நினைவு தூங்கிடாது 20.1

நிஜம் 20.1

தித்திக்கும்

இந்த ஆனந்த தருணத்தை…

 எண்ணி ஏங்கிய

கண்ணி மனதின் ஆசைகளை…

 என்னவென்று நான் சொல்ல…

மணமேடையில் அமர்ந்து, ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்டிருந்த மணமகனையே, ரசித்திருந்தது கீழே அமர்ந்திருந்த பெண்ணின் கண்கள். 

யார் என்றே தெரியாத தன்னை, உள்ளங்கையில் வைத்து தாங்கிய தூய இதயம் கொண்ட, தன் வருவின் திருமணத்தை ரசித்திருந்தாள் வருவின் மிரு. 

“பொண்ணை அழைத்து வாங்க” என்ற ஐயரின் குரல் கேட்டு, பெண்ணை அழைத்து வரவேண்டியவளோ, மணமகள் வரும் திசையை நோக்கி கண்களை திருப்பினாள். அங்கு அழகே உருவாக அண்ண நடையிட்டு, ரேகாவின் கைப்பற்றி வந்தாள் பிந்து என்கிற பிருந்தா.

பிந்துவின் கண்கள் அம்முவை தேடி கண்டு கொண்டது. ‘அருகில் வா’ என கண்களால் அழைப்பு விடுத்தாள்.

அதை மறுத்த பெண்,’நான் திருமணத்தை கண்குளிர பார்க்க வேண்டும்.’ என தன் கையை கட்டி சட்டமாக அமர்ந்து கொண்டாள். 

அவளை செல்லமாக முறைத்த பிந்து, மணமகன் ரிஷிவர்மாவின் அருகில் அமர்ந்தாள். அம்முவை தேடிய ருத்ராவும் அவளருகில் அமர்ந்தான். 

நாதஸ்வர இசை காதை நிறைக்க, ரிஷி, பிந்துவின் கழுத்தில் மாங்கல்யம் அணிவிக்கும் காட்சி கண்ணை நிறைத்தது. அம்முவின் கண்கள் ஆனந்தத்தில் பளபளத்தது. அருகிலிருந்த ருத்ரா அவளை ஆதரவாக தோள் சாய்த்தான். அவர்கள் நெருக்கம் ரிஷி, பிந்துவின் கண்ணை நிறைத்தது.

சோட்டு அம்முவை நெருங்கி,”ஸ்மைல் ப்ளிஸ்” என்றான். எதற்கென்று புரியாத பெண்ணின் இதழ் விரிந்தது.

அவனின் கைபேசி அந்த காட்சியை அழகாக உள் வாங்கிக் கொண்டது. பிறகே தான் இருக்கும் நிலை உணர வெக்கம் பிடிங்கி தின்றது. சிவந்த தன் முகத்தை அவன் மார்பிலே புதைத்து மறைத்தாள். 

“வாவ் அன்பிலிவபில்! டேய் பப்பு, பிங்கி இங்க ஓடி வாங்க. நம்ம அம்முக்கு வெக்கமெல்லாம் வருது. இந்த அரிய காட்சியெல்லாம் மறுபடி கிடக்காது. மிஸ் பண்ணிடாதீங்க. சீக்கிரம் வாங்க.” என குரல் கொடுத்தான் கிட்டு.

ருத்ரா வாய் விட்டு அட்டகாசமாக சிரித்தான். அவனது மனம் விட்ட சிரிப்பை குடும்பத்தில் உள்ளவர்கள் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியோடும் பார்த்தனர். ‘என்று அவன் தொழிலில் இறங்கி துரோகத்தை சந்தித்தானோ, அன்றிலிருந்து அவனது விளையாட்டுத்தனம், மகிழ்ச்சி அனைத்தும் காணாமல் போயிருந்தது.’ அவர்களது மகிழ்ச்சி நிலைக்க இறைவனிடம் பிரார்த்தனை வைத்தனர்.

கிட்டுவின் குரல் கேட்டு வந்த பப்புவும், பிங்கியும் அவர்கள் கூட்டணியில் சேர்ந்து கொண்டனர். நால்வரும் சேர்ந்து அம்முவை கேலி செய்ய, ஒரு கட்டத்தில் பொருக்க முடியாத அம்மு அவர்களை துரத்த தொடங்கினாள். 

