காதல் 21

காதல் 21

சித்தார்த் விஷ்ணு ஒரு பக்கமும், சித்தார்த்தின் ஆள்கள் ஒரு பக்கம், விஷ்ணுவின் டிபார்ட்மென்ட் ஆளுங்க ஒரு பக்கமாக தேடியும் பலன் என்னவோ முட்டையாக தான் இருந்தது.

ஒரு இடத்தில் காரை நிறுத்தியவன் கீழே இறங்கி நிற்க அவன் பின்னால் வந்த விஷ்ணுவும்  அவனிடம் வந்து “என்ன ஆச்சு டா ஏன் வண்டியை நிறுத்திட” என 

மச்சான் மதி இங்க தான் இருக்காள் டா என் மனசு சொல்லுது டா இங்க தான் இருக்க” என்று கண்களை சுழல விட்டு தேட, 

டேய் இங்க யாரும் இருக்க வாய்ப்பே இல்ல நீயே இந்த இடத்தை பாரு வா டா நம்ப வேற இடம் போய் தேடலாம்” என்றவனுக்கு தெரியவில்லை மதி அங்கே தான் ஒரு இருட்டு அறையில் இருப்பது.

அவனிடம் பேசி கொண்டே திரும்பிய விஷ்ணு “மச்சி வா டா டீ குடிச்சிட்டு போகலாம்” என 

எனக்கு வேண்டாம் டா” என்றவனை வற்புறுத்தி அழைத்து வந்தான். எழுந்தது இருந்து அலையும் நண்பனின் பசியை அவன் அறிந்தானோ இல்லையோ விஷ்ணுக்கு புரியவே அவனை சாப்பிட அழைத்தால் நிச்சயம் வர மாட்டான் என்று தான் டீ குடிக்கவாது அழைத்து வந்தான்.

விஷ்ணு “மச்சான் மதி கிடைச்சிடுவா டா ” என 

ப்ச்…. எனக்கு ஒன்றுமே புரியலை டா உண்மையை சொல்லணும்னா நான் இதை விட பெரிய விஷயத்தை எல்லாம் பார்த்து இருக்கேன்.  அப்ப எல்லாம் என்னோட மனசு இப்படி வலிகளை டா. மதி வேற இரண்டு நாளா என் கிட்ட சரியாவே பேசலை அதுவே என்னை ரொம்ப கஷ்ட படுத்துது. இப்ப இது வேற” என்னும் போதே மாலதி யிடம் இருந்து வீடியோ கால் வர,

சொல்லு மா என்ன ஆச்சு” என்று கேட்டவனிடம்,

அண்ணா உங்க பையனுக்கு அம்மா வேண்டுமா அழுகிறான். என்னால சமாளிக்க முடியலை. நீங்க கொஞ்சம் சொல்லுங்க அண்ணா” என்று அபியிடம் போனை தர

அபியோ “அப்..பா…. ம்மா ம்மா” என்று சொல்ல தெரியாமல் அழுக,

அவனின் அழுகையை பார்த்தவனுக்கு மதியை கடத்தியனை கொல்லும் அளவு கோபம் வந்தது “அபி குட்டி ஸ்ட்ரோங் பாய் தானே அப்பா சொன்ன கேட்பிங்க தானே இப்ப நீங்க சமத்து பையனா அத்தை கூட விளையாடுங்க அப்பா நைட் குள்ள அம்மாவை கூப்பிட்டு வரேன் டா ப்ரோமிஸ். என்னோட செல்லக்குட்டி அழ கூடாது ஓகே” என

என்ன புரிந்ததோ இல்லையோ தன் அப்பா அம்மாவை நைட் கூப்பிட்டு வருவதாக சொன்னது மட்டும் நன்றாக புரிய கண்ணை துடைத்து கொண்டு தன் அப்பாவிற்கு ஒரு முத்தத்தை வைத்து விட்டு மாலதியிடம் போனை கொடுத்து விளையாட சென்று விட்டான்.

சித்து “பாவம் டா காலையில் இருந்து மதியை பார்க்காமல் அழுறான். கஷ்டமா இருக்குடா. மதியை கடத்தியவன் மட்டும் யாருனு தெரியட்டும் இருக்கு அவனுக்கு” என்று இருவரும் அந்த கடையை விட்டு வண்டிக்கு செல்ல இவ்வளவு நேரம் அவர்கள் பேசிய அனைத்தையும் கேட்ட ஒரு செய்தி நிறுவர் இந்த தகவலை உடனே தனது மேலிடத்து சொன்னான்.

சற்று நேரத்தில் அணைத்து சேனலில் “சற்று முன் கிடைத்து முக்கிய செய்தி பிரபல தொழிலதிபரும் தமிழகத்தின் முக்கிய புள்ளியும் ஆனா சித்தார்த் கிருஷ்ணா அவர்களின் மனைவி மதி என்னும் இளமதியை கடத்தி இருப்பதாக தகவல் வந்துள்ளது. இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகன் இருப்பதும் சில வருடங்கள் முன்பே ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. கடத்தியத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. மேலும் தகவலுக்கு எங்களுடன் இணைந்து இருங்கள்” என்று அணைத்து சேனலும்  தங்கள் பானையில் சொல்லு கொண்டு இருக்க இதை தெரியாமல் சித்தார்த் அலைத்து கொண்டு இருந்தான்.

