காதல்போதை 30?

   “நான் உங்க ஆஃபீஸ சுத்தி பார்க்கவா?” என்று மாயா கேட்க,
    “அய்யோ! தங்கச்சிமா, இதை நீ எங்ககிட்ட கேக்கவே தேவையில்லை, உனக்கில்லாத உரிமையா!?” என்று சஞ்சய் ஒரு வேகத்தில் சொல்லிவிட, மாயாவோ புருவத்தை நெறித்து புரியாது பார்த்தாள்.

   “என்ன ஏதோ பல நாள் உங்ககூட பழகின மாதிரி இவ்வளவு உரிமையா பேசுறீங்க! கொஞ்சநாள் முன்னாடி பார்த்த என் மேல இவ்வளவு பாசமா!?” மாயா சந்தேகமாக கேட்டதில், பாபி மற்றும் சஞ்ய்யின் முகமே வாடி விட்டது.

இறுகிய முகமாக மாயாவை பார்த்த ரோஹன், “நீ வளர்ந்த சூழல் வேற, அதனால தான் என்னவோ இப்போ உனக்கு யாரை பார்த்தாலும் சந்தேகமா இருக்கலாம். அதான் அன்னைக்கு சொன்னியே, உன் மனசு அதுக்கிட்ட கேளு, அது சொல்லும் இவங்க யாருன்னு” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு நகர, மாயாவோ அவனை அதிர்ந்து பார்த்தாள்.

“மாயா, அவன தப்பா நினைக்காத, அவன் ஏதோ கோபத்துல…” என்று பாபி தயக்கமாக இழுக்க,
    “தட்ஸ் ஓகே தருண், என்ட் ஐ அம் சோரி” என்று வருத்தமாக சொன்னவள், “அப்போ நான் உரிமையாவே உங்க ஆஃபீஸ சுத்தி பார்க்கலாம்ல!” என்று சிரிப்புடன் கேட்க, பாபியும் சஞ்சய்யும் ஒருசேர,”கண்டிப்பா” என்று கூறினர்.

அப்போது, “ஹாய் மாயா” என்ற கீர்த்தியின் குரலில் உற்சாகமாக திரும்பி பார்த்த மாயா, “ஹேய் கீர்த்தி” என்று அவளை அணைத்துக்கொள்ள, கீர்த்தியின் இதழ் முழுக்க புன்னகை தான்.

     “நானே கோல் பண்ணாலும், இந்த மாயா மஹேஷ்வரிய வெயிட் பண்ண வைக்குற ஓரே ஆள் நீதான் கீர்த்தி” என்று உரிமையாக மாயா கடிந்துக்கொள்ள,
    “சோரி மாயா” என்ற கீர்த்தி மாயாவை இழுத்து, பாபியை கண்களால் காட்டி, “வேலை ஒழுங்கா பண்ணலன்னா, டெர்ரர் எம்.டி திட்டும்” என்று கிசுகிசுக்க, மாயாவோ வாயை பொத்திக் கொண்டு சிரிக்க, இருவரையும் மாறி மாறி உறுத்து விழித்துக் கொண்டிருந்தான் பாபி.

   “எனக்கு ரொம்ப பசிக்குது, கேன்டீன்ல போய் சாப்பிடலாமா” என்று மாயா கேட்க, ரோஹனோ நிமிர்ந்து அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக்கொள்ள,
    “அது… அது மாயா, கேன்டீன் எதுக்கு? நீ என்ன வேணும்னு சொல்லு, இங்கேயே வர வச்சிரலாம்” என்று சொன்னான் பாபி.

   “ஓ கோட்! அது எனக்கு தெரியாதா!? எனக்கு கேன்டீன்க்கு போய் சாப்பிடனும் போல இருக்கு. என் லைஃப்ல அந்த மூமென்ட்ஸ் எல்லாம் மிஸ் பண்ணிட்டனேன்னு நான் நினைக்காத நாளில்லை. ப்ளீஸ்” என்று மாயா கெஞ்ச,
     “ஓகே தங்கச்சிமா” என்ற சஞ்சய் பாபியின் புறம் திரும்பி, “பாபி கேன்டீன்ல எல்லாரையும் க்ளியர் பண்ண சொல்லு, யாராச்சும் இருந்தா, அது தங்கச்சிமாவுக்கு தான் டிஸ்டர்ப் ஆ இருக்கும்”  என்று சொல்ல,  “முடியல ஏசப்பா, ப்ளீஸ் இதெல்லாம் வேணாம்” என்று புலம்ப ஆரம்பித்து விட்டாள் மாயா.

