நெஞ்சத்தில் நீ, வஞ்சத்தில் நான் -30 (பைனல்)

நெஞ்சத்தில் நீ, வஞ்சத்தில் நான் -30 (பைனல்)

 காதல் அழகு,

 காதலிப்பது அழகோ அழகு,

 காதலிக்கப்படுவது அதனினும் அழகு|

(சும்மா எழுதுவோம் காசா பணமா…)

 

இங்கு தேவ் காதலிக்கிறான், ஆத்மி காதலிக்கப்படுகிறாள், பொதுவாக இருவரும் காதலிப்பர் அது ஒரு வகை அழகு.

 

ஒருவன் ஒருத்தியை உயிராய் நேசிக்கிறான், அதை அவளுக்கு புரிய வைத்து காதலிக்க வைப்பது அழகோ அழகல்லவா. அது தான் இங்கே நடக்கிறது.

 

தேவ்வின் வானம் போன்ற காதலை உணர முடியாத சிறு பறவையாக இருக்கிறாள் தேவ்வின் மில்கி. ஆத்மியின் கனவு. விவசாயத்தை முன்னிருத்தி ஒரு செயலி, அது அவளது கனவு, சிறு வயது முதலே கண்ட கனவு, அதற்காக இரவு பகலும் உழைத்தாள்.

 

 ஆனால் அதற்கு மேல் அதை எப்படி செயல்படுத்த என்று அவள் புரியாது விழிக்கவே, அதை கிடப்பில் போட்டிருந்தாள், இந்த செயலியை ஒரு நிறுவனம் வழங்கினால் அதற்கான அங்கீகாரம் சீக்கிரத்திலும், உடனடியாகவும் வழங்கப்படும், ஆனால் தனி ஆளாய் ஆத்மி அதை செய்வது முடியாத விஷயமே.

 

விவசாய மக்களிற்கு உதவும் வகையில், வானிலை ஆய்வறிக்கை செயலியை நிறுவ நினைத்தாள், அதில் சில புதுமையான மாற்றத்தையும் கொணர்ந்தால் அது இந்த சமயத்தில் எதை விதைக்கலாம் எது அதிக லாபம் தரும் போன்ற விஷயங்கள், அதை இரண்டு மொழிகளில் வழங்க திட்டமிட்டாள் தமிழிலும், ஆங்கிலத்திலும் முதல் கட்டமாக அதற்கான அனைத்து வேலைகளையும் திறம்ப்பட செய்து முடித்திருந்தாள்.

 

அதை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியையே தேவ் இப்பொழுது கையில் எடுத்திருந்தான்.அதில் முழுமூச்சாய் அவன் இறங்கியிருக்க.

 

***********

 

இங்கே, அந்த ஆத்விகா எனப்பட்டவள், தேவ்வை காண வந்திருந்தாள், வந்தவள் தேவ் அவன் வீட்டில் இல்லாததை கண்டு வருத்தத்துடன் திரும்ப அந்த வீட்டின் வாட்ச் மேன் இப்பொழுது அவர்கள் இருக்கும் வீட்டை காட்டியிருந்தான், அங்கு சென்றவள்.

 

காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருக்க, கதவை திறந்தாள் ஆத்மிகா, வந்தவளை அடையாளம் தெரியாது இவள் முழிக்க, கண்முண் கண்டவளை அடையாளம் கண்ட இவளோ “ஹாய் ஆத்மிகா” என்றாள் புன்னகையோடு.

 

அவள் மேலும் விழிக்க, “அட உள்ளே விடுங்க, ஏன் பேய் பிசாசை பார்த்த மாறி முழிக்கிறீங்க, நான் மனுசி தான், இங்க பாருங்க ரெண்டு கால் இருக்கு”என்று அவள் காலை காண்பிக்க பொக்கென்று சிரித்துவிட்டாள் ஆத்மி.

