காதல்போதை 01💙

காதல்போதை 01💙

காதல்போதை 01💙

 

மங்ளூரில்(manglore),

சூரிய செங்கதிர்கள் பூமியில் மூலை முடுக்கெங்கும் பரவ, தன் சூரியக் காதலனை கண்டதும் அவனை வசீகரிக்கவென தம் அழகு இதழ்களை விரித்து பூக்கள் அவனை நோக்கி ஏக்கப்பார்வை பார்க்க, தன் குஞ்சுகளுக்கு பசியாற்ற தத்தமது கூட்டங்களை அழைத்துக்கொண்டு, இரைத்தேடி, வானில் உலா வந்தன பறவைக்கூட்டங்கள், அந்த அழகான காலை பொழுதினிலே…

“பதினேழாம் நூற்றாண்டில் இத்தாலியில் அறுநூறிற்கு மேற்பட்ட ஆண்களின் மரணத்திற்கு காரணமான ஜூலியா டொஃபேனாவின் அக்வா டொஃபேனாவின் இரகசியம் இத்தாலி ஆராய்ச்சியாளர் மெட்ரிசன் கண்டுபிடித்துள்ளதாகவும், அது பற்றிய ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன.

உலகிலே தரத்திலும் விற்பனையிலும் முதல் இடத்தில் பெயரை பதித்திருக்கும் ‘க்வீன் ஆஃப் கோஸ்மெடிக்’ என்றழைக்கப்படும், இத்தாலியில் பிரதான கிளையை மையமாக கொண்டு இயங்கும் ஐரா கோஸ்மெடிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மிஸ்.மஹேஷ்வரி சில நாட்களுக்கு முன் மர்மமாக இறக்க, தற்போது கம்பனி நிர்வாகத்தை அவரின் உற்ற நண்பர் மிஸ்டர்.சர்வேந்திரன் ஆதாரபூர்வமாக பொறுப்பேற்றுள்ளது பலபேரை சந்தேகத்திற்குள்ளாக்கியுள்ளது”

என்ற உலகச்செய்திகள் அந்த டேக்ஸியின் ரேடியோவில் ஒலிக்க, அதையெல்லாம் கண்டுக்கொள்ளாது ஜன்னல்வழியே வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டே வந்தாள் அவள்.  அவளுடைய நினைவுகளில் ஏதேதோ தோன்ற கடைசியாக அவள் அம்மா சொன்ன வார்த்தைகளே மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

‘அம்மு, வாழ்க்கையில அன்பு ரொம்பவே முக்கியம். எல்லாருக்குமே அது முழுசா கிடைக்கிறதில்ல. எனக்கு அந்த காதல் கிடைச்சும் அதை என்னோட முட்டாள்தனத்தால தவறவிட்டு, உனக்கும் கொடுக்க தவறிட்டேன். ஆனா, உன் வாழ்க்கை அப்படி அமைஞ்சிற கூடாது. உன்னையே காலம் முழுக்க காதலிக்க, உனக்காக என்ன வேணாலும் செய்ய துணியிற ஒருத்தன் உன் வாழ்க்கையில வருவான்.

எந்த சந்தர்ப்பத்துலையும் உன்னோட காதலை இழந்துறாத. இதுக்கப்றம் நான் இருப்பேனோ, இல்லையோ? உனக்கான வாழ்க்கையில தனியா போராட பழகிக்க. உனக்கு துணையா நீ நேசிக்கிறவன் இருப்பான். என்னோட அம்மு எப்போவும் ஸ்ட்ரோங்கா இருக்கனும். உன் அம்மா எப்போவும் உன்கூட தான் இருப்பேன்டா. ஐ லவ் யூ ஸ்வீட்ஹார்ட்’  என்ற தன் அம்மாவின் வார்த்தைகளே அவள் சிந்தனையை ஆட்டிப்படைத்திருந்தன.

