சில்லென்ற தீப்பொறி – 20

எல்லிப் பொழுது வழங்காமை முன்இனிதே

சொல்லுங்கால் சோர்வின்றச் சொல்லுதல் மாண்பினிதே

புள்ளிக் கொளினும் பொருளல்லார் தங்கேண்மை

கொள்வார் விடுதல் இனிது.

விளக்கம்

இரவில் செல்லாமல் இருப்பது இனிது. சொல்லும் இடத்து மறதியின்று சொல்லுதல் இனிதாகும். தானாக வழிய வந்து நட்புக் கொள்ளும் கயவர்களின் நட்பினைக் கைவிடுதல் இனிதாகும்.

சில்லென்ற தீப்பொறி – 20

லக்கீஸ்வரிக்கு வளைகாப்பு முடிந்த ஒரு வாரத்தில், மருத்துவமனையில் இருந்து கவனித்துக் கொள்ளலாம் என அங்கே அனுமதித்து விட்டார் ரெங்கேஸ்வரன்.

பிரசவத்திற்கு நாட்கள் இருந்தாலும் மகளைப் பார்க்கும் போதெல்லாம், ‘சிக்கல் இல்லாமல் மகள், பிள்ளைப் பெற்று பிழைக்க வேண்டுமே? அதற்காக நேர்த்தி கடன் வைக்கும் முறையெல்லாம் தெரியவில்லையே? அவளைச் சரியாக கவனிக்கத் தவறி விடுவேனோ?’ என்றெல்லாம் மனதில் தீயாய் மூண்ட பய உணர்வுகளே, அவரது உள்ளத்தை கரைத்து முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளத் தூண்டியது.

வயிற்றுச் சுமையுடன் மகள் நடக்கவும் மூச்சு விடவும் சிரமப்படுவதைப் பார்க்கும் போதெல்லாம் உள்ளுக்குள் அழுது விடுவார் மனிதர்.

உரிமையுடன் அதட்டி, ‘பிள்ளைப் பேறு என்பது இப்படித்தான்.’ எனச் சொல்லிப் புரியவைக்க பெண் துணையில்லாத தனிமை வாழ்வு, அவரை எப்படியெல்லாமோ பல கோணங்களில் யோசிக்க வைத்தது.

அதோடு லக்கியும் எதிலும் பற்றற்று நின்று, வளைகாப்பும் வேண்டாமென பிடிவாதம் பிடித்ததில் மனிதர் அரண்டு போய் விட்டார்.

“என்னால தொடர்ந்து உக்கார முடியாதுப்பா… உங்க மாப்பிள்ளை இல்லாம எனக்கு வளையல் போட்டுக்கவே பிடிக்கல. இந்த ஃபங்ஷனே வேண்டாம்.” அவள் விடாமல் அடம்பிடித்ததில் நொந்து நூலாகிப் போனார் தந்தை.

‘இதெல்லாம் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வரும் நிகழ்வு. எந்தச் சூழ்நிலையிலும் இதை தவிர்க்கக் கூடாது.’ என எத்தனை முறை எடுத்துக் கூறியும் தன் நிலையிலே மகள் நிற்க, அதிரடியாகவே வளைகாப்பினை நடத்தி முடித்தார் ரெங்கன்.

மகளின் மன ஆறுதலுக்காக நடேசன் மற்றும் நெருங்கிய சொந்தங்களை மட்டும் அருகில் வைத்துக் கொண்டு விழாவினை நடத்தினார். கோமதியும் ஹரிணியும் பெரும்பாலான நாட்களில் லக்கியை பார்த்து நலம் விசாரித்து விட்டு செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தனர்.

மனைவியின் மனச் சுணக்கத்தை உணர்ந்தே அவர்களை அடிக்கடி சென்று பார்க்கும்படிச் சொல்லியிருந்தான் அமிர். நடேசன் மூலமாக ரெங்கேஸ்வரனிடம் விழாவினை எளிமையாக நடத்த ஆலோசனை கொடுத்ததும் அவனே!

“இந்த அக்கறைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. இவர் பிள்ளைக்கு எல்லாம் சரியா நடக்கணும். என் ஆசையை மட்டும் காதுல கூட வாங்கிக்க மாட்டாரு!” அப்பொழுதும் நொடித்துப் பேசியே கணவனிடம் வம்பினை வளர்த்து, நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தாள் லக்கி.

“இந்த மாதிரி நேரத்துல மனசை சந்தோசமா வச்சுக்கணும்டா பாப்பா! நீ இப்படி இருந்தா குழந்தைகளுக்கும் அழுத்திப் போகும்.” தன்னால் இயன்றவரை அறிவுறுத்தி மகளை திசை திருப்ப, மற்றவர்களும் அதையே பின்மொழிய அனைவரிடமும் முகம் திருப்பினாள். 

ஏனோ அவளுக்கு, கணவனைக் கண்ணாரக் காண வேண்டும். தன் அகமும் புறமும் மறந்து அவனைத் தழுவி, அவன் அரவணைப்பில் இருக்க வேண்டும் என்கிற அடங்காத ஆசை மனதைச் சுழற்றி அடித்து இம்சித்தது. 

கர்ப்பகால ஹார்மோன்கள் இத்தகைய உணர்வுகளைத் தூண்டும் எனப் படித்ததை, அனுபவப் பூர்வமாக உணரத் தொடங்கினாள் லக்கி. அந்த உணர்வு அவளை எந்நேரமும் அலைக்கழிக்க வைத்தது.

