நெருப்பின் நிழல் அவன்! 19

நெருப்பின் நிழல் அவன்! 19

அத்தியாயம்: 19

ஈஸ்வரனின் போன் அவன் பிஏ ஹரியின் எண்ணை தாங்கி இடைவிடாமல் கதறி கொண்டிருக்க அதை வெடிக்கை பார்த்து கொண்டிருந்த ஈஸ்வர் முகத்தில் எரிச்சல் ரேகை.

கால் கட் ஆகி மீண்டும் அடுத்த அழைப்பு வர “டெமிட் ஒன் டைம் கால் கட் பண்ணா புரிஞ்சிக்க வேண்டாமா கால் அட்டன் பண்ண முடியாத நிலமையில இருக்கேன்னு…!” என்று அழைப்பை ஏற்காமலேயே ஹரியை திட்டியவனின் குரலில் கோபமே பிரதானமாக இருந்தது. பேச முடியாது என்று இல்லை ஆனால் பேச்சி சிறிது தடுமாற்றத்துடனே வந்தது. பிறர் கேட்டால் பதில் கூற பிடிக்காமல் தவிர்த்து வந்தான்.

ஹரியின் அழைப்பு சாந்தவி மேலும் கோபம் வந்தது. அவளால் தான் இன்று பிறரிடம் பேசவும் முடியாமல் அறையை விட்டு வெளியேறவும் முடியாமல் அமர்ந்து இருக்கிறான்.

சாந்தவியின் நேற்றைய உதட்டு முத்தம் அதன் வேலையை நன்றாக காட்டி இருந்தது. அவன் உதட்டில் அவளின் பல் தடம் லெசாக வீங்கி சிவந்து தெரிய, பழக்கம் அற்ற காரம் நாக்கை புண்ணாக்கி இருந்தது. காலையில் இருந்தே வயிற்றிலும் வலி இருக்க டாக்டரையும் சென்று பார்க்க முடியாமல் அவதிப்பட்டு கொண்டிருந்தான்.

“பாவி..! கடிக்க நல்ல இடம் பார்த்த டி, அடை கோழி மாதிரி சுத்த விட்டுட்டா.., இந்த காயம் எப்போ ஆறி..! எப்போ வெளிய போக..! இப்படியே வெளியே போனா மானம் போய்டும்…” என்று இங்கே இவன் பொறுமி கொண்டிருக்க வெளியே சாந்தவியோ ஹாலில் ஹாயாக அமர்ந்து டிவி பார்த்து கொண்டிருந்தாள்.

ஆனால் கண்கள் டிவி பார்க்கும் சாக்கில் ஈஸ்வரன் வருகிறானா என்று பார்த்து கொண்டிருந்தது.

என்ன தான் நேற்று கோபத்தில் அவனிடம் அப்படி நடந்து கொண்டாலும் அதற்கு அவன் “என்ன செய்வானோ..!” என்று பயமாகவும் இருந்தது. அவளுக்கு தெரியும் நேற்று அவள் செய்தது சற்று அதிகபடி தான் என்று அதை நினைக்கும் போதே அவள் செயலின் நினைவில் கன்னம் சிவந்து போனது.

எதிரில் பேப்பர் படித்து கொண்டிருந்த ரத்தினம் அவள் தானாக சிரிப்பதை பார்த்து “சாந்தவி…” என்று அழைத்தார்.

நேற்றைய நிகழ்வில் மூழ்கி இருந்தவள் அவரின் அழைப்பிழ் தன் எண்ண வலை அறுபட திடுக்கிட்டு நிமிர்ந்தவள் “ஆ… மாமா!” என்றாள்.

“என்னமா.. காலையிலேயே அப்படி என்ன யோசனை..?” என்று ரத்தினம் கேட்க “போர் அடிக்குது மாமா. அதான் அப்படியே சும்மா யோசிச்சிட்டு இருந்தேன்..” என்றாள் இன்னது என்று சொல்லாமல் மழுப்பலாக.

“சக்தி வீட்டுல தானே இருக்கான்! எங்கேயாவது வெளிய போய்ட்டு வாங்களேன்…” என்று ரத்தினம் தூண்டில் போட்டார். அவர்களுக்குள் உள்ள பிரச்சினை தீர்ந்து விட்டதா… என்று தெரிந்து கொள்ள நினைத்து.