சித்தார்த் காரில் சென்று கொண்டு இருக்க அவனுக்கு போன் வந்தது. அதை பார்த்து கடுப்புடன் கட் செய்து விட்டு மீண்டும் வண்டியை ஓட்ட அவனுக்கு மீண்டும் மீண்டும் அதே நம்பரில் இருந்து கால் வர இருக்கும் கோபத்தில் சாலையின் ஓரத்தில் வண்டியை நிறுத்த என்ன என்று கேட்ட விஷ்ணு விடம்,

ப்ச்… அந்த ஜெய் தான் டா எதுக்கு நான் கட் பண்ணதுக்கு அப்புறம் கூட விடாமல் கால் பன்றான் அவனை..” என்று கோபத்தில் பக்கத்தில் இருந்த கல்லை உதைக்க,

டேய் கண்ட்ரோல்… ஸ்பீக்கர்ல போடு” என்றதும் காலை அட்டென்ட் செய்ய

ஹலோ சித்தார்த் திஸ் இஸ் ஜெய்” என “தெரியுது சொல்லு எதுக்கு கால் பண்ண” என்று பட்டென்று கேட்க,

இப்ப தான் நியூஸ் பார்த்தேன் மதியை யாரோ கடத்திட்டங்களாம்” என்று கேட்க

சும்மா நடிக்காத உன்னை பற்றி தெரியாத எங்களை அழிக்க தானே நினைக்கிற சொல்ல முடியாது நீ கூட கடத்தி இருக்கலாம்” என்று கோபத்தை கட்டு படுத்தி சொல்ல

கரெக்ட் தான் சித்தார்த் இதே வார்த்தை நீ ஒரு வாரத்திற்கு முன்னாடி சொல்லி இருந்தா நானே ஒத்துப்பேன். பட் இப்ப நான் அப்படி நினைக்கலை. என்றைக்கு எனக்கு எங்கேஜ்மெண்ட் அதனால என்னால உனக்கு ஹெல்ப் பண்ண வர முடியாது. நான் சொல்றதை உன்னால் நம்ப முடியாது பட் எது தான் உண்மை ஒன்று மட்டும் சொல்றேன் மதியை கண்டிப்பா உனக்கு ரொம்ப வேண்ட பட்டவங்க தான் கடத்தி இருக்கணும்” என்று கூற

நீ என்ன சொல்ற  எனக்கு புரியலை ” எண்றதுக்கு “நான் நாளைக்கு வரேன் உன்னை பார்க்க இப்ப ஒன்று சொல்றேன் நல்ல கேட்டுக்கோ உனக்கு தெரியாத ஒருத்தர் இருக்காங்க உன் குடும்பத்தில் அதை கண்டு பிடி அவனுக்கு தான் மதி கிட்ட இருக்கிறது வேண்டும்” என அவனுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து விட்டு அவன் நிச்சயத்தை கவனிக்க தொடங்கினான்.

இவன் என்ன லூசா டா எனக்கு தெரியாமல் யார் இருக்க போற. முதலில் இவனுக்கு எப்படி இந்த விஷயம் தெரிந்தது” என்ற விஷ்ணுவிடம்,

அவன் எதோ சேனல் அப்படினு சொன்னான் ல முதலில் நியூஸ் ஆ செக் பண்ணுடா. அவன் எதோ க்ளூ கொடுத்தா மாதிரியே இருக்கு பட் அது என்னனு தான் தெரியலை” என்று அவன் சொன்னதை யோசிக்க தொடங்க,

 விஷ்ணு “டேய் மதியை கடத்திய விஷயம் தான் டா இப்ப நியூஸ் முழுக்க போகுது எப்படியோ லீக் ஆகிடுச்சு இப்ப என்ன பண்றது” என்னும் போதே விஷ்ணுவிற்கு கால் வர,

சார் நீங்க சொன்ன நம்பர்க்கு இப்ப ஒரு கால் வந்தது. அதை வைத்து ட்ரஸ் பண்ணத்தில் ஒரு தகவல் கிடைத்தது” என சொல்ல போனை வைத்து சித்துவை பார்த்து  “மச்சான் ஒரு லீட் கிடைத்து இருக்கு. உங்க மாமாக்கு இப்ப ஒரு நம்பரில் இருந்து கால் வந்தது போல அதில் அவங்க பேசியது 

ஹலோ நீங்க பத்திரமா இருக்கீங்களா உங்க மேல அவனுக்கு சந்தேகம் வந்ததா” என்று அந்த நபர் கேட்க,

இது வரை வரல இனியும் வராது அவன் பைத்தியம் பிடிச்சா மாதிரி சுத்திட்டு இருப்பான்” என்றார் ஹரி.

எதுக்கும் ஜாக்கிரதையாக இருங்க” என்று போனை வைத்தாக விஷ்ணு சொல்ல 

யார்டா அவன் எதுக்கு மாமா கிட்ட பேசணும். நம்ப மாமாவை பிடிச்சு விசாரிச்சா மதி இருக்கிற இடம் தெரிய வாய்ப்பு இருக்கே” என்று தன் எண்ணத்தை சொல்ல 

டேய் அறிவு கொழுந்தே மாமாவை வைத்து தான் அந்த முகம் தெரியாத நபரை கண்டு பிடிக்கணும் மதி பாதுகாப்பாக தான் இருப்ப பட் இதுக்கு பின்னாடி இருந்தவனை பிடிக்கணும்.  நேற்று பார்த்தேன் டா உங்க மாமா,

காட்டு பகுதியில் யாரோ ஒருவருக்கு ஹரி காத்திருக்க அவனுக்கு பின்னால் வந்த விஷ்ணுவும் காத்திருக்கும் சமயம் ஒரு நெடியவன் முகத்தை மறைத்து கொண்டு அங்கே வந்தான்.

