நெருப்பின் நிழல் அவன்! 20
நெருப்பின் நிழல் அவன்! 20
அத்தியாயம்: 20
ஈஸ்வரனின் கோபத்தில் அவனை வெறித்து பார்த்த சாந்தவி அறையை விட்டு வெளியேறி விட, தலையை பிடித்து கொண்ட ஈஸ்வரன் “நிம்மதியா இருக்க விடாம கொல்ற டி. என்னோட வான்னு சொல்றேன் இதுல உனக்கு என்ன பிரச்சனை!. எனக்கு மட்டும் சாருவை பார்க்க ஆசை இல்லையா..!, நான் நீ வேணும் னு எல்லாத்தையும் விட்டா.. நீ நான் வேண்டாம்னு எல்லாம் பண்ற… போடி” என்று தனக்குள்ளேயே அவளை திட்டி கொண்டவன் கட்டிலில் கவிழ்ந்து படுத்து கொண்டான்.
சாந்தவி முகம் கசங்க சென்றது மனதை உறுத்த அப்படியே சில நிமிடம் படுத்திருந்தவன் பிறகு ஒரு முடிவுடன் எழுந்து கீழே வந்தான்.
சாரதா உண்டாகி இருப்பது தெரிந்து உமையாள், ரத்தினம் இருவரும் சந்தோசம் கலந்த பரபரப்புடன் ஊட்டிக்கு செல்ல தயாராக சாந்தவி சோஃபாவில் முகத்தை தூக்கி வைத்து கொண்டு அமர்ந்து இருந்தாள்.
ஈஸ்வரன் மேல் கோபமாக இருந்த போதும் மனதில் இருந்த காதல் அவன் பேச்சை தாண்டி போக விடவில்லை. சாந்தவிக்கு ஈஸ்வரன் மீது இருக்கும் கோபத்தை விட காதல் அதிகம். அவன் கொடுமை படுத்தும் போதே துளி குறையாமல் இருந்த காதல் அவன் அவள் வேண்டும் என்று ட்ரீட்மெண்ட் எடுத்து, அவள் இம்சையை தாங்கி, என பொறுமையாக இருக்கும் போதா குறைந்து விட போகிறது.
சாந்தவி கோபமாக அமர்ந்து இருக்க அவள் அருகில் சென்று அவளை இடித்து கொண்டு அமர்ந்த ஈஸ்வரன் “நாமும் போகலாம். போய் கிளம்பு…” என்றான்.
சாந்தவி அவனை சந்தேகமாக பார்க்க “நிஜமா தான் டி இம்சை. போய் கிளம்பு …, பட் நீ தந்ததுக்கு பதில் திரும்பி தருவேன்…” என்று தன் இதழை காட்டி கோபம் போல் கூற, சாந்தவி முகத்தில் சந்தோசத்துடனும் கண்ணில் குறும்புடனும் “அதை அப்போ பார்த்துக்கலாம்…” என்று விட்டு சென்றாள்.
ரத்தினம் கிளம்பி வந்தவர் ஈஸ்வரன் ஹாலில் இருப்பதை பார்த்து “என்ன சக்தி..! உனக்கு உடம்புக்கு முடியலை. இரண்டு நாள் கழித்து தான் வருவிங்கன்னு சாந்தவி சொன்னா..! என்ன செய்யுது..? இது என்ன உதட்டுல காயம்…?” என்று கேட்க,
“நத்திங் பா! நேற்று நைட் மூட் அப்செட் கோபத்துல உதட்ட கடிச்சிட்டு இருந்தேன். அப்படியே தூங்கிட்டேன் அது பல் தடம் பதிச்சிட்டு. இப்படியே எப்படி அங்க வரதுன்னு தான் டூ டேஸ் கழிச்சி போலாம்னு சொன்னேன்..” என்றான் சமாளிப்பாக.