அவள் சிந்தனையை கலைக்கும் விதமாக சரியாக அவள் தொலைப்பேசி ஒலிக்க, இவள் அழைப்பை ஏற்றதும் தான் தாமதம் மறுமுனையில், “ஹெலோ மிஸ்.மாயா”  என்று ஒரு குரல் கேட்க, “யெஸ் அங்கிள்” என்று சொன்னாள் மாயா நம் கதையின் நாயகி. 

மறுமுனையில், “சோரிமா, என்னால உன்னை அழைச்சிட்டு போக வர முடியல” என்று அவர் குரல் வருத்தமாக ஒலிக்க, “நோ ப்ரோப்ளம் அங்கிள், ஐ கென் மெனேஜ். சொல்லப்போனா, நான் ஹோஸ்டல் பக்கத்துல வந்துட்டேன். உங்க கொலேஜ் தான் பெங்ளூர்ல ரொம்ப ஃபேமஸாச்சே…” என்று சொன்னாள் மாயா.

“ஹாஹாஹா… அப்போ சரிமா, உன் கொலேஜ் ஃபோமலிட்டீஸ் எல்லாம் நான் முடிச்சிட்டேன். நாளைக்கு கூட நீ வரலாம்” என்று அவர் சொல்ல, “தேங்க்ஸ் அங்கிள், வில் சீ.” என்றவள் அழைப்பை துண்டிக்கவும், ஹோஸ்டல் வாசலில் கார் நிற்கவும் சரியாக இருந்தது.

வாசலில் நின்ற காரை அந்த ஹோஸ்டல் வார்டன் மல்லிகா புரியாமல் பார்க்க, காரிலிருந்து இறங்கினாள் மாயா. வெள்ளை டிஷர்ட்டுக்கு மேல் சிவப்புநிற ஷர்ட், நீலநிற ஜீன்ஸ் சகிதம், தன் கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கலந்த கூந்தலை விரித்துவிட்டு, தினமும் செய்த உடற்பயிற்சியின் விளைவாக ஒல்லிய, வளைவு நெளிவான பளபளக்கும் தேகம் என கடந்து செல்பவர்களை ஒருநிமிடம் திரும்பி பார்க்க வைக்கும் கொள்ளை அழகாக இருந்தவளை மல்லிகா மட்டுமல்ல, சுற்றியிருந்தவர்களே விழிவிரித்து பார்த்தனர்.

டேக்ஸிக்கான பணத்தை செலுத்திவிட்டு தன் உடைப்பெட்டிகளை எடுத்துக்கொண்டு வந்தவள், “ஹெலோ மேம், ஐ அம் மாயா” என்று அவள் தன் அறிமுகப்படுத்தி முடிக்கவில்லை, “ஓஹோ! நீங்க தான் மாயாவா? சார் எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிட்டாருமா. வாங்க உங்களுக்கான ரூம் அ காட்டுறேன்” என்று படபடவென பேசினார் மல்லிகா .

“அந்த லக்கேஜ்ஜஸ்ஸ ரூம்க்கு எடுத்து வந்துரு” என்று அங்கு வேலை செய்யும் ஒருவரிடம் கூறிய மல்லிகா, மாயவை அவளுக்கான அறையை காட்ட அழைத்துச் சென்றார்.
       
“நீங்க சாருக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்களா? ஒருவாரம் முன்னாடி நீங்க சொன்னீங்கன்னு ஹோஸ்டல் ஃபோமலிட்டீஸ் முடிச்சு, உங்க கொலேஜ் ஃபோமலிட்டீஸ்ஸையும் அவரே பாத்துக்கிட்டாரு. அதான்…” என்று மல்லிகா கேட்க, “தாத்தாவோட ஃப்ரென்ட்” என்று தன் ஒற்றை வார்த்தையில் அவர் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தவளுக்கு, இப்போது அவள் இருக்கும் மனநிலையில் அதிகமாக கூட பேச தயாராக இல்லை.

