மண் சேரும் மழைத்துளி

மண் சேரும் மழைத்துளி

 

 

 

 

மழைத்துளி 

இறுதி பாகம்

 

தியா பாட்டி தோளில் சாய்ந்தபடி உட்கார்ந்திருக்க, தாத்தா அவள் தலையை மெதுவாக வருடிக்கொண்டு இருந்தார். 

 

“நீங்க என்னை வீட்டை விட்டு போகச் சொல்லும்போது எனக்கு கஷ்டமா தான் இருந்தது தாத்தா, ஆனா, அப்ப அதுதான் உங்க உயிருக்கு பாதுகாப்புன்னு எனக்கு தோணுச்சு. அதான் விஷ்வா சொன்ன பொய்யை வச்சே நா இங்க இருந்து போய்ட்டேன்.”

 

கனடாவில் சிவாவிடம் தியா நடந்ததை சொல்ல, அவர் விஷ்வாவை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார், ” சாரி தியா… இவன்‌ இப்டி ஒரு அசிங்கமான காரியம் பண்ணுவான்னு நா நெனச்சு கூட பாக்கல, ச்சீ” என்று தலையில் அடித்துக்கொண்டவர். “தியா நா வேணும்னா இந்தியா வந்து உன் தாத்தாகிட்ட பேசுறேனே” என்றவரை வறண்ட சிரிப்போடு‌ பார்த்தவள். “அப்டி எதும் நடக்க கூடாதுனு தானே அங்கிள், இவன் அவ்ளோ பெரிய பொய் சொல்லியும். நா எதுவும் சொல்லாம அமைதியா இருந்தேன்.” என்றவளை தவிப்போடு பார்த்த சிவா, “அப்ப நீ என்ன தான் செய்யபோற தியா? இனிமே உன்னோட லைஃப்?” என்றவர் வார்த்தையில் எழுந்து நின்ற தியா. “என்னோட லைஃப்” என்று அசட்டையாக சிரித்தவள். “இட்ஸ் ஓவர் அங்கிள். இந்த ஜென்மத்தில் எனக்கு மேரேஜ்னு ஒன்னு நடந்த அது என் அகரன் கூட மட்டும் தான்.‌” என்றவளிடம் சிவா ஏதோ சொல்ல வர, “நீங்க என்ன சொல்லபோறீங்கனு தெரியும் அங்கிள். அரும்பு கூட அவருக்கு கல்யாணம் நடக்கபோகுது தான். இனிமே அவருக்கு என் லைஃப்ல இடம் இல்ல தான். அதோ மாதிரி என்னோட வாழ்க்கையில அவரை தவிர வேற யாருக்கும் இடம் இல்ல அங்கிள்.” என்றவள் விஷ்வா கன்னத்தில் அவள் ரேகை பதியும் அளவு தன் ஆட்டோகிராபை போட்டு விட்டு அங்கிருந்து சென்றாள்.

 

“அதுக்கு அப்றம் கனடால இருந்த ப்ராப்பர்ட்டி எல்லாத்தையும் வித்துட்டு, பிஸ்னஸ்ச மட்டும் ஜெசி கையில ஹேண்ட் டோவர் பண்ணிட்டு இந்தியா வந்துட்டேன். சொந்தங்கள் கூட தான் இருக்க முடியல, அட்லீஸ்ட் சொந்த நாட்டுலயாது இருக்கலாம்னு தான் இங்க வந்தேன். சக்தியும் என்னோட சின்னவயசு ஃப்ரண்ட் தான். அவனோட பிசினஸ் பார்ட்னரா ஜாயின் பண்ணிட்டேன்.”

 

அந்த வீட்டில் அந்த நேரம் அத்தனை அமைதி. எல்லாமும் எல்லாருக்கும் தெரிந்து விட்டது. யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்ல விரும்பவில்லை. நடந்தது நடந்துவிட்டது. இனி அதை பற்றி பேசி ஒரு பயனும் இல்லை. இத்தனை வருடம் தனிமையில் தவித்த தியாவுக்கு இனி அவளே திணறும் அளவுக்கு அன்பையும் பாசத்தை காட்டுவது மட்டுமே அவள் இழந்து வாழ்க்கைக்கு சரியான தீர்வாக இருக்கும் என்று அனைவரும் நினைக்க, அவளை இனி ஒவ்வொரு நொடியும் தன் காதலில் திக்குமுக்காடச் செய்து, அவளின் அனைத்து மனக்காயங்களுக்கும் மருந்திட உறுதி கொண்டான் அவளவன் அகரன். 