தனிமையில் இருந்தால் தானே இந்த அவஸ்தை என்று யாரையேனும் தன்னுடன் இருக்கும்படி அருகில் வைத்துக் கொள்ள, சற்றே மாற்றமும் கண்டாள். அவையெல்லாம் யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றே சொற்ப நிம்மதியை அளித்தது. 

‘நம் ஆசைதான் நிறைவேறாது; பெரியவர்களின் பேச்சினையாவது கேட்போம்.’ என்ற முடிவில் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு மருத்துவமனையில் அவளுக்கான தனியறையில் வந்து தங்கிக் கொண்டாள் லக்கி.

 பகல் பொழுதுகளில் கோமதியும் ஹரிணியும் உடனிருக்க, இரவில் கமலம்மா அவளுக்கு துணையாக இருந்தார். மருத்துவமனை வளாகத்தின் நீண்ட நடைபாதையும், அதனைத் தாண்டிய தோட்டத்திலுமான நடைபயிற்சியிலும் அவளின் பொழுதுகள் கரைந்தது.

இங்கு வந்து சேர்ந்து முழுதாக பதினைந்து நாட்கள் முடிந்து போயிருந்தது. திடீரென்று ஒரு குழந்தையின் தலை கீழே இறங்கி இருப்பதாகக் கூறி, அடுத்த ஒரு வாரத்தில் குழந்தைகளை வெளியே எடுத்து விடலாம் என மருத்துவர் அறிவுறுத்தியதை தொடர்ந்து, லக்கியின் மனம் திகில் அடைந்து போனது.

தனது அஜாக்கிரதையால் குழந்தைக்கு எதுவும் இன்னலோ என்ற பரிதவிப்பும் பயமும் ஒருசேர அவளைத் தாக்கியது. அத்தோடு தன்னால் ஒரு பின்னடைவு என கணவனுக்கு தெரிய வந்தால், அவன் ஆடும் ருத்ர தாண்டவத்திற்கு யாரும் அணைகட்டிட முடியாதே என்கிற அச்சமும் சேர்ந்து கொள்ள முழுதாய் நடுங்கிப் போனாள் லக்கி.

“எனி திங்க் சீரியஸ் டாக்டர்? பேபிக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே?” நடுங்கிய மனதுடன் கேட்டவளை ஆறுதலுடன் பார்த்தார் பெண் மருத்துவர்.

“பயப்படுறதுக்கு ஒன்னுமே இல்ல லக்கி! எட்டரை மாசத்துக்கு பிறகு பேபி தலை இறங்குறது சாதரணமான விசயம். அதோட உனக்கு சி-செக்ஷன்ல தான் டெலிவரி பார்க்கறதுன்னு ஏற்கனவே முடிவு பண்ணியாச்சு. குழந்தைகளை இவ்வளவு நாள் உள்ளேயே வச்சுட்டு உன்னாலயும் தாக்கு பிடிக்க முடியாது மா!” மருத்துவர் அறிவுறுத்த,

“ஐ அம் ஆல்ரைட் டாக்டர்! எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை.” அவசரகோலத்தில் பதில் அளித்தாள் லக்கி.

அவளின் மனம் முழுவதும் குழந்தைகளின் நலன் மட்டுமே வியாப்பித்திருக்க, அவளால் வேறு எதை பற்றியும் தெளிவாக விளங்கிக் கொள்ளக் கூட முடியவில்லை.

“பதட்டப்படாதே லக்கி! பேபீஸ் ஹெல்த் எல்லாம் நார்மலா இருக்கு. அவங்களோட வெயிட் அதிகமாகும் போது, உனக்குதான் நடக்க, சாப்பிட, பிரீத் பண்ணன்னு சுத்தமா எதுவுமே முடியாம போயிடும். அதுக்காக தான் இந்த மாதிரி டெலிவரி எல்லாம் முன்கூட்டியே நாள் குறிச்சு குழந்தைகளை வெளியே எடுத்திடுவோம்.

மதர் கேரிங் ரொம்ப ரொம்ப முக்கியம். இப்ப அதுக்கான நாளும் நெருங்கிடுச்சு. உங்க சைட்ல இருந்து இன்னும் ஒரு வாரத்துக்குள்ள நாள், நேரம் குறிச்சி குடுத்தாங்கன்னா, ஆப்ரேட் பண்ணிடலாம்.” நிதானமாகக் கூறி விளங்க வைத்தார் மருத்துவர்.

பெரியவர்கள் தங்களுக்குள் உண்டான யோசனைக்கு ஏற்றவாறு நாள் மற்றும் நேரத்தை குறித்துக் கொண்டு வர, உரிமையுடன் செய்ய வேண்டியவனோ அலைபேசியில் கூட எட்டிப் பார்க்கவில்லை.

ஒரு வாரத்திற்கு முன் பேசிவிட்டு, ‘அதிக வேலை மற்றும் பணி நிமித்தமாக அங்குள்ள வெளியூருக்கு செல்கிறேன்.’ தகவலாகக் கூறி முடித்தவன், அதன் பிறகு அழைக்கவில்லை. அவ்வப்போது வாட்ஸ்-அப்பில் டெக்ஸ்ட் மெசேஜில் வந்து நலம் விசாரித்து விட்டு நிலவரத்தை அறிந்து கொண்டு செல்கிறான்.

ஒருபுறம் பிரசவம் நன்றாக நடக்க வேண்டும், இன்னொரு புறம் வெளியூருக்கு சென்றவன் வந்தானா இல்லையா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். லக்கியின் மனம் இந்த இரண்டு விசயங்களையும் எண்ணியே முழுதாகக் குமைந்து போனது.