ஈஸ்வரனின் கோபம் ரத்தினம் அறிந்தது தான் என்பதால் அவன் சொன்னதை உண்மை என்று நம்பியவர் “அதுக்கு என்ன டா எங்களோடவே வா. அங்க போய் வேணும் னா நம்ம ஹெஸ்ட் ஹௌஸ் ல ஸ்டே பண்ணிக்கோ…” என்று ரத்தினம் கூற
“ம்.. நானும் அப்படி தான் பா நினைச்சேன். சரி இருங்க நான் ரெடி ஆகிட்டு வரேன்…” என்று ஈஸ்வரன் எழுந்து கொள்ள,
உமையாள் ரெடி ஆகி வந்தவர் “சக்தி நாங்க கிளம்புறோம். சாந்தவி தனியா இருப்பா.. நைட் சீக்கிரமா வீட்டுக்கு வந்துடு. அவ கூட சண்டை போடாத.., நானும் அப்பாவும் வர ஒரு மாசம் ஆகலாம். அது சாரதா உடல் நிலையை பொறுத்து இருக்கு. வேலை இல்லாத நேரம் வீட்டுல இரு… அங்க, இங்கனு.. வெளிய சுத்தாத! சரி டா நாங்க போய்ட்டு வரோம்” என்று ஈஸ்வரன் பேச இடம் தராமல் பேசி கொண்டே செல்ல
அவரின் பேச்சில் இடையிட்ட ரத்தினம் “உமையா.. சக்தியும் வரானாம்” என்றார்.
“சாந்தவி இப்போ தானே இவனுக்கு உடம்பு சரி இல்லைனு சொன்னா..!” என்று உமையாள் குழப்பமாக கேட்கவும்
அவரை கடுப்பாக பார்த்த ஈஸ்வரன் “என்ன செய்து னு ஒரு வார்த்தை கேட்டிங்களா..? அட்வைஸ் மட்டும் ஒரு பக்கத்துக்கு சொல்றிங்க..!” என்றான் கோபமாக.
“இதோ நல்லா தானே இருக்க..! அப்பறம் எதுக்கு கேட்கனும்? நீ வரியா? இல்லையா? லேட் ஆகிட்டு நாங்க கிளம்புறோம்..” என்றார் அவரும் அதட்டலாக
அவரை முறைத்த ஈஸ்வரன் “அம்மா! நீங்க எல்லாரும் ஓவரா போறிங்க.., சாரதா என்ன நாட்டை விட்டா போக போறா?, ஏன் இப்படி பண்றிங்க மனுசன் நிலமை புரியாமா..!” என்று கோபத்தில் வல் என விழுந்தவன் ‘அவ கூட சேர்ந்து நீங்களும் மாறிட்டிங்க, இரண்டு பேரும் விட்டுட்டு போறதுலேயே குறியா இருங்க..’ என்று முணங்கி கொண்டே அறைக்கு சென்றான்.
“யோக, தெரப்பி, டாக்டர் கன்சல்டிங் னு என்ன செய்து என்னத்துக்கு! இவன் திருந்தவே மாட்டான்..” என்று உமையாள் ரத்தினத்திடம் குறைபட
“அவரால சாரதா வை பார்க்க முடியாதே என்கிற கடுப்பு’ல பேசுறார்..” அத்தை என்ற படி சாந்தவி கிளம்பி வர, ஐந்து நிமிடத்தில் ஈஸ்வரனும் ரெடியாகி வந்து விட்டான்.
கார் பயணம் முழுவதும் அப்பா,மகன் இருவரும் அமைதியாக வர, உமையாள், சாந்தவி இருவரும் வாய் ஓயாமல் பேசி கொண்டே வந்தனர்.
ஊட்டி சென்றதும் மிதுன் வீட்டிற்கு சற்று தள்ளி காரை நிறுத்தி இறங்கி கொண்ட ஈஸ்வரன் “அப்பா நீங்க கிளம்புங்க, நான் இரண்டு நாள் கழிச்சி வரேன்..” என்று ரத்தினத்திடம் கூறியவன், சாந்தவியிடம் “நீ.. ஈவ்னிங் அங்க வந்துடு. கார் அனுப்புறேன்.. மார்னிங் ரிட்டர்ன் போய்க்கலாம்…” என்றான்.
“அதுக்கு நான் அங்கேயே இருக்கேன்..!” என்று சாந்தவி சொல்லவும், அவளை முறைத்தவன் ரத்தினம், உமையாள் முன் எதுவும் பேச முடியாமல் அருகில் நின்ற மற்றோரு காரில் ஏறி சென்றிருந்தான்.
நேராக ஹெஸ்ட் ஹௌஸ் வந்த ஈஸ்வரன் காரைவிட்டு இறங்கவும், குரைத்து கொண்டே ஓடி வந்த பைரவ் அவன் மேல் தாவி இருந்தது.
