காதல்போதை 22?

காதல்போதை 22?

காதல்போதை 22?

ரோஹன் ஏற்கனவே பல போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறான் என்பதால் அவனை தெரிந்த அவனது ஆட்டத்தின் விசிறிகள் கத்தி கரகோஷம் எழுப்ப பாபியும் சஞ்சய்யும் கூட கத்தி விசிலடித்து ஊக்கப்படுத்தினர்.

மாயாவோ கீர்த்தியின் கையிலிருந்த பெரிய காகிதத்தை விரித்து தலைக்கு மேல் உயர்த்தி காட்டி அதில் தான் எழுதி இருந்த “வில் யூ மேர்ரி மீ..” என்ற வசனத்தை வாய்விட்டே கத்த, அதை எட்டி பார்த்த சஞ்சய் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான் என்றால் கீர்த்தியோ தலையிலடித்துக் கொண்டாள்.

    “பேபி கொஞ்சமாச்சும் அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு இதுல ஏதாச்சும் ஒன்னாவது உன்கிட்ட இருக்கா..” என்று பாபி கேட்க, அவனை மேலிருந்து கீழ் ஒரு மார்கமாக பார்த்தவள்,
     “இந்த நாலுல ஏதாச்சும் ஒன்னுகாச்சும் உனக்கு அர்த்தம் தெரியுமா..”  மாயா கேட்டதில் ‘ஹிஹிஹி’ என்று பாபி அசடுவழிய “பேச வந்துட்டான் வென்று..” என்று அவனை முறைத்தவள் மீண்டும் தான் விட்ட பணியை தொடர்ந்தாள்.

நடனமாடி முடித்து மேடையில் நன்றி சொல்லிவிட்டு நிமிர்ந்த ரோஹன் கண்களுக்கும் மாயா தென்பட அவள் “ரூஹி.. ரூஹி..” என்று கத்தி துள்ளிக்கொண்டு செய்யும் கூத்தில் உண்மையாகவே அவனுக்கு சிரிப்பு முட்டிக் கொண்டு தான் வந்தது. அதன்பிறகு அடுத்தடுத்தென்று போட்டியாளர்களின் நடனம் இடம்பெற கடைசியாக முடிவுகள் அறிவிக்கப்படும் தருணமும் வந்தது. மொத்த போட்டியாளர்களும் மேடைக்கு அழைக்கப்பட எல்லாருக்கும் பதட்டமும் பீதியும் தொற்றிக்கொண்டது.

ஐந்து போட்டியாளர்கள் லண்டனில் நடைப்பெற இருக்கும் போட்டிக்கு ஒரு குழுவாக தெரிவு செய்யப்பட இருக்க முதல் நான்கு பேரை ஐந்தாவது நபரிலிருந்து அறிவிக்க தாம் தெரிவு செய்யப்பட்டதில் அந்த போட்டியாளர்களும் அவர்களை சார்ந்தவர்களும் கத்தி கரகோஷம் போட இங்கு ரோஹனின் முகத்தில் தெரிந்த பதட்டத்தில் மாயாவுக்கும் பதட்டம் தொற்றிக்கொண்டது. நான்கு பேரை அறிவித்து விட்டு முதலாவது நபரை அறிவிக்கும் தருணத்தில் இருக்க ஐவருக்குக் திக்திக் நிமிடங்களாக தான் சென்றது.

மக்களை பதற வைத்து ரோஹனின் பெயரை அறிவிக்க மாயா, சஞ்சய், பாபி “ரோக்கீ..” என்று கத்தி கூச்சலிட ரோஹனுக்கோ கண்களே கலங்கிவிட்டது. தான் நீண்டநாள் கனவு நிறைவேறிய சந்தோஷத்தில் இது கனவா நினைவா என்றே அவனுக்கு நம்ப முடியவில்லை. மேடையிலிருந்து வேகமாக இறங்கியவன் தன் நண்பர்களை நோக்கி ஓடி வர அதில் உஷாரான மாயா தன்னவனிடம் வேகமாக ஓடிச்சென்று அவனை தாவி அணைத்து கன்னத்தில் முத்தமிட்டு பயத்தில் கண்களை மூடி அவன் கழுத்து வளைவில் முகத்தை புதைத்து கொள்ள ஆனால் அடுத்து நடந்ததில் அவளே ஆச்சரியப்பட்டு போனாள்.