மருத்துவர் குறிப்பிட்டுச் சென்ற வாரத்தின் இறுதிநாளின் அதிகாலையில் வழக்கம் போல் மருத்துவமனை தோட்டத்தில் நடைபயின்றவாறு நுழைவு வாயிலில் பார்வையை பதித்து இருந்தாள் லக்கி.

தினமும் காலை ஏழு மணிக்கெல்லாம் ரெங்கேஸ்வரன் மகளைப் பார்க்க வந்து விடுவார். காலை உணவை அவளுடன் சேர்ந்து உண்டுவிட்டே அலுவலகம் புறப்படுவார்.

‘நான் எப்பொழுதும் போல் இருக்கிறேன். வீணான அலைச்சல் வேண்டாம்.’ எனச் சொன்னாலும் அவர் கேட்டுக் கொள்வதில்லை. ஓயாமல் கூறி இவளின் வாய் வலித்துப் போனதுதான் மிச்சம்.

“என் பேச்ச காதுல வாங்காம, அவங்க இஷ்டத்துக்கு என்னை ஆட்டி வைக்கிறதுல மாப்பிள்ளையும் மாமனாரும் ஒன்னு போலவே இருக்காங்க… அப்பா போலவே புருசனும் வேணும்னு மறந்தும் ஆசைபட்டுடக் கூடாது.’ வெளிப்படையாகவே முணுமுணுத்தவள், வீம்பில் தானும் அவர்களுக்கு சளைத்தவள் அல்ல என்பதை எப்படியோ மறந்து போயிருந்தாள்.

அன்றாட வேலையாக தந்தை வந்த பிறகு தனது நடைபயிற்சியை முடித்துக் கொண்டு அவருடன் அறைக்கு செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டிருந்தாள் லக்கி.

அன்றும் அவருக்காகவே நடைப்பயிற்சி செய்தபடி காத்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது தந்தைக்குப் பதிலாக வந்து இறங்கிய நபரைக் கண்டு அவளின் கண்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.

‘பொய்யோ பிரமையோ’ என இமை தட்டிப் பார்த்து, கண் சிமிட்டி விழித்து, பலமுறை கண்களை மூடிமூடித் திறந்தாலும் நின்றவனின் முகம் கண்களை விட்டு மறையவே இல்லை.

“ரொம்ப ரொம்ப மோசம் டி நீ! சர்பிரைஸா வந்து நின்னா… என்னை பார்த்ததும் ஹக் பண்ணுவ, அத்தானுக்கு ஆசையா முத்தம் குடுப்பேன்னு எதிர்பார்த்து வந்தவனை, இப்படி ஏமாத்திட்டியே மின்னி?” சோகப்பாட்டு பாடி பெருமூச்சு விட்டவனை அப்போதும் நம்பமுடியாமல் பார்த்தாள் லக்கி.

“என்னடி ஃப்ரிஸ் ஆகி நிக்கிற? நான், உனக்கு சர்பிரைஸ் குடுக்க நினைச்சா… நீ, எனக்கு ஷாக் டிரீட்மெண்ட் குடுக்குற?” கேலியுடன் மனைவியை உலுக்கிக் கேட்டவனை, அப்போதும் அமைதியாகவே பார்த்த லக்கி அசையாமல் நிற்க, சற்றே அரண்டு போனான் அமிர்தசாகர்.

“லக்கி… மின்னி! என்னடா ஆச்சு?” பதைபதைப்புடன் கேட்டு, அவளைத் தன் தோள்வளைவில் அணைத்துக் கொண்டு கன்னத்தை தட்டிக் கேட்ட, பலமான விசும்பலுடன் கணவனது மார்பில் ஒட்டிக் கொண்டாள் லக்கி.

“ஹேய்… என்னடா இது? நீ சொன்னபடி வந்து நிக்கிறேன். இதுக்கும் அழுதா எப்படி டி?” கிண்டலுடன் கேட்டாலும் அவனது குரலும் கனிந்து குழைந்தே வெளிவந்தது.

‘அதிகமாய் ஏங்க வைத்து விட்டேனோ? என்னை மட்டுமே நினைத்து அவளை ஒவ்வொரு நிமிடமும் தவிக்க வைத்திருக்கிறேன்.’ என தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டவன் மனைவியை ஆற்றுப்படுத்துவது எவ்வாறு என்பதை அறியாமல் முழித்தான்.

‘இதற்கு முன்பு முயன்றிருந்தால் தானே, இப்போது சட்டென்று நினைவில் வருவதற்கு? அகம்பாவியாக நின்று, இவளைத் துரும்பாக நினைத்து, என் பின்னால் அலைய வைத்திருக்கிறேனே நான்!’ நிஜம் நெஞ்சைச் சுட, உண்மைக்குமே நொந்து போனவனாய் தலையில் அடித்துக் கொண்டான் அமிர்.

“சாரி டா… நிஜமாவே சாரி! நான் வரப்போறதை உன்கிட்ட முன்கூட்டியே இன்ஃபார்ம் பண்ணி இருக்கணும். உனக்கு ஸ்வீட் சர்பிரைஸ் கொடுக்க நினைச்சு, மத்தவங்களையும் சொல்ல வேணாம்னு நாந்தான் தடுத்துட்டேன்.

