீடு மாதிரி இருக்கு இத்தனை வருடத்தில் நாங்க இரண்டு பேரும் மட்டும் இருக்கிறது…. இனிமேலாவது இங்கவே இருக்க பாருங்க” என்று ஏக்கமாக சொல்ல, பார்த்திபனும் “ஆமா மச்சான் இங்க இருக்கிற சொத்தை பராமரிக்கவே முடியலை ஒத்த ஆளா சமாளிக்க முடியாலை” என

 

அதை கேட்டு நாராயணனுக்கு சற்று குற்றயுணர்ச்சியாக இருந்தது. “சாரிடா என்னோட கடமை எல்லாத்தையும் உன் தலையில் கட்டிட்டேன்ல” என உடனே பார்த்திபன் “அட அப்படி எல்லாம் இல்ல அது என்ன உன்னோட கடமை என்னோட கடமைனு பிரிச்சி பார்க்கிற” என அவர்கள் விவாதம் தொடர, 

 

அதில் எதிலுமே கலந்துக்காமல் யோசனையோடு அமர்ந்து இருந்த பைரவை நெருங்கிய மாளவிகா “என்னோட தங்கத்துக்கு என்ன பிரச்சனை….. சம்மந்தமே இல்லாமல் அமைதியாக இருக்க என் கிட்ட சொல்றது தானே” என

 

“க்யூட் அத்தை அதெல்லாம் ஒன்னும் இல்லை….. ஒரு சந்தேகம் பட் அது நமக்குள்ள தான் இருக்கனும் டீலா” என்று ஹஸ்கி வாய்ஸ்சில் சொல்ல, அவரும் அதே குரலில் “டீல்… டீல் என்ன விசயம்” என

 

“அது வந்து… பொண்ணுங்களுக்கு எத்தனை பேர் கூட இருந்தாலும் பிடிச்ச யார் இருந்தாலும் அம்மா வீட்டுக்கு போகலாம்னு சொன்ன யாரா இருந்தாலும் மறந்திடுவாங்களா” என்று பல நேரமாக மனதில் இருந்த குழப்பத்தை கேட்க, மாளவிகா சிரித்து கொண்டே “அது மறந்துட்டாங்கனு இல்லடா தங்கம். பொண்ணுங்க அம்மா வீட்டுல தான் நினைச்சா மாதிரி இருக்க முடியும்…… பொண்ணுக்கு பிடிக்குமா பிடிக்காதனு சமைக்கிற சின்ன சின்ன பொருளையும் பார்த்து செய்யற அம்மா….. யார் சொன்னாலும் கேட்காத மனிசன் கூட பொண்ணு எள்னு சொல்றதுக்குள்ள எண்ணெய்யாய் இருப்பாங்க டா….. கூட பிறந்தவங்க எவ்வளவு சண்டை போட்டாலும் ஒருத்தருக்கு ஒரு பிரச்சினை னா முதலில் நிற்கிறது அவங்களா தான் இருப்பாங்க…… 

 

அதுவும் கல்யாணம் ஆகிட்ட பொண்ணுனா பேசறதில் இருந்து நடந்துக்கிற விதம் வரை மாமியார் வீட்டுல கவனமா இருக்கனும்னு இயல்பை தொலைச்சிட்டு நிறைய பேர் இருக்காங்க…… அதே அம்மா வீடு னா அப்படி இல்லையே கோபம் வந்தா கத்தலாம் சந்தோஷத்தில் குதிக்கலாம் கஷ்டம்னா கத்தி அழுகலாம் இப்படி சொல்ல நிறைய இருக்கு…… அது இருக்கட்டும் மருமகனே இந்த ஆராய்ச்சி எல்லாம் உனக்கு இப்ப எதுக்கு ” என்று அவனை ஆராய்ச்சி பார்வையில் கேட்க, 

 

“சும்மா அத்தை….. ரொம்ப தூரம் வண்டி ஓட்டி வந்தது அசதியா இருக்கு நான் ரெய்ட் எடுக்கிறேன்” என்று அவனுக்கு ஒதுக்கி இருந்த அறைக்கு சென்றான். 

 

 

தேஜூ வீடே கலகலப்பாக இருந்தது. தீடிரென வந்த மகளை பார்த்து விருந்தே ரெடி செய்து விட்டார் பொன்னி. கௌசல்யா சீக்கிரமே அனைவரிடமும் ஒட்டிக் கொள்ள, பேச்சு சத்தம் இந்த வீட்டையே நிரப்பி இருக்க, தேஜூ மனதில் மட்டும் எதோ ஒரு வித அழுத்தம். சரியாக பேச முடியாமல் தவிக்க, தலை வலிப்பதாக சொல்லி விட்டு தனது அறைக்கு வந்தாள். 