“போலாம் தான்… ஆனா, உங்க பையன் வருவாரா..! அவருக்கு என்னை கண்டாலே ஆகாது…” என்று சாந்தவி சொல்ல

“உன் கேள்விக்கு பதில் அவன் தான் சொல்லனும். போய் கேட்டு பாரேன்…” என்று ரத்திம் கூற, “சரி மாமா..” என்ற சாந்தவி தயக்கத்துடனே எழுத்து அவர்கள் அறைக்கு சென்றாள்.

ஈஸ்வரனுடன் வெளியே செல்லும் எண்ணம் சாந்தவிக்கு இல்லை. அவனிடம் நேற்றைய செயலுக்கு சாரி சொல்ல வேண்டும் அவ்வளவே. அதற்கு தான் இந்த காரணத்தை பயண்டடுத்தி கொண்டு அவன் அறைக்கு சென்றாள்.

இப்போது எல்லாம் ஈஸ்வரனின் பார்வை, செயல் எல்லாம் வேறாக இருக்க மனம் லயம் மாறி துடிக்க எண்ணங்கள் எங்கேங்கோ சென்றது. மேலே செல்ல சிறிது பயமாகவும் இருந்தது. ஈஸ்வரன் கோபமாக இருந்தால் ‘என்ன செய்வது! என்று தோன்ற உள்ளே பதைபதைத்த மனதை திடப்படுத்தி கொண்டு அவர்கள் அறைக்கு சென்றவள் அறை வாசலில் நின்று கதவை தட்டினாள்.

ஈஸ்வரனின் இருந்து பதில் இல்லாமல் போக சாந்தவி மீண்டும் கதவை தட்ட போகவும், கதவை திறந்த ஈஸ்வரன் அவளை சட்டென்று உள்ளே இழுத்து கதவடைத்து விட, அவன் இழுத்ததில் அவன் மார்பில் மோதி நின்ற சாந்தவி “ஏன் இப்படி பிகேவ் பண்றிங்க..?” என்றாள் கோபமாக.

“என்னை சொல்ற நீ சரியா பிகேவ் பண்ணியாடி?, வர கோபத்துக்கு அடிச்சேன்னா கன்னம் திரும்பிடும் இடியட். பாரு டி.. நீ என்ன பண்ணி வச்சிருக்கேனு. அக்கவுண்டிங் இயர் என்ட் டேக்ஸ் பே பண்ணனும். வேலை தலைக்கு மேல இருக்கு இதோட எப்படி டி வெளிய போக முடியும்…” என்றான் ஈஸ்வரனும் கோபமாக

அப்போது தான் அவன் உதட்டை பார்த்த சாந்தவிக்கு அவள் செய்த தவறு புரிந்தது.

நேற்று அவன் செய்த டார்ச்சருக்கு பதில் என்று விளையாட்டாக தான் செய்தாள், அவனை காயப்படுத்த வேண்டும் என்று நினைத்து எதுவும் செய்யவில்லை தான். ஆனால்.. கடைசியில் அவன் முத்தம் அவள் எதிர்பார்க்காதது. ஏதோ கோபத்தில் அவளும் பதில் கொடுத்து விட்டாள். ஆனால் இப்படி ஆகும் என்று நினைக்கவில்லை.

அவள் மேல் தவறு இருக்கவும் தலை குனிந்து நின்ற சாந்தவி “சாரி…” என்றாள் அவளுக்கே கேட்காத குரலில்.

மார்பின் குறுக்கே கை கட்டி நின்று அவளை பார்த்தவன் “சாரி கேட்டா எல்லாம் போச்சா..! டேக்ஸ் பே பண்ற செக் சைன் பண்ணனும். நான் இப்போ எப்படி ஆஃபிஸ் போறது..?” என்றான் அதட்டலாக.