எவ்வளவு நேரம் வெயிட் பண்றது பா. சீக்கிரம் எதுக்கு வர சொன்ன அதை சொல்லு” என்று ஹரி கேட்க 

உங்களை நான் தேட சொன்னேன்ல அது கிடைத்ததா” என்று மொட்டையாக கேட்க விஷ்ணு புரியாமல் பார்க்க 

ஹரியோ “நான் அவ ரூமில் எல்லா இடத்தியும் தேடி பார்த்துட்டேன் எங்கவும் இல்ல நீ சொல்ற பொண்ணு வேற யாரா இருக்குமோ” என்று தன் சந்தேகத்தை கேட்க 

இல்ல அந்த வருண் சொன்ன பொண்ணு இவ தான். வருண் நமக்கு அனுப்பியதை வைத்து பார்க்கும் போது அது இவ தான் நான் இவளை நெருக்கும் போது அவ காணாமல் போய்ட்டா இப்ப தான் கிடைத்து இருக்க அதுவும் சித்தார்த் கூட. எனக்கு அவ உயிர் எல்லாம் வேண்டாம் ஆனால் அவ கிட்ட இருக்கிற சிப் கண்டிப்பா வேண்டும் அதுக்காக அவ உயிரை எடுக்க கூட நான் தயங்க மாட்டேன். நீங்க அவன் கூடவே இருங்க அங்க நடக்குற ஒவ்வொரு விஷயமும் எனக்கு தெரியணும் அதே நேரம் நீங்க மாட்டாமல் இருங்க நாளைக்கு என்னோட பிளான் மட்டும் சக்ஸஸ் ஆகட்டும் அப்புறம் பாருங்க நம்ப லெவல் இப்படி போகுதுனு. சரி நீங்க கிளம்புங்க நான் நாளைக்கு கால் பண்றேன்” என்று அவன் கிளம்ப ஹரியும் அந்த இடத்தை விட்டு கிளம்பினான்.

விஷ்ணு “மச்சான் அப்படி மதி கிட்ட என்னடா இருக்கு எதுக்கு அவளை எல்லாரும் கொல்ல நினைக்கிறாங்க” என்றவனின் குரலில் அவ்வளவு கவலை.

அதை அப்புறம் பார்க்கலாம் இப்ப உன்னோட பிளான் என்ன அதை சொல்லு” என்றான் சித்து.

அட போடா இவன் எல்லாம் பெரிய வில்லன் மாதிரி நினைச்சேன் பட் ஒரு விஷயம் சொல்லவா அவன் ஒரு டம்மி பீஸ் டா. பட் எனக்கு புரியாத ஒரு விஷயம் புரியலை இவன் எல்லாம் எப்படி தான் இல்லிகள் வேலை எல்லாம் பன்றானோ” என 

டேய் ஏன்டா சம்மந்தம் இல்லாமல் பேசுற” என்று கேட்ட சித்துவிடம்,

நமக்கு கால் பண்ணால் எங்க ட்ரஸ் பண்ண போறோம்னு நினைச்சு அவன் உங்க மாமாக்கு கால் பண்ணிருக்கான் ஆனால் அந்த போனை ஸ்விட்ச் ஆப் பண்ணனும் என்று கூட தெரியலை டா இப்ப தான் கால் பண்ணி அவன் இருக்கிற லொகேஷன் நமக்கு சென்ட் பண்ணாங்க” என

லூசா டா நீ மதி இருக்கிற இடம் தான் தெரிந்து போச்சே அப்புறம் எதுக்கு நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டு இருக்க” என திட்ட

டேய் அவன் இருக்கிற லொகேஷன் தான் தெரிந்தது னு சொன்னேன் அவன் இப்ப ஒரு பப்ளிக் இடத்தில் தான் இருக்கான் சோ அவன் போகிற இடத்தை எல்லாம் டெபார்ட்மென் ஆளுங்க அவனை பாலோ பண்றங்க டா. அவன் மட்டும் மதி இருக்கிற இடத்துக்கு போன அடுத்த நிமிடமே நமக்கு மதி இருக்கிற இடம் தெரிந்து விடும் பட் என்னமோ தப்பா இருக்கிற மாதிரியே இருக்கு டா” என்று சொன்னவனை பார்த்து 

கவலை படாத மச்சி அவ எனக்கு கிடைப்ப என் உள்ளுணர்வு சொல்லுதுடா சீக்கிரமா கிடைச்சுடுவா” என்றவனுக்கு தெரியவில்லை அவள் கிடைக்கும் போது இவனால் பேச முடியாது என்று.

ஜெய் உண்மையாலுமே நல்லவனாக மாறி விட்டானா இல்லை இவர்களிடம் நடிக்கிறானா? வேற யாரோவா?

 

 

ஒரு வாரம் கழித்து,

சோகமே உருவான முகத்துடன் சித்து வீட்டில் இருக்கும் தனது அலுவல் அறைக்கு வர அங்கே இருந்த நிலையை பார்த்து சோகம் போய் கோபம் வந்தது. காரணம் கதிர் தாங்க.

கல்யாண கனவுகளுடன் தன் தேவதையின் கழுத்தில் தன் பெயர் கொண்ட மாங்கலியத்தை அணிய போகும் நாளை நினைத்து கனவில் இருந்தவனை பார்த்த சித்து கோபத்துடன் அவன் இருந்த நாற்காலியை எட்டி உதைக்க சற்று நிலை தடுமாறிய கதிர்,

ஐயோ நிலநடுக்கம் வருது காப்பாத்துங்க” என கத்தி கொண்டே திரும்ப அங்கே நிலநடுக்கம் அல்ல எரிமலை கணக்கில் இருக்கும் சித்துவை பார்த்து,

பாஸ் நீங்களா நான் கூட எதோ நிலநடுக்கம் வருது போலனு பயந்துட்டேன்” என

டேய் நான் இங்க எவ்வளவு பீல் பண்ணிட்டு இருக்கேன் உனக்கு என்னடா கனவு வேண்டிகிடக்கு” என பொரிய

இவர் தான் கல்யாணம் ஆகியும் சாமியாரா இருக்கிறானா என்னையும் அப்படியே இருக்க சொல்வர் போல என்ன ஒரு நல்ல எண்ணம்’ என மனதில் நினைக்க

தம்பி நீங்க மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா சொல்றிங்க” என்று சித்து அவனை மேலும் முறைக்க