 

தன் செல்ல தங்கை…… தாய் தந்தையை விட அதிகம் தன்னையே தேடும் தங்கை வந்ததில் இருந்து பேசாமல் அதை விட கொடுமை முகத்தை கூட பார்க்காமல் தவிர்க்க, தேவேஷால் தாங்க முடியவில்லை. தவறு தான் அவளிடம் மறைத்தது தவறு தான் அதுவும் உயிர் தோழி…. என்று மனதில் தன்னையே நொந்து கொண்டு செல்லும் தேஜூவையே பார்க்க, 

 

அவளோ தன் நினைவே இல்லாமல் ரூமை அடைந்தவள் மௌனமாக விட்டத்தை வெறித்து கொண்டு இருக்க, அவளின் கவனத்தை கலைத்து பக்கத்தில் இருந்த அவளது பேசி. 

 

‘இப்ப யார் பண்றா’ என்ற கேள்வியுடன் பார்க்க அது பைரவ் பெயரை தாங்கி இருந்தது. பரப்பப்புடன் அடுத்து “ஹாலோ” என

 

“வாட் ஹாப்பென்ட் தேஜ்….. வாய்ஸ் ஏன் டல்லா இருக்கு….. எதையாவது யோசிச்சு மனசை குழப்பிட்டு இருக்கியா” என்று பதட்டமாக கேட்க, 

 

அவனின் கேள்வியில் தேஜூ இன்பமாக அதிர்ந்தே விட்டாள். தன் முகத்தை பார்த்து தாய் தந்தையே கண்டு கொள்ளாத விசயத்தை ஒற்றை வார்த்தையில் அறிந்தது வியப்பாக இருந்தாலும் “அப்படி எல்லாம் இல்லை சார்….. நான் நல்… நல்லா தான் இருக்கேன்” என

 

“உன்னை பார்த்து கொஞ்ச நாள் தான் ஆகுது….. பட் ஐ நௌ யூ பெட்டர் தேன் எனிஒன்….. அங்க உன் மனசில் வரது உன் மூளைக்கு போறத்துக்கு முன்னாடியே எனக்கு தெரியும் ஸோ டோன்ட் டீரை டூ பீ நார்மல்” என

 

சொன்னால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் என்ற எண்ணத்தில் “அது வந்து…. அண்ணா…. அண்ணா வந்து… ” என்று இழுக்க, 

 

அவனோ “அந்த இடியட் என்ன பண்ணான்” என்று கேலியாக கேட்க, “என் அண்ணா இடியட் எல்லாம் இல்லை” என்ற சிணுங்கலுடன் மேலே “அது அண்ணாவும் என் பெஸ்ட் ப்ரெண்ட் ரம்யாவும் லவ் பண்றாங்க…. அதுவும் இரண்டு வருஷமா ஆனா என் சொல்லவே இல்ல தெரியுமா…. இப்ப கூட நானே அவங்க ஒன்னா இருக்கிறத பார்த்து தெரிஞ்சி கிட்டேன்…… இல்லனா சொல்லி இருக்க மாட்டாங்க தானே…… நான் எது இருந்தாலும் முதல அண்ணா கிட்ட தான் சொல்வேன் தெரியுமா….. அண்ணா கூட அப்படி தான்….. ஆனால் இப்ப நான் அண்ணாக்கு வேண்டாம் தானே முடிவு பண்ணி என் கிட்ட சொல்லலை” என்று முதலில் ஆதங்கத்துடன் ஆரம்பித்தவள் கடைசியில் அழுகையுடன் முடிக்க, 

 

“ஹே…. டோன்ட் க்ரை…. யார் சொன்னா உன் அண்ணாக்கு நீ வேண்டாம்னுவேண்டாம்னு நீயா ஒன்னு நினைச்சு கவலை படுற” என

 

“இல்ல…. நான் காலேஜ் படிக்கும் போது என் கூட படிச்சவங்க எல்லாம் சொல்லுவாங்க….. அவளோட அண்ணாக்கு அவள் தான் உயிராம்…. கேட்கறதுக்கு முன்னாடியே எல்லாமே வாங்கி கொடுப்பாங்களாம்….. ஆனா கல்யாணம் ஆனதில் இருந்து அவளை கண்டுக்கவே இல்லையாம்….. அவ எது கேட்டாலும் திட்டிட்டே இருப்பாங்களாம்” என்று தேம்பி கொண்டே சொல்ல, 

 

“ஹே லூசே எல்லாரும் அப்படியே இருப்பாங்களா” என்றதுக்கு “இன்னோரு ப்ரெண்ட் அண்ணாவும் இப்படி தானாம்….. இவங்களை விட்டே தனியா போய்ட்டாங்களாம்” என்றவளின் மனநிலை புரிந்தது பைரவிற்கு. 