அந்த மண்டபமே நிறைந்தது இவர்களின் ஆர்பாட்டத்தில். அம்முவின் சந்தோஷத்தை கண்டு, ஒவ்வொருவரின் மனமும் ஒவ்வொரு வகையில் அமைதி அடைந்தது. 

†††††

சுட்டீஸை துரத்தி ஓடிய அம்முவை, ஒரு கை, வாயை மூடி அறைக்குள் இழுத்துக் கொண்டது. கதவை அடைத்து தாழிட்டு, திமிறிய அவளை அடக்கி, அந்தக் கதவில் சாய்த்து நிற்க வைத்தான் அவன். பெண் தப்பிச் செல்லாதவாறு, அவளின் இருபுறமும் தன் கரத்தை வைத்து, கை சிறை எடுத்திருந்தான் அவளை.

“எல்லாரும் இருக்கும்போது இது என்ன விளையாட்டு கட்டவண்டி?” குரல் கொஞ்சியது.

“என்னை கவனிக்காமல் நீ சுத்திட்டிருந்தா, நான் இப்படித்தான் பண்ண முடியும்.” சரசம் பேசியது ஆணின் குரல்.

“நேத்து சாயங்காலம் கூட உன்ன நல்லாாா கவனிச்சேன்.” குரல் ரிங்காரமிட்டது.

“அது நேத்து சாயங்காலம். அதுவும் பதினாலு மணி நேரத்துக்கு முன்னாடி, ஒரே ஒரு கிஸ் கொடுத்த. அந்த கிஸோட வேல்யூ காலாவதியாகி ரொம்ப நேரம் ஆச்சு.” அவனது மூச்சுக்காற்று பெண்ணின் முகம் தீண்டியது. அவனது கரமோ சேலை மறைக்காத அவளது வெற்று இடையை அளவெடுத்தது. அவனது நெருக்கத்தில் எப்போதும் போல் பெண்மை மயங்கியது.

“கட்டவண்…! இப்படி பொ…ய் சொல்லக்கூட… பொய் சொன்ன வாய்…கு சாப்பாடு கிடை…காது.” வார்த்தைகள் தந்தியடித்தது.

அவளது தடுமாற்றத்தை ரசித்தவன்,”சாப்பாடு கிடைக்காட்டி போகுது போடி. எனக்கு தேவையானது வேற. அதை நானே எடுத்துக்கிறேன்” என அவனுக்கு தேவையான உணவை எடுத்துக் கொண்டான் அவளது இதழில். மூளை தடம் மாற, கரங்கள் இடம் மாறியது. பெண்மை விழித்துக் கொண்டது. அவனை தன்னிடமிருந்து விலக்கினாள். ருத்ராவின் முகம் சுருங்கியது.

“அவசர படாத ருத்ரா” தயக்கத்தோடு குரல் கெஞ்சியது.

“போ அம்மு. நமக்கும் இந்நேரம் கல்யாணம் நடந்திருக்க வேண்டியது. எல்லாம் உன்னால் தான்.” குரலில் ஏமாற்றம்.

“நீ என் செல்ல கட்டவண்டி தான. பிந்து, வரு ரெண்டு பேத்துக்கும் நான் மட்டும்தான் இருக்கேன். நான் தானே எல்லாம் பண்ணனும்? அதனால தான் நம்ம கல்யாணத்தை தள்ளி வச்சேன். என் மேல் கோபமா?” முகம் கலங்கியது.

“ச்ச ச்ச என்ன அம்மு. நான் ஏதோ ஏமாற்றத்தில் சொல்லிட்டேன். அதுக்கு போய் கலங்கிட்டு. ரிஷி உனக்கு பண்ணுனதுக்கு முன்னாடி இது ஒன்னுமே இல்ல. அவங்களுக்கு செய்ய வேண்டியது நம்ம கடமை.” அவளது கன்னத்தை பிடித்து கொஞ்சினான்.

அவனது புரிதலில் முகம் தெளிந்தவள்,”இன்னும் ரெண்டு நாள் தான் கட்டவண்டி. அதுக்கப்புறம் உன்னை நான் தடுக்க மாட்டேன்.”

“என் செல்ல பொம்முக்குட்டி, நீ தடுத்தாலும் உன்னை அப்படியே நான் விழுங்கிடுவேன்.”  என்றவன், அவளது நெற்றியில் இதில் பதித்து அறையிலிருந்து வெளியேறினான்.