ஹி ஹி ஹி சாரி பாஸ் நீங்க ஏன் பாஸ் சோகமா இருக்கீங்க அதான் நீ நினைச்ச மாதிரி மதியை கல்யாணம் பண்ணிடிங்களே அப்புறம் ஒய் சோகம்” என்று கேட்க

நல்ல பண்ணீங்க டா என் கிட்ட ஒண்ணுமே சொல்லமால் எல்லாத்தையும் இந்த அம்மாவே முடிவு பண்ணி கடைசியா மதி கிட்ட நான் என் லவ் சொல்ல கூட விடாமல் எல்லாரும் கார்னெர் பண்ணி தாலி கட்ட வெச்சிட்டீங்க. அதுக்கு அப்புறம் மதி கிட்ட பேச போனாலே எதோ கடத்தல் காரனை பார்க்கிற மாதிரியே பார்க்கிற.  என்னை வெச்சு நல்ல விளையாடுது டா இந்த விதி” என பாவமாக புலம்ப 

எப்படி கெத்தா இருந்த மனுஷனை இப்படி புலம்ப விட்டியே மதிமா யூ ஆர் கிரேட்’ என தனக்குள் சிரித்து கொள்ள 

விடுங்க பாஸ் இது எல்லாம் ஒரு பிரச்சனையா அவ்வளவு பெரிய ப்ரப்ளேம் அதையே ஈசியா முடிச்சிட்டீங்க இது எல்லாம் உங்களுக்கு ஒண்ணுமே இல்ல நீங்க மதி கிட்ட பேசினாலே சரியாகிடும். பாஸ் ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லணும் நீங்க எப்படி எடுத்துப்பீங்கனு தெரியல” என்று தயங்க 

தயங்காமல் சொல்லுடா நீ எனக்கு தம்பி மாதிரினு வார்த்தைக்கு சொல்லலை டா எனக்கு நீ உண்மையாலுமே தம்பி மாதிரி தான் சோ தயங்காமல் உன் மனசில் இருக்கிறதை சொல்லு” என்று கூற 

அது பாஸ் விஷ்ணு இருக்கான்ல அவன் அடிக்கடி அனுவை பார்க்க ஹாஸ்பிடல் போறான் போல. எதுக்குனு தெரியலை பட் அவன் வந்ததுக்கு அப்புறம் இருந்து அனு கிட்ட நிறைய மாற்றம் தெரியுதாம் கண்ணில் இருந்து கண்ணீர் வருதாம் சில சமயம் விரல் கூட அசைத்தாம். அவ சீக்கிரமா நார்மல் ஆகிடுவானு டாக்டர் சொல்ராங்க. இது வரைக்கும் தன்னிலை மறந்து சுற்றி என்ன நடந்ததுன்னு கூட தெரியாமல் இருந்தவ இப்ப எப்படி ஆகுதுனா  அதுக்கு காரணம் விஷ்ணு தான் அவனை கொஞ்சம் அனு கூட நிறைய பேச சொல்லுங்க பாஸ். அனுக்கு விஷ்ணு வாய்ஸ் கேக்கிறது” என்று அதற்கு மேல் சொல்ல முடியாமல் தயக்கமாக பார்க்க

நீ சொல்றது எனக்கு புரியுது கதிர். நீ கவலை படாமல் உன் கல்யாணத்தை பத்தி கனவு காண்கிற வேலையை பாரு. உன் கல்யாணத்துக்குள் அனு பழைய படி மாறிடுவா அதை விஷ்ணு பார்த்துப்பான். உன் கல்யாணத்தை ஒரு மாசம் தள்ளி வைத்ததில் என் மேல வருத்தம் இல்ல கோபம் எதாவது இருக்காடா” என

ஐயோ பாஸ் அதெல்லாம் இல்ல. லக்கி அப்பா இப்ப சிறையில் இருக்கும் போது கல்யாணம் பண்ணா லக்கிகும் ஆண்ட்டிக்கு கஷ்டமா தானே இருக்கும் என்ன தான் அப்பாவை வேண்டாம்னு சொன்னாலும் லக்கி கஷ்ட படுவா பாஸ் நீ பண்ணது எனக்கு புரியும் பாஸ் சோ என்னை பற்றி கவலை படாமல் மதியை பேச வைக்க என்ன பண்ணலாம்னு யோசிங்க” என்று அலுவல் வேலையை பார்க்க தொடங்கினான்.

அதே சமயம் மேலே சித்துவின் அறையில் மதி போனில் “மாலுமா என் மருமகள் என்ன பண்ற முழிச்சிட்டு இருக்காளா இல்ல தூங்கிட்டாளா” என்றால். ஆம் மாலதிக்கு இரண்டு தினம் முன் தான் பெண் குழந்தை பிறந்தது.

அடியே உனக்கே இது நியாயமா இருக்க நைட் முழுக்க நீ தானே கையில் வெச்சிட்டு இருந்த இப்ப என்னவோ ரொம்ப நாள் கழித்து பார்க்கிற மாதிரி பேசுற. சரி சித்து அண்ணா கிட்ட பேசனியா” என 

இல்ல டி எதோ ஒன்று தடுக்கிறது அவன் கிட்ட பேச தான் நானும் முயற்சி பண்றேன் ஆனால்” என மேலே பேசாமல் நிறுத்தி விட்டாள். பின் மாலதியிடம் “மாலு நான் அப்புறமா கால் பண்றேன் டி” என்று போனை கட் செய்து விட்டு அறையின் வாசலில் இருந்த சித்துவை முறைத்து பார்த்தாள். 