   “நோ மாயா அவங்க சொல்றது கரெக்ட் தான். உன் சேஃப்டி, கம்ஃபோர்ட் எங்களுக்கு ரொம்ப முக்கியம்” என்று கீர்த்தி சொல்லவும், மாயாவோ சலிப்பா தலையாட்டிவிட்டு அலைஸ்ஸை அழைக்க, அவளோ அறையிலேயே இருப்பதாக சொல்லவும், எதுவும் பேசாது அலைஸ்ஸை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவள் அறையிலிருந்து வெளியேறினாள்.

    “கீர்த்தி நீங்க அவக்கூடவே இருங்க” என்று பாபி சொல்லவும், அதற்காகவே காத்திருந்தவள் போல் மாயாவின் பின்னாலேயே ஓடினாள் கீர்த்தி.

கேன்டீனில் யாரும் இல்லாததை பார்த்த மாயா சலிப்பா,
     “இதுக்கு அவங்க சொன்ன மாதிரி, நான் அங்கேயே இருந்து சாப்பிட்டிருக்கலாம். டூ பேட்” என்று சொல்ல, அவள் எதிரே அமர்ந்துக் கொண்ட கீர்த்தி,
     “எல்லாம் உன் பாதுகாப்புக்கு தான் மாயா. நீ இங்க இருக்கப்போ, அது அவங்க பொறுப்பு தானே” என்று நிதானமாக கூறினாள் கீர்த்தி.

    “வாவ்! நான் இங்க வர்ற வரைக்கும் எதிர் பார்க்கவே இல்லை, இப்படி கூட ரிலேஷன்ஷிப் எனக்கு கிடைக்கும்னு” என்று மாயா சொல்ல, அவளை கூர்ந்து பார்த்த கீர்த்தி ஏதோ யோசித்து,
      “ஜிலேபி” என்று மாயாவை மெதுவாக அழைக்க, சட்டென கீர்த்தியின் புறம் திரும்பியவள், “என்ன சொன்ன?” என்று பதட்டமாக கேட்டாள்.

   “அது வந்து, நான் உன்னை ஜிலேபின்னு கூப்பிடவா?” என்று கீர்த்தி ஒருவித தயக்கமாக கேட்க, வாய்விட்டு சிரித்த மாயா,
      “ஓஹோ! பெட் நேம்மா!? தாராளமா கூப்பிட்டுக்கோ, பட் வெளில எல்லார் முன்னாடியும் கூப்பிடாத, ஆல்ரெடி நியூஸ் ச்சேனல்ல என் பேரு தான் ஃப்ளாஷ் நியூஸ் ஆ இருக்கு, இதுல இதை கேள்விப்பட்டாங்க அவ்வளவு தான்” என்று சொல்லி சிரிக்க,

கீர்த்தியின் மனமோ ஐந்து வருடத்திற்கு முன்னிருந்த எந்தவித ஆர்ப்பாட்டமுமில்லாத அந்த சாதாரண மாயாவிற்காகவே ஏங்கத்தொடங்கியது.

  “நான் ஒன்னு கேக்கவா ஜிலேபி, நீ ரோக்கியண்ணா பத்தி, ஐ மீன் ரோஹன் அண்ணாவ பத்தி என்ன நினைக்கிற?” என்று கீர்த்தி கேட்க, லேசாக புன்னகைத்தவள்,
     “ஓஹோ! அந்த டெர்ரர்க்கு ரோக்கிண்ணு கூட பேரு இருக்கா!? அவர பத்தி நான் என்ன நினைக்க, ஹீ இஸ் சோ வியர்ட். யூ க்னோ வட், என்னை யாருமே திட்டினது கிடையாது, ஏன் குரல உயர்த்தி கூட என் முன்னாடி பேச மாட்டாங்க. பட் ரோஹன் என்னை திட்டாத மீடிங் ஏ இல்லை, என்ட் எப்போ பாரு என்னை முறைச்சிகிட்டு, என்னை டெவில்னு திட்டிகிட்டு, ரொம்ப வித்தியாசமா இருக்கு. இன்ஃபேக்ட், அவரோட பார்வை கூட என்னை ஏதோ பண்ணுது. எனக்கு தெரியல, அவர் என்னை திட்டினா கூட அவர்கிட்ட நெருங்க சொல்லி மனசு சொல்லுது” என்று மாயா பேசிக் கொண்டே போக, கீர்த்தியோ விழிவிரித்து பார்த்தாள்.

