சுமப்பேன் உனை தாயாக 2

-afdc83ca

சுமப்பேன் உனை தாயாக 

 

 

வென்பட்டில் தேவதையாக வந்த ப்ரியங்காயை பார்த்த அனைவருக்கும் நிறைவாக இருந்தது. வான்மதி சங்கமித்ராவிடம் “பொண்ணு கண்ணுக்கு லட்சனமா இருக்கா கார்த்திக்கு பொருத்தமாக இருப்பா” என

 

“ஆமா மதினி பார்க்கிறதுக்கு அடக்கமான பொண்ணா தான் தெரியுறா ஜாதகமும் நல்லா பொருந்தி இருக்கு கார்த்திக் மட்டும் சரி சொல்லிட்டா அடுத்த முகூர்த்தலிலே கல்யாணத்தை வைத்து கொள்ளலாம்” என்று தன் மனதில் தோன்றியதை சொன்னார்.

 

செல்வி “ப்ரியங்கா எல்லார் கிட்டவும் ஆசீர்வாதம் வாங்கிக்கோ” என்றதும் அனைவரின் முன்பும் விழுந்து வணங்க,

 

விஸ்வா “எங்க எல்லாருக்கும் பொண்ணை ரொம்ப பிடிச்சி இருக்கு கார்த்திக் வந்து பார்த்துட்டா நாம் மேற்கொண்டதை பேசலாம்” என்று சிறிது நேரம் பொதுவாக பேசி கொண்டு இருக்க,

 

சங்கரன் “நேரம் ஆகுது மாப்பிள்ளை இன்னும் வரவில்லை” என்று பெண்ணின் அப்பாவிற்கு இருக்கும் பதட்டத்துடன் கேட்க,

 

வான்மதி “ராகவ் அன்னைக்கு போன் பண்ணி கிளம்பிட்டானா கேளு” என்றதும் செல்வி “தம்பி உள்ளே சிக்னல் சரியா கிடைக்காது நீங்க வெளியே போய் போன் பண்ணுங்க” என்றதும் வெளியே வந்தவன், வந்த வேலையை மறந்து பின் பக்கம் எதோ பாட்டு சத்தம் கேட்கவும் ‘யாரு அந்த சூப்பர் சிங்கர்’ என்று யோசித்து கொண்டே வீட்டின் பக்கத்தில் இருந்த சந்தில் எட்டி பார்க்க,

 

அங்கே தோட்டத்தில் பூக்களுடன் அன்று தான் பூத்த பூவாய் கல்பனா பாடி கொண்டே ரோஜா செடிக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டு இருந்தாள்.

 

“வாவ் யாரு டா இந்த வைட் ரோஸ்” என்று முணுமுணுத்து கொண்டே அவள் பக்கத்தில் செல்ல,

 

“ஹாய்” என்றதும் “யார் நீங்க என்னோட தோட்டத்தில் என்ன பண்றீங்க” என

 

“ஓ…. நான் மாப்பிள்ளை வீட்டில் இருந்து வந்து இருக்கோம்” என ‘அச்சீசோ அப்ப இவங்க தான் சேச்சியை பார்க்க வந்த மாப்பிள்ளையா இருக்கும் இருக்கும்’ என்று அவளே முடிவு செய்து அவனிடம் “ஹலோ நான் கல்பனா ப்ரியங்கா சேச்சியின் குட்டி தங்கச்சி சேச்சியை பார்த்தீங்களா பிடிச்சி இருக்கா” என்று கேள்வி மேல் கேள்வியா கேட்க,

 

ராகவ் சிரித்து கொண்டே “போதும் வைட் ரோஸ் மூச்சு வீட்டுக்கோ எவ்வளவு கேள்வி கேட்கிற நான் இங்க தான் இருக்க போறேன் பொறுமையா கேளு” என

 

சங்கரனின் கல்பனா என்ற அழைப்பில் வேகமாக திரும்பியவள் கீழே இருந்த கல்லை கவனிக்காமல் ஓட, அடுத்த நொடி செம்மண் சகதியில் விழுந்து விட்டால்.