அவளின் பார்வையின் பொருளை உணர்ந்து “நான் நீ பேசறதை ஒட்டு கேட்கணும் எல்லாம் நிக்கலை உள்ள வரும் போது  நீ போன் பேசிட்டு இருந்த அதான் நான் அங்கவே நின்னுட்டேன். லட்.. மதி என் கிட்ட பேசு டி நான் பண்ணது எல்லாமே தப்பு தான் டி  அதுக்காக பேசாமல் இருக்காதா ப்ளீஸ் பேசுடி அட்லீஸ்ட் திட்டவாது செய் டி” என்று கவலையாக பேசிக் கொண்டே அவளின் கையை பிடிக்க

அப்பொழுது தான் அவளை கவனித்தான். கருப்பு நிறத்தில் ஸ்கிர்ட் மேலே அதே கருப்பு நிறம் கொண்ட முழு கை ட்ஷிர்ட் அது அவளின் வெள்ளை நிறத்தை மேலும் எடுத்து காட்ட நெற்றியில் தன் பெயர் கொண்ட குங்குமம் படர்ந்து இருக்க கண்கள் ரெண்டும் அக்கினி ஜுவாலையாக கொதித்து கொண்டு இருக்க கோபத்தால் மூக்கு கன்னம் எல்லாம் சிவந்து அவளை மேலும் அழகாக்க, கோபத்தின் காரணமாக உதடுகள் படபடக்க  கழுத்தில் அவன் அணிவித்த திருமங்கலியம் ‘இது என் இடம்’ என்று கர்வமாக அமர்ந்து இருக்க அதற்கு மேல் அவன் பார்வை செல்வதை கண்ட மதி கடும் கோபத்தில் செருமினாள்.

டேய் சித்து ஏன் டா ஏன்.. கண்ட்ரோல் கண்ட்ரோல்… ஐயோ முறைக்கிறாளே சரி சமாளிப்போம்’ என மனதில் நினைத்து “ஒன்னும் இல்ல லட்டு மா உன் கழுத்துல தூசு” என அசடு வழிந்து கொண்டே சொல்ல

அவளோ எதுமே சொல்லாமல் அவனை முறைத்து கொண்டே “அத்தைமா வீட்டில் கொசு தொல்லை அதிகமாகிடுச்சு பேட் அடுத்து தாங்க ஒரே போடு மொத்தமா முடிஞ்சிடும்” என 

அடி கொலைகாரி கட்டுன புருஷன் மேல என்ன ஒரு கொலைவெறி சித்து உயிர் முக்கியம் டா ஓடிடு’ என தலை தெறிக்க அந்த இடத்தை விட்டு வெளியேறியவன் நேராக தன் புதல்வனிடம் சென்றான் ஒரு வாரம் முன் நடந்த நிகழ்வை நினைத்து கொண்டே.  

விஷ்ணு “மச்சான் அவனை பற்றி மும்பைல விசாரிக்க சொல்லி இருக்கேன் டா” என்று சொல்லி கொண்டே பாதி கட்டி கொண்டு இருக்கும் ஒரு கட்டிடத்துக்கு அருகே செல்ல,

அவன் பெயராவது தெரிந்ததா டா” என்று சொல்லும் போதே சித்துக்கு புது நம்பரில் இருந்து கால் வர,

ஹலோ” என எதிரே “என்ன சித்தார்த் கிருஷ்ணா உன் பொண்டாட்டியை ரோடு ரோட தேடுற போல நல்ல இருக்கே எல்லாரையும் ஓட விடுற சித்தார்த் நாய் மாதிரி ரோட்டில்  அலையறது சரி உன்னை பார்த்தாலும் பாவமா தான் தெரியுது சோ உன் கிட்ட இருக்கிற சிப் அதை மட்டும் கொடுத்துரு” என்று நக்கலாக சொல்ல 

அதற்குள் விஷ்ணு தன் போனில் வந்த செய்தியை சித்து விடம் காட்ட இப்போ நக்கலாக சித்து சிரித்து கொண்டே “என்னை பற்றி எவ்வளவு தெரிந்த உனக்கு என் பொண்டாட்டி மேல கை வெச்ச என்ன நடக்கும்னு தெரியலையே மிஸ்டர். ருத்ரேஷ் சர்மா” என அவனோ தன் பெயர் அவன் தெரிந்து கொண்ட அதிர்ச்சியில் உறைந்தான்.

என்ன ருட்ரா ஷாக் ஆகிட போல சரி இன்னொரு ஷாக் நியூஸ் சொல்லவா உன்னோட கம்பெனி, கான்ஸ்டருக்ஷன், பேபி products தயாரிக்கிற company, export பிசினஸ் னு பொண்ணுகளை வெளி நாட்டுக்கு கடத்துறியா அந்த கம்பெனி னு எல்லாத்துக்கும் ஒரு எண்டு கார்டு போட்டாச்சு நம்பிக்கையான ஆளுனு எல்லாத்தையும் விட்டு வந்தியே அவனே இப்ப ஆஃப்ரோவ்ர் ஆகிட்டான். இது இல்லாமல் போதை மருத்து  கடத்த திட்டம் வேற… என்னடா பேச்சை காணலை ஓஒ.. இவனுக்கு எப்படி தெரியும்னு யோசிக்கிறிய யோசிக்காத உனக்கு தான் மூளையே இல்லையே” என்ன அவனை மேலும் சீண்ட

டேய் என்னடா பயமே இல்லாமல் இருக்கிற உன்னோட ஆசை பொண்டாட்டி என்னோட காஸ்ஸ்டடி ல இருக்க அப்ப கூட உன் பேச்சில் பயம் இல்லையே சரி உனக்கு பயம் காட்றேன் உன்னோட பொண்டாட்டியோட கையை உனக்கு பார்சல் பண்றேன் அப்ப தெரியும் இந்த ருட்ரா யாருனு” என்று கோபமாக கத்த

அது தான் டா எனக்கும் வேண்டும்’ என மனதில் நினைத்து கொண்டே “உன்னால முடிஞ்சிதை பார்த்துக்கோ டா என் டொமட்டோ” என்று அவன் போனை கட் செய்ய

