😍உணர்வை உரசி பார்க்காதே! 18😍

20211124_190527-fd27f672

😍உணர்வை உரசி பார்க்காதே! 18😍

🌹அத்தியாயம் 18

சஷ்டி, விகுஷ்கியின் செயல்களை உற்று நோக்குவதில் கவனம் செலுத்தினாள். “அண்ணா, அண்ணி கூட பேசுனீயா?” 

“எதுக்கு நான் அவ கூட பேசணும்?” 

“உன் பொண்டாட்டிதானே! அதான்.” 

“போண்டா டீ எனக்கு புடிக்காது” 

“காமெடி பண்றேனு மொக்க போடாத ணா. ஓகே ணா, விஷயத்துக்கு வருவோம். ஊட்டிக்கு ஹனிமூன் போயிட்டு வாரீங்களா?” 

“ஏய் நீ சின்ன புள்ள இதை பத்தியெல்லாம் பேசக்கூடாது” 

“என்ன சின்ன புள்ள, எனக்கும் கார்த்திக்கும் கல்யாணம் பேசும்போது, நாங்க எங்க ஹனிமூன் போறோம்னு கேட்டதானே! அப்போ நான் சின்ன புள்ளையா தெரியலயா?” 

“அது வேற, இது வேற டா. இருக்குற கேஸயே என்னால சமாளிக்க முடியல இதுல அந்த லூச வேற என் தலையில கட்ட பார்க்குற.” 

“என் அண்ணி உனக்கு கேஸ் மாதிரி தெரியுறாங்களா?” என்று முறைத்துப் பார்த்தாள். 

“ஏன் சஷ்டி மா இப்படி கேக்குற?” 

“அண்ணி மேல கொஞ்சகூட லவ் வரலயா ணா?” என்று இளகிய குரலில் இறைஞ்சிக் கேட்டாள்.

“இல்ல சஷ்டி.” என்று வேண்டா வெறுப்பாய் கூறினான். 

“அப்பறம் ஏன் ணா அண்ணிய கிஸ் பண்ண?” 

“அவ்ளோ சீக்கிரம் இதெல்லாம் சொல்லிட்டாளா, கிஸ் பண்ணதுக்கு காசு குடுத்துட்டேன் மா.” 

“என்ன? காசு குடுத்தியா, கார்த்திக் என்னைய கிஸ் பண்ணதுக்கு நானும் கார்த்திக்கிட்ட காசு கேக்கட்டா ணா?” 

விகுஷ்கி கோபத்துடன், “சஷ்டி!” என்று கர்ஜனை செய்தான். 

“உன் தங்கச்சி விஷயத்துல உன்னோட கோபம் நியாயமானது ணா. பட் நீ அண்ணிக்கு பண்றதெல்லாம் அநியாயம். ஒரு நாளைக்கு ரொம்ப ஃபீல் பண்ண போற.” என்று சஷ்டி கவலையுடன் கூறினாள். 

**** 

மீத்யுகா விளையாட்டு மைதானத்தில், மாதவிடாய் நிகழாததால் வேகமாக நடக்க முடியாமல் ஓட முடியாமல் அவஸ்தைக்கு உள்ளானாள். 

“கேர்ள்ஸ் பால(பந்து) கேச் பண்ணதும் அசையாம அப்படி இருந்து, கோல் சூட் சைட் உங்க டீம் பார்ட்னருக்கு பாஸ் பண்ணுங்க. அட் த சேம் டைம் ஆப்போசீட் டீம் கைக்கு பால் போகக்கூடாது. அண்ட் ஆப்போசீட் டீம் போல எப்படியாவது தட்டி எடுக்க டிரை பண்ணணும்.” என்று விளையாடும் மாணவர்களை ஊக்குவித்துக் கொண்டிருந்தாள். 

கையில் பந்தை வலையத்தில் இட முயலும் போது, எதிரணியினர் பேற்று காவலன் அல்லது பேற்றிடக் காவலன் வலையத்தில் பந்து இடும் போது தடுக்க வேண்டும். அப்படித்தான் இப்போதும், “டிஃபேன்ஸ் டிஃபேன்ஸ், சிந்து டிஃபேன்ஸ்.” என்று சத்தமாகக் கத்தினாள். 

சிந்து, விளையாடும் மாணவி, “சிந்து உன் கான்சன்ட்ரேஷன் பால எப்படி தடுக்குறதுன்னு மட்டும்தான் இருக்கணும். நல்லா ஜம்ப் பண்ணு.” என்றிட, சிந்து தள்ளியது போதவில்லை. மீத்யுகாவிற்கு சற்று கடுப்பானது. 