 

“நீங்க மனுசிதான் அதை நான் ஒத்துக்கிறேன், ஆனால் மனுசியோட பேரு, ஊரெல்லாம் என்னவா இருக்கும்ணு விழிக்கிறேன்”என்றாள்.

 

“உள்ள விட்டா சொல்றேன்”என்றாள் ஆத்விகா.

 

“அது எப்படி விட, நீங்க மயக்கம் மருந்து அடிச்சு எல்லாத்தையும் திருடிட்டு போய்ட்டா”என்றாள் ஆத்மிகா வெகு நாட்களுக்கு பின் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தாள்.

 

“ஏங்க… ரொம்ப உஷாராத்தான் இருக்கீங்க”என்று அதிசயித்தவள்.”நான் உங்க கணவர் தேவ்வின்…”என்று அவள் இடைவெளி விட.

 

அதில் உடல் விறைக்க தானாய் ஒதுங்கி நின்றுக்கொண்டாள் ஆத்மிகா, அதை பொஸஸிவ்னஸ் என்று வழக்கம்போல் அவள் தவறாய் நினைத்துக்கொண்டாள்.

 

உள்ளே சென்று அமர்ந்தவள், அவளை கண்டுக்கொள்ளாது செல்ல… அதில் பயந்தவள் “ஹலோ, ஏங்க நான் கணவரோட தங்கை மாதிரி, ஆத்தாடி நீங்க இவ்ளோ பொஸஸிவ்னு தெரியாம போச்சே…”என்று மேலும் கடுப்படிக்க.பற்களை நறநறத்துக்கொண்டாள் ஆத்மி.

 

“டீ, காப்பி கொடுக்கிற பழக்கம் இருக்கா இல்லை உங்க வீட்டுல”என்று அவள் அதிகாரம் தூள் பறக்க, எங்கேயாவது போய் முட்டிக்கொள்ளலாம் போல் இருந்தது ஆத்மிக்கு. இருந்தும் வேறு வழி இல்லாது போனால் போகட்டும் என்று காப்பியை கலந்து அவளிடம் கொடுத்தாள்.

 

ஒரு மிடறு அதை உறிஞ்சியவள், “தேங்க்ஸ் நைஸ் காப்பி”என்றாள். அதற்கு ஆத்மி மில்லி மீட்டர் சிரிப்பு சிரித்தவள், மறுபடியும் உள்ளே செல்ல நினைக்க. அவள் கையை பிடித்து தடுத்தவள் “இங்க வாங்க”என்று அவள் பக்கத்தில் அமர்த்திக்கொண்டாள்.

 

அவளது கைகளை பற்றிக்கொண்டவள், “சாரி…ஆத்மிகா, என்னால உங்களுக்கு பெரிய கஷ்டம், உங்க வாழ்க்கையையே மாற்றிட்டேன்…”என்று அவள் வருத்தம் தெரிவிக்க, ஒன்றும் புரியாது அவள் குழப்பமாக அவளை பார்க்க, அவளது ரியாக்ஷனை கண்டுக்கொள்ளாது அவள் தொடர்ந்தாள்.

 

“நான் உங்களை மாட்டி விடணும்னு எதுவும் பண்ணலை, நீங்க தான் அந்த வீட்டுக்கு வந்திருக்கீங்கனு முன்ன எனக்கு தெரியாது, ஆனால் எனக்கு பதிலாக தேவ் உங்களை தப்பாக நினைத்ததும் இதுவும் நல்லது தான் நம்ம தப்பித்தோம்னு சுயநலமா இருந்துட்டேன், ஆனால் அது மட்டும் காரணம் இல்லை, தேவ் உங்களை விரும்புறாரு உங்களை கஷ்ட்டபடுத்த மாட்டார்னு நினைத்து தான் விட்டேன், பட் ஐ எம் சாரி…”என்றாள் உளமாற.