    “அம்மு நா ஜெயிச்சிடேன்டி..” என்றவாறு மாயாவை ரோஹன் அணைத்து கொள்ள அதிர்ச்சியில் விழிவிரித்தவள் அடுத்தகணம் தன்னவனை மேலும் இறுக அணைத்து “யெஸ் செல்லகுட்டி யூ டிட் இட்..” என்று சந்தோஷமாக சொல்ல அதைப்பார்த்த பாபிக்கும் சஞ்சய்க்கும் கீர்த்திக்கும் வாயில் வார்த்தையே வரவில்லை. ஆனால் இந்த சந்தோஷம் சிதையப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று விதி அவர்களை பார்த்து விஷமமா சிரித்து கொண்டது.

அடுத்த ஒரு வாரம் கழிந்தநிலையில் இவர்களின் கல்லூரி முதல்வர் மோகன் இறந்துவிட கல்லூரி மாணவர்கள் அனைவருமே அவருடைய இறுதிச்சடங்குக்கு சென்றனர். மாயாவுக்கோ அவரின் இறப்பு வேதனையை தான் கொடுத்தது. தான் உதவி என்று கேட்ட அடுத்தநொடி எந்தவித முகச்சுழிப்புமின்றி தயக்கமுமின்றி தனக்கான ஏற்பாடுகளை செய்து உதவி செய்த மோகன் மேல் அவளுக்கு பெரிய மரியாதையே எழுந்திருக்க இப்போது அவர் இறுதி சடங்கில் கலங்கிய கண்களுடன் கலந்துகொண்டாள்.

இவ்வாறு கல்லூரி முதல்வரின் இறப்பின் காரணமாக அடுத்த ஒருவாரம் கல்லூரி விடுமுறையாக இருக்க ஒருவாரத்திற்கு பின் அவரின் மகன் கல்லூரியை பொறுப்பேற்றிருந்தார்.  கல்லூரியும் எப்போதும் போல் ஆரம்பமாக கல்லூரி மைதானத்தில் சஞ்சய்யோ முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க அவன் எதிரே மற்ற நால்வரும் அவனை குழப்பமாக பார்த்த வண்ணம் இருந்தனர்.

   “டேய்ய் பக்கி என்னன்னு சொல்லித் தொலைடா..” என்று ரோஹன் கத்த,
     “என்னாச்சு அண்ணாத்த எதுக்கு மூஞ்ச மும்பை வரை தூக்கி வச்சிருக்க ஒருவேள சோகமாக இருக்கியோ..” என்று மாயா நக்கலாக கேட்க,
  
“ஷட் அப் டெவில்..” என்று ரோஹன் கத்தவும் மாயாவோ ‘க்கும்’ என்று நொடிந்துக்கொள்ள கீர்த்தி தான் சலிப்பாக இருவரையும் பார்த்துவிட்டு,
     “என்னாச்சு அண்ணா ஏதாச்சும் பிரச்சினையா..” என்று சஞ்சய்யிடம் கேட்டாள்.

அவனோ பெருமூச்சுவிட்டு,
      “எனக்கும் ரோஷினிக்கும் ப்ரேக்அப் ஆகிறுச்சி..” என்று சொல்ல, கீர்த்தியோ ‘அச்சோ பாவம்’ என்று நினைக்க பாபியோ வாயை பொத்திக்கொண்டு சிரிக்க மாயாவோ வாய்விட்டே சிரித்துவிட்டாள். ரோஹன் மாயாவை முறைத்துவிட்டு,
      “ஏன் சஞ்சய் என்னாச்சு.. மூனு வருஷமா அவக்கூட தானே சுத்திகிட்டு இருந்த..” என்று காட்டமாக கேட்டதில்,

    “ச்சே அவ ரொம்ப மோசம்டா.. நா மாயாகூட பேசுறதையே சந்தேகப்படுறா.. உங்களுக்கே தெரியும்ல மாயா எனக்கு தங்கச்சிமாடா.. ஆனா அவ சும்மா நொய்யு நொய்யுன்னுகிட்டு அதான் நீயும் வேணாம் உன் லவ்வும் வேணாம்னு சொல்லிட்டேன்..” என்று சஞ்சய் கோபமாக சொல்ல,

    “வாட் என்னால தான் உங்களுக்கு ப்ரேக் ஆகிச்சா.. அய்யோ அய்யோ..”என்று மாயா சிரித்துவிட்டு,
     “நோ வொர்ரீஸ் அண்ணாத்த அவ ஆளும் மூஞ்சியும்.. உனக்கு உள்ளூர்ல என்ன வெளியூர் பொண்ணா பார்த்து நா கரெக்ட் பன்னி கொடுக்குறேன்.. அவள விட்டுத் தள்ளு..” என்று சொல்ல,