அவன் அதட்டலில் சாந்தவிக்கும் கோபம் வர “சும்மா என்னையே சொல்லாதிங்க, நீங்க தான் பஸ்ட் தொடங்கி வச்சது..” என்று முறைப்புடனே கூற

“நான் தொடங்குனா நீ கன்டின்யூ பண்ணுவியா..?!, என்னை தள்ளி விட்டுருக்க வேண்டியது தானே!” என்று குதர்க்கம் பேச

“அது.. அது.. கோபத்துல…” என்று என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறிவள் “ஏன் நீங்க தள்ளி விட்டுருங்க வேண்டியது தானே!” என்று கேட்க

“நான் தள்ளுனேன் பட் நீ விட்டா தானே..!” என்ற ஈஸ்வரன் பார்வை மாறியது, அவன் கூற்றி முகம் சிவக்க சாந்தவி அவனை முறைக்க,

“நான் பண்ண எல்லா தப்புக்கும் சேர்த்து என்னை நீ பழி வாங்கிட்ட, இதோட நமக்குள்ள இருந்த சண்டை முடிஞ்சி போச்சி!” என்று ஈஸ்வரன் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட

“நான் ஒன்றும் உங்களை பழி வாங்கவில்லை. நீங்க தான் என்னை பழி வாங்கிட்டிங்க, என்னை எப்படி எல்லாம் பேசுனிங்க! “பணத்துக்காக கல்யாணம் பண்ணேன்!, அப்பறம் தொட்டு பேச வேற ஆள் பா..”” என்று அவள் கூறும் முன்பே அவள் வாயை முடியவன்

“தப்பு தான். சாரி…, ஆனா எதுவும் இன்டென்ஷனோட பேசலை, அப்போ இருந்த கோபத்துல அப்படி பேசிட்டேன்!” என்று ஈஸ்வரன் கூறவும்.

“கோபம் வந்தா என்ன வேணும் என்றாலும் பேசலாமா..?!, “சாரதா போய்ட்டா நீ வேண்டாம்னு..” எவ்வளவு ஈசியா சொல்லி விட்டுட்டு வந்திங்க, இப்போ நீங்க சமாதானம் னு சொன்னதும் நான் மானம், ரோசத்தை தூக்கி போட்டுட்டு வந்துடனுமா…?, என்னால அப்படி இருக்க முடியாது”.

“நீங்க என்னை அவ்வளவு கொடுமை படுத்தியும் ஏன் உங்களை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னேன் தெரியாமா?!, அன்றைக்கு தான் முதல் முறை நான் என்னை ஒரு அனாதையா உணர்த்தேன். நீங்க எல்லா உறவுகளோடவும் இருதிங்க, உங்களை கல்யாணம் பண்ணா நானும் அனாதை இல்லை எனக்கும் உறவு கிடைக்கும்னு நம்பி தான் கல்யாணம் பண்ண நினைச்சேன். ஆனா! நீங்களே அனாதையா விட்டுட்டு வருவிங்கனு நினைக்கலை..” என்று சாந்தவி சொல்லவும் உள்ளிருந்த வலி அழுகையாக வெளிவர அவளை இழுத்து அணைத்து கொண்டவன் “நான் இருக்கும் போது.. நீ ஏன் டி அப்படி நினைக்குற?” என்றான் இன்னதென பிரித்தறிய முடியா குரலில்.

“எனக்கு இப்பவும் அப்படி தான் தோனுது. இந்த வீட்டுல நான்‌ யாரு..?, நீங்க வேண்டாம்னு சொன்ன பிறகும் போக இடம் இல்லாம தான் இங்க வந்தேன் தெரியுமா..!, ஏன் அப்படி பண்ணிங்க?, நான் என்ன தப்பு பண்ணேன்?” என்று ஆத்திரமாக கேட்க

“பைத்தியமா டி நீ?, ஏன் இப்படி நினைக்குற..!, எல்லா தப்பும் என் மேல தான். இந்த ஒரு முறை மன்னிச்சிடு! இனிமேல் அந்த மாதிரி நடந்துக்க மாட்டேன்..” என்றான் ஈஸ்வரன். அவள் மேல் கோபமாக இருக்கும் போதே அவள் அழுதாள் தாங்காதவன் இப்போது அவள் தான் எல்லாம் என்று உணர்ந்த பிறகு கண்ணீரை கறை கடக்க விட்டு விடுவானா..!,

சாந்தவி ஏதும் கூறாமல் இருக்கவும் அவளை அணைத்து கொண்டவன் அவள் முகம் நிமிர்த்தி கண்ணோடு கண் பார்த்து அவள் மூக்கில் தன் மூக்கால் உரசியவன் “என் மேல இருந்த கோபம் போய்டுச்சா..?” என்று கேட்க

சாந்தவி “இல்லை..” என்று தலையசைத்தாள். சாந்தவியின் தலையசைப்பில் அவள் நாசி அவன் நாசியை செல்லமாக தீண்டி செல்ல அதை ரசித்த ஈஸ்வரன் “ஏன் டி?, அதான் நேற்றே பெருசா தண்டனை தந்துட்ட இல்ல..!, பாரு.. உதடே புண்ணா போச்சி” என்று ஈஸ்வரன் கள்ள பார்வையுடன் கூற

பார்வையை தழைத்து கொண்ட பாவையவள் “அது உங்க தப்பு..” என்றாள்.