 

அதிர்ந்தாள் ஆத்மி, காதல்? தேவ் என்னையா? இது என்ன புது கதை ? தலையை சுற்றியது ஆத்மிக்கே  பாதி புரிந்தது, பாதி புரியவில்லை…’இதற்கு மேல் முடியாது’என்று நினைத்தவள் தடாலடியாக அவளை முறைத்தாள்..

 

“என்ன நடந்துச்சுனு மரியாதையா தெளிவா சொல்லு”என்று மிரட்ட.

 

“என்ன மிரட்டுறீங்க?”என்று அவள் பயத்தில் கேட்க.

 

“ம்க்கும், நீ நடந்ததை சொல்லலைன்னா அடிக்க கூட செய்வேன், அதுக்கு முன்ன நீயே சொல்லிடு”என்று ஆத்மி ஒரு புருவத்தை தூக்கி மிரட்ட.

 

பயத்தில் வாய் தந்தி அடித்தாலும் அனைத்தையும் சொல்லி முடித்திருந்தாள். அதாவது அவள் ஏன் தேவ்வை போட்டுக்கொடுத்தால் என்றும் இவள் எப்படி மாட்டினாள் என்பதையும் அவள் கூறி முடித்து ஆத்மியை பார்க்க.

 

அவளை எரிக்கும் பார்வை பார்த்தவள் கழுவி கழுவி ஊற்றினாள், அவளின் கிழி கிழி என்ன பேச்சில் வாய் பொத்தி அமர்ந்துவிட்டாள் ஆத்விகா.

 

“என்ன நினைச்ச என்னை? இதுல காப்பி கேட்குதோ உனக்கு, முன்னமே தெரிஞ்சிருந்தா காப்பில பேதி மாத்திரை கலந்திருப்பேன். எவ்ளோ தைரியம் இருந்தா இதை வந்து தைரியமா சொல்லுவ? எல்லாம் கேட்டுட்டு டிபிக்கல் ஹீரோயின் மாதிரி, இட்ஸ் ஓகேடா சொல்லுவேன் நினைத்தியா? நான் அவ்ளோ நல்லவள் கிடையாது புரியுதா? நான் கொலைகாரியா மாறுவதற்குள் ஓடிவிடு…”என்று கத்த கைப்பையை எடுத்துக்கொண்டு ஓட தயாரானவளை.

 

“ஒரு நிமிஷம்”என்று தடுத்தவள், அவள் பயத்தில் நடுங்கியபடி திரும்ப “ஏதோ காதல்ன்னு சொன்னீயே? அதை பற்றி எதுவும் சொல்லவே இல்ல”என்று மிரட்ட.

 

“கா…கா..தல்… என்று அவள் பிதற்ற”

 

“ஏன் உன் வாய் டைப் அடிக்குது நான் வேணும்னா உன் வாய் நல்லா பேச ஹெல்ப் பண்ணவா?”என்று அவள் கைகளை முறுக்க அதில் பயத்தவள்.

“இல்லக்கா, அது வந்துக்கா அது பத்தி எங்க அக்காக்கு தான் நல்லா தெரியும் அவ நம்பர் நோட் பண்ணிக்கோங்க, அவ கிட்டையே கேளுங்க”என்று மூச்சுபிடித்து அவள் பேச.

 

“சரி, சொல்லு”என்று தன் மொபைலில் அதை பதிந்துக்கொண்டவள். “சரி ஓடு..”என்று அவளை விரட்ட மாயமாய் மறைந்திருந்தால் ஆத்விகா.அவள் சென்றதும் பொக்கென சிரித்துவிட்டாள் ஆத்மி.  

 

“உன்னை வச்சு கொஞ்ச நாளைக்கு பன் பண்ணலாம்,”என்று சொல்லிக்கொண்டாள் ஆத்மி.