அதைப் புரிந்துக்கொண்டவர் போல், “ஓகே மாயா, இதுதான் உங்க ரூம். உங்க கூட கீர்த்தின்னு ஒரு பொண்ணும் ஸ்டே பண்ணியிருக்கா. உங்க கொலேஜ், உங்க டிபார்ட்மென்ட் தான். ஏதாவது தேவைன்னா தயங்காம என்னை கூப்பிடலாம்” என்றுவிட்டு செல்ல, அறைக்குள் நுழைந்தாள் அவள்.

தன் உடைப்பெட்டிகளை ஓரமாக வைத்துவிட்டு திரும்ப, சரியாக அவள் கண்களுக்கு சிக்கியது அந்த உருவம். தலைவரை போர்வையால் மூடி குறட்டை விட்டுக்கொண்டு கீர்த்தி படுத்திருக்க, சிறிது நேரம் அவளையே உற்று பார்த்தவள் தனக்கான கட்டிலில் உடையை கூட மாற்றாது, அப்படியே படுத்துவிட்டாள்.

திடீரென, அடித்த அலாரத்தில் பதறியடித்துக்கொண்டு எழுந்த கீர்த்தியின் கண்ணில் முகம் முழுவதும் முடியால் மூடி ஒரு உருவம் அவளுக்கு எதிர் கட்டிலில் படுத்திருப்பது தெரிய, ஒருநொடி அந்த தூக்ககலக்கத்திலும் அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது.

பயத்தில், “அய்யோ! அம்மா… பேயு…” என்று கீர்த்தி கத்திவிட, அவள் கத்தலில் நிதானமாக கண்களை திறந்து எழுந்த மாயா தன் எதிரே கலைந்த தலைமுடியுடன், மிரட்சியாக தன்னையே பார்த்துக் கொண்டிருந்த கீர்த்தியை கண்களை சுருக்கி புரியாமல் பார்த்தாள்.

மாயாவை பார்த்தவுடனே மல்லிகா சொல்லியிருந்தது நினைவு வர, அசடுவழிந்தவாறு, “அது… அது வந்து… சாரி…  நீங்க முகத்தை மூடி..
அது உங்க ஹெயாரு… கொஞ்சம் கன்ஃப்யூஸ் ஆகி… நானு கத்தி…” என்ற கீர்த்தியின் புலம்பலில் மாயாவிற்கு தலைவலியே வந்துவிட்டது.

தன் நெற்றியை இரண்டு விரல்களால் நீவி விட்டவள் எதுவும் பேசாது, கீர்த்தியை அமைதியாக ஒருபார்வை பார்த்துவிட்டு, அப்படியே கட்டிலில் சரிந்து மீண்டும் முடியை எடுத்து முகத்தை மூடி உறங்க ஆரம்பிக்க, கீர்த்தி தான் அவள் செயலில்  ‘ஙே’ என பார்த்தாள்.

‘ஒருவேள, முடியால முகத்தை மூடி படுக்குற வியாதியா இருக்குமோ?’ என்று நினைத்தவாறு அவளும் கட்டிலில் சரிந்து படுத்துவிட, அடுத்த இரண்டுமணி நேரம் கழித்து பெரிய கொட்டாவியாக விட்டுக்கொண்டு எழுந்த கீர்த்தி தன் முன் கட்டிலில் அமர்ந்து தொலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்த மாயாவை தான் பார்த்தாள்.

புன்னகையுடன் அவளைப் பார்த்துவிட்டு குளியலறைக்குள் புகுந்தவள், குளித்து உடைமாற்றி வந்து, மாயாவிற்கு அருகே சென்று  நின்றாள். அரவம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்த மாயா, தன் முப்பத்திரெண்டு பற்களையும் காட்டியவாறு இழித்துக்கொண்டு நின்றிருந்த கீர்த்தியை பார்த்து ‘என்ன’ என்று ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்க, அவளின் செய்கையில் ‘ஒருவேள திமிரு பிடிச்ச பொண்ணா இருக்குமோ?’ என்று நினைத்தவாறு அவள் முன் கையை நீட்டினாள் கீர்த்தி.