சாந்தவியை கடத்தி சென்ற போது பைரவை இங்கே விட்டு சென்றது அதன் பிறகு இன்று தான் பைரவை பார்க்கிறான். மிதுன் திருமணத்தின் போது ஊட்டி வந்தாலும் இங்கே வந்து அவனை அழைத்து செல்ல நேரம் இருந்திருக்கவில்லை.
ஈஸ்வரனை பார்த்த சந்தோசத்தில் பைரவ் குரைத்து கொண்டே அவன் மேல் தாவுவதும் சுற்றி வருவதுமாக இருக்க, ஈஸ்வரனும் அதே சந்தோசத்துடன் பைரவை அணைத்து தட்டி கொடுத்தவன், அருகில் நின்ற காவலாளியிடம் “என்ன அண்ணா சரியா சாப்பாடு போடுறது இல்லையா..?, மெலிஞ்ச மாதிரி இருக்கான்!” என்று கேட்க, “சாப்பாடுலாம் சரியா வச்சிடுவேன் சார். அவன் தான் சாப்பிடுறது இல்லை..” என்றார் காவலாளி.
அவரிடம் பணம் கொடுத்து “நல்ல இளம் ஆடா பார்த்து வாங்கிட்டு வாங்க…” என்று அனுப்பி வைத்தவன் பைரவுடன் உள்ளே சென்றான்.
ரத்தினம், உமையாள், சாந்தவி மூவரும் சாரதா வீட்டிற்கு வந்தவர்கள், வீடு பூட்டி இருக்கவும் பெல் அடித்து விட்டு காத்திருக்க, கதவை திறந்த சாரதா இவர்களை பார்த்து அகம் மகிழ்ந்து போனவள் “வாங்க ஆன்டி, வாங்க ஆங்கிள்” என்றாள் முகம் மலர. வருவார்கள் என்று நினைத்தாள் தான். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வருவார்கள் என்று எதிர் பார்க்கவில்லை.
மிதுன் குடும்பத்தில் அவர்களை ஏற்று கொண்டாளும் அவர்கள் உறவு ஒட்டுதலுடன் இல்லை. மிதுன் பெற்றோர் அவர்களை தனியாக இருந்து கொள்ள சொல்லிவிட தனியாக தான் இருக்கின்றனர்.
“சாரு..” என்று அழைத்து கொண்டே சாந்தவி அவளை அணைக்க போக, சட்டென்று இடையில் வந்த மிதுன் “டோன்ட் டச் மை வைஃப். எதுவா இருந்தாலும் தள்ளி நின்றே பேசு..” என்றான் அவளை வம்பு இழுக்கும் நோக்கில்.
“நான் ஏன் தள்ளி நின்று பேசனும்..?, வர.. வர.. உங்களுக்கு லொல்லு ஜாஸ்தி ஆகிட்டே போகுது. பாருங்க சாருவை ஒரு நாள் எங்க வீட்டுக்கு கடத்திட்டு போய்டுறோம். நீங்க இங்க தனியா சுத்துக்க..” என்ற சாந்தவி, சாரதா கை பற்றி கொண்டாள்.
உமையாள், சாரதாவை இருந்த இடத்தை விட்டு நகர கூட விடாமல் கவனித்து கொண்டார். சாரதா பிறந்த பிறகு அவர்கள் வீட்டிற்கு வரும் வரவு அவள் பிள்ளை தான் என்பதால் ரத்தினத்திற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.
“டாக்டர் என்ன சொன்னாரு மா?” என்று உமையாள் கேட்க,
“நாற்பது நாள் தான் ஆகி இருக்கு அத்தை. வீக்கா இருக்கேனாம். மூன்று மாசத்துக்கு கஷ்டமான எந்த வேலையும் பார்க்காம கொஞ்சம் கவனமா இருங்கனு சொன்னாங்க…” என்றாள் சிறிதான வெட்க்கத்துடன்.
“ஆமா மா. முதல் மூன்று மாசம் கொஞ்சம் கவனமா தான் இருக்கனும். நாளைக்கு இன்னொரு முறை டாக்டர் கிட்ட பொய்ட்டு வருவோமா?, என்னோட திருப்திக்கு…” என்ற உமாயைள் கேட்க, அவர் மனம் புரிந்த சாரதா “சரி..” என்றாள்.
அவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே சாந்தவியை அழைத்து செல்ல கார் வந்து விட “சக்தி கார் அனுப்பிட்டான் சாந்தவி. நீ கிளம்பு..” என்று உமையாள் சாந்தவியிடம் கூற,
“கேட்கனும்னு நினைச்சேன்!, சக்தி அண்ணா வர்லையா அத்தை?” என்று சாரதா கேட்க
“எங்களோட தான் வந்தான். கொஞ்சம் உடம்பு சரி இல்லை. அதான் இங்க ஹெஸ்ட் ஹௌஸ்’ல இருக்கான். தனியா இருப்பான் இல்ல! அதான் சாந்தவியை நைட் அங்க வந்துட்டு காலையில வர சொன்னான்…” என்றார் உமையாள்.
உமையாள் கூறியதை உண்மை என்று நினைத்த சாரதாவும் சாந்தவியை கிளம்ப சொல்ல, சாந்தவி மனமே இல்லாமல் கிளம்பி வந்தாள்.
ராஜா போல் ஈஸ்வரனுடன் முன் சீட்டில் அமர்ந்து சென்ற தன்னை இன்று தனியாக காட்டில் விட்டு சென்றது சாந்தவியாள் தான் என்று சாந்தவி மேல் கோபத்தில் இருந்த பைரவ் அவளை பார்த்ததும் கடிக்க பாய்ந்திருந்தது.
பைரவ் கடிக்க வருவதை பார்த்து “ஆத்தாடி இந்த நாயா..” என்று பயந்த சாந்தவி “சக்தி…” என்று கத்தி கொண்டே ஓட ஆரம்பித்தாள். காவலாளி தடுத்தும் நிற்காமல் பைரவ் சாந்தவியை துரத்த “ஆ.. சு போ…, சக்தி இங்க வாங்க… ஆ… போ நாய..” என்று கத்தி கொண்டே காரை சுற்றி ஓட அவள் சேலை வேறு எந்நேரத்திலும் காலை தட்டி விடும் நிலையில் இருந்தது.
சாந்தவி வருவதற்குள் ஃபிரஷ் ஆகி வந்து விடலாம் என்று குளிக்க சென்ற ஈஸ்வரன் இவள் சத்தத்தில் அவசரமாக டவலை எடுத்து கட்டி கொண்டு வெளியே வர பைரவ் கொலை வெறியுடன் சாந்தவியை துரத்துவதை பார்த்து “பைரவ்..” என்றான் அதட்டலாக.
ஈஸ்வரனின் கண் பார்வைக்கே அடங்கும் பைரவ் இன்று அவன் அதட்டலுக்கும் அடங்காமல் சாந்தவியை துரத்த, ஈஸ்வரனை பார்த்தும் அவனிடம் ஓடி வந்த சாந்தவி “அந்த நாய் போக சொல்லுங்க எனக்கு பயமா இருக்கு..” என்றாள் அவனை கட்டி கொண்டு.
பைரவ் குரைத்து கொண்டே அருகில் வரவும் ஈஸ்வரன் கழுத்தோடு கட்டி கொண்டு அவன் கால் மேல் ஏறி நின்றவள் “அதை போக சொல்லுங்க..” என்ற பயத்தில் கத்த
“அவன் ஒன்னும் செய்ய மாட்டான் டி. நீ கத்தாத…” என்ற ஈஸ்வரன் “பைரவ் அண்ணி டா. சும்மா இரு..” என்று கூற அதன் பிறகு பைரவ் குரைக்கவில்லை ஆனால் சாந்தவியை பார்த்து உறுமி கொண்டே இருந்தது.
“அவன் அமைதியாகிட்டான் நீ இறங்கு..” என்ற ஈஸ்வரன் சாந்தவியை தள்ளி நிறுத்த, அவளோ அவன் கையை விடாமல் பற்றி கொண்டு நிற்க,
“ஏய் இம்சை டவல் அவுறுது. கையை விடு…” என்று ஈஸ்வரன் அதட்ட, அவன் அதட்டலை கண்டு கொள்ளாத சாந்தவி “மாட்டேன் எனக்கு பயமா இருக்கு” என்றாள் அவன் கையை இறுக்கி கட்டி கொண்டு
“அவன் ஒன்னும் செய்ய மாட்டான். நான் தான் இருக்கேன் இல்ல. கையை விடுடி. இல்லைனா உன் கண்ணு பியூஸ் போய்டும்” என்று சாந்தவி காதருகில் சென்று ஈஸ்வரன் கூற
அவன் பேச்சின் அர்த்தம் உணராத சாந்தவி “பரவாயில்லை..” என்றாள். தன்னை பார்த்து உறுமி கொண்டிருந்த பைரவை பய பார்வை பார்த்து கொண்டே
அவள் பதிலில் திகைத்த ஈஸ்வரன் “என்ன டிசைன் டி நீயெல்லாம்..?” என்று தலையில் அடித்து கொண்டவன் மற்றோரு கையால் டவலை பிடித்து கொண்டு உள்ளே வந்தவன் அவளை சமாளித்து குளித்து உடை மாற்றுவதற்குள் “போதும்…” என்றாகி விட்டது.