 

வெகு நாட்களுக்கு பிறகு அவள் சிறிது மீண்டிருக்கிறாள்…

 

ஆவலை அடக்க முடியாது உடனே, அழைத்திருந்தாள் அந்த எண்ணிற்கு அழைத்தவள், அழைப்பு எடுக்கப்பட்டதும் “ஹலோ, நான் ஆத்மி” என்றாள் எடுத்தவுடனே.

 

“ஆத்மி யாரு?”என்றார்கள் அந்த பக்கம்.

 

‘என் பெயரே இவங்களுக்கு தெரியல, அப்புறம் எப்டி அவன் என்னை காதலித்திருக்க முடியும்? ஒரு வேலை இவர்கள் பொய் சொல்கிறார்களோ’என்று அவள் மனம் நினைத்து முடித்தது.

 

“ஹலோ, யாருங்க வேணும்?”என்று மறுமுறை கேள்வி வர தன்னை மீட்டுக்கொண்டவள்.

 

“உங்களுக்கு தேவ் அநபாயனை தெரியுமா?”என்றாள்.

 

“ம், தெரியும், நீங்க?”என்றார்.

 

இவளுக்கு என்ன சொல்லி தன்னை அறிமுகப்படுத்தவென்று தெரியவில்லை, தன்னை அவனது மனைவி என்று அறிமுகப்படுத்த மனமில்லை, அதனால் அமைதியாய் இருந்தவள், “அவரை பற்றி சொல்லுங்க?”என்றிருந்தாள்.

 

“அவரை பற்றி உங்க கிட்ட ஏன் சொல்லணும்? முதலில் யார் நீங்க?”என்றாள் அவள்.

 

வேறு வழியில்லை என்று நினைத்தவள் “ரீசன்ட்டா அவரை பற்றி நியூஸ் என்ன பார்த்தீங்க? என்று இவள் எதிர் கேள்வி கேட்க அந்த பக்கம்  கடுப்பானவள் கால்லை வைத்திருந்தாள்,சரியாக  ஆத்விகா இந்த நேரம்  மெசேஜ் அனுப்ப அதை செக் செய்தவள் இவளை கண்டுக்கொண்டாள்.உடனே அழைத்தவள்.

 

“ஹேய் நீ தேவ் வைஃப்பா? சொல்ல வேண்டிதானே முதலிலே”என்றாள் மகிழ்ச்சியோடு.

 

“சரி தெரிஞ்சிடுச்சுல அவனை சாரி அவரை பற்றி சொல்லுங்க?”என்றாள் ஆத்மி.

 

“என்ன எதிர்பாக்குறீங்கனு கரெக்டா சொல்லுங்க, இப்படி மொட்டையா கேட்டா?என்று அவள் நேரம் காலம் தெரியாமல் வாற, தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவள்.

 

“அவருடைய காதல் பத்தி சொல்லுங்க?”என்றாள் பொறுமையை இழுத்து பிடித்து.

 

“அவனுடைய காதல் நீதான்”என்றார் சிம்பிளாக.

 

“ம்கும் என் பேரே உங்களுக்கு தெரில, இதுல போங்க பேசாம,”என்றாள்.

 

“ஹே, உன் பேரு எனக்கு தெரியாது மா, அவன் காதலிக்கிறேன்னு சொல்லுவான், உன்னை பற்றி கேட்போம், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அழகி அவ, அவளை பத்தி சொல்ல தமிழில் என்ன உலகத்திலே வார்த்தையில்லன்னு ரோமியோ ஆகிடுவான், நீங்க அவளை பாக்கணும்னா எங்க கல்யாணத்துல வந்து பாருங்கன்னு சொல்லிட்டான், அப்றம் ரொம்ப வற்புறுத்தி பேரு கேட்டப்போ, எனக்கு தெரியாது ஆனால் அவளுக்கு நான் வைத்த பேரு மில்கி என்று கூறினான், அவ்ளோதான் மா”என்றார் ஒரு நீண்ட விளக்கமாக.