 

குறித்த நேரத்தில் தியாவுக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து செந்தில், மகா நிச்சய தட்டை கொடுக்க, ஸ்ரீதர், லட்சுமி நிறைந்த மனதோடு அதை வாங்கிக்கொள்ள மூன்று ஜோடிகளின் திருமணம் நிச்சயமானது.

 

நட்சத்திரங்கள் இல்லாமல் தெளிவாக இருந்து வானத்தில் முழுதாக நிலாவும் மட்டும் தனியாக உலாவிக் கொண்டிருக்க, தியா அவளுக்கு பிடித்த அந்த ஊஞ்சலில் மெதுவாக ஆடியபடியே நிலாவை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.‌ நடந்த அனைத்தையும் அவளுக்கு கனவுபோல் இருந்தது. பலவருடங்களாக அவள் வாழ்க்கையில் நிறைந்திருந்த வெறுமை இந்த ஒரு நாளில், ஒரே மாலைப் பொழுதில் தலைகீழாக மாறியிந்தது. இனி அவள் தனி ஆள் அல்ல, ஒரு ஊரே அவளுக்கு சொந்தம். தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா, அத்தை, மாமா, அவர்கள் பிள்ளைகள், எல்லாவற்றிற்கும் மேல் அவள் உயிராக விரும்பு அகரன் என்று அவள் வாழ்க்கை ஒரு முழுமை நிலையை அடைந்திருந்தது. அதையெல்லாம் நினைக்கும்போதே தியாவின் நெஞ்சம் ஆனந்த கூத்தாட, அவள் முகம் மலர்ந்து ஜொலிக்க, அந்த இரவில் பூமியிலும் இன்னொரு நிலா இருக்கிறதோ என்று வான்நிலா சந்தேகிக்கும் அளவு அழகு குவியலாக இருந்தது தியாவின் முகம். 

 

தன்னை மறந்து ஏகாந்த நிலையில் இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தவள் கண்களை மூடியது அவளவன் கைகள். தன் கண்களை மூடியது அகரன் தான் என்று உணர்ந்த தியா… மென்மையாக சிரித்தவள். அவனை வம்பிழுக்க நினைத்து “இப்ப என்ன வேணும் உங்களுக்கு? எதுக்கு என்கிட்ட இப்டி வெளையாடிட்டு இருக்கீங்க?” என்று கேட்க, அகரன் அப்டியே அவளை சுற்றி வந்து அவள் அருகில், அவளை இடித்துக்கொண்டு ஊஞ்சலில் அமர்ந்தவன். “அடியேய் என்னடி‌ கேள்வி இது. லூசு மாதிரி? உன்கிட்ட நா வெளயாடாம வேற யாருடி வெளயாடுவா,?” என்றவன் அவள் தோளில் கை போட்டு மேலும் அவளை இடித்துக்கொண்டு உட்கார, தியா அவன் கையை தோளில் இருந்து தட்டி விட்டவள். “ம்ஹூம் ஆச தான். பேசாம எழுந்து போய்டுங்க. நா உங்க மேல செம்ம காண்டுல இருக்கேன்.” என்றவள் முகத்தை திருப்பிக்கொள்ள. 

 

“நா என்னடி செஞ்சேன்‌.? வொய் என் மேல காண்டு?” என்றவனை முறைத்தவள். “இங்க நடந்தது எல்லாம் உங்களுக்கு தெரியும் இல்ல. நேத்து ஆபீஸ்ல என்னை பாத்தப்பவே சொல்லி இருக்கலாம் இல்ல. நீங்க கல்யாணம் பத்தி சொல்லும்போது எனக்கு எப்டி இருந்துச்சு தெரியுமா?” என்று மீண்டும் முறுக்கிகொள்ள…

 