அதன் பிறகு சாந்தவி ஈஸ்வரனை விட்டு ஒரு நிமிடம் பிரியாமல் அவன் கை பிடித்தே சுற்றி வர, பைரவ் அவள் தனியாக சிக்கினால் கொத்து பரோட்டா போடும் நோக்கில் உறுமி கொண்டே இருந்தது.
ரெஸ்ட்ரூம் சென்றாள் கூட நானும் வரேன் என்ற சாந்தவியை சமாளிப்பது ஈஸ்வரனுக்கு சவாலாகவே இருக்க பைரவை வெளியே விட்டு கதவடைத்து சாந்தவி மீதான பைரவின் கோபத்தை அதிகரித்தான். ஆனால் சாந்தவி பயம் போகாமல் இரவிலும் ஈஸ்வரனை கட்டி கொண்டே படுத்திருக்க அது அவனுக்கு சாதகமாகி போனது.
ஊட்டி குளிருக்கு சாந்தவியின் அணைப்பு இதமாக இருக்க ஈஸ்வரன் கைகள் எல்லை மீற அவனை தடுத்த சாந்தவி “நான் உங்க கூட சண்டை..” என்று ஈஸ்வரனுக்கு அவள் கோபமாக இருப்பதை நினைவு படுத்தினாள்
“நான் சண்டை இல்லை..” என்ற ஈஸ்வரன் அவள் முகத்தில் முத்த கோலமிட, “நான் கோபமா இருக்கேன்…” என்ற சாந்தவியின் அவன் முகத்தை தன்னிடம் இருந்து விலக்க “நானும் கோபமா இருக்கேன் என்ற ஈஸ்வரன் சாந்தவி இதழை தன் வசமாக்கி கொண்டான். அவள் கொடுத்த காயத்தை திருப்பி கொடுக்கும் எண்ணத்தில். அதன் பிறகு சாந்தவியிடம் மறு மொழி இன்றி போக அன்று ஈஸ்வரன் சற்று வன்மையாகவே அவளை கையாண்டான்.
இருவரின் சொல்லப்படாத காதலும் அங்கே மோதல் கொண்டு காதல் வளர்த்தது.
####
அன்று சாரதாவிற்கு மறு செக் அப் செல்வதாக இருக்க, ஈஸ்வரனிடம் “பைரவ் இருப்பதால் இங்கே வர மாட்டேன்..” என்று விட்டு சாந்தவி சொல்ல, ஈஸ்வரனும் “ஷார்ப்பா ஃபைவ் ஒ கிளாக் கார் அனுப்புறேன் வந்துடு..” என்று சிரிப்புடனே கூறி அனுப்பி வைத்தான்.
உமையாளும் சாரதாவும் டாக்டரை பார்க்க உள்ளே சென்று விட வெளியே அமர்ந்து இருந்த சாந்தவி கண்ணில் பட்டான் அவன். ஈஸ்வரனை அன்று மாலில் வைத்து கொலை செய்ய வந்தவன். அவனை பார்த்து நெஞ்சம் பயத்தில் நடுங்க எழுந்து ஓட நினைக்கும் போது தான் அவள் கருத்தில் பதிந்தது அவனுக்கு வலது கை இல்லாதது.
சட்டெற்று அவன் மேல் சாந்தவிக்கு இறக்கம் வர “எப்படி ஆகி இருக்கும்..” என்று யோசித்தவளுக்கு ஈஸ்வரன் முகம் கண் முன்னால் வர மனம் கனக்க கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது. அவன் தான் இப்படி செய்து இருப்பான் என்று புரிந்தது.
“மனசாட்சியே இல்லாம எப்படி பண்ணி இருக்கார். இது பாவம் இல்லையா…?” என்று நினைத்த சாந்தவிக்கு ஈஸ்வரன் மேல் கோபம் கட்டுக்கடங்காமல் வந்தது.