 

‘பைத்தியம் தேவையே இல்லாததை எல்லாம் நினைச்சு இருக்கா’ என்று மனதிலே அவளை கடிந்து கொண்டு அவளிடம் “உனக்கு உன் ப்ரெண்ட் உனக்கு அண்ணியா வரதில் எதாவது பிரச்சினை இருக்கா” என்றதும் இல்லை என, 

 

“நேரா போய் உன் அண்ணா மடியில் படுத்துக்கோ…. உன் அண்ணாவே உன்னோட லூசு தனமான கேள்விக்கு பதில் சொல்லுவான்… நீ எதுமே கேட்காத புரியுதா” என அவளும் சரி என்பதற்கு ஆதாரமாக தலையை ஆட்ட, 

 

எதிர் பக்கம் அமைதியாக இருந்ததில் பைரவே “என்ன தலையை ஆட்டுறியா….. உன்னை வெச்சிட்டு….. வாய் தான் இருக்கே பேச வேண்டியது தானே” என்று சலித்து கொண்டவனுக்கு தெரியவில்லை எதிர் காலத்தில் அவள் மட்டுமே பேச போகிறாள் அவள் சொல்லும் அனைத்துக்கும் தான் தலையை மட்டும் ஆட்ட போவதை. 

 

தன் அண்ணன் தனக்கு முன்னுரிமை கொடுக்க வில்லையே என்று சிறுபிள்ளை தனமாக தேவேஷிடம் பேசாமல் இருந்தவள், மெதுவாக தனது அறை விட்டு வெளியே வர, அம்மாவிடம் ரம்யாவும் கௌசியும் கதை அடித்து கொண்டு இருக்க, தேவேஷ் முகம் முழுவதும் வேதனையை அப்பி பலத்த சிந்தனையில் இருந்தான். 

 

வேகமாக ஓடி வந்து தேவேஷ் மேல் படுத்து கொள்ள, இதை சிறிதும் எதிர்பார்க்காத தேவ் “என்னடா பாப்பா என்ன ஆச்சு” என்று தலையை கோதிக் கொண்டே கேட்க, 

 

“சாரி ண்ணா….. எனக்கு நீ தான் எல்லாமே….. அப்பா அம்மா மேலே அன்பு பாசம் எல்லாம் இருந்தும் எனக்கு எப்பவுமே நீ தான் முதல….. நீ லவ் பண்றது எனக்கு ரொம்ப ஹாப்பி தான் அதுவும் ரம்யா.. இல்ல இல்ல என்னோட ஸ்வீட் அண்ணி. பட் சடனா நீங்க இரண்டு பேரும் லவ் பண்றது தெரிந்ததும் லூசு மாதிரி உன் கிட்ட பேசாமல் உன்னை கஷ்டப்பட வெச்சிட்டேன்ல சாரி ண்ணா…. நான் என் ப்ரெண்ட் ” என்ற அவளின் வாயை மூடி, 

 

“மூச்…. என் குட்டி தங்கையை பற்றி எனக்கு தெரியாதா உன் கிட்ட தான் முதல சொல்லனும்னு வீட்டில் யார் கிட்டவும் இன்னும் சொல்லலை…. சொல்ல போனா ரம்யா கிட்ட கூட நான் சொல்லலை….. அவ மாமாக்கு அவளை பார்க்கிறாங்கனு நீ சொன்னதும் எங்க அவ என்னை விட்டு போய்டுவாளோ பயத்தில் தான் என் காதலை சொன்னேன். 

 

நீ எனக்கு இப்ப வரை பாப்பா தான்டா. அப்ப இரண்டு வருசம் முன்னாடி இன்னும் குட்டி பாப்பாவா தான் தெரிஞ்ச… அவளும் உன்னோட வயசா…. நான் அவ கிட்ட லவ்வை சொன்னது சரியா தப்பானு யோசிச்சு யோசிச்சு கடைசியாக உன் கல்யாண பரிசா என் லவ்வை சொல்லனும்னு நினைச்சேன் ” என

 

“ஈஈஈஈஈ…. எல்லாம் சரி இப்ப எனக்கு ட்ரீட் வேண்டுமே அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்ச கடையோட குலாப் ஜாமுன்” என

 

“வாங்கிட்டா போச்சு என் குட்டி தங்கச்சிக்கு இல்லாததா…. ஆமா கேட்கனும்னு நினைச்சேன் நீ கோபமா இருந்ததைப் பார்த்து இரண்டு நாள் ஆகும்னு உன்னை சமாதானம் பண்ணனு பார்த்தா என் குட்டியே புரிஞ்சிக்கிட்டா…. இது எப்படி நடந்தது அதன் ரகசியம் என்னவோ” என்று கேலியாக கேட்க, “அட போங்க அண்ணா” என்று அவனிடம் சொன்னாலும் பைரவிற்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தாள். 

 

மறுநாள், காலையில் பைரவ் அவனது வீட்டுக்கு தேஜூவை வர சொல்ல, அரண்மனை போல் இருக்கும் அவனது வீட்டை தேடி கண்டுபிடித்து சென்றவள் அங்கே ஹாலில் இருந்த பெரிய புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து அதன் அருகே செல்ல, “யாருமா நீ” என்ற பெண்ணின் குரலில் திரும்பியவளுக்கு மனதில் சொல்ல முடியாத உணர்வு தாக்கியது.

 

கூடிய விரைவில் முன் ஜன்ம கதையுடன் சந்திக்கலாமா??? 

 

விதிகள் தொடரும்

நிலா