 

ஆத்மி இன்பமாக அதிர்ந்தாள், இதை நம்பவும் முடியவில்லை,நம்பாமல் இருக்கவும் முடியலை…அவள் அமைதியை கண்டவள்.

 

“இருக்கீங்காளா?”என்க, “ஹான் இருக்கேன், அவ…அவர் என்னை எப்போ இருந்து லவ் பண்றார்?”என்றாள் ஆவலாக.

 

“அது தெரியலமா, சின்ன பிள்ளையிலே இருந்தேன்னு சொன்னான்?”என்றாள் அவள்.

 

“என்ன…”என்று அதிர்ந்தவள், “எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, இதை நம்பவும் முடியல”என்க.

 

“என்னம்மா இப்படி சொல்ற சரி, இன்னொன்னு சொல்றேன், உன் பர்த் டேக்கு இதுவரை  திடீர்னு பெயர் ஊரு போடமா எதுவும் கிப்ட் வந்திருக்கா?”என்று கேட்க.

 

இப்பொழுது தன் காதுகளை கூர்மை ஆக்கியவள்,”ஆமாம்”என்றாள் பரபரப்பாக.

 

“ம், உனக்கு சூப்பர் கிப்ட் அனுப்பபோறேன்னு சொல்லிட்டுயிருந்தான், உனக்காக டெல்லி போய் வாங்கிட்டு வந்தான், என்னனு காட்ட மாட்டேன் சொல்லிட்டான், எவ்ளோ கெஞ்சினேன் தெரியுமா? சரி அதுல என்ன இருந்தது?”என்று அவள் கேட்க.

 

அதிர்ச்சியில் உரைந்தவளோ, இம்முறை “தெரியலை… ஒரு இரும்பு பெட்டி வந்தது, பூட்டியிருந்தது, உன் முன் ஒரு நாள் சாவியோடு வருவேன், உன் இதய கதவை திறப்பேன் அதில் என் இதய கதவு இருக்கும்னு”இருந்தது அவ்ளோ தான்.

 

“அப்போ நீயும் இன்னும் பாக்கலையா? பார்த்திட்டு சொல்லு அவன் கிட்ட சாவி கேளு? அது இருக்கட்டும், எங்க அந்த பரதேசி, என்கிட்ட பேசி வருசமாகுது, அவனை கூப்பிடு”என்று அவள் பரபரக்க.

 

சிரித்தவள், “அவர் இல்லை , வெளியே போயிருக்கார், வந்ததும் சொல்றேன், தாங்க் யூ”என்றாள் உளமாற.

 

“இட்ஸ் ஓகேமா” என்று அழைப்பை துண்டிக்க.

 

சிறிது நேரம் பூனை நடை பயின்றவள், அவனது அறையை சோதிக்க சென்று விட்டாள், எதையாவது கண்டுப்பிடிப்போம் என்று.

 

சாரதாவிடம் சொல்லிவிட்டு அவனது பெரிய பங்களாவை அடைந்தவள் அவனது ரூமிற்கு சென்றாள். அழகாக , நேர்த்தியாக இருந்த அறையில் அவனது படுக்கைக்கு நேர் எதிராக ஒரு ஓவியம், அதில் ஏதோ வித்தியாசமாய்ப்பட, அந்த புகைப்படத்தின் அடியில் ஒரு லிக்விட் இருக்க அதை அடுத்து அந்த புகைப்படத்தில் தடவ அதில் ஒரு உருவம் தெரிய ஆரம்பிக்க . இன்பமாய் அதிர்ந்தால் ஆத்மி அவளது புகைப்படும், அவளது இருபத்தி ஓராவது பிறந்தநாளைக்கு எடுத்தது.

 

“எனில் என் பிறந்தநாளில் அவன் இருந்தானா? அதே ட்ரெஸ் இவ்வளவு நேர்த்தியாக வரைந்திருக்கிறது? யார் வரைந்தது. கண்களை சிமிட்டாமல் அதை பார்த்தவள், அடுத்து வேறு எதுவும் கிடைக்குமா என்று ஆராய ஒரு டைரி.