மொத்தத்தையும் மறந்தாலும், ரோஹன் மீதான அவள் காதல் உணர்வுகள் தானாக வெளிப்படுவதில் கீர்த்திக்கு தான் அதிசயமாக இருக்க, மாயாவோ ரோஹன் பற்றிய சிந்தனையில் இருந்தாள். அடுத்த ஒருமணி நேரம் அலுவலகத்தில் அங்கு இங்கு என கீர்த்தியுடன் சுற்றிப் பார்த்தவள்   மீண்டும் அவளின் ரோஹன் ஜீயை தேடி வர, அவனோ மாயாவை தான் கணினி திரையில் சிசிடீவி வழியே பார்த்துக் கொண்டிருந்தான்.

மாயா உள்ளே வந்ததும், தொலைப்பேசியை பார்ப்பது போல் ரோஹன் பாவனை செய்ய, அவன் கண்களில் தெரிந்த அலைப்புறுதலிலே அவன் சிந்தனை வேறெங்கோ இருப்பதை கண்டு கொண்ட மாயா அடக்கப்பட்ட சிரிப்புடன் அவன் எதிரே அமர்ந்துக் கொண்டாள்.

      “என்ன மிஸ்டர்.ரோஹன், உங்க கன்ஸ்ஸன்ட்ரேஷன் இங்க இல்லையே… ஒருவேள விட்டு போன உங்க காதலியை பத்தி நினைச்சிக்கிட்டு இருக்கீங்களா?” என்று மாயா குறும்பாக கேட்க, கீர்த்தியோ சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டாள்.

அப்போது உள்ளே வந்த பாபியோ அவள் சொன்னதை கேட்டு,
     “இருந்தா தானே விட்டு போக!? சார் தான் காதல்னாலே கால் பிடறியில பட ஒடிறுவாரே” என்று கிண்டலாக சொல்ல, மாயாவோ, ‘அப்படியா! அப்போ எதுக்கு இந்த மாறுவேஷம்’ என்ற ரீதியில் ரோஹனை ஒரு  பார்வை பார்த்தாள்.

அவனோ எதையும் கண்டும் காணாதது போலிருக்க, சஞ்சய்யோ ஏதோ தீவிரமாக யோசித்து, பழைய விடயங்களை நியாபகப்படுத்தினால் மாயாவுக்கு நினைவுகள் திரும்பி விடும் என்ற நப்பாசையில், ரோஹனை பார்த்தவாறே,
     “யூ க்னோ வட் மாயா, ரோக்கிய கூட ஒரு பொண்ணு ரொம்ப சின்சியரா காதலிச்சா, அப்படியே பார்க்க உன்னை மாதிரியே இருப்பா. இவன ரூஹி ரூஹின்னு கூப்பிட்டுக்கிட்டு, இவன் என்ன திட்டினாலும் சிரிச்சிகிட்டே இவன் பின்னாடியே சுத்துவா, அவ்வளவு குறும்பு பண்ணுவா, ரோஹனே அவள பார்த்தா மிரண்டு போயிருவான்னா பாரு!” என்று சொல்ல,

பாபியும் கீர்த்தியும் கூட மாயாவின் முக பாவனைகளை கூர்ந்து பார்க்க, அவளோ ரோஹனின் முக பாவனைகளை தான் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். காரணம் ரோஹனின் முகத்திலிருந்த இறுக்கம் அப்படி! கடும்பாறை போல் அவன் முகம் இறுகி ஒருவித ரௌத்திரத்தில் இருக்க, அதை மேலும் சீண்டும் விதமாக,
      “ரூஹி” என்ற மாயா ரோஹனை அழைத்ததும் தான் தாமதம், அந்த அறையே அதிரும் வண்ணம் மேசையில் இரு கைகளையும் அடித்து, எழுந்து, தன் முழு உயரத்திற்கு நின்றான் ரோஹன்.