மச்சான் மதியை கடத்தும் போது உன் மூளையையும் சேர்த்து கடத்திட்டங்களை” என்றவனை புரியாமல் பார்க்க “பின்ன என்னடா அவனே வெறி பிடிச்ச பைத்தியம் மாதிரி பேசிட்டு இருக்கான் இதில் நீ வேற  உன்னால முடிஞ்சதை பாரு முடியாததை பாருன்னு அவனை இன்னும் ஏத்தி விடுற” என்றவனை பார்த்து தலையில் அடித்து கொண்டே,

போடாங்…… அவன் எவ்வளவு கோபத்தில் இருந்தால் அவனோட கம்பெனி எல்லாம் மூடிட்டேன்னு சொன்ன அப்புறம் கூட அதை காதில் வாங்காமல் சிப் மட்டும் தான் வேண்டும் போல பேசிட்டு மதியை கொல்ல நினைப்பான். நீ தானே சொன்ன அவனோட லொகேஷனை ட்ரேஸ் பண்ணலாம்னு சோ இப்ப நம்ப அவனை பாலோ பண்ண போறோம்” என   

அவனது லொகேஷனை ட்ரெஸ் பண்ணத்தில் அவர்கள் இருக்கும் திசையை நோக்கி தான் அவன் வருவது தெரிய “அவன் இந்த பக்கமா தான் வாரான்” என்று சொல்லும் போதே அவனின் கார் அவர்கள் இருக்கும் பகுதியை நோக்கி வர,

விஷ்ணு “மச்சி அவன் தாண்டா இது உன்னோட கான்ஸ்டருக்ஷன் ஏரியா தானே அவன் எதுக்கு இங்க வாரான் ஒரு வேல மச்சி இங்க தான் மதி இருக்காள் போல டா”

சித்து “நான் தான் மதியமே சொன்னே டா எனக்கு மதி இங்க தான் பக்கத்தில் இருக்கிற மாதிரியே இருக்குனு ஆனால் நீ தான் நான் எதோ உளறுறேன்னு சொன்ன சரி வா நம்ப அந்த மூட்டை பின்னாடி மறைஞ்சிக்கலாம்” என இருவரும் மறைய காரில் இருந்து வேகமாக  இறங்கிய ருட்ரா அங்கிருந்த பல பாதி கட்டிய நிலையில் இருந்த கட்டடத்தில் ஒரு கட்டடுத்துள் சென்றான். இருவரும் அவன் பின்னே மறைந்து மறைந்து சென்றார்கள்.

எதோ விழுந்த சத்தத்தில் நினைவில் இருந்து வெளியே வந்து பார்க்க அவனின் செல்ல மகன் விளையாட்டும் ஆர்வத்தில் பக்கத்தில் இருந்த தம்பரலை தள்ளி விட்டு இருந்தான்.

அடடே என் செல்லக்குட்டி விளையாடுறிங்களா….. வாங்க வாங்க நம்ப தோட்டத்துக்கு போய் விளையாடலாம்” என்று விழுந்ததை சுத்தம் செய்ய சொல்லி விட்டு வெளியே வந்தான்.

அப்பாவும் மகனும் தங்களை மறந்து விளையாடி கொண்டு இருந்தார்கள். அபி வேகமாக ஓட அவனை பிடிக்க சித்துவும் வேகமாக ஓடினான். வேகமாக வந்த சித்து எதிரே வந்தவரின் மேல் மோதி இருவரும் கீழே விழ சித்து வின் இதழ் எதிரே இருந்தவரின் கன்னத்தில் பதிந்தது.

அதிர்ச்சியாக அவரை பார்த்தான். அது வேற யாரும் இல்லங்க நம்ப ஜெய் பிரகாஷ் தான்.

ஜெய் “டேய் உனக்கு வேற வேலையே இல்லையா மதி கூட பண்ண வேண்டிய ரொமான்ஸ் எல்லாம் என் கூட பண்ணிட்டு இருக்க ஒரு வேலை அவனா நீ” என்று இழுக்க 

அட நாயே வாயை கழுவு டா உன்னை யாருடா குறுக்க வர சொன்னது உனக்கு ஒரு வாரத்தில் கல்யாணத்தை வைத்து கொண்டு ஏன் டா என் உசுர வாங்கிற” என 

உன்னை யார் பார்க்க வந்த நான் என்னோட செல்லக்குட்டி அபியை பார்க்க வந்தேன்”என்று அது வரை இருவரையும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த அபியை தூக்கி கொஞ்ச துவங்கினான்.

சித்து “அபி… மாமா அப்புறமா கிளம்பிடுவாங்க அதுக்கு அப்புறம் அப்பா கூட தான் இருக்கனும் புரிந்ததா இரண்டு பேரும் ரொம்ப ஓவர தான் போறீங்க” என்று சிறுபிள்ளை போல் சினுங்க,

பாருடா உன் அப்பாக்கு பொறாமை.. இரு இரு இப்ப என்ன சொன்ன நான் இவனுக்கு மாமாவா டேய் ஏன்டா அப்ப மதி எனக்கு தங்கச்சியா ஆகிடுவா டா ஒரு காலத்தில் நான் அவ்வளவு லவ் பண்ணலனாலும் சைட் அடிச்சு கல்யாணம் பண்ணலாம் நினைச்ச பொண்ணு எனக்கு தங்கச்சியா டா” என

அது தானே மச்சான் எனக்கு வேண்டும் நல்ல நியாபகம் வெச்சிக்கோ மதி உன் தங்கச்சி” என மீண்டும் அழுத்தி சொல்ல   

கடவுளே இந்த கஷ்டத்தை எல்லாம் என் சின்ன மனசு தாங்குமா”  என்னும் போதே அவனுக்கு அவனின் வருங்கால மனைவி கிருத்திகா கால் பண்ண 

அதை பார்த்த சித்து “இருடா உன்னை என் தங்கச்சி கிட்ட போட்டு தாரேன்” என்று போனை அவனிடம் இருந்து தட்டி பறிக்க,

ஜெய் “டேய் வேண்டாம் டா நான் சொல்றதை கேளு” எண்றதுக்குள் சித்து பேச ஆரம்பித்து இருந்தான்.