அம்முவின் நினைவு அன்று ரிஷியுடன், தங்கள் திருமணத்தை பற்றி பேசிய நாளுக்கு சென்றது.

†††††

அம்மு திருமணத்துக்கு சம்மதிக்கவும், மகிழ்ச்சியடைந்த ரிஷி, ருத்ராவிடம்,”எப்ப உங்க கல்யாணத்தை வச்சுக்கலாம்? வீட்டில் எதுவும் சொன்னாங்களா?”

ருத்ரா பதில் சொல்லு முன் அம்மு முந்தி கொண்டாள்.”உன்னோட கல்யாணம் முடிஞ்ச அடுத்த முகூர்த்தத்தில் எங்கள் கல்யாணம்.” என இருவர் தலையிலும் இடியை இறக்கினாள்.

‘இவனுக்கு எப்ப பொண்ணு பார்த்து? எப்ப கல்யாணம் பண்றது? அப்ப நான் சாமியாரா போக வேண்டியது தானா?’ ருத்ரா அரண்டு விட்டான். ‘இவ என்கூட நடக்குற கல்யாணத்தை தடுக்க எதுவும் ப்லன் பண்ணுறாலோ?’ என சந்தேகமாக அவள் முகத்தை கண்டான். அங்கு அதுமாதிரி எதுவும் இல்லை. ஒரு பெருமூச்சுடன்,’ச்ச ச்ச! என்னோட அம்மு அப்படி பண்ணமாட்டா. அவ ரொம்பபப நல்லவ. அப்ப அப்ப பீதியை மட்டும் கிளப்புவா.’ என தனக்கு தானே சமாதானம் சொல்லி கொண்டான்.

ரிஷியோ வார்த்தைகள் வராமல் திருதிருவென முழித்து நின்றான். “பிந்து கிட்ட எப்ப பேச போற வரு?” என அடுத்த கேள்வியை முன் வைத்து, ருத்ராவின் வயிற்றில் பாலை வார்த்தாள்.

“கண்டிச்சிட்டியா?” என அசட்டு விழிந்தான்.

‘உன்னை என்னையின்றி வேறு யார் அறிவார்?’ என குறும்பு சிரிப்போடு அவனை பார்த்து நின்றாள் மிரு. அவர்களை பார்த்த ருத்ராவிற்கு, இப்போது பொறாமை வரவில்லை. தானும் இப்படி அவளுடன் மனமொத்து வாழ வேண்டும் என ஆசைதான் வந்தது.

“மிரு எனக்கு உன் சிஸ்டரை. என்னை தப்பா நினைச்சுடாத மிரு” அவனுக்கு சங்கடமாக இருந்தது.

“வரு மாமா! பிந்துவுக்கு உன்னை விட நல்ல மாப்பிள்ளை கிடைச்சிடுவானா?” அவனது சங்கடத்தை தீர்தாள் வருவின் மிரு.

“மாமாவா?” என்றான் மகிழ்ச்சியாக.

“அக்கா ஹஸ்பண்ட மாமானு கூப்பிடாம, தேவானா கூப்பிட முடியும்? போயா போ. சீக்கிரம் போய் உன் லவ்வை சொல்லி கல்யாணத்தை பண்ணு.” என அவனை விரட்டினாள் பிந்துவிடம் பேச. 

இப்போது ரிஷி எந்த சங்கடமும் இல்லாமல், மகிழ்ச்சியோடு, பிந்து தனித்திருந்த வீட்டுக்குள் நுழைந்தான். 

தங்கை திருமணத்திற்கு சம்மதித்த மகிழ்ச்சியை கொண்டாட பிந்து கேசரி செய்து கொண்டிருந்தாள். அவளுக்கு நெருக்கமாக சென்றவன்,”பிந்து” என்றான் பட்டுப் போன்ற மென்மையான குரலில்.

அருகில் கேட்ட குரலில் பயந்து திரும்பினாள் பெண். தன்னை தொட்டு விடும் தூரத்திலிருந்த ரிஷியை கண்டு அரண்டுவிட்டாள்.

“என்… வேணு…?” வாய் தந்தியடித்தது.

“பயந்துடயா?” எனத் தன் தலையை கோதி அசடு வழிந்தான்.