“காரமா சாப்பாடு தந்த இல்ல! அது பணிஷ்மென்ட் தானே..!” என்ற ஈஸ்வரன் அவள் இடை வளைக்க.

தன்னை அவன் வசம் ஆக்கி கொள்ள நினைத்த அவன் கையை விலக்கி கொண்ட சாந்தவி “காரம்னு தெரிஞ்சும் சாப்பிட்டது உங்க தப்பு..” என்றாள் சின்ன குரலில்.

“ஹோ…!, அப்போ உன் கோபம் போக இன்னும் எத்தனை தடவை வேணும்னாலும் நேற்று மாதிரி என்னை கடிச்சிக்கோ..” என்று கூறி ஈஸ்வரன் கண்ணடிக்க, சாந்தவி அவனை திகைத்து பார்த்தாள்.

“என்ன கடிச்சிக்குறியா..?” என்று ஈஸ்வரன் வார்த்தைக்கு வலிக்குமோ என்று மிக மென்மையாக கேட்க, அவசரமாக ‘வேண்டாம்’ என்று தலை அசைத்த சாந்தவி அவனிடம் இருந்து விலக,

அவளை விலக விடாமல் கை பிடித்து தடுத்த ஈஸ்வரன் “இனிமேல் இங்க இரு. அம்மா ரூம் வேண்டாம்..” என்றான்.

அவனை சந்தேகமாக பார்த்த சாந்தவி “என்ன இன்றைக்கு ஓவரா பாசத்தை பொழியுறிங்க!! சாரதாவுக்கு எதுவும் செய்யுமா..?” என்று பட்டென்று கேட்டு விட ஈஸ்வரன் முகம் நொடியில் இறுகி விட்டது.

“ஏன்டி நான் உன் மேல கேரிங்கா.. இருந்ததே இல்லையா..?” என்று ஈஸ்வரன் கேட்க. சாந்தவி “இல்லை..” என்றாள் பட்டென்று.

அவள் தன்னை புரிந்து வைத்திருக்கிறாள் என்று நினைத்திருந்தவனுக்கு சாந்தியின் பதில் ஏமாற்றமே.

“நான் உங்களோட இந்த ரூம்ல ஒரு வாரம் இருந்து இருக்கேன் அப்போது எல்லாம் சொல்லால் கயப்படுத்துனிங்க, இல்ல அடிச்சிக்க, நல்லதா ஒரு வார்த்தை பேசுனா மறு நிமிஷமே சாரதாவுக்காகனு சொல்லி என் மனச உடைச்சிங்க, வேற என்ன செஞ்சிங்க…?” என்றாள்

அவள் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று முழித்த ஈஸ்வரன் “தெரியா..” என்று தொடங்கவும், அவனை தடுத்த சாந்தவி “தெரியாம செஞ்சேன்னு மட்டும் சொல்லிட்டாதிங்க நீங்க சொன்னாலும் நம்ப மாட்டேன். நீங்க எல்லாம் பிளான் பண்ணி தான் செஞ்சிங்க எனக்கு தெரியும்”.

“நான் சொன்னேனே..! இப்பவும் நான் அனாதாயா இருக்க மாதிரி தான் தோணுது! நீங்க உண்மையா பாசம் காட்டுறிங்களா! இல்லை இதுவும் சாரதாவுக்கானு தான் மனசு நினைக்குது..!” என்றாள்.

ஈஸ்வரனுக்கு புரிந்தது அவள் தன்னை புரிந்து கொள்ள அவன் இன்னும் காத்திருக்க வேண்டாம் என்று. ஆனாலும் அவள் சீக்கிரமே மாறி விட வேண்டும் என்று நினைத்தவன் “எப்போ.. டி என் மேல இருக்க கோபம் போய் என்ன‌ புரிஞ்சிப்ப..?” என்று கேட்க,

“தெரியலை..” என்ற சாந்தவி “உங்களுக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வரேன்..” என்று விட்டு அறையில் இருந்து வெளியேறி இருந்தாள்.