சித்து “ஹலோ தங்கச்சி எப்படி இருக்கீங்க” என 

ஹாய் அண்ணா அவங்க அங்க தான் இருக்காங்களா ஒன்னும் இல்லனா அவங்களை அப்பறமா பேச சொல்லுங்க ரெசிப்டின் டிரஸ் வந்து இருக்கு பிட்டிங் பார்க்கணும்” என 

சரிம்மா இப்பவே வர சொல்லவா” என்று சொன்னவனிடம் “வேண்டாம் அண்ணா ஒரு அவரசமும் இல்லை பொறுமையாகவே வர சொல்லுங்க” என 

சித்து “கீர்த்திகா உண்மையா நான் உனக்கு தான் மா தாங்க்ஸ் சொல்லணும் என்னையும் மதியையும் அழிக்க நினைச்சவனை முழுசா நல்லவனா மாத்திட அவங்க பாராமெடிகள் இண்டஸ்டிரெஸ்ல நடந்த தப்பை சரி செய்யவும் கதிருக்கு உதவிய இருந்து இருக்க அவன் இவ்வளவு நல்லவனா மாற காரணம் நீ மட்டும் தான் மா உனக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது” என்று உணர்ந்து நன்றியை சொல்ல 

ஐயோ அண்ணா தங்கச்சினு சொல்லிட்டு தேங்க்ஸ் சொல்றிங்க. போங்க அண்ணா உண்மையா சொல்லணும்னா நான் எதுமே பண்ணலை நான் இது தப்புனு சொன்னேன் அவங்க புரிஞ்சிக்கிட்டாங்க அதுக்கு எதுக்குனா நன்றி எல்லாம் அப்புறம் ஜெய் சொன்னான் மதி அண்ணி உங்க கூட பேசவே இல்லையாமே அப்படி என்ன அண்ணா பண்ணீங்க” என்று சிரித்து கொண்டே கேட்க,

என் பொழப்பு உனக்கு சிரிப்பா இருக்கா பரவலை அப்புறமா உங்களை எல்லாம் பார்த்துகிறேன் இரு இவன் பக்கத்தில் அபி கூட தான் கொஞ்சிட்டு இருக்கான் அவன் கிட்டவே பேசு” என்று ஜெய் யிடம் போனை தந்து விட்டு அபியுடன் பக்கத்தில் இருக்கும் சேரில் அமர்ந்தான்.

கிரு பேபி ஈவ்னிங் வீட்டுக்கு வரேன் அப்பவே பிட்டிங் பார்த்துக்கலாம் தென் நாளைக்கு எந்த கமிட்மென்ட்டும் வெச்சிக்கதா என் பிரெண்ட்ஸ் உன் பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் இன்விடடின் வைச்சிடலாம் சரி டா நான் அப்புறமா கால் பண்றேன் பை” என சிறுது நேரத்தில் போனை வைத்து விட்டு சித்து விடம் திருப்பி, 

சித்து நாளைக்கு நானும் கிருவும் இன்விடே பண்ண வரோம் டா.  பாரேன் வந்த விஷயத்தை விட்டு வேறு எதோ பேசிட்டு இருக்கேன் ஒரு குட் நியூஸ் டா அந்த ருட்ரா சொத்தில் சரி பாதி இலக்கியா பெருக்கும் மீதி பாதி ஒரு டிரஸ்ட்கும் மாறிடுச்சு டா. உங்க மாமா ஓட முதல் மனைவி இப்ப உயிரோட இல்லை கூடவே ருத்திராவும் உயிரோட இல்லை சோ மொத்த சொத்தும் டிரஸ்ட்க்கு தான் போகணும் போல எப்படியோ நம்ப லாயர் சின்ன பாயிண்ட் எல்லாம் தேடி பிடிச்சு பாதி லக்கி பேருக்கு வாங்கிட்டார் டா”

சித்து “தேங்க்ஸ் டா நீ இல்லனா என்னால தனியா ஒண்ணுமே பண்ணி இருக்க முடியாது” என 

விடு டா தேங்க்ஸ் எல்லாம் சொல்லி என்னை வெளியாள் ஆகாத. என்னோட அண்ணா பண்ண தப்பை தான் சரி செய்ய முடியலை எதையாவது செய்ய முடிந்ததே” என்று இருவரும் அன்று நடந்ததை நினைத்து பார்த்தனர்.

விஷ்ணு “மச்சான் இவன் நம்ப இடத்திலே மதிய கடத்தி வச்சி இருப்பான்னு நான் நினைக்கவே இல்லைடா. என்னடா பண்ணலாம் இவனை” என கோபமாக கேட்க 

இருடா முதலில் மதியை இவன் கிட்ட இருந்து காப்பாத்தலாம் அப்புறமா இவனை என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்” என இருவரும் சத்தம் இன்றி அவனை பின் தொடர,  அவனோ கீழே உள்ள சுரங்க அறைக்கு சென்று ஒரு கதவை திறந்தான்.

சித்துவும் விஷ்ணுவும் அர்த்த பார்வை பார்த்து கொண்டு அங்கே கதவின் ஓரத்தில் நின்றனர்.

வெளிச்சம் வந்ததை பார்த்த மதி “யோவ் எவன் யா இது தூங்கும் போது லைட் அடிக்கிறது” என்று கத்த

ருட்ரா “மேடம் நீங்க ஒன்னும் ஹோட்டல் ரூமில் இல்லை ஆய தூங்க நான் உங்கள கடத்தி வெச்சிருக்கன் நியாபகம் இருக்கட்டும் அது சரி சித்தார்த் மனைவி தானே அப்படி தானே இருப்ப” என இதில் கோபம் கொண்ட மதி “டேய் என்னடா சும்மா சும்மா சித்தார்த் மனைவி சித்தார்த் மனைவின்னு சொல்லிட்டே இருக்க யாரு டா உங்கிட்ட இப்படி சொன்னாங்க” என 

யாரு சொல்லணும் அதான் உன் புருஷனே சொன்னானே உன்னை நான் சென்னையில் எதிர் பார்க்கவே இல்லை. அதுவும் தனியா இருந்திய அதான் உன்னை கொல்ல ஆள் அனுப்புனேன் அவங்களும் உன்னை கரெக்டா தான் குத்திட்டாங்க பட் அந்த சித்தார்த் உன்னை காப்பாதனது மட்டும் இல்லாமல் அவங்களையும் கரெக்டா ட்ரெஸ் பண்ணிட்டான்.