மாலை வரை பொருத்து கொண்டவள் ஹெஸ்ட் ஹோவுஸ் வந்ததும் நேராக ஈஸ்வரன் முன் வந்து நின்று அவன் சட்டையை பிடித்தவள் “மனுசனா நீ எல்லாம்..?, உனக்கு எல்லாம் நெஞ்சில ஈரமே இல்லையா..?, ஏன் இப்படி பண்ண…?” என்றாள் ஆத்திரமாக
சாந்தவியின் கோபம் ஏன் என்று புரியாத ஈஸ்வரன் “என்ன டி சொல்ற? நான் என்ன பண்ணேன்!?, சொல்லிட்டு கோப படு..” என்று கூறி கொண்டே தன் மேல் இருந்த அவள் கையை விலக்கி விட்டான்.
“என்ன பண்ணிங்களா…?!!, உங்களுக்கு தெரியாது…!!, மால்’ல உங்களை சுட வந்தவைனை என்ன செஞ்சிங்க…?” என்றாள் சாந்தவி ஆத்திரம் குறையாமல்.
“ஹோ… அவனா! நீ அவனை எங்க பார்த்த..?” என்று சாதாரணமாக கேட்ட ஈஸ்வரன் சாந்தவி கேள்விக்கு பதில் சொல்லாமல் நகர,
அவன் வழியை மறைத்த சாந்தவி
“எப்படி இப்படி நெஞ்சில ஈரமே இல்லாம இருக்கிங்க?, நீங்க மனுசனே இல்லை. அரக்கன்…” என்றாள் கோபமாக
“ஆமா டி நான் அரக்கன் தான். என் மேல கை வைக்க நினைச்ச எவனையும் விட மாட்டேன். ஒரு அணு மிஸ் ஆகி இருந்தா போட்டு தள்ளிட்டு போய்ட்டே இருந்து இருப்பான். யார் மேல கை வச்சிருக்கான்னு தெரிய வேண்டாம்!! அதான் பண்ணேன். இன்னும் பண்ணுவேன்..” என்று ஈஸ்வரன் கூற
அவனை உறுத்து விழித்த சாந்தவி “அவன் கொலை பண்ண வந்தது நீங்க செஞ்ச பாவத்தின் பலனுக்காக இருந்து இருக்கும்…” என்றாள் குத்தலாக.
பதிலுக்கு அவளை நக்கலாக பார்த்த ஈஸ்வரன் “நான் செஞ்சவனுங்க எவனுக்கும் திரும்ப என் மேல் கை வைக்குற எண்ணம் கனவுல கூட வராது டி. இது நீ பண்ண தப்புக்கு வந்த பலன்…” என்று கூற
அவன் பேச்சில் திகைத்த சாந்தவி “நானா..!!! நான் என்ன பண்ணேன்?” என்றாள் புரியாமல்
“ஆலைக்கு வெடி மருந்து வாங்குனியே.. அவன் செட் பண்ண கூலி ஆள் தான் கொலை பண்ண வந்தவன். நீ எங்கிட்ட உண்மைய சொல்லிட்டா அவனுக்கு ஆபத்துனு உன்னை போட ஆள் செட் பண்ணிருக்கான். போட வந்தனுக்கு என்னை பத்தி தெரியலை. உன் கூட நான் இருக்கவும் பிரச்சினை ஆகிட கூடாதுனு இரண்டு பேரையும் போட நினைச்சிருக்கான். இப்போ புரியுதா என்னை ஏன் சூட் பண்ணான்னு?” என்று கேட்டவன் “உன் வாழ்க்கையில நீ பண்ண பெரிய முட்டாள் தனம் இது தான். யாராவது கொலை காரனை தேடி போவாங்காளா டி” என்று ஈஸ்வரன் சீற
அவன் பேச்சில் உள்ளம் உறைய மணம் படபடக்க நின்றாள் சாந்தவி. அவள் செய்த தவறு மீண்டும் மீண்டும் அவளை சுற்றி வருவது போல் இருந்தது.