“நீ மட்டும் என்கிட்ட எல்லாத்தையும் சொன்னீயா தீரா. உனக்குள்ள இவ்ளோ வலிய வச்சிட்டு அதை வெளிய சொல்லாம இருந்துட்டீயே?” என்றவனை திரும்பி பார்த்தவள். “இல்லங்க நல்ல காரியம் நடக்குற வீட்ல எதுக்கு நடந்து முடிஞ்ச கசப்பை பத்தி சொல்லி எல்லாரையும் வேதனை படுத்தணும்னு தான் நா எதுவும் சொல்லல” என்றவளை கோவமாக பார்த்தவன். “எல்லாரும் நானும் ஒன்னாடி? என்கிட்ட சொல்லி இருக்கலாமில்ல. லவ்வர்ஸ்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது தீரா” என்றவனை இப்போது தீயாக முறைத்த தியா…

 

“ஹலோ ஹலோ பாஸ். யாரு லவ்வர்ஸ்?” என்று கேட்க…

 

“இதென்னடி கேள்வி? நீயும், நானும் தான்” 

 

“ஆச தோச… ஐய்யாக்கு அப்டி ஒரு நெனப்பு இருக்காக்கும்… நம்ம ஒன்னும் லவ்வர்ஸ் இல்ல. முதல்ல அத புரிஞ்சிக்கோங்க மிஸ்டர். அகரன்” என்றவளை அதிர்ந்து பார்த்த அகரன். 

 

“ஏய் என்னடி ஒளர்ர லூசே. நம்ம ரெண்டு பேரும் லவ் பண்றோம்டி, இன்னைக்கு தான் நமக்கு நிச்சயம் ஆச்சு, நாளை மறுநாள் நமக்கு கல்யாணம்டி. உனக்கு மறந்து போச்ச…” என்று அவள் தலையை பிடித்து பார்த்தவன். “தலைய காட்டுடி, எதும் அடிகிடி பட்டு பழசு எல்லாம் மறந்து போச்ச?” என்றவன் கையை தட்டிவிட்டவள். “அடியும் இல்ல அம்னீசியாவும் இல்ல,… நா நெஜத்தை தான் சொல்றேன். நம்ம எப்ப லவ் பண்ணோம்” என்றவளை இப்போது உண்மையாகவே முறைத்த அகரன். “ஏய் உன் மனசை தொட்டு சொல்லுடி… நீ என்னை விரும்பல” என்றவனை பதிலுக்கு முறைத்த தியா, “ஆமா தான்‌. நா உங்களை விரும்புறேன் தான். அதை யாரு இல்லைனு சொன்ன…” என்றவளை என்ன செய்யலாம் என்று வெறியான அகரன். “ஏய் என்னடி ஆச்சு உனக்கு? இப்ப தான் நம்ம லவ்வர்ஸ் இல்லைனு சொன்ன? இப்ப நீ என்னை லவ் பண்றேன்னு சொல்ற?? என்ன தான்டி சொல்ல வர்ர நீ? என்றவன் மண்டையை பொலக்கும் அளவு வெறி வர அதை அடக்கிக்கொண்டவள், “ஆமா… நா உன்னை விரும்புறேன் தான். அதான் உன்னை மேரேஜ் பண்ணபோறேன். ஆனா, நீ என்னை விரும்புறேன்னு எனக்கு தெரியாதே… நீ இப்ப வரை அப்டி எதும் சொன்னாத எனக்கு ஞாபகம் இல்லயே…!!” என்றவள் என்ன சொல்ல வருகிறாள் என்று புரிய அவளின் குறும்புத்தனத்தை நினைத்து சிரித்தவன். அவள் காதை பிடித்து திருகி, “சின்ன பாப்பா தான்டி நீ. உனக்கு ஒன்னும் தெரியாது இல்ல” என்று மீண்டும் அவள் காதை திருகியவன். “அன்னைக்கு ஃப்ரண்ட்டுக்கு ஃபோன் பண்ணனும்னு ஒரு மணி நேரமா என் ஃபோனை நோண்டி அதுல இருந்த உன்னோட ஃபோட்டோஸ் எல்லாத்தையும் பாத்தியே அப்ப தெரியலயா நா உன்னை லவ் பண்றேன்னு…? அதவிடு அடிக்கடி என் ஃபோன் எடுத்து பாஸ்வேர்டு போட்டு எனக்கு தெரியாம‌ திருட்டு தனமா ஃபோன்ல நா உன்னை தினமும் எடுக்குற ஃபோட்டோஸ் பாத்து ஈஈஈன்னு இளிச்சிட்டு இருப்பீயே? அப்ப தெரியலயா? நானும் உன்னை விரும்புறேன்னு” என்றவனை நுனி நாக்கை கடித்துக்கொண்டு அசடு வழிய பார்த்தவள். ” உங்களுக்கு தெரிஞ்சு போச்ச..? ஆமா எப்டி தெரிஞ்சுது…? என்றவள் தலையில் வலிக்காமல் கொட்டியவன். “நீ தப்பு தப்ப பாஸ்வேர்டு டிரை பண்ணும்போது எல்லாம் என்னோட இன்னொரு ஃபோன்ல அலர்ட் மெசேஜ் வந்துதுடி, நீ ஏதோ ப்ராடு வேலை பாக்குறேன்னு தெரிஞ்சுது. பட் உன்னால பாஸ்வேர்டு கண்டுபுடிக்க முடியாதுனு நெனச்சேன்… பட் நீ ” என்று சிரித்தவன், மீண்டும் தியா காதை பிடித்து வலிக்கும்படி திருகியவன். “நியாயமா நா தான்டி உன்மேல கொலவெறில இருக்கணும். எனக்கும் அரும்புக்கும் கல்யாணம்னு நீ எப்டிடி நெனைக்கலாம். நா எப்டி அவளை கல்யாணம் பண்ண சம்மதிப்பேன்னு நீ நெனச்ச…” என்று முறைத்தவன். “இதுல இந்த அம்மா… தங்கச்சிக்கு என்னை விட்டு கொடுத்துட்டு தியாகம் பண்றாங்கலாம்… நேத்து சும்மா எம் மாமன் பொண்ணு எனக்காக வெய்டிங்னு சொன்னதுக்கே முகம் வாடிபோச்சு. இதுல இவ என்னை மறந்துட்டு தனிய வாழப்போறலாம். தனிய வாழ்ர மூஞ்ச பாரு மூஞ்ச. நீ இல்லாம என்னால எப்டி இருக்க முடியாதோ, அப்டி தான்டி நா இல்லாம உன்னால இருக்க முடியாதுடி லூசு” என்றவனை காதல் பொங்க பாரத்தவள். தாவி அவளவனை அணைத்துக் கொள்ள. சொல்லாமலே புரிதலில் வென்ற காதல் கல்யாணத்தில் முடிந்த மகிழ்ச்சியை இருவரும் முழுதாக கொண்டாடினர்.