    “யூ இடியட் அவனே லவ்ல ஏமாந்த வலில இருக்கான்.. உனக்கு கொஞ்சமாச்சும் சென்ஸ் இருக்கா இப்போவும் கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ்ஸே இல்லாம தான் பேசுவியா..”  என்று ரோஹன் கத்த,

   “ரோக்கி லீவ் இட் தங்கச்சிமா தானேடா.. அவ சொல்றதுல ஒன்னும் தப்பில்லயே சந்தேகம் ஒரு நோய்டா அது ஒருதடவை வந்தாலும் வாழ்க்கை சூனியம் தான்.. என்ட் கடல்ல மீனா இல்ல..” என்று சஞ்சய் சொல்ல அவனை ஏகத்துக்கும் முறைத்து தள்ளினான் ரோஹன்.

மாயாவோ பாபியின் காதில்,
      “டேய் தருணு உன் ஃப்ரென்ட் ரொம்ப தான்டா.. இவனும் ஆரம்பத்துல இருந்து என் காதல சந்தேகப்பட்டு புரிஞ்சிக்காம தான் நடந்துக்குறான் பட் இவர் ஃப்ரென்டுக்கு வந்தா ப்ளட்டு எனக்கு வந்தா டொமேட்டோ சோஸ்ஸா.. அதுவும் சும்மாவே ஆடுவான் இப்போ அந்த ரோஷினி வேற வோன்டட்டா இவன் கால்ல சலங்கைய கட்டிவிட்டுட்டா.. இனிமே தய்யா தக்கான்னு குதிக்க போறான்..” என்று கிசுகிசுக்க,

பாபியும்,
     “அதை விடு பேபி.. நல்லவேளை அந்த ரோஷினிகிட்ட நா மாட்டிக்கல்ல இல்லைன்னா இப்போ சஞ்சய் இருக்குற இடத்துல நா இருந்திருப்பேனோ என்னவோ ஹப்பாடா…” என்று நிம்மதி பெருமூச்சுவிட மாயாவோ கிளுக்கி சிரித்து விட்டாள்.

அவள் சிரிப்பு சத்தத்தில் அவள் புறம் திரும்பிய ரோஹன் அவளை எரிக்கும் பார்வை பார்த்தவாறே அவளை நெருங்கி,
      “உனக்கு அடுத்தவங்க ஃபீலிங்ஸ் சிரிப்பா இருக்குல்ல.. தட்ஸ் ஓகே பட் நீ சொல்வியே லல் ஒரு ஃபேன்டஸி மேஜிக்னு எங்க போச்சு அது அவங்களுக்குள்ள.. லவ்னாலே முழுக்க முழுக்க பொய் தான்.. பாசம்னு பேர்ல ஒருத்தரை அடிமைப்படுத்துறது.. வாழ்க்கையில கடைசி வரை காதல்னு எதுவுமே இல்ல.. எதிர்ப்பார்ப்புக்கள் வரும் போது அங்க காதல் பொய்யாகுது..” ரோஹன் நக்கலாக சொல்ல,

மாயாவோ அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்து,
       “எதிர்ப்பார்ப்புகள் தப்பில்ல ரூஹி அது மனித இயல்பு.. ஆனா நாம எதிர்ப்பார்க்குற ஒன்ன நம்ம லைஃப் பார்ட்னர் செய்யனும்னு ஃபோர்ஸ் பன்றது தான் தப்பு.. ஆனா உண்மையா காதலிக்கிறவங்களுக்குள்ள ஒரு புரிதல் இருக்கும்.. நம்ம துணையோட எதிர்ப்பார்ப்ப அவங்க சொல்லாமலே நிறைவேத்தனும்னு நமக்கு தோணும்.. அவங்களுக்காக என்ன வேணாலும் பன்னலாம்னு தோணும்..