ஆனாலும் கடைசியாக ஈஸ்வரனின் முட்டாள் என்ற சொல்லில் கோபம் வர “அதை விட நான் பண்ண பெரிய முள்ளால் தனம் உங்களை கல்யாணம் பண்ணது” என்றாள் வீம்பாக
அவள் கூற்றில் பட்டென்று சிரித்த ஈஸ்வரன் “நான் பண்ண பெரிய முட்டாள் தனம் உன்னை லவ் பண்ணது தான் டி” என்று அவள் மீதான காதலை போட்டு உடைத்தவன் “இப்ப வரைக்கும் உங்கிட்ட என்ன பிடிச்சிதுனு எனக்கு தெரியலை. ஆனா உன்னை பிடிச்சி தொலைக்கு ஏன்னே தெரியலை…” என்றான் புன்னகை முகமாக
அவள் பேசியதற்கு ஈஸ்வரனிடம் கோபத்தை எதிர் பார்த்த சாந்தவிக்கு அவன் பதில் திகைப்பை கொடுக்க என்ன பேசுவது என்று புரியாமல் நின்றாள்.
உமையாளுடன் இருந்த நாட்களில் அவரின் பேச்சை வைத்து ஈஸ்வரன் யாரையும் காதலிக்க வில்லை என்றும், உமையாள் தான் அந்த பெண்ணுக்கு சில சேலைகள் வாங்கியதாக கூறி இருக்க, ஈஸ்வரன் தந்த சேலை உமையாள் வாங்கியது தான் நினைத்திருந்த சாந்திக்கு ஈஸ்வரன் காதலித்தான் என்பது ஆச்சரியமாக இருந்தது.
ஆனால் சட்டென்று அவன் சொல்வதையும் அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை. எத்தனை பட்டிருப்பாள் அதிலும், ஈஸ்வரன் அவளை வேண்டாம் என்று விட்டு வந்திருக்கிறான். காதலிப்பவன் இப்படி செய்வானா..?! என்று தோன்ற
“பொய்!, நீங்க சொல்றது எல்லாம் பொய். லவ் பண்ற யாரும் இப்படி கொடுமை படுத்த மாட்டாங்க…” என்று கத்தியவள் அறைக்குள் சென்று கதவடைத்து கொண்டாள்.
“நம்ப வேண்டாம் போடி..” என்றான் ஈஸ்வரனும் வீம்பாக. அதன் பிறகு அங்கே இருந்த நாள்கள் முழுதும் சாந்தவி ஈஸ்வரனுடன் பேசுவதை நிறுத்தி கொண்டாளும் அவன் செயல்களை உற்று கவனித்தாள். ஈஸ்வரனும் அவளை சீண்டுவதையும் தீன்டுவதையும் விடவில்லை.
உதட்டில் காயம் ஆறியதுமே சாரதாவை சென்று பார்த்தவிட்டு வந்த ஈஸ்வரனுக்கும் உமையாள் எண்ணம் தான். அவனுக்கும் சாரதாவிற்கு அடுத்து, சாரதா குழந்தை தான் அவர்கள் வீட்டிற்கு வரும் புது வரவு. குழந்தை நல்லபடியாக பிறந்ததும், குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து முடி இறக்குவதாக வேண்டி கொண்டான்.
மிதுனின் பெற்றோர் பெயருக்கு வந்து பார்த்துவிட்டு சென்று விட, சாரதாவிற்கு மூன்று மாதம் முடியும் வரை உமையாள் அங்கே இருந்து பார்த்து கொள்வதாக முடிவாக, ரத்தினம் இன்னும் ஒரு வார இருந்து விட்டு வருவதாக கூறி விட, ஈஸ்வரன் வேலை பளுவினால் சாந்தவியுடன் மதுரை கிளம்பினான்.
இந்த முறை பைரவை மதுரை அழைத்து வர, பைரவ் சாந்தவி அமரும் முன், முன் சீட்டில் ஈஸ்வரன் அருகில் சென்று அமர்ந்து கொள்ள சாந்தவி இருவரையும் முறைத்து விட்டு பின்னால் அமர்ந்தாள்.
“ஏன் டா உன் பங்குக்கு நீயும் வச்சி செய்யுற! உன்னை என்னடா பண்ணேன்..?” என்று ஈஸ்வரனால் நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது.
சற்று தூரம் வந்ததும் கண்கள் வியப்பில் விரிய “ஸ்டாப்! காரை நிறுத்துங்க…” என்று கத்திய சாந்தவி, ஈஸ்வரன் காரை நிறுத்தியதும் துள்ளி குதித்து இறங்கியவள் “இதை வச்சி நீங்க என்னை லவ் பண்றதா நம்ம மாட்டேன்…” என்று கத்தி கொண்டே ஓடி இருந்தாள்.
நிழல் தொடரும்….