 

சொந்த பந்தம் என்று அனைவரும் கூடி இருக்க, பட்டு வேட்டி சட்டையில் மணமகன்கள் மூவரும், தங்கள் மனதிற்கினியவளுக்காக மணமேடையில் காத்திருக்க, தலைநிறைய பூ வைத்து, தழையதழைய பட்டுப்புடவை கட்டி, தங்கநகைகள் ஜொலிக்க தலை நிமிர்ந்து தங்கள் இணையின் மணமகன் கோலத்தை ரசித்தபடி வீரநடைபோட்டு மணமேடைக்கு நடந்து வந்து பெண்கள் மூவரும் அவர்களின் நாயகர்களின் அருகில் அமர… உள்ளம் நிறைந்து சொந்தங்கள் அட்சதை தூவி வாழ்த்த, திருமாங்கல்யம் பூட்டி தாங்க காதலை ஆயுள் முழுவதும் எக்ஸ்டெண்ட் செய்யும் அக்ரிமென்டில் மனமொத்து மணமக்கள் இணைந்தனர்.

 

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு:

 

திருமண முடிந்து தியா கிராமத்தில் இருந்தவள். அதான் பின் பெங்களூர் சென்று அவள் வேலையை தொடந்தாள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கிராமத்திற்கு வந்து விடுவாள். இப்டியே நாட்கள் செல்ல… அவள் கருவுற்றதும் சக்தி அவளை வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்க சொல்லிவிட, தியாவும் அதை ஏற்றுக்கொண்டாள். அகரனுக்கு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் வர, ரைஸ் மில்லை நிலவன் பொறுப்பில் விட்டுவிட்டவன். இயற்கை விவசாயத்தில் முழுவதும் தன்னை இணைத்துக்கொண்டான். இளம்‌ஜோடிகள் திருமண வாழ்க்கை அழகாக செல்ல, தியா, அகரனுக்கு ஆண் குழந்தையும், நிலவன், அரும்பு, சரண்யா, அருள்‌, சூர்யா தாமரை தம்பதியர்களுக்கு பெண குழந்தையும் பிறந்தது. 