அவங்க எதாவது உளரிட போறாங்கன்னு நான் போலீஸ் ஸ்டேஷன் pone அப்ப தான் தெரிந்தது நீ அவனோட மனைவின்னு இதை அவனே தான் சொன்னான் பட் இருந்தாலும் நான் கன்போர்ம் பண்ண உன்னோட மேரேஜ் சர்டிபிகேட் உன்னோட பையனோட பெர்த் சர்டிபிகேட் எல்லாம் எடுத்து பார்த்தேன் அவன் சொன்ன மாதிரி நீ அவனோட மனைவி இளமதி சித்தார்த் அப்புறம் உன் மகன் அபிநந்தன் சித்தார்த்னு இருந்தது” என

மதி மனதில் ;இதை எல்லாம் எப்ப அந்த பிராடு மாத்தனான்’ என மனதில் அவனை அர்ச்சிக்க 

விஷ்ணுவோ “மச்சான் இது இப்போ டா” என சித்து “அது அவ இங்க வந்த அடுத்த மாசமே மாத்திட்டேன் டா கதிருக்கு மட்டும் தான் தெரியும்” என இளித்து கொண்டே சொல்ல,

விஷ்ணு “இதுக்கும் சேர்த்து உன்னை கவனிச்சிக்குறேன்” என முறைத்து விட்டு உள்ளே பேசுவதை கவனிக்க தொடங்கினான்.

ருட்ரா “சித்தார்த்… அவனை பத்தி எனக்கு  நல்லா தெரியும் ஆனால்  இப்படி யாருக்கும் தெரியாமல் உன்னை கல்யாணம் பண்ணது எதுமே எனக்கு தெரியலை அப்பறம் உன்னை ஹாஸ்பிடலில் சேர்த்து பொழைக்க வெச்சிட்டான்.அதான் ஒரு நர்ஸ் கிட்ட சொல்லி உன்னை கொல்ல ஏற்பாடு பண்ணா அப்பவும் கரெக்டா வந்து உன்னை காப்பாத்திட்டான் என் மச்சான்” என 

சித்து ‘அன்றைக்கு எனக்கு தோணுனது கரெக்ட் தான்’ என மனதில் நினைத்து கொண்டான்.

ருட்ரா “இந்த முறை ரொம்ப ஈசியா நான் உன்னை கடத்திட்டேன். அபி தான் உன்னோட பலவீனம்னு என் அப்பா சொன்றாரு என்ன பார்க்கிற என் அப்பா யாருன்னா ம்ம்ம்… இந்த கிரேட் ருட்ரா வோட அப்பா தான் ஹரி ஹரி சர்மா அண்ட் நான் ருத்ரேஷ் சர்மா” என மற்ற மூவரும் அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.

மதி “டேய் என்னடா சொல்ற அப்ப கோமதி ஆண்ட்டி உன்னோட அம்மாவா லக்கி உன்னோட தங்கச்சியா” என

என்னோட அம்மா இஷானி சர்மா, சர்மா குரூப்ஸ் ஆப் இண்டஸ்ட்ரீஸ் ஓட எக்ஸ் சேர்மன். இரண்டு மாசம் முன்னாடி தான் இறந்துட்டாங்க.அப்புறம் நீ சொன்னியே கோமதி என்னோட அம்மா இல்ல என்னோட அப்பாவோட இரண்டாவது மனைவி அப்புறம் எதோ பொண்ணு பெயர் சொன்னியே அவ அவரோட பொண்ணு அவ்வளவு தான்” என்றான்.

சரி இதை எல்லாம் விடு உன் புருஷன் கிட்ட அந்த சிப் இருக்கு தானே அதை எங்க வெச்சி இருக்கான்” என 

மதி அவனை பார்த்து “எந்த சிப்” என்றாள். “உனக்கு ரொம்ப தான் கொழுப்பு அதை குறைக்கலாமா” என தன்னிடம் இருந்த கத்தியை எடுக்க

எதையோ உணர்ந்த மதி “ஹலோ மிஸ்டர் எதுக்கு இந்த வெட்டி பேச்சு உன்னை யாராலும் கண்டு பிடிக்க முடியாதுனு சொன்ன பட் கண்டு பிடிச்சிட்டாங்க பாரு உன்னோட உயிர் மேல ஆசை இருந்தா போய்டு” என

விஷ்ணு சித்து விடம் “நம்ப வந்தது அவளுக்கு எப்படி டா தெரிந்தது” என “டேய் அவ எதோ போட்டு வாங்குற சும்மா இரு உன்னோட கன் லோட் பண்ணிக்கோ அவன் பேசியதை எல்லாம் ரெகார்ட் பண்ணிட்டேன் அவன் நமக்கு வேண்டாம்” என அதே முடிவில் இருந்த விஷ்ணு வும் சரி என்றான்.

ருத்ரா கத்தியுடன் மதியை நெருங்க விஷ்ணு சரியாக அவன் தலையை குறிப்பார்த்து சுட்டான்.

அணைத்து பிரச்சனையும் முடிந்தது என்று நினைத்த சித்தார்த் க்கு தெரியவில்லை இதை விட பெரிய பிரச்சனை இனி தான் வர போகிறது என்று. அது என்ன பிரச்சனை?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!