இப்ப இருக்கிற உன்னோட நெலமைய நான் யோசிக்கலடா! ப்ளீஸ்… பீ நார்மல் மின்னி… காம் டவுன் லக்கிமா!” விதவிதமாய் கொஞ்சிக் கெஞ்சியே இவன் கரைந்து கொண்டிருக்க, அங்கு நடைபயின்று கொண்டிருதவர்களுக்கு இருவரும் காட்சிப் பொருளாகிப் போயினர்.

“அப்படியே மெதுவா ரூமுக்கு கூட்டிட்டு போங்க தம்பி!” பெரியவர் ஒருவர் அறிவுறுத்தியதுமே, சுயம் உணர்ந்து விலகினாள் லக்கி.

கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, அமைதியுடன் கணவனின் கைபிடித்து தனது அறைக்குள் வர, கமலாம்மா வீட்டிற்குச் செல்வதெற்கென தயார் நிலையில் இருந்தார்.

“கீழே டிரைவர் வெயிட் பண்றானாம் பாப்பா… இப்பதான் ஃபோன் வந்தது. நான் வீட்டுக்கு கிளம்புறேன். நீ தம்பிகூட இருடா!” என்றவருக்கும் அவளின் மனநிலை தெளிவாகப் புரிந்தது.

“புள்ளதாச்சிப் பொண்ணு, ரொம்ப ஏங்கிப் போச்சு தம்பி… கோபத்துல அவ எதுவும் சொன்னாலும் மனசுல வைச்சுக்காதீங்க!” அமிரிடம் நிலைமையை விளக்கி விட்டு அவர் வெளியேற, கதவைத் தாழிட்டு வந்தான்.

தனிமை கிடைத்ததும் மனைவி ஆசையுடன் தன்னருகில் வருவாள் என அமிர் எதிர்பார்த்திருக்க, வில்லி அவதாரத்தில் அவன் மீது தாக்குதல் நடத்தவே வந்தாள் லக்கீஸ்வரி.

“எப்போதான் என்னை மனுசியா பார்க்கப் போறீங்க சாச்சு? எப்பவும் நீங்க விளையாடுற சொரணையில்லாத பொம்மையா நானு?” உஷ்ணமேறிய குரலில் மூச்சிறைக்க கேட்டபடி மார்பில், ‘பட்பட்’ என்று அடித்து ஒய்ந்தாள் லக்கி.

“அதான் சாரி கேட்டுட்டேனே மின்னி… இனிமே இப்படி நடக்காது. ஓயாம என்னை கெஞ்ச வைக்காதே! ரிலாக்ஸ் பண்ணிக்கோ!” தனது வழக்கமான அதட்டலில் மனைவியை சகஜமாக்கி, தண்ணீர் குடிக்க வைத்து ஆசுவாசப்படுத்தினான் அமிர்.

வழக்கம் போல அவனது அதட்டும் மிரட்டலும் லக்கியிடம் வேலை செய்ய, மூக்கை உறிஞ்சியபடியே கணவனின் தோளில் சாய்ந்து கொண்டு மிச்சம் மீதி அழுகையை கரைத்து முடித்தாள் லக்கி.

“போதும்டி… மொதல்ல உன்னை, என் குட்டீஸை பார்த்து முடிக்கிறேன். அப்புறமா என்னை ஆசைதீர அடிப்பியோ, கொஞ்சுவியோ, அழுவியோ… அது உன்னிஷ்டம்.” கேலி பேசிய அமிர், மனைவியை தன்னில் இருந்து தள்ளி நிறுத்தி மேலிருந்து கீழாக பார்வையால் அளவெடுத்தான்.

முழுதாக உறை போட்டு மூடிய போர்வையாக ஃப்ரீசைஸ் லாங் கவுனில் மனைவியின் மாற்றங்கள் எதுவுமே கணவனுக்குத் துல்லியமாகத் தெரியவில்லை.

“ம்ப்ச்… இதென்ன பெரிய இம்சை?” மெலிதான முணுமுணுப்புடன் அவன் முகம் திருப்ப,

“என்னங்க… என்ன ஆச்சு?” புரியாமல் கேட்டாள் லக்கி.

மனதில் உள்ளதை வெளியில் சொன்னால் நிச்சயம் இன்னொரு தாக்குதல் நடக்கும் என்பதை அறிந்தாலும் கணவனின் ஆசை அடங்கவில்லை..

“நத்திங்… உனக்கு சர்ஜரி நைட்தானே?” அனைத்தும் அறிந்து வைத்தவனாகக் கேட்க,

“ம்ம்… எட்டு மணிக்கு மேல ஃபிக்ஸ் பண்ணியிருக்காங்க! ஏன் கேக்குறீங்க?” கேட்டவளின் உள்ளமெல்லாம் மீண்டும் தன்னைத் தனியே விட்டுவிட்டுச் சென்று விடுவானோ எனத் தவித்தது.

“அது வரைக்கும் இதே போர்வையை சுத்திட்டு திரியப் போறியா? குளிச்சு டிரஸ் சேன்ஜ் பண்ணிட்டு வா! கோவிலுக்கு போகலாம்.” அமிர் உத்தரவாகக் கூற, லக்கி மறுத்தாள்.

“இந்த நிலைமையில கோவிலுக்கு போகக் கூடாது சாச்சு!” தனது பெரிய வயிற்றை சுட்டிக் காட்டியபடி கூறியவள், “அதுவுமில்லாம நான் இப்போ பேஷண்ட்… டாக்டர் அட்வைஸ் இல்லாம எனக்கு கேட்பாஸ் குடுக்க மாட்டாங்க!” தன் நிலையை தெளிவாக விளக்கினாள் லக்கி.