“ஹாய்… ஐ அம் கீர்த்தி” என்று அவள் தன்னை அறிமுகப்படுத்த,  மாயாவோ அவளை அழுத்தமாக பார்த்தவாறு, “சோ வாட்?” என்று கேட்டதில், கீர்த்திதான் ஆடிப்போய் விட்டாள்.

‘அவமானப்பட்டான் ஆட்டோக்காரன் ‘ என்று கீர்த்தியின் மனசாட்சி வேறு அவளை கலாய்க்க, அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் “அது… அது வந்து…” என்று அவள் தடுமாற, மாயாவோ அவளிடமிருந்து பார்வை விலக்கி தொலைப்பேசியிலே புதைந்துக் கொண்டாள்.

‘வெட்கம்! வேதனை! அவமானம்! என்ன ஒரு எகத்தாளம் இந்த பொண்ணுக்கு?’ என்று மனதில் மாயாவை வறுத்தவாறு அறையிலிருந்து வெளியேறிய கீர்த்தி, இரவாகும் வரை அறைக்குள்ளேயே வரவில்லை என்றால், மாயாவும் வெளியே வந்ததாக தெரியவில்லை.

மதியம், இரவு சாப்பாட்டுக்கு மட்டும் வந்தவள் தன் வேலையை முடித்துவிட்டு அறைக்குள்ளேயே முடங்கிக்கொள்ள, இதில் கீர்த்தி தான் ‘அய்யோ! அய்யோ! இப்படி ஒரு திமிரு பிடிச்ச, போரான ரூம்மெட் தான் நமக்கு அமையனுமா? நம்ம நேரம்…’ என்று மானசீகமாக தலையிலே அடித்துக்கொண்டாள். ஆனால், கீர்த்தி அறியவில்லை. ‘இப்படிபட்டவள் தனக்கு அமைந்துவிட்டாள்’ என வருத்தப்படுபவள், ‘அச்சோ! இவக்கிட்ட போய் நம்மள கோர்த்து விட்டுட்டாங்களே…’ என்று கதறும் அளவுக்கு மாயா தன்னை ஒருவழிப்படுத்த போகிறாள் என்று.

அடுத்தநாள் காலை,

 “டேய்… டேய்… டேய்… அவன விடாத. போம்ம போடு. அவன கொல்லுடா. அறிவுகெட்ட கிறுக்கா, அங்க போகாதடா. ஷூட் பண்ணு… ஷூட் ஹிம்” என்ற கத்தலில் பதறியடித்துக் கொண்டு எழுந்தது கீர்த்தி மட்டுமல்ல, பக்கத்து அறையில் இருப்பவர்களும் தான்.

கீர்த்தியோ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, அங்கும் இங்கும் கண்களை சுழலவிட்டு,  “யாரு, யாரை ஷூட் பண்றா?” என்று திக்கித்திணறி பதட்டமாக கேட்க, மாயாவோ அசடுவழிந்தவாறு, “ச்சாரி… பப்ஜி… ஹிஹிஹி” என்று இழித்து வைக்க, கீர்த்தி தான் ‘அட பப்ஜிக்கு செத்தவளே’ என்று நினைத்தவாறு வாயைப் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