      “இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினாலும், யூ வில் சீ மை அனொதர் ஃபேஸ் மிஸ்.மஹேஷ்வரி”என்று உச்சகட்ட கோபத்தில் ஒற்றை விரலை நீட்டி, எச்சரித்த ரோஹன் விறுவிறுவென அங்கிருந்து வெளியேற, மாயாவோ அவனையே தான் வெறித்து பார்த்தாள்.

     “ஐ அம் சோரி மாயா, அவன் இப்படி நடந்துக்குவான்னு நாங்களே எதிர்ப்பார்க்கல. அவனுக்கு அந்த பொண்ண பிடிக்காது, அதான் இப்போ அவள பத்தி பேசினதும் கோபப்பட்டுட்டான்” என்று பாபி சொல்ல, குறும்பாக புன்னகைத்த மாயா,
      “இன்ட்ரெஸ்டிங்” என்று சொல்லிக்கொள்ள, அலைஸ்ஸோ மாயாவையே முறைத்துப் பார்க்க, மற்ற மூவரும் தான், ‘இவ மாறவே இல்லை’ என்ற ரீதியில் வியந்து பார்த்தனர்.

அன்று இரவு,

     “டேய்! டேய்! டேய்! போதும்டா” என்று ரோஹனின் கையிலிருந்த மது போத்தலை பாபி பிடுங்க, அவனோ விட்டால் தானே! ஏற்கனவே இரண்டு போத்தல்கள் காலி செய்தவன் மூன்றாவது போத்தலிலும் பாதி மதுவை காலி செய்திருக்க, பாபிக்கு தான் அவனை அடக்குவது முடியாத காரியமாகி போனது.

    “குடிச்சி குடிச்சே சாகப்போறியாடா! எத்தனை நாளைக்கு தான் இப்படியே இருந்து உன்னையும் கஷ்டப்படுத்தி எங்களையும் கஷ்டப்படுத்திகிட்டு இருக்க போற? உன் கனவு சிதைஞ்சதுக்கு முழுக்க முழுக்க நீ மட்டும் தான் காரணம் ரோக்கி ச்சே” என்று பாபி கத்தி அவன் கையிலிருந்த போத்தலை சுவற்றில் எறிய,

    “யூ இடியட்! எவ்வளவு தைரியம்டா உனக்கு! அதை ஏன்டா உடைச்ச!? என்ன சொன்ன! என்ன சொன்ன! என்னோட கனவு சிதைஞ்சதுக்கு நான் காரணமா? நான் காரணமா? ஹான்…” என்று ரோஹன் போதையிலும் கோபத்திலும் கத்த,

    “பின்ன, அன்னைக்கு எல்லாம் அர்ரேன்ஜ்மென்ட்ஸ்ஸும் பண்ணிட்டு, ட்ரக்ஸ் எடுத்து பைத்தியக்காரன் மாதிரி பிஹேவ் பண்ணி, உன் வாழ்க்கைய நீதான் அழிச்ச” பாபியும் கோபத்தில் கத்த,

    “எல்லாத்துக்கும்… எல்லாத்துக்கும் காரணம் அந்த… அந்த” என்று நிறுத்திய ரோஹன் எதுவும் பேசாது அடுத்த மது போத்தலை எடுத்து மூச்சுவிடாமல் குடிக்க, ‘இவனை என்ன செய்தால் தகும்’ என்ற ரீதியில் அவனை உக்கிரமாக பார்த்துக் கொண்டிருந்தான் ரோஹன்.

இரண்டுநாட்கள் கழித்து,

ரோஹனும் பாபியும் சைட்டில் இருக்க, மாயாவும் ரோஹன் அங்கு இருப்பது தெரிந்தே சைட்டுக்கு தான் சென்றாள். ஆனால், அன்று போல் தனியாக இல்லாமல் ஏகப்பட்ட கார்ட்ஸ் அவளை சூழ்ந்திருக்க, அவர்களை பேசி சமாளித்து ஒரு ஓரமாக நிற்க வைத்தவள் இருவரையும் நோக்கி சென்றாள்.