“யாருடி இவ… சொல் பேச்சு கேக்க மாட்டியா? ஹாஸ்பிடல்ல இருக்குற கோவிலுக்கு போயிட்டு வருவோம். ரெடியாகி வா!” கடுப்பில் கத்த,

‘இப்படி அதட்டி மிரட்டத் தான் அடிச்சு புடிச்சு வந்தாரு போல… இவர் இல்லையேன்னு தவிச்சு போனேன் பாரு என்னை சொல்லணும். லக்ஸ் நீ தேறவே மாட்டடி!’ உள்ளுக்குள் தன்னைத்தானே திட்டிக் கொண்டே, பெருமூச்சுடன் மாற்று உடையை எடுக்க நகர்ந்தாள் லக்கி.

“ஹேய் மின்னி! வெயிட்… வெயிட்! நான் டிரெஸ் எடுத்துக் குடுக்குறேன்!” வேகமாகக் கப்போர்டைக் குடைந்தவன் அலுத்துக் கொண்டே, அவளிடம் மீண்டும் காய்ந்தான்.

“சேலைக்கு மட்டும் உங்கிட்ட எப்பவும் கஞ்சத்தனம் தானாடி?” அனைத்தையும் கலைத்து போட்டு, சல்லடை போட்டு சளித்தான் அமிர்.

“ஒழுங்கா என்ன வேணும்னு சொல்லி இருந்தா நானே எடுத்துத் தந்திருப்பேன். தள்ளுங்க… அந்தபக்கம்.” அவனுக்கு இணையாக கடுகடுத்தவள், பெட்டியின் உள்ளே இருந்து காட்டன் சேலையை எடுத்து வெளியே வைத்தாள்.

“இத்தனை நாள் இந்த கோபத்தை எல்லாம் எங்கே காமிச்சீங்க? கண்ணே மூக்கேன்னு கொஞ்சத்தான் தெரியாதுன்னா… அனுசரணையா கூட உங்களுக்குப் பேச வராதா?” குற்றப்பாட்டினைப் பாடியவாறு குளியறைக்குள் நுழைந்தாள்.

“அடிப்பாவி! வீடியோ கால்ல கொஞ்சிக் குழைஞ்சு பேசும் போதெல்லாம் என்னை யாருன்னு பார்த்து வைச்ச?” பதிலுக்கு இவன் நிற்க, அதைக் கண்டு கொள்ளவே இல்லை.

இப்பொழுது அவன் கலைத்து போட்ட அவளது உடைகள் எல்லாம் இவனைப் பார்த்து சிரிக்க, அலுப்புடன் பெருமூச்சு விட்டான்.

“என்னை கூஜா தூக்க வைக்க என்னென்ன செய்யணுமோ அதையெல்லாம் செய்ற நீ!” சலித்துக் கொண்டே உடைகளை அடுக்கி வைத்து நெட்டி முறிக்கவும் லக்கி வெளியே வரவும் சரியாக இருந்தது.

குளியல் முடித்து சேலையை உடம்போடு சுற்றிக் கொண்டு வந்தவள், கணவனை வெளியே போகச் சொல்லி கண்களால் ஜாடை காட்ட, “போடி முடியாது!” வீம்பாக நின்றான் அமிர்.

அவனை வெளியே தள்ளிவிட்டு கதவைச் சாத்தும் ஆத்திரம் உள்ளுக்குள் கனன்றாலும், தன்னால் முடியாதென அவளது நிலைமை அடித்துக் கூறியது.

“சரிதான் போய்யா!” கடுப்புடன் பேசி, வேகமாக அவனைக் கடந்தவள், அவன் தற்போது இருக்கும் அறையை வெளியே தாழிட்டு விட்டு, முன்னால் இருந்த விருந்தினர் அறைக்குள் வந்து சேலையை மாற்றிக் கட்டிக் கொண்டாள்.

மருத்துவமனையின் ‘சூப்பர் டீலக்ஸ் ரூம்.’ வகையைச் சார்ந்தது அந்த அறை. சிறிய சமையலறை அமைப்புடன் விருந்தினர் அறையும் சோபா குஷன்களுடன் சிறியதாக அழகாக வீற்றிருக்கும்.

அதனைத் தாண்டியே நோயாளியின் படுக்கை மற்றும் சிக்கிசை உபகரணங்களைக் கொண்ட அறை இருக்கும். குளியல் அறையும் தனித்தனியாகவே அமைக்கப்பட்டு இருக்கும்.

இப்போழுது லக்கி கணவனை அவளது படுக்கை அறைக்குள் தாழிட்டு விட்டு முன்னறைக்குள் வந்து தயாராகிக் கொண்டிருந்தாள்.

“கதவைத் திற மின்னி விளையாடாதே!” அமிர் அடுத்தடுத்து அழைத்து கதவினைத் தட்டிக் கொண்டே இருக்க,

“என்ன அவசரமோ? கொஞ்சமும் பொறுமை இல்லை உங்களுக்கு…” கடுப்புடன் கதவைத் திறந்தவள் சோபாவில் ஆயாசமாக அமர்ந்து விட்டாள்.

“இனி என்னால முடியாது, கொஞ்சம் ரெஸ்ட் வேணும்.” ஆயாசத்துடன் மூச்செடுத்துக் கொண்டிருந்தவளைப் பார்வையால் அளந்து கொண்டிருந்தான் அமிர்.