 

“அம்மாஆ” என்று வலியில் கத்த, இதை பார்த்த ராகவ் “அச்சோ என்ன வைட் ரோஸ் இது பார்த்து நடக்கலாம்ல இப்ப பாரு வெள்ளை ட்ரஸ் எல்லாம் சேறாகிடுச்சு” என்று  உச்சி கொட்டி சொல்ல,

 

“ப்ச்… அதான் நான் விழ போறேன்னு தெரியுதுல பிடிக்க வேண்டியது தானே இந்த அச்சா வேற இப்ப எதுக்கு கூப்பிட்டரு தெரியலையே” என்று கீழே விழுந்ததில் ஒரு கால் சுளுக்கு பிடித்து கொள்ள, அதை தாங்கி தாங்கி முன் பக்கமாகவே சென்றாள். பின் பக்க கதவே தொலைவில் இருக்க இந்த காலை வைத்து கொண்டு போக முடியாது என்றே முன் பக்கமாக வந்தாள்.

 

அவள் தாங்கி தாங்கி நடப்பதை பார்த்து அவளுக்கு உதவ முன் வருவத்துக்குள் அவனுக்கு முக்கியமான போன் வர, போகும் அவளையே பாவமாக பார்த்து கொண்டு போன் பேச தொடங்கினான்.

 

‘எனக்கு பிடிச்ச டிரஸ் இப்படி ஆகிடுச்சே இதை மட்டும் என்னோட செல்லம் செல்வி பார்த்த நான் அவ்வளவு தான் பூமியோட பூமியா என்னையும் பொதச்சிடுவாங்க’ என்று காலையும் பூமியையும் பார்த்தவள் எதிரே பார்க்க தவறினாள்.

 

 எதிரே வந்தவரும் இவள் வருவதை பார்க்காமல் போனில் முழுக, கல்பனா வந்தவரை மோதிய வேகத்தில் நிற்க முடியாமல் தடுமாறி கீழே விழ, இதே நேரம் எதிரே வந்தவன் அவள் இடை வளைத்து தாங்கி பிடித்தான். 

 

கீழே விழ போறோம் என்ற பயத்தில் கண்களை இறுக்க முடிக்க கொள்ள, பிடித்தவனோ அவளின் பாவத்தில் தன்னை மறந்து ரசித்து கொண்டு இருந்தான். 

 

‘இன்னுமா நம்ம கீழ விழாமல் இருக்கோம்’ என்று ஒரு கண்ணை மட்டும் திறந்து பார்க்க, ஆணவனின் முகத்தை வெகு அருகில் முதல் முறை பார்ப்பதால் கண் இமைக்க மறந்து அவனையே பார்க்க,

 

சிறிது நேரத்தில் ‘அண்ணா’ என்ற ராகவ்வின் அழைப்பில் நடப்பை உணர்ந்து கல்பனா வேகமாக அவனை விட்டு தள்ளி நிற்க,

 

முதன்முதலாக உணர்ந்த பெண்ணின் மென்மை, பெண்ணின் வாசம் அதில் கிறங்கி நின்றான் கார்த்திக். பெண்ணை பிடிக்கவில்லை என்று சொல்ல தான் வேகமாக வந்தான். ‘இவள் தான் நம்ம பார்க்க வந்த பொண்ணோ’  என்ற யோசனையில் அவளை அளவெடுக்க,

 

அவளோ தடுக்கியத்தில் மேலும் காலின் வலி கூடி இருக்க, என்ன செய்வது என்று தெரியாமல் வதங்கிய முகத்துடன் அமர்த்து விட்டாள். அவர்கள் அருகே வந்த ராகவ் “அண்ணா அச்சச்சோ வெள்ளை சட்டை இப்படி கறையாகிடுச்சே உள்ள போகலாமா வாங்க ணா” என்று கார்த்திக்கை அழைக்க,

 

“ஒரு நிமிஷம் டா” என்று கல்பனா அருகே “எனி ப்ராப்லேம்” என , யாரவது வந்து கேட்க மாட்டாங்களா உதவ மாட்டாங்களா என்று தவித்தவளுக்கு அவன் கேட்டதும் கண்கள் கலங்க, அதை மறைத்து கொண்டு “ம்ம்ம்….. உள்ள அச்சா இருப்பாங்க கூப்பிடுங்க என்னால எழ முடியலை கால் ரொம்ப வலிக்குது” என்று முகத்தை சுருக்கி சொல்ல,

 

ராகவ் “நான் கூப்பிட்டு போறேன்” என்று அவளை நெருங்க, கார்த்திக் “வேண்டாம் ராகவ் நானே கூப்பிட்டு போறேன் என்னோட டிரஸ் தான் ஏற்கனவே கறையாகிடுச்சே நீ வேற டிரஸ்ச கறையாக்கிக்க வேண்டாம்” என்று அவளிடம் கையை கொடுக்க,

 

தயக்கத்துடன் அவனின் கையை பற்றி எழுந்த கல்பனாவால் அடுத்த அடி வைக்க முடியவில்லை, பாதத்தில் சுருக் என்று ஒரு வழியை உணர கீழே சரிய போனவளை தங்கியவன் அவள் கையில் ஏந்தி கொண்டான்.