பெண் எல்லா பக்கமும் மண்டையை உருட்டினாள். “நம்ம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?” நேரடியாக கேட்டுவிட்டான்.

என்ன சொல்வது? என தெரியாமல்,”அம்முக்கு பிடிச்சா? எனக்கும் சம்மதம்.” என்றாள் மென்மையாக.

“மிருவுக்கு என்னை பிடிக்கும் என்பது, உலகறிந்த ரகசியம். நான் கேட்டது உன்னை பற்றி?”

“எனக்கும் உங்களை பிடிக்கும்.” என்றாள் முகம் சிவக்க. அதில் மகிழ்ந்து போன ரிஷி அவள் கன்னத்தில் முத்தமிட்டு ஓடி விட்டான். பெண் நின்ற இடத்தில் சமைந்து போனாள்.

†††††

மித்ராவும் ருத்ராவும், தங்கள் சொந்தக்கதையில் நடித்த படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்திருந்தது. அடுத்த கட்ட வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அது முடிந்த பிறகு திருமணம் என முடிவு செய்தனர்.

இதோ அடுத்த இரண்டு மாதத்தில் அனைத்தும் தயாராகி விட்டது. பட வெளியீட்டுக்கு நல்ல நாள் குறிக்கப்பட்டது.

அதே நேரம் சகோதரிகள் இருவருக்கும் ஒரே தேதியில் திருமணம் குறிக்க, அம்மு மறுத்து விட்டாள். என்னோட பிந்து, வருவோட கல்யாணத்துக்கு, நான் தான் எல்லாம் செய்யணும். அதனால அடுத்த முகூர்த்தத்தில் எனக்கும் ருத்ராவுக்கும் தேதி குறிங்க என்று விட்டாள். 

அவள் சொல்லுவது அனைவருக்கும் சரியாக பட, ரிஷி பிந்துவின் திருமணத்துக்கு நாள் குறிக்கப்பட்டது. அதற்கு அடுத்த இரண்டு நாளில் வந்த முகூர்த்ததில், ருத்ரா, அம்முவின் திருமணம் என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

என்ன அதிசயம்? அவர்கள் திருமண தேதியும், பட வெளியீட்டு தேதியும் ஒன்றாக அமைந்தது, இறைவன் வகுத்த கணக்கோ?

இது அனைத்தையும், அந்த அறையிலிருந்து யோசித்துக் கொண்டிருந்த அம்முவின் முகம், மகிழ்ச்சியில் ஜொலித்தது,’தன் சொந்தங்களின் புரிதலை நினைத்து.’

†††††

அடுத்த இரண்டாவது நாள், நாதஸ்வர மேளங்கள் இசையமைக்க, சுற்றதார் சொந்தங்கள் அர்ச்சனைத் தூவ, தேவர்கள் ஆசிர்வதிக்க, தன் நீலாம்பரியின் சங்கு கழுத்தில் மாங்கல்யம் அணிவித்து, தன் சரி பாதியாக ஆக்கிக் கொண்டான், நீலாம்பரியின் கட்டவண்டி. 

ரிஷிக்கும், கிரிதரனுக்கும் என்ன முயன்றும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை. பிந்து ஆதரவாக ரிஷி தோள் சாய்ந்தாள். கார்த்திக் உட்பட குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திலைத்தனர்.

அதே நேரம் அவர்களின் படம், திரையரங்குகளில் முதல் காட்சி திரையிடப்பட்டது. படத்துடன் இணைந்து மக்களும் சிரித்தார்கள், அழுதார்கள், நெகழ்ந்தார்கள், மொத்தத்தில் படத்துடன் உருகி கரைந்தார்கள். படம் முடிந்து வெளியே வந்தவர்களின் முகம் திருப்தியை காட்டியது. படம் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட் என மனம் அடித்து சொன்னது.

இப்போது மண்டபத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி நிறைந்திருந்தது. அதே மகிழ்ச்சி காலம் முழுவதும் அவர்கள் வாழ்வில் நிலைத்திருக்க, நாமும் வாழ்த்தி விடை பெறுவோம்.

இதுதானா இதுதானா

எதிர்பார்த்த நாளும் இதுதானா?

இவன் தானா இவன் தானா

மலர் சூட்டும் மணவாளன் இவன் தானா?