நேற்று தான் பார்த்தவளுக்கும், இன்று தன்முன் இருப்பவளுக்கும் மலையளவு வித்தியாசம் தெரிய, மாயாவையே மேலிருந்து கீழாக அளவிட்டாள் கீர்த்தி. சாதாரண கருப்பு நிற சுடியில் ஒருபக்கமாக துப்பட்டாவை போட்டு, முகத்தில் எந்த ஒப்பனையுமில்லாமல், இருபுருவங்களிடையே ஒரு கருப்புநிற பொட்டு, இருபக்கமும் சிறுமுடிக்கற்றைகளை எடுத்து நடுவில் க்ளிப்போட்டு, தன்னையே புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவளை கீர்த்தி விழிவிரித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் பார்வையை உணர்ந்த மாயா, “என்னை அப்றமா சைட் அடிச்சிக்கோ. கொலேஜ்க்கு கிளம்பலையா? டைம் ஆச்சு” என்று சுவற்றில் தொங்கிக் கொண்டிருந்ந கடிகாரத்தை காட்ட, “அச்சச்சோ…!” என்று அலறியடித்துக்கொண்டு கீர்த்தி குளியலறைக்குள் நுழைய, சத்தமாகவே சிரித்துவிட்டாள் மாயா.

கல்லூரி செல்ல அவசரஅவசரமாக தயாராகி வந்தவள், தன் முன் துள்ளி குதித்து வந்து நின்றவளை  விழிவிரித்து பார்க்க, “உன் பேரு என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?”  என்று கேட்டு வைத்தாள் மாயா.

‘அடிப்பாவி! நேத்து என் பேரை சொன்னதுக்கு ‘சோ வாட்’னு அசால்ட்டாக கேட்டது மட்டுமில்லாம, இப்போ புதுசா பார்க்குற மாதிரி  பெயர கேக்குறா. ஒருவேள, இந்த பொண்ணுக்கு காத்து கருப்பு ஏதும் அடிச்சிட்டோ?’ என்று தீவிரமாக யோசித்தவாறு மாயாவையே கூர்ந்து பார்த்தாள் அவள்.

“ஏய்! உன்னை தான் கேக்குறேன். வட்ஸ் யுவர் நேம்?” என்று கத்தியவாறு மாயா அவளை உலுக்கியதும், ஒரு பெருமூச்சுவிட்டவாறு மீண்டும் அவள் முன் கை நீட்டி தன்னை கீர்த்தி அறிமுகப்படுத்த, மாயாவோ அவளை கண்களை சுருக்கி உதட்டை சுழித்தவாறு, மேலிருந்து கீழாக ஒரு மார்மாக பார்த்து வைத்தாள்.

அவள் பார்வையில் தன்னை குனிந்து ஒருதரம்பார்த்த கீர்த்தி, “என்னாச்சு?” என்று புரியாமல் கேட்க, இருபக்கமும் சலிப்பாக தலையாட்டிய மாயா அவளை இழுத்து அணைத்து, “என்ன இது சின்னபுள்ளதனமா கையெல்லாம் நீட்டிகிட்டு? இனி இப்படி தான் இன்ட்ரோ பண்ணிக்கனும். இனி நாம ஃப்ரென்ட்சூ… நான் மாயா” என்று சொல்ல, கீர்த்தி தான் பதறிவிட்டாள்.

‘நிஜமாவே இவ நேத்து இந்த ரூம்ல இருந்த பொண்ணு தானா?’ என்று நினைத்தவாறு கீர்த்தி பார்க்க, அவள் தலையில் தட்டியவள், “வா வா, டைம் ஆச்சு. ஆல்ரெடி நாம லேட்” என்று கூறியவாறு அவள்பாட்டுக்கு வெளியே சென்றாள்.

“ஹேய்! நீ ஒன்னும் என் ஃப்ரென்ட் இல்லை” என்று கீர்த்தி முறுக்கிக்கொண்டு சொல்ல, “கோமெடி பண்ணாம வா போண்டா” என்றவாறு கீர்த்தியின் ஸ்கூட்டியில் மாயா சாவகாசமாக அமர, அவள் பின்னாலே வந்த கீர்த்தி தான், ‘எது போண்டாவா? போண்டா மாதிரியா இருக்கோம் நாம? அவ பாட்டுக்கு வண்டில போய் உட்கார்ந்துகிட்டு நம்மள ட்ரைவர் ஆகிட்டா. நம்மள பேசவே விடுறா இல்லை. கவனமா தான் ஹேன்டல் பண்ணனும் இவள’ என்று வண்டியை உயிர்ப்பிக்காது யோசித்துக் கொண்டிருந்தாள்.