“டைம் ஓவர்!” என்றாள் திவ்யா.

“கேர்ள்ஸ் எல்லாரும் ஜம்ப் பண்ணுங்க. நான் பார்க்கணும். சிந்து நீ ஹயிட்டா இருக்க சோ நல்லா ஜம்ப் பண்ணு ஈசியா பால் கேச் பண்ணிருவ.”  

மாணவர்கள் குதிப்பதை பார்த்து மீத்யுகாவும் திவ்யாவும் சேர்ந்து குதித்தனர். மீத்யுகா இரண்டு முறை குதித்தாள் அப்படியே நின்றுவிட்டாள். 

“என்ன மீயூ, ஜம்ப் பண்ணலயா?” என்று திவி கேட்க, “நீ ஜம்ப் பண்ணு திவி நான் பசங்கள பார்க்குறேன்.” என்று கூறிவிட ஒரு நிமிடம் மீத்யுகாவின் நினைவலை சிதறியது. 

‘ஜம்ப் பண்ணக்கூட பயமா இருக்கே, ஒரு வேளை பேபி ஃபார்ம் ஆகி இருக்குமோ, ஆனா எனக்கு வாமிட்டிங்க், தலை சுத்து இந்த மாதிரி எந்த ஃபீலுமே இல்லயே. 

அப்போ ஜம்ப் பண்ணலாமா? ஒரு வேளை பேபி ஃபார்ம் ஆகி, நான் தெரியாம ஜம்ப் பண்ணா, பேபிக்கு எதும் ஆகிருச்சின்னா?

நான் கன்சிவா இருக்கதா சொன்னா, விகுஷ்கியோட ரியாக்ஷன் எப்படி இருக்கும். ரெண்டு நாளைக்கு அப்பறம் செக் பண்ணுவோம்னு நெனச்சேன். பட் இப்போ நாலு நாள் ஆச்சு! நான் எதுக்கு இப்போ பேபி இருக்கதா நெனச்சிட்டு இருக்கேன்?’ ஒரு மாதவிடாய் நிகழாததால், எத்தனை மனபிராந்தி மீத்யுகாவிற்கு. 

“கோச் மீத்யுகா! கேர்ள்ஸ் ஜம்ப் பண்றத பார்க்குற மாதிரி தெரியலயே?” என்று திவ்யா, மீத்யுகாவின் சிந்தனை திசை திரும்பியதை கவனித்திருந்தாள். 

“அப்படி இல்ல திவி” என்று சாதுவாய் கூறிவிட்டு, “கேர்ள்ஸ் நெக்ஸ்ட் வீக் வர மேச்ல  வின் பண்றோம் ஓகே.” 

“யெஸ் கேச்” எல்லோரும் ஒரே நேரத்தில் கூறினர்.

“மார்னிங்க் ஃபைவ்வுக்கு எழும்பி சிக்சுக்கு இங்க வந்துரணும். பிராக்டீஸ் ஸ்டார்ட் பண்ணுவேன். ஒழுங்கான டிரஸ் எடுத்துக்கோங்க. நெயில் கட் பண்ணுங்க. ஜுவல்ஸ் எதுவும் போடதீங்க. டைமிங்க் கீப்பப் பண்றது ரொம்ப முக்கியம். ஓகே கேர்ள்ஸ் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க.” அனைவரும் ஓய்வாக அமர்ந்து கொண்டனர். 

“மீயூ, என்னாச்சு? ஏன் அப்செட்டா இருக்க?” என்று மீத்யுகாவின் காதின் அருகே மெதுவாக கேட்டாள் திவ்யா.

“பீரியட்ஸ் வரல டீ” என்று மீத்யுகாவும் திவ்யாவுடன் காதில் மெதுவாக கூறினாள். 

அதை கேட்டவுடன் திவ்யாவுக்கு தூக்கிப்போட்டது. வேறு புறம் திவ்யாவை அழைத்து சென்றாள். 

“என்ன டீ அசால்ட்டா சொல்ற, என் வயித்துல புளிய கரைக்கிற மாதிரி இருக்கு, நீ ஜாலியா இருக்க மாதிரி சொல்ற?” 

“நான் ஜாலியா இருக்கேனு சொல்ற, அப்பறம் ஏன் அப்செட்டா இருக்கியானு கேக்குற, நீ என்ன லூசா திவி?” என்று திவ்யாவை கிண்டலடித்தாள். 

“ஆமா மீயூ இந்த கிண்டல்தான் இப்போ ரொம்ப முக்கியம். எத்தன நாள் பீரியட்ஸ் வரல?” 