வைத்த கண்ணை எடுக்காமல் கணவன் தன்னை பார்த்துக் கொண்டிருக்க, லக்கியின் உடலும் முகமும் இயல்பாய் சிவந்து போனது.

“இப்படி எல்லாம் பார்க்ககூடாது.” சங்கோஜத்துடன் அவள் சொல்ல,

“இப்படிதான் பார்ப்பேன், இதுக்கும் மேலேயே…” ரசனையாய் தொடர முயன்றவனின் வாயை விரைந்து வந்து அடைத்தாள் லக்கி.

“அறிவிருக்காடி உனக்கு? இப்படியா சட்டுன்னு எந்திருச்சு வருவ?” அமிர் கடிந்து கொள்ள,

“என் புருசனோட சரிபாதி நான்… அவருக்கு இருந்தா எனக்கும் இருக்கும். அவருக்கு இல்லன்னா…” நக்கலாக இழுத்தவளின் வாயை தனது உதடுகளால் அடைத்து விடுவித்தான் அமிர்.

“பாவம் பார்த்து விடுறேன்… இல்லன்னா நீ இப்படி நிக்கமாட்ட?” கண்களால் ஜாடை காண்பிக்க

“ஐயோ மறுபடியுமா?” கூச்சப்பட்டு அவனுக்கு முதுகை காட்டி நின்று கொண்டாள் லக்கி.

“உன்கிட்ட எனக்கு பிடிச்சதே இதுதான்டா! பேசிட்டு இருக்காதே… செயல்ல இறங்குன்னு ரூட் போட்டு குடுக்குற பாரு! அங்கே நிக்கிற நீ!” ஆசையில் பிதற்றியவன் மனைவியை பின்னாலிருந்து இறுக்கமாய் அணைத்துக் கொண்டான்.

உயிரைத் தொட்ட அணைப்பின் கதகதப்பு பல பாசைகளை நினைவுபடுத்திச் சென்றதில், இருவருக்குமே சோதனை ஆரம்பமாகியது.

நெடுநாள் கழித்து உண்டான மயக்கத்தில் பரிவும் சேர்ந்து கொள்ள, அமிரின் கைகள் ஆசையாக ஆர்வமாக மனைவியின் பெரிய வயிற்றை அங்குலம் அங்குலமாகச் தடவிச் சென்றது.

கைகள் ஆரம்பித்த வேலையை கணவனின் உதடுகளும் எடுத்துக் கொள்ள முன்வந்ததில், உச்சியில் தொடங்கி பாதம் வரைக்குமே ஊர்வலம் வந்தான். ஆசைக்கு அணைகட்டியவன் அன்போடு உரசிய செயல்கள் எல்லாம் மென்மையின் மேன்மையை மட்டுமே தாங்கி நின்றன.

“இதுதான் நீங்க கோவிலுக்கு போகலாம்னு சொன்ன அழகா?” சிணுங்கலாய் கேட்டவளை அலுங்காமல் சோபாவில் கால் நீட்டி அமர வைத்திருந்தான் அமிர்.

சிரமம் எடுத்துக் கட்டிக் கொண்ட சேலை உடம்பில் நிற்காமல் தாறுமாறாய் நெகிழ்ந்திருந்தது. களைப்பும் மயக்கமும் கலந்து கிடந்தவளின் ஆடையை அக்கறையுடன் சரிசெய்து மீண்டும் தன் விளையாட்டை ஆரம்பித்தான் கணவன்.

“அடங்காத கள்ள பீசுடா நீ! என்ன ஏதுன்னு என்னை பத்தி ஒரு வார்த்தையும் விசாரிக்காம, உன் வேலையில மட்டும் கண்ணா இருக்க!” கிளுக்கிச் சிரித்து மனைவி வாரிவிட, செல்லக் கொட்டு ஒன்று கணவனிடம் இருந்து பரிசாக வந்தது.

“திட்டுறதை கொஞ்சம் மிச்சம் வையி டி! இருக்கிற பேரெல்லாம் எனக்கே வச்சுட்டா… பிள்ளைகளை என்ன சொல்லித் திட்டுவ?” ஆர்வமாக அமிர் கேட்க, முறைத்துப் பார்த்தாள் லக்கி.

“என் பிள்ளைகள் எல்லாம் ரொம்ப சமத்தா இருப்பாங்க… அவங்களுக்கு எல்லாம் ஹக் அன்ட் கிஸ் மட்டுமே! ஒட்டு மொத்தத் திட்டும் உங்களுக்கே உங்களுக்கு மட்டும்தான்.” பாசத்தில் தொடங்கி கிண்டலில் முடித்தாள் லக்கி.

“ஃபோன்ல நிமிசத்துக்கு நிமிஷம் உன்னை பத்திதானே விசாரிச்சு தெரிஞ்சுக்கறேன். உனக்கு சர்ஜரி பண்ணப்போற டாக்டரோட மெடிக்கல் ஹிஸ்டரி முதற்கொண்டு ஐ க்நோ! பேசிப்பேசி போரடிச்சு போச்சு மின்னி!” தனது காதல் விளையாட்டை தொடர்ந்து கொண்டே, உல்லாசச் சிரிப்போடு மனைவியை பார்வையால் வருடினான்.

“என் பொண்டாட்டிக்கு கோபம் போச்சா? இப்ப ஹாப்பியா?” கொஞ்சலுடன் கேட்க, இல்லையென தலையாட்டினாள் லக்கி.

“ஏன் உனக்காகவே வந்திருக்கேனே… இன்னும் என்ன?”