அவள் தோளில் கை வைத்து எட்டி அவள் முகத்தை பார்த்த மாயா, “என்னை என்ன பண்ணலாம்னு அப்றமா யோசிக்கலாம். இப்போ வண்டியை கிளப்பு” என்று கீர்த்தியின் காதில் கத்த, திடுக்கிட்டு திரும்பி பார்த்தவளோ அடுத்தநொடி அவள் கத்தலிலே வண்டியை கல்லூரிக்கு பறக்க விட்டாள்.

கல்லூரி பார்க்கிங் ஏரியாவில் வண்டியை கீர்த்தி நிறுத்தியதும், வண்டியிலிருந்து தாவி குதித்து கல்லூரியில் தன் முதல் அடியை எடுத்து வைத்த நம் நாயகி அப்போது அறியவில்லை. இங்கே தன் மனங்கவர்ந்தவனை காணப்போகிறோம், அவனை காதல் என்ற பெயரில் கதறவிடப் போகிறோம் என்று.

“போன்டா, நீ க்ளாசுக்கு போ. நான் ச்யார்மென் ரூம் வரைக்குக் போயிட்டு வரேன்” என்று மாயா சொல்லிவிட்டு நகர போக, ‘இவ எதுக்கு அவர பார்க்க போறா?’ என்று நினைத்த கீர்த்தி, “இரு நானும் வரேன்” என்று தானும் செல்ல போக, அவளை ஏதேதோ பேசி வகுப்புக்கு அனுப்பி வைத்து, தான் மட்டுமே அங்கிருப்பவர்களிடம் கேட்டு விசாரித்து கல்லூரி முதல்வர் அறையை நோக்கி சென்றாள்.

“சார், மே ஐ கம் இன்?” என்ற குரலில் நிமிர்ந்த அந்த கல்லூரி முதல்வர் மோகன் வாசலில் மாயாவை கண்டவுடன் புன்னகை முகமாக , “மாயா, உள்ள வாங்க” என்று வரவேற்றார்.

அவருக்கு எதிரே நின்றவாறு, “ரொம்ப தேங்க்ஸ் சார், நீங்க பண்ணது ரொம்ப பெரிய ஹெல்ப்” என்று மாயா சொல்ல, “என்ன மாயா, மிஸ்டர்.ஆதிநாராயணன் எங்களுக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ணியிருக்காரு. அவரோட பேத்தி நீங்க. உங்க ஃபேமிலிக்கு நான் ரொம்பவே கடமைபட்டிருக்கேன்” அவர் நெகிழ்ச்சியாக சொன்னார்.

மென்சிரிப்பை வழங்கியவள், “தேங்க்ஸ் அகைன் சார்” என்று சொல்ல, “நீ என்னை அங்கிள்னே சொல்லலாம்மா. இந்த சார் ஃபோமலிட்டீஸ் எல்லாம் வேணாம்” என்று மோகன் சொல்ல, இருபக்கமும் ‘இல்லை’ என்ற ரீதியில் தலையாட்டினாள் மாயா.
       
“நோ சார், இப்போ உங்க முன்னாடி நிக்கிறது வெறும் மாயா தான், உங்க கொலேஜ் ஸ்டுடன்ட். எனக்கு பின்னாடி வேற எந்த அடையாளமும் இல்லை” என்று மாயா தீர்க்கமாக சொல்ல, புன்னகைத்த மோகன் “சரிமா, நடந்ததை நினைச்சு உன்னை எப்போவுமே வருத்திக்காத. இங்க ஏதாவது தேவைன்னா தாராளமா என்னை நீ கேக்கலாம். இது உன் அங்கிள்ளா சொல்லல்ல, இந்த கொலேஜ் ச்யார்மென்னா சொல்றேன்” என்று சொன்னார்.