“இன்னையோட ஒன்பது நாள்.” 

“என்னது, இவ்ளோ நாள் ஆகிருச்சா? நீ என்னான ஓடுற குதிக்கிற, உனக்கு பயமே இல்லயா?” 

“பேபி ஃபார்ம் ஆகியிருக்குமோனு பயமாதான் இருக்கு. அதான் டூ ஸ்டெப்ஸ் ஓடுறேன் அப்பறம் நிக்கிறேன். ரெண்டு ஜம்ப் பண்றேன் நிக்கிறேன். பயமா இருக்கு திவி. அதே நேரம்  டெய்லி ஸ்போர்ட்ஸ் க்ளாப் வந்தாதான் கொஞ்சம் சிரிக்கிறேன். இப்போ அதுகூட முடியல திவி.” என்று வருத்தத்தோடு கூறினாள். 

“ஏய் நான் இருக்கேன் டீ உனக்கு.  என்ன நடந்தாலும், எல்லா சிடிவேஷன்லயும் உன் கூட இருப்பேன். போரீங்கா இருந்தா எங்க வீட்ல வந்து இரு டீ. ஆஸ்பிடல் போய் செக் பண்ணுவோம் மீயூ நானும் வாரேன்.”  

“இல்ல திவி ஃபர்ஸ்ட் வீட்ல செக் பண்ணி பார்க்குறேன். டெஸ்டுல என்ன முடிவு வருதோ அதை ஏத்துகிட்டுதான் ஆகணும்.” 

“உடனே வீட்டுக்கு போ, க்ளாஸ முடிச்சிரலாம்.” என்று திவ்யா கூறினாள். இருவரும் முன்னே வந்து மாணவர்களின் முன்னே நின்றனர்.

“கேர்ள்ஸ் கிளாஸ் முடிஞ்சிட்டு. நீங்க கிளம்புங்க. நாளைக்கு கரக்ட் டைமுக்கு வாங்க.” என்றாள் மீத்யுகா. 

“ஒகே மீயூ நீயும் கவனமா வீட்டுக்கு போ.” 

“பாய் திவி.” என்று விளையாட்டு சங்கத்திலிருந்து விடைப்பெற்று நேராக மருந்தகத்தை சென்று கருத்தரிப்பு பரிசோதனை கருவியை தயக்கத்துடன் வாங்கி வீட்டிற்கு வந்தாள். 

விகுஷ்கி இன்னும் அலுவல் முடிந்து வீட்டிற்கு வரவில்லை.  சஷ்டி தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருக்க, சஷ்டியிடம் சாப்பிட்டாளா, மாத்திரை எடுத்துக்கொண்டாளா என்று விசாரித்து விட்டு குளியலறைக்குள் நுழைந்தாள். 

பரிசோதணை கருவியை கையில் எடுப்பதற்கே மனம் பயத்தில் அடித்துக்கொண்டது. ‘ஒரு வேலை பேபியா இருந்தா நான் என்ன பண்ணுவேன்.’ என்று அவள் அடி வயிற்றில் கையை வைத்து கண் கலங்கினாள். 

பரிசோணை கருவியில், பரிசோதணைக்கான செயற்பாடுகளை செய்துவிட்டு கண்களை இறுக்கி மூடி, முகத்தை ஒரு புறமாய் திருப்பிக்கொண்டாள். 

பரிசோதணையின் முடிவை பார்க்குமளவுக்கு அவளுடைய தைரியம் குறைந்துவிட்டது.  மெதுவாக கண்களை திறந்து பார்த்தாள். 

செங்குத்தாக சிவப்பாக ஒரு கோடும், செங்குத்தாக இளம் சிவப்பு நிறத்தில் இன்னும் ஒரு கோடும் இருந்தது. அதை பார்த்த மீத்யுகாவிற்கு மலமலவென கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.  

அடி வயிற்றில் கையை அள்ளி கொஞ்சவும் முடியாமல், விருப்பமின்றி இணங்கியதன் மூலம் உருவாகிய குழந்தையை  வெறுக்கவும் முடியாமல் கண்ணாடி முன் மீத்யுகா நிற்க, விழி மடல் மூடினால் கண்ணீர் துளி உறைந்து போனது. 

வயிற்றில் கையை வைத்தவாறு, “உன்னைய என்ன பண்றதுன்னு எனக்கு தெரியலயே! உங்க அப்பாக்கிட்ட எப்படி சொல்லுவேன்? அன்னைக்கு என்ன நடந்துச்சுன்னே உங்க அப்பாக்கு தெரியல, இதுல நீ வேற வந்துட்ட, இப்போ நான் என்ன பண்ணுவேன்?” 