பாபியோ சிரிப்புடன் அவளை பார்த்திருந்தான் என்றால், ரோஹனோ அங்கிருந்த கார்ட்ஸ்ஸையும் அவளையும் அழுத்தமாக மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

   “ஹாய் தருண், ஹாய் மிஸ்டர்.ரோஹன்” என்று மாயா உற்சாகமாக சொல்ல, ரோஹனோ அவளை முறைத்து பார்த்து,
     “நீங்க நிஜமாவே ஐரா கம்பனீஸ்ஸோட எம்.டி தானா! ஏன்னா, காப்ரேட் உலகத்துல நம்பர் வன் இடத்துல இருக்க ஒரு கம்பனிய, இப்படி சின்னபுள்ள தனமா நடந்துக்குற ஒரு பொண்ணு தான் ரன் பண்றான்னு சொன்னா யாருக்கா இருந்தாலும் சந்தேகம் வரும். மிஸ்.மஹேஷ்வரி உங்களுக்கு எங்ககூட பேசனும்னா முதல்லயே இன்ஃபோர்ம் பண்ணுங்க, அதுக்கான மீடிங் அர்ரேன்ஜ்மென்ட்ஸ்ஸ பன்றோம். அதுவும், ஆபீஷியலா மட்டும். இது வேலை நடக்குற இடம். இங்க நிக்கிறது கூட சேஃப் கிடையாது. இதுல நீங்க உங்க பீஏ, கார்ட்ஸ்னு ஒரு ஊரையே கூட்டிட்டு வந்து எங்க வேலைய டிஸ்டர்ப் பன்றீங்கன்னு உங்களுக்கு தோணல்லையா?” என்று காட்டமாக கேட்க,

    “ரொம்ப சூடா இருக்கீங்க மிஸ்டர்.ரோஹன், உஃப்ப்! ” என்று பெருமூச்சுவிட்டவள்,
      “எப்போ பாரு கால்ல சுடுதண்ணி கொட்டினது மாதிரி தான் பேசிக்கிட்டு இருப்பீங்களா! உங்க ஃப்ரென்ட் தானே தருண், எவ்வளவு ஸ்வீட்டா இருக்காரு. பட் நீங்க தான்…” என்று சலிப்பாக தலையாட்ட, ரோஹனோ, ‘இவள’ என்று பல்லைகடித்துக் கொண்டு கோபத்தை அடக்கினான்.

வாய்விட்டு சிரித்த பாபி,
      “மாயா ரோக்கி பேசுற பேசுற பேச்சுக்கு வேற க்ளைன்ட்ஸ்ஸா இருந்தா வேற கம்பனிய பார்த்துட்டு போயிக்கிட்டே இருப்பாங்க. ஏன், இதுக்கு முன்னாடி  இவன் கோபத்தால சில க்ளைன்ட்ஸ் கூட பிரச்சினை வந்திருக்கு. பட் த க்ரேட் மஹேஷ்வரி இவ்வளவு திட்டு வாங்கியும் கான்ட்ரேக்ட் அ கேன்சல் பண்ணாம இருக்குறது ஆச்சரியம் தான். நீ மாறவே இல்லை பேபி” என்று தன்னை மீறி பாபி சொல்லிவிட்ட பிறகு தான் கடைசியாக சொன்னது நினைவில் வர, ரோஹனோ பாபியை எச்சரிக்கும் பார்வை பார்த்தான்.

முகத்தில் எதையும் பிரதிபலிக்காது சாதாரணமாகவே இருந்த மாயா புன்னகைத்தவாறே,
     “எனக்கு மிஸ்டர்.ரோஹன் திட்டுறது திட்டாவே தெரியல தருண்.” என்றவள் ரோஹனிடம், ” ஐ அம் சோரி, நா இப்படி சொல்றேன்னு என்னை தப்பா எடுத்துக்காதீங்க. நீங்க கோபப்படும் போது முகமெல்லாம் சிவந்து ரொம்ப க்யூட்டா இருக்கீங்க. அதை பார்குறதுக்காகவே பண்ணலாம்னு தோணுது” என்று மாயா சொல்லி சிரிக்க, ரோஹனோ நெற்றியை ஒரு விரலால் நீவி விட்டவாறு, ‘ஆண்டவா, இந்த அமீனீஷியா டெவில் மொத்தத்தையும் மறந்தும் என்னை இப்படி டார்ச்சர் பண்றாளே’ என்று உள்ளுக்குள்ளே புலம்பித் தள்ளினான்.