அவர் சொன்னதை புன்சிரிப்புடன் ஏற்றுக் கொண்டவள், அங்கிருந்து நகர்ந்து தனது வகுப்பை நோக்கி சென்றாள். அதன்பிறகு பாடத்தில் அவள் கவனமாக, மதிய இடைவெளியில் வெளியே வந்த மாயாவின் கண்களுக்கு பட்டது அந்த காட்சி.

இரண்டு மூன்று சீனியர்ஸ் ஒரு ஜூனியர் பையனை ஒருவழிப்படுத்த, அதை கால்மேல் கால் போட்டவாறு ஆறடிக்கும் மேல் உயரத்தில், கட்டுக்கோப்பான உடலமைப்பில், தன் ஜீப்பின் பொனட் பகுதியில் அமர்ந்து சிரித்தவாறு பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

மாயாவோ அதை ஆர்வமாக பார்க்க, அவள்புறம் திரும்பிய கீர்த்தி மாயாவின் பார்வை செல்லும் திசையை பார்த்து, “அவங்க ஃபைனல் இயர் மாயா, எப்ப பாரு ஜூனியர்ஸ்ஸ ராங்கிங்னு பேருல ரொம்பவே டோர்ச்சர் பண்ணுவாங்க. பட், கேர்ள்ஸ் மட்டும் அவனுங்ககிட்ட மாட்டிக்கல்ல. அதுக்கு காரணம்…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவர்களின் புறம் திரும்பிய அந்த ஜீப்பில் அமர்ந்திருந்தவன் இருவரையும் விரலால் வரும்படி சைகையால் அழைத்தான்.
   
மாயாவோ, “போன்டா செம்மடி நம்மள ரேகிங் பண்ணா போறாங்க. வா வா, சீக்கிரம்” என்று இழுக்க, பதறிய கீர்த்தி, “வேணாம்டி, அவங்க ரொம்ப மோசமானவங்க. நாம அப்படியே ஓடிரலாம்” என்று திரும்பி ஓட எத்தனிக்க, அவளை அழைத்துக்கொண்டு இல்லை இல்லை, கிட்டதட்ட  இழுத்துக்கொண்டு அவர்களின் முன் நின்றாள் மாயா.

அவர்கள் வரும்போதே அங்கிருந்த ஒருவனோ ஜீப்பில் அமர்ந்திருந்தவனிடம், “டேய் டேய்… பாபி வேணாம்டா. பொண்ணுங்கள ரேகிங் பண்றோம்னு மட்டும் அவனுக்கு தெரிஞ்சிச்சி, நம்மள உண்டு இல்லைன்னு பண்ணிருவான” என்று பதற,

ஜீப்பிலிருந்து பாய்ந்து இறங்கிய பாபி, “டேய்! அவன பெரிய இவன் மாதிரி என்கிட்ட பேசின கொன்னுடுவேன் உன்னை. அவன் என்னடா எனக்கு ரூல்ஸ் போடுறது ப்ளடி *****…” என்று கோபத்தில் அவனை கெட்ட வார்த்தையால் கத்தி திட்ட,  இது மாயாவுடைய காதுகளுக்கும் நன்றாகவே கேட்டது. 

மனதிலோ, ‘யார்ர்ரா அவன்?’ என்று மாயா யோசித்துக் கொண்டிருக்க, அவள் முன் சொடக்கிட்ட பாபி மாயாவை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்க்க, அவளோ அழுத்தமாக பாபியையே பார்த்திருந்தாள்.