கிச்சன் சென்று அவன் வயிற்றுக்கு இதமாக மோர் எடுத்து வந்து கொடுத்தாள். ஈஸ்வரனின் போனில் மீண்டும் அழைப்பு வர அவன் சாந்தவியை குற்றம் சுமத்தும் பார்வை பார்த்து விட்டு போனை எடுத்தவன் மிதுன் பெயர் ஒளிரவும் “மிதுன் தான் கால் பண்ணாறான். நீ பேசு..” என்று போனை அவளிடம் நீட்ட

ஆர்வமாக போனை வாங்கி அட்டன் செய்த சாந்தவி “ஹாய் மாமா சார்..” என்றாள் ஆர்ப்பாட்டமாக

“ஹேய் சாவி..! நீ என்ன அவன் போனை எடுக்குற?, பட்டுனு கால்ல விடுந்து சமாதான கொடியை நிலை நாட்டிட்டானா என் நண்பன்” என்று மிதுனும் கேலி பேச

“அப்படியே நாட்டிட்டாலும்… போங்க மாமா, இன்னும் சண்டை தான். உங்க பிரண்டுக்கு வாய்ல வாஸ்து சரி இல்லை அதான்.. நான் பேசுறேன். சாரு எப்படி இருக்கா..? இரண்டு நாளாக போன் போடவே இல்லை..” என்ற சாந்தவி முகம் சுருங்கி அவனிடம் புகார் வாசிக்க,

“இனிமேலும் கால் பண்ண மாட்டாளே..! நாங்கலாம் ரொம்ப பிஸி..” என்று மிதுன் கூற

“ஏன்? ஏன்.. பண்ண மாட்டா?, போன் பேச விடாம‌ என் அக்காவை டார்ச்சர் பண்றிங்களா..?!, இருங்க எங்க வீட்டு அரக்கன் சார் கிட்ட சொல்லு உங்களை டிஸ்போஸ் பண்ண சொல்றேன்..” என்றாள் ஈஸ்வரன் அருகில் இருப்பதை உணராமல்.

“ஹா.. ஹா..” என்று சத்தமாக சிரித்த மிதுன். “சொல்லு எனக்கு என்ன பயமா..! நான் அவனே பயப்படுற பெரிய ஆயுதம் வச்சிருக்கேன்…” என்று கூறினான்.

” எதுக்காக போன் பண்ணிட்டு இப்போ என்‌ பேசிட்டு இருக்கிங்க..!” என்ற சாரதாவின் அதட்டலில் “ஹேய் சும்மா டி..” என்று சாரதாவிடம் கூறியவன்,

சாந்தவியிடம் “ஏய் வாலு.. உனக்கு ஒரு குட் நீயூஸ்! நீ சித்தி ஆக போற, நான் அப்பா ஆக போறேன்..” என்று மிதுன் சந்தோசம் கலந்த துள்ளலுடன் கூற,

இன்பமாக அதிர்ந்த சாந்தவி “மாமா உண்ணமையாவா..!! ஐயோ.. ஜாலி! நான் உடனே ஊட்டி வரேன்! எனக்கு சாருவ பார்க்கனும்…” என்றவள்,

அவள் முன்னால் அமர்ந்து அவள் மிதுனிடம் இயல்பாக பேசுவதை பொறாமையுடன் பார்த்து கொண்டிருந்த ஈஸ்வரனிடம் “சாருக்கு பாப்பா வர போகுதாம்… நான் சித்தி ஆக போறேன்…” என்று தன் மகிழ்ச்சியை கணவனிடம் பகிர்ந்து கொண்டவள், மிதுனிடம் “மாமா சாருவை நல்லா பார்த்துக்கோங்க! இல்லைனா… நான் ஊட்டி வந்து உதைப்பேன்..” என்றாள் மிரட்டலாக,

“வா… வா… நானும் உன்னை அடிக்க ஆள் ரெடி பண்ணிட்டேன். நீ பண்றதுக்கு பதில் என் பிள்ளை தரும்” என்று மிதுனும் அவளை பொய்யாக மிரட்ட

“பார்க்கலாம்! என்னை உதைக்குதா.., உங்களை உதைக்குதான்னு..!, நீங்க வெட்டியா பேசாம போனை சாரு கிட்ட குடுங்க..” என்றாள்.