நம்பிக்கையும் காதலும் ஒன்னுக்குள்ள ஒன்னு.. அது அவங்களுக்குள்ள இல்ல அப்போ எப்படி அது காதலாகும்.. என்ட் இப்போவும் சொல்றேன் எனக்கு உன் லவ் தேவையில்ல நா தர்ற காதல ஏத்துக்க அது போதும் உனக்காக நா என்ன வேணாலும் பன்ன தயாரா இருக்கேன்..  லவ் அது ஒரு மேஜிக் ரூஹி.. நீ கூடிய சீக்கிரம் ஃபீல் பன்னுவ..”  என்று மாயா காதல்பொங்க சொல்ல,

ஏளனமாக சிரித்தவாறு,
      “அன்னைக்கு இவனுக்கு நா கொடுத்த வாக்கு தான் நீ என் லைஃப்குள்ள நுழைய காரணமா இருந்திருக்கு.. அப்படி இருக்கப்போ நா என் அப்பாவுக்கு கொடுத்த வாக்க மீறுவேன்னு நீ எப்படி நினைக்கலாம்.. நோவேய் மாயா.. எனக்கு நிச்சயதார்த்தம் ஆக போகுது.. என்னால கொடுத்த வாக்க மீற முடியாது.. என் பின்னாடி சுத்தி உன் வாழ்க்கைய தொலைச்சிராத..” என்று ரோஹன் கண்டிப்புடன் சொல்லி முடிக்க,

      “நீ கொடுத்த வாக்க மீறாத.. அதே மாதிரி என்னாலையும் உன்ன விட்டுக்கொடுக்க முடியாது.. உன் லைஃப்குள்ள நிரந்தரமா நுழைய என்ன பன்னனும்னு எனக்கு தெரியும் ஐ வில் ஹேன்டில்..” என்று மாயா சொன்னதில், ரோஹனின் மனது அவள் காதலில் அவள் பக்கம் சாய போக அதை ஏற்க முடியாதவன் கோபத்தில்,
        “ஏய்ய் உனக்கு சொன்னா புரியாது அதான் படிச்சு படிச்சு சொல்றேன்ல.. எதுக்கு இப்படி என் பின்னாடி நாய் மாதிரி திரியுற.. நா இன்னொருத்திக்கு சொந்தமானவன்னு உனக்கு புரியுதில்லையா.. என் பின்னாடி அலைஞ்சு என்னை டோர்ச்சர் பன்ற..  சரியான கெட்ட பொண்ணுடி நீ..” என்று அவன் வார்த்தையை விட அடுத்தகணம் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு நின்றான்.

அடித்தது நம் நாயகி அல்ல பாபி.. கன்னத்தில் கை வைத்தவாறு பாபியை ரோஹன் அதிர்ந்து நோக்க கண்கள் சிவந்து நரம்புகள் புடைத்து ஒற்றை விரலை அவன் முன் நீட்டிய பாபி,
       “இன்னொரு வார்த்தை மாயாவ பத்தி தப்பா பேசின கொன்னுறுவேன்.. உன்ன சத்தியமா கொன்னுறுவேன்.. ஹவ் டேர் யூ *****…” என்று பல்லை கடிக்க, அடுத்தநொடி பாபியின் கன்னத்தில் பளார் என்று விட்டிருந்தாள் மாயா.

கீர்த்தியோ “ஜிலேபி..” என்று கத்த, சன்ஞய்யோ,  “என்னடா இது மாறி மாறி அறைஞ்சி விளையாடிக்கிட்டு இருக்கீங்க..” என்று கத்திக்கொண்டு வர, ரோஹனோ அவளை புரியாமல் பார்த்தான் என்றால் பாபியோ கன்னத்தில் கை வைத்தவாறு,
   “ஏன் பேபி..” என்று பாவமாக கேட்டான்.

“இந்த மாயாவோட ரூஹி மேல கை வைக்க யாருக்கும் ரைட்ஸ் இல்ல.. அது எனக்காகவே இருந்தாலும்..” என்று மாயா அழுத்தி சொல்ல, ரோஹனோ அவளையே இமைக்காது பார்த்திருந்தான்.

அவளை முறைத்த பாபி,
     “அவன் உன்ன தப்பா பேசும் போது என்னை பார்த்துகிட்டு இருக்க சொல்றியா.. என்னால டோலரேட் பன்ன முடியல.. ஆனா நீ.. உனக்காக அவன அடிச்சேன்ல எனக்கு தேவை தான்..” என்று கோபமாக முகத்தை திருப்பிக்கொள்ள,

பாபியின் அருகில் நெருங்கிய மாயா அவன் தாடையை பிடித்து தன்னை நோக்கி திருப்பி,
       “தருணு சோரிடா.. இன்ஃபேக்ட் ரூஹி உன்ன அறைஞ்சிருந்தா கூட நா ரூஹிய அறைஞ்சிருப்பேன்.. என் முன்னாடி எனக்கு நெருக்கமானவங்க மேல யாரும் வைக்க கூடாது அதான்டா.. என் மேல கோபமா தருணு..” என்று உதட்டை பிதுக்கி பாவம் போல் கேட்க, பாபியும் அவள் சொன்னதில் சமாதானமாகி லேசாக சிரித்துக்கொண்டான்.