“கொலேஜூக்கு புதுசா? எந்த டிபார்ட்மென்ட்?”  என்று பாபி கேட்க, “ஹாய் சீனியர், நிவ் அட்மிஷன் தான். பட், தர்ட் இயர்” என்று புன்னகையுடன்  மாயா சொல்ல, அவளுடைய ஒவ்வொரு செய்கைகளையுமே கண்வெட்டாமல் பார்த்தவன், “நேம் என்ன?” என்று கேட்டான்.

“மாயா…” என்று அவள் சொல்லியதில் புருவத்தை நெறித்த பாபி, “மாயா…?” என்று கேள்வியாக கேட்க, “யெஸ் மாயா… அவ்வளவு தான்” என்று சொன்னவளை பார்த்தவன், “அப்பா பேரு?” என்று கேட்க, அதில் மாயாவின் முகம் இறுகியதை கீர்த்தியும் கவனிக்கதான் செய்தாள்.

“அப்பா பேரெல்லாம் இல்லை. வெறும் மாயா தான்” என்று மாயா இறுகிய குரலில் சொன்னதில், ஏளனமாக சிரித்த பாபி அவளை நெருங்கி, “என்ன அப்பா பேரு இல்லையா? ஆமா, உன் அம்மா உனக்கு உன் அப்பா பேர சொல்லல்லையா? இல்லை, எந்த அப்பா பேர சொல்றதுன்னு தெரியல்லையா?” என்று சிரித்தவண்ணம் கேட்டான்.

கோபம் ஏகத்துக்கும் எகிற, முகம் சிவக்க அவனை அறைந்தே விட்டிருந்தாள் மாயா. அவள் அடித்ததில் முதலில் அதிர்ந்தவன், பின் கோபத்தோடு அவளை அறைய போக, அவன் கையை பிடித்து தடுத்தவள் அவனின் அடுத்த கன்னத்திலும் மொத்த கோபத்தையும் சேர்த்து வைத்து ஒன்றுவிட்டாள்.

ஒருவார்த்தை கூட பேசாது ஆள்காட்டி விரலை காட்டி அவனை மிரட்டல் போல் எச்சரித்தவள், அதிர்ந்துபோய் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த கீர்த்தியை இழுத்துக்கொண்டு வந்துவிட, இதில் பாபி தான் அவமானத்தில் முகம் கறுத்து, ‘உன்னை சும்மா விடமாட்டேன்டி’ என்று மாயாவின் மீது வன்மத்தை வளர்த்துக்கொண்டான்.

கீர்த்தியை இழுத்துக்கொண்டு கேன்டீனுக்கு வந்தவள், தன் தொலைப்பேயில் ‘சின்ச்சேன்’ எனப்படும் கார்டூன் காணொளிகளை பார்க்க, ‘இப்போ கொஞ்சநேரத்திற்கு முன்னாடி தான் அவன பேயடி அடிச்சிட்டு வந்தா. இப்போ சின்னபுள்ளதனமா கார்டூன் பார்த்துகிட்டு இருக்கா’ என்று நினைத்த வண்ணம் அவளையே கீர்த்தி பார்த்திருந்தாள்.

ஆனால், அவள்புறம் பார்வையை திருப்பாமல் திரையிலே பார்வையே பதித்திருந்த மாயாவோ சிந்தனையை மட்டும் வேறு எங்கோ சிதற விட்டிருந்தாள்.

அன்று இரவு,

‘இன்னைக்கு அந்த சைக்கோ பாபி எங்கள கூப்பிட்டப்போ , அவன் அல்லகை எவனோ ஒருத்தன பத்தி சொன்னானே… யாரு அவன்? சீனியரா? இல்லை… லெக்ச்சரரா?’ என்று ‘தன்னவனை பற்றி தான் சிந்திக்கிறோம், நாளை அவனை பார்த்த கணத்தில் காதலில் விழப்போகிறோம்’ என்பது அறியாமல் தனக்குள்ளே புலம்பியவாறு தூங்கிப்போனாள் மாயா.

 

காதல்போதை💙
——————————————–
        
-ZAKI💙       

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!