 

அதில் ஆத்மியை அவன் சந்தித்த நிகழ்வுகள் மட்டுமே, அவளை அவன் எந்தெந்த வயதில் சந்தித்தானோ, அதே வயதில் அவள் ஓவியம் அவளது தலை எப்படி இருந்ததோ, என்ன அணிகலன் அணிந்திருந்தாலோ, எல்லாமே அப்படியே இருக்க கண்கள் ஆச்சியத்தில் மின்ன,

 

அதற்கு கீழே அழகான கவிதை,அதை படித்தவளின் மனது ஆனந்த கூத்தாடியது, இப்படி ஒருத்தன் என்னைய லவ் பண்ணியிருக்கானா? எனக்கே தெரியாம? அந்த பரிசை நான் இது ஏதோ விளையாட்டுனு நினைத்தேனே.

 

அந்த டைரியை தன் மார்போடு அணைத்தவளின் கண்களில் கண்ணீர், “இத்தனை லவ், நீ என் காதல் தேவனாய் மட்டும் இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும்? இடையில் நடந்ததை என்னால் மாற்ற முடியாதே, மறக்கவும் முடியாதே, மன்னிக்கவும் முடியாதே…” என்று மடங்கி அமர்ந்து கதறி அழுதாள்.

 

*************

மறுநாள் காலை, 

 

காலை நியூஸ் சேனலை போட்ட அறிவழகன் அதில் ஒளிப்பரப்பான செய்தியில் மகிழ்ந்து “ஆத்மி மா”என்று அழைத்திருந்தார்.

 

அவளும் ஓடி வந்து என்னவென்று பார்க்க மறுபடியும் இன்பமாய் அதிர்ந்தாள், “அவளது செயலி அங்கீகரிக்கப்பட்டு, பெரிய பெரிய அரசியல் தலைவர்களால் இவளுக்கு வாழ்த்துக்கள் வந்தவன்னம் இருக்க, மறுபடியும் அவளது கண்கள் கலங்கியது ஆனந்த கண்ணீர்.

 

“யாரு?”என்று தழுதழுத்த குரலில் அவள் கேட்க, அங்கு தேவ் ஒரு புகைப்படத்தில் நிற்பது தெரிய, “இவன் தானா” என்றாள் அதிர்ச்சியோடு…

 

அன்றைய நாள் முழுக்க சோசியல் மீடியா பக்கத்தில் அதிக பாராட்டுக்கள் இவளுக்கு கிடைக்க திக்குமுக்காடிவிட்டாள் ஆத்மி.

 

அன்று இரவு வெகு நேரம் முழித்திருந்தவள், ஒரு முடிவோடு, தேவ்விற்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தாள், “கம் டூ இந்தியா”என்ற ஒரே வரி செய்தி அது.

 

அதை படித்த தேவ், இங்கு இதற்கு மேல் வேலை இல்லாததால் கிளம்பியிருந்தான், இந்தியாவை அடைந்தவன், நேராக லாயரை பார்த்து டிவோர்ஸ் பேப்பர்ஸை வாங்கி வந்தான்.

 

அதை வாங்கியவன் கனத்த மனதோடு வீடு வந்தவன், காலிங் பெல்லை அழுத்த ஆத்மி வந்து திறக்க, அவளுடைய முகத்தை பாராது சென்றவன், டேபிள் மேல் டிவோர்ஸ் பேப்பர்ஸை வைத்தான்.

 

அதை திறந்து பார்த்த ஆத்மி டிவோர்ஸ் பேப்பர்ஸை பார்த்து எந்த வித உணர்ச்சிகளையும் காட்டாது கையெழுத்திட்டாள்.

 

********* அடுத்த பதிவு எப்பி லாக்*********

 

 

Leave a Reply

error: Content is protected !!