ரோஹனின் எதிரே வந்து நின்றவள்,
      “ஒரு பொண்ணு பின்னாடி ஒரு பையன் சுத்தினா அது ஆம்பளைங்க குணம் அதுக்கு பேரு ஃப்ளர்ட்டு(Flirt) இதுவே ஒரு பொண்ணு பையன் பின்னாடி சுத்தினா அதுக்கு பேரு ஸ்லட்டா(Slut).. ” என்று அழுத்தமாக கேட்டவாறு கீர்த்தியை இழுத்துக்கொண்டு முன்னே சென்றவள் சற்று நின்று திரும்பி தன்னையே அதிர்ச்சியுடன் நோக்கிய ரோஹனை கூர்மையாக பார்த்து,
       “என்னை விட்டு எப்போவுமே விலக நினைக்காத ரூஹி நீ எந்த மூலைக்கு போனாலும் இந்த மாயா உன்ன தேடி வருவா.. என்ட் மோர்ஓவர் இதுக்கப்றம் இன்னொருதடவை என் முன்னாடி நீ இன்னொருத்திக்கு சொந்தமானவன்னு சொல்லிகிட்டு திரிஞ்ச கொன்னுறுவேன் உன்ன இல்ல அந்த பொண்ண..” என்று சொல்லிவிட்டு அவள் பாட்டுக்கு செல்ல, ரோஹன் தான் ‘என்ன பொண்ணுடா இவ..’ என்ற ரீதியில் போகும் அவளையே விழிவிரித்து பார்த்தான்.

அன்று இரவு,

கட்டிலில் சாய்ந்தவாறு தரையை வெறித்துக்கொண்டு மாயா அமர்ந்திருக்க அவள் எதிரே அமர்ந்த கீர்த்தி,
      “என்ன ஜிலேபி முகம் ஃப்யூஸ் போன பல்பு மாதிரி வாடி போயிருக்கு.. நீதான் உன் ரூஹி பேசுறதை இந்த காதால கேட்டு அந்த காதால விட்டுறுவியே.. இன்னைக்கென்ன புதுசா..” என்று கேட்க,

அவளை நிமிர்ந்து பார்த்தவள்,
     “ச்சே ச்சே ரூஹி பேசுனதை நா பெருசா எடுத்துக்கல.. நீ எப்போ உன் லவ்வ தருணுகிட்ட சொல்ல போற.. ” என்று கேட்க,

இடுப்பில் கைகுற்றி அவளை முறைத்த கீர்த்தி,
    “இதான் உன் பிரச்சினையா ஜிலேபி..” என்று பொய் கோபமாக கேட்க, சரியாக மாயாவிற்கு ஒரு அழைப்பு வர திரையை பார்த்தவள் கீர்த்தியை பார்த்துவிட்டு அதை துண்டிக்க அந்த அழைப்போ விடாமல் வந்துக் கொண்டிருந்தது.

அதை கவனித்த கீர்த்தி,
     “ஜிலேபி எதுக்கு கட் பன்ற.. பேசுடி ஏதாச்சும் முக்கியமான கோல்லா இருக்க போகுது.. ” என்று சொல்ல,

“அட ஆமால்ல இருக்கலாம்ல..” என்றவள் தொலைப்பேசியை எடுத்துக்கொண்டு அறையிலிருந்து வெளியேற கீர்த்தி தான் அவளின் தடுமாற்றமான பேச்சில் ‘என்னாச்சு இவளுக்கு..’ என்று புரியாமல் பார்த்தாள்.
 
மாயா அழைப்பை ஏற்றதும் தான் தாமதம் மறுமுனையில் சொன்ன செய்தியில் அதிர்ச்சியில் விழிவிரித்தவள்,
      “நோ.. என்னால முடியாது.. சத்தியமா முடியாது.. ” என்று கத்த,

மறுமுனையில் ஏதோ சொல்லப்பட, ‘ச்சே’ என்று சலித்தவள் கோபமாக,
     “லுக் ஐ அம் நொட் ரெடி ஃபோர் தட்..” என்று ஒவ்வொரு வார்த்தையாக அழுத்திச்சொன்னாள்.