“சர்பிரைஸுக்காக நீங்க வரப் போறதை என்கிட்டே சொல்லாம இருந்தது ஓகே… ஆனா எதுக்காக ரெண்டு வாரம் வீடியோ கால்ல வராம இருந்தீங்க?” மனத் தாங்கலோடு கேட்டாள் லக்கி.

“நான் இந்தியா வந்து நேத்தோட முழுசா ரெண்டுவாரம் முடிஞ்சு போச்சுடா! இத்தனை நாள் குவாரண்டைன் சென்டர்லதான் இருந்தேன். அங்கே டவர் பிராப்ளம். முன்கூட்டியே சொன்னா நீ இன்னும் அதிகமா என்னைப் பத்தி யோசிக்க ஆரம்பிச்சுடுவ! வீணா டென்சன் ஏறிப் போகும் உனக்கு. அதான், சொல்லாம இருந்துட்டேன்.

நான் வந்த விசயம் உங்கப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் மட்டும்தான் தெரியும். சித்திக்கும் ஹரிணிக்கும் கூட தெரியாது. அதிக நேரம் உன்கூட இருக்கிறவங்க, அவங்கள அறியாம உளறிட்டா என்ன பண்றதுன்னு அவங்ககிட்டயும் சொல்லாம மறைச்சாச்சு!” என்று கண்ணை சிமிட்ட,

“பெரிய அண்டர்கிரவுண்ட் டான் இவரு… இருக்கிற இடம் தெரியாம மெயின்டெயின் பண்றாராம்?” அவனது கன்னத்தில் இடித்து கடுப்பைக் காட்டினாள் லக்கி.

“அடிப்பாவி… வரவர என்னை ஜோக்கர் ரேஞ்சுக்கு ட்ரீட் பண்ற நீ! டெலிவரி முடியட்டும், இருக்கு உனக்கு!” மிரட்டலுடன் கூற,

“அதையேதான் நானும் சொல்றேன்… இன்னையோட உங்க உருட்டல் மிரட்டலுக்கு எல்லாம் எண்டு கார்டு போடுட்டுடுங்க… நாளைக்கு என் சோல்ஜர்ஸ் வந்த பிறகு எந்த அதட்டலும் வேலைக்கு ஆகாது.” தெனாவெட்டு பேச்சில், செல்லச் சீண்டலில் அன்றைய பொழுதுகள் கரைந்தே போயின.

அங்கிருத்த இன்டக்சனில் மனைவிக்கு காபி தாயரித்து கொடுத்து, தனது சேவையை தொடங்கிய அமிர், அவளின் கால் விரல்களுக்கும் சொடுக்கு எடுத்துவிட்டே பெரும் அதிசயத்தை நிகழ்த்தினான்.

“வேண்டாம் சாச்சு… கூச்சமா இருக்கு.” தடுக்க முயன்றவளின் கையை விலக்கிவிட்டு,  

“என் குண்டு பூசணிக்கு நான் செய்றேன் உனக்கு என்னடி?” கிண்டலுடன் காதலும் சேர அவளை வம்பிற்கு இழுத்தான். உண்மையில் அப்படிதான் மாறிபோயிருந்தாள் லக்கி.

கர்ப்பகாலத்தின் நாட்கள் ஏறிக்கொண்டே போவதைப் போல அவளது உடலின் அமைப்பும் முழுதாக மாற்றம் கண்டு, மெருகேறிப் போயிருந்தது. சோர்ந்த கண்கள், உப்பிய கன்னம், நீர் கோர்த்த உடலுடன் கணவனின் கண்களுக்கு அழகியாகத் தெரிந்தாள் லக்கி.

“குண்டுப் பூசணியா நான்? எல்லாம் உங்களால தான்…”

“நோ மை டியர்! உனக்கு ஸ்மால் ஊத்திக் கொடுத்ததோடு என் வேலை முடிஞ்சது. மத்த எல்லாம்… எல்லாமே, உன்னோட வேலைதான்.” நமுட்டுச் சிரிப்பில் அமிர் குற்றம் சாட்ட,

“தப்பு தப்பா பேசக்கூடாது. நீங்க ஆடின ஆட்டமென்ன… அதுக்கு இதுகூட இல்லன்னா எப்படி?” கண்ணைச் சிமிட்டி சலிக்காமல் வாரிவிட்டாள் லக்கி.

“என்னடி இப்படி சொல்லிட்ட… விட்டா, ஒரே பிரசவத்துல பத்து பிள்ளைய குடுக்கிறவன்னு பட்டம் கொடுத்து என்னை டேமேஜ் பண்ணிடுவ போல?”                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                   “நிஜம் அதுதானே?” அசராமல் பழிப்புக் காட்டினாள் லக்கி.

காலை உணவினை அறைக்கே வரவழைத்து உண்டு முடித்தவர்கள், மதியம் வரை எந்த இடையூறும் இல்லாமல் பேசிக் கொண்டே இருக்க, கோவிலுக்கு செல்வதை மறந்தே போயினர்.

ஞாபகம் வந்து லக்கி கேட்ட பொழுது, “உன்னை சேலையில பார்க்க நான் எடுத்துவிட்ட பொய்யிடி, லூசுப் பொண்ணே!” கேலிபேசி கொட்டு வைக்க, ‘ஞே’ என முழித்தாள்.

மாலை நான்கு மணிக்கு பிறகு பிரசவத்திற்கு லக்கியை தயார்படுத்தவென மருத்துவர்களும் செவிலியர்களும் வந்து சென்ற வண்ணமே இருக்க, அந்த நேரத்தில் இருந்து அவளுக்கு படபடப்பு கூடிப் போனது.