அந்த பக்கம் போன் கை மாறி சாரதா குரல் கேட்கவும், “சாரு…” என்றவளுக்கு அதற்கு மேல் பேச்சி வராமல் கண்களில் சந்தோஷத்தில் கண்ணீர் தேங்கி நின்றது.

“சாவி.. எப்படி டி இருக்க?” என்று சாரதா கேட்க, “நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க..?, எனக்கு உடனே உன்னை பார்க்கனும் போல இருக்கு..!, இப்போ அம்மா இருந்தா நல்லா இருக்கும் இல்லை..!” என்று சாந்தவி கேட்கவும், சாரதாவுக்கும் அழுகை வந்து விட்டது.

சாரதை கண் கலங்குவதை பார்த்து அவளிடம் இருந்து போனை வாங்கிய மிதுன் “வாயாடி..! என்ன சொல்லி என் பொண்டாட்டியை அழ வச்ச?, டாக்டர் அவளை பீல் பண்ண விட கூடாதுனு சொல்லி இருக்கார்” என்று சிரிப்பின் ஊடே மறைமுகமாக சாரதா நிலை கூற,

“சாரி மாமா.., அம்மா நியாபகம் வந்துட்டு. நான் அத்தை மாமா கிட்ட சொல்லிட்டு ஊட்டி வரேன். நான் வந்து சாருவை நல்லா பார்த்துக்குறேன் மாமா…” என்று கூறி அழைப்பை துண்டித்தவள் ஈஸ்வரனின் போனை அவனிடம் கொடுத்தாள்.

சாந்தியின் பேச்சில் ஈஸ்வரனுக்கும் மலர் நினைவு வர முகம் கசங்க நின்றவன், சாந்தவி பார்த்தும் தன் முகத்தை மாற்றி கொண்டு “சாரு எப்படி இருக்காளாம்..?” என்று கேட்க,

“நல்லா இருக்காளாம். மாமா வேற எதுவும் சொல்லலை அங்க போய் தான் கேட்கனும். நான் ஊட்டி போறேன்…” என்று அவனிடம் அறிவிங்க

அவள் ஊட்டி போறேன் என்றதை கண்டு கொள்ளாத ஈஸ்வரன் “நமக்கு எப்போ பேபி வரும்..?” என்று கேட்டு மனைவியின் இடை வருட,

அவன் கேள்வியில் மெய் சிலிர்க்க “ஆமா.. நமக்கு எப்போ வரும்..?” என்று சாந்தவி தனக்கு தானே கேட்டு கொள்ள,

“அதுக்கு நீ என்னை லவ் பண்ணணும்..” என்று ஈஸ்வரன் கூற, அவன் எண்ணம் புரிந்த சாந்தவி “ஆஹான்.., அது வந்தா சொல்றேன்!” நான் அத்தை மாமாகிட்ட சொல்லிட்டு அவங்களோட ஊட்டி போறேன்..” என்று கூறி செல்ல போக,

“அம்மா, அப்பா, இன்றைக்கு போகட்டும். நாம இரண்டு நாள் கழித்து போகலாம்!” என்று ஈஸ்வரன் கூற

“நீங்க இரண்டு நாள் அப்பறமா வாங்க.., நான், மாமா, அத்தை, கூட போறேன்..” என்றாள் சாந்தவி.

அவள் போறேன் என்பதிலேயே குறியாக இருக்க, அப்போ தான் அவளுக்கு முக்கியம் இல்லையா என்று நினைத்த ஈஸ்வரனுக்கு சட்டென்று கோபம் வர கையில் இருந்த மோர் கிளாசை தூக்கி வீசியவன் “சொன்ன புரியாதா உனக்கு..?, நீ என்னோட தான் வர! நாம இரண்டு நாள் அப்பறமா தான் போறோம்…” என்று அழுத்தமாக கூற

சாந்தவி உடல் நடுங்க அவனை வெறித்து பார்க்கவும் “பச் புரிஞ்சிக்க டி..” என்று ஈஸ்வரன் அருகில் வந்து அவள் கை பற்றவும், அவன் கையை தட்டி விட்ட சாந்தவி, அறையில் இருந்து வெளியேறி இருந்தாள்.

நிழல் தொடரும்….😊

Leave a Reply

error: Content is protected !!