ஆனால் அவள் வார்த்தையை மறுமுனையில் இருப்பவர் கேட்டால் தானே.. ஏதோ பேசவும் கோபத்தில் அழைப்பை துண்டித்தவள் தரையை காலால் உதைத்துவிட்டு அறைக்குள் வர கீர்த்தியோ உறங்கியிருக்க தன் படுக்கையில் அமர்ந்தவள் மனமோ ‘என் ரூஹிய விட்டு எப்படி நா போவேன்..’ என்று அதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டது

இரண்டுநாட்கள் கழித்து,

காலையில் எழுந்த கீர்த்தி அறையில் மாயா இல்லாததை பார்த்து குழம்பி அவள் எண்ணிற்கு அழைக்க அதுவோ அறை மூலையில் கிடந்தது. ஹோஸ்டல் முழுவதும் மாயாவை தேடி கீர்த்தி அலைய அவள் இருந்தாள் தானே.. ‘ஒருவேள கொலேஜ்க்கு போயிருப்பாளோ..’ என்று நினைத்தவள் அவசரஅவசரமாக தயாராகி கல்லூரிக்கு சென்று மொத்த கல்லுரியிலும் மாயாவை தேடி அலைய கீர்த்திக்கு ஒரு கட்டத்தில் பயமே வந்துவிட்டது.

   ‘அய்யோ ஜிலேபி எங்கடி போன.. இப்படி தான் சொல்லாம கொள்ளாம போவியா..’ என்று மானசீகமாக புலம்பியவாறு இருந்தவளுக்கு ஒரு யோசனை தோன்ற அடுத்தகணம் கேன்டீனிலிருந்த ரோஹன், சஞ்சய், பாபியின் முன்னே போய் நின்றுக்கொண்டாள்.

அவர்கள் முவரின் விழிகளோ சாப்பிட்டவாறு கீர்த்தியின் பின்னே தேட, அவர்களின் மனதை படித்தவள் போல்,
     “மாயா.. மாயா எங்கன்னு தெரியல. ஹோஸ்டல்லையும் இல்ல.. கொலேஜ் முழுக்க தேடிட்டேன்.. எனக்கு.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு..” என்று திக்கித்திணறி கீர்த்தி சொல்ல,

கதிரையிலிருந்து எழுந்த பாபி,
      “வாட் அவள எங்கன்னு தெரியல்லையா..” என்று கேட்டவாறு பாபி அவள் எண்ணிற்கு அழைக்க அவள் தொலைப்பேசியின் சத்தம் கீர்த்தியின் பையிலிருந்து வந்தது.

    “ஃபோன ரூம்லயே வச்சிட்டு போயிட்டா..” என்று கண்கலங்க கீர்த்தி சொல்ல, பாபிக்கும் சஞ்சய்க்கும் எதுவுமே புரியவில்லை. இதில் ரோஹனோ  அவர்கள் பேசுவதை கண்டும் காணாதது போல் நிதானமாக சேன்ட்விச் சாப்பிட்டுக் கொண்டிருக்க அவனை முறைத்த பாபி,
      “யூ இடியட் அவள காணோம்னு பதறிக்கிட்டு இருக்கோம்.. உனக்கு இப்போ சாப்பாடு தான் முக்கியமா..” என்று திட்ட,

சஞ்சய்யோ,
   ” மாயாவுக்கு என்னாச்சு கீர்த்தி அவ இப்படியெல்லாம் பன்ன மாட்டாளே..” என்று புரியாமல் கேட்க,

    “நேத்து ராத்திரி ஒரு மாதிரி தான் இருந்தா.. கேட்டதுக்கு இன்னைக்கு அவ தாத்தாவோட நினைவு நாள்னு சொன்னா..” என்று கீர்த்தி சொன்னதும் பாபியோ,
    “சஞ்சய் வா போய் மாயாவ தேடலாம்.. இவன மாதிரி இருக்க என்னால முடியல..” என்று நகர போக,

அப்போதுதான் சப்பிட்டு முடித்து நிதானமாக எழுந்து டிஷு பேப்பரினால் கையை துடைத்தவாறு,
       “ஐ க்னோ வெயார் இஷ் ஷீ.. நா போய் அவள கூட்டிட்டு வரேன்.. ” என்றவாறு தன் பைக் கீயை ஸ்டைலாக விரலில் சுழற்றியவாறு ரோஹன் வெளியேற மற்ற மூவரும் தான் ‘ஙே’ என அவனை லுக்கு விட்டனர்.

காதல்போதை?
—————————————————————–

-ZAKI?

Leave a Reply

error: Content is protected !!