“குட்டீஸ் நல்லபடியா வரணும்னு ப்ரே பண்ணிக்கோங்க சாச்சு!” அமிரின் கரங்களில் தனது கைகளை பொதித்து கொண்டு, லக்கி தழுதழுத்துக் கேட்க, உருகிப் போனான் கணவன்

“ஷூயர் டா! நீ தியேட்டருக்கு போன உடனே பிள்ளையாரை பார்த்து இந்த பெட்டிஷனை போட்டுட்டு வந்துடுறேன். நீயும் மனசுக்குள்ள வேண்டிக்கோ!” அமிர் இலகுவாய்க் கூற புரியாது பார்த்தவள்,

“என்னனு பிரே பண்ண?” தனது பதட்ட மனநிலையை மறந்து கேட்டாள் லக்கி.

“அடுத்த ஜென்மத்துலயும் சாச்சுவோட குழந்தைகள் மின்னிகிட்ட மட்டுமே வரணும்னு வேண்டிக்கோ… சரியா?” மென்மையான குரலில் அதட்டல் இல்லாமல் அன்பான ஆளுமையுடன் கூற, அதில் கரைந்து மனம் நிறைந்தே பிரசவத்திற்கு சென்றாள் லக்கி.

மனைவிக்கு ஆறுதல் அளித்தாலும் தனக்குள் எழுத படபடப்பில் கண்களால், செயலால் அலைபாய்ந்து கொண்டிருந்தான் அமிர். ரெங்கேஸ்வரனும் நடேசன் குடும்பமும் அவனுக்கு அருகிலேயே இருந்து ஆசுவாசப்படுத்தினாலும் அவர்களுக்குள்ளும் ஒரு பதட்ட நிலை தேங்கி நின்றது.

மணிநேரக் கரைசல்கள் வேகமாகக் கழிய முதல் பெண் குழந்தையை கொண்டு வந்து காண்பித்த செவிலியர் உடனே பிறந்த குழந்தையை(நியோநாட்டல் வார்ட்) பராமரிக்கும் அறைக்குள் எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.

முதல் குழந்தை பிறந்த அடுத்த பத்து நிமிடம் கழித்து அடுத்ததாக ஒரு ஆண் குழந்தை… அதையும் முதல் குழந்தையைப் போலவே காண்பித்துவிட்டு கொண்டு சென்றனர்.

அதற்கடுத்த பதினைந்து நிமிடங்கள் கழித்து மூன்றாவதாக பெண் குழந்தை பிறக்க, அக்குழந்தையும் அழகாக பராமரிப்பு அறையில் தஞ்சமடைந்தது.

“பேபீஸ் அன்ட் மாதர் ஹெல்த் கண்ட்ரோல் எல்லாம் பெர்ஃபெக்டா இருக்கு. எந்த பயமும் இல்லை. பேபீஸ் வெயிட் கொஞ்சம் கம்மியா இருக்கிறதால ஒரு மாசம் நியோ நாட்டல் வார்டுல அப்சர்வேஷன்ல இருக்கட்டும். பேபீஸ் அழும்போது மட்டும் அம்மா உள்ளே போய் ஃபீட் பண்ணட்டும். மத்தவங்க எல்லாம் வெளியே இருந்தே பாருங்க… அதுதான் குழந்தைகளுக்கு நல்லது.” அறிவுறுத்திய மருத்துவர் மேலும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை கூறிச் சென்றார்.

மருத்துவரின் வார்த்தைகள் மனதிற்கு தைரியம் அளித்தாலும் உள்ளுக்குள் ஏதோ ஒன்று தடம் புரள்வதைப் போல உணர்ந்தான் அமிர்தசாகர்.

மூன்று மழலைச் செல்வங்களையும் கண்ணுக்குள் வைத்துக் காக்க வேண்டும். பிள்ளையை பெற்றுக் கொடுத்து மயங்கி இருப்பவளையும் முன்னைவிட கருத்தாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமன்ற கடமை மூளைக்குள் உரைக்க, ‘தன்னால் முடியுமா?’ என தன்னைதானே கேட்டுக் கொண்டான் அமிர்.

புதிதாக மலையளவு பொறுப்புகள் தோளில் கூடிப்போனதைப் போல தனக்குள் அழுத்தம் கொண்டான். ‘இவர்களின் வாழ்வும் தாழ்வும் என் கைகளில் மட்டுமே’ என்றெண்ணும் போது, அமிரின் கர்வமும் தன்னம்பிக்கையும் முன்னைவிடப் பன்மடங்கு கூடிப்போனது.

இனி அமிரின் நிலை குடும்பத்திற்காக மாற்றம் கொள்ளுமா அல்லது அவனது இந்த நிலையே தொடருமா?

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரிதல் முன்இனிதே

முற்றான தெரிந்து முறைசெய்தல் முன்இனிதே

பற்றினலாய்ப் பல்லுயிர்க்கும் பாத்தூற்றுப் பாங்கறிதல்

வெற்வேறில் வேந்தர்க்கு இனிது.

விளக்கம்

வெற்றியைத் தருகின்ற பெருமை உடைய அரசன் ஒற்றன் கூறியவற்றை, வேறு ஒற்றராலே ஆராய்ந்து பார்ப்பது இனிது. ஆராய்ந்து பார்த்து நீதி வழங்குதல் இனிதாகும். எல்லா உயிர்களையும் சமாகப் பாவித்து முறை செய்தல் இனிதாகும்.