குளியலறையில் இருந்து வெளியே வந்து திவ்யாவுக்கு கைபேசி வழியே அழைத்தாள். 

“என்னாச்சு மியூ? நெகட்டிவ்தானே!” என்று பதற்றத்துடன் திவ்யா கேட்டாள். 

“பாசிட்டிவ்!” 

“ஏய்! என்ன சொல்ற?” மேலும் பதற்றமானது திவ்யாவுக்கு. 

“ம்ம்ம்” என்கிற பதிலை தவிற வேற எந்த பதிலையும் மீத்யுகாவால் சொல்ல முடியவில்லை.  

“ஓகே ஓகே! கூல்” என்றிட, அதற்கும் மீத்யுகா, “ம்ம்ம்” என்றாள். 

“உன் ஹஸ்பன்ட் கிட்ட சொல்லிரு, என்ன ஆனாலும் பார்த்துக்கிலாம்.” 

“பயமா இருக்கு திவி.” என்று மீத்யுகாவின் குரல் நடுங்கியது. 

“போல்ட்டான பொண்ணுகிட்ட கோழதனமா இப்படி ஒரு வார்த்தைய எதிர்பார்க்கல மீத்யுகா. ப்ராப்ளம்  பெருசாகிச்சுனா கோர்ட்டுக்கு போகலாம். டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கலாம். அப்போ உனக்கும் அவருக்குமான உறவு பொய் இல்லனு உறுதி ஆகிரும். 

குழந்த வந்ததுகூட நல்லதுதான் அப்போ உன் ஹஸ்பன்ட் உண்மை எதுன்னு புரிஞ்சிப்பாருதானே?” 

“ம்ம்ம், எங்க வீட்டுக்கு எப்படி சொல்லுறது?”

“உங்க வீட்டுக்கு அப்பறம் சொல்லலாம். ஹஸ்பன்ட் ஒத்துகிட்டதுக்கு பிறகு சொல்லிக்கிலாம். நீ ஃபர்ஸ்டு அவர்கிட்ட சொல்லு, பயந்து பயந்து சொல்லாம, தைரியமான மீத்யுகாவா சொல்லு”

“சரி டீ.” என்று அழைப்பை துண்டித்தாள். 

விகுஷ்கி வரும்வரை அறையிலேயே காத்திருந்தாள்.  மணி ஏழை கடந்தது. வருகை தந்தவன் கீழ் இருக்கும் அறையில் சுத்தாமாகிவிட்டு சஷ்டியுடன் அதிகபடியான நேரத்தை செலவு செய்தான். ஆரா அமர உறங்குவதற்கு அவன் அறைக்கு வந்தான். 

வந்தவுடனே எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் சற்று தடுமாறிக்கொண்டிருந்தாள். 

விகுஷ்கியே பேச்சை முதலில் ஆரம்பித்தான். “ஏதோ ரோஷம் வந்து கெஸ்ட்ரூம்ல போய் தூங்குன. இப்போ என்னாச்சு?” 

“உங்ககூட கொஞ்சம் பேசுணும். ரொம்ப நேரமா வெய்ட் பண்ணிட்டு இருக்கேன்.” 

“கொஞ்சம்தான் பேச முடியும். ரொம்ப பேச மாட்டேன். சீக்கிரம் சொல்லு?” என்று எகத்தாளமாய் பதிலளித்தான். 

“இதை பாருங்க.” என்று மீத்யுகாவின் கையை நீட்டி, கருத்தரிப்பு பரிசோதனை கருவியை காண்பித்தாள். 

எட்டிப்பார்த்தான், விஷயம் புரிந்தாலும், “இப்போ இதுக்கு என்ன?” 

“நான் கன்சிவா இருக்கேன்.” 

“ஓ கங்ராஜிலேஷன்ஸ்” அவனுக்கு சம்பந்தமே இல்லாதது போல் வாழ்த்தை தெரிவித்தான். 

பதிலுக்கு மீத்யுகாவும், “சேம் டூ யூ” 

“எனக்கெதுக்கு விஷ் பண்ற, குழந்தையோட அப்பாக்கு பண்ணு.” 

“நீங்கதானே அப்பா, அப்போ உங்களுக்குதானே சொல்லணும்.” 

“ஏய் ஏய், என்னைய வெறுப்பேத்தாத டீ. வேறோருத்தன் புள்ளைக்கு நான் அப்பாக்கு ஆக முடியாது.” 

“இது உங்க புள்ளதான், வேறோருத்ததன் புள்ள கெடயாது.” 