 

அதை பார்த்த ராகவ் “அண்ணா பார்த்து கீழ போடாமல் வா ஏற்கனவே அவங்க முகத்தில் அவ்வளவு வலி தெரியுது” என கல்பனா வேகமாக “சார் ப்ளீஸ் கீழ விடுங்க நான் பொறுமையா உள்ள வந்துறேன் அம்மா பார்த்தாங்க என்னை தான் திட்டுவாங்க” என 

 

“கொஞ்சம் பொருந்த உள்ள போய்டலாம் நீங்க இந்த வலியோட நடக்க முடியாது” என்று அவன் வீட்டுக்குள் நுழைய, ஹாலில் இருந்த அனைவரும் அவனை தான் அதிர்ச்சியாக பார்த்தனர்.

 

பொண்ணு பார்க்க வந்த இடத்தில இவன் என்ன பன்றான் என்று கவலையோடு அவனையும் ராகவ்வையும் பார்க்க, இருவரும் அவர்கள் யாரையும் கண்டுக்காமல் சோபாவில் அவளை அமர செய்ய,

 

அப்பொழுது தான் ரூமில் இருந்து வெளியே வந்த செல்வியும் சங்கரனும் அவளை பார்த்து அவள் அருகே செல்ல,

 

சங்கரன் “குட்டி என்ன ஆச்சு எங்க விழுந்த… எதாவது அடிபட்டு இருக்கா” என்று அவள் அருகே அமர்ந்து கொள்ள, செல்வி “ஏய் என்னடி கோலம் இது உன்னால ஒரு நாள் அமைதியா இருக்க முடியாதா ஏன் தினமும் எதாவது பிரச்சனை பண்ணிட்டே இருக்க” என்று கடிய,

 

ராகவ் “அவங்க பத்திரமா தான் நடந்தாங்க ஆனா கீழ இருந்த கல்லை கவனிக்காமல் விழுந்துட்டாங்க” என்று நடந்ததை சொல்ல,

 

ராகவ் அவளுக்கு ஆதரவாக பேசியது ரோஷினிக்கு பிடிக்கவில்லை முகத்தை வேறு பக்கம் திருப்பி கொள்ள, சங்கமித்ரா “யார் இந்த பொண்ணு” என்ற கேள்விக்கு,

 

சங்கரன் “எங்க இரண்டவது பொண்ணு. பெயர் கல்பனா காலேஜ் படிக்கிறாள். மன்னிச்சிடுங்க சம்மந்தி கொஞ்சம் விளையாட்டு பிள்ளை அதான்” என்று இழுக்க,

 

விஸ்வா “அட அதை நீங்க வேற சொல்லனுமா எங்க வீட்டுலையும் பொம்பளை பிள்ளை இருக்கு சம்மந்தி… நீங்க முதல பாப்பாவை ஹாஸ்பிடல் கூப்பிட்டு போங்க கால் வேற வீங்கி இருக்கு” என  

 

கார்த்திக் “அப்பா எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு நான் மதியம் அங்க இருக்கணும் நான் கிளம்பறேன் நீங்க இப்ப வரிங்களா இல்ல அப்பறமா வரிங்களா” என்று அழுத்தமான குரலில் கேட்க,

 

வான்மதி “அப்ப நாங்களும் கிளம்பறோம் அண்ணா பாப்பாவை முதல ஹாஸ்பிடல் கூப்பிட்டு போங்க இன்னொரு நாள் நம்ம பேசிக்கலாம்” என அனைவரும் அவர் சொன்னதுக்கு ஆமோதிக்க,

 

செல்வி மனதில் பிரியங்காவை திட்டி கொண்டு இருந்தார். இவர்கள் எல்லாம் இங்கே இருக்க அவள் மட்டும் எதோ முக்கியமான போன் கால் என்று பேச உள்ளே சென்று விட்டாள். 