    “அச்சோ! நான் எதுக்கு வந்தேன்னு சொல்லாம ஏதேதோ பேசிக்கிட்டு இருக்கேன். எனக்குன்னு இங்க இருக்குற ஃப்ரென்ட்ஸ் நீங்க தான். இவ்வளவு க்ளோஸா பழகிட்டு உங்களை கூப்பிடலன்னா எப்படி! இன்னும் டூ டேய்ஸ்ல என்னோட பர்த்டே, ***** ஹோட்டல்ல தான் பார்ட்டி அர்ரேன்ஜ் பண்ணிருக்காங்க. எனக்கு இதுல பெருசா விருப்பம் இல்லை பட் டேட் தான்…  சோ, நீங்க கண்டிப்பா வரனும், என்ட் மறக்காம கீர்த்தி, சஞ்சய் அண்ணாவையும் அழைச்சிட்டு வாங்க, நான் அவங்களுக்கு கோல்ல இன்வைட் பண்ணிடுறேன்.” என்று மாயா சொல்ல, அலைஸ்ஸோ அவர்களுக்கான அழைப்பிதழ்களை கொடுத்தாள்.

    “ரோஹன் ஜீ நீங்களும் தான்” என்று மாயா குறும்பாக சொல்ல, “எனக்கு வேற வேலை இல்லை” என்று ரோஹன் சத்தமாக முணுமுணுக்க, அதில் சிரித்தவள்,
     “ஐ அம் வெயிட்டிங் ஃபோர் யு ஆல், சீ யூ” என்றுவிட்டு  ரோஹனை திரும்பி திரும்பி பார்த்தவாறே காரில் ஏறிக் கொண்டாள் மாயா.

ரோஹனோ அவளையே பார்த்திருக்க, கார் கண்ணாடியை கீழிறக்கியவள் ரோஹனை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டி புன்னகைத்து கண்ணாடியை மூட, பாபியோ இருவரையும், ‘ என்னடா நடக்குது இங்க’ என்ற ரீதியில் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான்.

அடுத்த வந்த நாட்கள் கழிந்து பிறந்தநாள் விழாவுக்கு செல்வதற்கான நாளும் வந்தது.

    “ரோக்கி, ரெடி ஆகிட்டியா? இப்போ சஞ்சய் வந்ததும் கிளம்பலாம்” என்று சொல்லிக்கொண்டே பாபி ரோஹனின் அறையை எட்டிப்பார்க்க, அவன் கண்களோ அதிர்ச்சியில் விரிந்துக் கொண்டது. காரணம் ரோஹன் இருந்த கோலம் அப்படி!

சாதாரண உடையில் சிகரெட்டை புகைத்தவாறு, அறையிலிருந்த தொலைக்காட்சியில் ரோஹன் கூடைப்பந்து விளையாட்டை பார்த்துக் கொண்டிருக்க, அவனை பார்த்து அதிர்ந்த பாபி,
    “டேய்! ரெடி ஆகாம என்னடா பண்ற!?” என்று கோபமாக கேட்க, அவனை அலட்சியமாக பார்த்த ரோஹன்,
    “எதுக்கு ரெடி ஆகனும்? ஆமா… நீ எங்க போற?” என்று சாதாரணமாக கேட்டு வைத்தான்.

  “அடப்பாவி! இன்னைக்கு மாயாவோட பர்த்டே ரோக்கி, நம்மள இன்வைட் பண்ணியிருக்கா, போகாம இருந்தா நல்லா இருக்குமா!” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் பாபி கேட்க,

    “ஓஹோ!” என்று நீட்டி முழக்கியவன், “ஓகே,  வரும் போது ***** ப்ரான்ட் சரக்கு வாங்கிட்டு வந்துரு. எல்லாமே காலியாயிருச்சி, ஒன்னு தான் மிச்சம் இருக்கு” என்றுவிட்டு கட்டிலில் மல்லாக்காக படுத்துக்கொள்ள, அவனை முறைத்த பாபி,
     “அப்போவும் அவள கஷ்டப்படுத்தின,  இப்போவும் அவள கஷ்டப்படுத்துற ரோக்கி,  உன்னையெல்லாம் திருத்தவே முடியாது” என்று கதவை அறைந்து சாத்திவிட்டு செல்ல, ரோஹனோ மூடிய அறைக்கதவையே உணர்ச்சி துடைத்த முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

ZAKI?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!