 

அன்று தியாவுக்கு முக்கியமான கிளின்ட் மீட்டிங் இருக்க, சக்தி அவளை சீக்கிரம் பெங்களூர் வர சொல்லி இருந்தான். காலை பிளைடில் சென்று மாலையே அவள் பிளைடில் திரும்ப அகரன் டிக்கெட் புக் செய்திருக்க, இங்கு 

தியா அவளின் ஒரு வயது மகனுடன் மல்லுகட்ட, குழந்தை தியாவை ஒரு வழியாக்கிக் கொண்டிருந்தான். இதை பார்த்த அகரன் மனது தன்னால முடியாததை தன் மகன் செய்வதை நினைத்து உள்ளுக்குள் குத்தாட்டம் போட, மகனை தூக்கி கன்னத்தில் முத்தமிட்டவன். மனைவியை பார்த்து, “அடியேய்… உனக்கு டைம் ஆச்சு இல்ல… நீ கெளம்பு. பாப்பாவை நா பாத்துக்கிறேன்.” என்ற கணவனை காதல் பொங்க பார்த்தவள். அவன் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு, குளித்து தயாராகி வந்தவள். 

 

தன் லேப்டாப்பை எடுத்துக்கொண்டு கிளம்ப, அவளை பிடித்து உட்கார வைத்து காலை உணவை கட்டாயப்படுத்தி ஊட்டிவிட்டவன். “ம்ம்ம் இப்ப கெளம்புடி” என்றவனை ஒரு நிமிடம் இமைக்காமல் பார்த்தவள். அவன் அசந்த நேரம் அவன் இதழில் தன் இதழை சட்டென ஒட்டி எடுத்தவள் அடுத்த நிமிடம் தன்னை பிடிக்க வந்த கணவன் கையில் சிக்காமல் சிட்டாக பறக்க, முகம்கொள்ள சிரிப்புடன் மான்போல் துள்ளி ஓடும் தன் தீராவை புன்னகையோடு பார்த்தவன். ” எங்கடி போய்டுவ நீ. சாயந்திரம் இந்த மாமன்கிட்ட தானே வரணும். அப்ப வட்டியும் முதலுமா உன்னை கவனிக்கிறேன்டி” என்றவன் சிரித்தபடி செல்ல. 

 

தங்கள் பேத்தியின் மண வாழ்க்கை மண்வாசனை போல் மணம் வீச. ஒவ்வொரு நொடியும் அதை பார்த்து மனம் மகிழ்ந்து கொண்டிருந்தனர் திரவியம் தாத்தாவும், அகிலா பாட்டியும். அரவிந்தனுக்கு கொடுக்க முடியாமல் போன மொத்த அன்பையும் அவர் மகளிடம் இறக்கி வைத்தார்‌ மொத்த குடும்பமும்.

 

அன்று மொத்த குடும்பமும் கூடி இருக்க, தியா, அரும்பு, சரண்யா குழந்தைகளுக்கு சூர்யா தாய்மாமனாக இருந்து மொட்டை போட்டு காது குத்தும் விழா சிறப்பாக நடந்துகொண்டிருக்க, ஒரு மாதம் முன் திருமணம் முடித்த தன் மனைவி ஜெசியுடன், சக்தியும் விழாவுக்கு வந்திருந்தான். தியாவை பார்க்க வந்த ஜெசிக்கும் சக்திக்கும் நாடு தாண்டி கண்டதும் காதல் பக்கென பத்திக்கொள்ள. விடாமல் ஒரு வருடம் போராடி பெற்றோர் சம்மதத்துடன் போன மாதம் தான் திருமணம் முடிந்திருந்தது. (பின் குறிப்பு : இந்த காதலுக்கு தியா தான் இவர்களுக்கு காதல் தூது புறா…) 

விழா சிறப்பாக முடிய, மொத்த குடும்பத்தையும் ஒன்றாக நிக்க வைத்து ஃபேம்லி ஃபோட்டோ எடுத்து, பூசணிக்காய் சுத்தி முச்சந்தியில் உடைத்து திருஷ்டி கழித்ததோடு அனைத்தும் நல்லபடி முடிந்தது. 

               

               ………………முற்றும்……………

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!