 

விஸ்வா “கார்த்திக் காரில் நீ மட்டும் தானே போக போற போற வழியில் இவங்களை ஹாஸ்பிடல்ல விட்டுவிடு” என்று அவர்களிடம் விடை பெற்று செல்ல,

 

முதல் காரில் விஸ்வாமித்ரன் வான்மதி சங்கமித்ரா செல்ல அடுத்த காரில் ராகவ் மற்றும் ரோஷினி சென்றனர்.

 

சிறிது நேரத்தில் கார்த்திக் சங்கரன் செல்வி மற்றும் கல்பனாவை பக்கத்தில் இருந்த ஹாஸ்பிடலில் விட்டு அவன் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்றான்.  

 

ராகவ் காரில் ராகவ் “ரோஷினி அந்த பொண்ணு கல்பனா இருக்காளே வானத்தில் இருந்து குதிச்சி தேவதை மாதிரி இருக்கால பேசும் போது அவ்வளவு ஸ்வீட்” என்று அவளை பற்றியே சொல்ல ரோஷினி கடுப்புடன் அதை கேட்டு கொண்டு இருந்தாள்.

 

கல்பனா வீட்டில் ப்ரியங்கா போனில் யாரிடமோ “இங்க பாரு நீ பண்றது ரொம்ப பெரிய தப்பு… தப்புக்கு மேல தப்பு பண்ற உன்னை ஒரு ப்ரெண்டா கூட என்னால பார்க்க முடியாது எனக்கு வீட்டில் கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க இன்னும் ஒரு மாசத்தில் என்னோட கல்யாணம் தயவு செய்து என்னை தொல்லை பண்ணாமல் இரு” என்று கோபத்தில் கத்தி விட்டு போனை அனைத்தவளுக்கு கத்தி அழுக வேண்டும் போல் இருந்தது. 

 

இரவு, கார்த்திக் இன்று நடந்த அனைத்தையும் நினைத்து தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்க மனம் முழுவதும் கல்பனா வலியில் முகம் சுருங்கியது மட்டுமே திரும்ப திரும்ப வந்து அவனது தூக்கத்தை மறக்க வைத்தது.

 

ப்ரியங்காவோ தனக்கு அந்த போன் கால்லையும் அதில் பேசியது பற்றியுமே சிந்தித்து கொண்டு இருக்க, பயம் அவள் மனதை ஆள் கொண்டது. பயத்தில் தூக்கத்தை தொலைத்து வெறிக்க வெறிக்க சுத்தும் பேன்னை பார்த்து கொண்டே தூக்கத்தை தொலைத்தாள்.

 

பல குழப்பம் மனதில் இருந்தாலும் மாத்திரையின் வீரியத்தில் தன்னை மறந்து தூங்கி கொண்டு இருந்தால் கல்பனா.

 

ரோஷினியோ ராகவ் கல்பனாவை பற்றியே பேசியது நினைவுக்கு வர, தன் சிறு வயது ஈர்ப்பை மீறி எதோ ஒன்று ராகவ் மேல் இருப்பதை உணர்ந்த அவள் அவன் தன்னை விட்டு போய் விடுவானோ என்ற அச்சத்தில் தூக்கத்தை தொலைத்து இருள் சூழ்ந்த வானத்தில் தன் எதிர் காலத்தை தேடி கொண்டு இருந்தாள்.

 

ராகவ் எதையோ தீவிரமாகி சிந்தித்து கொண்டு இருந்தான். ஆனால் எதை பற்றி யோசிக்கிறான் என்பது அவனுக்கே வெளிச்சம். தூக்கம் என்பது துளியும் வராமல் தன் முடிவில் திடமாக இருக்க அவனது முடிவில் அவனது தூக்கம் தான் பறிபோனது.

 

ஆகா மொத்தம் யாருமே தூங்க வில்லை. அனைவரது சிந்தையிலும் எதோ ஒரு விடயம் ஓடி கொண்டு இருந்தது என்ன அது? 

 

சுமைகள் தொடரும் 

 

லஷ்மி…

 

யாருக்கு யார் ஜோடினு கண்டு பிடிச்சீங்களா நண்பர்களே…… ஒரே ஒரு கிளு மட்டும் சொல்றேன் நம்ம கதையில் நான்கு ஜோடி இருக்கு. இப்ப கண்டு பிடிங்க…  

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!