“எவனோடையோ எல்லாத்தையும் முடிச்சிட்டு வயித்த நிறைப்பிட்டு வருவ, அதுக்கு பொறுப்பு, நானா?” என்ற அகாங்கார குரலில் கேட்டான். 

“இப்படி பேசுறதுக்கு உங்களுக்கே வெக்கமா இல்ல?” 

“நான் எதுக்கு வெக்கப் படணும். இன்னோருத்தனோட படுத்து புள்ளைய வாங்கிட்டு வந்த உனக்கே வெக்கமில்லாதப்போ, எனக்கு எதுக்கு வெக்கம் வரணும். இந்த மாதிரி அசிங்கத்தோட இந்த வீட்ல இருக்க தேவையில்ல. மாரியாதையா வெளிய போயிரு.” என்று அதட்டலாக கூறினான். 

“ச்சே நீங்கெல்லாம் ஒரு மனுஷனா, நான் எதுக்கு வீட்டு விட்டு போகணும்? நீங்க கட்டுன தாலி என் கழுத்துல இருக்கு மறந்துறாதீங்க. உங்க புள்ளைய நான் சுமந்துட்டு இருக்கேன். வேறோருத்தன் புள்ளேனு சொல்றீங்களே, இது எந்த விதத்துல நியாயம். இழுத்து இழுத்து முத்தம் குடுத்தீங்களே, அதையும் மறந்துட்டீங்களா?” என்று அவள் குரல் இறங்கி சென்றது.

“ஓ நான் முத்தம் குடுத்ததாலதான் நீ உண்டாகி இருக்கேனு சொல்றியா, நான் முத்தம் கொடுத்துதான் உன் வயித்துல குழந்த வளருது அப்படிதானே?  ஏன் டீ நான் விவரம் இல்லாத ஸ்கூல் பையனு நெனச்சிட்டியா, முத்தம் குடுத்தா குழந்த பொறக்கும்னு சொன்னதும் நம்புறதுக்கு?” 

“அப்போ ஒத்துக்கிறீங்க முத்தம் குடுத்தத? எனக்கு முத்தம் குடுத்த நீங்க, அன்னைக்கு நடந்தத மட்டும்  ஏன் மறந்துட்டீங்க, இல்ல வேணும்னே மறந்தா மாதிரி நடிக்கிறீங்க. அது மட்டும் நல்லா தெரியுது.” 

“பழிக்கு பழி வாங்கணும்தான் உன்னைய கல்யாணம் பண்ணேன். ஆனா, ஒரு பொண்னோட கற்ப பறிக்கிற அளவுக்கு நான் காம வெறி புடிச்சவன் இல்ல. சஷ்டி உன்னாலதான் பொலச்சி வந்தானு தெரிஞ்சதும் பழிவாங்குற எண்ணத்த விட்டேன். அப்பவும் உங்கூட வாழுற ஐடியா இல்ல. சஷ்டிக்கு உன்னைய ரொம்ப புடிக்கும். அவ சொன்னானுதான் உங்கூட வாழலாம்னு மனசு இறங்குனேன். ஆனா நீ,  பண்ணீட்டு வந்த காரியம் இருக்கே! ஓவரா பண்ற.” 

“ஓவரா பண்றது நீங்கதான் விகுஷ்கி நானில்ல. என்னைய ஏத்துகாம போங்க. ஆனா குழந்தைய அப்படி விட முடியாது, என்ன பண்றீங்கனு பார்க்குறேன்.” 

“உன்னால என்ன பண்ண முடியும்னு பார்க்குறேன். உன் பூச்சாண்டிக்கெல்லாம் நானும் பயப்பட மாட்டேன்.” 

“உங்களுக்கு இதான் கடைசி வார்னிங்க், சஷ்டி எம்மேல அளவில்லாம பாசம் வச்சிருக்கா,அதனால அவகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு, கோர்ட்ல கேஸ் போடப்போறேன்.” 

“சஷ்டிக்கிட்ட சொன்னாலும். வேற யார் கிட்ட போனாலும் சரி, இன்னொருத்தன் குழந்தைய என் குழந்தையா ஏத்துக்க முடியாது. நீ எந்த கோர்ட்டுக்கு வேணாலும் போ டீ.” என்று திமிராய் கூறினான். 

இனிதாய் வாழ வேண்டிய வயதில் வழக்கு தொடர்ந்து வாதாடுமளவில் வந்து நிக்கிறது மீத்யுகாவின் வாழ்க்கை.

சூழ்நிலை மாறும்போது சிலரது வாழ்க்கை மட்டுமல்ல வார்த்தைகளும் மாறுகிறது.

***

உணர்வுகள் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!